அவனவன் செய்யும் செயலே சரி…! என்ற “கலி” உலகெங்கிலும் உருவாகி விட்டது

Kali - purush

அவனவன் செய்யும் செயலே சரி…! என்ற “கலி” உலகெங்கிலும் உருவாகி விட்டது 

அன்று அரச காலங்களில் ஒரு மனிதனுக்கு ஒரு தத்துவம் கிடைத்துவிட்டால் அந்த நாட்டிற்குள் வந்துவிட்டால் அது அந்த அரசனுக்கே உரிமையானது.

அவரை வரவேற்று அவருக்கு வேண்டியதைக் கொடுத்துச் செய்தியை வாங்கிக் கொள்கின்றார்கள். அந்தச் சரக்கு அனைத்தையும் அரசனுக்குத்தான் சொந்தமாக்குகின்றார்கள்.

அப்படி அவர் கொடுக்கவில்லை என்றால் மரண தண்டனை கொடுக்கின்றார்கள். அதற்கு அஞ்சித் தன்னிடம் உள்ளதை அரசனிடம் கொடுத்து விடுகின்றார்கள்.

பண்டைய காலப் புலவர்களைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு அரச சபையிலும் அந்தப் புலவர்கள் உண்டு. அந்தப் புலவர்கள் அனைவரும்
1.அரசனைப் புகழ் பாடித்தான் வந்திருப்பார்கள்.
2.புகழ் பாடிப் பொருள் தேடுவார்கள்.

அந்தப் புகழ் பாடும் நிலைகளில் அரசருடைய மக்கள்களில் (தன் பிள்ளைகள்) இரு பிரிவு ஆகிவிட்டால் இவர்கள் எதிர் கவி பாட ஆரம்பிப்பார்கள்.

எதிர் கவி என்ற நிலைகளில் இதைப் போன்ற ஒரு மரணமடைந்த உணர்வுகள் இங்கு வந்தபின் கவியில் அந்தப் புலமை பாடும் பொழுது இந்த அரசன் இப்படித்தான் போவான் என்று சொல்வதை இவர்கள் “அறம்…” என்று சொல்வார்கள்.

ஆனால் இதெல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்து அந்தச் செயல்களை செய்கின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகள் அரசன் கையில் சிக்கப்பட்டு அதை அவர்கள் தனக்குகந்ததாக மதங்களாகப் பிரித்துவிட்டனர்.

அதனால் அதிலுள்ள பேருண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனது. மகரிஷிகள் காட்டிய பேருண்மையின் நிலைகளை நாம் அறிய முடியாமல் போனதற்கு மூலமே இது தான்.

இன்னும் ஒவ்வொரு மதமும் “கடவுளைத் தேடிக் கொண்டுதான்… உள்ளது”.

நாம் இந்தப் பணிகளைச் செய்தால் கடவுள் நமக்கு வேண்டியதைச் செய்வான். “கடவுள் எங்கேயோ இருக்கின்றான்…” என்ற எண்ணத்தில் அரசர்கள் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டாலும் தர்மம் நியதி என்று பதிவு செய்து கொள்கின்றார்கள்.

அவ்வாறு பதிவு செய்த உணர்வு கொண்டு அவர்கள் எண்ணி ஏங்கும் பொழுது “வேதனை கலந்த” உணர்வுகளையே சுவாசிக்கின்றார்கள். ஒரு நல்ல பதார்த்தத்தைச் செய்து அதில் விஷத்தைக் கலந்து உணவாக உட்கொண்டால் மயக்கமடையச் செய்யும்.

உயர்ந்த எண்ணங்களையும் பிறருக்குப் பண்புடன் செயல்படும் நிலைகளையும் எண்ணி வாழ்ந்தாலும் என்ன ஆகின்றது?

“உலகில் இப்படித் தீமைகள் நடக்கின்றதே…” என்ற வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
1.அது இவர்கள் உடலில் தீமை செய்யும் அணுக்களாக உருவாகின்றது.
2.அப்பொழுது இவர்கள் எண்ணிய நல்ல எண்ணம் அவர்களையும் காக்கவில்லை.
3.அந்த நாட்டையும் காக்கவில்லை.

இத்தகைய உணர்வுகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி படர்ந்திருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் உள்ள அனைத்து நிலைகளிலும் இது வளர்ந்து வந்திருக்கின்றது. இது வளர்ந்து வளர்ந்து “பழி தீர்க்கும் உணர்வுகளாக” ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் உருவாகி இன்று உலகெங்கிலும் “தீவிரவாதம்” என்று பரவிவிட்டது.

அரசர்கள் வெளிப்படுத்திய அந்த உணர்வின்படி “எதிரி…” என்ற நிலைகளில் மற்றவரை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

1.எல்லோருடைய உணர்வுகளிலும் இதே உணர்வுகள் வளர்ந்து
2.”மற்றவர்களை அடக்க வேண்டும்” என்ற நிலையே உருவாகிவிட்டது.

இதைத்தான் அவனவன் ஆட்சி புரியும் நிலைகளில்… “அவனவன் செய்யும் செயலே சரி…” என்ற உணர்வுகளுக்குச் செல்லப்படும் பொழுது “கலி” உருவாக்குகின்றான் என்பது.

இதற்குக் காரணமே அரசர்களின் நிலை தான்.

வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண்மையான யாகம்”

Yagna - Yaga

வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண்மையான யாகம்”

ஜோசியம் ஜாதகம் கேட்டு அவைகளால் நன்மை ஏற்படும் என்று யாகங்கள் செய்து பாவங்களில் விழ வேண்டாம். யாகம் செய்தால் அது நம்மைப் பாவ நிலைக்கே அழைத்துச் செல்கின்றது.

“உண்மையான யாகம்” என்பது நமது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வைப் பெறவேண்டும் என்று
2.இதனின் உணர்வைப் புருவ மத்தியிலிருக்கும் நமது உயிரான நெருப்பினுள் “ஓ,,,ம் ஈஸ்வரா…” என்று போட்டு
3.”அந்த உணர்வின் எண்ண அலைகளை” நமது வீட்டினுள் பரப்ப வேண்டும்.

அப்படிப் பரப்பப்படும் பொழுது நமது வீட்டில் எத்தகைய சாப அலைகள் இருந்தாலும் சரி எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் சரி அவைகள் அனைத்தும் அகன்று “ஓடி விடும்”.

இதைப் போன்று ஒவ்வொரு நாளும் காலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து துருவ தியானத்தில் அமரும் பொழுது “பிரதோஷம்…” அதாவது
1.மற்றவர்களுடைய கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் பொழுது
2.அவைகள் நம்மிடத்தில் தோஷங்களாக மாறி
3.தீய வினைகளை உண்டாக்குவதைத் தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இல்லம் முழுவதும் படர வேண்டும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறவேண்டும் எங்களிடம் பணிபுரிகின்ற அனைவரும் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு அரவணைத்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வுடன் இணைத்து “உங்கள் எண்ணங்களை…” வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுக்குள் உள்ள அரும்பெரும் சக்தியை நீங்கள் காண முடியும் உணர முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர்களோ மற்றவர்களோ உங்களைத் துயரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.

அவர்கள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி அவர்கள் உணர்வுகள் வருவதை “நாம் தடுத்து… நமது உணர்வுகளை அவருக்குள் பரப்பப்படும் பொழுது” அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். பகைமை உணர்வுகளை மாற்றவும் முடியும்.

இதைப்போன்று அகஸ்திய மாமகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை அருள் ஒளியின் உணர்வினை நாம் பெற்றோம் என்றால்
1.நாம் தெளிந்த மனம் பெறலாம்.
2.உலகை அறியலாம்,
3.உலகைக் காக்கலாம்,
4.நாட்டைக் காக்கலாம்,
5.நமது குடும்பத்தையும் காக்கலாம்.

இன்றைய காலம் விஞ்ஞான யுகமாக இருக்கின்றது. ஆனால் விஞ்ஞான அறிவு மனிதர்களைத் தீமைகளின் நிலைகளுக்கே அழைத்துச் செல்கின்றது. மனிதரின் உணர்வுகளைச் சீர்குலையச் செய்யும் நிலைகளையும் மனிதர்களிடையே சிந்தனையற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர்.

இந்த நிலையில் நமது குருநாதர் காண்பித்த அருள்வழியில்
1.“தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்று
2.மீண்டும் இவ்வுலகத்தைக் காக்கும் நிலைகள் அகஸ்தியன் உருவான இந்தத் தென்னாட்டில்தான் தோன்றும்.

தென்னாட்டிலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அரும் பெரும் சக்தியை உருவாக்கி இந்நாட்டு மக்களும் உலக மக்கள் அனைவரும் உண்மையின் உணர்வுகளைப் பெறும்படி செய்யுங்கள்.

உலகத்தை காக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்த்து நம்மையும் காத்து இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையும் தருணத்தை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் நமது உடல் எப்போதுமே நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலால் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமில்லை.

1.நமது உயிரில் ஒன்றும் உணர்வாக துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இணைத்து
2.அதைச் சொந்தமாக்கி உயிருடன் ஒன்றி
3.என்றுமே அழியா ஒளிச்சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் அனைவரும் பெறவேண்டும்.

உங்களால் முடியும்.

தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…!

Lord shiva and arjuna

தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…! 

கார்த்திகை நட்சத்திரம் சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. நம் பிரபஞ்சத்திலுள்ள 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால் நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது.

நம் பிரபஞ்சத்தில் முன்னிலையில் இருப்பது கார்த்திகை நட்சத்திரம்.

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகளே மனிதனின் ஆறாவது அறிவான அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைக்கு காரணம்.

அறிந்திடும் உணர்வுகள் ஒளியான உணர்வின் அலைகள் மற்ற அணுக்களுடன் கலக்கப்படும் பொழுது
1.அணுவின் இயக்கத் தொடரை அறிந்திடும் செயல்
2.”ஒலியின் நாதங்களாக” எழுப்பச் செய்து அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.மற்றவர்களுக்கு நுகரச் செய்யும் உணரச் செய்யும்
4.உணர்த்திடும் உணர்வின் ஒளி அலைகளைப் பெற்றது கார்த்திகை நட்சத்திரம்.

அதனின் செயலாக்கத்தை அது உமிழாது தனக்குள் அடக்கிக் கொண்டால் நம் பிரபஞ்சமான சூரியனுக்குள் உணர்வின் தன்மை ஒலியாகி எதிர் நிலையின் தன்மை நாம் கண்டுணரும் நிலைகள் மறைக்கப்படும் நிலைகள் வந்துவிடும்.

அப்படி ஆகும்போது மனிதனின் சிந்தனைகள் குறைவுற்று மிருக உணர்வுகளின் தன்மைகள் அதிகமாகி பூமி சீர்கெடும் நிலை உருவாகிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள அன்று கண்ணன் (கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தே ஆக வேண்டும்.

1.நம் நினைவுகளை விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
2.“நரசிம்ம அவதாரமாக” தீய நிலைகள் நமது உடலுக்குள் வராதபடி அதைப் பிளந்து
3.அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை நமக்குள் சேர்த்து
4.அதைப் பருகிடும் நிலையாக நாம் சுவாசிக்கும் நிலைகள்,
5.அந்த ஆற்றல்மிக்க நிலையாகப் பெறச் செய்வதே யாம் சொல்லும் தியானம்.

மகாபாரதக் காவியத்தில் கண்ணன் சொல்லுகின்றான்.
1.சிவனான இந்த உடலுக்கு
2.அந்த ரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற
3.”தவத்தின் பலனால் தான்” உனக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க முடியும் என்று
4.”விண்ணை நோக்கி ஏகும் முறையை” அர்ச்சுனனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தான்.

“சிறு துளி பெருவெள்ளம்” என்பது போல ஞானிகளின் உணர்வின் ஆற்றல்மிக்க எண்ணத்தின் தன்மை “ஒரு வித்தாக” உங்களுக்குள் வலுப் பெறும் சத்தாக ஊழ்வினையாகப் பதிவாக்கப்படுகின்றது.

இதனின் துணை கொண்டு “எண்ணும்பொழுது” நீங்கள் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு நூலால் இழுக்க முடியாத ஒரு பொருளை பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கயிறாக்கி இழுக்கின்றோம். அது போன்று
1.எல்லாருடைய  எண்ணங்களும் ஒருமித்த நிலைகள் கொண்டு
2.“மகரிஷிகள் அருள் ஒளி அனைவரும் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன் தியானித்தால்
3.சுலப நிலைகளில் உங்களுக்குள் அது இணையும்.

அவ்வாறு எண்ணி எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் இடும் முச்சலைகள் அழுத்தமான நிலைகளில் பரவி நம்மைக் காக்கலாம் நம்மைச் சார்ந்தவர்களையும் காக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் செயலிழந்தாலும் “நாம் என்றுமே அழியா ஒளியின் சரீரமாக” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ முடியும்.

லவா.. குசா… இவர்கள் எதிலே வல்லவர்கள்…?

Valmiki.jpg

லவா.. குசா… இவர்கள் எதிலே வல்லவர்கள்…? 

விஞ்ஞான அழிவிலிருந்து மீட்டிடும் நிலையாக கருவில் வளரும் சிசுக்களுக்கு அருள் ஞானத்தை ஊட்டி உலக ஞானம் பெறச் செய்ய வேண்டும்.

வான்மீகி ஆசிரமத்தில் சீதா கருவுற்றிருக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு வான்மீகி ஓதிய உணர்வுகள் சீதாவின் கருவில் வளரத் தொடங்குகிறது.

இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக நிலைகளையும் இந்த உலகிற்கே எடுத்துச் சொல்லக்கூடிய நிலைகள் அந்தக் குழந்தைகளுக்கு  வந்தது.

இதைப் போல நம் குடும்பத்தில் வரும் அறியாத நிலையும் உலகத்தில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிடும் அருள் ஞானிகளை நாமும் உருவாக்கிடல் வேண்டும்.

விஞ்ஞானத்தை வெல்லும் மெய்ஞானத்தை உருவாக்கச் செய்யும் அருள் ஞானிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மறைவில் தான் நாமும் வாழ முடியும்.

கருவில் வளரும் சிசுக்களில் இந்த ஞானத்தை வளர்த்துவிட்டால் பேரருளைப் பெறும் ஞானிகளாக அவர்கள் வளரத் தொடங்குவார்கள்.

சீதா பல துன்பங்களை அனுபவித்தாலும் அன்று வான்மீகி இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக ஞானத்தையும் சீதாவின் கருவில் வளரும் சிசுக்களுக்கு எடுத்து ஓதினார்.

1.உலகைக் காத்திடும் தன்மையாக ஞானத்தைப் பெறும்படி செய்து
2.ஞானத்தின் உணர்வின் தன்மையைப் போதித்த நிலைகள்
3.அங்கே உருப்பெற்றது தான் லவா குசா என்று உணர்த்தினார்.
4.விஷ்ணுவிடம் சொர்க்கமடைய அதாவது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும் மார்க்கத்தைக் காட்டினார் வான்மீகி.

“இன்றும்…,” உலகில் பரவிக் கொண்டிருக்கும் அந்த “மெய்ஞானியின் உணர்வுகள் – லவா குசா” தனக்குள் எடுத்து அந்த அருள் ஒளியை நமக்குள் வளர்க்க வேண்டும் என்று உணர்த்தினார்.

இருளை அகற்றிய அருள் உணர்வை நமக்குள் சேர்ப்பிக்கும் சக்தியின் தன்மையைத் தான் அன்று வான்மீகி காவியமாகப் படைத்துள்ளார்.

1.மனிதன் எப்படி வாழ வேண்டும்?
2.உணர்வுகளும் எண்ணங்களும் எப்படி வருகின்றது?
3.நாம் நுகரும் (குணங்கள்) சுவையின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் நம்மை இயக்குகின்றது? என்ற உண்மைகளைக் காவியமாகக் காட்டினார்.

ஆகவே, நம் உயிரின் இயக்கமும் உடலின் தன்மையும் “கடைசி நிலை… என்ன…?” என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் வாழ்வோம்.

நம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

அவர்கள் மீண்டும் ஒரு உடல் பெறும் நிலையை மாற்றி பேரொளி என்ற நிலையை அடையச் செய்வோம்.

அவர்கள் முன் சென்றால் நம் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அந்தப் பேரருள் உணர்வை நாம் எடுத்து நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற தியானிப்போம். தவமிருப்போம்.

“கங்கா சேர் வான்”

 

Lord siva, Ganga.jpg

“கங்கா சேர் வான்”

குழம்பு வைக்கும் பொழுது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளைச் சேர்த்து ருசியாக ஆக்குகிறோம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேருகின்றது. அப்பொழுது அந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது.

அப்படிக் கலந்த தீமையான உணர்வுகளை நீக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் வலு குறைந்துவிடும். அதை மாற்றியமைக்க வேண்டுமல்லவா.

அதற்காகத்தான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளின் உணர்வைப் பதிவாக்குகின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது நல்ல அணுக்களாக மாற்றிவிடுகிறது.

1.நல்ல அணுக்களை மீண்டும் வலுப் பெறச் செய்ய வேண்டும் என்றால்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதற்கு மேல் சேர்த்து மாற்ற வேண்டும்.
3.தீமையான உணர்வுகள் நமக்குள் இரண்டறக் கலந்ததை அடிமையாக்க வேண்டும்.
4.“கங்கா சேர் வான்…” மாதிரி நாம் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் ஒவ்வொரு உணர்வு வரும் போது “அணுவுக்குள் அணு…, ஓமுக்குள் ஓ…ம்…ஓமுக்குள் ஓ…ம்” என்று ஒவ்வொன்றும், பிரணவ தத்துவத்தைக் கொண்டு வருகிறது.

அந்தப் பிரணவத் தத்துவம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுவையும் நுண்ணிய அணுக்களாக மாற்றி மாற்றி அந்த உணர்வின் தன்மை கொண்டு சேர்த்துதான் உடலாக மாற்றுகிறது.

இந்த உடலின் அணுக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் அதற்குத்த் தக்க மனித உறுப்புகளை உருவாக்கும்.

மனித உறுப்புகளை உருவாக்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக விஷத் தன்மையை நாம் மனித உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் ரூபங்களை மாற்றி அதற்குத் தக்கவாறு உண்டாக்கிவிடும்.

நாம் புழுவிலிருந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க இந்த உறுப்புகள் மாறுகிறது. அப்படிப் படிப்படியாக வரும்போது எல்லாவற்றையும் கழிக்கக்கூடிய உடலின் உறுப்புகள் அமைகின்றது.

இந்த உறுப்புகள் உடலில் அமைந்தபின் நாம் அந்த அருள் ஒளியை, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும். “உயிர் ஒளியானது” ஒவ்வொன்றிலும் தனுஷ்கோடி.

1.எல்லாவற்றையும் சேர்த்து
2.உயிர் எப்படி ஆனதோ ஒன்றாக அமைத்ததோ
3.இதுதான் “தனுஷ்கோடி” என்று சொல்வது.

இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா…?

அதுதான் கோடிக்கரையில் இருக்கிறோம். எல்லாவற்றையும் இந்த கோடிக்கரை என்று ஒன்றாகச் சேர்கக வேண்டும் என்ற நிலையில் நாம் இன்று இருக்கிறோம். நேரமாகிவிட்டது என்று இராமன் என்ன செய்கிறான்? மணலைக் கூட்டிச் சேர்க்கிறான்.

இது ஒரே நாளில் முடியுமோ…?

இந்த கோடிக்கரையில் இருந்து நாம் எல்லாவற்றையும் உயிரைப் போன்று உணர்வின் ஒளியாகி நீங்கள் எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற உணர்வை என்னுடன் இணைத்து விடுகின்றது.

உங்களில் தீமை என்ற உணர்வை நீக்கத்தான் அருள் ஒளி என்ற உணர்வை உங்களில் சேர்க்கிறோம் அதே சமயத்தில் “எல்லோரும் அதைப் பெற வேண்டும்” என்று எண்ணுகிறோம்.

1.அவர்கள் அதைப் பெற்றால் பரவாயில்லை.
2.பெறவில்லை என்றால் “அவர்கள் பெற வேண்டும்” என்ற உணர்வு என்னுள் உள்ளது. என் உடலுக்குள் அந்த உணர்வுகள் பெருகுகின்றது.
3.நீங்கள் பெற வேண்டுமென்று யாம் எண்ணுகிறோம். இந்த உணர்வுகள் எனக்குள் வளர்கிறது.

ஒருவர் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிடவேண்டும்.

1.அதாவது… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு,
4.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்,
5.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது… “இந்த உணர்வு நமக்குள் வருகிறது”.
6.முதலில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவாகிறது. இதனுடன் கலந்து இதை யாம் இப்படி மாற்றிவிடுகின்றோம்.
7.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம்.
8.இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழி வேண்டுமல்லவா…!
9.பிறருடைய தீமை செய்யுன் உணர்வுகள் அது கலந்தவுடன் அதை மாற்றிவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
10.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
11.ஒன்றில்லாது ஒன்றில்லை. எதுவுமே, ஒன்று இணைந்தால்தான், அது வளரும்.

ஏனென்றால்… வடதுருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்… தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது. வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.

காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதை போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொன்றிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அப்படிச் சேர்க்கும் பருவத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அழுக்கு நீர் குறைந்து கடைசியில் முழுவதும் நல்ல தண்ணீராக மாறிவிடும்.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை கலந்து கொண்டே இருக்க வேண்டும். நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒளியின் அணுக்களாக மாறும். ஒளியின் சரீரம் பெற

முடியும். அந்த மகரிஷிகள் சென்று அடைந்த எல்லையை நாம் எளிதில் அடையலாம்.

இது எல்லோராலும் முடியும்.

வலிமையான ஆயுதம் இராமபானம்

Sri Ram.jpg

வலிமையான ஆயுதம் இராமபானம் 

நமக்குள் வரும் துன்பத்தைப் போக்குவதற்குத்தான் ஆத்ம சுத்தி. யாம் கொடுக்கும் அந்த ஆயுதத்திற்குள் (இராமபானம்) பல இரகசியங்கள் இருக்கின்றது.

அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தும் நிலைகளுக்குத்தான் இதை உணர்த்துகின்றோம். இராமன் என்பது – நம் உயிருக்குள் உணர்ந்த ஒவ்வொரு குணத்தின் நிலைகள்தான்.., இராமன், பரசுராமன், பலராமன் என்பது.

அம்பு என்று இருந்தாலும்
1.இராமபானத்தைப் பயன்படுத்தும் நிலைகள் கொண்டு – நம் எண்ணங்கள் கொண்டு
2.இந்த எண்ணத்தின் வேகத்தின் நிலைகள் கொண்டு
3.நாம் எந்த எண்ணத்தின் உணர்வைப் பாய்ச்சுகின்றோமோ
4.அந்த அம்பின் தன்மைதான் மற்றதைக் கவர்ந்து அதை இழக்கச் செய்யும்.
5.அந்த எண்ணத்தின் நிலைகள் செயலாவதுதான் ஆஞ்சநேயன்
6.ஆஞ்சநேயன் – வாயு புத்திரன்.., இராமனின் தூதுவன். அதாவது நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் வாயுவாகச் சென்று மற்றொன்றை இயக்கும் நிலை.

இதையெல்லாம் சாஸ்திரத்தில் தெளிவாக அன்று மெய்ஞானிகள் உணர்த்தினாலும் அதற்குள் இருக்கும் நிலையை மெய்ப்பொருளை உணர்வார் இல்லை.

இப்பொழுது யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் எண்ணங்கள் அனைத்துமே இராமபானங்கள்.

மற்றவர்கள் (சீதா சுயம்வரத்தில்) வில்லைத் தூக்க முடியவில்லையென்று சொன்னபோது மெய்யுணர்வின் தன்மையைத் தூக்கும் சக்திக்குத் தக்க கணையை உங்களுக்குள் இயங்கச்செய்து,

1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை
2.நீங்கள் சரியான விதத்தில் பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க மகரிஷிகளின் அருள் ஒளி பெற தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள். மனதிற்குள் எண்ணி ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உங்கள் உடல் முழுவதற்கும் நினைவைச் செலுத்தி உங்கள் உடலைத் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியால் உடல் நோய் நீங்கி நாங்கள் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஏங்கி இருங்கள்.

1.எங்களுக்கு நல்ல எண்ணமும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணமும்
3.எங்கள் வழி நல் வழியாகவும்
4.எங்களுக்கு உன்னை என்றும் மறவாத எண்ணமும் கொடு ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தியால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு தியானத்தால் எண்ணி எடுக்கும் உணர்வுகள் இராமபானமாக இயங்கி உங்களை மகிழ்ந்து வாழச் செய்யும்.

அதே சமயத்தில் நீங்கள் மற்றவர்களுக்குப் பாய்ச்சும் அருள் உணர்வுகள் ஆஞ்சநேயனாக அவர்களுக்குள் சென்று அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றும் சக்தியாக இணைந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வாக இயக்கும்.