வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

 

என்னுடைய உபதேசத்தை எத்தனை பேர் எத்தனை விதமாக எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் எத்தனையோ பேர் சொத்துக்கும் சுகத்திற்கும் தான் ஆசைப்படுகின்றார்கள்.

குருநாதர் என்னிடமும் இப்படித்தான் வினா எழுப்பினார்…! அழியாச் சொத்து கிடைக்கும்டா…! என்றார்.

ஓய்… தெலுங்கு ராஜ்யம்…! இங்கே வாடா…! என்று என்னைக் கூப்பிட்டார்.

நான் போனேன்.

வெங்கடாஜலபதியை தோஸ்த் பண்ணிக்கோ… நிறையச் சொத்து கிடைக்கும்…! என்று சொன்னார்.

ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ…
1.என்னை காப்பாற்றுவதற்கு ஞானம் வேண்டும்.
2.ஞானவான் என்று முருகனைச் சொல்லி இருக்கின்றார்கள்…
3.ஆகையினால் முருகன் தான் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.

அவன் ஆண்டிப்பயல்… ஒன்றும் கொடுக்க மாட்டான்…! ஆனால் வெங்கடாஜலபதியைப் பிடித்தால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்…! என்று இப்படி எல்லாம் என்னைச் சிக்கலான நிலையில் சோதிப்பார் குருநாதர்.

ஆறாவது அறிவு ஞானம். வாழ்க்கையில் மெய் ஒளியின் தன்மையை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இதைச் சொல்லி இருக்கின்றார். கேள்விகளைப் போட்டு என்னை மடக்கி ஆசையைத் தூண்டுவார்
1.உடல் இச்சைக்குக் கேட்கின்றேனா அல்லது
2.அருள் ஞானத்திற்கு என்னுடைய எண்ணங்கள் செல்கின்றதா…? என்று பல பரீட்சைகள் வைப்பார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…? எனக்கு முருகன் தான் வேண்டும் என்றேன்.

இல்லை… வெங்கடாஜலபதியை நீ வைத்துக் கொள்…! முருகன் என்றால் ரொம்பக் கஷ்டப்படுவாய் என்றார்.

முருகனை வைத்து எனக்குக் கஷ்டம் வராது…! என்பேன்.

அடிக்கடி இரண்டு பேருக்கும் இப்படி வாக்குவாதம் வரும்.

1.குருநாதர் பைத்தியக்காரத்தனமாகத்தான் பேசுவார்.
2.ஆனால் அத்தனையும் பொருள் பொதிந்ததாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் இந்த மாதிரி உருவாக்குவார்.

ஆகவே அதிகாலையில் விழித்தவுடன் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும். ஆன்மாவில் பட்ட அழுக்கைக் காலையில் போக்கப் பழக வேண்டும்.

அதிகாலை 4 மணியிலிருந்து ஆறரை வரையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வருகின்றது. அந்த நேரத்தில் நாம் அதை எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உபதேசமே அடிக்கடி கொடுப்பது. எனக்கு
1.குருநாதர் இப்படித்தான் கொடுத்தார் அந்தச் சக்தியை எடுக்கவும் சொன்னார்.
2.உங்களுக்கும் அதையே தான் கொடுக்கின்றேன்

எத்தனை பேர் நீங்கள் அதிகாலையில் எண்ணி… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

ஆனால் வெறும் உடல் அசைக்காக வேண்டி சொத்து கிடைக்கும் உடல் நலம் கிடைக்கும் என்ற நோக்கத்தில்… சாமியைச் சந்தித்தோம்…! சாமியிடம் ஆசிர்வாதம் கேட்டோம்…! என்றால் அது சிறிது நாளைக்குத் தான் இருக்கும். ரொம்ப நாளைக்கு இருக்காது.

உடலில் ஆசைகள் கூடிக் கொண்டே போகும். கிடைக்கவில்லை என்றால் வேதனை என்ற விஷம் வரும்… பின் நல்ல குணங்களைக் காக்காதபடி அழித்துச் சென்று விடும்.

“இது எல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலைகள்…”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த அதிகாலை நேரத்திலே எடுத்துப் பழக வேண்டும்… “படுக்கையிலே இருந்தாலும் கூட…!”

ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டுங்கள். அம்மா அப்பா ஆசி வேண்டும் என்று அடுத்து எண்ணுங்கள். பின் உயிரை வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படரர வேண்டும் என்ற நினைவை
3.உடலுக்குள் திரும்பத் திரும்ப செலுத்திக் கொண்டே இருங்கள்.

இது மிகவும் முக்கியமானது.

ஸ்ரீனிவாச அவதாரம்

ஸ்ரீனிவாச அவதாரம்

 

கொங்கண முனி தன் அவதாரம் ஸ்ரீனிவாசனுள் செயற்பட்ட அன்றைய தினம் என்றும் போல் புலர… மாடுகள் மேய்க்கும் சிறுவர்களுடன் மாட்டை ஓட்டிச் செல்லும் ஸ்ரீனிவாசனும் அம்மையிடம் அன்றும் ஆசி பெற்று… மகிழ்வுடன் சென்று கொங்கணர் புற்றருகே விளையாடினான்.

மாடுகள் அன்று தறிகெட்டு ஓடும் நிலையில் மற்ற சிறுவர்கள் ஸ்ரீனிவாசனை தனியே விட்டு விட்டு மாடுகளை திருப்பிக் கொண்டு வரச் சென்ற பொழுது தனித்திருந்த ஸ்ரீனிவாசனுக்கு ஏதோ ஒன்று ஆங்கு நிகழ்ந்தது. (என்ன என்று புலப்படுத்தாத சூட்சுமப்படுத்தி மறைத்தார்கள்).

மயங்கிச் சாய்ந்த ஸ்ரீனிவாசன் கொங்கணப் புற்றருகே மிக அருகில் புற்றுடன் ஒட்டியவாறு அமைந்திருந்த ஓர் பள்ளத்தினுள் வீழ்ந்து செடிகளால் மறைக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கலுற்றான்.

இச்செயலை அருகிலிருந்த பசு கண்டு புற்றருகே சென்று நின்று கொண்டு கத்திக் குரல் கொடுக்க மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு அங்கே வர ஸ்ரீனிவாசனைக் காணாமல் தேடும்பொழுது ஸ்ரீனிவாசனைக் காணாத தன்மை கொண்டு திரும்பிச் செல்லத் தொடங்க அந்த ஓர் பசு மட்டும் செல்லாமல் அங்கே தங்கிவிட்டது.

மாட்டைக் காணாமல் தேடிவரும் மாட்டின் சொந்தக்காரன் அது காட்டுப்பகுதி ஆனதால் தகுந்த ஆயுதங்களுடன் மாட்டுக்கார சிறுவன் சொல்லிய இடமாகிய அப்புற்றை அடையாளமிட்டு தேடிக் கொண்டு வந்தான்.

அப்படி வருகின்ற காலகட்டத்தில் புற்றருகே பந்தலிட்டு சிறுவர்கள் கோவிலாக்கி விளையாடிய அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.

மாலைப் பொழுதில் பால் தரும் பசு தன் கன்றின் நினைவில் புற்று மேல் நின்று பாலைச் சொரிய தானாக நிகழ்ந்த அச்செயலினால் உண்மை புலப்படாத மாட்டுக்காரன் கோப மேலீட்டால் தடி கொண்டு மாட்டி அடித்து விரட்டினான்.

அதற்குப் பின் மாடு மேய்க்கும் சிறுவர்கள் பந்தலிட்டு புற்று மேல் கோவில் ஆக்கிய நிலை கண்டு மேலும் அதிகக் கோபம் கொண்டு மாட்டுச் சிறுவர்கள் மேல் பொங்கிய கடும் கோபம் இப்பொழுது கொங்கணப் புற்றின் மீது திரும்ப… கையில் கொண்டு வந்திருந்த பலமான ஆயுதத்தினால் பந்தலை உடைத்து எறிந்து விட்டு “அப்புற்றையே இடிக்கத் தொடங்கினான்…”

பண்டு வினைப் பயன் (பண்டைய கால) வந்துறுத்த மாட்டுக்காரன் செய்த இச்செயல் அவனது கடும் கோபம் மாட்டின் பால் வீணாய்ப் போனதாலும் சிறுவர்கள் மாடுகளை ஒழுங்காகக் கவனியாமல் விளையாடினார்கள் என்றெல்லாம் கருத்தில் கொண்டு… அத்தனையும் இப்புற்று இனி இங்கிருந்தால் மீண்டும் அதே செயல்நிலை தொடரும் என்ற எண்ணினான்.

அப்போது கோபம் கொண்டு சுய அறிவு நீங்கிப்போன மாட்டின் சொந்தக்காரன் கரத்தில் இருந்து நழுவி விழுந்த அக்கனமான ஆயுதம் புற்றருகே இருந்த பள்ளத்தில் வெகுவேகமாகப் பாய்ந்து சென்று ஏதோ மயக்க கதியில் துயில் கொண்டுள்ள ஸ்ரீனிவாசன் தலை மீது விழுந்து தலை பிளந்து உயிர் பறித்தது.

பரிசுத்தவானாகிய ஸ்ரீனிவாசன் தன் சரீரம் செயல் கொண்டிட காத்திருந்த கொங்கண மாமுனி வெளியேறும் அவ்வுயிர் ஆன்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு பரிசுத்த ஆவி ஆகிய தன் உயிர் ஆத்ம ஒளிகாந்தத்தை அவனுள் பாய்ச்சி உட்சென்றார்.

“எந்த அவதார நோக்கமோ” அது நடைபெறும் செயல் நிலைக்குத்தானே ஸ்ரீனிவாச உருக்கோலம் கொண்டு ஜடாக்கினி ஜெபத்தால் வீறு கொண்டு பள்ளத்தினுள் இருந்த சடாரென எழுந்து நிண்றார்.

கனவில் கூட இத்தகைய காட்சியை கண்டிராத அம்மாட்டின் சொந்தக்காரன் ஆயுதம் கை நழுவி அப்பள்ளத்தில் விழ்ந்த ஒரு கணத்தில் திகைத்தவன் திகைப்பு தொடர்போல் நடக்கும் அக்கண நேர சம்பவத்துள் தலையில் சொருகப்பட்ட ஆயுதத்துடன் குருதி கொப்பளித்து வழிந்தோடி வர செக்கச் சிவந்த குருதி உடலெங்கும் வழிந்தொழுக சிவந்த நிற உடலுடன் விருட்டென எழுந்த ஸ்ரீனிவாச அவதாரத்தைக் கண்டு திகைப்படைந்தான்.

முடிவில் பய உணர்வு ஆட்கொள்ள “ஆ” என அலறிய மாட்டின் சொந்தக்காரன் வெல வெலத்துப் போய் மிக மிக பயந்து நடுங்கி ஓட்டம் எடுத்து ஓடும் பொழுதே மயக்க நிலையில் விழுந்தான்.

அதைக் கண்ணுற்ற கொங்கண ஸ்ரீனிவாச நாயகன் எப்பொழுதும் எண்ணி வந்த தாய் சக்தி அழைத்திடும் நிலை அறிந்து, தலையில் தைத்த ஆயுதத்தைப் பறித்து அகற்றிவிட்டுத்
1.தான் ஏற்ற ஸ்ரீனிவாச அவதார சரீரத்தின் நலிவு அகற்ற கூட நாட்டமின்றி
2.பசுவைக் கண்ட கன்று போல் வெகுவேகமாக செல்லத் தொடங்கினார்.

ஸ்ரீனிவாசன் அவதாரம் எடுத்த கொங்கண மாமுனி தான் ரிஷித் தன்மைக்கு உயரும் வழிகாட்டும் செயல் நிகழ்த்த உருக்கோலம் கொண்டிட்ட தாய்சக்தி “வாலை” அம்மன் வகுளாம்பிகை என்று பெயர் நாமப்படுத்தி அமர்ந்திட்ட மலைமுகட்டுக் குடிசையை நோக்கிச் சென்றார்.

இவர் வரவைக் காத்துக் கொண்டிட்ட அவ்வம்மை தலையில் இருந்து குருதி வழிந்தோடும் செயல் கண்டு புன்னகையுடன் நின்று கொண்டு மகன் கைகூப்பி வணங்கும் பாவனைப் படுத்திய நிலை கூட மறந்து தாயுள்ளம் கொண்டிட்ட பாசத்தினை வெளிப்படுத்தி “மகனே ஸ்ரீனிவாசா…!’ என்ற சொல் தொடரில் வேகத்தைக் காட்டிணார்.

காயம்பட்ட இடத்தில் பச்சிலை வைத்தியம் செய்திட்ட கருணைக்குப் பின் அக்குடிசைக்குள் அனுதினமும் நடைபெற்று வந்த
1.வகுளாம்பிகையின் ஆராதனை என்பது கொங்கண மாமுனிக்குப் போதனையும்
2.தாய் தெய்வ வணக்க முறை என்பது கொங்கணருக்குத் தவமுமாய் நடைபெற்று வந்தது.

“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்

“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்

 

சரீரம் புற்றான பிறகு அப்புற்றினுள் சூட்சும சரீரம் கொண்டு வாழ்ந்து வரும் கொங்கணர்…
1.ரிஷி சக்தியாகும் சூட்சுமமே ஸ்ரீனிவாச அவதாரமும்
2.அதன் தொடரில் தான் பெற்ற “தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்.

மண்டலமாய் சக்தி சுழன்றிட அமைப்பு ஏற்பட்டு அதன் வழி மேன்மேலும் சக்தியை தான் வலுக் கூட்ட ஆத்ம பலமே பல அவதார நிலைகள் கொண்டு அந்தந்த அவதாரங்களின் சூட்சுமம் வெளி உலகம் அறியாத் தன்மைக்கு மறைந்து போய்… மக்களின் எண்ணம் எல்லாம் செல்வம் பெறும் மார்க்கமாய் உலகோதய ஆசை வழித்தொடரில் அதுவே பேராசை என்னும் பிடிக்குள் சிக்குண்டு… செல்வநாயக அவதார சூட்சுமமே பிரகாசிக்க மக்களின் எண்ணம் செல்வம் பெறும் மனத்தின் வளத்தன்மைக்கு ஒப்ப… ‘படியளந்தான் பெருமாள்’ என்ற தொடரில் வந்துற்றது.

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்” என்றதன் முழுமையே ஸ்ரீனிவாச அவதார மகிமையைக் கொங்கணவர் செயல் கொண்ட சூட்சுமச் செயல்… பரிசுத்த ஆவி என்ற தொடர்புபடுத்தி ரிஷியின் மூல சக்தி முனிவனின் தொடரில் பெறப்படும் ஒவ்வொரு நிலை சக்தியின்… கூட்டு நிகழ்த்தும் நிகழ்வுகளின் ஆக்கம் என்றதன் செயலில் வந்துற்ற செயற்பாட்டுச் சிறப்பின் தன்மைக்கு ஒப்ப ஆங்கு நிகழ்ந்தது “ஓர் செயல் நிகழ்வு…”

எந்தவொரு சித்தனும் சித்தின் செயல் ஆக்கம் வைத்திய முறையோ அல்லது வேறெந்த செயற்பாட்டிற்கும் அம்மன் சக்தி என்ற தொடரில் உபாசிக்கும் “வாலை” என்ற பெயர் நாமமிட்டு சக்தி பெறும் தொடர்பில் வந்துறும் நற்சக்தி கதி “தாய்” சக்தி என்னும் பாங்கில் பெறப்படும் தொடர் ஒன்றுண்டு.

இவ்வொன்றுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தாய் சக்தி பெறும் பல வழித் தொடர்பில் இதுவும் ஒன்று. “கொங்கணருக்காகச் சக்தியூட்ட” தாய் சக்தி காத்துக் கொண்டிருந்த செயல் விந்தை கொங்கணருக்கே உரிய தனிச் சிறப்பு.

அதோ மலைமுகட்டுக் குடிசையில் வயோதிக வயதுப் பெண்மணியின் உருவம் கொண்டு ஓர் அளப்பரிய தாய் சக்தி ஜெபித்துக் கொண்டும் அவ்வழி செல்வோருக்குக் கருணைக் கரம் காட்டி இயன்ற உதவி செய்வதோடு தன் சக்தியைத் தான் தன்னுள்ளே மறைத்துக் கொண்டு உலா வந்த “வாலாம்பிகை” என்னும் தாய் சக்தி அம்மலை முகட்டுக் குடிசைக்குள் “வகுளாம்பிகை” என்ற பெயர் நாமம் பூண்டு வசித்து வருகிறாள்.

மலை மீது அமைந்திருந்த குடிசையில் வாழ்ந்து வரும் வகுளாம்பிகை எத்தனையோ ஜீவன்களுக்குத் தவம் என்னும் கருணை மழை பொழிந்து எந்த அவதார நலனுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொண்ட சக்தியான “வாலை அம்மன்” காத்துக் கிடந்தாள் என்பது குரு சிஷ்ய மனோபாவனையைக் காட்டும் திறம் உணர்க.

அங்கே வறுமையில் வாடி வந்து சேர்ந்தான் ஒரு சிறுவன். தன்னை யார் என்று கூறக் கூட பெயர் நாமத்தில் கூட அறியாத அச்சிறுவனை மேற்கொண்டு செல்ல ஒட்டாமல் தடுத்து தான் வளர்க்கும் மகானாக ஆக்கிக் கொண்டு அந்த அனாதைச் சிறுவன் தனக்கு ஏற்ற ‘தாய்’ இவளே சேய் உறவாக வளர்ந்தது.

இச்சிறுவனைக் கொண்டே கொங்கண முனிவனை எதிர்கொள்ளக் காத்திருந்தாள் அத்தாயான வகுளாம்பிகை.
1.அஷ்டலட்சுமி சக்தி என்ற நட்சத்திர சக்தியின் அவதார நிலையில் இச்சிறுவன் பெறும் சக்தியை முன்னிட்டே
2.வகுளாம்பிகை தாய்… கொங்கணர் பெறும் சக்தி தொடருக்கு சூசகமாகச் சிறுவனுக்கே ஸ்ரீனிவாசன் என்ற பெயர் நாமப்படுத்தி
3.ரிஷி பத்தினி சக்தியில் கலந்து நிரந்தரமாக வசிக்கப் போகின்றான் ‘இவன்’ என்று தொடர் காட்டி விட்டார்.

ஸ்ரீனிவாசனும் மாடுகளை மேய்க்க வரும் மாட்டுக்கார சிறுவர்களுடன் கலந்து விளையாடி மகிழ்ந்து மாடு மேய்ப்பான். பிறகு பித்தன் போலும் நடந்து கொள்வான். ஆகாயத்தையே வெறித்து நோக்குவான்.

இப்படியெல்லாம் விளையாட்டுப் பருவம் கடந்து வரும் தொடரில் கொங்கணர் தம் அவதார நிகழ்வுக்கு ஏற்ற பக்குவம் போல் தன்னையும் தயார்படுத்திக் கொண்டது போல் ஸ்ரீனிவாசன் நடவடிக்கைகள் அமையலுற்றது.

இவர்கள் விளையாட்டெல்லாம் கொங்கணப் புற்றருகேதான் அதிகம் இருக்கும். அந்த இயற்கை காலம் கனியட்டும் என்று காத்திருந்த கொங்கணர் தொடருக்கு உறுதியாவதுபோல் அந்த அவதார காலமும் விரைந்து வந்துள்ளது.

சிறுவர்கள் விளையாட்டில் துறுதுறுப்பாய் விளங்கும் ஸ்ரீனிவாசன் அடிக்கடி சரீரத் தொடரில் ஏதேனும் காயம் ஏற்பட்டுக் கொண்டிருக்க வகுளாம்பிகை சிறுக்ஷைகள் செய்து அவனைக் கண் போல் காத்துக் கொண்டிருந்தார்கள்.

காரணம்… “சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும்” என்ற சூட்சுமத் தொடரில் அமையலுற்றதன் பொருளே
1.அச்சிறுவனைக் கொண்டுதான் கொங்கணர் தம் நிலை உயர்த்த வேண்டும் என்பதன் சூட்சுமத்தில்
2.சரீரம் தரும் அச்சிறுவன் நிலையும் உயிர் சக்தி முனிவனின் சக்தியுடன் கூடி வளர்ச்சியின் தன்மைச் செயல் வீரியத்தின் வித்தாகி
3.மண்டல சுழற்சிக்கு வேண்டிய வேகத்தின் குணம் எல்லாம் ஒன்று கூடி நல்வினைப் பயன் தொடருக்கு உறுதுணையாய் விளங்கின என்பது
4.மாமகரிஷி ஆகும் கொங்கணர் செல்வநாயகன் பெற்ற பேறுதான் செயல் நிலைக்கு கொண்டு சென்று
5.மன எண்ண வீரிய வைராக்கிய சிந்தனை கொண்டு அடையும் தொடருக்கு நிதானம் என்ற செயலுறும் தன்மையைப் பிரதானமாக்கி
6.முனிவன் தன் மனோபீஷ்டம் நிறைவுற்றதும் தொடர்ந்து வந்துற்ற அருட்சக்தியாலும்
7.அதைத் தக்க முறையில் பயன்படுத்தும் விதமாக்கி நேர்கோடாய்க் கொண்டு சென்ற சூட்சுமத் தொடர் மிக முக்கியம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

 

1.ஓம் ஈஸ்வரா…! என் உடலை உருவாக்கிய உயிரை “ஈசன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…! உயிரால் உருவாக்கிய என் உடலைச் “சிவன்” என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா…!

2.என் உடலுக்குள் இணைந்த உணர்வுகள் அனைத்தையும் வினைக்கு நாயகனாகத் துதிப்பேன்…! விநாயகனாகத் துதிப்பேன்…! நான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் சீதாராமனாகத் துதிப்பேன்…! ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

3.உயிரால் உருவாக்கிய கண்ணைக் கண்ணன் என்று துதிப்பேன். கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

உயிரால் உருவாக்கிய கண்ணின் கருவிழி தன் எதிரிலே இருப்பதை உடலுக்குள் பதிவாக்குகின்றது. அந்த உருவத்தில் இருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவோ கவர்ந்து அங்கே இருக்கும் உண்மை உணர்வுகளைத் தனக்குள் ஊட்டுகின்றது சத்தியபாமா என்று. இரண்டும் சேர்த்துக் கண்ணன் என்று ஞானிகள் இதைக் காரணப் பெயர் சூட்டினார்கள்.

4.கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணின் காந்தப் புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகளைச் சீதாராமன் என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் என்னுள் எண்ணங்களாக இயக்கும் உணர்வைச் சீதாராமன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

5.உயிரின் துடிப்பை ஈசன் என்று துதிப்பேன். உயிரின் துடிப்பால் உருப்பெறும் வெப்பத்தை விஷ்ணு என்ற துதிப்பேன். துடிப்பால் ஈர்க்கும் சக்தியை லக்ஷ்மி என்று துதிப்பேன். உயிரால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் அணுவாகும் பொழுது பிரம்மா என்று துதிப்பேன். உருப்பெற்ற மணத்தைச் சரஸ்வதி என்று துதிப்பேன்… பிரம்மாவின் மனைவி என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

6.பல கோடி உடல்களில் அறிந்துணர்ந்த உணர்வுகள் அனைத்தும் மனித உடலுக்குள் உருப்பெற்று வளர்ந்த அரும் பெரும் சக்தியை அருள் ஞான சக்தியாகத் துதிப்பேன். மாற்றி அமைக்கும் சக்தியாக முருகா என்று துதிப்பேன்… முருகு என்று துதிப்பேன்… என்னை அழகுப்படுத்தும் அறிவு என்று துதிப்பேன். அருள் ஞான சக்தி என்று துதிப்பேன். அருள் வழியில் எனக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவைப் பிரம்மன் என்று துதிப்பேன். பிரம்மா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

7.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் சக்தியாக ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஞான வழியில் வாழ்வேன்.., அருள் ஒளியாகப் பெறுவேன், பிறவியில்லா நிலை அடைவேன்…! அண்டத்தில் ஒளிச்சுடராக வாழ்வேன், வளர்வேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

8.உயிரால் உருவாக்கிய இந்த மனித உடலைக் காப்பேன். அருள் ஞான சக்தியை நுகர்வேன். எனக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளை அகற்றுவேன். அருள் சக்தியை எனக்குள் பெறுவேன். இந்த உடலுக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தையும் அகற்றுவேன், அருள் ஞான சக்தி பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

9.இந்த உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த ஆஸ்துமா நோய், சர்க்கரை சத்து, இரத்தக் கொதிப்பு, வாத நோய் அனைத்தையும் அகற்றுவேன். அருள் ஞான சக்தியை என் உடலில் வளர்ப்பேன்… அருள் சுடராக வளர்ப்பேன்.

என் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்வேன். அருள் ஞான வழியில் இந்த உடலைக் காப்பேன். இந்த உடலை உருவாக்கிய ஈசனைத் துதிப்பேன். அருள் ஒளி பெறுவேன். இந்த உடலில் வந்த இருளை நீக்குவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

10.என் உடலை உருவாக்கிய என் அன்னை தந்தையைக் கடவுளாகத் துதிப்பேன். என்னைக் காத்தருளிய அருள் சக்தியாக விளங்கிய என் அன்னை தந்தையைத் தெய்வமாகத் துதிப்பேன்.

என் வாழ்க்கைக்கு வழி காட்டிய என் தாய் தந்தையை முதல் குருவாகத் துதிப்பேன். அவர்கள் வழியில் அருள் ஒளி பெறுவேன். இருளை நீக்கும் ஆற்றலைப் பெறுவேன். என் அன்னை தந்தை துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!

11.வாழ்க்கையின் இருளை அகற்றுவேன். அருள் ஞான வழியில் வளர்வேன். என் பார்வையில் நான் பார்ப்போர் அனைவரும் தெளிந்த மனம் பெறத் தியானிப்பேன். உலகைக் காத்திடும் உணர்வாக என்னுள் வளர்த்திடுவேன். உலகம் அனைத்தும் ஒன்றென்று இணைப்பேன். உலக சக்தியே எனக்குள் உண்டென்று உணர்வேன்.

அருள் ஞான வழியில் உலக மக்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து… கல்யாணராமனாக வாழ்ந்திடுவேன். இணைந்து வாழ்ந்திடுவேன். இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி வாழ்ந்திட அருள் ஞான சக்தியைத் தியானிப்பேன். உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவம் இருப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா…!