கடலில் அலைகள் பாய்வது போல… புயல் அடிப்பது போல… வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருகிறது

கடலில் அலைகள் பாய்வது போல… புயல் அடிப்பது போல… வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருகிறது

 

நன்றாகத் தான் இருப்பீர்கள். ஒன்றுக்கும் ஆகாதவன் யாராவது வந்து “நீ என்னய்யா செய்துவிடுவாய்…?” என்பான்.

கேட்டவுடனே “உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று மனதில் வேகம் வரும். “இவனுக்குக் குசும்பைப் பார்….” என்போம். இப்படி உணர்ச்சி வசப்படும் நிலை வந்து விடுகிறது. அப்பொழுது என்ன செய்கின்றோம்…?

1.அவன் சொல்லக்கூடிய நிலைகளில் அகம் (நான்) என்ற அலைகளில் நாமும் சிக்கி
2.அவனை அழித்து விட வேண்டும் என்றே நினைப்போம்.
3.அதற்குண்டான முயற்சிகளை எல்லாம் எடுத்துக் கொண்டே இருப்போம்
4.அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து நம்மை அழித்துவிடும்.
5.நாம் சேர்த்து வைத்த செல்வத்திற்கு வேலை வந்துவிடும்.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் மேலே சொன்ன மாதிரி “அடுத்தவனை அழிக்க வேண்டும்…” என்று கோர்ட்டு… கேஸ்… சாப்பாடு… அது இது என்று பணத்தை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு
1.என்றைக்கு இதிலிருந்து விடுபடப் போகின்றோமோ…? தெரியவில்லை…! என்பார்கள்.
2.இப்படித்தான் அந்தப் பணம் காணாமல் போகும்.

இவருக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் ஆனால் பணம் எல்லாம் போய்க் கொண்டே இருக்கும் சம்பாதித்த பணம் காணாமல் போய்விடும். இந்த அலைகளில் சிக்கி விடுகின்றோம்.

அதே போன்று குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். ஒரு பையன் சொன்னபடி ஏதாவது கேட்காது இருப்பான்.
1.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…
2.இவனுக்குச் சொத்தே கொடுக்கக் கூடாது… என்று மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.

“நல்லவனாக நடக்க வேண்டும்” என்று அவன் வந்தாலும் கூட “தொலைந்து போகிறவன் எங்கேயோ போடா… ஒரு காசு கூட உனக்குக் கிடையாது…!” என்று சொல்வோம். இந்த அலைகளில் சிக்கி விடுவோம்.

அவன் மேல் முதலில் பாச அலையாக இருக்கின்றோம். திடீரென்று வெறுப்பலை வந்துவிட்டால் அதில் மூழ்கி விடுகின்றோம்.

இவனை எண்ணி இங்கே மூழ்கினாலும் மற்ற பிள்ளைகளிடமும் அதைப் பேசுவோம் டேய்… அவனை மாதிரி யாரும் ஆகிவிடாதீர்கள்…! என்போம். இந்த அலைகள் அங்கேயும் போய் மோதும்.

என்னுடைய அப்பா எப்பொழுது பார்த்தாலும் அவனை வைத்துக் கொண்டு என்னையும் சும்மா ஜாடை பேசிக் கொண்டே இருக்கிறார் என்று அடுத்த பிள்ளையும் சொல்ல ஆரம்பிப்பான். அங்கேயும் வெறுப்பலைகளில் சிக்கிக் கொள்வோம்… அதிலேயும் மூழ்கிவிடுவோம்.

1.எதை எதைச் சம்பாரிக்க வேண்டும்…
2.எப்படி எல்லாம் நல்ல பிள்ளையாக வளர்க்க வேண்டும்…
3.தான் உயர்வாக எப்படி வர வேண்டும்…
4.எல்லோரும் என்னை எப்படிக் கௌரவமாக மதிக்க வேண்டும்… போற்ற வேண்டும்… என்ற
4.பல வகையான எண்ணங்களில் இந்த அலைகளில் சிக்கிக் கொண்டு அப்படியே தத்தளித்துக் கொண்டிருப்போம்.

எத்தனை சம்பாரித்து வைத்து என்ன பலன்…? இந்த மாதிரிச் செய்கின்றார்களே…! என்று வருவோர் போவோர் அனைவரிடமும் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம்.

இந்த அலைகளில் தான் மூழ்கிக் கொண்டிருப்போம். மீட்கும் நிலையோ மீளும் வழியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருப்போம்.

நிறையக் குடும்பங்களில் இப்படித்தான் இருக்கும். மனிதனுடைய வாழ்க்கையில் மீளாத் துயரத்தில் இப்படிச் சுழன்று கொண்டு இருக்கிறோம்.

காரணம்… உயர்ந்த சரக்குகளை எடுத்து அதிலே நஞ்சினை கலந்து விட்டால் நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ… அதைப் போன்றுதான் மனிதனுடைய வாழ்க்கையில்
1.உயர்ந்த குணங்களை கொண்டோர் அனைவரும்
2.வாழ்க்கையில் எத்தனையோ அலைகளில் சிக்கி… புயலில் சிக்கி விடுகின்றோம்.

உதாரணமாக ஒரு புயல் அடித்தால் அது சுழன்று பெரும் நிலைகளாகப் பரவி எல்லாவற்றையும் அழித்துச் செல்கின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் எதையும் காணவில்லை… அடித்துச் சென்றுவிடுகிறது.

இதைப் போல மனிதனின் உணர்வில் (வாழ்க்கையில்) பெரும் புயல் வீச ஆரம்பித்தால் என்ன ஆகும்…? என்ன வாழ்க்கை…? என்ற நிலையில் கொண்டு தனக்குள் அனைத்தும் இருள் சூழச் செய்து கடைசியில் தற்கொலைக்கே அழைத்துச் செல்கின்றது.

அத்துடன் நமக்குள் வளர்த்த ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகிறது. அந்தப் புயலின் நிலைகளில் சிக்கும் பொழுது நமக்குள் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அது அனைத்தையும் நொறுக்கிவிடுகிறது.

ஆகவே
1.நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும்
2.அது போன்ற அலைகளைப் பிளக்கும் தன்மை வரவேண்டும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழிகள் கொண்டு நம் எல்லையை வகுப்போம்.

மகரிஷிகள் அனைவரும் எத்தகைய இருளையும் ஒளியாக மாற்றிக் கொண்டு உள்ளார்கள் பேரானந்தப் பெரு வாழ்வு என்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலாமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டே உள்ளார்கள்.

அந்த அருள் ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான “பட்டாம் பூச்சிகளாக” மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

 

“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்.

தானியங்களின் வித்தைம் விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.

அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்த பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.

முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.

அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.

காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.

அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.

அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.

அருள் ஞானிகளின் அரும்பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

 

விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடல் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.

உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி… உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.

காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.

அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.

நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.

இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.

குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?

தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.

சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.

அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.

1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.

பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.

அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்

ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்…!”

இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

 

உதாரணமாக ஒரு மாமரத்தின் வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்திற்குள் மறைந்த சத்துக்கள் அனைத்தும் பூமியின் துடிப்பின் நிலைகள் கொண்டு பூமியின் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு முளைக்கத் தொடங்குகிறது.

அந்த வித்திற்குள் எடுத்துக் கொண்ட காந்த உணர்வுகள் அது மீண்டும் ஜீவன் பெற்று… காற்றிலே சூரியனின் காந்த சக்தியால் தாய் மரத்தின் உணர்வலைகள் கவர்ந்து அலைகளாகச் சுழன்று கொண்டிருப்பதை இழுத்துக் கவர்ந்து செடியாக அது வளரச் செய்கின்றது.

ஆனால் அந்த வித்திற்குள் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அது ஈர்த்துக் கவரும் பொழுது தழைகளாகச் செடியாக மாறுகின்றது.

1.பின் தன் உணர்வின் சத்தை அது வளர்த்து மரமாகிப் பிஞ்சு ஆகும் பொழுது துவர்க்கின்றது.
2.காயாகும் பொழுது புளிக்கின்றது
3.புளித்தபின் இனிக்கின்றது
4.இனிக்கும் போது வித்தின் சத்து அனைத்தும் அந்த வித்திற்குள் ஒடுங்குகின்றது.
5.அந்தப் பழம் சுவையாக இருக்கின்றது.

ஒரு மாங்கனி எப்படித் தன் உணர்வின் சத்தை அது வித்தாக மாற்றியதோ இதைப்போல ஜீவராசிகளின் “உயிரின் தன்மை என்பது ஒரு வித்து…”

ஆனால் மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது காயிலிருந்து கனியாகும் பருவம். மனித உடலில் இருக்கக்கூடிய அனைத்தும் கனியின் தன்மை அடைந்து விட்டால்
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்து
2.மாவித்திற்குள் எப்படி இந்த உணர்வின் தன்மை அடைந்ததோ
3.இதைப்போல நம் உயிர் எப்படி ஒளியானதோ இந்த உணர்வின் தன்மை அனைத்தும் மாற்றி
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாறி விண் செல்ல முடியும்.

ஒளியான பின் விண் செல்வதே முழுமை. அப்படிக் கனியாக்கி விண் சென்றவர்களே மாமகரிஷிகள். அவர்கள் அடைந்த முழுமையை நாமும் அடைய வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…!

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…!

 

இந்த வாழ்க்கை என்ற குறியைத் தான் வைக்கின்றோமே தவிர சந்தர்ப்பத்தில் நம்மைத் தாக்கும் உணர்வுகளை மறந்துவிட்டோம்.

நாம் ரோட்டில் செல்லும்போது ரோட்டின் அந்தப் பக்கம் தெரியும் ஒரு நல்ல பொருளின் மீது ஆசைப்படுகின்றோம். எடுக்க வேண்டுமென்ற ஆசை தூண்டப்படுகின்றது. ஆனால் இடையிலே வரும் நிலைகளை… அறிய வேண்டும் என்ற சிந்தனையை மறைத்து விடுகின்றது.

1.நினைவை நாம் அங்கே செலுத்தி அந்தப் பொருளை எடுக்கத் தாவப்படும் பொழுது
2.குறுக்கே வரும் வாகனத்தைப் பற்றிச் சிந்திக்காமல் திரும்பிப் பார்க்காதபடி எடுக்கச் சென்றால்
3.வாகனம் மோதி விட்டால் என்ன ஆகும்… பொருளைப் பெற முடியாது.

ஆசையின் உணர்வுதான் வருகிறது. இந்த உணர்வினை அறியப்படும் பொழுது “கிடைக்கவில்லை…” என்கிற போது அந்த உணர்வினை வளர்த்து விட்டால்… மடிந்து விட்டால் அதே உணர்வுடன் தான் அந்த ஆன்மா அங்கே சுழன்று கொண்டிருக்கும்.

இதே ஆசை கொண்ட மனிதர்கள் அங்கே நடமாடும் போது அவருக்குள் இந்த ஆன்மா புகுந்து… தன் ஆசையைத் தூண்டி “அதைப் பெற வேண்டும்… இதைப் பெற வேண்டும்…” என்ற உணர்ச்சிகளையே தான் தூண்டும்.

இப்படிப் பல மனிதர்கள் இருப்பதையும் இன்று காணலாம். ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த வலிமையைத் தனக்குள் எடுத்து
2.அதே ஆசை கொண்ட மனிதர்களிடம் விளைந்த உணர்வுகள் காற்றிலே இருக்கிறது.
3.அதன் வழிகளிலே நம்மை அழைத்துச் செல்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுதல் வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீவினைகளை நீங்கள் நிறுத்துதல் வேண்டும். அது தான் விநாயகர் சதுர்த்தி.

உங்கள் உடலுக்குள் ஊடுருவிய தீமை என்ற நிலைகளை நிறுத்துவதற்கு குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானியின் உணர்வை அருள் ஞான வித்தாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்களுக்கு முன் காற்றில் இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

என்றென்றும் அதன் வழிகளிலே மெய்ப் பொருளாக இருக்கும் உயிருடன் ஒன்றி நீங்கள் வாழ முடியும்.
1.மெய் என்பது உயிர்… எல்லாவற்றையும் அந்த உண்மையின் உணர்வை நமக்கு அறிவிப்பது மெய் உயிர்.
2.உயிருடன் ஒன்றி எல்லாவற்றையும் மெய்யாக மாற்றும் ஆற்றல் பெற முடியும்.

குருநாதர் எனக்கு இதையெல்லாம் காட்டினார். காட்சிகளாகவும் காண்பித்தார். அதைத் தெளிவாகத் தெரிய முடிந்தது… அதை நுகரவும் முடிந்தது.

எனக்குள் பதிவான அந்த உணர்வின் தன்மையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது… கடந்த கால நிலைகளை நினைவுபடுத்தி எண்ணங்களாக (உபதேசமாக) வெளி வரப்படும் பொழுது… அந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கப்படும் பொழுது
1.இதே எண்ணம் உங்களைத் தீமைகளிலிருந்து அகற்றச் செய்யும்
2.மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் பட்டுப் பாறைகளாக ஆகும் போது எதிர்நிலையான மறைகள் ஆகி இதற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அதிகமாக இணையுமேயானால் அது மற்றதை அடக்குகிறது.

மற்ற நட்சத்திரத்தின் கலர்கள் எதுவானாலும்…
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதனுடன் இணைக்கப்படும்போது
2.பூமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று மண்ணுக்குள் உருவாகிறது.

இதைப்போல மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலை வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை மூன்றும் மோதி தாவர இனச் சத்தாகக் கருவாகிப் பூமிக்குள் வருகிறது.

அதாவது பூமிக்குள் வரும்போது எதிர்நிலையான நிலைகளானால் கார்த்திகை நட்சத்திரத்தையும் ரேவதி நட்சத்திரத்தையும் மற்ற எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்தினுடைய நிலைகள் ஆகும்போது மூன்றும் மும்முனையாக இயக்குகிறது.

காரணம்… எதுவுமே மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம் காந்தம் விஷம் இது மூன்றும்
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலாகவும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மையைத் துடிக்கச் செய்யும் விசையாகவும் இயக்குவது போல
4.நட்சத்திரத்தின் இயக்கம் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று மண்டலங்களாக இப்படி இயக்குகின்றது.

முதலிலே இது வெறும் கல் பாறைகளாக ஆனாலும் பாறைக்குள் இது மோதும் நிலைகள் கொண்டு உணர்வின் ஈர்ப்பு கிளரும் பொழுது தனக்குள் ஈர்க்கும் இந்தக் கருவின் மோதலுக்குள் மண்ணிலே மறைந்து அது கருவாக உருவாகிறது.

1.பின் இதற்குள் வடித்துக் கொண்டு வைரத்தின் நிலைகள் ஆகி
2.இதனுடைய வீரியத்தன்மை ஆனபின் வெடித்துவிட்டு முழுமை அடைந்தபின் இறக்கும் தன்மையாக வெளி வருகின்றது.
3.அதைத் தான் வைரங்களாக நாம் பார்க்கின்றோம்.

ஆக நட்சத்திரங்களின் விஷத்தன்மையான உணர்வுகள் இரண்டறக் கலந்து அது எவ்வாறு வைரங்களாக ஆனது…? என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

நட்சத்திரங்களின் மோதலையும் வான மண்டலத்தின் இயக்கங்களையும் அது எடுத்துக் கொண்ட நிலைகள் விண்ணுலகிலிருந்து பூமிக்குள் வரப்படும்போது
1.மற்ற பாறைகளின் தன்மைகளுக்குள் இது நுகர்ந்து கொண்ட நிலைகளும்
2.மண்ணுக்குள் மறைந்தாலும் இந்த உணர்வின் ஈர்ப்பால் அந்த மண்களிள் மாற்றம் ஆவதும்
3.அதற்கடுத்த நிலைகளில் இந்த மண்ணின் தன்மைகள் மாறுவதும்
4.அதற்குண்டான நிலைகளை ஈர்ப்பதும்… ஈர்த்த நிலைகள் கல்லாவதும்
5.அதற்குள் எதிர்ப்பு உணர்வுகள் கொண்டு தன் இனத்தை வளர்த்து அது வைரமாகி எப்படி வெடிக்கின்றது…? என்ற நிலையும்
6.அந்த உணர்வின் வளர்ச்சியின் ஈர்ப்பும் காந்தப் புலனறிவின் ஆற்றல் எவ்வாறு…? என்ற நிலைகளையும் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

ஏனென்றால்
1.வித்திலிருந்து செடியா… செடியிலிருந்து வித்தா…?
2.வைரம் எதிலிருந்து வருகின்றது…? வைரத்தின் ஆற்றல் எது…? என்ற நிலைகளைக் கண்டுணர்வதற்குத்தான்
3.ஒவ்வொரு பகுதிகளிலும் சென்று பார்க்கும்படி செய்தார்.

அந்தந்தப் பகுதியில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
1.தாவர இனச்சத்துக்குள் வரும்போது பாறைக்குள்ளும் அந்த நார் இந்த நார் என்று
2.பல பல சத்தின் தன்மையை அது எடுத்து தனக்குள் இந்த சத்து அதிகமாகி வெப்பத்தின் தன்மை வரும்போது
3.”கல் நார்…” என்ற நிலைகள் அது குமிழ்ந்து வெளி வருவதையும்
4.அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவோரும் வைத்தியத்தில் உண்டு.

இயற்கையின் செயலாக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

 

சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.

நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.

இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.

இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.

அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.

அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.

1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.

ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.

1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!

நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.

அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.

ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.

ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.

மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்… ஐந்துக்கு அல்ல…!

 

தாவர இனங்களுக்கெல்லாம் ஐந்து புலனறிவு தான்.
1.அந்தச் செடி கொடிகளை வேக வைக்காமல் சாப்பிடும் எந்த உயிரினமானாலும் மிருகமானாலும்
2அந்த உணர்வின் சத்தாக அதற்குள் இயங்கி அது எண்ணமாகி
3.அதே ஐந்து புலனறிவாகத் தான் அதுவும் இயங்கும்.

ஒரு வேப்பமரம் கசப்பின் சத்தை அதைத் தன் உணர்வால் கவர்ந்து வளர்வது போல… ஒரு மாடோ மற்ற மிருகமோ எந்தச் செடியை அது நுகர்ந்து தன் உணர்வால் எடுத்துக் கொண்டதோ அதை நுகர்ந்து பார்த்து… தன் இனமான சத்தை அது வளர்ந்து அது உணவாக உட்கொள்ளும்.

அது உணவாக உட்கொண்டாலும் அது உடலில் கருவாகி அதனின் குட்டியாகப் படும்பொழுது இது எந்தெந்த உணர்வின் உணவை அது உட்கொண்டதோ அந்த உணர்வின் சத்து கருவிலே விளையும் அந்த கருவுக்குள் ஊன்றி அது ஈன்ற பின் இந்தத் தாய் அதற்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

தன் உடலில் எத்தகைய உணர்வுகள் தாய் அதை உணவாக உட்கொண்டதோ அதனுடைய கன்றும் இது பிறந்த பின் அது வளர வளர இந்தத் தாய் எந்தெந்த ஆகாரத்தைச் சாப்பிட்டதோ அந்த ஆகாரத்தை இந்தக் கன்றும் சாப்பிட ஆரம்பிக்கும்.
1.அந்தத் தாய் வயிற்றிலே விளைந்த இந்தக் கருவின் உணர்வுகள் கொண்டுதான் இந்தக் கன்றும் உணவாக எடுக்கும்.
2.புதிதாக நாம் எதைப் போட்டாலும் அது எடுக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் நஞ்சான அசுர உணர்வுகள் புகுந்து விடுகிறது.

நமக்குள் புகுந்து நரக வேதனையாகச் செயல்படுத்தும் இந்த அசுரனை நீக்கத்தான் “கண்ணன் அசுரனைக் கொல்ல உபாயத்தைக் கொடுத்தான்…” என்று காவியங்கள் காட்டுகின்றது.

காரணம்… யாரை உற்றுப் பார்த்து “நம்மை வேதனைப்படுத்துகிறார்…” என்று எண்ணுகிறோமோ அவருடைய வேதனைப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

1.எந்த வேதனை அவர்கள் உடலில் வித்தாக (வினையாக) உருவானதோ
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் கேட்டறிந்து நுகரும் போது
3.நம் உடலிலே விளைந்தது நமக்குள் வித்தாக ஊன்றி விட்டால்
4.அவரை மீண்டும் மீண்டும் நினைக்கச் செய்து
5.நம்மை எப்படிக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினாரோ எத்தகைய தவறு நிகழ வேண்டும் என்று எண்ணினாரோ
6.அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
7.நமக்குள் வேதனைப்படும் நிலையாக நரகலோகத்தை நமக்குள் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படி அந்த அசுரன் (வேதனைப்படுத்தும் உணர்வு) நமக்குள் சென்றாலும்
1.நம் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுப்பதும்… எண்ணியதை இயக்கச் சக்தியாகப் பிரணவமாக்கி ஜீவனாக்கச் செய்வதும்
2.அதன் வழியிலே பிரம்மமாகி (பிரம்மா) சிருஷ்டிப்பதும்
3.சிருஷ்டித்த உணர்வுகள் நம் உடலாகச் சிவமாக்குவதும்
4.நாம் எண்ணியது அனைத்தும் உருவாகும் இடமாக இந்தச் சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக
5.இதைச் சித்தரித்துத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் நாம் எத்தனையோ வேதனைகளைக் கடந்து அந்த வேதனையை நீக்கிடும் ஆற்றல் மிகுந்த சக்தியாகப் பெற்றுத் தான் வந்திருக்கின்றோம்.

எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் என்று “மனிதனின் ஆறாவது அறிவைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…”

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நாம் செய்யும் நன்மைக்குள் புகும் தீமையான உணர்வுகளை வேக வைத்து அதன் செயலாக்கங்களை வீழ்த்தி
3.நல்லதைக் காக்கும் சக்தியாகச் செயல்பட வேண்டும்
4.ஏழாவது நிலையான ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே ஞானிகள் நமக்கு உரைத்தது.

முழு முதல் கடவுள்

முழு முதல் கடவுள்

 

மிருக நிலையிலிருந்து என்று மனிதனாக ஆனோமோ அன்றே “முழு முதற் கடவுள் என்று மனிதனைப் பாடியுள்ளார்கள்…” சிருஷ்டிக்கும் வன்மை கொண்டது தான் மனித உணர்வின் எண்ணம்.

அத்தகைய ஆற்றல் பெற்ற நாம்… நம் நினைவை இழந்து விடாதபடி இதன் எண்ணத்தைக் கொண்டு ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நமக்குள் தியானத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

ஞானிகள் அருள் வாக்குடன் கலந்து அவர்களுடைய அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
1.நம்மை அறியாது சுவாசித்த சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் பயம் வேதனை இதைப் போன்ற குணங்கள்
2.நமக்குள் நோயாக உருவாக்கச் செய்யும்… சிந்தனைகளை குறைக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி தியானத்தை மேற்கொண்டு இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெறுவோம். அதை நினைவுபடுத்தும் நாள் தான் தீப வழித் திருநாள்… தீப ஒளித் திருநாள்.

ஞானிகள் காட்டிய அந்த நிலையை நாம் எல்லோரும் அடைவோம்.

விண்ணிலே தோன்றியது தான் உயிர்.
1.அருள் ஒளியின் சுடராக தீப வழிப்படி விண்ணுக்குச் செல்லும் தகுதி பெற்ற நாம்
2.இந்த உடலில் இருக்கும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.அந்த மெய் ஒளியுடன் ஒளியாக… உயிருக்குள் உணர்வு அனைத்தையும் ஒளியாகச் சேர்த்து
4.அழியா ஒளிச் சரீரமாக அதனுடன் இணைந்து விஜயதசமி…
5.பத்தாவது அவதாரமான கல்கி என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் “ஏழாவது நிலையான” ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன் பெற்றவர்கள்.

ஒருவன் திட்டி விட்டால் தியான வலு கொண்டவர்கள் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது
1.அந்த இடைஞ்சல் செய்தவனின் உணர்வுகள் தனக்குள் இயக்காதபடி
2.அதைத் தடுத்து நிறுத்தச் செய்யும்… சிந்திக்கச் செய்யும்.

இவ்வாறு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைச் சேர்த்து நம் உடலுக்குள் விளையச் செய்யும் போது “எட்டாவது நிலை…” உடலுக்குள் விளைந்த பின் உயிருடன் அது சேரும் போது “ஒன்பதாவது நிலை” ஆகின்றது.

ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்செல்லாம் நாமும் பேசுவோம். அவருடைய பேச்சு நமக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் ஞானியின் அருள் சக்தி இதனுடன் இணத்துச் சேர்க்க வேண்டும் என்று சொல்வது.

அந்த இருளான உணர்வுகளைத் தடைப்படுத்தி அந்த உணர்வை ஞானமாக்கி அந்த ஒளிச் சுடராக ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்வதால் உயிர் ஒளியாக இருப்பது போன்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாகி உடலை விட்டுச் சென்றபின் தசமி “பத்தாவது நிலை…” கல்கி.

1.உடலுடன் வாழும் போது செடி கொடி தாவரங்கள் விளைய வைத்ததைத் தான் உணவாக உட்கொள்கிறோம்.
2.ஆனால் இந்தப் பூமியிலிருந்து நாம் விண் சென்ற பின்
3.நம் சூரிய குடும்பமான பிரபஞ்சத்திற்கு வெளியே தான் நம் உயிராத்மா செல்கின்றது.

இந்தச் சூரிய குடும்பத்திற்குள் விளைந்த அனைத்தையும் ஒளியின் உணர்வாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியில் என்றும் பதினாறு என்று செல்லும் நிலையில்
1.மற்ற பேரண்டத்தில் இருவரும் சக்திகளை அந்த விஷத்தன்மையைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து இதை எல்லாம் பெற்றோமோ
3.அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் உயர்ந்த சக்திகளை அனுப்பி
4.இந்த சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
5.பேரண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வின் சக்திகளையும் ஒளியாக்கி
6.அந்தப் பேரண்டத்திற்கே வழி காட்டும் உணர்வின் ஒளி அலைகளாக நாம் வளர முடியும்.

அந்த தீபத்தின் வழி செல்வோமேயானால் இது தான் மனிதனின் கடைசி நிலை…! தீப வழி… தீப ஒளி (தீபாவளி).

ஆக உயிர் விண்ணிலே தோன்றினாலும் மீண்டும் விண்ணுக்கே ஒளியாகச் செல்கின்றது.