தியானம் எடுக்க வேண்டிய முறை

தியானம் எடுக்க வேண்டிய முறை

 

நமது கண் ஒரு ஆண்டனா…! ஏரியல்…! அதைப் பயன்படுத்தித் தியானத்தில் வெளியிலிருந்து எடுக்கின்றோம்…
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது அந்த அலைகள்.
2.உங்களிடம் இந்நேரம் வரையிலும் அதைப் பதிவு செய்துள்ளேன் (ஞானகுரு)
3.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் பொழுது கண்ணான ஆண்டனா மூலமாக உங்கள் உடலுக்குள் அதைச் சேர்த்துப் பதிவாக்குகின்றது.

மீண்டும் இதே மாதிரி இந்த எண்ணத்தை எண்ணி வரப்படும் பொழுது அந்தக் காற்றில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து நமது கண் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்க வேண்டும்.
1.இப்படி ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்குத்
2.தனித்து இயக்கச் செய்வது தான் இப்பொழுது நம்முடைய வழி.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் விஷத்தன்மையான உலகில் சீக்கிரம் இதைக் பெற்றுக் கொண்டீர்கள் என்றால்… உங்கள் உடலும் நன்றாக இருக்கும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்… உலகமும் நலம் பெறும்.

உலகமே என்றால்… அந்த உணர்வுகள் எல்லாமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை…!
1.அந்த உலக இயல்பு நமக்குள் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால்
2.அதை மாற்றுவதற்காக என் குருநாதர் எப்படி எனக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை. நீங்கள் எல்லாம் தெளிவாக வேண்டும் என்று தான் கொண்டு வருகின்றோம். அதை நீங்கள் நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்.

நல்ல வழியில் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி இனி பிறவியில்லா நிலையை அடையலாம்.

ஆனால் ஆசையை எங்கேயோ வைத்து என் தொழில் இப்படி இருக்க வேண்டும் நான் இப்படி இருக்க வேண்டும் நான் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அந்த ஆசை எங்கேயோ போய்விடும்…!
1.அது ஒன்றிலேயே போகும்… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.
2.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆவாய் சொன்னது போன்று
3.எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதன் வழியில் “படுபாதாளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்…”

ஆகவே… நமது ஆசையினுடைய உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு சென்றால் அங்கே இணைந்து இருளை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்றிவிடும்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி வருகின்றேன்.

முதலில் உங்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணுங்கள். அம்மா அப்பாவின் அருளால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் பெற வேண்டும்” என்று அடுத்து ஏங்குங்கள். (என் குரு தான் எனக்கு இந்த வழியைக் காட்டினார்).

அன்னை தந்தை என் உடலை உருவாக்கியது… எனக்கு ஒரு நல்ல வழியையும் உணர்த்தியது… அது குருவாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களை முதலில் எண்ண வேண்டும்.

அதே சமயத்தில்
1.இந்த மனித உடலுக்குப் பின் எங்கே என்ற நிலையில் இருளை நீக்கி ஒளி பெறும் உணர்வுகளை உபதேசித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
2.அந்த உணர்வை அவர் சொன்ன வழியில் நாம் பின்பற்றினோம்.
3.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்… அந்த உணர்வு என் உடலில் என்ன செய்தது…? என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்று உங்களுக்கும் உணர்த்துகின்றேன்.
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமையை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

பன்றி எப்படிச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்ததோ அதைப் போல் சாக்கடையான இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வை நீங்கள் சுவாசித்து “உயிரை ஒளிமயமான நிலைகள் பெற முடியும்….”

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியும் நீங்கள் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும். உங்கள் சொல்லிலே வைரத்தைப் போன்று ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதை போன்று மனது மங்காத நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும். மலர் எப்படி நன்றாக நறுமணங்கள் கொடுக்கின்றதோ உங்கள் சொல் மற்றவரை நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

அந்தச் சக்தி பெறுவதற்குத் தான் இப்பொழுது நாம் இதைச் செய்கின்றோம். ஆகையினால் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசையில் இருங்கள். இது பேராசையும் கூட…!

1.உங்கள் உடலில் உள்ள எல்லாவற்றிற்கும் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் இந்த மாதிரிச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பேராசையாக மாறுகின்றது.
3.நானும் பெறுகின்றேன்… நீங்களும் பெறுவீர்கள்.
4.எல்லோரும் பெற வேண்டும் என்ற பொழுது இந்தப் அந்தப் பேராசை நமக்குள் வளரும்.

ஆனால் நான் சொல்லிவிட்டு உங்களை ஏமாற்றினேன் என்றால் அது பேயாசை‌. சாமி பெயரைச் சொல்லி அடுத்தவரை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பேயாசை. அவர்களையும் கெடுத்து நீங்களும் கெட்டு மற்றவர் பெறக்கூடிய நல்ல உணர்வைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

ஏனென்றால் ஒவ்வொரு உடலில் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு.

1.அந்தத் தீமைக்கு நாம் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்து விடும்.
2.நாம் செல்லும் நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
3.முதலில் தெரியாது… பின் சிக்கலான பிற்பாடு… அந்த வேதனை வந்த பின் தான் நாம் உணர முடியும்.

இதைப் போன்ற தீமைகள் சந்தர்ப்பத்தால் எத்தனையோ வகையில் உருவாகின்றது. அதிலிருந்து நாம் தப்புவதற்காக வேண்டி மீண்டும் மீண்டும் இதை “எச்சரிக்கை செய்கின்றேன்…”

உங்கள் உணர்வனைத்தையும் உங்கள் அம்மா அப்பாவின் மேல் செலுத்துங்கள். அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.
1.குருதேவர் அறிந்துணர்ந்த சக்தியான துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று
2.உங்கள் ஏக்கத்தைக் கண்ணான கருமணியில் செலுத்துங்கள்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் கருமணியில் தான் படமாகின்றது. அந்த உணர்வு தான் நரம்பு வழி எல்லாவற்றிற்கும் உணர்த்துகின்றது.

ஆகையினால் இதைக் கருமணியில் எடுத்து கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றினால்
1.இந்த உணர்வுகள் உயிர் வழி இழுக்கச் செய்து அந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப முடியும்.
2.கொஞ்ச நாட்கள் இப்படிப் பழகி விட்டால் எல்லா அணுக்களுக்கும் இந்த வீரிய சக்தியை ஊட்டும் பொழுது நமக்குள் தீய சக்தி குறையும்.

மனித வாழ்க்கையில் தீயவர்களைப் பார்த்து அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல சக்திகள் தணிந்து தீய சக்தியே நமக்குள் விளைகின்றது.
1.அந்தத் தீய சக்தியை நீக்கி அதைக் குறைத்து நல்ல சக்தியை வளர்ப்பது தான் நம் தியானத்தின் நோக்கம்.
2.ஆக உங்களுடைய மனதை இதைப் போல் தெளிவாக்கித் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களுக்குள் வலுப் பெறச் செய்யுங்கள்.

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

அதிகாலையில் நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டிய “சார்ஜ்”

 

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் காலையில் எடுத்து
2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்காகச் சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்… அதாவது பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும்.

ஒரு இன்ஜினை முதலில் ஓட்ட வேண்டும் என்றால் என்ன செய்கின்றார்கள் என்று தெரியுமா…?

மோட்டாரில் பேட்டரியை வைத்துள்ளார்கள் அதை வைத்து “எர்த்” ஐக் கொடுத்த உடனே ஓட ஆரம்பிகிறது. அடுத்து இஞ்சின் பெட்ரோலை எடுத்து ஆவியாக மாற்றித் தன்னிச்சையாக ஓடுகிறது.

இதே மாதிரிக் காலையில் எழுந்தவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் போட்டுச் சார்ஜ் செய்து
2.அந்த நல்ல உயர்ந்த உணர்வுகளை எடுத்து உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று யாம் (ஞானகுரு) சொன்ன பிரகாரம் நன்றாகச் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்‌.

அதற்குப் பின் இந்த்த் தினசரி வாழ்க்கை நடப்பில்… ஒருவன் அந்தத் தவறு செய்கின்றான் இந்தத் தவறு செய்கின்றான் என்று நாம் இதை எல்லாம் கேட்க நேர்கின்றது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவு மங்கிக் கொண்டே வருகின்றது.

அப்போது அதை மங்காமல் தடுப்பதற்கு…
1.காலையில் சார்ஜ் செய்த அந்தச் சக்தியின் துனை கொண்டு
2.அந்தந்த நிமிடத்தில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று “சுருக்கமாக எண்ணி முடித்து விட்டால்” அப்படியே ஒடுங்கிவிடும்.
5.அவர்களுடைய கஷ்டமோ துன்பமோ தீமைகளோ நமக்குள் வராது.

அதற்குப் பின்… அவர்கள் சிந்தித்துச் செயல்படும் அந்த திறன் பெற வேண்டும்… அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… அவர்கள் நோய் நீங்க வேண்டும்… அவர்கள் பிள்ளை நல்லவனாக இருக்க வேண்டும் என்று “இதைத்தான்” நாம் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

நாம் சொல்கின்றோம் அவர்கள் காதுகளில் கேட்கின்றது. நாம் வெளியிட்ட உணர்வு அவர்கள் கண்கள் பதிவாக்குகின்றது. திருப்பி எண்ணினார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இல்லையென்றால்… அவர்கள் சொன்ன அந்தக் கஷ்டம் நமக்குள் வராமல் துடைத்துக் கொள்ளலாம்.

மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது நீங்கள் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்காமல்… கஷ்டத்தைச் சொல்லாதீர்கள் என்று சொன்னால்..
1.என்ன…! பெரிய இவர் மாதிரி நடக்கின்றார்…! என்று நம்மைக் குற்றமாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.
2.ரொம்ப அகராதி பிடித்தவர்… ஏதோ சாமியார் சொன்னாராம்… எதையும் கேட்கக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று
3.என்னையும் சேர்த்து இரண்டு திட்டு இழுத்து விட்டுப் போய் விடுவார்கள். இதுதான் நடக்கும்.

அதனால் அதைக் கேட்டு உணர்ந்து நல்ல வழி சொல்ல வேண்டும்…!

நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உங்கள் தொழில் நன்றாக இருக்கும். மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள் ஒன்றுபட்டு வாழ்வீர்கள் என்று “நம் சொல்” அங்கே சென்று அவர்களை நல்லதாக்க வேண்டும்.

இப்படிச் செய்யவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் வரும் பொழுது நம்மை இயக்கி விடுகின்றது. அது உமிழ் நீராக மாறுகின்றது நல்ல குணங்களை மயங்கச் செய்கின்றது… நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கின்றது.

ஆகவே அது ஒரு சந்தர்ப்பம்…!

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் தான் மனிதனாக வரும் வரையிலும் தீமையை நீக்கும் உணர்வு கொண்டு பன்றியாகப் பிறந்து சுத்தமாக தீமையை நீக்கி நல்ல அணுக்களை உருவாக்கி வந்தது.

பன்றியின் உடலில் இருந்து தான் நாம் மனித உடலைப் பெற்றோம்.

இந்த மனித உடலில் நாம் நஞ்சினை மலமாக மாற்றி நல்லதை உடலாக மாற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய அறிவாக நமது ஆறாவது அறிவு உள்ளது.

அதைச் சீராகப் பயன்படுத்தி… ஞானியர் கண்ட அந்த உண்மையை நமக்குள் செலுத்தி இந்த உடலுக்கு பின் நாம் பிறவில்லா நிலை அடைய வேண்டும். இதை நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் உடலுக்குள் செலுத்திப் பாதுகாக்க முடியும்.

எப்படித்தான் இருந்தாலும் தேடிய செல்வம் நம்முடன் வருகின்றதா…?

இத்தனை ஞானத்தை பேசும் ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்களா…?
1.ஆனால் உயிரோடு இருக்கின்றார்கள் “ஒளியின் உடலாக” இருக்கின்றார்கள்
2.அதாவது உயிரோடு சேர்ந்து ஒளியாக விண்ணிலே நிலையாக இருக்கின்றார்கள்.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால்… அடுத்து என்ன ஆகும்…?

இங்கே இப்பொழுது நமக்குள் எடுத்துக் கொண்ட வேதனை, வெறுப்பு, சங்கடம், எந்தெந்தக் குணங்களோ அதற்குத் தகுந்த மாதிரி நமது உயிர் உடலை அமைத்து மாற்றிக் கொள்கின்றது.

அப்புறம்… வலுவானது தாக்கும் போது அதைக் காட்டிலும் வலுவான உணர்வைக் கொண்டு தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு ஆகிப் பரிணாம வளர்ச்சி அடையும்.

இருந்தாலும்
1.இதற்கு முதலில் எப்படி நாம் வேதனைபட்டோமோ அந்த வேதனைப் பட்டு மனிதனாக மீண்டும் வருவதற்குக் காலம் இல்லை
2.அதற்குள் நம் பூமி எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது… அந்த அளவிற்குப் பூமியினுடைய மாற்றங்கள் போய்க் கொண்டுள்ளது.

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

“நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று தினமும் நாம் தியானிக்க வேண்டும்

 

இப்பொழுது நாம் “மழை இல்லை… மழை இல்லை…” என்று தான் சொல்லிப் பழகுகின்றோம். காரணம்… பூமிக்கு அடியில் உள்ள நீர் எல்லாம் போய்விட்டது. உறிஞ்சி எடுத்து எடுத்து எல்லாம் போய்விட்டது… “சில பகுதிகளில்…”

ஆயிரம் அடி ஆழத்திற்குப் போர் போட்டாலும் கூட தண்ணீர் காணாமல் போகின்றது. அந்த அளவிற்கு வந்து விட்டது.. இனி இருக்கக்கூடிய காலமோ அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லாது போகலாம். அதுவும் இன்னும் கொஞ்சம் இரண்டு மூன்று மாதங்கள் போனால் எப்படியோ தெரியவில்லை.

மாடு கன்றுகளுக்குக் கூட சில இடங்களில் தண்ணீர் இல்லை. நமக்கே தண்ணீர் இல்லை. ஆகவே
1.எது எப்படி இருந்தாலும் மனதை நன்றாக வலுப்படுத்தித் தியானிப்போம்.
2.இதற்காக இரவு படுக்கும் பொழுது ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்ய வேண்டும் நாடு செழிக்க வேண்டும் என்று சிறிது நேரம் தியானியுங்கள்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் கலந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் கண்ணின் நினைவை இதே மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர வேண்டும் மேகங்கள் கூடி நல்ல மழை பெய்யக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று சொல்லி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நினைவனைத்தும் அந்த மேகத்தில் செலுத்துங்கள்
2.இந்த மாதிரி செலுத்தும் பொழுது உங்கள் உடலில் “ஒரு குளிர்ந்த காற்று வரும்…” வந்தது என்றால் ரொம்ப நல்லது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவெல்லாம் வான் வீதியில் செலுத்தி…
1.மேகக் கூட்டங்கள் கூட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
2.அதிலே அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இந்த மாதிரி நாம் வெளியிடக்கூடிய உணர்வுகள் எல்லாமே ரேடியோக்களில் எப்படி ஒலி அலைகளைப் பரப்புகின்றார்களோ இதே மாதிரி நாம் வெளியிடும் அலைகளைச் சூரியன் கவர்கின்றது.

இதே உணர்வு கூடக் கூட எதிலே செலுத்துகின்றோமோ… அதிலே பதிவாகிவிடும். மழை நீரில் இருந்து தான் எல்லாம் விளைகின்றது.
1.அதனால் இதை அங்கே தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2.நாம் இந்த மூச்சுலைகளை விடப்படும் பொழுது நாம் எதை நினைத்தோமோ அந்த அலைகள் கூடி
3.மழை பெய்யும் பொழுது தாவர இனங்களில் பட்டு நல்ல தாவர இனங்களாக விளைகின்றது.

நம்முடைய உணர்வுகள் மோதி நாம் எந்த இடத்தில் எடுத்துச் செயல்படுத்துகின்றோமோ அங்கே மழை வரும். இதே மாதிரி உங்களுடைய மூச்சும் பேச்சும் நாடு செழிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

சும்மா இதைக் கேட்டு விட்டுப் போனது என்று இல்லாமல்… “இரவு படுக்கும் போது” ஒரு ஐந்து நிமிடமாவது இதே மாதிரி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வானில் பரவி மேகங்கள் கூட வேண்டும் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று எண்ணுங்கள்.

முந்திக் காலத்தில் எல்லாம் காடுகளுக்குச் செல்வார்கள். தண்ணீரைக் குட்த்தில் கொண்டு போய் ஊற்றிவிட்டுத் திரும்ப வரும்பொழுது மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்.
1.முன்னாடி வந்து கொண்டிருப்பார்கள் மழை பெய்யும்.
2.இந்த மாதிரி ஒரு தெய்வீகப் பண்பு கொண்ட நமது நாடு தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,

அந்தக் காலம் எல்லாம் கடந்து போய்விட்டது.

வரக்கூடிய விஷக்காலங்களில் இனியாவது நாம்
1.நமது வீடு நன்றாக இருக்க நமது ஊர் நன்றாக இருக்க நமது உலகம் நன்றாக இருக்க
2.தினம்தோறும் சிறிது நேரம் பிராத்தனை செய்தால் மிகவும் நல்லது.

வீடும் ஊரும் உலகமும் எல்லாம் நமக்குள் இருக்கின்றது. எல்லாருடைய உணர்வும் நமக்குள் இருக்கின்றது. ஊரில் இருக்கக்கூடிய மக்களின் உணர்வு அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கின்றது… யாரும் பிரிந்து செல்லவில்லை.

ஆகவே எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக மழைக்காக தியானமிருங்கள். இந்த நாடு நலமாக இருக்க வேண்டும் என்று அ;லைகளைப் பாய்ச்சுங்கள். உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
1.அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
2.அகஸ்தியன் கண்ட வழியில் நாம் உலகைத் தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்வோம்
3.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம் தவமிருப்போம்.

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

 

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானமே.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இதை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் கூடுமானவரையிலும் உடலில் வரக்கூடிய சங்கடங்களை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்
2.அந்த ஞானத்தை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வதைப் போன்று நீங்கள் ஆசைப்பட வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
3.எங்கள் சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற
4.அந்த ஆசையோடு ஏங்கி நீங்கள் எடுக்க வேண்டும்.
5.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்…?

நம் இரத்தத்தில் இருக்கக்கூடிய நீரையும் விஷத்தன்மையையும் பிரித்து எடுக்கும் கிட்னிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

பாலைக் காய்ச்சி எடுத்துத் தான் நாம் வெண்ணெயைப் பிரித்து எடுப்போம். ஆனால் இப்போது மிஷினை வைத்து என்ன செய்கின்றார்கள்…? மிஷினைச் சுற்றவிட்டு இந்த வெண்ணெயை பிரித்து எடுத்து வைத்து விடுகின்றார்கள்.

இது மாதிரி நம் உடலுக்குள் அறியாது புகும் விஷத்தன்மையை நீக்குவதற்கு…
1.மிஷின் மூலம் வெண்ணையைப் பிரிக்கும் சக்தியைக் கொண்டு வருகிற மாதிரி
2.நாம் அந்த சக்தியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்து நமது சிறுகுடல் பெருங்குடலிற்கு உருவாக்கிய அந்த அணுக்களுக்கு இதைப் பெறச் செய்து
3.எல்லாம் வரிசையில் வரப்படும் போது சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் வலுவாகிவிட்டால் விஷத்தைச் சுத்தமாக பிரிக்கும்.
4.அப்படிப் பிரித்தால் (சிறுநீராக வடித்து விட்டு) நல்ல இரத்தம் இருதயத்திற்கு வருகின்றது
5.இருதயம் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட அந்த இரத்தத்தைத் தான் நம் உடல் முழுவதற்கும் பரப்புகின்றது… நமது சிறுமூளைக்குப் போவது முதற்கொண்டு.

உதாரணமாக வேதனையோ விஷமோ ஏதாவது வந்தால்… மேலே சென்றவுடன் தலையில் நீர் கோர்த்து விட்டது… “தலை கிண்” என்று இருக்கின்றது… விஷமான நிலையைப் பார்த்தால் நல்ல சிந்தனை வருவதில்லை.

அதாவது அசுத்த இரத்தம் சிரசு பாகம் போய்விட்டது என்றால் மூளை பாகங்கள் செயலிழந்து விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இப்படி எல்லாம் போய்விடுகின்றது.

ஆகவே…
1.இருதயத்திற்கு நல்ல ரத்தத்தைக் கொண்டுவர வேண்டும்… அது உங்களால் முடியும்.
2.யாம் சொன்னபடி அந்தந்த உறுப்புகளைத் தைரியப்படுத்த வேண்டும்.
3.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சேர்த்து பழக வேண்டும்.

இது எல்லாம் உங்களுக்கு கஷ்டமான காரியம் இல்லை.

திட்டுபவர்களைத் திருப்பி எண்ணுகின்றீர்கள். அவனுடைய உணர்வு உள்ளே வராமல் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும். இது வலுவாகி உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வரும்.

அதற்குத்தான் இப்பொழுது கண்ணின் கருமணிகள்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்… எலும்புக்குள் உள்ள ஊன்… இது எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரெக்கார்ட் செய்வது.

தசை மண்டலங்களுக்குள்ளும் அதைப் படி படியாக்க் கொண்டு வந்து தோல் மண்டலத்தில் உள்ள அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவேற்றிக் கொண்டால்
1.இந்தக் காற்றில் தீமைகள் இருந்தாலும் கூட நம் பக்கத்தில் வராது கொஞ்சம் தள்ளிவிட்டு கொண்டே இருக்கும்.
2.நம் சிந்தனைகள் நன்றாக இருக்கும்.

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய உலகிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்

 

உயிரணுவாய் உதித்திட்ட இவ்வுயிர் அணுக்களே வளர்ச்சியின் வழி சக்தி நிலைகொண்ட உயிராத்மாவால் இம் மனித உடல் பெற்று, எண்ண நிலையின் வளர்ச்சித் தொடர் கொண்டு, அவ்வெண்ணத்தின் ஞான சக்தியினால் பல நிலைகளைக் கண்டுணர்ந்து, ஆத்ம சக்தியை எண்ண சக்தியுடனே வளர்ச்சி கொண்டு வந்த நிலையில், இக்கலியின் முற்பட்ட அவதார காலங்களில் எல்லாம் வந்த ஞானத்தின் வழித்தொடர் சக்தி நிலையை கிருஷ்ணாவதார கால முதற்கொண்டு, இக்கலியின் காலத்திலும் நாகரிக வளர்ச்சி என்ற வளர்ச்சி நிலை பெற்று, வழி வந்திடும் நிலையில் “ஞான வளர்ச்சி நிலை குன்றிவிட்டது…”
1.நல்லொழுக்கம், நல் ஞானம், சத்தியம், தர்மம், நியாயம் என்ற நற்சக்திகளின் வழித்தொடரில் சென்றிட…
2.இன்று இக்கலியில் பிறப்பெய்தி வாழும் இம்மனித ஆத்ம சக்தியிலேயே தொடர் நிலை இல்லை.

இக்கலியில் மனிதர்களாய் இன்று வாழ்பவர் எல்லோருடைய நிலையிலும், இக்கலிக்கும் முற்பட்ட காலத்திலேயே வாழ்ந்தவரின் எண்ண சக்தி நிலையில் வந்திட்ட ஆத்மாக்களாய்… இக்கலியில் பிறப்பெடுத்து வாழ்வதினால்… இன்று வாழும் அனைத்து ஆத்மாக்களின் எண்ண சக்தியே… அன்று வாழ்ந்தவரின் தொடர் நிலையினால் வந்த வினைதான்.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களின் எண்ணம் முன் ஜென்மத் தொடருடன் செயல்பட்டு வழி வந்த வினை இன்றைய இக்கலியின் பேராசை நிலை.
1.நாமாய் இந்நிலையை வளரவிடவில்லை… வளர்ச்சியின் தொடர்நிலை தான் இந்நிலை.
2.ஒவ்வோர் உடலுக்குள்ளும் அவ்வுடலுக்குகந்த ஆத்மா ஒன்றுதான்.
3.ஆனால் ஒவ்வோர் உடலுக்குள்ளும் இருந்து செயல்படும் மற்ற அணுக்களின் நிலை அதிகம்.

தோன்றிக் கொண்டே உள்ள உயிரணுக்கள் இப்பூமியில் உதித்து வளர்ச்சி கொண்ட எல்லா உயிர்த் துடிப்புக் கொண்ட கோளத்திலும் அன்றன்று உயிர் பெற்றுக் கொண்டே வளர்ந்து வருகிறது.

தாவரங்களில் எப்படி அதன் சுவாசத்துடன் கூடிய புழுக்கள், பூச்சிகள், வண்டுகள் வளர்கின்றனவோ அந்நிலை போன்றே இப்பூமியில் கழிவிடங்களில், நிலத்தில், நீரில் இப்பால்வெளி மண்டலத்தில் மற்றப் பிராணிகள், பட்சிகள், மனிதர்கள் எல்லாவற்றிலுமே இவ்வுயிர் அணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

அந்நிலையில் நம் உடலுடன் சூரியனின் ஒளிக்கதிரிலிருந்து வந்திடும் உயிரணுக்களின் நிலை பல வளர்ந்து கொண்டே ஒவ்வொரு நாளும் உள்ளன. ஒவ்வொரு நாள் என்பது மட்டுமல்ல… நம் சுவாச நிலை செயல் கொண்டிடும் நிலையிலெல்லாம் “பல உயிரணுக்களின் நிலை நம் உடம்பிலும் ஏறுகின்றது…”

இப்புதிய உயிரணுக்கள் மட்டுமல்லாமல் இக்காற்றினில் படர்ந்துள்ள ஏற்கனவே பல நிலைகளில் வாழ்ந்து பல உடல் நிலைகளை மாற்றிக் கொண்ட “பல எண்ணக் கலப்புக் கொண்ட உயிரணுக்களும்” நம் சுவாசத்துடன் நம் உடலுடன் ஏறுகின்றன.

நம் உயிராத்மாவும் உயிரணுவாய்த் தோன்றிப் பல நிலைகள் பெற்று…
1.பெற்ற பிறகு இம்மனித ஆத்மாவாய் உடல் கொண்ட எண்ணக் கலப்பு கொண்ட
2.வாழ்க்கையின் ஏழு ஜென்ம நிலை கொண்ட சக்தி நிலை தொடர்பும் கொண்டு
3.இன்று வாழ்ந்திடும் இவ்வுடலுடன் கூடிய ஆத்மாவை
4.இவ்வெண்ணச் சிதறலில் இருந்தும் இன்றைய வாழ்க்கை நெறி முறையில் இருந்தும் தப்பி ஞான சக்தியின் வழித்தொடரை அறிய
5.நம் எண்ணத்தையே “கடும் ஜெபம் ஆக்கினால் ஒழிய” இன்றைய இப்பிடியிலிருந்து மீள்வது மிகவும் கடினம்தான்.

இன்றுள்ள இவ்வளர்ச்சியின் தொடரிலேயே மனித ஆத்மாக்கள் சென்றிட்டால் இச்செயற்கையின் ஆசையினாலும் இவ்விஞ்ஞான எண்ண வளர்ச்சியினாலும் இம்மனித ஆத்மாக்களின் எண்ண நிலையை “சூனிய நிலை போல் சக்தியிழந்து” செயலற்ற நிலையில் செல்லும் நிலைக்குத்தான்… இக்கலியின் பிடியில் நம் ஆத்மாக்கள் சிக்குண்டுள்ளன.

இவ்வணுக்கதிர்களை ஆராயும் நிலைக்காக இப்பூமியில் இருந்தும் வான மண்டலத்திலிருந்தும் பல அணுக்கதிர்கள் ஒன்றுபடுத்தி இவ்விஞ்ஞானத்தில் செயல்படுத்திடும் நிலையினால்
1.இவ்வணுவின் வெடிப்பு (விஷமான குண்டுகள்) அடிக்கடி ஏற்படுத்துவதினாலும் இக்காற்று மண்டலமே செயலற்றதாகி
2.மனித ஆத்மாக்களின் சுவாச நிலையும் மாறு கொண்டு இவ்வெண்ணச் சிதறல்கள் ஏற்பட்டு
3.சூனிய நிலைகொண்ட பைத்தியங்களாய்த் தான் இம்மனித ஆத்மாக்களின் நிலையும் செயல்படப் போகின்றது.

அறிவு நிலை கொண்ட ஆத்மாக்களுக்கே இந்நிலை என்றால் இம்மனிதனிலிருந்து மாறு கொண்ட மிருகங்கள் பட்சிகள் இவற்றின் நிலை எப்படி இருந்திடும்…?
1.எண்ண வளர்ச்சியை ஞானத்தின் சக்தி நிலை தொடர்பு படுத்தி
2.சுவாச நிலையை ஒருநிலைப்படுத்தினால் அன்றி இக்கலியின் பிடியிலிருந்து தப்புவது கடினம்தான்.

யாம் உபதேசிக்கும் போது எங்கே (தியானத்திற்குச்) சென்றீர்கள்…?

யாம் உபதேசிக்கும் போது எங்கே (தியானத்திற்குச்) சென்றீர்கள்…?

 

நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் உங்கள் உணர்வினை இணைத்து நினைவாற்றலைக் கொண்டு சென்று
2.ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் அது எப்படி இயங்குகின்றது என்றும்
3.அந்த நினைவுடன் அருள் ஞானிகள் உணர்வைக் கலந்து உடலில் நீங்கள் பெற்ற உணர்வுடன் இணைக்கின்றேன்.

இந்தக் காலப்பருவம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி – அது வெளிப்படும் நேரம் (அதிகாலை)
2.நுகரும்… ஈர்க்கும் சக்தி… உங்களின் உணர்வுகள் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
3.உங்களுக்குள் அறியாது சேர்ந்த சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளில் இருந்து
4.அதனை அடக்கும் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்யும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் தான் இவை.

நேற்று பேசியது வேறு விதம்… அதற்கு முன் துருவ தியானத்தில் பேசியது வேறு விதம்… அதற்கு முந்தைய நாள் துருவ தியானத்தில் வேறு விதம்… இன்றைக்கு இந்தத் துருவ தியானத்தில் எதைச் செய்கின்றோம்…?

நினைவினை அங்கே துருவ நட்சத்திரத்திற்குள் கொண்டு செல்கின்றோம்.

இருந்தாலும் உங்கள் நினைவுகள் அவசரமாக ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைவுகள் இருந்தால் இந்தத் தியானம் என்ன செய்யும்…?

எப்படா சாமி முடிப்பார் என்று அதைத் தியானிக்கும் நிலையாகிவிடும் சாமி எப்படா விடுவார் நாம் வீட்டுக்குப் போகலாம் போக வேண்டுமே போக வேண்டுமே என்று…! எவ்வளவு பெரிய தத்துவத்தை எடுத்துச் சொன்னாலும் அப்போது எடுக்காது

ஆனால் இப்போது யாம் உங்களை இழுத்து உட்கார வைத்து எமது உபதேசத்தைக் கேட்கும்படி செய்கின்றோம்.
1.இந்த உணர்வின் வலுப்பெறும் போது இதை பெறுவோம் என்ற நிலை வருகிறது.
2.ஒரு மணி நேரம் தானே போகட்டும்…! அப்புறம் சென்று பார்த்துக் கொள்ளலாம் போ…!
3.அட அப்படியே ஒரு நாளைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் நாளைக்குச் சென்று சரி செய்து கொண்டால் பரவாயில்லை என்று
4.அதை நீக்கிவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்கும்படி வருகின்றது.

இந்த உணர்வுகள் வலுவானால் அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் இதை நீக்கிடும் உணர்வுகள் அங்கே வலுப்பெறுகின்றது. ஆகவே தான்
1.மிக மிக நுண்ணிய உணர்வுகள்
2.நம்மை அது எப்படி இயக்குகின்றது…? என்று தெளிவாகக் காட்டுகின்றோம்.

கம்ப்யூட்டரில் கணக்கீடுகளைச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய அழுத்தத்திற்குத் தக்கவாறு அது இயக்கிக் காட்டுகின்றது. பாதரசத்தை ஊற்றி வெப்பத்தின் தணல் கூடுவதற்கொப்ப காலமணியையும் இயக்கிக் காட்டுகின்றது… அழுத்தத்திற்கொப்ப அது காட்டுகின்றது

1.இதைப் போன்று தான் உங்களுடைய அழுத்த நிலைகள் ஒவ்வொன்றிலும் “அளவுகோலை வைத்து (துருவ நட்சத்திரத்தின் சக்தி)”
2.சந்திக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும்… அதாவது வாழ்க்கையில் எதிர்நிலை வருகிறது என்றால் காலத்தை அளக்கும்.
3.இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை வரும்
4.பருவம் வரும் பொழுது சொல்வோம் அல்லது செய்வோம் என்று விலகிச் செல்லச் செய்யும்… காலத்தை விரயமாக்காது.

அருள் வழியில் அனைவரையும் அழைத்துச் செல்லும்…! மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்

ஓசோன் திரை கிழிந்ததை நாம் அடைக்க முடியும்

 

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பூமியில் ஓசோன் திரை கிழிந்ததை… அந்த ஓட்டையை அடைக்க முடியும்.
1.நமது குருநாதர் வழியில் தியானத்தை ஒருங்கிணைத்து ஓசோன் திரை அடைபட வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று முறைப்படி தியானித்து ஆணையிடும் பொழுது
3.தொடர்ந்து அதைச் செய்து வந்தால் அடைக்க முடியும்… அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்
4.நிச்சயம் ஓசோன் திரை அடைபடும்… நம்மால் அடைக்க முடியும்… அந்தத் திறன் உண்டு என்று நம்பிப் பழக வேண்டும்
5.விஞ்ஞானிகளால் முடியாது…! மெய் ஞானிகளின் அருளைப் பெற்று நாம் இதைச் செயல்படுத்த முடியும்.

காரணம் துருவத்தின் வழி விஷக் கதிரியக்கங்கள் புகுந்து தான் பூமியின் ஓசோன் திரை கிழிந்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து பூமிக்குள் வரும் தீமைகளை அடக்கிப் பேரருள் பேரொளி என்று பெறும் உணர்வு அனைத்து மக்களுக்கும் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

பேரருளைப் பெறலாம்… பேரின்பத்தைப் பெறலாம்… பேரின்பப் பெரு வாழ்வு வாழும் அந்தச் சக்தி உங்களுக்குள் உருவாக்குங்கள்

1.அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழ உங்களுடைய பிரார்த்தனைகள்… தியானம்… தவம் அமையட்டும்.
2.அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருங்கள்.

அது நல்ல பலனைத் தரும்…!

அந்த அருள் சக்தி உங்களிலே பெருகும்… பேரின்பப் பெரு வாழ்வு வாழ்வீர்கள்… மகிழ்ச்சி பெறும் சக்தியாக உங்களுக்குள் வளரும்… மலரைப் போன்ற மணம் பெறுவீர்கள்… தெளிந்த மனமும் தெரிந்து வாழும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

1.உங்களுக்குள் அந்தச் சக்தி உருவாகி உலகம் அனைத்தும் அந்த அருள் வழியிலே உருவாகும்.
2.நமது பரந்த மனம் “மகிழ்ந்திடும் உணர்வாக நமக்குள் விளைந்து”
3.குரு அருள் உலக மக்களைத் தெளிந்த மனம் கொள்ளச் செய்திட உங்களுக்குள் அருள் ஞானம் பெருகி
4.நீங்கள் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட
5.மகரிஷிகளின் அருள் துணை உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

குருநாதர் காட்டிய வழியில் நாம் தியானிப்போம்

குருநாதர் காட்டிய வழியில் நாம் தியானிப்போம்

 

நல்வழி காட்டும் குருவை அடைவோம்… குரு காட்டும் வழியை மதிப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்…!
1.இருளை அகற்றி அருள் ஒளி பெறும்… அருளானந்தத்தைப் பெறச் செய்யும் வழிகளை உபதேசிக்கின்றார் நமது குரு.
2.அதனை நாம் மதித்து அவர் வழியில் அதை நுகர்ந்து
3.அந்த அருளைப் பெற நாம் வேண்டும் பொழுது
4.நமது உயிரே அந்த அருள் வழியில் நம்மை இயக்குகின்றது.

ஆகவே குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ்க்கையில் அணுவின் ஆற்றலை அறிந்து அகத்தின் தன்மை உணர்ந்து இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற்றானோ அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

குருவின் துணையால்… அகஸ்தியன் துருவனாகி அகண்ட அண்டத்தின் அறிவின் ஒளியைப் பெற்ற “துருவ மகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் ஆனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

உணர்வின் தன்மை ஒளியாக்கி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி
1.உலகில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் நிலையாக நின்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து
3.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் ஒளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் எண்ணிலடங்காதவர்கள் அருள் ஒளி பெற்று – சப்தரிஷி மண்டலம்
2.சிருஷ்டிக்கும் உணர்வு கொண்ட மண்டலமாக இணைந்து அருள் ஒளியை உருவாக்கிக் கொண்டு
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஒளியைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… அருள் ஞானத்தைப் பெறுவோம்… என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் என்று எனக்குள் இயங்கி நான் எண்ணியதை உருவாக்கி ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்… “அவனிடமே வேண்டுவோம்….!”

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

என் இசையில் நீ இசைப்பாய் என்றால் அருள் ஒளியின் உணர்வை நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மை அருள் ஞானி பெற்ற உணர்வின் இயக்கமாக நம்முடைய எண்ணங்களும் நம் உணர்வுகளும் நம் செயல்களும் நம் பார்வையும் அமைந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படரச் செய்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற எங்கித் தியானிப்போம்.

1.நினைவினைப் புருவ மத்தியில் கொண்டு வந்து அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அதன் வழி (உயிர் வழி) இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.நினைவு அனைத்தும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

ஜீவான்மா என்பது ஒரு எறும்பை நசுக்கி இருந்தாலும் அல்லது மற்றவர்கள் மேல் பாசமாக இருந்து ஆன்மா நோய்வாய்ப்பட்டு வெளி வந்தால் அந்த நோயின் உணர்வை நாம் நுகர்ந்து இருந்தால்… அந்த ஆன்மா நமக்குள் வந்திருந்தால்… அது ஜீவான்மாவாகின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் ஜீவணுக்களாக மாறுகின்றது நம் உடலுக்குள் பற்றுடன் எண்ணிய நோயின் தன்மை கொண்டு அந்த ஆன்மா வந்தாலும்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அந்த ஜீவான்மாவும் ஜீவ அணுக்களும் பெற்று
2.பகைமையற்ற நிலையும் நோயற்ற நிலையும் பெறக்கூடிய அந்தத் தகுதி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.உடலில் உள்ள ஜீவான்மாக்களும் பிறவி இல்லா நிலை பெற வேண்டும்
4.என்னுடன் உறுதுணையாக இருந்து அருள் ஞானம் பெறும் தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அருள் ஒளி பெரும் சக்தியாக இப்பொழுது மாறுகின்றது… ஒளியாக மாற்ற ஏங்கித் தியானியுங்கள்.

1.திரும்பத் திரும்ப அதே எண்ணத்தில் அதே உணர்வை உயிருடன் நினைவு கொண்டு
2.நாம் எண்ணும் அந்த உணர்வின் இசையாக அருள் உணர்வுகளை உடலுக்குள் பரப்பி
3.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மகிழச் செய்யும் உணர்வாக விளையச் செய்வோம்.

அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் பிறவி இல்லாத நிலை அடைவோம் நமது குருநாதர் காட்டிய வழியில் நாம் அனைவரும் செயல்படுத்துவோம்.

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

ஒரு பாதுகாப்புக் கவசத்தை நாம் உருவாக்க வேண்டும்

 

உபதேசங்களை நான் (ஞானகுரு)
1.“வேகமாகச் சொல்கிறேன்…” என்றால்
2.யார் அதைக் கூர்மையாக்க் கவனித்துப் பின்பற்றி வருகின்றார்களோ அவர்களுக்கு இது கிடைக்கும்.

“என்னமோ” சாமி சொல்கின்றார். அவரிடம் தலைவலிக்கும் மேல் வலிக்கும் ஆசீர்வாதம் வாங்கினால் போதும் என்று ஒரு சிலர் இருக்கலாம். சரி அதுவெல்லாம் நீங்கிவிடும் என்று சொன்னால் இப்பொழுது நீங்கி விடுகின்றது ஆனால் இரவு படுக்கப் போகும் பொழுது எனக்குத் தூக்கமே வரவில்லை என்று கேட்பார்கள்.

வேதனை இருக்கும் பொழுது தான் தூக்கம் வரவில்லை நன்றாகிப் போகும் தூக்கம் வந்துவிடும் என்று சொன்னால்
1.இப்பொழுது சரிங்க…! இராத்திரிக்குத் தூங்கப் போகும் பொழுது தூக்கம் வராது என்று
2.மறுபடியும் இழுத்துக் கொள்வார்கள்… இப்படியும் உள்ளார்கள்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே தபோவன மண்டபத்திலே படரப்பட்டுள்ளது. தியானித்த பின் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற நிலையைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு “இங்கேயே படுத்திருந்து” அந்த அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்திட ஏதுவாக இருக்க வேண்டும் என்று தான் நேரத்தையும் காலத்தையும் கடத்திச் சென்று எப்படியும் இங்கே முடங்கிப் படுத்துவிட்டு… “காலையில் செல்லலாம்” என்ற எண்ணத்தை தோற்றுவிக்கத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.

இங்கே இருக்கப்படும் பொழுது
1.அருள் உணர்வுகளை “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று உடலாக ஆக்கி
2.அருள் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் கூட்டிக் கொள்வதற்கே இதைச் செய்கின்றேன்.

மணிக்கணக்கில் பேசி அந்த உணர்வின் அணுக் கருக்களாக மாற்றுவதற்குத் தான் இதைச் செய்வது. உங்களிடம் பேசிச் சொல்லும் போது
1.எனக்குள்ளும் அணு கருக்களாக விளைகின்றது… நுகர்ந்தவர் உணர்வுக்குள்ளும் அந்த அணுக்கள் விளைகின்றது.
2.தீமை அகற்றும் சக்திகளாக நமக்குள் பெருகுகின்றது
3.நாம் விடும் மூச்சலைகள் அனைத்தும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷமான கதிரியக்கப் பொறிகளை விண்ணிலே செலுத்தி விட்டதால்… அவ்வாறு பரவப்பட்ட அந்தக் கதிரியக்கங்களினால்… விஷத்தைத் தடுத்து நிறுத்தும்… நம் பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரையும் கிழிந்து விட்டது…”

ஆகையினால் விண்ணிலிருந்து வரும் விஷங்கள் அதிலே வடிக்காதபடி நேரடியாக இங்கே வந்து கொண்டிருக்கின்றது… நம்முடைய காற்று மண்டலத்தில் படர்கின்றது.

எங்கெங்கெல்லாம் இது படர்கின்றதோ விஷத்தன்மை கொண்ட எண்ணங்கள் கொண்டோர் உணர்வுகளிலும் துரித கதியில் பரவுகின்றது… அவர் உடல்கள் பாதிக்கப்படுகின்றது.

ஓசோன் திரை கிழிந்திருந்தாலும்
1.நாம் கூட்டு தியானங்கள் இருந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரப்பி விட்டால்
2.நம் உணர்வுகள் வலுப்பெறும் போது ஒதுக்கித் தள்ளி தீமைகள் வராது தடுக்கும் தன்மை வரும்.

தனி ஒரு மனிதனால் முடியாது…! நாம் பலரும் சேர்த்து ஆங்காங்கு கூட்டு தியானங்கள் நடத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை பரப்பிக் கொண்டால் “நமக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறுகின்றது…”

நஞ்சின் தன்மை வந்தாலும் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறுகின்றோம். அதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது.

விஞ்ஞான அறிவு கொண்டு பல நிலைகள் செயல்பட்டு இருந்தாலும் மெய் ஞான அறிவு கொண்டு அதை வெல்ல முடியும் அந்த மெய்ஞான அறிவை உங்களுக்குள் வளர்க்கலாம்.
1.நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் விளைந்து
2.அதை எல்லாம் நீங்கள் பெறும் தகுதியாக இப்போது உருவாக்குகின்றோம்.

ஆகவே எண்ணிய உணர்வை “ஓ” என்று ஜீவனாகி “ம்” என்று அணுவாக உருவாக்கும் ஈசனை மதிப்போம். அவனே நமக்குள் இருந்து இயக்குகின்றான் என்ற நிலையில் அவன் நாமத்தைச் சொல்வோம்.

நாம் எண்ணிய உணர்வுகள் கடவுளாக இயக்குகின்றது. ஆகவே
1.அருள் ஒளியை எண்ணும் பொழுது “ஓ – ம்” என்று ஜீவ அணுவாக மாற்றி
2.அதுவே கடவுளாக இருந்து தீமையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

குரு இட்ட கட்டளைப்படி நாட்டைக் காத்திடும் சக்தி பெற வேண்டும் என்று இதை உங்களுக்குள் வினையாகச் சேருங்கள்

 

ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வினையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலயம் வருபவர் எல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும். என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
1.நாட்டை ஆட்சி புரிபவர்கள் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் இந்த உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாட்டை வழி நடத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நாட்டை உருவாக்க இது பயன்படும்… மதங்கள் அல்லாதபடி உருவாக்க இது பயன்படும்.

இந்த அரசாங்கத்தில் நிர்வாகம் செய்யும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும் ஒருங்கிணைந்து செயல்படும் அந்தச் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள். அப்போது இங்கே பகைமைகள் வராது. இதைப் போன்று செய்தால்
1.எனக்குச் செய்யவில்லை
2.உனக்குச் செய்யவில்லை என்ற அந்த உணர்வுகள் வராது.
3.அனைவருக்கும் தொழில் வாய்ப்பு உருவாகும் செவ்வனச் செய்யும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஆலயங்களிலே வணங்குங்கள்..

அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.நாட்டில் அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.அரசாங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.இந்த நாட்டைக் காத்திடும் சக்தியாக அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்த ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வ குணங்கள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அரசாட்சி செய்வதை நமது அரசு என்று எண்ணி அங்கே நிர்வாகம் செய்பவர்கள் அனைவரும் தெய்வ குணம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் சக்தியாக அந்த மன பலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். பேதங்கள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆலயங்களில் எண்ணுங்கள். நம் அனைவரையும் ஒருங்கிணைக்க இது உதவும்.

சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அந்தச் சந்தனத்தின் நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.நாட்டைக் காத்திடும் அனைவருக்கும் (அரசியல்வாதி… அதிகாரிகள்… படை வீர்ர்கள்) இந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும்
2.அங்கே அது வளர வேண்டும் என்று நீங்கள் வேண்டுங்கள்.
3.ஏனென்றால் நாம் அங்கே சென்றாலும் இந்த நிலைதான்… யார் சென்றாலும் இந்த நிலை தான்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கும் பொழுது எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வருகின்றது. இதையே நம்மால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுது குடும்ப ஒற்றுமை வர வேண்டும் என்று நாம் எண்ணுவது போல
1.நமது நாட்டைக் காத்திடும் நிர்வாகிகள் அனைவருக்கும் அந்த ஒருங்கிணைக்கும் சக்தி பெற வேண்டும் என்று
2.நாம் அனைவரும் எண்ணும் பொழுது அந்த ஆலய நிர்வாகிகளும் அந்த ஆலயத்திற்கு வருகின்றார்கள்
3.அவர்களும் இதே போன்று எண்ணும் பொழுது மனிதன் என்ற தன்னிலை அடையும் சக்தி வருகின்றது

அதற்குத்தான் தத்துவ ஞானிகள் ஆலயத்தை வைத்தார்கள்…!

பாலைப் போன்ற தூய்மையான மனம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் பாலைப் போன்ற தூய்மையான மனம் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவார் எல்லாம் இந்த நிலை பெற வேண்டும்.
1.அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்.
2.அவர்கள் மன பலம் பெற வேண்டும் மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.நம்முடைய எண்ணம் அவர்களுக்கு வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வாழவும் இது உதவும்.

ஆகவே மகரிஷியில் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்று இந்த உடலுக்குள் நல்லவைகளும் கெட்டவைகளும் குணங்கள் கலந்து தான் இருக்கின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

இதே உணர்வின் நிலைகள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒருங்கிணைந்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது
1.நமது அரசே உலகிற்கு எடுத்துக்காட்டும் அரசாக வளர்ந்து வரும்
2.அதன் கீழ் வாழ்ந்து வரும் மக்களாகிய நாமும் உயர்ந்த நிலை பெற முடியும்.

ஏனென்றால் மன பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் உலகில் மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி… எந்த ஆலயத்திற்கு நாம் சென்றாலும் இந்த முறைப்படி ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்… ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் அரசும் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி ஒருங்கிணைந்தால் கட்சி பேதமும் வராது இன பேதங்கள் வராது மத பேதங்கள் வராது.
1.நாம் அனைவரும் இந்த ஆட்சி சீராக வளர வேண்டும் என்று எண்ணி அப்படி நடந்தால் நமக்குத் தொல்லை இல்லை.
2.அதற்குப் பதிலாக என்னுடைய வழியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்கடுத்துத் தொல்லைகள் தான் வருகின்றது.

ஆகவே இத்தகைய எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஆலயங்களில் அரசை ஒத்தே நாம் பிரார்த்திக்க வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருங்கிணைந்து சேர்ந்து ஓட்டு போட்டு தான் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் நல்ல நிலையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால்
1.அவர்களுக்குள் நம்மை காக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.பின் நாம் எண்ணும் எண்ணங்கள் பகைமை இல்லாத உணர்வாக வளர்கின்றது.

இதை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்து அடுத்தடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் நமது நாட்டு மக்கள் அனைவரும் மன பேதமின்றி இன பேதம் இன்றி ஒருங்கிணைந்து வாழ வேண்டும். ஆட்சி புரியும் நிர்வாகிகள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தலையாயக் கடமையாக எண்ணுதல் வேண்டும்.

நம் உடலுக்குள் நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் எப்படிக் கலந்திருக்கின்றதோ இதைப் போன்று
1.நமது நாட்டுக்குள் இருக்கும் எல்லாம் ஒருங்கிணைந்தால் தான்
2.நாடு நலம் பெறும்… மக்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும்.

இதைப் போன்ற தீமைகள் விளைவித்து மக்களை தவறான வழியில் செயல்படச் செய்யும் உணர்வுகளை மாற்ற ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம்… இந்த நாட்டில் பிறந்த மக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் அறியாது செய்யும் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும்… மக்கள் பேரானந்தப் பெரு நிலை பெற வேண்டும்… அந்த மகரிஷிகள் அருள் வட்டத்திலே மனிதனாகப் பிறந்த முழுமையின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதமின்றி மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்” இந்த உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதங்களால் போர் எப்படி நடக்கின்றதோ அதைப் போல் கட்சி பேதத்தால் உண்மை நிலைகள் அறியாது பேத உணர்வுகளே வளர்க்கப்பட்டு சீராகச் செயல்படும் தன்மைகள் இந்த உலகெங்கிலும் இப்போது மறைந்து கொண்டே வருகின்றது.
1.அதை போன்ற நிலைகள் நம் நாட்டிலே விளையாது கட்சி என்ற பெயரை அகற்றிவிட்டு
2.நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சி நிலைகள் சீராக வரவேண்டும் என்று ஒருக்கிணைந்து எண்ணினால்
3.எல்லோரும் நல்லவரே…! எல்லோரும் நல்லாட்சியைப் பெற முடியும்.

ஆனால் அரசாங்கத்தைக் குறையாக எண்ணி அதை வளர்த்து விட்டால் அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறை கூறிக் கொண்டே தான் இருப்போம். குறைய நிவர்த்திக்கும் எண்ணம் நமக்குள் வராது. குறையைச் சொல்லிவிட்டு நாமும் குறையைத் தான் செய்து கொண்டிருப்போம்.

ஆகையினால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்ன நிலைகளில்… நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து… நமது நாடு சீராக வளர்ந்திடும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஒருங்கிணைந்து நினைப்போம்.

பக்தி கொண்ட நிலையில் இருந்து மாந்திரீகம் தாந்திரீகம் என்று சில பேர் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கடவுளின் பெயரால் மக்களின் மதியை மாற்றிக் கொண்டிருக்கும் அறியாத நிலையில் தீமையை விளைவிக்கும் சாதுக்கள் என்ற பெயர்களால்ம் பல தவறுகள் செய்து கொண்டிருக்கும்
1.அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவ்வாறு செயல்படும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று
3.நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் எண்ண வேண்டும்.

மாயாஜாலத்தாலும் மாந்திரீகத்தாலும் மக்களை மதி மயங்கச் செய்யும் எவராக இருப்பினும் “அவருடைய தீய எண்ணங்கள் மறைந்து…” மக்களைக் காத்திடும் உணர்வுகளும்… ஞானிகள் காட்டிய வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நல்ல எண்ணங்களும் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு…
1.நான் கடவுளைக் கண்டேன்… கடவுளின் அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டு
2.அவர் வாழ்க்கையை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இதைத் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர்ந்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடல் பாடிக் கொண்டிருக்கும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் உலகம் அனைத்திற்கும் மெய் ஞானத்தை உணர்த்திச் சென்றான்… ஞானத்தைப் போதித்தான்.

தென்னாட்டிலே வாழும் நாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் ஆற்றலை மதபேதமற்ற நிலையிலும் இனபேதமற்ற நிலையிலும் மொழி பேதமற்ற நிலைகளிலும் இந்த உலக மக்கள் வாழ வேண்டும் என்று
1.தமிழ்நாட்டில் பிறந்த நாம் ஒருங்கிணைந்த நிலை கொண்டு
2.கட்சி பேதமின்றி நாம் செயல்பட வேண்டும்.

ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பார்… ஒருவர் கடவுள் இல்லை என்பார்…! ஒருவருக்கொருவர் போர் செய்து பிழைகள் செய்து கொண்டு குறைகளை உருவாக்க முடிகின்றதே தவிர அதை நீக்கும் நிலை இல்லை.

அது போன்ற நிலைகளை மறந்து விட்டு ஆட்சி பீடங்கள் சீராக இயங்க வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்து இந்த உணர்வின் வலுவை நாம் கூட்டினோம் என்றால் “நமது ஆட்சி நலமாக இருக்கும்… உலகுக்கு எடுத்துக்காட்டாகவும் வரும்.

1.அவர்கள் உயர்ந்த ஆட்சி புரிய வேண்டும் என்று நாமும் ஒத்துழைக்க வேண்டும்
2.குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் குறைகள் தான் வளர்ந்து கொண்டிருக்கும்… அதைத்தான் வளர்க்க முடியுமே தவிர நீக்க முடியாது.

நீங்களே அந்த ஆட்சி பீடத்தில் உட்கார்ந்து பார்த்தால் ஒரு நண்பன் எனக்கு இதைச் செய்து கொடு…! என்று கேட்பான் இன்னொருவன் அவனுக்குச் செய்கின்றான்… எனக்கு செய்ய மாட்டேன் என்கிறான் என்பான்.

ஒருவருக்குச் செய்யும் பொழுது மற்றவர் குறை சொல்லத்தான் வருவார்கள்.

இது போன்ற நிலைகள் இல்லாதபடி அரசியல் பேதம் இல்லாதபடி எத்தகைய பேதம் இல்லாதபடி நாம் அனைவரும் ஒன்று சேர்த்துச் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னது போன்று இந்த உலக மக்களுக்கு எடுத்துக்காட்டாக வளரச் செய்யும் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாம் அனைவரும் பெற்று இந்த ஒருங்கிணைந்த ஆட்சியாக பேதமற்ற நிலைகளில் சிருஷ்டித்து உலக அரங்கிலே அருள் ஞானத்தைப் பரவச் செய்வோம்.
1.உலகைக் காத்திடும் சக்தியாகக் கொண்டு வருவோம் என்று
2.இதைப் பிரதிக்ஞையாக எடுத்துக் கொள்வோம்.

யார் எந்தக் குறையைக் கூறினாலும் குறைகள் இல்லாத நிலையாக உருவாக வேண்டும்… குற்றமற்ற நிலையாக தமிழ்நாடு உருவாக வேண்டும்.

தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே ஓங்கி வளர வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள். எத்தகைய பேதமும் இல்லாத பேதமற்ற வாழ்க்கையாக நாம் வாழ்ந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் இங்கே வளர வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்வோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகில் வாழும் மக்கள் அனைவரும் முழு முதல் கடவுள் என்று ஞானிகள் உணர்த்திய அருள் வழிப்படி உலகைச் சிருஷ்டிக்கும் மனித உடல் பெற்ற நாம் “பல நன்மைகளை நாம் அனைவருக்கும் உருவாக்குவோம்…”

உடலை விட்டுப் பிரிந்தால் என்றும் பிறவியில்லா நிலை அடைவோம் பகைமையை வளர்த்து புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிடும் நிலையாக இல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்று உறுதிப்படுத்துவோம்.

இதை நாம் அனைவரும் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாக வருவோம்

எவர் எத்தொழில் செய்தாலும் அந்தக் குறைகளைப் பதிவு செய்யாது அவர் அறியாது குறை உணர்வுகள் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தியால் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் செயல்படுத்துவோம்.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்துதான் இந்தப் பேருண்மைகளை எல்லாம் அறிந்து உணர்த்திச் சென்றார். சந்தர்ப்ப பேதங்களால் மக்கள் அனைவரும் மன வேதனைப்பட்டு கொடிய நோய்களுக்கும் கொடிய செயல்களுக்கும் ஆளான நிலையில் இருந்து விடுபட வேண்டும். ஆகையினால்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதித்து
2.ஈசன் கட்டிய உடலான ஆலயத்திற்குள் அருள் ஞான சக்திகளை நீ புகுத்தி விடு என்றார்.
3.அங்கே அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் உணர்வு கிடைக்க வேண்டும் என்று நீ பிரார்த்தனை செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் யாம் (ஞானகுரு) செய்கின்றோம்.

இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் இதை வளர்த்து நமது நாடு என்ற நிலைகளிலும் “உலகம் காக்கப்பட வேண்டும்” என்ற நிலைகளில்
1.அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் பேதமற்ற நிலைகளாக வாழ்வோம்
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம்.
3.மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்
4.நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்போம்
5.தீமையற்ற நாடாக நம் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
6.இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலையாக எல்லா நாட்டிற்கும் நாம் அருள் சேவை செய்யும் அந்தப் பண்பினை ஊட்டுவோம்
7.நாம் அனைவரும் சகோதரர் என்ற நிலையைக் கூட்டுவோம்.

ஆகவே இந்த உலகம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற்றால் நாமும் நலம் பெறுவோம் உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்தத் தத்துவம் எந்தத் தென்னாட்டில் இருந்து உலகம் முழுவதும் பரவியதோ மீண்டும் இங்கிருந்து
1,மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை ஒன்று சேர்த்திடும் நிலையாக
2.மக்களைக் காத்திடும் நிலையாக குரு அருள் உங்கள் அனைவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்து
3.உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களில் விளைந்து
4.இந்த உலகைக் காப்பீர் உங்களைக் காப்பீர் உங்கள் ஊரைக் காப்பீர் உலக மக்களைக் காப்பீர்கள்.

நிறைந்த மனதுடன் நாம் வாழ்வோம் எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம் அவர்கள் நிறைவடைவதைக் கண்டு நாம மகிழ்வோம். அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கண்டு நாமும் பேரானந்த பேரு நிலை இந்த வாழ்க்கையிலே அடைவோம் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகள் இந்த உடலிலேயே வளர்ப்போம் என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

நாட்டு அரசுக்கு நல்ல உணர்வை நாம் எடுத்துக் காட்டினோம் என்றால் அதுவே நம் அரசாகின்றது நாமே அரசாகின்றோம் அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலையில் கொண்டு “நாம் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நினைவைச் செலுத்தினால்
1.அந்த அரசும் நலமாக இருக்கும் அந்த அரசால் நாமும் நலமாகின்றோம்.
2.நாம் தான் அரசு அரசுதான் நாம் என்ற நிலையில் கட்சி பேதமின்றி இந்த நாட்டிற்குள் உயர்ந்த ஞானத்தை வளர்ப்போம்.

பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக்காட்டாக வரவேண்டும் உலக பேதமற்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்று தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வுகளை ஒருங்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் நலம் பெற வேண்டும் என்று நமது உணர்வுகளை பரப்புவோம். சகோதர உணர்வுடன் நாம் வாழ்வோம்… பகைமையற்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டி இதை நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).