மந்திரங்களை ஜெபிக்கச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்பவர்கள்

Divine enlightenment

மந்திரங்களை ஜெபிக்கச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்பவர்கள்

ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உண்டு. அந்த மந்திரத்தின் தன்மை ஜெபிக்கப்படும் போது ஒரு மனிதனுக்குள் விளைந்த இந்த மந்திரத்தின் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
1.அவன் மடிந்த பின் அதே மந்திரத்தை இன்னொருவன் வலிமை கொண்டு ஜெபித்தால்
2.அவனுக்குள் மந்திரம் ஜெபித்து இறந்தவனின் ஆன்மா வந்துவிடும்.

இப்படி மந்திரங்களை ஜெபித்துச் சில ஆவிகளுடைய உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

அத்தகைய மந்திரங்களை ஜெபித்துக் கொண்ட பின் லேசர் (LASER) இயக்கம் மெஸ்மரிசம் (MESMERISM) என்ற நிலைகளில் சில உணர்வுகளைச் செலுத்திய பின் யாருக்குச் செலுத்துகின்றார்களோ அவர்களுடைய நினைவு இழந்து விடுகின்றது.

இப்படி நினைவு இழக்கச் செய்து மருத்துவ ரீதியாக ஆபரேஷன் செய்கின்றார்கள். சில ஆவிகள் உடலுக்குல் வந்தால் அதற்கு நினைவு தெரியாது.

இதைப் போன்ற நிலைகளில் முறைப்படுத்திச் சில மருந்துகளை உபயோகப்படுத்திப் பழகிய அந்த டாக்டர் எதிர்பாராத நிலையில் உடல் பற்று கொண்டு இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அதே சமயத்தில் அவர் பக்தி கொண்ட நிலையில் மந்திரங்களை ஜெபித்திருந்தால் இறந்தபின் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் சென்று அந்த உணர்வின் வேகத்திலேயே அது வேலை செய்யும். அவர் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் அவர் புகுந்த உடலுக்குள் வருகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் உலக அனுபவம் பெறுவதற்காக நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்யும் போது ஒரு சமயம் ஒரு இடத்தில் இதைப் போன்ற நிகழ்ச்சி நடக்கின்றது.

அவரோ படிப்பில்லாதவர். அவர் உடலுக்குள் இந்த டாக்டரின் ஆன்மா புகுந்த பின் அந்த டாக்டர் செய்த வேலை எல்லாம் செய்யத் தொடங்கினார். உடல் நிலை மிகவும் மோசமானவர்களை இவரிடம் (படிப்பறிவு இல்லாதவரிடம்) கொண்டு வந்து விட்டால் போதும்.

அந்த உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத தீயதுகளை ஆபரேஷன் (OPEN SURGERY) செய்து அகற்றுகிறார்கள் அல்லவா. அதே மாதிரி அவர் அகற்றி விடுகின்றார்.
1.அவரிடம் கத்தியுமில்லை.
2.வேறு ஆயுதமும் இல்லை.

வட இந்தியா பக்கம் சுற்றுப் பயணம் செய்யும் போது இது கண்கூடாகக் கண்ட நிலை. ஏனென்றால் இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதே மாதிரி சில அமானுஷ்யமான நிலைகள் செயல்படும் நிலையில் என்ன என்று தெரியாதபடி
1.தெய்வங்களின் பேரைச் சொல்லியும்
2.ஆண்டவன் பேரைச் சொல்லியும் மதங்களாக உருவாக்கப்பட்டு விடுகின்றது.

எங்கள் கடவுள் சக்தி வாய்ந்தவர். பல பல அபூர்வ நிலைகளை எல்லாம் செயல்படுத்துவார் என்று மதத்தின் உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கப்பட்டு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் போர் செய்யும் நிலைகளைத்தான் இன்று ஊட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மதத்தின் கோட்பாட்டின்படி (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) மந்திரங்களை ஜெபிக்கும் நிலையை முறைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதை ஜெபிக்கும்படி சொல்வார்கள். ஜெபித்தால் “ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவார்…!’ என்று நம்மை வசியப்படுத்தி விடுவார்கள்.

ஆண்டவன் அருளைப் பெற அந்த மந்திரத்தை இத்தனை முறை ஜெபிக்க வேண்டும். இன்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதற்குண்டான வழி முறைகளயும் உருவேற்றுவார்கள்.

இதே வாழ்க்கை முறையில் வாழ்ந்து இறந்த பின் நம்முடைய ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்தி பில்லி சூனியம் ஏவல் போன்ற வேலைகளுக்கு அதைப் பயன்படுத்திப் பல வேலைகளைச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்வார்கள்.

மெய் ஞானிகள் கண்ட உண்மைகளை அறியும் ஞானத்தின் உணர்வுகள் இல்லை. தான் அறியவும் இல்லை. மற்றவரையும் அறியச் செய்யவிடவில்லை. இது தான் இன்றிருக்கும் நிலைகள்.

ஏனென்றால் நம் உயிரே கடவுள். நாம் எதை எண்ணுகின்றோமோ எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்ட பின் எண்ணம் சொல் செயலாக அது இயக்குகின்றது.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சுவாசிக்கும் உணர்வு தான்
2.தெய்வமாக நின்று நம்மை இயக்குகின்றது.
3.நம் வாழ்க்கையையும் வழி நடத்துகின்றது.

மெய் ஞானிகள் கண்ட வழியினை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகின்றோம். மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றோம்.

மெய் ஞானத்தின் உணர்வை நீங்கள் சுவாசித்தால் அது உங்களுக்குள் விளைந்து அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத் “தன்னைத் தான் அறிதல்…!” என்ற நிலையில் நீங்கள் உணர முடியும்.

1.வான இயல் புவி இயல் உயிரியல் என்ற அடிப்படையில்
2.இயற்கையின் இயக்கத்தை அந்த மெய் ஞானத்தை மெய் பொருளைக் காணலாம்
3.மெய் ஒளி பெற்று என்றுமே அழியாத ஒளி உடலாகப் பெற முடியும்.
4.உங்களை நீங்கள் நம்புங்கள்.

எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

Lord eswara gurudeva

எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

உதாரணமாக ஒரு மரம் தான் முழுமை அடைந்த பின் தன் இனத்தின் தன்மையை வித்தாக உருவாக்கி தன் இனத்தைப் பெருக்குகின்றது. இதைப் போன்று தான் மனிதனுக்குள் எண்ணங்கள் வளர்ச்சி பெற்ற பின் அவன் கவர்ந்து கொண்ட உணர்வை உயிர் முழுமையாக்கும் திறன் பெற்றது – மனிதனின் உடலுக்குள் நின்றே…!

விவசாயத்தில் பல பல தாவர இனங்களை இணைத்து அதைப் புது விதமான செடிகளாக மாற்றுகின்றோம். அதைப் போன்று விலங்கினங்களில் உள்ள அணு செல்களைப் பிரித்து மற்ற விலங்கினங்களின் செல்களுடன் இணைத்து புதுப் புது விதமாக விலங்கினங்களாகவும் உருமாற்றம் செய்து வருகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் மெய் ஞானி உணர்ந்த உணர்வின்படி “அவன் எதைக் கண்டான்…?” என்கிறபோது தனது உயிரின் தன்மையை இயக்கத்தை ஈசன் என்று காரணப் பெயரை வைத்து மற்றவர்களுக்கும் இதைப் புரியச் செய்கின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு காந்தப் புலனால் கவரப்பட்டு தான் எடுக்கும் உணர்வின் தன்மையை அதே காந்தப் புலனால் அதைப் பதிவாக்கப்பட்டு மீண்டும் காந்தப் புலனறிவால் வெளிப்படுத்துகின்றான்… விரிவுபடுத்துகின்றான்…! ஒலி/ஒளிப் பேழைகளைத்தான் (CD, HARD DISK, MEMORY DRIVES) அவனால் இயக்க முடியும்.

ஆனால் மெய் ஞான அறிவுப்படி நமது உயிர்
1.காந்தப் புலனை ஈர்க்கக்கூடிய நிலையும்
2.காந்தப் புலனை உருவாக்கும் நிலையும்
3.காந்தப் புலனைத் தனக்குள் பெருக்கும் நிலையும் பெற்றது என்று அறிந்தவர்கள் மெய் ஞானிகள். இவ்வாறு உருவாக்கும் சக்தி பெற்றதை ஈசன் என்று உயிருக்குக் காரணப் பெயர் வைக்கின்றார்கள் மெய் ஞானிகள்.

ஒரு காரிலே ஸ்டேரிங் (STEERING) இருந்தால் தான் திருப்ப முடியும். ஒட்டு மொத்தக் காரையும் இயக்க வேண்டும் என்றால் அதற்குள் இஞ்சின் (ENGINE) வேண்டும்.

அதைப் போல் தான் நமது உயிர் இஞ்சினைப் போல நம் உடலை இயக்கிக் கொண்டு உள்ளது. உயிர் நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது. பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும் நமக்குள் வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காகத்தான் ஈசன் என்று பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு இயந்திரம் இயங்கிக் கொண்டு இருந்தால் தான் அதனுடைய உறுப்புகள் அனைத்தும் அதனதன் செயலாக்கங்களாக இயக்கப்பட்டு முழுமையாக விஞ்ஞான அறிவு கொண்டு வேலை செய்யும் நிலைக்கு அது வரும்.

இயற்கையின் தன்மைகள் எது எதனுடன் இணைக்கின்றதோ அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகின்றதென்ற நிலையை மெய் ஞானி அவன் தன்னுள் கண்டுணர்ந்து அதற்குத் தக்கவாறு காரணப் பெயரை வைக்கின்றான்.

உயிரான ஈசனுக்குள் துடிக்கும் நிலை வரப்படும் போது தான் அதிலே வெப்பம் ஏற்படுகின்றது. உதாரணமாக நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே நீரை ஊற்றி எந்தெந்தப் பொருள்களை அதிலே நாம் போடுகின்றமோ அதை எல்லாம் இரண்டறக் கலக்கச் செய்கின்றது.

ஆனால் வெப்பத்தைக் கொடுக்காதபடி பொருள்களைப் போட்டாலும் இதனுடைய கலக்கும் முறைகள் எதுவாக இருந்தாலும் இதனுடைய இயற்கையின் தன்மையிலேயே தான் அது இருக்கும். இணைந்த நிலைகள் மாற்றம் ஆவதை நம்மால் உணர முடியாது. ஆகவே தான்
1.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தால்
2.ஈர்க்கும் சக்தி வரும் போது
3.இயற்கையின் தன்மை எவ்வாறு கலக்கிறதென்ற நிலையை மெய் ஞானிகள் தெளிவாகக் கண்டுணர்ந்துள்ளார்கள்.

ஒலி/ஒளிப் பேழையில் (CD, HARD DISK, MEMORY DRIVES) உள்ள காந்தப் புலன் தனக்குள் ஈர்ப்பதைப் பதிவாக்குகின்றதோ இதைப் போன்று தான் நமது காந்தத் தன்மை (MAEGNETIC) கொண்ட எலும்புகளில் உள்ள நிலைகளும் காந்தத் துடிப்பால் இயக்கப்படும் போது காந்தப் புலனை அது இயக்குவதும் அதன் தொடர் வரிசையிலே அது இயக்கவும் செய்கின்றது,

நம் உயிரின் இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ அதைக் கண்ணிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் கவர்கின்றது. கண்ணிற்குள் இருக்கக்கூடிய கரு விழி அதைப் படம் எடுக்கின்றது.
1.கவர்ந்ததை எலும்பிற்குள் இருக்கும் ஓடுக்குள் இதைப் பதிவு (RECORD) பதிவு செய்து கொள்கின்றது.
2.பதிவு செய்து கொண்டால் தான் எந்த மனிதன் எதைப் பேசுகின்றானோ அந்த உணர்வின் நிலையை ஆன்மாவாக (எப்படி ஒலி/ஒளிப்பேழைகளில் பதிவு செய்து கொள்கின்றமோ) மாற்ற முடியும்.
3.ஆன்மாவாக மாற்றியதைத்தான் நாம் இழுத்துச் சுவாசிக்க முடியும்.
4.உயிரான காந்தப்புலன் சுவாசத்தின் மூலம் அதைக் கவருகின்றது.
5.அது தான் சுவாச நிலை என்பது.
6.சுவாசித்த உணர்வின் அலைகளை உயிர் இயக்கி உடல் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பரப்புகின்றது.
7.அதிலே உருவாகும் உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.
8.மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.

ஒரு ஃபேன் (FAN) சுழலுமே என்றால் அந்தச் சுழற்சியின் தன்மை வெளியிலிருந்து இழுத்து மறு புறம் அது காற்றாக அனுப்புகின்றது. அதைப் போல நாம் ஆன்மாவிலிருந்து எடுக்கும் இந்த உணர்வின் தன்மையை உயிர் சுழலச் செய்து இந்த உணர்வின் தன்மை வடிகட்டி வெளிப்படுத்தும் நிலைகளை காற்றலைகளை அதைத் தான் மூச்சலைகள் என்பது. இது மெய் ஞானிகள் கண்டுணர்ந்தது.

விஞ்ஞானிகள் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தாலும் மூலத்தை அவர்களால் கண்டுணர முடியவில்லை. ஆனால் “மூலத்தையே…” அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அதன் உணர்வைக் கண்கள் படமெடுத்து எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

இதைச் சுவாசிக்கும் போது உயிர் இந்த உணர்வின் சத்தை “ஓ…!” என்று பிரணவமாக்குகின்றது. இவ்வாறு இயக்கமாக இருப்பதற்கு “மூலம்…!” நம் உயிர் தான். அதனால் உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்றும் அதற்குள் ஏற்படும் வெப்பத்திற்குப் பெயர் விஷ்ணு என்றும் அதனுடன் இணைந்த காந்தப் புலனுக்குப் பெயர் லெட்சுமி என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.

லெட்சுமி நமக்குச் செல்வத்தைக் கொடுப்பாள். செருக்கை கொடுப்பாள் என்று தான் நாம் வணங்குகின்றோம். ஆனால் எந்தச் செல்வம்…?
1.குணச் செல்வம் இருந்தால்தான் பொருள் செல்வத்தைத் தேட முடியும்.
2.குணச் செல்வம் இருந்தால் தான் உடலினுடைய ஆரோக்கிய செல்வத்தை நாம் தேட முடியும் என்ற நிலைகள்
3.ஒவ்வொன்றையும் விரிவாக்கமாக மெய் ஞானிகள் அன்று தெளிவான முறையில் எடுத்துரைத்துள்ளார்கள்.

சந்தர்ப்பவசத்தால் ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் நாம் வைத்துக் கொண்டால் அவனை உற்றுப் பார்ப்போம் என்றால் அவனைக் கண்கள் படமெடுத்து நமக்குள் பதிவாக்குகின்றது.

அவனின்று வெளிப்படும் வேதனையான உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக பரப்பும் போது அதைக் கண்ணிற்குள் இருக்கும் காந்தப்புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும்போது தான் அவனுடைய வேதனையை நாம் அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் வேதனையால் உடல் எப்படி நலிந்திருந்ததோ அதனில் உருவான உணர்வை நாம் நுகர்ந்து அறியப்படும் போது நமக்குள் அவனின் உடலைப்போல நமக்குள் நலியச் செய்யும் உணர்வின் ஜீவ அணுக்களாக விளைகின்றது. அதன் பின் நம் உடலும் நலியத் தொடங்குகின்றது. எந்த உணர்வின் மணங்களை நாம் சுவாசிக்கின்றோமோ அதுவே நம் உடலாகின்றது.

நல்ல மகிழ்ச்சியான உணர்வாகச் சுவாசித்தால் அதனால் விளையும் அணுக்கள் தன் மலத்தால் உடலை உருவாக்கப்படும் பொழுது ஆரோக்கிய நிலைகளை நமக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே
1.பிறர்படும் துயர உணர்வை நாம் பார்க்கும் பொழுது கண்களில் உள்ள காந்தப்புலன் அதைக் கவர்கின்றது.
2.கவர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது… உணர்கின்றோம்…!
3.இயக்கத்தின் நிலை கொண்டு ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
4.அந்த உணர்வின் சத்துக்கள் அணுவாக விளைந்து அதனின் மலமாக உடலாக உருவாகின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் உயிரைச் சொல்கிறோம். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாகின்றது.

நம்மை இயக்குவதற்கு மூலமாக இருக்கும் உயிரை உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை ஈஸ்வரா…! என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் மகா ஞானிகள்.

கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை ஞானிகள் எப்படிப் பார்த்தார்கள்…?

dhuruva-maharishi-agastya

கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் சூட்சம நிலைகளை ஞானிகள் எப்படிப் பார்த்தார்கள்…?  

மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை எந்தெந்த விளக்குகளில் (LIGHT BULBS) இணைக்கின்றோமோ அதற்குத் தக்க நிறங்களில் வெளிச்சம் வெளிப்படுகின்றது.

அதே மின்சாரத்தை மற்ற கருவிகளிலும் உபகரணங்களிலும் இணைக்கும் பொழுது அதனதன் நிலைகளுக்குத் தக்கவாறு அந்த இயந்திரங்களை இயங்குகின்றது.

நம் உயிரின் வேலையும் இதே போன்றது தான்.

உயிருக்குள் ஏற்படும் துடிப்பின் நிலை கொண்டு அது இயக்கச் சக்தியான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வின் சத்தை எல்லாம் ஜீவ அணுக்களாக (உடலாக) அது உருமாற்றிக் கொண்டே வருகின்றது.

இவ்வாறு நமது உயிர் நம் உடலுக்குள் இருந்து செயல்பட்டு வரும் இந்த நிலையில் சூட்சமத்தில் மறைந்திருக்கும் நிலையை (சுவாசிக்கும் உணர்வுகளை) நாம் கண் கொண்டு பார்க்க முடிவதில்லை.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் நுகர்ந்தறியும் உணர்வுகள் அனைத்தும் நல்லதாக இருந்தாலும் சரி… கெட்டதாக இருந்தாலும் சரி…
1.அதைச் சுவாசித்துப் புருவ மத்தியிலிருக்கும் உயிரிலே உராயப்படும் போது தான்
2.அது இயக்கப்பட்டு உடலுக்குள் அந்தந்த உணர்ச்சிகளாகக் காண்பிக்கின்றது.

நாம் கண் கொண்டு திடப்பொருள்களைக் காணுகின்றோம். உதாரணமாக ஒரு மனிதனைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவனோ தவறு செய்து கொண்டிருக்கின்றான்.

அந்த மனிதன் தவறு செய்யும் உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் நம் கண்ணுடன் இணைந்த காந்தப்புலன் நாம் அவரை உற்று நோக்கும் பொழுது அவனின்று வெளிப்படும் உணர்வலைகளை நம்மை நுகரச் செய்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் பட்டபின் – அகக்கண்ணாக
2.உடலுக்குள் அந்த உணர்வினைப் (தவறு செய்கிறான்) பரப்பி நம்மை அறியச் செய்கின்றது.

கண்ணால் திடப்பொருளைக் (மனிதனைக்) கண்டாலும் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை வருகின்றது. அதாவது உணரும் தன்மை வந்தாலும்
1.சுவாசித்த உணர்வின் தன்மையை நம் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.
2.இயக்கிய உணர்வின் தன்மைகளை நம் உடலிலே இணைத்து விடுகின்றது.
3.இவ்வாறு உள்ளுக்குள் வரும் அந்த உணர்வுகளை – சூட்சமத்தில் இருப்பதைப் பார்க்க முடியவில்லை.

நல்ல திடகாத்திரமான மனிதர்களாக நாம் முதலிலே காணுகின்றோம். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி வேதனை சோகம் என்று வரப்படும் போது அந்த உணர்வுகள் அவர்கள் உடலிலே பாய்ந்து அந்த உணர்வின் இயக்கங்களால் உடல்கள் சோர்வடைவதும் நோயாகி வேதனைப்படுவதையும் நாம் பார்க்கலாம்.

இது நாம் திடப்பொருளில் (அவர்கள் உடலைப் பார்த்து) காணும் நிலைகள்.

சில மனிதர்கள் உடல் நலமாக இருப்பினும் சந்தர்ப்பத்தினால் தான் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அதிகரிக்க தான் சுவாசித்த நிலைகள் தன் உடலிலே நிம்மதியற்ற நிலைகளாகி உடலை அப்படியே உருக்கிவிடும்.

காரணம் அது எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் எந்த வித்தின் தன்மை அடைகின்றதோ இந்த வேதனை என்பது நஞ்சான வித்து. உடலை நலியச் செய்துவிடுகின்றது.

தினசரி வாழ்க்கையில் நம் உடலிலே எத்தனையோ கோடிக்கணக்கான உணர்வுகளை எண்ணங்களாகப் பதியச் செய்து சதா சிவமாக உடலாக ஆக்கிக் கொண்டு இருக்கும் நிலையில்
1.எந்தெந்த குணங்களின் எண்ணங்கள் உடலுக்குள் அதிகரிக்கின்றதோ
2;அது தான் கணங்களுக்கு அதிபதியாக முன்னாடி நிற்கிறது
3.காரணம் எல்லா குணத்தையும் அது அடக்கிவிடுகின்றது.

நம்மை எது மாற்றுகிறது…? நம்மை எது இயக்குகிறது…? நம் நல்ல குணங்கள் வலிமை இழப்பது ஏன்…? நமக்கு நோய் வருவது எதனால்…? என்று நமக்குள் நடக்கும் நிலைகளைத் “தன்னைத் தான் அறிதல்” என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறோம்.

ஆகவே எப்பொழுதெல்லாம் எதிர்மறையான நிலைகளைச் சந்திக்கின்றீர்களோ (மனம் அமைதி இழக்கின்றதோ) அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருளவாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்தீர்கள் என்றால் உங்களுக்குள் இயக்கும் நிலையை அது பிரித்துக் காட்டும்.

1.உங்கள் உடலில் விளைந்தது எது..?
2.நீங்கள் சுவாசித்தது எது…?
3.அடுத்தவர்கள் உடலில் விளைந்தது எது…?
4.மகரிஷிகள் தீமைகளை எப்படி வென்றார்கள்…?
5.அவர்கள் எப்படி ஒளியின் சரீரம் பெற்றார்கள்…?
6.அழியாத நிலைகள் கொண்டு இன்றும் எப்படி எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற பேருண்மைகளை அறிய முடியும்.
7.அந்த ஆற்றல்களைப் பெற்று அவர்களைப் போன்று ஆகவும் முடியும்.

ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

ஒளி உலகம்

ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று எல்லோரும் சொல்கிறோம்…! அதனின் பொருளை (கருத்தை) அறிந்திருக்கின்றோமா…?

வாழ்க்கை என்ற நிலை அமைதியுடன் செல்ல வேண்டும். அது தான் வாழ்க்கையின் முழுமை. அதற்காக வேண்டி ஒரு நிலையில் இருந்து கொண்டு ஆண்டவனின் பெயரை மட்டும் உச்சரித்துக் கொண்டே ஆண்டவன் பால் செல்வதல்ல வாழ்க்கை.

மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்…! ஆண்டவனிடம் சென்று ஐக்கியப்பட வேண்டும்…! என்றால் அப்படிப்பட்ட ஆண்டவன் எங்குள்ளான்…?

1.ஒன்றுடன் ஒன்று இணைந்தது தான் “ஆதி சக்தியின் நிலையே….!”
2.காற்றும் நீரும் மோதுண்டால் “ஒளி..” உருவாகின்றது.
3.ஒலியும் ஒளியும் மோதுண்டால் “ஜீவன்…” உண்டாகிறது.
4.ஒளி நீர் ஒலி எல்லாமே சேர்ந்த பிறகுதான் அந்த ஜீவனுக்குச் “சுவாசத் துடிப்பே…” வருகிறது.
5.சுவாசத் துடிப்பு வந்தவுடன் பல உணர்வின் எண்ணங்களுடன் அந்த ஜீவன் (அணு) மோதி மோதி “ஈர்க்கும் சக்தி பெற்றுச் சுழல்கிறது…”

அந்த ஈர்ப்பின் நிலைக்கொப்ப அது தனக்குள் சேமித்த குணத்தின் தன்மைக்கொப்ப இந்தப் பூமியில் உள்ள பல சத்துகளுடன் மோதி மோதி தன் வளர்ச்சிக்கு அதன் சுவாசத்திற்கொப்ப “வழித் தொடரைப் பெறுகின்றது…”

ஒன்றுடன் ஒன்று மோதாத நிலையில்… “ஜீவனே பெற முடியாது…!”

இரண்டு நிலைகள் கொண்ட நிலையில் மோதலில் மூன்றாகி நான்காகி பலவாகிச் சுழல்வது தான் இந்த அகண்ட அண்டத்திலுள்ள எல்லா ஜீவன்களும்…! (மண்டலங்களாக இருந்தாலும் சரி உயிரினங்களாக இருந்தாலும் சரி அப்படித்தான்…!)

1.தனித்த (சக்தி) ஆண்டவன் என்று எங்கே இருக்கின்றான்…?
2.ஆண்டவனின் பெயரை ஜெபித்துக் கொண்டே நாம் எங்கே செல்லப் போகிறோம்…?
3.முடிவே இல்லாத உண்மையின் ஒளிர் தத்துவ அடக்கமே (பேரருள் பேரொளி) அந்த மோதலின் சுழற்சியில் தான் உள்ளது.

ஆதி சக்தி என்பது விஷம். அந்த விஷம் விஷமற்றதைத் தாக்கும் பொழுது ஏற்படுவது வெப்பம். வெப்பத்தினால் ஈர்க்கும் காந்தமாகி மற்றதைக் கவர்ந்து ஒரு திடப் பொருளாகின்றது… “பரம்பொருள்…”

மோதவில்லை என்றால் எதுவுமே சிருஷ்டியாகாது. ஒன்றுடன் ஒன்று மோதவில்லை என்றால் ஆண்டவன் என்ற சொல்லுக்கே பொருள் இல்லை…! மோதலினால் ஏற்படும் அந்தச் சுழற்சியில் ஜீவன் கொண்ட வளர்ச்சியில் உருவங்களாகி மனிதன் வரை வளர்ச்சி பெற்று வந்துள்ள நாம்
1.எல்லாமில் எல்லாமாக….
2.”ஒளிரக் கூடிய எல்லாமே ஆண்டவன் தான்…!” என்று உணர்தல் வேண்டும்.

இருந்த இடத்திலிருந்தே… “ஈஸ்வரனின் துணை கொண்டு” வரும் சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும்

Grace of Eswara

இருந்த இடத்திலிருந்தே… “ஈஸ்வரனின் துணை கொண்டு” வரும் சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும்

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று பார்க்கின்றோம். நம் கண்கள் காட்டுகின்றது. கெடுதல் செய்யும் உணர்வினை உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது,

நம் கண்கள் எதைப் பார்த்து பதிவு செய்ததோ அவனைப் பார்த்தவுடனே “தவறு செய்பவன்…” என்று நமக்கு உணர்த்துகின்றது. கெட்டவன் என்று தெரியும் போது அந்த உணர்வால் விலகிச் செல்கின்றோம். கண்கள் நம்மைக் காப்பாற்றுகின்றது.

அல்லது அவன் தாக்க வருகின்றான் என்றால் அதைத் தடுப்பதற்குத் தக்க ஆயுதத்தை நம்மிடம் வைத்துத் தன்னைப் பாதுகாக்கவும் செய்கின்றது… இதே கண்கள் தான்.

இருந்தாலும் அவன் நம்மைத் தாக்க வருகின்றான் எனும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வோ அவனை நாம் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.நம் உயிர் என்ன செய்கின்றது…?
2.அதே உணர்வின் அணுவாக மாற்றுகின்றது.
3.அப்போது அவன் அழிக்க வேண்டும் என்ற உணர்வு இங்கே இரத்தத்தில் கருவாக உருவாகின்றது.
4.இப்படிச் செய்கின்றான்… அவனை விடுவதா… விடுவதா… விடுவதா…? என்று இதைக் கூட்டுகின்றோம்.

அப்போது கருவுற்ற ஒரு கோழி கேறுகின்ற மாதிரி நமக்குள் அது உருவாக்கி விடுகின்றது. அது உருவாக்கிய பிற்பாடு என்ன செய்கின்றது?

அவன் எப்படி நமக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று நினைத்தானோ அது நமக்குள் வந்து நம்மிடமிக்கும் நல்ல குணத்தை இது இடையூறு செய்து கொண்டே இருக்கும். நல்லதைச் செயல்படுத்த விடாது.

தவறு செய்பவன் எங்கயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். அவன் உடலில் விளைந்தது நமக்குள் நரகாசுரனாக அசுர குணங்களாக உருவாக்குகின்றது.

அவன் அசுரன் என்று காட்டுகின்றது. நாம் நுகர்ந்து அறிகிறோம். ஆனால் நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

அசுத்தம் என்று தெரிகின்றது. அந்தச் சாக்கடை மேலே பட்டவுடனே அறிகிறோம் – “கார்த்திகேயா…!” உடனே நல்ல நீரை வைத்துச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

அதே மாதிரி அசுர குணம் என்று தெரிகின்றது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா…?

அதை அடக்குவதற்கு அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அசுர குணத்தை அடக்கி விடுகின்றது. அதை எழுந்திரிக்க விடுவதில்லை.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
2.வைரத்தைப் போல எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
3.எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும்… செயல் ஜொலிக்க வேண்டும் என்று கூட்டிவிட்டோம் என்றால்
4.இந்த வெளிச்சத்திற்குள்ளே அந்த இருள் (அசுர குணம்) மறைந்துவிடுகின்றது.

இந்த வைரம் விஷம் கொண்டது தான். ஆனால் அது ஜொலிக்கின்றது. வைரத்தைப் போல தன் உணர்வுகளை எல்லாம் ஜொலிக்கச் செய்தவன் துருவன்.

அப்போது நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நுகர்ந்தோம் என்றால் இருள் மறைகின்றது.

இல்லை என்றால் நம் அறிவை மழுங்கச் செய்யும் போது நமக்குள் என்ன செய்யும்..?

எவ்வளவு திறமையாக இருக்கும் கொஞ்சம் விஷம் போட்டால் என்ன செய்யும்…? நம் எல்லா வலுவும் இழந்து விடுகின்றது. ஐய்யயோ ஐய்யயோ இப்படி ஆகின்றதே.. செத்துப் போய்விடுவோம் என்ற இந்த உணர்வு தான் வருகிறது. தன்னைக் காப்பாற்றுவதற்கு முடிகிறதோ…?

பதறுவோம்… பதட்டமாவோம்…! காப்பாற்றுவதற்கு முயற்சியும் எடுக்கின்றோம். முயற்சி எடுத்தாலும் முடியாத நிலை வரப்போகும் போது அது வீழ்த்தி விடுகின்றது.
1.நம்மால் முடியவில்லை…!
2.பின் வேறு யாராவது தான் வந்து நமக்கு உதவி செய்ய வேண்டும்.

ஆனால் நாம் இருந்த இடத்திலிருந்தே உதவியைப் பெற வேண்டும் என்றால் யாரிடம் கேட்க வேண்டும்…? எப்படிக் கேட்க வேண்டும்…?

எதிர்பாராத நிலை வந்து விட்டது. ஒருவன் தவறு செய்கின்றான். நம்மால் முடியவில்லை என்கிற பொழுது
1.“ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் கேட்க வேண்டும்.
2.ஈஸ்வரா என்று சொன்னவுடனே கண்ணோட நினைவு நேரடியாக அந்தத் துருவ மகரிஷியின் பால் செல்ல வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்
4.இந்த இருட்டை அப்பொழுதே அது வெல்லுகின்றது.

அந்த இரண்டையும் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் அணுவாக உருவாக்கப்படும் போது வேதனைகளை அடக்குகின்றது.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இருந்த இடத்திலிருந்தே உயிரின் துணை கொண்டு வரும் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

பல நினைவுகளில் நாம் இல்லாமல் “ஈஸ்வரா…..!” என்று ஒரு நிலையில் நம் நினைவு இருக்க வேண்டும்

Peace of Mind

பல நினைவுகளில் நாம் இல்லாமல் “ஈஸ்வரா…..!” என்று ஒரு நிலையில் நம் நினைவு இருக்க வேண்டும்

ஒருவர் நோயோடு ரொம்ப வேதனைப்படுகிறார் என்று நாம் பார்க்கின்றோம். ஐயோ.. பாவமே…! என்று சொல்லி விட்டு அந்த நோயை நீக்குவதற்கு அவருக்கு நாம் உதவி செய்கிறோம்.

ஆனாலும் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லை என்றால் என்ன ஆகும்….?
1.அவரின் நோயின் தன்மையைப் பற்றிக் கேட்டு நுகர்ந்த பின்
2.அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த நோயின் தன்மை நமக்குள் வரும்.

நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெற வேண்டும். அவர் உடல் நலமாக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அவருக்கு வந்ததைப் பார்த்து “ஐயோ…! என்றால்…
1.நமக்குள்ளும் ஐயோ என்று அந்த நோயை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
2.அவர் பட்ட வேதனையைத்தான் உருவாக்கும்.

நல்லதைச் செய்கிறேன் என்ற நிலையில் “நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்…! என்று அந்தப் பக்குவ நிலை தவறினால் என்னாகும்..?

வடையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் காயாமல் தட்டிப் போட்டால் ஒரு வடை போட்டால் வேகும். இரண்டாவது வடையை போட்டவுடன் சூடு அமர்ந்து விடும்.

அப்போது வடை வேகுமா…? எண்ணெயைத்தான் எடுத்துக் கொள்ளும். சட்டியில் எண்ணெய் காணமல் போகும். வடையில் ருசி இருக்காது.

ஆகையால் வாழ்க்கையில் எந்த ஒரு தீமை என்ற உணர்வை நுகர்ந்தாலும் அடுத்த கணம் அதைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்குப் பக்குவம் வர வேண்டும்.

ஒருவன் தீய வினைகளைச் செய்கிறான். அதைப் பார்க்கிறோம் என்றால் அது நமக்குள் வராதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை வைத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தாற் போல் யாரிடம் சொன்னாலும் குற்றங்களில் இருந்து அவன் மீள வேண்டும்… “மீள்வான்…!” என்று சொல்ல வேண்டும். ஆனால்
1.பாருங்கள்…! இந்த மாதிரித் திட்டிக் கொண்டு இருக்கின்றான்.
2.நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று கோபமாகச் சொன்னால் என்ன செய்யும்?

பக்குவம் தவறினால்… இதே உணர்வு கோபமாக அவரையும் நம் மீது திருப்பிப் பேசச் செய்யும். நம் மீது தான் குற்றவாளி ஆக்கும். ஏனென்றால்
1.அவன் உணர்வு நமக்குள் வந்து
2.இதே சொல் அங்கே போய்
3.நம்மைக் குற்றவாளியாக ஆக்கும்.
4.அப்போது தவறு செய்பவனுடைய உண்மையை நாம் எடுத்து சொல்ல முடியாது.

ஆகவே அந்த மாதிரி ஆகாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெறவேண்டும்… உண்மையை அவர் உணர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அந்தப் பரிபக்குவத்தைப் பெற்று தீமையை நமக்குள் புகாதபடி தீமையை மாற்ற வேண்டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாமியார் செய்வார்… சாமி செய்யும்.. கடவுள் செய்வார்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்
1.உள் நின்று இயக்கும் நம் உயிரே கடவுள்
2.நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகின்றது – அதுவே நம்மை இயக்குகின்றது.

தீமையான இயக்கங்களிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். தீமையை நீக்கிய மகரிஷிகளின் உணர்வினை எடுத்து ஒவ்வொரு செயலையும் நமக்குள் பக்குவப்படுத்த வேண்டும்.

அந்த நிலை பெறுவதற்காகத்தான்
1.பாட்டை மட்டும் பாடி விட்டுப்
2.பல நினைவில் நான் இல்லாமல் பரி பக்குவ நிலை நான் பெற
3.எனக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கேட்கின்றோம்.

“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

Markandaeyan

“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

நாம் இப்போது எதை ஆசைப்படுகின்றோம்…? இந்த உடலில் நான் வளர வேண்டும் என்றும் இதிலே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று
1.இந்த உடல் ஆசைதான் வருகின்றது.
2.உயிரான ஈசன் நமக்குள் இருந்து நல் வழி காட்டுகின்றான் என்ற நிலையைச் சுத்தமாக மறந்துவிடுகின்றோம்.

ஒருவன் எனக்குத் தவறு செய்தான் என்ற உணர்வை நுகர்ந்தால் அந்தத் தவறு செய்யும் உணர்ச்சி நமக்குள்ளே இயக்கி நம்மையும் தவறு செய்பவனாக மாறுகின்றது.

இந்த உடலின் இச்சைக்குத்தான் மாறுகின்றதே தவிர
1.தீமையான உணர்வுகளை நமக்குள் மாற்றி அமைக்கும் சக்தி இருந்தும்
2.அதைச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டச் சொல்கின்றம்.

1.நீ ஒளியாக இருந்து…
2.உணர்வின் தன்மை எனக்கு எப்படித் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றாயோ
3.உன்னைப் போல இருளை அகற்றிடும் சக்தியாக
4.மெய்ப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.உடல் ஆசை இல்லாது உயிரான ஆசை தான் எனக்கு வேண்டும்.

இதைத்தான் இராமயாணத்தில் உடலின் ஆசையைச் சிவ தனுசு என்று காட்டியுள்ளார்கள். அதாவது
1.உடலைக் காக்கும் (தன்னைக் காக்க) ஆசையில்
2.உடலில் விளைந்த பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகளைக் கவர்ந்து
3.நாமும் தீமை செய்து தீமையான உடலாகத் தான் வளர்த்து விடுகின்றோம்.

எதிரி என்றால் வீழ்த்திடும் உணர்வு வருகின்றது.
1.ஆனால் வீழ்த்திடும் உணர்வு வரும் போது
2.அந்தத் தீமையின் உணர்வே… நம் உடலையும் வீழ்த்துகின்றது…! என்பதனை நாம் மறந்து விடுகின்றோம்.
3.இத்தகைய உடல் ஆசை வரப்படும் போது தவறின் தன்மைய வருகின்றது.

ஆனால்…,
1.உயிரான ஈசன் அவன் எனக்குள் இருக்கின்றான்
2.எண்ணியதை அவன் உருவாக்குகின்றான்… இருளை அகற்றுகின்றான்… தெளிந்த மனம் பெறச் செய்கிறான்…
3.அவன் அருளால் அருள் மகரிஷிகளின் உணர்வை என்றுமே நான் பெறுவேன் என்ற
4.இந்த உயிர் ஆசையை நமக்குள் வளர்க்கப்போகும் போது
5.அருள் ஆசை நமக்குள் என்றுமே இருந்து கொண்டே இருக்கும்.

அந்த அருள் ஆசை இருந்தால் நமக்குள் பொருள் அறிந்து செயல்படும் திறனும் பிறவியில்லா நிலை அடையும் ஆற்றல்களையும் பெறுகின்றோம்.

உயிருடன் ஒன்றியே நாம் வாழ்கிறோம். அவனுடன் ஐக்கியமாகும் நிலை பெற்று விட்டால் உயிர் நம்மை (அவனுடன் இணைந்த நிலையில்) நேரடியாக மகரிஷிகள் வாழும் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்…!

உயிரில் மோதும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது – உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளில் கவனம் தேவை…!

Everlasting soulS

உயிரில் மோதும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது – உயிரில் மோதும் (LASER போல்) உணர்வுகளில் கவனம் தேவை…!

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம். முன்பு காந்த ஊசியை வைத்து நாடாக்களில் உராய்ந்து அந்த உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தி இசையோ அல்லது பாடலோ படமோ அதைக் கேட்கலாம்… காணலாம்…!

இப்போது அதெல்லாம் இல்லை. லேசர் (LASER) இயக்கம் என்ற நிலையில் ஒளிக் கற்றையை நேராகப் பாய்ச்சுகின்றனர்.

நாடாக்களில் பதிந்த நிலைகள் கொண்டு அதை வேகமாகச் சுழலச் செய்து அதில் LASERஐப் பாய்ச்சும் பொழுது அந்த நாடாக்களில் பதிவானது எதுவோ அந்த உணர்வலைகளை இன்று டி.வி்.க்களிலும் கம்ப்யூட்டரிலும் செல்ஃபோன்களிலும் பார்க்கின்றோம்.

இந்த ஒளியின் லேசர் இயக்கம் அதிலே மோதி அதிலே வரக்கூடிய அந்தக் காந்தப்புலனுடன் இணைந்து அது எந்தெந்த இசைகள் இருந்ததோ அதையெல்லாம் இயக்கிக் காட்டுகின்றது. பாடல்களைப் பாடச் செய்கின்றது.

பாடல்களைப் பாடச் செய்யும் போது பாடத் தெரியாத குழந்தையும் காதிலே கேட்டவுடனே அந்த இசைக்குத் தகுந்த மாதிரி ஆட ஆரம்பிக்கின்றது.

அப்பொழுது அந்தக் குழந்தையை எது ஆட்டுவிக்கின்றது.

எந்தக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்ந்து உற்று நோக்குகின்றதோ
1.கண்ணின் புலனறிவு அந்த ஒலி் அலைகளைத் தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசிக்கும் பொழுது உயிரால் ஈர்க்கப்பட்டு
3.அதிலே மோதியவுடன் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது.
4.அந்தச் சப்தம் மகிழ்ச்சி என்றால் மகிழ்வான உணர்வுகளைக் கொண்டு வருகின்றது.
5.உடல் முழுவதும் பரவச் செய்கின்றது
6.அதற்குத்தக்க இந்த உடலை இயக்கச் செய்கின்றது.

குழந்தைகளில் இதைப் பார்க்கலாம். எது இயக்குகின்றது…? நுகர்ந்தறிந்த உணர்வு எதுவோ அதற்குத்தக்க இயக்கச் செய்கின்றது.

ஆனால் அந்தக் குழந்தைக்குப் பாடலைப் பற்றி அந்த இசையின் தன்மை தெரியவில்லை என்றாலும் கூட
1.உற்றுக் கேட்டு நுகர்ந்த உணர்வுகள்
2.அந்தக் குழந்தையை இயக்கிக் காட்டுகின்றது… இயக்கச் செய்கின்றது…!

அதாவது உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் பரவச் செய்யப்படும் போது அந்த உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. அதுவே நம்மை ஆள்கின்றது.

1.நாம் இயக்குகின்றோமா…?
2.நம்மை அது இயக்குகின்றதா…? என்று பார்த்தால்
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதுவே அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

உயிர் என்பது (LASER) போன்று நாம் சுவாசிக்கும் அலைகளுடன் உராய்ந்து எண்ணங்களாகவும் உணர்வுகளாகவும் எழுப்பி உடலுக்குள் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.

அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது உடல் உறுப்புகளை இயக்கச் செய்து அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம். உயிரிலே படவில்லை என்றால் எந்த உணர்ச்சிகளும் நம்மை இயக்காது. அதனால் தான்
1.தீமையான உணர்ச்சிகள் நம்மை இயக்காமல் தடுக்கப்
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும்படிச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளே நம்மை இயக்கும். தீமையான உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…?

சுவாசநிலை - காற்று

தீமை செய்யும் அணுக்கள் சுவாசத்தின் வழியாக நம் உடலுக்குள் எப்படி உருவாகின்றது…? 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி “ஒருவன் வேதனைப்படுகின்றான்…” என்ற உணர்வை அறிவித்தாலும் நம் உயிரில் மோதிய பின் அது அணுக் கருவாக உருவாகிவிடுகின்றது.

உதாரணமாகக் கோழி, குருவி முட்டை இடும் உயிரினங்கள் அனைத்துமே கேறும். பல்லி கூட கேறும்.

அப்படிக் கேறுவது போல “அவன் வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்… வேதனைப்படுகின்றான்…” என்று எண்ணங்களை அதிகமாகக் கூட்டி நாம் திரும்பத் திரும்ப எண்ணும் போது எந்த மனிதனை எண்ணினோமோ அந்த உணர்வின் கருவாக உடலுக்குள் உருபெறத் தொடங்கிவிடுகின்றது.

அவர் உடலிலே நோய் உண்டாக எது காரணமாக இருந்ததோ அதே மாதிரி நம் உடலுக்குள் வரும். அது கருவான பின் நம் இரத்தங்களிலே சுழன்று வரும்.

1.பின் எந்தெந்தப் பாகங்களிலே தேங்கி நின்று விடுகின்றதோ
2.அந்தப் பாகத்திலே கருவாகி
3.முட்டையாகி வெடித்து அணுவாக வரும்.

கோழி அடைகாத்த பின் முட்டை பொரிந்து அந்தக் குஞ்சுகள் வெளி வருவது போல் வந்துவிடும். வெளி வந்த பின் அந்தக் குஞ்சுகள் எல்லாம் கத்தும். கத்தும் பொழுது தாய்க் கோழி கூப்பிட்டு மண்ணைக் கிளறி எடுத்து ஆகாரம் கொடுக்கும்.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் ஒரு அணுவின் தன்மை முழுமை அடைந்து விட்டால்
1.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவும்.
2.நம் சிறுமூளை பாகம் வந்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.பின் நம் உயிர் அந்த உணர்ச்சியைப் புலனறிவு ஐந்திற்கும் கண் காது மூக்கு உடம்பு வாய் இவைகளுக்கு அனுப்பும்.
4.அதன் வழி கவரச் செய்யும் (சுவாசமாக)

எந்த மனித உடலில் இருந்து நோயின் உணர்வலைகள் வெளி வந்ததோ அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.

நம் புலனறிவும் ஐந்தும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் அனுப்பும். உடலுக்குள் போவதற்கு முன் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் என்ன நடக்கின்றது…?
1.அந்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ
2.அந்தச் சங்கடமும் சோர்வான உணர்ச்சிகளையும் நம்மை அறியாமலே தோற்றுவிக்கும்.
3.நாம் இனம் புரியாதபடி வேதனைப்படுவோம்.

அவ்வாறு நாம் வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தொழிலின் நிமித்தமாக நம்மைத் தேடி வந்து “இன்ன குறை இருக்கிறது” என்று எடுத்துச் சொல்ல வருகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் சொல்வதை நம் செவிப்புலன்கள் ஏற்றுக் கொள்ளாது. இந்த வேதனைக்குரிய நினைவைத் தான் ஊட்டும்.

அதே சமயத்தில் ஒருவன் மகிழ்ச்சியான நிலையில் இருந்தால் நம் கண்ணின் பார்வைக்கும் அது ஏற்றுக் கொள்ளாது. நம் கண்ணின் பார்வைக்கும் அந்த வெறுப்பின் நிலையே ஊட்டும்.

நாம் ஒரு கணக்கையோ அல்லது ஒரு பொருளையோ உருவாக்க வேண்டும் என்றால் கவனமாகப் பார்த்துத் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்போது அந்த வேதனையின் உணர்வுகள் பார்வைக்கு வரும் போது அந்த உணர்ச்சிகள் உடலை இயக்கிய பின்
1.அதை வேலை செய்ய விடாதபடி அந்த வேதனை உணர்வுகள் நம் அங்கங்களைக் குறைத்து விடும்.
2.கை கால்களைக் குறைத்து விடும் – இந்த உடலுக்கு.

அப்போது நம் உடல் என்ன செய்கின்றது?

வேதனையால் உருவான அணுக்கள் உடலுக்குள் இருக்கிறதல்லவா…! அதற்கு இந்த வேதனை உணர்வலைகளை சாப்பாடாகக் கொண்டு கொடுக்கும்.
1.வேதனையான அணுக்கள் சந்தோஷப்படும்.
2.ஆனால் நம் உடலில் உள்ள நல்ல குணங்களால் உருவான அணுக்கள் வேதனைப்படும்.

கோழி தன் குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருகின்றது என்று வைத்துக் கொள்வோம். ஒரு பருந்து வந்தால் உடனே கோழி என்ன செய்கின்றது…?

உடனே “கர்ர்ர்…ர்ர்…” என்று இரைச்சலை விடும். எல்லாக் குஞ்சுகளும் தாயின் இறக்கைக்குள் அடங்கிவிடும்.

இதே மாதிரித்தான் வேதனை என்ற உணர்வு வந்தவுடனே எல்லாமே அந்த உயிருடன் ஒன்றி அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. பாதுகாப்பாக இருக்கின்றது.
1.வேதனையால் உருவான அணுக்கள் மீண்டும் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.உயிர் அதனின் ஆகாரத்தை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இப்படி நம் உடலுக்குள் நம்மை அறியாமலேயே வேதனை அணுக்கள் உருவாக்கினால் நாம் பார்த்த மனிதன் எப்படி வேதனைபட்டானோ அதே வேதனை அணுக்கள் நமக்குள் உருவாகி நாமும் வேதனைப்படுவோம்.

1.சாமியைக் கும்பிட்டாலும் சரி…
2.சாமியாரைப் பார்த்தாலும் சரி…
3.அர்ச்சனை செய்தாலும் சரி…
4.யாகங்கள் செய்தாலும் சரி… அதனால் பலன் இல்லை

யாகத்தின் பால் பற்றாகி அந்த எண்ணங்களைக் கொண்டு வரப்போகும் போது யாக எண்ணத்தின் அணுவின் கருவாக உருவாகின்றது.

அதை வளர்ந்து விட்டால் “யாகத்தைச் செய்ய வேண்டும்… செய்தால் தான் சரியாகும்…! என்று அதன் வழியே தான் நம்மைச் செய்யச் செய்கின்றது.

அங்கே கோவிலுக்குச் சென்று அரச்சனை செய்து பல விதமான கனிகளையும் மலர்களையும் நல்ல மணங்களையும் வைத்து அங்கே கொடுத்தாலும்
1.ஒரு நல்ல பதார்த்தத்தில் விஷம் என்ற நிலைகள் பட்டவுடனே
2.நல்ல பதார்த்தமும் விஷத்தின் இயக்கமாகதான் மாறுமே தவிர அதற்குச் சக்தி இல்லை.
3.நீங்கள் யாகங்கள் செய்தாலும் சரி… மற்ற நிலைகள் எதைச் செய்தாலும் சரி…
4.கஷ்டத்தைப் போக்குவதற்காகத் தெய்வத்தை வேண்டி “நான் விரதம் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் சரி…
5.இன்னும் கொஞ்சம் விஷத்தைத் தான் வளர்க்கிறமே தவிர அந்த நோயை மாற்றாது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த ஆலயத்தில் காட்டிய முறைப்படி தெய்வ குணத்தை நமக்குள் கவர வேண்டும்… சுவாசிக்க வேண்டும்…!

 

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் கருவாக்கி அணுவாக்க வேண்டும். ஒளியான அணுக்கள் நம் உடலில் பெருகினால் நஞ்சான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது அது செயலிழந்துவிடும்.

ஆற்றலைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓ…ம்” போட்டுள்ளார்கள் – ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!

 

Ommஆற்றலைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் கோவில்களில் “ஓ…ம்” போட்டுள்ளார்கள் – ஆற்றலைப் பெருக்குகின்றோமா…!

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” – ஒவ்வொருவரும் அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது.

“ஓ…” என்பது பிரணவம் என்று என்று சாஸ்திர விதிகள் கூறுகின்றன. “ஓ…ம் “என்பது பிரணவம் என்று தான் எல்லாரும் சொல்லி இருக்கின்றார்களே தவிர
1.பிரணவம் என்பது எது?
2.பிரணவத்தை எதற்காகக் குறித்தார்கள்?

சாஸ்திர விதிகளைக் கரைத்துக் குடித்தவரும் சாஸ்திரத்தை உணர்ந்து கொண்டவரும் “ஓ…ம் “என்ற பிரணவத்தைப் பற்றி விளக்கங்கள் பல முறைகள் கொண்டாலும் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள் இது வரையிலும் வெளிப்படுத்தவில்லை.

இயற்கையின் தன்மையில்
1.தான் யார்…?
2.தன் உயிரின் இயக்கத்தின் தன்மை என்ன? என்ற நிலையையும்
3.”ஓ…ம்” என்ற பிரணவத்தின் தன்மையை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும்?
4.அது மக்களுக்கு எப்படித் தெரியப்படுத்த வேண்டும்? என்று நம் குருநாதர் உணர்த்தியுள்ளார்.

பிரணவம் என்றால் “ஜீவன்.. இயக்கம்” என்று பொருள்.

நம் உயிர் உடலுக்குள் நின்று இயக்கமாக இருக்கின்றது. “ஓ…” என்பது பிரணவம்… ஜீவனாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு “காந்த ஊசியினை” வைத்து மற்ற காந்தப் புலன் அறிவுகள் கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றோம்.

1.காந்த ஊசியினை மீண்டும்
2.அந்தப் பதிவு செய்த அலை மீது வைத்த பின்
3.”அது உராய்ந்து…”
4.அதற்குள் பதிவான ஒலி அலைகளை எழுப்புகின்றது.

நாம் எதைப் பேசுகின்றோமோ அதை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிர் நம் உடலுக்குள் காந்த ஊசியாக இயங்கிக் கரண்ட்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது.

எத்தகைய குணம் கொண்டு நாம் எண்ணுகின்றமோ அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
1.எந்தக் குணத்தை நாம் சுவாசித்தமோ
2.உயிரிலே அது உராய்ந்த பின்
3.அந்தக் குணத்தின் உணர்வின் செயல்களை உணர முடிகின்றது.

கோப குணம் என்பது காரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது அது. உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபமாக எண்ணுகின்றேன் என்றால் காரமான உணர்வைச் சுவாசிக்கின்றேன்.

சுவாசித்த உணர்வு உயிரிலே உராயப்படப் போகும் போது அந்தக் கோபமான உணர்ச்சியைத் தூண்டக்கூடிய அந்த உணர்வுகள் நமக்குள் செயல்படுகின்றது.
1.உடல் கோபத்தால் துடிக்கின்றது.
2.கோபமான சொல்லாக அது வெளிப்படுகின்றது.
3.அப்போது நாம் எண்ணக்கூடிய அந்தக் கோபம் என்ற குணம் ஜீவன் பெறுகின்றது
4.உயிர் அதை நமக்குள் ஜீவனாக்குகின்றது (உருவாக்குகிறது) என்று அர்த்தம்

இதைத்தான் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்கிறோம். “ஈஸ்வரா…” என்றால் இயக்கமாக (இயக்கும் சக்தியாக) இருந்து நீ என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றாய் என்று பொருள்.

“ஓ…ம்” என்பது பிரணவம். நாம் எண்ணியது பிரணவமாகின்றது. அதாவது ஜீவன் ஆக்கக்கூடிய அந்தத் திறன் பெற்றது. உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றது என்று பொருள்.

1.”ம்…” என்றால்
2.நாம் எதை எல்லாம் எண்ணுகின்றமோ அந்த உணர்வின் சத்தை இயக்கி விட்டு
3.நம் உடலுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது – அதனால் தான் “ஓ… … …ம்”.
4.”ம்…” என்பது பிரம்மம். சிருஷ்டி என்று பொருள்.

சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகத்தான் எல்லாக் கோவில்களிலும் அந்தந்தத் தெய்வத்திற்கு முன்னாடி “ஓம்” போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள்.

ஆனால் “ஓம்” என்பதை மந்திரமாக எண்ணி அந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்களே தவிர
1.உயிரின் இயக்க நிலையும்
2.உயிரின் துணை கொண்டு நாம் சுவாசிக்க வேண்டிய
3.மெய் ஞானிகளின் அருள் சக்திகளையும் எண்ணுவதில்லை.