ஒரு சாரார் கடவுளே இல்லை என்கிறார்கள்… எல்லாமே கடவுள் தான் என்பவர்களோ “தன்னுள் தான் அவன் உள்ளான்…” என்பதை மறந்து விட்டனர்

ஒரு சாரார் கடவுளே இல்லை என்கிறார்கள்… எல்லாமே கடவுள் தான் என்பவர்களோ “தன்னுள் தான் அவன் உள்ளான்…” என்பதை மறந்து விட்டனர்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம் அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
1.அரச மரத்தைச் சுற்றினால்
2.அருள் பெற்றிடுவாய் என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள் மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து.. அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
2.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
3.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
4.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.
5.இக்கலியில் வந்த – இக்கலியின் மனிதர்கள்…

“இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

சுவாச நிலை என்ன…? என்று ஒவ்வொரு மனிதனும் புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம்.

அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

வேதனை என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம் நல்ல அணுக்களில் பட்டு உறுப்புகளில் கடுமையான நோய்கள் வருகிறது.

அதை மாற்றிட துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தினால்
2.ஒரு இன்ஜெக்சன் செய்த மாதிரி இந்த உணர்வு சீக்கிரம் ஊடுருவி
3.நாளுக்கு நாள் அந்த அணுக்கள் வலுப்பெற உங்கள் உடலில் உள்ள நோய்களும் குறையும்.

உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்திற்குச் செல்லும். சிந்திக்கும் ஆற்றல் வரும்… உயர்ந்த பண்புகள் வரும்… கோபத்தைத் தவிர்க்கும்… ஆத்திரத்தைத் தவிர்க்கும்… வேதனையைத் தவிர்க்கும்… அருள் வழியில் உங்களால் வாழ முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை விட விட அழுக்குத் தண்ணீரும் சிறுகச் சிறுக நல்ல நீராக மாறுவது போல் நம்மை அறியாது சேர்ந்த தீமைகள் குறையத் தொடங்கும்.

எத்தகைய தீமைகளும் புகாதபடி நீங்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால்…
1.எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் உருவாக்கும்.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி வளர்க்கின்றோமோ அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கூறுங்கள்.

அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க உங்கள் வீடுகளில் அற்புதமான வாசனைகள் வரும்… மகிழ்ச்சியான உணர்வுகள் பெருகும். உற்சாகமும் வரும்…!

ஒவ்வொரு உயிரும் கடவுள்… உயிர் வீற்றிருக்கும் உடல் ஆலயம் என்ற நிலைகள் கொண்டு அதைத் தான் நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்.
1.அதன் வழி நீங்கள் வளர நல்ல உணர்வுகள் பெருக
2.உங்கள் மூச்சலைகள் காற்றிலே பரவ
3.காற்று மண்டலம் புனிதம் பெற
4.உலக மக்கள் நலமும் வளமும் பெற இது உதவும்.

27 நட்சத்திரங்கள் 27 விதமான உணர்வுகள் பரப்பப்படும் பொழுது மின்னலாகப் பாய்கிறது… தூசிகளாகப் படர்கிறது.

இதிலே ஏதாவது ஒரு நட்சத்திரம் அதிகமான நிலைகள் துருவத்தின் வழி கவரப்பட்டுப் பூமிக்குள் நுழைந்து விட்டால் காற்று அழுத்த மண்டலத்திலே துகள்கள் அதிகரிக்கின்றது.

அப்படி அதிகரிக்கப்படும் பொழுது மற்ற நட்சத்திரங்களின் தூசுகளுடன் கலந்தவுடன் எதிர்மறையாகிப் பெரும் சூறாவளியாக சுழல் காற்றாக வந்து விடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உருவானது. நாளுக்கு நாள் இது அதிகரிக்கும் போது அதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும். தப்புவதற்குத் தான் மிக மிக வலிமை மிக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் நம்முடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் நம்முடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்

 

காட்சி:- சிறிய குன்றிலிருந்து பெரிய குன்று, பின் சமமாக இருத்தல்…!

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்நினைவைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்…?

தியான நிலையிலும் அந்நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் கண்டிடுவாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பிட்டால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே மனிதர்கள் உணர்ந்திடவில்லை. தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
1.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள்.
2.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளித்திடுகிறார்.

செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர். அவரின் நிலை அவர் தியான முறை எல்லாமே இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.
3.இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்… உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்…! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்…
2.உங்களால் நிச்சயம் முடியும்.

நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்… மன வலிமையும் பெறுகின்றீர்கள்… அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.

ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்… அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீக எப்படி கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாக சென்று விட்டது தான்.

அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்… சிந்தனைகளை இழக்கச் செய்வதும்… மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டி அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் – காற்றிலே அது உள்ளது.

டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்… அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.

அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.

திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

விவேகமும் கிடைக்கும்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.

எண்ணும் எண்ணம் தான் உயிரின் ஜீவனப்பா…

எண்ணும் எண்ணம் தான் உயிரின் ஜீவனப்பா…

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நால் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

ஈசனின் சக்தி

ஈசனின் சக்தி

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…?

இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ணக் காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…?

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

நம்மைக் காக்க… ஊரைக் காக்க… நாட்டைக் காக்க… உலகைக் காக்க… ஞானிகள் தான் தேவைப்படுகிறார்கள்

 

அகஸ்தியன் ஒரு காலம் நமது பூமியைச் சமப்படுத்தி நேர்பாதையில் வைத்தான்.
1.அந்த அகஸ்தியனுடைய அருளை நாம் பெற்று
2.அருள் ஞானிகளை உருவாக்கி… அவர்களின் துணை கொண்டு
3.பூமிக்குள் நடக்கக்கூடிய பூகம்பங்களையும் நமது பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் ஏற்படும் பூகம்பங்களையும்
4.நமது சூரியனுக்குள் ஏற்படும் பூகம்பங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

அத்தகைய ஞானிகள் தான் இப்போது தேவை.

எல்லோரையும் அகஸ்தியன் அருளைப் பெறச் செய்து அந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்க முடியும்.

நஞ்சை நீக்கிடும் ஆற்றல் இந்தக் காற்று மண்டலத்தில் பரவி… அதை நம் சூரியன் கவருமே என்றால்
1.சூரியனும் தெளிவாகும்
2.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் தெளிவாகும்
3.நாமும் தெளிவாக முடியும்…
4.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த அகண்ட அண்டம் எத்தகைய நிலையில் இருப்பினும் எல்லாவற்றையும் சேர்த்து அதிலே ஒரு பிரபஞ்சமாக ஆனது. பிரபஞ்சத்தில் உயிரணுக்களாகத் தோன்றியது.

பிரபஞ்சத்தில் இருக்கும் உணர்வுகள் அணுவாக மாறியதை உயிரணுக்கள் கவர்ந்து உடலாக மாற்றியது. அதிலே பல கோடி உடல்களைக் கடந்து மனிதனாக ஆனது. இது எல்லாம் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தது.

1.மனிதனான பின் உயிரைப் போல உணர்வை ஒளியாக்கும்
2.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலைகளைத் தான் நம் குருநாதர் காட்டினார்.

அந்த மெய் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் சென்றால் மனிதன் முழுமை அடைந்து மனிதனுக்கு அடுத்த நிலையை நாம் அடைய முடியும்.

நாம் இந்த மனித உடலில் இருக்கும் போது உணவை அன்றாடம் எப்படி உட்கொள்கின்றோமோ அதைப் போன்று
1.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும்
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
3.உயர்ந்த சொத்தாகக் கொடுத்தால் வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு சத்துள்ள ஆகாரத்தைக் கொடுத்து உடலை வளர்க்கின்றோம் ஆனால் நோய் என்று வந்து விட்டால் விஞ்ஞான அறிவு கொண்ட இரத்தத்தில் மருந்தினைச் சேர்த்து அந்தத் தீய அணுக்களை மாற்றுகின்றோம். இருந்தாலும் அது இந்த உடலுக்குத் தான்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் கண்ணின் நினைவு கொண்டு இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் கண் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சி அந்த அருள் ஒளியைப் பெருக்கினால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இதை எளிதில் பெறலாம். ஆலயங்களில் இதைத் தான் காட்டப்பட்டுள்ளது. ஆகவே
1,இந்த உடலில் இருக்கப்படும் போதே நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.அனைவரும் நலம் பெற வேண்டும் அனைவரும் இந்த அருள் ஒளி பெற வேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால்
4.நமக்குள் பகை என்ற நிலையோ நோய் என்ற நிலையோ விபரீத விளைவுகளோ வராதபடி தடுத்துக் கொள்ள இது உதவும்.

ஆகவே வாழக்கூடிய இந்தக் குறுகிய காலங்களில் குரு காட்டிய அருள் வழியில் அருளைப் பெருக்குவோம் இருளை அகற்றுவோம்… ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பிறவி இல்லா நிலை அடைவோம்.

காற்றுக்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர வேண்டும் என்று ஆசைப்படுங்கள்

காற்றுக்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர வேண்டும் என்று ஆசைப்படுங்கள்

 

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்கு உடனடியாக மயக்கம் வருகின்றது. வேதனை என்றாலே அது விஷம் தான். ஏனென்றால் விஷம் உடனடியாக எதிலேயும் வேலை செய்யும்.

ஆனால் வேதனை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த மயக்கத்தை மாற்றிட முடியும்.
1.விஷத்தை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது சிறிதளவு நம் மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சியை ஊட்டும்.

“இந்த மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்ள…” ஒவ்வொரு நொடியிலும் வரும் சங்கடங்களோ வேதனைகளோ வந்தால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்யுங்கள். உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் அதைப் பாய்ச்சுங்கள்.

கண்ணால் பார்க்கப்படும் பொழுது வேதனைக்குண்டான உணர்வுகளைக் கவர்ந்து கண் காட்டினாலும்… “கண்ணுக்குள் இருக்கும் கருமணியில்”
1.விஷத்தன்மை படர்ந்து விட்டால் கண் பார்வை குறைவதும்
2.விஷத்தன்மை அதிகரித்தால் சிந்தனை குறைவதும்
3.விஷத்தன்மை அதிகரித்தால் நரம்பு மண்டலங்கள் பலவீனம் அடைவதும்
4.நல்லதை நம் கண்கள் ஈர்க்கும் நிலையும் குறைக்கப்படுகின்றது

ஆதே சமயத்தில் கண் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றால் கடும் வேதனை வருவதும் இதைப் போன்ற விஷத்தன்மைகளைத் தான் வளர்க்க முடிகிறது.

இருந்தாலும்… கண்களால் எப்படி உற்றுப் பார்த்து நமக்குள் அந்த வேதனை வந்ததோ அதே கண்ணின் நினைவு கொண்டு “நாம் உயர்ந்த சக்திகளைக் கவர முடியும்…”

ரேடியோ டிவிக்களில் ஆண்டென்னா என்ற சாதனத்தைப் பொருத்தி காற்றில் உள்ளதைக் கவர்வது போன்று..
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை யாம் உங்களுக்குள் பதிவாக்கியதன் துணை கொண்டு
2.இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்
3.அதை உயிர் வழி கவருங்கள்… உங்கள் கண் வழி உடலுக்குள் செலுத்துங்கள்.

ஏனென்றால் அதே கண்ணால் பார்த்தது தான்… அதன் வழியிலேயே துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத்தன்மைகளைக் குறைக்கும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் விஷத்தை முழுமையாக ஒரு நிலையில் நிறுத்த முடியாது.

ஆக உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தவே “இந்தத் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம்…”

யாரோ செய்வார்… என்பதற்குப் பதிலாக..
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் சேர்த்து
2.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு அதனின் வலிமையை உங்களுக்குள் செலுத்தி
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை நல்ல அணுக்களாக நீங்களே மாற்றிவிடலாம்.

உடலில் நோய் வந்தால் அதை மாற்ற டாக்டரிடம் செல்கிறோம். மருந்தைக் கொடுத்து நோயைத் தான் அவர்களால் போக்க முடிகிறது. இருந்தாலும் நோய்க்குக் காரணமான “ஊழ்வினை என்ற வித்தை…” அவர்களால் மாற்ற முடியாது.

மருந்தினால் நோயைக் குறைத்த பின் மீண்டும் இதே உணர்வுகள் “சிறிது குறை…” என்று வேதனைப்பட்டால் அதை நுகர்ந்து இரத்தத்தில் கலந்து வேதனையான அணுக்களை நமக்குள் உருவாக்கத் தொடங்கிவிடும்.
1.மீண்டும் உடல் உறுப்புகள் பலவீனம் அடையத்தான் செய்யும்.
2.முழுமையாக அதிலே விடுதலை அடைய முடிவதில்லை.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் எடுத்துக் கொண்டால் உயிர் என்றுமே நம்மை ஏகாந்த நிலை அடையச் செய்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

சகஜ வாழ்க்கையில் இருப்பது போல் பண்பு பரிவு பாசம் கொண்டு பிறருடைய வேதனையான உணர்வினை நுகர்ந்தோம் என்றால் “இன்னொரு ஆன்மா நமக்குள் வந்து” வேதனையைக் கூட்டும். பின் இந்த உடலை வீழ்த்தும்.

இந்த உடலை விட்டு வெளியே செல்லும்போது நமது ஆன்மா உயிருடன் சேர்ந்து எத்தகைய வேதனையின் ஆன்மாவாக இருக்கின்றதோ அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்று “வேதனைப்படும் உடலாக நம் உயிர் உருவாக்கிவிடும்…” என்பதை நீங்கள் மறந்திடலாகாது.
1.ஆகவே உயிரான ஈசனை மதித்து வாழுங்கள்.
2.மனிதனான பின் தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும்…!

அருள் வாழ்க்கை வாழ்வோம் இருளைப் போக்குவோம் பேரருள் பேரொளியாக மாறுவோம். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம் மெய்வழி செல்வோம்… மெய்ப்பொருள் காணும் திறன் பெறுவோம்… மெய்ஞானம் பெறுவோம்.

அவன் தந்த ஒளியை அவனதாக்கி… அவனுடன் ஐக்கியமாகுவது தான்… மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி

அவன் தந்த ஒளியை அவனதாக்கி… அவனுடன் ஐக்கியமாகுவது தான்… மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி

 

ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான்…? என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?

ஆண்டவனையே இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.

அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழை பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.

ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?

கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.

1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை… வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்நிலையே அப்பொழுது சுற்றுகிறது.

அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அந்நிலை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.

1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.

அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!

சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?

பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..?
1.தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை
2.பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.
3.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
4.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.

கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?

இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.

அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.

நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!

அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

 

இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.

1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.

துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்றுகண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.