இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – எப்படித் தடுப்பது? 

வாழ்க்கையே தியானம்.

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – எப்படித் தடுப்பது?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது. பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.

அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.

அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.

நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.

பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.

வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.

அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.

நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே  பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.

சில பேருக்கு  ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்.”

ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில்  அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று  எழுந்து ஓடுபவர்களும் பலர்  உண்டு.

விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது

1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.

இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).

Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.

அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.

நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது  அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி  எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.

சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.“ஐயோ என்னைக் கொல்கிறார்களே என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர் கொல்கின்றனர் என்றும் சொல்வார்கள்.

விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது. இங்கே இப்படி ஆனது என்பார்கள்.

நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.

அவர் விபத்தைப் பார்த்தார்; நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.

என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.

அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.

1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.

அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின்  இரவிலே

1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.

ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.

“ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.

வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.

புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து 2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

அதே போல் படுக்கப் போகும் முன்பும் காலையில் எழும் பொழுதும் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று கண்டிப்பாகத் தியானிக்க வேண்டும்.

1.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று இரவிலும்
2.இன்றைய செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று காலையிலும்
3.ஒவ்வொரு நாளும் இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால்
4.நம் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் என்றுமே குடிகொண்டிருக்கும்.

நம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”

maharishi

நம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”

சிலர் வியாபாரத்திலேயோ மற்ற நிலைகளிலோ அவர்கள் எடுத்த சுவாசத்தாலே எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?

அவர்கள் மேல் இர்ககப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் இருந்துவிடக் கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலுக்குள் செலுத்திவிட்டு
1.இனி உங்களுக்கு அந்தத் துன்பம் இல்லை
2.இனி நன்றாக இருப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

ஆனால் வெளியில் இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் அதிகமாக வரும்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும்.

சந்தோஷமாக இருந்திருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டால் நம்மையறியாமலே நாம் இந்த நிலைகளைப் பேசிக் குடும்பத்திற்குள்ளே வெறுப்பான உணர்வுகள் வந்துவிடும்.

வெறுப்பு ஒவ்வொருவர் உடலிலும் வளர்த்து அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நம்மையே வெறுக்கச் செய்யும் நிலையாகிவிடுகின்றது.

பின் நமக்குள் அந்த உணர்வுகள் நோயாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தியானமெடுக்கும் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தில் யார் சிறிதளவு பிழைகள் செய்தாலும உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.
2.நமக்குள்ளே இரு மனங்கள் கொண்டு
3.நாம் செய்வது தவறு என்று இருந்தாலும் கூட அந்தத் தவறை உணராதபடி அது அடங்கி
4.அந்தக் காரமான தவறான உணர்வுகள் முன்னின்று இயக்கி,
5.நம்மை அதன் வழிகளிலே இட்டுச் சென்றுவிடுகின்றது.

பாலுக்குள் இனிப்பைப் போட்டு அதற்குள் காரத்தைப் போட்டால் காரத்தின் சுவைதான் முன்னாடி தெரியும்.

அதைப் போன்று நாம் நல்ல மனிதர்களாகவும் இரக்கமும் ஈகையும் உள்ளவர்களாக இருந்தாலும் இந்த நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே இந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது சந்தர்ப்பங்களில் பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டுவிடுகின்றது.

அந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மாற்றி நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.

நம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.

1.பின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது
2.சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்
3.அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது
4.அந்த உணர்வுகள் பூமியிலேயும் (தரையிலும்) பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின் நம் உடலிலிருந்து வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு அந்தக் கடுகடுப்பும் ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.

ஆக அப்பொழுது நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வைச் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

பூமி எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான்
1.நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது.
2.நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து, 
3.நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.

இதை நாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

வீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து உங்கள் உடலைத் தியானித்துவிட்டு உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.

வீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

1.இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி
2.உங்கள் வீடு முழுவதற்கும் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் கூடி நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவையும் வீட்டையும் உடலையும் நாம் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பவர்களுக்கு…

spiritual-lights-glow

தியானத்தில் ஒரு நிலைப்படுத்த முடியவில்லை என்பவர்களுக்கு…

பக்தி மார்க்கத்திலே நல் ஒழுக்கங்களை நாம் கடைப்பிடித்தாலும் நல்லதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.

நல்லதை எண்ணும் பொழுது பிறிதொரு குறையைக் கண்டவுடன் அந்தக் குறைகள் அதிகமாகி நல்ல குணங்கள் கீழ்ப்படிந்து விடுகின்றது. ஆகவே விஷம் கவர்ந்து கொள்கின்றது.

அந்த விஷத்திலிருந்து நாம் மீளமுடியாத நிலைகளில் வெறுப்பு ஆத்திரம் வந்து “அன்று நல்லதைச் செய்தேன்…. இப்படிச் செய்கின்றார்களே…” என்ற பழிதீர்க்கும் உணர்ச்சிகள் அதிகமாகி நாம் இழிவான சரீரங்களுக்குத்தான் செல்லக்கூடிய நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றதே தவிர மெய் ஒளி காணும் நிலைகள் இல்லை.

மெய் ஒளி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் தூண்டும் ஆற்றலை இழந்து

1.அதை எண்ணும் பொழுது நமக்குச் சோர்வும் சஞ்சலமும் வந்து
2.அது முடியாத நிலையில் விரக்தியாகி
3.எண்ணத்தால் கூட சிறிது நேரம் எண்ண முடியாது.

இந்தத் தியானத்தை எடுக்கும் பொழுது சில பேர் “என்னால் எடுக்க முடியவில்லை… உட்கார முடியவில்லை…” என்று சொல்லுகின்றோம். நாம் எவ்வளவு நல்லதை எண்ணி எடுக்க வேண்டுமென்றாலும் இது ஒரு பெரிய சுமையாக இருக்கும்.

நாம் சிறிது நேரம் பேசும் பொழுது எண்ணிவிடலாம்.

அமைதி கொண்டு அதை நினைவு கொண்டு எடுக்க வேண்டும் என்றால் அடுத்த நிமிடமே இது மறைந்துவிடும்.
1.நம் நினைவலைகள் எங்கெங்கோ ஓடிவிடும்.
2.அதற்கு இந்த ஆற்றல் இல்லை.

அதைப் போன்ற ஆற்றல் இல்லாத நிலைகளில் எடுக்க முடியாத நிலைகளில் எத்தனையோ பேர் முயற்சிக்கின்றார்கள். முடியவில்லை.

ஆனால் யாம் சொல்வதைப் பதிவாக்கிக் கொண்ட மெம்பர்களுடைய நிலைகளில் கூடுமான வரையிலும் நாம் நினைத்தவுடன் நாம் எண்ணி பல மணி நேரங்கள் கூட அமைதி கொண்டு இருக்க முடிகின்றது.

பக்கத்தில் அமைதியைக் குலைக்கும் நிலைகள் கொண்டு இரைச்சலோ சத்தமோ இருந்தாலும் கூட
1.நமது மெம்பர்களுடைய நிலைகள் இதன் வழி கொண்டு இருக்கும் பொழுது
2.அமைதி கொண்டு தான் எண்ணிய நிலைகளை எடுக்கக் கூடிய ஆற்றல் பெறுகின்றார்கள்.

மற்ற நிலைகள் இல்லாததைக் கூட உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். காரணம் இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் தாக்காத நிலைகளை நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றோம்.

பத்து பேரில், ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம், நாம் ஒரு நிமிடமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட பின் மீண்டும்

1.யாம் சொன்னதை விட்டுவிட்டு
2.“என்னத்தை எடுத்தோம்… முடியவில்லை…” என்று சொன்னால்
3.அதைக் கூட்டிக் கொள்பவருக்கு மீண்டும் கிடைக்காது.

யாம் சொன்ன உணர்வின் தன்மையைக் கூட்டி எப்பொழுதெல்லாம் உங்களுக்குத் துன்பம் வருகின்றதோ அதை அடக்குவதற்கு ஓம் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்துங்கள். உங்கள் எண்ணத்திற்கு வலு கூட்டும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் “என்னமோ… ஏதோ…” என்று நினைக்க வேண்டாம்.

நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு யாம் மிகவும் சிரமப்பட்டு
1.12 வருட காலம் அந்த உணர்வின் தன்மையைச் சேர்க்கும் நிலையும்
2.உங்களுக்குள் விளைய வைக்கும் நிலையும்
3.ஒலியால் பாய்ச்சும் நிலையும் குருநாதர் எமக்குக் கற்பித்ததனால் உங்களுக்குள் சேர்க்கின்றோம்.

இதை ஏன் சேர்க்கின்றேன்?

உங்கள் உயிர் இவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க உடலை எண்ணங்களாலும் உணர்வாலும், இயக்குகின்றது. இந்த உணர்வுக்குள் நல்லதை விளைய வைத்து மகிழ்ச்சியான உணர்வலைகளை வெளிப்படுத்துகின்றீர்கள்.

அப்பொழுது நீங்கள் மகிழ்ந்து “சாமியினால் எனக்கு நல்லதாகியது…” என்று சொல்லப்படும் பொழுது அந்த எண்ணம் ஆயிரம் பேர்
1.“இவர் நல்லவர்… இவர் நல்லவர்…” என்ற உணர்வை நீங்கள் எடுத்து
2.அந்த உணர்ச்சியின் தன்மையைப் பேசும்பொழுது
3.எமக்கு நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் எடுத்து உங்களுடைய உணர்வுகள் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டும் பொழுது அவர்கள் உங்களை எண்ணுகின்றார்கள்.

“ஒருவருக்கொருவர் அந்த மகிழ்ச்சியை…” ஒருவர் உடலிலிருந்து நாம் சமத்துவப்படுத்திக் கொள்வோம்.

“உங்களிடம் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தோற்றுவிப்பதற்காகத்தான்” திரும்பத் திரும்ப ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றேன்.

பிள்ளைகள் மீது மிகுந்த பாசமாக இருந்தாலும் அவர்களை எண்ணி வேதனைப்படக் கூடாது… ஏன்…?

Spiritual Bodies

பிள்ளைகள் மீது மிகுந்த பாசமாக இருந்தாலும் அவர்களை எண்ணி வேதனைப்படக் கூடாது… ஏன்…?

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின்
1.எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ
2.அந்த உடலுக்குள் தான் போவோம்
3.அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”.

1.பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும்
2.வேதனையுடன் செல்லும் பொழுது
3.பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”. ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும். இதையெல்லாம்
1.ஒரு உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா
2.அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்
4.என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ்கிறோம்…! என்பதைப் படம் பிடித்தது போல் குருநாதர் காட்டியதை யாம் பார்த்ததை உங்களிடம் வெளிப்படுத்துகின்றோம்.

இயற்கையின் உண்மை நிலைகளை குருநாதர் எமக்கு எப்படி உணர்த்தினாரோ அவர் காட்டிய அருள் வழிப்படியே உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம்.

ஏனென்றால் உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் தீய உணர்வுகளிலிருந்து மீண்டு அந்த மெய் ஒளியான மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவதற்காகத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்தக் கணக்குக் கூடினால் இனி அடுத்து…
2.நாம் இன்னொரு உடலுக்குள் செல்ல மாட்டோம்.

ஆகவே நாம் மனிதர்களாகப் பிறந்தவர்கள் உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலையாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

அது தான் மனிதன் அடைய வேண்டிய எல்லை.

வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும்…! என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…?

Sivaparvathi

வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும்…! என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…?

குடும்பத்தில் உடலை விட்டுக் கணவன் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து,
2.இரு உயிரும் ஒன்றானபின் ஒளியின் சரீரம் பெறும் தன்மை வரும்.

ஆனால் அவர் இட்ட மாங்கல்யம் மனைவியின் உடலிலே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இட்ட மாங்கல்யமும் அவருடைய எண்ணங்களும் இங்கே தான் இருக்கின்றது.

என்னுடன் வாழ்ந்தார் வளர்ந்தார்… “ஒன்றி வாழ்ந்தோம்” என்ற உணர்வினை வளர்த்து அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதன் உணர்வின்படி தியானித்தால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் இந்த ஆன்மா அதனுடன் ஐக்கியமாகும்.

இதே போன்று மனைவியை இழந்த கணவனும் என்னுடன் வாழ்ந்தது வளர்ந்த உடலை விட்டுச் சென்ற மனைவியின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாவை ஒளிச்சரீரம் பெறச் செய்தால் “இரு உயிரும் அங்கே ஒன்றாகின்றது”.

ஒன்றிய உணர்வுகள் ஒன்றி வாழ்ந்த பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்ற பின் தனக்குள் வரும் உணர்வை ஒளியாக மாற்றி வளரும் பருவம் வருகின்றது.

இதே போன்று கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிலே (மனைவி) இருக்கிறதென்று உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

1.அவர் உணர்வு உங்கள் உடல்களிலே உண்டு.
2.இதன் வலுகொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இப்பொழுது சாங்கிய சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றனர்?

கணவன் இறந்துவிட்டால் கணவனை மறந்து விட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டி
1.கணவனை இழந்தவள் என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு
2.”மாங்கல்யத்தைப் பறிக்கின்றனர்”.

அங்கே தான் தவறு செய்கின்றனர்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு அந்தக் கணவன் பால் நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி “தவறு செய்யவிடாது”

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் “கணவனை இழந்தவர்… கணவனை இழந்தவர்…” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனையின் உணர்வு கொண்டு அந்த வேதனையால் “பேய் மனமாக” மாற்றி விடுகின்றனர்.

பேய் மனமாக மாறித் தன் குடும்பத்தின் நிலை கொண்டு அது செயல்படும் பொழுது அது இறந்தபின் யார் மேல் பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் கொண்டு “பேய் உணர்வுகளைத் தான் ஊட்டும்”.

அந்தப் பாசத்தால்
1.குடும்பத்திற்குத் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர
2.ஒளியின் சரீரம் பெற முடியாது.
3.அதன்வழி செல்லவும் முடியாது.

இதையெல்லாம் ஞானிகள் காட்டிய நிலைகளில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று… “கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றி” மனிதனுக்குள் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அருள் ஒளி கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
2.அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என்ற உணர்வு கொண்டு ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் பிறவியில்லா நிலைகள் அடைகின்றனர்.

இந்த உடலில் சிறிது காலமே இருப்பினும் அதனை மனைவியின் உணர்வின் துணை கொண்டு வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி
1.அந்த வலுவினைச் சேர்த்து விட்டால்
2.”விண்ணை நோக்கிச் செல்கின்றது” மனைவியின் எண்ணம்.

அந்த உணர்வு கணவன்/மனைவி தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்தார்களோ இதைக் “கனவுகளில் வந்து” மகிழ்ச்சியின் உணர்வாகத் தோற்றுவிக்கும்.

அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்துவிட்டால் அந்த ஆன்மா அருள் ஒளியின் சுடராகப் பெறும்.

ஒளியின் சுடராக பெற்று இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகள் நமக்குள் தோன்றியபின் நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும்.

நம் நினைவு இந்த மக்களை அடுத்து வாழ்த்தச் செய்யும்.

இல்லையென்றால் அந்த மாங்கல்யத்தைப் பறித்து விட்டால்
1.“இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்..,” என்று
2.சர்வத்தையும் இழந்திடும் நிலை கொண்டு
3.வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது இனியாவது “உங்களுடன் வாழுகின்றார்…” அந்த ஆன்மா ஒளியின் சரீரமான உணர்வுடன் உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது என்று எண்ணுங்கள்.

என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ இந்த நினைவுகள் வந்து கொண்டிருக்கும், அந்த அணுக்கள் இருந்து கொண்டிருக்கும்.

ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று விண்ணில் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைத்துவிட்டால் நம் நினைவு அங்கே செல்லும்.
1.நம் உணர்வு இங்கே வளரும்
2.அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்
3.அருள் ஒளி சுடராக மாற்றச் செய்யும்
4.அந்த மெய்ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் செல்ல முடியும்.

கணவனை/மனைவியை இழந்துள்ளோம் என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் உணர்வு உங்களுக்குள்ளே உண்டு.

அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும், அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று காலை துருவ தியானங்களில் சொல்லி இருந்தீர்களென்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.

அந்த உணர்வுகளுடன் மீண்டும் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. அவர் அருள் ஒளி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்.

அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும். ஒன்றி வாழும் உணர்வினை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இதைத் தலையாயக் கடமையாக வைத்து உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“மனிதனுடைய எல்லை எது…?” என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேருண்மை இது.

 

பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

 

soul protections

பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோசியம் காப்பாற்றும்… இயந்திரம் காப்பாற்றும்…” என்று நினைக்க வேண்டாம். ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி இந்த உடலை விட்டுப் போனாலும் சரி
1.உயிருடன் ஒன்றிய நிலையில் அருள் உணர்வைச் சேர்த்து
2.உயிர் வெளியிலே போனால்
3.அவனுடன் ஒன்றி விண்ணுலகம் போக வேண்டும்,
4.அதற்கு நீங்கள் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

எமது குருநாதர் அவர் இட்ட கட்டளை அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் “மகரிஷிகளின் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Business Tricks

நீங்கள் செய்யும் தொழிலில் “நஷ்டம் வராமல் தடுக்க” என்ன செய்ய வேண்டும்?

சில வீடுகளில் “இப்படிப் பேசுகிறானே…, உருப்படுவானா..” என்று சொல்லிச் சொல்லி.., இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும் இதேபோல “உருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு,நண்பர்களுக்கும் இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால்,நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்,
4.தெளிவான மனம் பெறவேண்டும்,
5.தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும், என்று
6.உங்கள் இடத்திலே உட்கார்ந்து “ஒரு பார்வை…” பார்க்க வேண்டும்.

நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதே போன்று நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும். பொருளாதாரத்தில் குறை இருக்கலாம். சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும்.

அப்பொழுது நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்… நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி, மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ நன்றாக வேலை செய்ய வேண்டும்”, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நல்ல முறையில் உடல் ஆரோக்கியத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்” என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க – தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும் – நாம் பதிவாக்கும் நல்ல உணர்வுகள் அங்கே இயங்கத் தொடங்கும்.

“மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்” என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிடுங்கள்.

சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் விபூதியையோ அல்லது ஒரு பொருளை எடுத்துக் கையில் கொடுத்து இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.

மேலும் “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

1.சில சமயம் இதெல்லாம் மீறி
2.நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால்
3.அந்தக் குறை நம்மை இயக்கிவிடக்கூடாது.

அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுகின்றோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது?

நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே
1.அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம் “ஈஸ்வரா..” என்று சொல்லி புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் (தவறாக வேலை செய்பவர்) அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர் தெளிவான மனம் பெறவேண்டும். தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று
1.நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.
2.அப்பொழுது அவரின் உணர்வு நமக்குள் சிறுத்துவிடுகின்றது.

பின் அவரைக் கூப்பிட்டு…, இனிமேல் “பார்த்துச் செய்வீர்கள்… சிந்தனையுடன் செய்வீர்கள்… நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்…” என்று சொல்லிவிடுங்கள்.

இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்…!

நம் உடலிலும் சேறாகிவிடும்.

ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு நம் உடலில் ஒட்டிவிடாதபடி அதனைச் செயல்படுத்த வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக…, “நமது எண்ணம்…” வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன், இது கலந்து
1.அவர் நல்ல குணம் வளரவேண்டும் என்கின்ற பொழுது
2.இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக “நமது உடலில்” மாற்றுகின்றது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து நல்லதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது.

இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று செய்து பழக வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்”

divine-oneness-people-circle

உலக யுத்தத்திலிருந்து “உங்களைக் காக்கும் பாதுகாப்புக் கவசம்” 

இன்றைய விஞ்ஞான அறிவு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்குப் பயன்படுகிறது.

ஆனாலும், இதே விஞ்ஞான அறிவு மாற்று மத இன மொழி கொண்ட மக்களை அழிப்பதையும் பகைவர்களின் உணர்வுகளைச் செயலற்றதாக ஆக்குவதையும் அதிகப்படியான நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் இது போன்ற தீமையான நிலைகள் “தம்மையும் பாதிக்கும்” என்ற நிலையில் எண்ணுவது இல்லை.

இன்று இங்கே ஒவ்வொருவரும் கொடி பிடித்துக் கொண்டு தனக்குப் பிடித்தது என்றால் “வாழ்க.., என்றும் பிடிக்கவில்லை என்றால் ஒழிக..,” என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவன் அங்கிருந்து ஒரு அணுகுண்டைப் போட்டால் இவர்கள் தப்புவார்களா…? எல்லோரையும் பாதிக்கத்தான் செய்யும்.

ஆக மொத்தம்.., தான் பிறந்த மண் என்ற நிலைகளை மறந்து மதம் இனம் மொழி என்ற நிலைகளில் செயல்பட்டோம் என்றால் நம்மை “ஆண்டவன் காப்பாற்றுவான்” என்று எண்ணுகின்றனர்.

மாற்று மதத்தினர் “பிசாசை வணங்கக்கூடியவர்கள்” என்றும் பிசாசு ஒழிந்துவிட்டால் ஆண்டவனுக்கு நல்லதாகிறது என்கிறார்கள்.

இதனால் பிசாசுத் தன்மை கொண்ட நூறு பேரை அழித்தான் என்றால் ஆண்டவன் அவனுக்கென்று தனி இடத்தைச் சொர்க்கத்தைத் தருகிறான் எனறும் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் என்ற நிலையில் ஒரு இனத்தில் மட்டுமல்ல இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பது இதுதான்.

இந்தத் தீவிரவாதத்தின் தன்மையை ஆண்டவனுக்குச் செய்யும் சேவையாகச் செய்கின்றார்கள்.

ஒருவன் நூறு பேரைக் கொல்வதனால் தவறில்லை. வயிற்றுக்கு உணவோ மற்றவைகளுக்கோ நீ என்ன சுகம் வேண்டுமோ அனுபவித்துக்கொள்.

உனது குடும்பத்திற்குத் தேவையான வசதி வாய்ப்பைக் கொடுத்துவிடுகின்றோம் என்று இப்படித்தான் மூளைச் சலவை செய்துள்ளார்கள்.

எல்லோரும் தீயவர்கள். சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களைக் கொன்றுவிடு. உனக்கு ஆண்டவன் சொர்க்கத்தில் இடம் தருவான் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஒரு மதத்திற்குள் இன்னொரு மதம், இன்னொரு இனம் என்று இருந்தால் அவன் ஆண்டவனுக்கு விரோதமாகச் செய்கிறான். அதனால் அவனைக் கொல்வதனால் தவறில்லை என்ற நிலை உலகம் முழுவதற்கும் பரவியுள்ளது.

இது வளர்ந்து வளர்ந்து இன்று பழிதீர்க்கும் உணர்வுகள் தான் சாதாரண மனிதன் உடலிலும் உருவாகிவிட்டது. எதிரி என்ற நிலைகளில் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகள்தான் வருகின்றது.

யானை புலி போன்ற மிருகங்களிடமிருந்து தப்பிப்பதற்குச் சில உபாயங்கள் உண்டு. ஆனால், நாட்டிற்குள் இது போன்ற மோசமான நிலைகள் இருக்கின்றன.

இதிலிருந்து தப்புவது எப்படி?

காட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியும். நாட்டிற்குள் உள்ளவைகளைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. நீங்கள் நன்மையே செய்தாலும் உங்களுக்கு என்ன இடைஞ்சல் செய்ய வேண்டுமோ அதைச் செய்தேதான் ஆகும்.

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள். அவர்.., “சிறிது நிமிர்ந்தவுடனே (முன்னேறியவுடன்).., நீங்கள் அவரிடம் தாழ்ந்துதான் போகவேண்டும்”.

இத்தகைய நிலைகள்தான் காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்து பரவி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் அனைத்து நிலைகளிலும் அது வளர்ந்து வந்திருக்கின்றது. இதிலிருந்தெல்லாம் தப்ப நீங்கள் வாழும் இடத்தில் கூட்டுத் தியானத்தை வலுப்படுத்துங்கள்.

“அனைவரும் ஒன்று சேர்ந்து” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அந்த அருள் ஒளியின் சுடரை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் வசிக்கும்
1.வீடு முழுவதும் படரவேண்டும்,
2.தெரு முழுவதும் படரவேண்டும்,
3.ஊர் முழுவதும் படரவேண்டும்,
4.இந்த உலகம் முழுவதும் படரவேண்டும் என்று நீங்கள் ஏகோபித்த நிலையில் அந்த மூச்சலைகளைப் பரப்புங்கள்.

“கூட்டமைப்பாகப் பரவச் செய்யும்” அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும்.

அதன் வழியில் நாம் வாழும் இடங்களில் இத்தகையை தீமைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

 

1.”உங்கள் எண்ணம்” உங்களைக் காக்கட்டும்.
2.”உங்கள் மூச்சலைகள்” இந்த உலகை அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரட்டும்.

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

maharishi

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

1.நம்முடைய மூச்சலைகள் என்ன செய்கின்றது..?

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது “பிறருடைய கடுமையான உணர்வலைகள்” அவர்களுக்குள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

அதனால் அவர்கள் நல்ல உணர்வின் எண்ணங்களையும் அது மாற்றி குடும்பத்திற்குள் ஊடுருவி.., வீட்டிற்குள் “தீய வினைகளாக” உண்டாக்கி விடுகின்றது.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்க்கும் உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், வெறுப்பான உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் தரைகளிலும் பதிவாகிவிடுகின்றது. அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருப்பதால் இங்கே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலும் பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின்.., “நம் உடலிலிருந்து வந்த.., இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு” ஒருவருக்கொருவர் கடுகடுப்பாகப் பேசும் நிலைகளையும் அதனால் வெறுப்படையும் எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அப்பொழுது நம் காரியங்கள் தடைபடுகின்றது. நாம் எண்ணிய நல்ல காரியங்கள் “இப்படித் தடைபடுகின்றதே..,” என்று வேதனையும் சஞ்சலமும் பட்டுக்கொண்டே இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இப்படி எடுத்துக் கொண்ட தீமையான உணர்வுகளுக்கு மத்தியில் தான் இருக்கின்றோம்.

ஆக, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வையே.., “மீண்டும் மீண்டும் சுவாசித்து.., நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்”.

பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து.., “நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று” ஆகிவிடுகின்றது.

இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

2. கூட்டுத் தியானத்தின் மூலம் வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்

இதைப் போன்று நம்மையறியாமலேயே சேரும் தீமையான உணர்வலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால் தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள். வீட்டிலே படரச் செய்யுங்கள்.

உங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை எண்ணி “அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இணைத்து உங்கள் உடலைத் தியானித்து விட்டு உங்கள் மூச்சலைகளைப் படரவிடுங்கள்.

நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். தரைகளிலும்.., சுவர்களிலும்.., மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று “உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்”.

இந்த உணர்வாலே.., “இழுக்கப்பட்ட அந்தச் சக்திகள்” உங்கள் மூச்சலகள் மூலமாக வீட்டிற்குள் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், ஆன்மாவையும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொண்டு சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

தினசரி, நாம் நம்மைச் சுத்தப்படுத்துகின்றோம், உடைகளைத் தூய்மைப்படுத்துகின்றோம், வீட்டையும் தூய்மைப்படுத்துகின்றோம். இதுவெல்லாம் “புறத்தால் செய்வது”

ஆனால், “அகத்துக்குள்” வரும் தீமைகளைப் பற்றித் தெரியாமலேயே இருக்கின்றோம். அதை அகற்றவில்லை என்றால் நமக்குள் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அறியாமலேயே தான் இருக்கின்றோம்.

ஆகவே, இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் நல்லது.

“தொழிலில் நஷ்டம்” என்ற வார்த்தையே கூடாது

நாம் தியானம் எடுத்து வரும்போது தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தையே வரக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி தியானித்து விட்டு கொஞ்ச நேரம் சிந்திக்க வேண்டும்.

அப்படி தியானித்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால் ஏற்பட்டது” என்ற ஞானம் வரும். தொடர்ந்து தவறுகளை மாற்றியமைக்கக்கூடிய ஞானமும் தொழிலில் வளர்ச்சி பெற்ச்செய்ய்க்கூடிய ஞானமும் வரும்.

ஆனால், தொழிலில் நஷ்டமாகிவிட்டது, நாளை என்ன செய்வது? என்று என்ணிவேதனை உணர்ச்சிகளுக்குப் பலத்தைக் கொடுத்தால் நமது சிந்தைனையின் தன்மையைக் குறைத்துவிடும்.

தொழிலின் வகையில் நாம் வளர்ச்சியடைந்தாலும் கூட தொழிலில் சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் இதனின் உணர்வுகள் நம்மிடத்தில் வலுவாக இயக்கிவிடும். ஆக, இதை மாற்றுவதற்கு ஒரே வழி ஆத்ம சுத்தி.

இருளான உணர்வுகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண் வழி எண்ணத்தை செலுத்துகின்றோம்.

அது சமயம் நமது கண் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியின் உணர்வுகளை இழுத்து வருகின்ற நிலையில் அவ்வுணர்வுகளை

நமது மூக்கு நுகர்ந்து நமது உயிரில் மோதச் செய்கின்றது.

இப்படிக் கண்களால் கவரப்பட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமது உயிரில் இணைக்கப்பட்டவுடன் நம்முள் நல் உணர்வுகள் வலிமை பெற்று தீய உணர்வுகள் வராமல் தடை செய்யப்படுகின்றது.

முதலில் நம்மிடத்தில் தீமைகள் வராது நிறுத்திப் பழகவேண்டும். தீய உணர்வுகள் நம்மை இயக்கிவிடக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தினமும் தியானித்து வருதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்ற தன்மையை ஒரு பழக்கமாகப் பழக்கி வைத்துவிடுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் தன்மை நம்முள் வலிமையான பிற்பாடு தீமைகள் நம்முள் வருவதில்லை.

வேதனை வெறுப்பு போன்ற தீய உணர்வுகள் என்பது வாலி. அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால், இத்தகைய தீய உணர்வுகள் அனைத்தையும் வென்றது துருவ நட்சத்திரம்.

ஆக, தீமைகளை வென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி
1.நமது கண் வழி கவர்ந்து உயிரில் மோதச் செய்யும் பொழுது இச்சா சக்தி.
2.உயிரில் மோதிய பின் நம்முள் உள்ள தீமைகளை நீக்கும் இயக்கமாகின்றது கிரியா சக்தி.
3.அகஸ்தியர் தமது வாழ்க்கையில் தீமைகளை எப்படி நீக்கினாரோ அகஸ்தியரைப் போன்றே நம்மை இயக்கும் ஞான சக்தி.
4.இதன் வழியில் செயல்பட்டு நம்மிடத்தில் தீமைகள் வராது தடுக்க வேண்டும்.

இதை நம்முடைய பழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை சீராக இருக்கும்.