இராமலிங்கம் – உடலற்ற லிங்கம்

இராமலிங்கம் – உடலற்ற லிங்கம்

 

தன்னை இயக்குவது யார்…? என்று உயிரின் தன்மையை அறிந்திடும் நிலை பெற்றுத் தன்னில் ஒளியின் உணர்வு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து
1.தன்னில் தான் அறிந்து தன்னை இயக்கும் தீமைகளில் இருந்து விடுபட்டு
2.அருள் வழி கொண்டு தீமைகளைத் தான் கட்டுப்படுத்தி உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.அருள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி அதைப் பிரம்மமாக்கி
4.அருள் சிவமாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும் “ஒளியின் சரீரமாக…!”

எண்ணத்தின் உணர்வு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும். அதாவது…
1.எண்ணம் இராமன் என்றும்
2.உணர்வின் தன்மை ஒளியாகப் படும் பொழுது இராமலிங்கம் என்றும்
3.உயிரின் தன்மை வரும் பொழுது உடலற்ற லிங்கமாக உணர்வின் ஒளியாக
4.அருள் வழி கொண்டு உலகில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளியாக மாறும்.

ஞானிகள் காட்டியது…
1.உணர்வுகள் எண்ணத்தால் தான் வருகின்றது
2.உணர்வும்… உணர்ச்சிகளும்… எண்ணங்கள் வருவதும்…
3.உணர்வுக்கொப்ப உடல் அமைவதும்
4.உணர்வுக்கொப்ப எண்ணங்கள் செயலாக்குவதும்… அதனை உணவாக்குவதும்
5.எதனின் உணர்வைப் பெற்றதோ அதனின் உணர்வினை நுகர்ந்தறிந்து
6.அதன் உணர்வின் எண்ணங்களாகச் செயல்படுவதும் இதுவே.

அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து… பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டத்தையும் தன்னுள் உணர்ந்து… அண்டத்தின் சக்தி பிண்டத்திற்குள் இயக்குகிறது என்ற நிலையைத் தன்னைத் தான் அறிந்தவன் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்த காலத்தில் உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அருள் உணர்வுகள் அனைத்தும் இங்கே பரவியுள்ளது. அதை நாம் பெறுவோம்.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.

1.அவன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை நாமும் பின்பற்றுவோம்.
2.அருள் ஒளி பெறுவோம்… முழுமை பெறுவோம்.
3.நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான் என்று உணர்ந்து அதை நாம் அடைந்திடுவோம்.

காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல்… “மெய் ஞானிகள் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”

காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல்… “மெய் ஞானிகள் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”

 

1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.

சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.

அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.

இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.

1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.

ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.

உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.

ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”

ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?

1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).

இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.

ஆலயமாக மதிக்க வேண்டிய உடலை… உண்டு கழிக்கும் இயந்திரமாக வைத்திருக்கின்றோம்

ஆலயமாக மதிக்க வேண்டிய உடலை… உண்டு கழிக்கும் இயந்திரமாக வைத்திருக்கின்றோம்

 

ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… .செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?

1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை… பக்தி மார்க்கம்… சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி… இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக… நாமகரண… வேதாந்த பாராயணத்தால்… (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.

பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!

1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற – சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.

ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை… செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.

இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழிச் சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை… செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.

உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது.

இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.

எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

இச்சரீர பிம்பச் செயலில்… நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய… ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான்… ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.

1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல்வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.

“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

“குரு வழியில்…” மின்னலின் ஆற்றலைப் பெற வேண்டிய முறை

 

உதாரணமாக ஒரு மின்னல் பாய்கிறது என்றால் அப்போது ஒளிக்கற்றைகள் பலவாறு பல திசைகளிலும் பரவுகின்றது. அந்த மின்னல் தாக்கும் இடத்தை விடுத்து விட்டு
1.ஒளிக்கற்றைகள் பரவுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலுக்குள் ஒளிகள் பெருகிப் பெருகி
2.இந்த மின்னலையே தாங்கிப் பார்க்கும் நிலையும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் நிலையும் பெற முடியும்.

ஏனென்றால் மின்னல் மற்றதைக் கருக்கி விட்டு ஒளியாக எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்று
1.தன் வாழ்க்கையில் ஒளியாகச் சேர்த்துக் கொண்டவன் தான்
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
3.துருவ நட்சத்திரமாக ஆன பின் அது கதிரியக்கப் பொறிகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது
4.அகஸ்தியன் பெற்ற அதே உணர்வுகளை நாமும் பெறுதல் வேண்டும்.
5.அவன் வழியில் நாம் பெற்றோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நமக்கு இன்னொரு உடல் இல்லை.

இந்த உடலிலேயே உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு “வேகா நிலை” என்ற நிலை அடைகின்றோம்.

இத்தகைய அருள் ஒளி பெறும் மார்க்கத்தை “நம் குரு காட்டிய அருள் வழியில்…” ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உடலுக்குள் உருவாக்குவோம்..

சதம் இல்லாத இந்த உடலுக்கு நாம் பற்றை வைக்க வேண்டியதில்லை. உடல் தேவை… ஆனாலும்
1.உடலுக்குள் தீமைகள் பற்றிடாது அருள் ஞானத்தை உள்ளே புகுத்தி
2.அதைப் பற்றுடன் பற்றித் தீமைகளை பற்றதாக மாற்றிட வேண்டும்.

எவரொருவர் இந்த வாழ்க்கை வாழுகின்றனரோ அவரே அருள் ஞானத்தின் வழி கொண்டு பிறவி இல்லா நிலை அடைவர். அவ்வழி பெறச் செய்வதற்கே குரு காட்டிய அருள் வழியில் “கூட்டமைப்பாக அமைக்கின்றோம்…”

உங்கள் எண்ணங்களை ஒருக்கிணையச் செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சினையும் நீக்கிடும் வலிமை பெறுங்கள்.
1.எத்தகைய துன்பம் வந்தாலும் அதனில் சிக்கிச் சோர்வடையாது
2.அதனை மாற்றிடும் வலுக் கொண்டு
3.அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஒளியைப் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடையுங்கள்.

அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

அகஸ்தியன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

 

அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக வளரும் பொழுதே தாயால் நுகரப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவன் சுவாசிக்க நேர்கிறது… அவன் உடலுக்குள் அது இணைகின்றது.

இன்று விஞ்ஞானிகளும் கருவின் வித்துகளைப் பல உயிரினங்களிலிருந்து எடுத்து அதை மற்ற உடலில் இருக்கக்கூடிய ஜீன்களில் இணைத்துக் கருவுறச் செய்து உருமாறும் நிலைகளில் குணங்களில் மாற்றம் அடையும் செயல்களைச் செயல்படுத்துகின்றனர்.

1.அன்று மெய் ஞானிகள் தன் இனத்தினைப் பெருக்குவதற்காக
2.சொல்லின் தன்மையை செவி வழி ஓதி உணர்ச்சிகளை உணர்த்தப்படும் பொழுது
3.அதில் ஈர்க்கப்பட்ட உணர்வின் அறிவாக ஈர்க்கும் தன்மை கொண்டு
4.ஞானிகள் உடலில் அவர்கள் கண்டுணர்ந்த நினைவினை வானை நோக்கி ஏகி
5.கருவுற்ற தாயை அந்த உணர்வினை நுகரும்படி செய்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அதை உருவாக்கி
6.பெரும் பெரும் சக்தி கொண்ட ஞானிகளாக அக்காலங்களில் உருவாக்கினார்கள்.

இருந்தாலும் அந்தக் கால கட்டங்களில் அவரவர்கள் ஆசை கொண்டு “அரசன்…” என்ற நிலையில் அது மாற்றப்பட்டு மற்றொன்றை அடக்கி ஆளும் தன்மைகளாக மாறி விட்டது.

மற்றவரை அடக்கி ஆளும் பொழுது அவனுக்குள் அது அசுர உணர்வாகத் தோன்றப்பட்டு சாம்ராஜ்ய ஆசைகள் வருவதும் மற்றதை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.

இப்படிப் பல பல மாற்றங்கள் ஏற்பட்டு
1.இன்றைய உலகில் விஞ்ஞான அறிவாக அதிகரித்து விட்டது
2.மெய் ஞான உணர்வுகள் அனைத்தும் அழிந்து விட்டது.
3.அஞ்ஞான வாழ்க்கை பெருகிவிட்டது… மனிதனுடைய சிந்தனைகளும் இழக்கும் தன்மை வந்து விட்டது.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் பண்டைய காலத்தில் வாழ்ந்த அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

1.அகஸ்தியன் கண்டறிந்த உணர்வும் அவனில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதைப் பெறச் செய்து
3.அவன் வளர்ச்சி பெற்றது போல நமது வாழ்க்கையில் நாமும் பெற்று
4.அவன் எண்ணும் (எண்ணிய) உணர்வுகளை நமக்குள் எடுத்து
5.நம் உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் அதைப் பெருக்கி அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி
6.அவன் சிந்தித்த உணர்வுகளை அடிக்கடி நாமும் சிந்தித்து
7அவன் பெற்ற ஞானத்தையும் தீமைகளை அகற்றும் எண்ணங்களையும் நாம் பெற்று
8.அவன் வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு மற்றவரைத் தெளியச் செய்தது போன்று நாமும் செயல்படுத்த வேண்டும்.

அவனுக்குள் எடுக்கும் உணர்வால் ஒன்றை அறிந்திடும் அறிவாகவும் அனைத்தையும் அரவணைத்துப் பண்பு கொண்டு கொண்டும் வாழ்ந்தவன் தான் அகஸ்தியன்.

அவன் வாழ்ந்து வந்த அக்காலங்களில் கொடூர மிருகங்களை இவன் உற்றுப் பார்த்தால் அது அடிபணிகிறது… இவனை ஒன்றுமே செய்வதில்லை.

காரணம்… இவனிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகள் அந்த மிருகங்களின் விஷத்தின் தன்மை ஒடுக்கும் பொழுது அதனுடைய உணர்வுகள் சாந்தமாகி விடுகின்றது.

“இவ்வாறு அவன் செயல்பட்ட உணர்வுகள் ஏராளம் ஏராளம்…!”

இளமையில் மூன்று வயது எட்டும் போது அவன் வெளியில் நடந்து செல்லும் பொழுது
1.மற்ற தாவர இனங்களின் மணத்தை நுகர்வதும்
2.அதனின் அறிவைத் தனக்குள் வளர்த்துக் கொள்வதும்
3.தன் எண்ணத்தால் மற்றொன்றை அறியும் ஞானமாக வளர்ச்சி பெறுவதும் போன்ற நிலைகள் வருகிறது.

அதை எல்லாம் நாமும் பெறுதல் வேண்டும். அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற்று அவனைப் போன்ற மெய் ஞானியாக நாம் ஒவ்வொருவரும் உருவாக வேண்டும்.

பிற ஈர்ப்பில் நாம் சிக்கிவிடக் கூடாது

பிற ஈர்ப்பில் நாம் சிக்கிவிடக் கூடாது

 

ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.

இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.

1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.

உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.

ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.

எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.

இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.

என்னிடம் (ஞானகுரு) வாக்குகளை வேண்டிய சரியான முறை

என்னிடம் (ஞானகுரு) வாக்குகளை வேண்டிய சரியான முறை

 

1.என்னிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க விரும்புவோர் உடல் நலம் பெற வேண்டும் “எனக்கு அருளாசி கொடுங்கள்..”
2.என் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் “அந்த அருள் பெற வேண்டும்” என்று கேட்டுப் பழகுங்கள்.

அருள் வழியில் பெற வேண்டிதைக் கேட்டு நீங்கள் வேண்டி வந்தால் அது உங்களுக்குள் பதிவாகும். “யாம் கொடுக்கும் வாக்கு” உங்களுக்குள் அது சீராக இயங்கும்.

குடும்பத்தில் திருமணமோ மற்ற நல்ல நிகழ்ச்சிகளோ நடக்க வேண்டும் என்று அதற்கு அருளாசி வேண்டும் என்று கேட்டால்… அதன் வழியில் நடக்கும் என்று கொடுத்தால்… அதை நீங்கள் பதிவாக்கினால்… சுப நிகழ்ச்சிகள் நிச்சயம் நடக்கும்.

வரன் வரவில்லை… ஒருவரும் கிடைக்கவில்லை…! வந்து பார்த்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்…! என்று அப்படி எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் ஒரு சிலர்
1.நான் என்ன செய்தாலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டு விடுகின்றார்கள்.
2.அப்பொழுது நான் எதைச் சொல்வது…?
3.நடக்காது… கிடைக்காது…! என்று சொல்வதா…?
4.நடக்கவே மாட்டேன் என்கிறது என்று அவர்கள் கேட்கும் பொழுது “நான் நடக்கும் என்று சொன்னால்…”
6.அது நடக்கும்…! என்று அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்…?

என் குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும்… அவர்கள் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும். சீக்கிரம் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இப்படி வேண்டினால்… யாம் அதன்படி வாக்கு கொடுத்தால் அது செயலாகும். ஏனென்றால் இப்படித்தான் கேட்க வேண்டும்.

நான் வெளியிலே கொடுத்திருக்கக்கூடிய கடன்… பாக்கி பணம் வர வேண்டும். அவர்கள் அதைக் திருப்பி கொடுக்கக்கூடிய சக்தியாக அவர்கள் செய்யும் தொழிலில் வருமானம் வர வேண்டும். எனக்கு அந்த அருளாசி வேண்டும்.
1.நான் பொருளைக் கொடுத்தோர் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும்
2.எனக்கு அவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும் அந்த அருள் வேண்டும் என்று என்னிடம் ஆசி வாங்கினால்
3.அதன் வழி யாம் நடக்கும் என்று சொல்ல முடியும்.

அதே பிரகாரம் நீங்கள் வழி நடந்தால் வர வேண்டிய பணம் சரியாக வந்து சேரும் வாழ்க்கை எதிர்காலமும் நலம் பெற இது உதவும்.

அருள் ஆசியின் தன்மைகள் நாம் எடுத்துக் கொண்ட தவத்தின் தன்மையால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவான பின்…
1.நீங்கள் அதை எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம்… உங்கள் நினைவு… உங்களைக் காக்கும்
3.ஆகவே சீராகப் பயன்படுத்தினால் யாம் கொடுக்கக் கூடிய வாக்கின் பலிதம் சரியாக இருக்கும்.

ஆனால் என்னிடம் கேட்கும் போது கஷ்டமாக இருக்கின்றது… நோய் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… பல காலம் பல டாக்டர்களைப் பார்த்து விட்டேன்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் “நான் எதைச் சொல்வது…?”

என் உடலில் உள்ள சர்வ பிணிகளும் நீங்க வேண்டும் எனக்கு அந்த அருள் ஒளி பெற வேண்டும் நான் உடல் நலம் பெற வேண்டும் அந்த அருள் ஆசி வேண்டும் என்று சொன்னால் “கேட்போர் யாரும் இல்லை…”

ஆகவே அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து நீங்கள் விடுபடுங்கள். குருவிடம் இருந்து பெற வேண்டிய நல்ல வாக்கினை நீங்கள் இழந்து விடக்கூடாது.

ஏனென்றால் எதிர்மறையான எண்ணம் கொண்டு நீங்கள் என்னிடம் கேட்டால்… நீங்கள் சொல்வதை இடைமறித்து நான் வாக்கினைக் கொடுத்தாலும் அது பலிதம் ஆவது சிரமமாகி விடுகின்றது.

நீங்கள் எண்ணிய உணர்வுக்கும் நான் சொல்வதற்கும் எதிர்மறையாகி விடுகின்றது. ஆக மீண்டும் அந்த துன்பத்தைத் தான் நுகருகின்றீர்கள். ஆகவே அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

ஒரு விஷச் செடியின் அருகிலே நல்ல மணம் சென்றால் அது விடுவதில்லை. அது போன்று
1.எந்தக் குணத்தின் தன்மை முன்னணியில் வைத்திருக்கின்றீர்களோ
2.அந்த உணர்வு… நான் கொடுக்கக்கூடிய நல்ல வாக்குகளை ஏற்றுக் கொள்ள விடாதபடி உங்களைத் தடைப்படுத்தி விடுகின்றது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கேட்டால் பரவாயில்லை.
1.துன்பம் போகவே மாட்டேன் என்கிறது
2.பல தொல்லைகள் வந்து கொண்டிருக்கின்றது
3.நான் என்ன செய்தாலும் ஒன்று முடியவில்லை…” என்று கேட்டால்
4.நான் ஒன்றும் சொல்ல முடியாது.

இதை மாற்றி அமையுங்கள்…! என்று தான் உங்களிடம் சொல்கின்றேன். எப்பொழுது உங்கள் எண்ணம் மாறுகின்றதோ… நல்லதைக் கேட்டு எம்மிடம் ஆசி பெறுகின்றீர்களோ… நாம் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் பலிதம் ஆகும்.

நான் சொல்லும் முறைப்படி உங்கள் எண்ணங்களை மாற்றிவிட்டு… எதை நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றீர்களோ… அது பதிவாகின்றது. அதன் வழி உங்கள் எண்ணம் உங்கள் நினைவு உங்கள் செயல் அனைத்துமே நல்லவையாக இருக்கும்.

செயல்படுத்திப் பாருங்கள்.

ஞானத்தை வளர்த்துச் “சித்து நிலை பெற வேண்டும்…”

ஞானத்தை வளர்த்துச் “சித்து நிலை பெற வேண்டும்…”

 

இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.

மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?

தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.

இயற்கை என்பது என்ன…?

அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.

மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.

இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.

ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.

சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.

அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெற வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.

அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

இனிமை நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்

1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.

சப்தரிஷிகளின் சித்து நிலை

சப்தரிஷிகளின் சித்து நிலை

 

கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.

சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.

அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.

அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.

அது மட்டுமல்ல…!

1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும் பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?

தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்திவாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.

எவ்வலைக்கும் என்பது என்ன…?

1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும் சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துபவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!

நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

நமக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு “நாம் செய்ய வேண்டியது…”

 

நமது குருநாதர் காட்டிய வழியில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் தீமை உங்களுக்குள் புகாதபடி செயல்படுத்திக் கொள்ளுங்கள்.

நமக்கு ஒருவர் தீமைகளை அதிகமாகச் செய்து கொண்டே இருக்கின்றார்… நம் மனம் தாங்கவில்லை…! என்றால் வேறு ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை…!

1.சும்மா கேட்டுக் கொண்டே இருங்கள்…
2.அவர்கள் எதையெல்லாம் கெட வேண்டும் என்று எப்படி எல்லாம் சொல்லுகின்றனரோ
3.அதைத் திருப்பி – நீங்களே அனுபவித்து அதன் வழியில் தெரிந்து கொள்ளுங்கள்…! என்று அவரிடம் சொன்னால் போதும்
4.அவர் சொன்ன கெடுதல் நமக்குள் வராது

ஆனால் அந்தத் தீங்கு செய்வோர் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் இரத்ததில் இந்திரீகமாக மாறிவிடும்.

பின் அது அணுவாக மாறும் பொழுது அதே தீங்கான உணர்ச்சிகளை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்பொழுது அதே பேச்சு அதே சொல் அதே நிலை நமக்குள்ளும் வந்து அந்தத் தீங்கின் அணுக்கள் விளைந்து நம் உடலையும் பாழ்படுத்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே… யார் எத்தகைய தீமைகளைப் பேசினாலும்
1.நீ பேசுவது… நீ சொன்னது… நீ கேட்டது… எதையெல்லாம் கெட வேண்டும் என்று நீ எண்ணினாயோ…
2.அதையெல்லாம் உனக்குள்ளே நீயே அனுபவித்துத் தெரிந்து கொள்…
3.அதுவே உனக்குச் சிறந்ததாக இருக்கும்…! என்ற சொல்லிவிடுங்கள்.

அதற்கு அடுத்து
1.அறியாமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்
2.பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் படைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பேசிய உணர்வுகளை நாம் எடுக்காது… அவர் அறியாமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வும் நல் ஒழுக்கத்தின் தன்மை அங்கே வர வேண்டும் என்றும் பண்பின் உயர்வு அங்கே வளர வேண்டும்… பண்பின் நிலைகள் கொண்டு அவர்கள் வளர வேண்டும் என்ற உணர்வுகளையும் நாம் எண்ணத்தால் எண்ணிவிட்டால்
1.இந்த நினைவின் ஆற்றல் நமக்குள் பண்பு கொண்ட உணர்வின் அணுக்களை வளர்க்கவும்
2.நம் சொல்லும் செயலும் நமக்கு நன்மை பயக்கும் நிலைகளாக வரும்.

ஏனென்றால்.. குரு காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) பல காலம் மலை காடு மேடெல்லாம் அலைந்து துயரப்பட்டுத் தான் இத்தகைய உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது என்பதை அறிந்து கொண்டோம்.

அறிந்து கொண்ட நிலையில் நாம் நுகர்ந்ததை உயிர் இரத்தத்தில் இந்திரீகமாக மாற்றுகின்றது. நம் உடல் இந்திரலோகமாக மாறுகின்றது அதிலே அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் அது பிரம்மனாக உருவாகி அது தன் இனத்தின் தன்மை பெருக்குகின்றது… உடலாக… சிவமாக உருவாகின்றது.

விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… இந்திரனோ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றான்… பிரம்மனோ அதன் வழிப்படி உருவாக்குகின்றான்.
1.நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இது தான் ஜெபம் என்றும்
2.பல காலம் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான்…! என்று இதைத் தான் (காவியங்களில்) சொல்வார்கள்
3.அதாவது இந்த வாழ்க்கையில் நாம் எதனை எண்ணி ஏங்குகின்றோமோ அதுவே பிரம்மமாக மாறுகின்றது… அதன் வலுவே ஒன்றாகக் கூடுகின்றது.

ஒரு குழம்பு வைக்கிறோம் என்றால் அதிலே காரத்தைப் போட வேண்டும் என்றாலும்… அதிகமாகப் போட்டுவிட்டால் சுவை கெட்டு விடுகின்றது.. இரசித்துச் சாப்பிடும் தன்மை இழந்து விடுகின்றது. அதே போல் உப்பை அதிகரித்து விட்டாலும் சுவைத்துச் சாப்பிட முடியாத நிலை வருகின்றது.

இது போன்றுதான் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வினை அது தடைப்படுத்துகின்றது.

அதை மாற்றி அமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து சமப்படுத்துதல் வேண்டும். அருள் உணர்வுகளை அதிகமாகப் பெருக்கி சிறுமையும் தீமையும் விளைவிக்கும் அணுத் தன்மைகளைக் குறைத்திடல் வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நம் குரு காட்டிய வழிகள் கொண்டு அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். யாம் பதிவாக்கியதை நினைவு கொண்டு உங்களுக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.பகைமையான உணர்வுகள் வந்தால் அல்லது தீமை செய்வோர் உணர்வுகளை நுகர்ந்தால்
2.அது நமக்குள் புகாது அவர்களும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று
3.நல் வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்.