மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது

மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது

 

உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.

இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.

மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.

ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”

பிறர் தர்ம செய்கையால்… ஞானத்தின் வழியில் நிற்போர்… மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.

ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்

1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.

இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.

1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.

மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,

ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.

1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.

மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!

ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.

தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!

1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.

உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.

மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்

மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்

 

மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று…
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”

ஆனாலும்…
1.சுவாச கதியில் “கனம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”

ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”

1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் – மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.

அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணரவும் முடியும்.

நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.

பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.

ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று…
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.

அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.

நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.

பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.

அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.

அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு.

சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

 

“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?

1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?

அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)

குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.

அதுவே சித்தனாகும் சீரிய வழியாகும்…!

அப்படி அல்லாதபடி… பஞ்ச பூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்ச பூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?

ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)
4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…!

உயர் ஞானத்தால் மகரிஷிகளுடன் கலக்க முடியும்

உயர் ஞானத்தால் மகரிஷிகளுடன் கலக்க முடியும்

 

1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி… பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.

மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”

ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது…
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”

தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.

“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இரு விதமான செயல்கள் உண்டு (இடது வலது).

சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.

அதே போல்
1.தாய்மையின் மேன்மையை… சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.

ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.

பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.

வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.

அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் – ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

திரு + பதி = திருப்பதி

திரு + பதி = திருப்பதி

 

தாய் சக்தியுடன் ஒன்றிட்டே செல்வநாயக சூத்திரம் பெறும் ஸ்ரீனிவாச கொங்கணரும்
1.மலைமுகட்டுக் குடிசை முன் (இப்பொழுது வெங்கடாஜலபதி கர்ப்பக்கிரகம் உள்ள இடத்தில்) தவமியற்றும் மாமுனி
2.தாயம்மை புதைக்கப்பட்ட இடம் கடும் மழைநீரால் கரைந்து அவ்விடம் கரைவெய்தி “காந்தப் பாறை எனும் சுயம்பு” உள்ளடங்கி
3.உள்ளே ஓர் பெரும் பாறைப் பகுதி வெளிப்பட்டுவிட அதன் மேலே அமர்ந்து காந்த நீர் சக்தியை ஈர்த்து
4.தன் அவதார மகிமையை வெளிப்படுத்தியது என்பது எல்லாம் சூசகமாய் மறைக்கப்பட்டு விட்டது.

பரணி… தரணி ஆளும் என்கின்ற சொல் சூட்சுமத்தில் எலும்புகளுக்கு சரீரம் தொட்டு வலு நிலை கூடி அதன் ஈர்ப்பின் தொடரில்
1/பரணி நட்சத்திர அமில சேர்க்கையின் செயல்பாட்டில் ஒளி காந்தத்தைக் கூட்டி கூட்டித்
2.தக்க வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காய் செயல் கொண்டிடும் சூட்சுமத்தில்
3.அறிவின் சூட்சுமத் தொடருக்கு கார்த்திகை அமில குண சேமிப்பும்
4.சூரிய ஒளி காந்தத்தை ஈர்க்கும் தொடரில் சமைக்கும் சமைப்புக்கு மூலமாய்
5.விஷ்ணு சக்தி எனும் சந்திரன் ஒளி காந்தத்தையும் சேர்த்து எடுக்கும் சமைப்பும் கலந்திட்ட நாளே அந்நந்நாள்.

அந்நாளிலே அவ்விடப் “பதி” கொண்ட காரணம் தொட்டே “திரு” என்று அடைமொழி சேர்க்கப்பட்டு “திருப்பதி” என்ற சொல் வழங்க காரணமாயிற்று.

அபூர்வமாய் ஏற்படும் இந்நாளில் அப்பதிதனில் தவமியற்றப்பட வேண்டும். செல்வம் தொட்டு இல்லாவிட்டாலும் “மண்டல செயல் நிலைப்பட” அருளாசி வேண்டித் தவமியற்றப்பட வேண்டும்.

கொங்கணச் செல்வ நாயகன் கொலுவிருந்த அப்பதியின் பத்மாவதி ஸ்ரீனிவாசனுமாய் கோடி வீட்டுப் புருஷனே குபேரனாய் மாடி வீட்டின் அரசனாய் மருமகனுமாய் ஆன கதைத் தொடர் விசேஷம்.

பதினாறு வயதுடைய வாலிபனுக்கு ஏற்பட்ட அனுபவ ஞானம் என்பது விசேஷம் மட்டுமில்லாது அவன் ஜெப வழித்தொடருக்கு வைராக்கிய சிந்தனைக்கு வலுக்கூட்ட வந்த சக்திதான் எத்தனை எத்தனை…?

தாய் சக்தி பெற்ற தன் சக்தியையும் வலுக்கூட்டிக் கொண்டு வாலிபனாய் உலா வரும் பொழுதே… தன் ரிஷி சக்தியின் தொடருக்கு வலுக்கூட்டும் சக்தி மண்டலமாய்
1.வாக்தேவி, அன்னபூரணி, அஷ்டலட்சுமி எனும் நட்சத்திரத் தொடரில்
2.அஷ்டலட்சுமி நட்சத்திர சக்தியின் தொடர்பே பத்மாவதி என்னும் தொடர்பையும் அறிந்து கொண்டு
3.அஷ்டலட்சுமி சக்தி தன்மையின் அவதார நிகழ்வே தன் சக்திக்கு மேலும் சக்தியூட்டும் என்பதறிந்து
4.மணமுடிக்கும் மார்க்கமாய் கொண்டு வந்த குபேரப் பொருள் எங்கிருந்து வந்தது…?

இந்தக் கேள்வியின் ஞானத்திற்கு சித்தின் செயல் தொடரின் பரிணாம முதிர்வே மாமுனிவன் சக்திக்கு சக்தியூட்டும் வகுளாம்பிகை தாய்சக்தி மூலம் பெறப்பட்ட தொடரெல்லாம் சூட்சுமமே.‌..!

பத்மாவதி எண்ணம் ஸ்ரீனிவாசன் மேல் விழுந்தவுடன் அக்கணமே கொங்கண மாமுனி தன் சக்திக்குச் சக்தியூட்ட அவதார மகிமையின் மூலம் “செல்வநாயகனான நிலை முழுமை பெற்றுவிட்டது…”

கொங்கண மாமகரிஷி தன் மண்டல செயலுக்கு வரும் முன்பு பத்மாவதி நாயகன் என்ற தொடரில் தவம் இயற்றும் தவ வாழ்வு செல்வநாயகனான பின்பு தான் அதிகப்பட்டுவிட்டது.

பத்மாவதி அம்மன் தன் நாயகனின் ரிஷி சக்திக்கு பக்கபலமாய்த் தன் ரிஷி பத்தினி சக்தியை ஒன்றச்செய்து ஒழுகும் இல்லறப் பயன் வாழ்வில் கொங்கணர் மாமகரிஷி சக்தி பெறவே “ஓர் திருப்புமுனை” ஏற்பட்டது.
1.அது பத்மாவதியும் தன் தவத்தின் முழு சக்தியையும் கணவருடன் ஒன்றிச் செயல் கொண்டிட மூல சக்தியாய் கலக்கும் செயலுக்கு
2.தன் பூத உடல் நீத்துத் தன் கணவருக்கு வலுக்கூட்டிட்ட சூட்சும சக்தியான மூலத்தில் கலந்ததுதான்.

அதன் பின் மலை முகட்டுப்பாறை மீது தவமியற்றும் மகரிஷி சக்தியாய் சக்தி பெறும் மார்க்கம் வந்துற்ற பொழுதே அவருடன் ஒன்றி வழி நடந்திடும் தாய் சக்தி வழிகாட்டியாய் அவருக்கு அமைந்த விதம் விண்டுரைக்க முடியாதது.

1.ரிஷித் தன்மை பெற்றுவிட்ட கொங்கண மகரிஷியால் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கம் தவமிருந்த பாறையின் உள்ளிருக்கும் குகை அமைப்பும்
அதனுள் எழுந்த சுயம்பு காந்த பாறையும்.. காந்த சுயம்பு மேல் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கமும்
3.நீர் காந்த சக்தி தாரையாய் அந்த லிங்கத்தின் மீது வர்ஷிக்க அதன் எதிர் அமர்ந்து தன் சரீரத்தைப் பக்குவ கதியாக்கி
4.உயிரான்ம சக்தியின் ஈர்ப்பினால் மின்காந்த சக்தி பெற்று தனக்கென ஓர் மண்டலமாய் உருமாறும் சக்தியை உருவாக்கி
5.இன்றோ மண்டலத் தன்மைக்கும் சென்றிட்டார்…!

“படியளக்கும் பெருமாள்…”

“படியளக்கும் பெருமாள்…”

 

காலத்தின் சுழற்சியில்… ஓர் நாள் “மாடி வீட்டு அரசன் மகள் பத்மாவதி” தன் நாயகனை வரித்திட்ட செயல் மலைமுகட்டுக் குடிசையின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அச்சம்பவம் நடைபெற்றது.

கொங்கணவ மாமுனி தன் அவதார ஸ்ரீனிவாச காலத்தில் வீரன் போல் காட்டினுள் திரிந்து மனித மனச் செயலாய் சரீரத்தின் மதத்தினை கர்வத்தை வென்று காட்டி…
1.காட்டினுள் மாமதமாய் எழும் யானையின் சரீரச் செயல் வழியிலும் அதை அடக்கும் ஆற்றல் காட்டி
2.மிருக மனத்தையும் வசீகரித்து நேசிக்க வைத்திடும் செயற்பாங்கு காட்டிய நிலையில்
3.பத்மாவதி மனத்தையும் தன் பால் ஈர்த்து தன் ரிஷி சக்திக்கு ரிஷி பத்தினியாக்கும் செயலும் நிகழ்ந்தது.

காட்டினுள் வனபோஜணம் உண்ண வந்த அரசனும் பரிவாரங்களும் ஸ்ரீனிவாசன் தன் அவதார இயல்பின் சூட்சுமம் கொண்டு இவர்கள் செயலைக் கவனிக்க… அங்குள்ள யானை ஒன்று மதம் கொண்டு தழையறுத்துக் கொண்டு அனைவரையும் விரட்ட… கூட்டமே கலகலத்து உயிர் காக்க ஓடி ஒளிய… பத்மாவதியை விரட்டிக் கொண்டே தொடர்ந்து யானையும் வந்துற்றது.

அரசனும் அரசியும் வீரர்களும் கலக்கமுற ஸ்ரீனிவாசன் அருகே வந்த வகுளாம்பிகை ஆசி கூறி மகனை அனுப்பி வைக்க அவதார மகிமை முன் தொடர்பால் முன் சென்றான் ஸ்ரீனிவாசனும்.

குடிசையை நோக்கி ஓடி வரும் பத்மாவதி தஞ்சமென ஸ்ரீனிவாசனின் பின் மறைய… தாயைத் துதித்து முன் சென்ற ஸ்ரீனிவாசன் ஓர் கை உயர்த்தி “நில்” என யானையை அதட்டிட… ஸ்ரீனிவாசன் குரலுக்கும் கண் பார்வை காந்த சக்திக்கும் கட்டுண்ட யானை மதம் நீங்கி மண்டியிட்டு அமர்ந்து கொண்டது.

ஸ்ரீனிவாசனை… தன் வாழ்க்கைத் துணை இவன்தான் எனத் தேர்ந்தெடுக்க காரணமாய் அமையலுற்றது அச்சம்பவம்.

1.கொங்கண மாமுனி தன் ரிஷிபத்தினி சக்தியை வளர்ச்சிப்படுத்தி
2.தாய் சக்தியின் மூல சக்தியாய்க் கலந்து
3.தன் அவதார விசேஷ குணத்தன்மை மனத்தைக் கொண்டு நடத்தியதே அடுத்து மற்றெல்லாம்.

இரு மனங்களும் சிவ சக்தியாய்க் கலந்துவிட்ட குணத்தின் வாசனையே நல்லறத்தின் செயலாய் இல்லறத்தில் மணமாய் பரிணமளிக்கும் தொடருக்கும்… “திருமாங்கல்ய மன வைபோகம்” என்றெல்லாம்… பெருமைப்படுத்திட்ட வாழ்க்கைத் துணை நலம் பேணும் செயலுக்குச் சக்தி பெற வந்த கொங்கணரும் எப்படி விலக்காக முடியும்…?

இல்லறம் ஏற்படும் செயலுக்கு மண எண்ண முடிவுரையைத் தெளிதல் அவசியம் எனும் பாங்கில் முறையாய் பெண் கேட்கும் படலத்தில் கொங்கணருக்குத் “தரித்திரன்” என்ற பட்டம் தான் வந்துற்றது.

அச்சொல்லின் விஷமம்… அவர்தம் வைராக்கியத்தை மீண்டும் தூண்டும் தூண்டுகோலாய் அமைய… வகுளாம்பிகை அம்மையும் புன்னகைத்து தனது அவதார மகிமை செயலுறும் தருணமும் இது தான் எனத் தெளிந்து தன் சரீர செயலும் உயிர் ஆன்ம சக்தி கொங்கண மாமுனியுடன் ஒன்றி வழிகாட்டிட எண்ணினார்.
1.எச்செயலுக்கும் வகுளாம்பிகையாய் வந்து பணி செய்து பயன்பெறும் மார்க்கம் காட்டிட்ட தாயாரம்மாள் என்கின்ற வகுளாம்பிகை
2.சரீரத்தை விட்டு உயிர் ஆன்மா சக்தித் தொடர் காந்தத்தை ஒளி சக்தியாக்கும் ரிஷியின் தொடரில் கலந்து ஒளி காந்தமாக்கி செயல் கொண்டிட
3.தான் எடுத்த ஸ்தூல சரீரத்தை விட்டொழித்துச் சூட்சுமமாய் செயல்படுத்திட முனைந்தாள் வாலாம்பிகை.

ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டது குடிசைக்கு முன்புறத்திலே…!

எந்தத் தாய் சக்தியை நேரிடையாய்க் கண்டு துதித்து வந்த ஸ்ரீனிவாச கொங்கணரும் தன் மனித குண சரீர கதிக்கு இயல்பாய் கலக்கம் கொண்டிட்டு கண்ணில் நீர் பெருக அப்பிண குழிக்கு மேல் படுத்து கலக்கமுறவே “தாக்கியது ஓர் மின் காந்தம்…”
1.மயக்கமுற வைத்து ஸ்ரீனிவாசனுள் ஒன்றித் தாய் சக்தியாய் கலந்து
2.ரிஷியின் சக்திக்கு மண்டலமாக்கிவிடும் தாய் சக்தியாய்ச் செயல்படத் தொடங்கியது.

இனி கொங்கணர் பெற்றிடும் பெரும் தவ செல்வ நாயகனாக்கி… எச்செல்வம் பொன் பொருளாய் வேண்டினானோ “அம்மாடி வீட்டு அரசன்” தன் பெண் பத்மாவதியைக் கொடுக்க அம்மாடி வீட்டு அரசனே திகைக்க “இக்கோடி வீட்டுப் புருஷன் கொங்கணரும்” மாடி வீட்டு அரசனுக்கு நிகருக்கு மேல் செல்வம் பெறும் செல்வநாயக சூத்திரத்தை “அம்மாமகரிஷி கொங்கணரே மனமுவந்து கூறினாலொழிய யாரறிவர் அச்சூட்சுமத்தை…?”

கூறுகின்றார் கூறுகின்றார் குறைவுபடாமல் கூறுகின்றார்…! தன் சுய சக்தி மட்டுமல்ல…
1.தாய் சக்தியுடன் எந்த ரிஷிபத்தினி சக்தி தன் செயலுக்குச் சக்தியளிக்க மனத்தினால் எப்பொழுது வரித்ததோ
2.அக்கணம் முதலே தான் ஒரு குபேரன் என்று கூறுகின்றார்.

வறுமைப் பிணி களையக் குபேர சம்பத்து பெற்ற கொங்கணரும் குபேரன் என்ற சிறப்பு பெற்ற பின்னரே தான் அறிந்ததும் ஒன்று உண்டு. அதுவே “படியளக்கும் பெருமாள்…”

ஸ்ரீனிவாச அவதாரம்

ஸ்ரீனிவாச அவதாரம்

 

கொங்கண முனி தன் அவதாரம் ஸ்ரீனிவாசனுள் செயற்பட்ட அன்றைய தினம் என்றும் போல் புலர… மாடுகள் மேய்க்கும் சிறுவர்களுடன் மாட்டை ஓட்டிச் செல்லும் ஸ்ரீனிவாசனும் அம்மையிடம் அன்றும் ஆசி பெற்று… மகிழ்வுடன் சென்று கொங்கணர் புற்றருகே விளையாடினான்.

மாடுகள் அன்று தறிகெட்டு ஓடும் நிலையில் மற்ற சிறுவர்கள் ஸ்ரீனிவாசனை தனியே விட்டு விட்டு மாடுகளை திருப்பிக் கொண்டு வரச் சென்ற பொழுது தனித்திருந்த ஸ்ரீனிவாசனுக்கு ஏதோ ஒன்று ஆங்கு நிகழ்ந்தது. (என்ன என்று புலப்படுத்தாத சூட்சுமப்படுத்தி மறைத்தார்கள்).

மயங்கிச் சாய்ந்த ஸ்ரீனிவாசன் கொங்கணப் புற்றருகே மிக அருகில் புற்றுடன் ஒட்டியவாறு அமைந்திருந்த ஓர் பள்ளத்தினுள் வீழ்ந்து செடிகளால் மறைக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கலுற்றான்.

இச்செயலை அருகிலிருந்த பசு கண்டு புற்றருகே சென்று நின்று கொண்டு கத்திக் குரல் கொடுக்க மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு அங்கே வர ஸ்ரீனிவாசனைக் காணாமல் தேடும்பொழுது ஸ்ரீனிவாசனைக் காணாத தன்மை கொண்டு திரும்பிச் செல்லத் தொடங்க அந்த ஓர் பசு மட்டும் செல்லாமல் அங்கே தங்கிவிட்டது.

மாட்டைக் காணாமல் தேடிவரும் மாட்டின் சொந்தக்காரன் அது காட்டுப்பகுதி ஆனதால் தகுந்த ஆயுதங்களுடன் மாட்டுக்கார சிறுவன் சொல்லிய இடமாகிய அப்புற்றை அடையாளமிட்டு தேடிக் கொண்டு வந்தான்.

அப்படி வருகின்ற காலகட்டத்தில் புற்றருகே பந்தலிட்டு சிறுவர்கள் கோவிலாக்கி விளையாடிய அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.

மாலைப் பொழுதில் பால் தரும் பசு தன் கன்றின் நினைவில் புற்று மேல் நின்று பாலைச் சொரிய தானாக நிகழ்ந்த அச்செயலினால் உண்மை புலப்படாத மாட்டுக்காரன் கோப மேலீட்டால் தடி கொண்டு மாட்டி அடித்து விரட்டினான்.

அதற்குப் பின் மாடு மேய்க்கும் சிறுவர்கள் பந்தலிட்டு புற்று மேல் கோவில் ஆக்கிய நிலை கண்டு மேலும் அதிகக் கோபம் கொண்டு மாட்டுச் சிறுவர்கள் மேல் பொங்கிய கடும் கோபம் இப்பொழுது கொங்கணப் புற்றின் மீது திரும்ப… கையில் கொண்டு வந்திருந்த பலமான ஆயுதத்தினால் பந்தலை உடைத்து எறிந்து விட்டு “அப்புற்றையே இடிக்கத் தொடங்கினான்…”

பண்டு வினைப் பயன் (பண்டைய கால) வந்துறுத்த மாட்டுக்காரன் செய்த இச்செயல் அவனது கடும் கோபம் மாட்டின் பால் வீணாய்ப் போனதாலும் சிறுவர்கள் மாடுகளை ஒழுங்காகக் கவனியாமல் விளையாடினார்கள் என்றெல்லாம் கருத்தில் கொண்டு… அத்தனையும் இப்புற்று இனி இங்கிருந்தால் மீண்டும் அதே செயல்நிலை தொடரும் என்ற எண்ணினான்.

அப்போது கோபம் கொண்டு சுய அறிவு நீங்கிப்போன மாட்டின் சொந்தக்காரன் கரத்தில் இருந்து நழுவி விழுந்த அக்கனமான ஆயுதம் புற்றருகே இருந்த பள்ளத்தில் வெகுவேகமாகப் பாய்ந்து சென்று ஏதோ மயக்க கதியில் துயில் கொண்டுள்ள ஸ்ரீனிவாசன் தலை மீது விழுந்து தலை பிளந்து உயிர் பறித்தது.

பரிசுத்தவானாகிய ஸ்ரீனிவாசன் தன் சரீரம் செயல் கொண்டிட காத்திருந்த கொங்கண மாமுனி வெளியேறும் அவ்வுயிர் ஆன்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு பரிசுத்த ஆவி ஆகிய தன் உயிர் ஆத்ம ஒளிகாந்தத்தை அவனுள் பாய்ச்சி உட்சென்றார்.

“எந்த அவதார நோக்கமோ” அது நடைபெறும் செயல் நிலைக்குத்தானே ஸ்ரீனிவாச உருக்கோலம் கொண்டு ஜடாக்கினி ஜெபத்தால் வீறு கொண்டு பள்ளத்தினுள் இருந்த சடாரென எழுந்து நிண்றார்.

கனவில் கூட இத்தகைய காட்சியை கண்டிராத அம்மாட்டின் சொந்தக்காரன் ஆயுதம் கை நழுவி அப்பள்ளத்தில் விழ்ந்த ஒரு கணத்தில் திகைத்தவன் திகைப்பு தொடர்போல் நடக்கும் அக்கண நேர சம்பவத்துள் தலையில் சொருகப்பட்ட ஆயுதத்துடன் குருதி கொப்பளித்து வழிந்தோடி வர செக்கச் சிவந்த குருதி உடலெங்கும் வழிந்தொழுக சிவந்த நிற உடலுடன் விருட்டென எழுந்த ஸ்ரீனிவாச அவதாரத்தைக் கண்டு திகைப்படைந்தான்.

முடிவில் பய உணர்வு ஆட்கொள்ள “ஆ” என அலறிய மாட்டின் சொந்தக்காரன் வெல வெலத்துப் போய் மிக மிக பயந்து நடுங்கி ஓட்டம் எடுத்து ஓடும் பொழுதே மயக்க நிலையில் விழுந்தான்.

அதைக் கண்ணுற்ற கொங்கண ஸ்ரீனிவாச நாயகன் எப்பொழுதும் எண்ணி வந்த தாய் சக்தி அழைத்திடும் நிலை அறிந்து, தலையில் தைத்த ஆயுதத்தைப் பறித்து அகற்றிவிட்டுத்
1.தான் ஏற்ற ஸ்ரீனிவாச அவதார சரீரத்தின் நலிவு அகற்ற கூட நாட்டமின்றி
2.பசுவைக் கண்ட கன்று போல் வெகுவேகமாக செல்லத் தொடங்கினார்.

ஸ்ரீனிவாசன் அவதாரம் எடுத்த கொங்கண மாமுனி தான் ரிஷித் தன்மைக்கு உயரும் வழிகாட்டும் செயல் நிகழ்த்த உருக்கோலம் கொண்டிட்ட தாய்சக்தி “வாலை” அம்மன் வகுளாம்பிகை என்று பெயர் நாமப்படுத்தி அமர்ந்திட்ட மலைமுகட்டுக் குடிசையை நோக்கிச் சென்றார்.

இவர் வரவைக் காத்துக் கொண்டிட்ட அவ்வம்மை தலையில் இருந்து குருதி வழிந்தோடும் செயல் கண்டு புன்னகையுடன் நின்று கொண்டு மகன் கைகூப்பி வணங்கும் பாவனைப் படுத்திய நிலை கூட மறந்து தாயுள்ளம் கொண்டிட்ட பாசத்தினை வெளிப்படுத்தி “மகனே ஸ்ரீனிவாசா…!’ என்ற சொல் தொடரில் வேகத்தைக் காட்டிணார்.

காயம்பட்ட இடத்தில் பச்சிலை வைத்தியம் செய்திட்ட கருணைக்குப் பின் அக்குடிசைக்குள் அனுதினமும் நடைபெற்று வந்த
1.வகுளாம்பிகையின் ஆராதனை என்பது கொங்கண மாமுனிக்குப் போதனையும்
2.தாய் தெய்வ வணக்க முறை என்பது கொங்கணருக்குத் தவமுமாய் நடைபெற்று வந்தது.

“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்

“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்

 

சரீரம் புற்றான பிறகு அப்புற்றினுள் சூட்சும சரீரம் கொண்டு வாழ்ந்து வரும் கொங்கணர்…
1.ரிஷி சக்தியாகும் சூட்சுமமே ஸ்ரீனிவாச அவதாரமும்
2.அதன் தொடரில் தான் பெற்ற “தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்.

மண்டலமாய் சக்தி சுழன்றிட அமைப்பு ஏற்பட்டு அதன் வழி மேன்மேலும் சக்தியை தான் வலுக் கூட்ட ஆத்ம பலமே பல அவதார நிலைகள் கொண்டு அந்தந்த அவதாரங்களின் சூட்சுமம் வெளி உலகம் அறியாத் தன்மைக்கு மறைந்து போய்… மக்களின் எண்ணம் எல்லாம் செல்வம் பெறும் மார்க்கமாய் உலகோதய ஆசை வழித்தொடரில் அதுவே பேராசை என்னும் பிடிக்குள் சிக்குண்டு… செல்வநாயக அவதார சூட்சுமமே பிரகாசிக்க மக்களின் எண்ணம் செல்வம் பெறும் மனத்தின் வளத்தன்மைக்கு ஒப்ப… ‘படியளந்தான் பெருமாள்’ என்ற தொடரில் வந்துற்றது.

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்” என்றதன் முழுமையே ஸ்ரீனிவாச அவதார மகிமையைக் கொங்கணவர் செயல் கொண்ட சூட்சுமச் செயல்… பரிசுத்த ஆவி என்ற தொடர்புபடுத்தி ரிஷியின் மூல சக்தி முனிவனின் தொடரில் பெறப்படும் ஒவ்வொரு நிலை சக்தியின்… கூட்டு நிகழ்த்தும் நிகழ்வுகளின் ஆக்கம் என்றதன் செயலில் வந்துற்ற செயற்பாட்டுச் சிறப்பின் தன்மைக்கு ஒப்ப ஆங்கு நிகழ்ந்தது “ஓர் செயல் நிகழ்வு…”

எந்தவொரு சித்தனும் சித்தின் செயல் ஆக்கம் வைத்திய முறையோ அல்லது வேறெந்த செயற்பாட்டிற்கும் அம்மன் சக்தி என்ற தொடரில் உபாசிக்கும் “வாலை” என்ற பெயர் நாமமிட்டு சக்தி பெறும் தொடர்பில் வந்துறும் நற்சக்தி கதி “தாய்” சக்தி என்னும் பாங்கில் பெறப்படும் தொடர் ஒன்றுண்டு.

இவ்வொன்றுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தாய் சக்தி பெறும் பல வழித் தொடர்பில் இதுவும் ஒன்று. “கொங்கணருக்காகச் சக்தியூட்ட” தாய் சக்தி காத்துக் கொண்டிருந்த செயல் விந்தை கொங்கணருக்கே உரிய தனிச் சிறப்பு.

அதோ மலைமுகட்டுக் குடிசையில் வயோதிக வயதுப் பெண்மணியின் உருவம் கொண்டு ஓர் அளப்பரிய தாய் சக்தி ஜெபித்துக் கொண்டும் அவ்வழி செல்வோருக்குக் கருணைக் கரம் காட்டி இயன்ற உதவி செய்வதோடு தன் சக்தியைத் தான் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு உலா வந்த “வாலாம்பிகை” என்னும் தாய் சக்தி அம்மலை முகட்டுக் குடிசைக்குள் “வகுளாம்பிகை” என்ற பெயர் நாமம் பூண்டு வசித்து வருகிறாள்.

மலை மீது அமைந்திருந்த குடிசையில் வாழ்ந்து வரும் வகுளாம்பிகை எத்தனையோ ஜீவன்களுக்குத் தவம் என்னும் கருணை மழை பொழிந்து எந்த அவதார நலனுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொண்ட சக்தியான “வாலை அம்மன்” காத்துக் கிடந்தாள் என்பது குரு சிஷ்ய மனோபாவனையைக் காட்டும் திறம் உணர்க.

அங்கே வறுமையில் வாடி வந்து சேர்ந்தான் ஒரு சிறுவன். தன்னை யார் என்று கூறக் கூட பெயர் நாமத்தில் கூட அறியாத அச்சிறுவனை மேற்கொண்டு செல்ல ஒட்டாமல் தடுத்து தான் வளர்க்கும் மகானாக ஆக்கிக் கொண்டு அந்த அனாதைச் சிறுவன் தனக்கு ஏற்ற ‘தாய்’ இவளே சேய் உறவாக வளர்ந்தது.

இச்சிறுவனைக் கொண்டே கொங்கண முனிவனை எதிர்கொள்ளக் காத்திருந்தாள் அத்தாயான வகுளாம்பிகை.
1.அஷ்டலட்சுமி சக்தி என்ற நட்சத்திர சக்தியின் அவதார நிலையில் இச்சிறுவன் பெறும் சக்தியை முன்னிட்டே
2.வகுளாம்பிகை தாய்… கொங்கணர் பெறும் சக்தி தொடருக்கு சூசகமாகச் சிறுவனுக்கே ஸ்ரீனிவாசன் என்ற பெயர் நாமப்படுத்தி
3.ரிஷி பத்தினி சக்தியில் கலந்து நிரந்தரமாக வசிக்கப் போகின்றான் ‘இவன்’ என்று தொடர் காட்டி விட்டார்.

ஸ்ரீனிவாசனும் மாடுகளை மேய்க்க வரும் மாட்டுக்கார சிறுவர்களுடன் கலந்து விளையாடி மகிழ்ந்து மாடு மேய்ப்பான். பிறகு பித்தன் போலும் நடந்து கொள்வான். ஆகாயத்தையே வெறித்து நோக்குவான்.

இப்படியெல்லாம் விளையாட்டுப் பருவம் கடந்து வரும் தொடரில் கொங்கணர் தம் அவதார நிகழ்வுக்கு ஏற்ற பக்குவம் போல் தன்னையும் தயார்படுத்திக் கொண்டது போல் ஸ்ரீனிவாசன் நடவடிக்கைகள் அமையலுற்றது.

இவர்கள் விளையாட்டெல்லாம் கொங்கணப் புற்றருகேதான் அதிகம் இருக்கும். அந்த இயற்கை காலம் கனியட்டும் என்று காத்திருந்த கொங்கணர் தொடருக்கு உறுதியாவதுபோல் அந்த அவதார காலமும் விரைந்து வந்துள்ளது.

சிறுவர்கள் விளையாட்டில் துறுதுறுப்பாய் விளங்கும் ஸ்ரீனிவாசன் அடிக்கடி சரீரத் தொடரில் ஏதேனும் காயம் ஏற்பட்டுக் கொண்டிருக்க வகுளாம்பிகை சிறுக்ஷைகள் செய்து அவனைக் கண் போல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம்… “சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்” என்ற சூட்சுமத் தொடரில் அமையலுற்றதன் பொருளே
1.அச்சிறுவனைக் கொண்டுதான் கொங்கணர் தம் நிலை உயர்த்த வேண்டும் என்பதன் சூட்சுமத்தில்
2.சரீரம் தரும் அச்சிறுவன் நிலையும் உயிர் சக்தி முனிவனின் சக்தியுடன் கூடி வளர்ச்சியின் தன்மைச் செயல் வீரியத்தின் வித்தாகி
3.மண்டல சுழற்சிக்கு வேண்டிய வேகத்தின் குணம் எல்லாம் ஒன்று கூடி நல்வினைப் பயன் தொடருக்கு உறுதுணையாய் விளங்கின என்பது
4.மாமகரிஷி ஆகும் கொங்கணர் செல்வநாயகன் பெற்ற பேறுதான் செயல் நிலைக்கு கொண்டு சென்று
5.மன எண்ண வீரிய வைராக்கிய சிந்தனை கொண்டு அடையும் தொடருக்கு நிதானம் என்ற செயலுறும் தன்மையைப் பிரதானமாக்கி
6.முனிவன் தன் மனோபீஷ்டம் நிறைவுற்றதும் தொடர்ந்து வந்துற்ற அருட்சக்தியாலும்
7.அதைத் தக்க முறையில் பயன்படுத்தும் விதமாக்கி நேர்கோடாய்க் கொண்டு சென்ற சூட்சுமத் தொடர் மிக முக்கியம்.

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”

ஆண் பாதி… பெண் பாதி – “சிவ சக்தி…”

 

ஆண் பெண் இன விருத்தியில் ஆணின் அமில சத்தின் பெண் ஈர்ப்பு ஜீவ நிலையில் சரீர வாழ்க்கை திருமண பந்த சொந்தத்தால் மனிதனின் வம்சத் தொடர் மக்கள் செல்வ நிலை பெற்று வாழும் வழித் தொடர் பூமிப் பிடிப்புச் செயலுடன் ஒன்றிய வாழ்க்கையாக உள்ளது.

இதனை ஒத்த பிறப்பு வளர்ப்பு இறப்புடன் ஒன்றிய சுழற்சியையே எப்படி இரண்டு இரண்டு உறுப்புகளின் உருவ உடல் ஞான ஒன்றிச் செயல்படுகின்றதோ அதற்கொத்த தன்மை போன்றே
1.ஆண் இன அமில ஆத்ம அலையும்
2.பெண் இன ஜீவ வளர்ப்புக்குகந்த ஆத்ம அலையும் ஒன்றாக
3.இரண்டு ஜீவ சரீர பிம்ப ஆத்மாக்களின் தொடர்பு பிறப்பு சிசு பிறப்பதைப் போன்று
4.வலுக் கொண்ட ஆத்ம இணைப்பின் தொடரில் பிறக்கும் நிலைதான் “அர்த்தநாரீஸ்வரர்” என்று காட்டினார்கள்.

ஆண் பாதி… பெண் பாதி… “சிவ சக்தி…” என்றுணர்த்திய தெய்வ நிலையில் வழிகாட்டிய உண்மைத் தத்துவ விளக்க நிலைக்கொத்த… ஆத்ம ஐக்கியத்தில் பிறக்கப்படும் வளர்ச்சி நிலை சுழற்சியுடன்… இச்சுழற்சியுடன் ஒத்த ஆத்ம தொடர் கொண்டோரின் ஈர்ப்பு நிலை மகவுகளை சரீரப் பிறப்பில் சரீர சிசு வளர்வதைப் போன்று… ஆத்மாவினால் ஆண் பெண் இன ஆத்ம உயர் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பின் ஞானச் சித்தால் “ரிஷி பத்தினி..” என்ற ஒளி நிலை பெறும் ஆத்ம சக்தியைக் கொண்டு “இந்தப் பூமி மட்டுமல்லாமல் மற்ற ஏனைய மண்டலங்களுக்கும் உயர்வைக் காட்டிட முடியும்…”

ஞானச் சித்து கொண்டு “இரண்டு ஆத்ம ஐக்கியத்தில் ஒன்றானவர்கள்…”
1.உயர்வு கொள்ளாத் தனித்த நிலையில்
2.சித்து நிலையுடன் வளர்ச்சி பெற முடியா உயர் சக்தி கொண்ட தொடர்புகளும்
3.ஆத்ம இணக்க ஆண் பெண் சரீர இயக்கமுடன் ஒத்த நிலையில்
4.சித்து நிலை கொள்ளக்கூடிய ஜீவ சக்தித் தொடர்புடன் வளரும் ஆத்ம ஐக்கிய வளர் சக்தியின் கூட்டமைப்பில்
5.அந்த வலுவாகும் சக்திகள் ஐக்கியம் கொள்ளும்… தன் வளர்ப்பின் நிலைக்காக…!

பல கோடி உண்மைத் தத்துவ உயர் வளர்ச்சி “இன்பத்தின் கோடி…” என்று உணர்த்துகின்றார்களே அத் தொடருக்கும் உயர்ந்த சக்தி நிலைகளை இச்சரீர வாழ்க்கை பந்த ஆண் பெண் ஆத்ம வலுவைக் கொண்டு உயர முடியும்.

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

“சித்தர்களும் மகரிஷிகளும்” நம்மைப் பக்குவப்படுத்தி வழி நடத்துவார்கள்

 

ஆத்மாவின் செயல் உணர்ந்தீர்களா…?

எங்களின் பதில்: தியானத்தில் அமர்ந்து எங்களுக்கு வழிகாட்டிய ஞானகுரு வேணுகோபால சுவாமிகள் உபதேச நிலைக்கொப்ப அத்தொடரில் அவர் காட்டிய எல்லா நிலைகளையும் அறியாவிட்டாலும் சில உண்மைகளைச் செயலாலும் ஞானத்தாலும் அறியும் வழி பெற்றோம்.

1.இந்த மார்க்கத்தில் தொடர்பு கொண்ட பல ஆத்மாக்கள் தன்னைத்தான் உணர்ந்து தன் வழியில் பல உண்மைகளை அறிந்ததையும் கண்டோம்.
2.இச்சரீர பிம்பம் மயங்கிய நிலையோ தன்னைத்தான் மறந்து செயல்படும் முறையன்றி இத்தியானத்தால் அடைந்த உண்மை நிலைகள் பல உண்டு.

அல்லி மலர் காலை உதயசூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பிவிடுகின்றது. இன்னும் சில மலர்கள் சூரிய ஒளியின் அலைபாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து அதன் ஒளி திக்கிலேயே அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடி விடுகின்றது.

இவையெல்லாம் இயற்கை என்கின்றான் மனிதன். எல்லா சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவப் போவது சூரியசக்தி தான் என்ற உண்மை வழியைச் செயற்கைக்கு பாழ்படுத்தும் மனிதன்
1.அடுப்பான இப்பூமியில் பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்தியைப் போட்டு
2.இவன் சமைக்கும் சுவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி இச்சரீர ஜீவனில் உள்ளதை மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன் இவ்வெண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாய்
1.தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
2.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு
3.தொடர்புப்படுத்தி செயலாக்கக்கூடிய ஆற்றல் இவ்வாத்ம ஞானத்திற்கு உண்டு.

இவ்வுடலின் செயலுக்கொப்ப இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி
1.இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்தால்
2.இச்சரீர இயக்க ஆத்மாவையே இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
3.இவ்வாத்மாவை சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
4.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்லை இயக்க நிலையை இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத்துடிப்புடன் இருந்தால்தான் இவ் இயக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு ஆத்மபலத்தை நாம் பெருக்க முடியும்.

ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப்பிடிக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகள் ஆனாலும் சரி… இவ் ஈர்ப்பு வட்டத்தில் சிக்காமல்
1.எப்படி எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பம் ஆகி விடுவதைப் போல்
2.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட “இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்து காண முடியும்…”

வலுப்பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும். தன்னைத்தான் உணர்ந்து தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல்தான் “சித்து வழியில் முதல் சித்து…”

ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கை பந்தத்தில் சுவைக்கும் மற்ற பொருள் நிலை எவற்றிற்கும்… இவ்வெண்ணமானது பேராசைக்கோ ஏக்கத்திற்கோ சஞ்சல சலிப்பு நிலைக்கோ செல்லும் வழிமுறை சிறிது இருந்தாலும்… இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க இச்சரீர பிம்பத்தின் உணர்வில் “செயல் நிலை தடைப்படும்…”

ஞானத்தின் வளர்ச்சியானது எவ் ஈர்ப்பலையின் பிடியிலும் இவ்வெண்ண செயலின் உணர்வு நிலை செயல் கொள்ளும் பக்குவம் கொண்டுதான்… இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்…
1.நாம் ஜெபித்த தியானித்த சித்தர்களின்… வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் பதம் பார்த்து… நம்மை வழி நடத்துவார்கள்.

“ஆத்ம வலுவை மட்டும்” இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்து தான் இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும்.

முதல் சித்தான ஆதம் பலம் பெற இச்சரீர பிம்ப இயக்கம் இருந்தால் தான் பெற முடியும். இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்.