பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

 

சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.

அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.

பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.

உயிரான ஒளி இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.

இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”

தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது… சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.

வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.

காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.

ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும் பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”

இணையக்கூடிய சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.

உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.

ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம் நமச்சிவாய…!”

அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”

சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.

தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.

அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?

இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.

1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது – காயத்ரி.

போகாப்புனல்

போகாப்புனல்

 

நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது அது நன்கு வலுப்பெறுகின்றது.

இவ்வாறு நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான் விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும் “கூர்மை அவதாரம்… வராக அவதாரம்…” என்பது.

அந்த வலுப்பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த ஞானிகள் எவ்வாறு ஒளிச் சரீரம் பெற்றார்களோ அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து வராக அவதாரமாக நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதன் நிலையாக நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பருகினால்தான் விண் செல்ல முடியும்.

இல்லையென்றால்
1.இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி
2.இந்தத் தெய்வம் செய்யும் அந்தத் தெய்வம் செய்யும் இந்த மனிதர் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை
3.நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால் உடலுக்குள் இது சாகாகக் கலையாக இந்தப் பூமியிலேதான் நாம் சுழல முடியும்.

ஆனால் வேகாக்கலை என்றும் “போகாப்புனல்…” என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.

1.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள் செலுத்தினால் “வேகாக்கலை” அடைந்து
2.இனிப் பிறவியில்லா “போகாப்புனல்…” அதாவது இன்னொரு பிறவியில் நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கி அதை உயிர் வழி கவர்ந்து அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது இதற்கு “ஆத்ம சுத்தி” என்று பெயர். அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.

உங்கள் வாழ்க்கையில் துயரங்களோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அவசரமோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும் உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் அடிக்கடி சேர்த்து வரவேண்டும்.

அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால்
1.வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால் அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து மணி முத்துக்களை விளையச் செய்கின்றதோ
2.அதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால் அது வலுப் பெற்று “ஒளியின் முத்தாக உங்கள் உணர்வுகள் விளைந்து…” உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகப் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைவீர்கள். கல்கி அவதாரமான பத்தாவது நிலையை அடைவது திண்ணம்.

“வேகாக்கலை போகாப்புனல்…” என்று வள்ளலார் பாடியது போல நீங்கள் அனைவரும் அந்த நிலை அடைய முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும் இதற்கு முன் உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ மனக்கவலையோ மன வேதனையோ இதைப் போன்ற நிலைகளிலிருப்போர் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். “எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படர வேண்டும்” என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.

இது வலுப் பெற்றதாகி இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிவிடும்.

நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.

அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான் ஞாபகப்படுத்துகின்றோம்.

1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
2.அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம்.
3.அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

கூட்டமைப்பாக இருந்து கூட்டுத் தியானங்கள் செய்யும் பொழுது அதன் வழியாகத்தான் அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்.

ஆகையினால்… எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக யாம் சதா தவம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

 

சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.

இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!

நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.

ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.

புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?

அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

நான் “என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.

கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.

அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.

தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.

அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்…
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.

உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.

அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.

எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.

கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.

ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.

ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற முடியும்.

வேகா நிலை

வேகா நிலை

 

நிறையப் பேர் சொல்வார்கள். நாங்கள் சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குச் சாகாக் கலை தெரியுமா…? என்று எம்மிடமே கேட்டார்கள்.

போகர் சொன்னாராம் சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில் சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால்
1.அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி
2.போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன்.

உங்களுக்கு என்ன தெரியும்…? என்றார்கள்.

இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் “என்னமோ எதிலோ குறையாகி விட்டது,.. எனக்கு இப்படி வந்து விட்டது…!” என்பார்கள். இது சாகாக் கலை.

யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வை எண்ணி அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு அடுத்தவரும்` போவார்.

அங்கு போனவுடன் சாகாக் கலையில் அவரும் இதே கதியாக அதைச் செய்தேன்… இப்படியாகி விட்டதே…! என்று பைத்தியம் பிடித்த மாதிரி ஆகி… இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே இருக்கின்றவனை எல்லாம் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் கடைசியில் என்ன ஆவார்கள்…?

இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில்
1.நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில் மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக
2.நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும்… இது சாகாக் கலை.

யாம் இப்பொழுது உபதேசிப்பது “விஜய தசமி…!” பத்தாவது நிலை.. அடுத்து ஒளியாகி விட்டால் பிறவி இல்லை. இது வேகாக்கலை…!

ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது…? சரீரம் கருகுகிறது… ஆனால் உயிர் அழிகிறதா…? இல்லை. உயிர் வேகா நிலை பெற்றது.

அணு குண்டு போட்டுக் கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம்.

பாறைக்குள்ளிருக்கும் கதிரியக்கத்தினால்தான் தன் சக்தி அதாவது… தன் இனமான சத்து எதனுடன் கலந்து இருக்கின்றதோ அந்த உணர்வைத் தனக்குள் எடுத்து அது பாறையாக விளைகின்றது.

அதற்குள் அதன் இயக்கத்தின் வலுக்கொண்டு… அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.

இதுவே நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து… மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மையைப் பிளந்து… அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தை எடுத்துச் சேமித்து மீண்டும் அணுகுண்டாக வெடிக்கச் செய்யப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.

அது மோதியபின் புயலைப் போன்று தான் எதனை உருவாக்கியதோ அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டுத் தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து சத்தை ஒளியாக எடுத்துக் கொள்ளும். ஆக இது கதிரியக்கச் சக்தி.

1.விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் தன்மை கொண்டு வந்தாலும்
2.அதைப் போலத்தான் மெய்ஞானிகள் உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு ஒளியாக மாற்றி
3.எத்தகைய உணர்வு வந்தாலும் அதைப் பிளந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது
4.அதுவே “வேகாக் கலை…!” – வேகா நிலை.

இப்பொழுது தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகி விட்டாலும் அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும் உயிரை ஒன்றும் செய்ய முடியாது. “உயிர்” வேகாக் கலை பெற்றது.

அணுவைப் பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது தன் இனத்தைப் பெருக்குவது போல அந்த மெய் ஞானி தன் உணர்வினை ஒளியாக மாற்றி
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக் கலையாக
2.எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து அதனை ஒளியாக மாற்றி
3.என்றும் பதினாறு என்ற நிலையில் (வேகாநிலை அடைந்து) சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணு குண்டை வெடித்தபின் எந்த உலோகமாக இருந்தாலும் அதைப் பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போலத்தான் அந்த மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும்… தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் அவர்கள் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி… பத்தாவது நிலை பெறுவதை நினைவுபடுத்தும் நன்னாள்.

ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான் பத்தாவது நிலை அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டறிந்த அனைவரும் கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுங்கள்.

அனைவரும் உயிருடன் ஒன்றி வேகா நிலை பெறுங்கள்…!

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்…”

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்…”

 

நமது பூமியே நமக்குத் தாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது. அது போன்று நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய் பூமியில் படர்கின்றது.
1.இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும்.
2.இதில் வாழும் கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.

பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால் அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர். ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது அதனை நுகர்பவர்கள் மகிழும் நிலை வருகின்றது.

நமது பூமியே நமக்குத் தாய் என்கின்ற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்…? என்ற நிலையில் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இந்தப் பூமியில் பிறந்த நாம்… “தாயின் பிள்ளைகள்…” என்று ஒருங்கிணைந்து தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கிறோமோ… தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ… இது போன்று தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு “நாம் அனைவரும் சகோதரர்…” என்றும் இன பேதமின்றி மத பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி நாம் வாழ்நிடுவதே நலம்.

1.நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று எண்ண வேண்டும்.
2.இந்த எண்ணம் நம் பூமியைக் காக்கும்.

பூமித்தாயைக் காப்பது போன்று நம்மை ஈன்ற தாயும் மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும்.

நமது தாய் தந்தையர் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நம்மிடத்தில் அன்பைக் காட்டி நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் நமக்குச் செய்து கொடுத்தனர்.

ஆகவே நாம் நம் தாய் தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெற வேண்டும்.
1.தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால் தாயின் பேரன்பைப் பெற வேண்டும்.
2.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கி மெய் ஞானிகளின் உணர்வை உங்களில் வளர்த்து அன்னை தந்தையைப் பேரின்பப் பெருநிலை பெறச் செய்ய வேண்டும்.

அன்னை தந்தை அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால் வெளிப்படும் மூச்சலைகள் இந்தப் பூமியில் படர்கின்றன.
1.நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால்
2.தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

“பத்து மைல் சுற்றளவிற்கு…” துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொருவரும் பரவச் செய்ய முடியும்

 

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்திலும் கலந்து உடலுக்குள் செல்வதால்… உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது.

இது இயற்கையின் செயல்களில் ஒன்று..

ஆனால்…
1.விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள்
2.இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக அதை மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

தியான வழியில் உள்ளவர்கள் அனைவரும் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால் அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “நாம் அனைவருமே ஒருங்கிணைந்து…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால்
1.ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
2.நாம் விடும் மூச்சலைகளால் இந்தப் பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்தப் பூமியில் மனிதர்கள் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வலைகள் பரவிப் படர்ந்துள்ளன.

நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால் நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

அதாவது கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது “நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி…” இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது. இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுத்துக் கவர்ந்து
2.மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அந்த அலைகள்
3.நமது காற்று மண்டலத்தில் குறைந்த பட்சம் “10 மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது.
4.அந்த மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்துக் கயிறாகத் திரித்து ஒரு கனமான பொருளைத் தூக்குவது போன்று
1.நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
2.அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளாக நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் பரவும்.

சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தாங்கியிருந்தாலும் நாம் வெளியிடும் மூச்சலைகள்
1.அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக “10 மைல்” அளவுக்காவது இது பரவும்.
2.அப்போது இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்குத் தீங்குகள் இல்லாத நிலைகளும்
3.அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன… நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்தச் சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்.

1.நம் ஊர் மக்கள் அனைவரையும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறச் செய்து
2.இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரையும் நாம் இணைந்து வாழச் செய்வோம்.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ஒளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.

சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ அதே போல…
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைபனியாக தனக்குள் மாற்றுகின்றது.

அது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது…
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக… “இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.

நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ… (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது… அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.

ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை “குரு…” என்று அழைப்பார்கள்.

வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!

இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை… “மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி… ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.

கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தாவர இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”

குரு காட்டிய வழியில் “மெய் உலகைப் படைப்போம்…”

 

இன்றைய நிலையில் பூமியில் வாழும் உயிரினங்கள்… மிருகங்களிலிருந்து மனிதன் வரை மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம்
1.மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்றதாகி
2.மனித உடலில் விளைய வைத்த அந்தச் சிந்தனையற்ற உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.
3.அத்தகைய உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.

“நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து” நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும்… நன்மை பயக்கும் சொல்லாகவும்… செயலாகவும்… நமக்குள் வளர வேண்டும்.

நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும் அது வளர்ந்திட வேண்டும்.

1.அன்றைய மெய்ஞானிகள் எல்லோரும் எவ்வாறு ஒன்று கலந்து உறவாடினார்களோ
2.அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுபட்ட உணர்வாகச் செயல்பட வேண்டும்.

ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்துத் தீமையற்ற நிலையாக வளரும் நிலைக்கு வர வேண்டும்.

நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும்
1.சகோதர உணர்வுடன் வாழ்ந்திடும் உணர்வாக நாம் இடும் மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான்மாக்களுக்கும் மெய்வழி பெறும் நிலை ஏற்படும்.

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து… அதாவது
1.நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ அதை உணவாக்கிய நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து
2.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
3.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.

அதன் மூலம் தாவர இனங்களும் சத்தான நிலைகளில் வளர்ந்து அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வினைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமைய வேண்டும்.

ஆகவே… “மெய் உலகைப் படைக்கும் உணர்வாக” உங்களுக்குள் விளைந்து நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள தீமைகளை நீக்கிடும் சக்தியாக மலர வேண்டும்.

எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் சென்று அதன் வழிகளிலே நல் வினைகளைச் சேர்த்து அது வினைக்கு நாயகனாக ஆகி
1.அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து
2.என்றும் நிலையான “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைந்து மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையில்தான் இதை உணர்த்துகின்றோம்.

நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைத்து… உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
1.நமது குருநாதர் வழியில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
2.மெய் உலகைப் படைப்போம்…!

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

“உங்கள் மூச்சலைகளால்…” விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்

 

இன்று கெமிக்கல் கலந்த அணுக்களை… “செல்கள்… அதாவது சிலிகன்களைப் போன்று…” நமக்குள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்து விட்டனர்.

1.விஞ்ஞான அறிவு கொண்ட கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றல்
2.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இன்று அதிகமாகப் பதிந்து விட்டது.
3.அதிலிருந்து நாம் திசை திரும்பவே இல்லை.
4.மனிதன் என்ற எண்ணமே இங்கே போய்விட்டது,
5.இயந்திர வாழ்க்கை வாழும் நிலைக்கு இன்று நாம் வந்து விட்டோம்.

சிலிகனைப் போன்று நமக்குள் பதிவு செய்த நிலைகளில் “இருந்த இடத்திலே இருந்து கொண்டே… ஆட்டிப்படைக்கும் தன்மைக்கு வந்து விட்டது இன்றைய விஞ்ஞானம்…! (இதை யாரும் மறுக்க முடியாது)

மனிதனுடைய சிந்தனைகள் சிதறுண்டு போகும் நிலைகளும் சூரியனே சுக்குநூறாகிக் கரையும் நிலைக்கும் இந்தப் பூமியினுடைய நிலைகளும் பொசுங்கிப் போகும் நிலைக்கு வருகின்றது அல்லது இருள் சூழ்ந்த நிலைக்கு வருகின்றது.

பூமியில் அணுகுண்டுகள் வெடித்தால் இவன் நீருக்குள்ளும் நீர் நிலைகளுக்குள்ளும் பதித்து வைத்திருக்கின்ற லேசர் கதிரியக்கங்கள் அணுக்கள் வெடிக்கும். அதை அப்புறப்படுத்துவதற்கு முயற்சி எடுக்கின்றனர்.

அவ்வாறு எடுத்தாலும் அணு நீர் மூழ்கியின் தன்மையில் அந்த இயந்திரத்திற்குள் பாய்ச்சி இருந்தாலும் ஒவ்வொரு இயக்கத்திற்குள்ளும் அந்த அணுக் கதிரியக்கங்கள் தாக்கிடாதபடி அதை நீர் நிலைகளில்தான் மறைக்க வேண்டும்.

அல்லது வேறொரு மண்ணுக்குள் பதிய வைத்தாலும் பூமியின் வெப்ப அலைகள் கலக்கப்பட்டு இந்த அணுக்கள் மண்ணுக்குள் பூமிக்குள் வெகுதூரம் ஊடுருவி வரும் நிலைகள் வருகின்றது.

அணு உலைகள்… அது போன்ற மற்ற இடங்களிலிருந்து வருவதை
1.அந்தக் கசிவுகளை… கழிவுகளை எல்லாம் மண்ணுக்குள்ளே மறைக்க வேண்டுமென்று இவன் எண்ணுவான்.
2.ஆனால் இந்த அணுக்கதிரியக்கங்கள் பூமிக்குள் சென்றவுடன்
3.இயற்கையின் துடிப்பு கொண்டு கதிரியக்கச் சக்தியை அதிகமாகக் காட்டும்.
4.எதிர்நிலையான நிலை வரப்படும்போது பூமியில் நிலநடுக்கம் ஏற்படும்… எல்லாமே போய்விடும்.

இந்த அளவுக்குத்தான் இன்றைய உலகின் நிலை இருக்கின்றது.

இயற்கையின் நிலைகளை அசுத்தப்படுத்திக் கொண்டு… மனித உணர்வுக்குள்ளும் அதைப் பதியச் செய்து… இன்று மனிதன் என்ற நிலையே கூண்டுடன் அற்றுப்போகும் நிலை வருகின்றது.

ஏகக் காலத்தில் குண்டுகள் வெடித்தாலும்… வெடித்த நிலையில் புகை மண்டலங்களாகக் குவியப்பட்டுச் சூரியனுடைய ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த கதிரியக்கங்கள் படாதபடி
1.பூமியில் இருக்கக்கூடிய நீர் வளங்கள் அனைத்துமே உறையும் தன்மை பெறும்.
2.இங்கே நாம் இருக்ககூடிய நிலைகள் அனைத்துமே உறையும் தன்மை வருகின்றது.

இதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் சூரியனுடைய கதிர் வெப்பங்கள் கலந்தவுடன் இதிலிருந்து ஆவியாக வெளிப்படுத்தி இதே உணர்வின் தன்மைகள் சூரியனே மாறுபடும் காலம் வருகிறது. மனிதனாலே இந்தப் பிரபஞ்சமே சூனியமாகும் காலம் வந்துவிட்டது.

1.யாம் சொல்வது உங்களுக்குப் புதிராக இருக்கலாம்.
2.ஆனால் விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு நாளைக்கு இப்படி வரப்போகிறது என்று சொல்வார்கள்.
3.எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… யாம் சொல்வது (1989 ஆம் வருடம்) உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்.

நமது குருநாதர் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஊடுருவி மனிதனுடைய நிலைகள் எவ்வாறு இருக்கின்றது…? அதிலே நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று எமக்கு உபதேசித்தார்.

ஆகையினாலே இன்று மனித வாழ்க்கையினுடைய நிலைகளை விடுத்து “இது சரி… இது தப்பு…!” என்று வரவேண்டாம். குறைகளைக் காண வேண்டாம்.

நாம் அனைவரும் மெய் ஒளியைக் காண வேண்டும். மெய்யைக் காண்போம். மெய்யுணர்வின் தன்மையை நாம் பெறுவோம். இதிலே நாம் அனைவரும் “ஓரே குடும்பம்… ஓரே நிலை தான்…”

எத்தகைய இருள் வந்தாலும் உடனடியாக அதை மாற்ற வேண்டும். அதாவது மகரிஷிகளின் அருளாலே அந்த இருள் நீங்க வேண்டும்… நாம் அனைவரும் ஒளி நிலை பெற வேண்டும் என்ற உணர்ச்சிகளைக் கூட்டுவதற்குத் தான் குருநாதர் ஆணையை யாம் செயல்படுத்துகிறோம்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்த உணர்வின் ஒளிகள் நமக்குள் ஒன்றாக இருக்க வேண்டும்.

1.நாம் இடும் மூச்சலைகள் மழை நீராகக் கொட்ட வேண்டும்.
2.அப்படிப் பெய்யும் மழை நீரால் விஷக் கதிரியக்கங்கள் மாய வேண்டும்.
3.அத்தகைய விஷத் தன்மைகளை நீக்கும் ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
4.அந்த மெய் உணர்வைத் தூண்டும் நிலைகளுக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.