தியானம் எடுப்பவர்களுக்கு “வேக குணம்” ஆகாத ஒன்று…!

தியானம் எடுப்பவர்களுக்கு “வேக குணம்” ஆகாத ஒன்று…!

 

மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல்… மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.

பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது. அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!

காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.

பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.

காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.

அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?

மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப் பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.

இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக் கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்…!”

அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்

 

பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் அதை மீண்டும் ஏற்றிக் கொள்வது போன்று
1.ஒவ்வொருவரும் அதிகாலை துருவ தியானத்தைச் சீராக எடுத்துக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகரித்துக் கொண்டால்
3.அன்றாட வாழ்க்கையில் வருவதையெல்லாம் நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ பேரைச் சந்திக்க நேர்கின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் போன்ற உணர்வுகளை நாம் சந்திக்க நேர்கின்றது.

அப்படி நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த… “துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உடனடியாக துரிதமாக ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால்” தீமைகள் நமக்குள் புகாது தடுக்க உதவும்.

காலையில் இந்த நினைவலைகளை நாம் அதிகமாகப் பெருக்கி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க
1.துருவ நட்சத்திரத்துடன் நம்முடைய பற்று அதிகரிக்கின்றது…
2.இந்தப் புவியின் பற்றைத் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.எந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை அதிகமாக எடுத்தோமோ… உடலுக்குப் பின் நம்மை அங்கே அழைத்துச் செல்லுகின்றது நம் உயிர்.

இந்த உடலில் சேர்த்த உணர்வுகள் தீமை என்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் அருகிலே செல்லும் பொழுது இந்த உடலில் பெற்ற தீமைகளை அங்கே கருக்கி விட்டு…
2.இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
3.எத்தகைய நஞ்சு இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொண்டாலும் அந்த விஷமே அதற்குள் மீண்டும் சேமித்துச் சேமித்து நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதராக இருக்கும் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வைச் சுவாசிக்கும் பொழுது… அந்த உணர்வை வளர்த்து உடலுக்குப் பின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த உடலைப் பெறுகின்றது.

ஆனால் மனிதன் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு இருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறியும் போது உதவி செய்தாலும் அந்த நோய் மிகவும் வலிமையானது… விஷம் கலந்தது.

அதை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது. பின் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.

இந்த உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அணுக்கள் மடியத் தொடங்கும். நம் உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

உடல் குறைந்து விஷத்தின் தன்மை பெருகும் பொழுது உயிர் உடலை விட்டுச் சென்று மனிதரல்லாத உருவை உருவாக்கி விடும்.

அதை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை சேர்க்கச் சேர்க்க
1.உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எதன் வலுக் கொண்டதோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்.

தீமைகளைக் கருக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகள் பட்டப்பின் மனித வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்ட தீமைகளை அங்கே கருக்கிவிட்டு… உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்பட்டு பேரருள் பேரொளி என்று ஒளியின் சரீரமாக… அழியா ஒளிச் சரீரமாக பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்பு தான் முழுமை அடைய முடியும்… உயிர்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் பெற்ற ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று
2.இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்.

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

 

மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்

(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”

குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?

குரல் – உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.

குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.

சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?

சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.

ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.

குணங்களின் செயல் வளர்க்கின்ற தன்மைகளில் மனத்தின் கருவே வித்தாக… சகல ஜீவராசிகளும் உலகோதய நடைமுறை மனித மனத்தில் உண்டு.

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்

 

அன்று சப்தரிஷிகளாக வாழ்ந்தவர்கள் அவரில் கண்டறிந்த உணர்வுகள்… தெளிந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்ததை… சொல்லின் மூலமாகவும் செயல் வடிவிலும் வெளிப்படுத்திய
1.அந்தப் பேரருள் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு
2.அந்த அருள் உணர்வுகள் வான் வீதியில் நம் பூமியில் பரமாக இருக்கின்றது
3.பரமாத்மாவாகக் கலக்கப்பட்டுள்ளது… பரத்தின் ஆன்மாவாக.

தாவர இனங்கள் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து செடிகளாக விளைந்தாலும் அதனின்று வெளிப்படும் சத்து… அதுவும் இந்தப் பரமாத்மாவில் தான் கலந்துள்ளது.

அந்தந்தத் தாவர இனங்களில் விளைந்த வித்துகளை எடுத்து நிலத்திலே ஊன்றப்படும் பொழுது… புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தன் தன் தாய் செடியின் சத்தினைக் கவர்ந்து… அதன் வழி வளர்ந்து அதன் உணர்வுகள் குணங்கள் அனைத்தும் விளைந்து… மீண்டும் தன் தன் இனத்தின் வித்துகளை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் சப்தரிஷிகள் தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாக ஆன அவர்கள் உடலிலிருந்து வெளிவந்த உணர்வுகள் அனைத்தும் இங்கே பரமாத்மாவாக இருக்கின்றது.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்… எமக்கு அருளிய அருள் வழிப்படி யாமும் கண்டுணர்ந்து
2.அருள் உணர்வை எமக்குள் வளர்த்துச் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்தும் போது இந்த பரமாத்மாவில் இதுவும் படர்கின்றது.
3.சொல்லப்படும் பொழுது எவரெவர்கள் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
4.கவர்ந்த உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிவாகின்றது.

நிலத்திலே எப்படிப் வித்துக்களைப் பண்படுத்தி அதைச் சீராக வளர்க்கின்றோமோ இதைப்போல மகரிஷிகளின் உணர்வலைகளைப் பெறக்கூடிய சத்தாக… “உங்களுக்குள் ஞான வித்தாக இப்பொழுது பதிவு செய்கின்றேன்…”

நீங்கள் எந்த அளவிற்கு அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ அந்த அளவிற்கு அது பதிவாகி விடுகிறது. அப்படிப் பதிவான நிலையை நினைவு கொண்டு மீண்டும் கவர்ந்தால்
1.அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
2.வளர்த்த உணர்வின் தன்மை கொண்டு உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்ற முடியும்.
3.சப்தரிஷிகள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து எப்படி வாழ்ந்தனரோ
4.பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைந்தனரோ அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

குருநாதர் எப்படிப் பல உண்மைகளை அறிந்துணர்ந்தாரோ அதனை எமக்குள் பாய்ச்சி அதன் வழி என்னிலிருந்து வெளிப்படும்படி செய்தாரோ அதே வழிப்படியே உங்கள் அனைவருக்கும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் அறியாத சேரும் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றேன்.

நீங்கள் வளர்க்கும் அந்தப் பேரருள் உணர்வுகள் பரமாத்மாவிலே பரவுகின்றது.
1.இங்கே வாழும் மக்கள் அனைவரும் அவரவர்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட இருளை அகற்றி அருள் வழி அனைவரும் வாழ்ந்திடவும்
2.எத்தனை கோடிச் சரீரங்களில் அதை எல்லாம் கடந்து இந்த உயிர் இன்று மனிதனாகக் கொண்டு வந்ததோ
3.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி ஒளிச் சரீரம் பெறுவதே
4.அதாவது ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.

இங்கே இப்போது பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து “அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணினால்” அதுவே தியானம் ஆகின்றது.

ஜெப ஆற்றலை அருந்துவதே… “சித்தன் சுட்டிக் காட்டிய அன்னம்”

ஜெப ஆற்றலை அருந்துவதே… “சித்தன் சுட்டிக் காட்டிய அன்னம்”

 

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்… அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை… உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை…” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்…
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக… மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே… சித்தன் சுட்டிக் காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக… ஓங்கார நாதத் தொனியாக… “நாதத்தின் தலைவியாம் கலைமகள்…” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக… ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே…?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

 

இராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் சுவை மிக்க நிலை சீதாராமன்…!
1.அந்தச் சுவைமிக்க உணர்வு கொண்டு… சொல்லாக உணர்ச்சிகள் உடலுக்குள் வரும்பொழுது
2.உடலுக்குள் உருவான சிவ தனுசு உடலைக் காக்கும் நிலைகளில் இருந்து அருள் ஒளியின் உணர்வாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும்.

சிவ தனுசு விஷ்ணு தனுசு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருளை எப்படிக் காண வேண்டும்…? என்று கூறப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடும் யுத்த காலமாக இருக்கிறது. பார்த்தால் சமாதானமாகப் போவதாகத் தெரிய வரலாம். இருந்தாலும் ஒவ்வொரு நொடிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியின் தன்மைகள் அதிகரித்து… “மிரட்டும்” தன்மையே வந்துவிடும்.

விஷமான குண்டை ஒரு நாட்டின் மீது போட்டால் அது வெடிக்கும் தன்மை விஞ்ஞான அறிவால் வந்துவிடும்.
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற இயக்க சக்தியின் நிலைகள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் இருக்கும் அந்த நிலைகள் (குண்டுகள்)
2.ஒரு நொடி திசை மாறினால் விஷ குண்டுகள் முழுவதும் வெடிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வந்துவிடும்.

அப்படிப் பரவினால் மக்களை அழித்திடும் உணர்வாகவே வந்துவிடும். விஷ உணர்வுகள் பரவினால் உடலை விட்டுச் சென்ற பின் புழுவாகப் பூச்சியாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் பல காலம் கழித்துத் தான் மீண்டும் மனிதனாக உருப் பெரும் நிலை உருவாகும்.

1.மனித உடலில் இனி இருப்பார்கள்.. ஆனால் அசுரனாகத்தான் இருப்பார்கள்.
2.அதே சமயத்தில் கடும் நோய்களாக உருவாகிவிடும்.
3.கேன்சர் டிபி போன்ற நிலையில் எல்லாம் விஷத்தன்மையால் உருவானது தான்.

இவைகளில் இருந்து நாம் மீள துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தியானித்து அந்த வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்பட்டு அதன் துணை கொண்டு நமக்குள்ளும் இருக்கும் நஞ்சின் உணர்வுகளை நாம் கரைக்க முடியும்.

பற்றும் பாசத்துடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நோயின் உணர்வு கொண்ட நிலையில் பண்பால் பரிவால் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தான் வளர்கின்றது. அந்தத் தீயவினைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அந்த மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கப்படும் பொழுது உடலில் பெற்ற நஞ்சு கரைக்கப்படுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழத் தொடங்குகிறது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை உணவாக எடுத்து வாழத் தொடங்குகிறது.

ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றினார்கள் என்பது இதுதான். ஆகவே உடலை விட்டு யார் பிரிந்து சென்றாலும் அந்த 48 நாட்களுக்குள் நாம் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.கணவன் மனைவியாக இருப்பினும் யார் முதலில் உடலை விட்டுச் சென்றாலும்
2.விண் செலுத்தும் உணர்வுடன் உந்திச் செலுத்தப்படும் பொழுது கணவன் மனைவி உயிரான்மாக்கள் இரண்டற இணைக்கப்பட்டு
3.ஒளியின் உணர்வாகி என்றுமே உணர்வின் ஒளியாகப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

வாழ்க்கையில் இதை நாம் அவசியம் பெறுதல் வேண்டும்.

பூரண பௌர்ணமி ஆன நிலையில் சப்தரிஷி மண்டலம் அருகில் வரும் அந்தச் சமயத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நாம் எண்ணி எடுக்கப்படும் பொழுது அதைக் கவர்ந்து ஒளி அலைகளைப் பரப்பி தியானத்தின் மூலமாக விண் செலுத்தும் ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக அது ஊன்றப்படுகின்றது.

அதை நினைவு கொண்டு மீண்டும் எங்கள் எண்ணி வளர்த்தல் வேண்டும் அதற்குத் தான் உபதேசிப்பது.

திட்டியவனை எண்ணியவுடன் அது பதிவாவது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் போதிக்கின்றேன்… ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

நீங்கள் மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “தீமைகள் அகற்றிடும் அந்த எண்ணம்” உங்களைக் காக்கும்.
1.எதை நுகர்கின்றீர்களோ உயிர் உங்களை இயக்கி நஞ்சினை நீக்குகின்றது… நல்ல உணர்வுகளை வளர்க்கின்றது
2.பிறவி இல்லாத நிலை அடையச் செய்கின்றது.

ஆகவே பேரரருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”

“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.

ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.

ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?

வேழம் (யானை) தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழி நடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.

1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.

வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?

உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?

மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”

அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.

எமது ஆசிகள்.

ஞானிகள் காட்டிய நெறி

ஞானிகள் காட்டிய நெறி

 

நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு, சஞ்சலம் நம் உடலுக்குள் நுகர்ந்த இவை அனைத்தும் வினையாகச் சேர்த்து அந்த உணர்வுகள் மாற்றமடைகின்றது. அப்படி மாறாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் விநாயகருக்கு அருகிலே வேம்பையும் அரசையும் வைத்தது. நாம் காலையிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று சதாசிவமாகிக் கொண்டே உள்ளது.

ஆனால் நல்லதைத் தான் எண்ணுகின்றோம்.
1.ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
2.அதை நுகர்ந்து நாம் வேதனைப்படுகின்றோம்.

குழந்தைகளை நல்ல முறையிலே வளர்க்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்… வேண்டிய உபகாரத்தையும் செய்கின்றோம்.
1.ஆனால் சொன்னபடி அவன் கேட்கவில்லை என்றால் வேதனையைத் தான் நுகர்கின்றோம்.
2..நம் நல்ல குணங்கள் அனைத்தும் வேதனை கலந்து விடுகின்றது

ஒருவருக்குக் கடனைக் கொடுத்து உதவி செய்கின்றோம் குறித்த காலத்திற்குள்
1.கொடுத்த பணம் வரவில்லை என்றால்
2.“நான் கொடுத்தேன் அவர் திரும்பத் தரவில்லையே…” என்று வேதனைப்படுகின்றோம்.

வியாபாரம் நன்றாகச் செழித்து வளரும் என்று எண்ணுகின்றோம். புதிதாகக் கடை வைக்கும் பொழுது செழித்து வருகின்றது. அடுத்து அது குறைந்தால் நாம் வாங்கியவர்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியவில்லை மற்ற நிலைகளைச் செயல்படுத்த முடியவில்லை வட்டி கட்ட முடியவில்லை என்றெல்லாம் எத்தனையோ எண்ணி வேதனைப்படுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் எந்த நல்லது பெற வேண்டும் என்றாலும் இந்த வேதனைகளைச் சுவாசிக்கும் போது அது அனைத்தும் விஷம். ஆக இந்த உணர்வுகள் வினையாக வளர்கின்றது.

இப்படி வளர்ந்து விட்டால் வேதனை வேதனை என்ற உணர்வு வரும் பொழுது கை கால் குடைச்சல் மூட்டு வலி இதைப் போன்ற உணர்வு நம் உறுப்புகளில் விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் இப்படி வருகிறது. இதை நாம் துடைக்க முடிகின்றதா…? துடைக்க வேண்டுமா இல்லையா…?

துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம் கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விட்டுச் சாப்பிடுகிறோம். ஆனால் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைத் துடைக்க வேண்டுமா இல்லையா…!

1.அதை நாம் எப்படிச் செய்ய வேண்டும்…?
2.எதன் வழி செயல்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான்
3.வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் விநாயகர் அருகே வைத்தது.

மனிதனின் வாழ்க்கையில் நல்லதைச் செய்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது. அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

ஒருவருக்கு நாம் பணத்தைக் கொடுத்திருக்கின்றோம்… பணம் வரவில்லை அப்பொழுது வேதனைப்படுகின்றோம். அந்த வேதனையை எண்ணும் பொழுது அது நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டேனே… பணத்தை அவர் கொடுக்கவில்லையே என்று சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் “என்னால் முடியவில்லையே நாளைக்கு என்ன செய்யப் போகின்றேன்…?” என்று எண்ணும் பொழுது கோபப்பட்டு விடுகின்றோம்.

வேதனையும் கோபமும் வரும் பொழுது அதனின் உணர்ச்சியின் அணுக்கள் விளைந்து விட்டால் அணுத்தன்மை ஆன பின் உடலிலே மூட்டுக்கு மூட்டு குத்தலும் குடைச்சலும் வந்துவிடுகிறது.

கார உணர்வுகளும் வேதனை உணர்வுகளும் அந்த விஷமான உணர்வுகள் சாடப்படும் பொழுது நம்மை அறியாமலே அது இயக்கத் தொடங்கி விடுகின்றது. நாம் தவறு செய்தோமா…? இல்லை.

இத்தகைய நிலை வராது தடுக்க “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பருகுதல் வேண்டும்.

அதை அதிகாலையில் நாம் பெறுவதற்குத் தான் வட மேற்கில் விநாயகரை வைத்து வட கிழக்காக நம்மைப் பார்க்கும்படி செய்து அருள் உணர்வுகளை அதிகாலையிலேயே நம்மைப் பருகும்படி செய்தார்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரழிவு பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படித் தீமையிலிருந்து நாம் விடுபட்டு அருள் வழி வாழும் நிலையை நெறிப்படுத்திச் சென்றார்கள் ஞானிகள்.

மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்

மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்

 

மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று…
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”

ஆனாலும்…
1.சுவாச கதியில் “கனம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”

ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”

1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் – மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.

அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணரவும் முடியும்.

நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.

பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.

ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று…
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.

அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.

நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.

பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.

அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.

அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு.

இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்…?

இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்…?

 

உதாரணமாக நாம் கோபப்பட்டு ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தொல்லை கொடுக்கிறோம் என்றால்… நாமே அசுர குணங்களை வளர்க்கும் தவத்தை மேற்கொள்கின்றோம் என்று பொருள்.

நாம் எண்ணிய தவம் அனைத்தையும் உயிர் அந்த உணர்வின் கருவாக இந்திரலோகத்தை மாற்றி அமைக்கின்றது.
1.மகிழ்ச்சியை மாற்றி நமக்குள் வெறுப்பு என்ற உணர்வுகளும் எவரையும் கொன்று புசிக்கும் உணர்வே வருகின்றது.
2.இங்கே பிரம்மலோகம் அதன் உணர்வின் தன்மை வளர்க்க நேர்கின்றது.
3.சிவனும் அதன் வழிப்படி வரம் கொடுத்து விடுகின்றான்.
4.ஆகவே மூன்று லோகத்தையும் வென்றிட வேண்டும் என்று தான் இராவணனின் தவம் அமைகின்றது.
5.அந்தத் தவத்தின் பலன் கொண்டு இந்த உடலில் விளைந்து (வீழ்ச்சி அடைந்து) இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்திய பின்
6.அசுர உணர்வுகளை உருவாக்கும் அணுவின் தன்மையாக வருகின்றது.
7.இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் புலியாகப் பிறக்க நேர்கின்றது.

அப்படி உருவான பின் புலியின் உயிரும் ஈசனே. அதன் இயக்கத் தொடரும் விஷ்ணுவே ஈர்க்கும் காந்தம் லட்சுமி.

அப்போது தீமைகளை உருவாக்கும் பிரம்மத்தின் தன்மை அந்தப் பசியை அடக்கும் தன்மையாக அல்லது தன் பசிக்காக ஏங்கும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக (அது பிரம்மமாக) மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது அது சிவம் ஆகின்றது. ஆக புலியின் உடலும் சிவமே அதன் உடலுக்குள் உருவாக்கும் அந்த இந்திரலோகத்தை மாற்றி அசுர உணர்வுகளை உருவாக்கும் உலகமாக மாற்றுகின்றது.

உயிரின் தன்மை விஷ்ணுவாக இருக்கின்றது இயக்கம் ஈசன் ஆகின்றது. இதை எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத் தான்
1.ஓர் உடலை விட்டு உடல் மாறும் பொழுது ஒரு உடலில் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிர் எவ்வாறு உருவாக்குகின்றது…?
2.அந்த உணர்வின் தன்மை கருவாக எப்படி உருவாகின்றது…?
3.கருவான பின் ஏற்கனவே இருந்த உடலை அது எப்படி நலியச் செய்கின்றது…?
4.உயிர் இந்த உடலில் எதனைச் சேமித்ததோ அதன் வழி வெளிவந்த பின் அதற்குத்தக்க உணர்வை நுகர்ந்து
5.உடல்களை எப்படி மாற்றுகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

இது தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்ட்டி இருப்பார்கள். சாதாரண மக்களும் நாம் புரிந்து நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று என்பதனைக் கற்பிக்கின்றது நம் சாஸ்திரங்கள்.

நந்தீஸ்வரன் என்றால் ஒரு கோபப்படும் உணர்வை நுகர்ந்தால் உயிருக்குள் பட்டு அந்த உணர்வின் தன்மை உருவாக்குகின்றது. உருவாக்கிய பின் அதே கோபத்தின் உணர்வு மீண்டும் இந்த உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்து கோபத்தை உருவாக்கும் உணர்வின் அணுவாக விளைகிறது.

அப்பொழுது அதனுடைய தன்மையை அது உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.. அது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.

இந்த வாழ்க்கையில் கோபத்தின் தன்மை அதிகமாக்கினால் அதன் உணவின் தன்மை கொண்டு இப்படி நிகழ்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் கோபம் வரும் பொழுது “தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றிச் சென்றால் அதன் உணர்வின் தன்மை நரியாகப் பிறக்கச் செய்கின்றது…”

இதைப் போல எந்தெந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாற்றி அமைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப மனிதனாக இருப்பதை இந்த உயிர் மாற்று உடலை அமைத்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.