நம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…? அது எதனால் எப்படி வருகின்றது…?

divine knowledges

நம்முடைய அவசர புத்தி என்ன செய்யும்…? அது எதனால் எப்படி வருகின்றது…? 

பய உணர்வுகள் இருப்போரைப் பார்த்தால் தெரியும். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் “சீக்கிரம் முடித்து விட வேண்டும்… என்று பட…பட…வென செய்வார்கள்…!”

பயமாகும் போது எவ்வளவு வேகத் தொடர்கள் ஏற்படுகின்றதோ இந்த உணர்வுகள் நாம் எண்ணும் எண்ணத்துடன் இயக்கி அது வேகமாக இயக்கச் செய்யும்.
1.ஆனால் வேகமாக வரும் போது – இடைமறித்து
2.அது சிந்திக்கும் தன்மையே இல்லாது போய் விடுகின்றது.

உதாரணமாக நம் போகும் பாதையில் ஒரு பஸ் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அதனுடைய வேகத் தொடரின் எண்ண அலைகளை நமக்குள் பதித்து விட்டால் இந்தப் பக்கம் வேகமாக நகர்ந்து செல்ல வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால் அந்தப் பக்கம் பள்ளம் இருக்கிறது என்று அறியாது.

1.காத்துக் கொள்ளும் வேகத்தின் உணர்ச்சிகள் வேகமாகத் தள்ளிய பின்
2.முள் இருக்கின்றதா… அல்லது வேறு ஏதேனும் பொருள் இருக்கின்றதா…? என்று சிந்திக்க விடாது.
3.இதை உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

பின் அதிலிருந்து நகர்ந்தபின் முள் குத்தினால் ஐய்யயோ…! முள் குத்தி விட்டதே என்று எண்ணுகின்றோம். அடுத்து அங்கே அசூசை இருந்தால் ஐய்யய்யோ மிதித்து விட்டோமே…! என்று அப்புறம் தான் சிந்திக்கின்றோம்.

ஆனால் நாம் சிந்தித்து வேகமாக வரவும் முடியாது. ஏனென்றால் அந்த நேரம் அப்படி…! சிந்திக்கும் திறனற்ற உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் விளையும் சந்தர்ப்பமாக அது அமைந்து விடுகின்றது.

நாம் எண்ணிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று விட்டால் இதே பய உணர்வு எல்லா எண்ணங்களிலும் அடுத்து இயக்கும்.
1.எங்கேயாவது ஊருக்குப் போக வேண்டும் என்றால்
2.அவசர அவசரமாகச் செயல்படுத்தச் செய்யும்.
3.இந்த உணர்வின் வேகம்.

(அப்படி அவசரத்தில் இருக்கும் பொழுது) நமக்கு முன்னாடியே பொருள் இருக்கும். இதைத் தூக்கி எறிந்து விடுவோம்.

பின்… நாம் தேடும் அதே பொருள்… “எங்கே இருக்கிறது…!” என்று தெரியாதபடி மற்றவர்களைக் கூப்பிட்டுக் கேட்போம்.

அங்கே தான் இருக்கிறது என்று மனைவியோ பிள்ளைகளோ சொன்னால்
1.எங்கே இருக்கிறது…?
2.நான் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே… என்று
3.அங்கே சண்டைக்கு போகச் சொல்லும்.

நாம் தவறே செய்ய வேண்டாம்…!
1.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது…?
2.உணர்வின் உணர்ச்சிகள் எவ்வாறு நமக்குள் இணைகின்றது…?
3.என்ற நிலையை வியாசகர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

உதாரணமாக ஒரு இடத்தில் பஸ்ஸோ காரோ வேகமாக வருகிறது என்றால் அதிலிருந்து நம்மைக் காக்க அவசரம் பயம் போன்ற உணர்வுகளை எடுத்து நம்மைக் காத்துக் கொள்கின்றோம்.

ஆகவே நாம் சந்திக்கும் அந்தச் சந்தர்ப்பத்தின் நிலைகளில் நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்ட பின் இயக்கிப் பிரம்மமாக நமக்குள் சிருஷ்டித்து விடுகின்றது.

சிருஷ்டித்த உணர்வுகள் தன் இனத்தை மற்றதுடன் கலந்தே இயக்கும். காக்கும் நிலையாக நாம் செயல்படும் போதெல்லாம்
1.அந்த உணர்ச்சியின் வேகங்கள் அதிகமாகி
2.நம் நல்ல குணங்களுக்குள்ளும் இந்த அவசர உணர்வுகள் ஊட்டி
3.சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களைத் தடைபடுத்துகின்றது?

அந்த அவசர உணர்வுகள் தான் முதலில் விபத்தில் இருந்து நம்மைக் காத்தது. ஆனாலும் விபத்திலிருந்து காத்த உணர்ச்சியின் வேகங்களும் பய அலைகளும் நமக்குள் இரண்டறக் கலந்து விளைகின்றது.

விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?

ஒரு ஊருக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்றால் அந்த அவசர உணர்ச்சிகளைத் தூண்டும்.

அரை மணி நேரம் இருக்கும். ஆனால் அதற்குள்…
1.பஸ்ஸிற்கு நேரமாகிவிட்டது…!
2.முன்னாடியே போக வேண்டும் என்று
3.இந்த அவசரம் – அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.தூண்டும் பொழுது அதனின் வேகத் தொடரிலேயே இருப்போம்.

துணிமணிகளை எடுத்து வைக்க வேண்டும் என்றால் கையில் எடுத்துப் பார்த்து அப்புறம் அதை முன்னாடியே போட்டு வைத்திருப்போம்.

ஆனால் என் துணிகளை இங்கே வைத்தேனே அதை எங்கே காணோம்…! யார் எடுத்தார்கள்…? என்ன ஆனது…! ஏது ஆனது…! என்று அங்கே வீட்டில் பெண்களைக் கோபிப்போம்.

அந்த அவசரத்தில் சிந்தித்துக் கேட்கும் (அறிவு) உணர்ச்சியின் நிலைகள் இயங்காது எப்படிக் கேட்போம்…!

எங்கே வைத்தீர்கள்.. அங்கே பாருங்கள்…! என்பார்கள்.

இல்லை.. இல்லை…! “இங்கே தான் வைத்தேன்… நான் தான் பார்க்கின்றேனே… நீயே வந்து பார்…!” என்று கோபமாகவே சொல்வோம்.

அவர்கள் வந்து கண்ணுக்கு முன்னாடிதான் இருக்கிறது என்று எடுத்துக் கொடுப்பார்கள். (இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்)

ஏனென்றால் அங்கே சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது. கணவனும் மனைவிக்குள்ளும் பயந்த அலைகள் அவசர நிலைகளாக இயக்கிவிடும்.

இப்படிப் பயத்தை ஊட்டிய பின் “இப்படிப் பேசுகின்றாரே..! கணவர்… என்று அங்கே பய உணர்வை ஊட்டும். சிந்திக்கும் திறன் இழக்கும் போது குற்றமாக அங்கே சுமத்தப்படுகின்றது.

குற்றத்தின் உணர்வு ஆனவுடனே மனைவியோ பயப்படுகின்றது.

அல்லது மகனோ மகளோ இதைப் போன்று அங்கே இருந்தால் அவசரத்தில் அந்தப் பொருள் அங்கே இல்லை என்று அவர்கள் சொல்லி விட்டால் இந்தக் கோப உணர்வுடன் “அம்மாவைக் கூப்பிடு…!” என்று கடுமையான உணர்வாகும்.

அதற்கு அடுத்து எதை எடுத்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று வெறுப்பின் உணர்வு இங்கே வளரத் தொடங்கும். பையனோ குழந்தையோ இந்த வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்த பின் “அப்பா கோபிக்கின்றார்…!” என்ற உணர்வுகள் அவருக்குள்ளும் படுகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொல்லப்பட்டுள்ளது.

வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு அதனின் செயலாகவே சொல்லும் செயலும் இங்கே அமைகின்றது. அதே உணர்வுகள் நமக்குள் விளைந்தது. தீமை விளைவிக்கும் விளைவாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் விபத்திலிருந்து நாம் காத்துக் கொண்டோம்.
1.ஆனால் காத்த உணர்வுகள் நமக்குள் விளைந்த பின்
2.அதனின் தொடர் வரிசையில் எல்லாவற்றையும் கலந்து
3.அந்தப் பய உணர்ச்சிகளும் அவசர உணர்ச்சிகளும் நம்மைக் கோபக்காரனாக மாற்றுகின்றது.
4.சிந்தனை அற்றவனாக மாற்றுகின்றது.

ஒரு முறை பார்த்தது தான்…! மற்றவை அனைத்திலும் இந்த பய உணர்ச்சியின் வேகத் துடிப்புகள் இயக்கிக் கொண்டு வருகின்றது.

ஆபிசில் வேலை பார்த்தால் நாம் ஒரு பொருளைக் கொண்டு வா என்று சொல்லி ஒரு நிமிடம் லேட் ஆகிப் போனதென்றால் அவர் மேலே “கடு..கடு… என்று கோபம் வந்துவிடும்.

ஏம்ப்பா… இவ்வளவு நேரமா…? என்று அவர் மீது கோபிக்கச் சொல்லும். இந்த உணர்வின் வேகம் தொழில் செய்யும் இடங்களிலும் அமைதியைக் கெடுக்கின்றது.

சிந்தித்துச் செயல்படும் நல்ல குணங்களுக்குள் அவசர உணர்வுகள் கலந்த பின் இப்படி எல்லாம் நடக்கின்றது.

ஒரு மான் புலியிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள பயத்தால் உணர்வின் வேகம் அதிகமாகி அதையே தொடர்ச்சியாகச் சுவாசிக்கின்றது.
1.அவ்வாறு மான் சுவாசிக்கும் போது
2.மானின் உடலிலே மானின் சாந்த உணர்வு குறைந்து
3.புலியின் உணர்வு அதிகரித்து அதன் வேக உணர்வு இதற்குள் கூடி
4.புலியின் உணர்வுகள் கூடிய பின் இது நோயுற்றுவிடுகின்றது.

புலி மானைக் கொன்று சாப்பிடவில்லை என்றாலும் மான் தப்பி அஞ்சி ஓடினாலும் புலியின் நினைவு கொண்டே வாழ்ந்து புலியின் உணர்வை வளர்த்து மரணமடைந்த பின் மானின் உயிரான்மா புலியின் ஈர்ர்புக்குள் சென்று புலியாக மாறுகின்றது.

இப்படித் தான் நமது உயிர்
1.ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் பயத்திலிருந்து காத்திடும் உணர்வாக
2.அதிகமாகத் துடித்து அதனின் உணர்வைச் சேர்த்து
3.தன்னைப் பாதுகாக்கும் உடல்களாக மாற்றமாகிக் கொண்டே வந்தது.

மனிதனான பின் பயமான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அதிகமாக வளர்த்துக் கொண்டால் மறுபடியும் கீழான உயிரினமாகத்தான் பிறக்க நேரிடும்.

ஏனென்றால் பஸ் என்பது நாம் செய்த இயந்திரம் தான். அதற்குச் சிந்தனை இல்லை.

ஆனால் அது வரும் வேகத்தில் நம்முடைய அதிர்வுகள் வரும் போது பயமாகி அதிர்ச்சியாகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உணர்வுகள் நமக்குள் சேர்த்து வரிசைப்படுத்தி நம்முடைய எல்லா குணங்களிலும் கலக்கின்றது.

இதை நீக்க வேண்டும் அல்லவா…! நன்றாக சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைப் போன்று நம்மை அறியாமல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடத்தான் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளொய்யாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் உடலுக்குள் சேர்த்து வலிமை பெற்றால் அந்தத் தீமைகளை அது ஒடுக்கச் செய்யும்.
1.தெளிந்த அறிவை ஊட்டும்.
2.சிந்தித்துச் செயல்படும் ஞானம் கிடைக்கும்.
3.மெய் உணர்வுகள் வளரும் – நாம் மெய் ஞானியாக ஆக முடியும்.

அத்தைகைய சந்தர்ப்பத்தைதான் யாம் ஏற்படுத்துகின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

vaali fighting

போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று
2.அதைக் கவர்ந்து கொண்டால் தான்
3.நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.
அதைப் போன்று தான்
1.நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம்
3.எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
4.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது
1.உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.
2.எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…?
3.இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

1.நமக்குள் வேதனை வந்தாலும்
2.அது நம்மைத் தாக்கினாலும்
3.நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.”போக்கிரி…” என்று சொன்னவுடனே
2.நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது.
3.நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான்
1.நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
6.உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது
1.அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ
2.அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..”
3.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
4.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய்
3.அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறது. விஷத்தின் தன்மையை முறிக்க வேறு ஒரு விஷ முறிவு மாத்திரையைக் கொடுத்தால் விஷம் இறங்கிவிடுகிறது.

நம் சிறு நீரைப் பரிசோதிப்பதற்காக அதிலே ஒரு சொட்டு கெமிக்கல் விட்டால் உடலுக்குத் தகுந்தாற்போல் அதிலுள்ள அனைத்தையும் காட்டுகின்றது.

சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் சிகப்பு நிறமாக மாறுகிறது. அதிலே சர்க்கரை கொஞ்சம் அளவு குறைவாக இருந்தால் வெளுப்பு நிறமாக வருகிறது. மிகவும் கொஞ்சமாக இருந்தால் பச்சை நிறமாக ஆகிறது. ஒன்றுமே இல்லை என்றால் நீல நிறமாக இருக்கிறது.

அந்தக் கெமிக்கலைக் கலந்ததும் சிறு நீருக்குள் உள்ளதைப் பிரித்துக் காட்டும் நிலைக்கு வருகிறது.

இதே போன்று மகரிஷிகளின் நினைவலைகளை நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.பிறருடைய துயரத்தின் நிலையைப் பிரித்துக் காட்டும் நிலையும்
2.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது நம்மைப் பாதுகாக்கும் நிலையாகவும் அமையும்.

ஆகவே நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஒரு போக்கிரியின் உணர்வுக்குள் சென்றால் அது அவனைத் தடுமாறச் செய்யும் – அவனால் நமக்கு இடைஞ்சல் செய்யவே முடியாது…!

செய்து பாருங்கள்…!

உங்களுக்கு வரும் எத்தகைய தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் பகைமைகளையும் வேதனைகளையும் உங்களால் அடக்கி ஒடுக்க முடியும்.

நல்ல உணர்வைக் காக்கும் சக்தியாக நீங்கள் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றோம்.

கெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”

Chitrai festival

கெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”

திட்டியவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவாகின்றது. அவர்களை எண்ணினால் அந்தக் குணம் நமக்குள் குருவாக இயக்கி அவருடன் சண்டையிடச் செய்யும்.

ஒருவர் வேதனைப்பட்டு சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால் அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

அவர் கஷ்டப்படுகின்றார் என்று மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த வேதனையான உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று அடிக்கடி வேதனைப்படச் செய்து கடைசியில் நோயை உருவாக்கும்

சண்டை போடுபவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் எந்த அளைவிற்கு நாம் வேடிக்கை பார்த்து அவர்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்கின்றோமோ அதே போல
1.நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் நீங்க வேண்டும்,
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.அவர்கள் பெற்ற மெய் ஒளி பெற வேண்டும் என்று
4.கூர்மையான எண்ணங்களைச் செலுத்தி ஏக்க உணர்வுடன் நாம் இருந்தால்
5.அதுவே நமக்குள் குருவாக நின்று இயக்கி மெய் வழியில் அழைத்துச் செல்லும்.

இயற்கையின் சக்தி நம்மை எப்படி மனிதனாக வளர்த்ததோ இதைப் போல மனிதனாக வளர்ந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஒளியின் தொடரை நாமும் தொடர முடியும்.

இப்படி எடுத்துக் கொண்டால் தான் அந்த ஆற்றல்களைப் பெற முடியுமே தவிர நாம் அமைதி கொண்ட நேரத்தில் இதைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நடக்காத காரியம்.

ஏனென்றால் அமைதி கொண்டு தியானித்து எழுந்த பின் பிறர் செய்யும் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் நம் உயிர் அதனின் இயக்கமாக இயக்கி உணர்ச்சிகளைத் தூண்டி நுகர்ந்த உணர்வின் சொல்லாகவும் செயலாகவும் செயல்படுத்திவிடும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த இயக்கத்தையே உபயோகித்து “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்தினால் நம் எண்ணங்கள் புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து செல்லும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால்
1.தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காது.
2.விண்ணின் தொடர்புக்குள் நாம் செல்கிறோம்.
3.மகரிஷிகள் ஆற்றலைப் பெறும் தகுதி துரிதமாக வந்து சேரும்.
4.தீமைகளை அகற்றும் ஆற்றல்களைப் பெறுகின்றோம்.
5.மெய் ஒளி நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.
6.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திலேயே வாழத் தொடங்குகின்றோம்.

சந்தர்ப்பங்கள் நம்மை இயக்கினாலும் அதே சந்தர்ப்பத்தையே நன்மையைப் பெறும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற முடியும். மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

நம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

soul-cleaningநம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

 

இன்று பக்தியின் மார்க்கத்தில் சென்று நல்ல ஒழுக்கங்களைத்தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

நாம் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். அப்படி எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் வந்தால் அது வலு பெற்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு ஜாஸ்தி.

அந்த வலுவான நிலைகள் நுகர்ந்தபின் தீமையின் எல்லையை அறிகின்றோம். அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுப் பெறுகின்றது.

அந்த தீமை நமக்குள் விளையாது தடுக்க என்ன செய்கிறோம்? நமக்குள் இருக்கும் நல்லதைக் காக்க என்ன வைத்திருக்கின்றோம்?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையிலே ஒவ்வொரு நொடியிலேயும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வது.

அதைக் கடைப்பிடிப்பதில் “ஒன்றும் கஷ்டமில்லை..!”

நாம் புதிதாக வீடு கட்டி விடுகின்றோம். அடுத்தாற்போல் தூசி விழுகின்றது. அந்தத் தூசியை துடைக்காமல் விட்டால் என்ன ஆகும்?

வீட்டிற்குள் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அங்கு அதன் மீது அழுக்குப்பட்டால் “பிசு…பிசு…” என்று ஒட்டுகின்றது.

அந்த இடத்தில் மண்ணெண்ணெயைப் (KERSOENE) போட்டுத் தேய்த்தோம் என்றால் இந்தப் பிசு பிசுப்பான எண்ணெயை நீக்கி விடுகின்றது.

எண்ணெய் கொட்டிவிட்டது. அதை நான் கூட்டினேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் அழுக்கு ஒட்டுகின்றது என்று அப்படியே விட்டு விட்டுப் போகின்றோமா என்றால் இல்லை.

அதற்குத்தக்க உபாயத்தைக் கூட்டி நாம் துடைக்கின்றோம். முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுகின்றோம் அல்லவா…!

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாது எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் ஒட்டிக் கொள்கின்றது. இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமா வேண்டாமா…?

அதைச் சுத்தப்படுத்துவதற்காக உங்களுக்கு அந்தச் சக்தியை ஊட்டுவதற்குத் தான் ஞானிகளைப் பற்றிச் சொல்கிறோம்.
1.நீங்கள் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
2.ஞானியாக வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.

முன்னாடி பரவலாகச் சொல்லிக் கொண்டு வந்தோம். இப்பொழுது உங்களுக்கு முழுமையாக இணைத்துக் கொடுக்கின்றோம்.

தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

Souls cleaning

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

எப்படிப் பிரபஞ்சத்தில் வரும் சக்திகளைச் சூரியன் தன் அருகிலே வரும் பொழுது பாதரசத்தால் மோதி விஷத்தை பிரிக்கின்றதோ இதே போல மனித உடலில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகளிலே கலந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது.

நஞ்சை விலக்கிச் செல்லும் ஆற்றல் மிக்க உணர்வைக் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டினார்கள். மனிதனின் ஆறாவது அறிவு தான் கார்த்திகேயா.

நாம் வெறுப்பென்றோ வேதனை என்றோ கோபம் என்ற உணர்வுகளை நுகர்ந்தால் இந்த ஆறாவது அறிவால் “அறிந்து கொள்கிறோம் – கார்த்திகேயா…” என்று நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

பூமியில் மனிதனாகத் தோன்றியவன்
1.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நஞ்சென்ற நிலையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்த ஆற்றலை நாமும் பெற்று விண் செல்ல வேண்டும்.

புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரை “ஈஸ்வரா..” என்று நாம் எண்ண வேண்டும். கண்ணின் நினைவால் அங்கே இணைக்கப்பட்டுத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஈர்க்க வேண்டும். அவ்வாறு
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும்போது
2.நம் உடலுக்குள் தீமைகளை விளையச் செய்யும் விஷத் தன்மையான அணுக்களுக்கு
3.ஆகாரம் செல்லாது தடைபடுகின்றது.
4.(புருவ மத்தியில் – உயிரில் பட்டால் தான் எதுவும் இயக்கமாகும்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதே கண்ணின் நினைவலைகளை நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் முழுவதும் பரவி வரும் இரத்தங்களில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இரத்தங்கள் தூய்மையாகின்றது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை அடைந்து இதற்கு முன் நாம் நுகர்ந்த விஷத் தன்மைகளை நுகராது தடைப்படுத்திவிடுகின்றது.

அப்பொழுது உடலுக்குள் விஷத்தை உருவாக்கி அதை உணவாக எடுத்து வளரும் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது தடைபடுத்துகின்றது.

நம் ஆன்மாவில் இருக்கும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள்
1.உடலுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
3.அவைகள் எல்லாம் அனாதையாகின்றது.
4.அடுத்த கணம் அனாதையான தீமையின் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.
5.நம் ஆன்மா சுத்தமாகின்றது – இது தான் ஆத்ம சுத்தி என்பது.

ஒவ்வொரு நாளும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு குரோதம் போன்ற உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ இவ்வழியில் அவைகளை நீக்கி பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் வீரியம் அடைந்து உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா எதிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விடுகின்றது.
1.தொக்கியுள்ள விஷங்கள் அங்கே கரைக்கப்பட்டுப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்
2.என்றுமே ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையில் பேரானந்த நிலையை அடைகின்றோம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திரமான அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அவ்வாறு ஏழாவது நிலையைப் பெற்றவர்களைத் தான் சப்தரிஷி மண்டலம் என்பது.

அது தான் மனிதனின் கடைசி முடிவான நிலை.

“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

 

நினைத்தவுடன் நமக்குக் கோப உணர்வு வருகிறது. கடுமையான நிலைகளும் வருகின்றது. அதைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே நல்ல தண்ணீரை ஊற்றினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அழுக்கின் நிலை மாறத் தொடங்கும்.

அதே போல நம்முடைய முந்தைய வாழ்க்கையின் நிலையில் நாம் சேர்த்துக் கொண்ட அழுக்குகள் உடலுக்குள்ளும் நம் ஆன்மாவிலும் நிறைய இருக்கிறது.

அவையெலாம் நாம் அறியாமல் சேர்த்தவை.

நாம் உண்ணும் உணவில் தனித்துக் காரத்தைச் சாப்பிடும் பொழுது “ஆ…” என்று அலறுகின்றோம். வாய் வயிறு எல்லாம் எரிச்சலாகின்றது.

அதே போல் நாம் எடுத்துக் கொள்ளும் கோபமான உணர்வுகள் உயிரான ஈசனிடம் படும் பொழுது அந்த அணு சிசுக்களில் பட்டவுடன் ஆத்திரமான அலைகள் வீசத் தொடங்குகின்றது.

அப்பொழுது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் “ஆ…” என்று அலறச் செய்கின்றது.

1.அந்த அலைகள் உடலுக்குள் பட்டவுடன் எரிகின்றது
2.நம் எண்ணங்கள் மாறி எரிச்சலுடன் பேசச் சொல்கின்றது
3.நம் பார்வையும் எரிச்சலுடன் பார்க்கச் செய்கின்றது
4.நாம் செயல்கள் அனைத்தையும் தடைப்படுத்தச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு நச்சுத் தன்மை கொண்ட புகையை எழுப்பியபின் அது படர்ந்து காற்றிலே கலந்து பூமிக்குள் படர்கின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது புகையின் உணர்வு பிராணவாயுவுடன் கலந்து உடலுக்குள் ஊடுருவி காந்தத்துடன் இணைந்து உடல் முழுவதற்கும் இயக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் நல்ல குணங்களுடன் இருந்தாலும் எரிச்சலூட்டும் செயல்களை நாம் பார்த்தவுடன்
1.எண்ணத்திலே எரிச்சல்
2.செயலிலே எரிச்சல்
3,சுவாசத்திலே எரிச்சல்
4.கண்ணின் பார்வையிலே எரிச்சலாகின்றது.

இந்த எரிச்சலான உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்று நம் ஆகாரத்துடன் நஞ்சாகக் கலந்து உறுப்புகளுக்குள் தேங்கி நம் உடலை அதனின் இருப்பிடமாக்கித் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

நல்ல குணங்களை நம்மைச்  சிந்திக்க விடாதபடி தடைப்படுத்திக் கொன்டே இருக்கின்றது. உடலில் நோய் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்கள் அனைவரது உள்ளங்களிலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் மணங்கள் உமிநீராக மாறி
2.நல்ல அணுக்களாக உருவாகின்றது.
3.உடலில் உருவான நஞ்சான அணுக்களின் வீரியத்தை அடக்கி
4.அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது.
5.மகிழ்ச்சியான ஏற்படுகின்றது உடல் நலம் மன பலம் பெறுகின்றோம்.

அப்பொழுது நாம் சந்திக்கும் அனைவரது நிலைகளிலும் நாம் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் படர்கின்றது. நாம் கலந்து உறவாடும் அனைவருமே நம்மால் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

அவர்களிடம் மற்ற குறைகள் இருந்தாலும்
1.அந்தக் குறைகள் நீங்கி நிவர்த்தியாக வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது
2.நம்முடைய சொல்லாலும் மூச்சாலும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது
3.எல்லோரும் நலம் பெறும் சந்தர்ப்பமாகின்றது.

அதனால் தான் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி நினைவை மகரிஷிகளின் பால் செலுத்தும்படி சொல்கின்றோம்.

“தியானம்… என்பது இது தான்”

Remote spiritual power

“தியானம்… என்பது இது தான்”

எத்தனையோ அசம்பாவிதங்கள் கொடுமைகள் நடக்கின்றது…! என்று பத்திரிக்கை டி.வி. மூலமாக நாம் தினசரி பார்க்கின்றோம்… படிக்கின்றோம்…

படித்தவுடன் நம்மை அறியாமலே ஒரு பயமோ நடுக்கமோ ஏற்படுகிறது. நம் மனமும் பலவீனம் அடைகிறது. இதைப் போன்ற நிலைகள் எதிர்பாராமல் நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அதற்கொரு சக்தி வேண்டும் அல்லவா.

அருள் ஞானிகள் உபதேசித்த அந்த அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் ஒரு நிமிடம் எண்ணி ஏங்குங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து
1.தீமையை அகற்றும் ரிமோட் கன்ட்ரோல் ஆக
2.அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களைக் காத்திடும் செயலாக வரும்.

உதாரணமாக… நீங்கள் பஸ்ஸுக்குச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணித் “தியானித்துவிட்டுச் செல்லுங்கள்”.

நீங்கள் பஸ் ஏறப்படும் பொழுது
1.உங்கள் நினைவலைகள் எங்கே கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ
2.இந்த உணர்வுகள் இடைப்பட்ட நேரங்களில் பஸ் அடுத்து அது விபத்து ஏற்படுமேயானால்
3.நம்மை அந்தப் பஸ்ஸில் ஏறவிடாது.

அனுபவத்தில் பார்க்கலாம்.

“ரிமோட் கன்ட்ரோல்” என்ற நிலைகளில் நாம் எடுக்கும் ஞானிகளின் உணர்வுகள் இது வரும். “தியானம்… என்பது இது தான்”.

ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் தியானத்தின் பலன்களை நாம் பெறமுடியும். ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வுகளை அடிக்கடி எண்ணி அதை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மை அணுகாத நிலையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணம் நம்மைக் காக்கும்…!

இதைத் தான் நாம் எண்ணும் நல்ல குணங்களையே… “நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…” என்று சொல்வது.

எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை

Remote power energy

எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை 

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்?

திடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்துவிடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்றுவிடுகின்றது. நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்திவிடுகின்றது.

அல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் ஹார்ட் அட்டாக் (HEART ATTACK). ஹார்ட் அட்டாக்கிலே பலவிதம் உண்டு.

உறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.

ஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் செயலிழந்துவிடுகின்றதோ இதைப் போல நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் இயக்கங்களில் சிறு மூளைப் பாகங்களில் அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்.

டாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

இருதயத்தில் மூன்று வால்வுகளில் இருக்கக்கூடிய நிலைகளில் அதில் அடைப்படும் பொழுது வலி வந்து செல்லும்.

ஆனால் ஹார்ட் அட்டாக் என்பது உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது அதே மாதிரி சுருங்குவது விரியாது. அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது.

மடிந்துவிடுவார்கள். இது வேறு. ஹார்ட் அட்டாக் இத்தனைவிதமான நிலைகளில் வருகின்றது.

தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் திடீரென்று வந்தது என்றால் உடலை விட்டுப் போவது அல்ல. இந்த விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும்.

உயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஒளி படரவேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம்.

தியானிக்கும் பொழுது இதை எண்ணி எடுத்தால் எளிதில் பெற முடியும். அந்த மகரிஷிகளைத் தொடர்பு கொள்ளும் அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.

தலை வலி மேல் வலி கைகால் வலி என்று எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக்கொதிப்பு நீங்க வேண்டும் என்று எண்ணத்தை வலுப்படுத்தி எண்ணினால் அதையெல்லாம் மாற்ற முடியும்.

இந்தப் பழக்கத்திற்கு வரும் பொழுது தீமைகளை மாற்றி இனி எந்த விஷத்தன்மை வந்தாலும் அதை மாற்றியமைக்கும் வல்லமை நாம் பெறுகின்றோம்.

மற்றவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கலாமா…?

Divine Sages Light

மற்றவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கலாமா…?

உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களைக் கேவலமாகப் பேசினால் அதை ஆழமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறீர்கள். பதிவு செய்த பின் என்ன செய்கிறோம்?

என்னை.. இப்படிப் பேசினான் “கேவலமாகப் பேசினான்… கேவலமாகப் பேசினான்…!” என்று இதைத் தியானம் செய்கின்றோம்.

அவர் எப்படிக் கேவலமாகப் பேசினாரோ அந்த உணர்வு நமக்குள் வந்து அவர் நம்மைக் கேவலப்படுத்திய பிற்பாடு நம் சொல் செயல் எல்லாமே கேவலமான செயல்களைச் செய்யும் செயலாக மாற்றும்.

எப்படி இருக்கிறான்..? அவன் என்னை இப்படியெல்லாம் பேசினான்.. என்னைப் பார் நான் என்ன அப்படியா…? என்று அவன் சொன்ன மாதிரி நம்மையும் பேச வைத்துவிடும்.
1.அவன் பேசினான் ஒரு தரம்.
2.நாம கேட்டோம் பல நேரம்.
3.அந்தப் பல உணர்வு நமக்குள் வந்துவிடுகின்றது.

அவன் நம்மைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதைப் பற்றி அடுத்து நாம் பேசும் போதெல்லாம் நம்மையறியாமலே சொல்வோம்.

“பாருங்கள்…! என்னைப் பற்றி அவன் அப்படிப் பேசினான் இப்படிப் பேசினான் இகழ்ச்சியாகப் பேசினான்.. என்று அடுத்தவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்.
1.அவன் எபப்டி எப்படி நம்மைத் திட்டிக் காண்பித்தானோ
2அதே மாதிரி அதையெல்லாம் நாம் அப்படியே செய்வோம்.

என்ன…! இப்படி… நீங்கள் அசிங்கமாகப் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்?

என்னை அப்படியெல்லாம் பேசினான் அல்லவா…! என்று இங்கே நம்மிடல் கேட்பவர்களிடம் சொல்வீர்கள்.

அடுத்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பேசும் பொழுது அசிங்கமான நிலைகளை பேசும் உணர்வே நமக்குள் வந்து விடும்.

இன்னும் யாராவது அடுத்த ஆள் கேட்டால் நாம் மறுபடியும் அசிங்கமாகப் பேசுவோம். இது குருவாக வந்து விடுகின்றது.

எது…?

அப்போது அந்த உணர்வுகள் அசிங்கமாக வரப்போகும் போது இது குருவாக நமக்குள் வந்து அசிங்கமான செயலைச் செய்ய வைக்கும். அசிங்கமாகப் பேசச் செய்யும்.

கேவலமாகப் பேசுபவரின் உணர்வைப் பதிவாக்கினால் அவரைப் பற்றிப் பேசும்போது நாமும் அசிங்கமாகத்தான் பேசுவோம் – “நாம் தவறு செய்யவில்லை…” உணர்வின் இயக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஆகவே அதைப் போன்ற அசிங்கத்தை எல்லாம் துடைப்பதற்கு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அந்த உணர்வுகளை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டீர்கள் என்றால்
3.இது குருவாக வந்து விடும்.

யாம் உங்களுக்கு உபதேச வாயிலாக உணர்த்தும் அந்த மெய் ஞானிகள் வழியில் இந்தத் தியானத்தை நீங்கள் அடிக்கடிச் செய்தீர்கள் என்றால் இது குருவாக வந்து இந்த அசிங்கத்தை எல்லாம் போக்கிவிடும்.

உதாரணமாக “உடலில் புண் வந்துவிட்டது.. ரோகம் வந்துவிட்டது…” என்று இதையெல்லாம் திரும்பத் திரும்பச் பேசிக் கொண்டு இருந்தால் அதனாலேயே உடலில் கொப்புளம் வரும்; உடல் கொதிக்கும்; தலை வலி வரும்; காது குத்தும்; நெஞ்சு வலிக்கும்; வயிற்றில் வலிக்கும்.

இது எல்லாம் வரும்.

இப்படி வரப்போகும்போது வயிற்றில் வலிக்கிறது என்றால் அந்த நேரத்தில் யாராவது முன்னாடி வந்து சந்தோஷமாகப் பேசினால் எப்படி இருக்கும்?

அவர்கள் மேலே வெறுப்பாக வந்து கொண்டு இருக்கும்.

அவர்கள் மேலே வெறுப்பாகி விட்டால் அடுத்தாற்போல் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகப் பேசுவோம். அப்பறம் இது குருவாக வரும்.

எது…? வெறுப்பாகப் பேசும் உணர்வு தான் உங்களுக்குக் குருவாக வரும்.

குருநாதர் இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து “அவர்கள் நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது…?” என்று பார்க்கச் செய்து என்னைக் கஷ்டப்பட வைத்தார்.
1.நீ பார்ப்பவன் உணர்வுகள் எல்லாம் உனக்குள் வந்து
2.என்ன வேலை செய்கிறது? என்று பார்க்கச் சொன்னார்.

இப்படி அதையெல்லாம் நான்… “பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான்” உங்களிடம் சொல்கிறேன்.

நீங்கள் உட்கார்ந்து கேட்கிறீர்கள். நான் அலைந்து திரிந்து சுற்றித்தான் தெரிந்து கொண்டேன். நீங்கள் உட்கார்ந்து கொண்டே இதைத் தெரிந்து கொள்கிறீர்கள். நான் காடு மேடெல்லாம் சுற்றிக் கஷ்டப்பட்டு எனக்குள் அறிந்து கஷ்டத்தையெல்லாம் தெரிந்து வந்தேன்.

உங்களிடம் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுத்து உங்கள் தீமைகளை எல்லாம் நீங்கள் நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன்.

குருநாதர் எனக்கு அப்படிக் கொடுக்கவில்லை. நான் உங்களுக்கு இப்படிக் கொடுக்கின்றேன். இதை உதறிவிடாதீர்கள்.

அந்த மெய்ஞானி உணர்வை உங்களுக்குள் குருவாக ஏற்று அந்த உணர்வின் தன்மை வளர்க்கும் போது அவர்கள் மெய் ஒளி பெற்றதைப் போல அதை நிச்சயம் நீங்களும் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன். இதையே நீங்கள் மீண்டும் எண்ணுவீர்கள் என்றால்
1.அது குருவாக வந்து உங்களுக்குள் நல்வழி காட்டும்
2.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றும்.
3.மெய்ப் பொருள் காணும் உணர்வை வழிகாட்டும்.
4.அதனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
5.மெய் ஞானிகளுள் ஒருவராக நீங்களும் ஆக முடியும்.

இந்தப் பயிற்சியின் மூலம் புருவ மத்தியில் எண்ணி “ஒரு நிமிடத்தில்” தீமைகளை அகற்ற முடியும்

om shanti brahma

இந்தப் பயிற்சியின் மூலம் புருவ மத்தியில் எண்ணி ஒரு நிமிடத்தில் தீமைகளை அகற்ற முடியும்

தீமைகளை அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?

1.ஓ..ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி நினைக்க வேண்டும்.

1.தீமைகள் மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.

இதில் உங்களுக்கு என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில் வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.

அதே மாதிரி ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப் பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.

ஏனென்றால் நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.

நாம் கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்  எடுத்து நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.

ஆனாலும் நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பிற்பாடு என்ன செய்கிறது?

உதாரணமாகத் தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால் சுடாமல் என்ன செய்யும்? சுடத்தானே செய்யும்

“சுருக்…” என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.

அதே போல் சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.

முதலில் கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும் “வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.

சுட்டுவிடும் என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை பொத்துப் போகுமா… இல்லையா…?

தண்ணீராகத்தான் தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.

விரலை விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது  முதலிலேயே முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?

கை வெந்து போகுதா… இல்லையா…?

இதே மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அதாவது உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

தண்ணீர் சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப் போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!

அப்பொழுது உடனே என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.

1.நம் உயிர் என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப் பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால் பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான் அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.

சாபமிட்ட உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம் வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள் இழுக்கின்றது.

அப்பொழுது அதைத் தடுக்க வேண்டும்

தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.

வலுவான பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?

உள்ளுக்குள் இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…” போகின்றது,

“ஒரு நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச் சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

ஏனென்றால் நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.

சாபமிடும் உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து வைத்துக் கொள்கிறது. யார்? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.

நமது கண் என்ன செய்கிறது?

அவனைப் பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது…?

கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் உயிர் கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.

உயிருக்குக் கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும் அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்.

செய்து பாருங்கள்…!

இதைப் போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ… என்னமோ பேசுகிறான்…!  என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.

அடுத்தது என்ன எண்ண வேண்டும்?

1.பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.

ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற  வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?

1. உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி

1.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது. இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி” இது தான். செய்து பாருங்கள்.