துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

அதே சமயத்தில்
1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது
2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு
3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது
4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான “பட்டாம் பூச்சிகளாக” மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

முதுமை என்பது உடலுக்குத் தான்… நமக்கு இல்லை…!

 

“மகரிஷிகள்…” அவர்கள் வாழ்ந்த காலத்தில் எதனை இனிமை கொண்டு வளர்த்தார்களோ அதைப் போன்று
1.நம்முடைய இந்த மனித உடல் வாழ்க்கை – முதுமையிலும்
2.அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை உடலிலே வளர்த்திடல் வேண்டும்.
3.ஒளியின் சிகரமாக வளர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்…” என்று அந்த மன உறுதி கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் அத்தகைய நிலைகள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அண்ட அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் விளைய வைத்து ஒளிச் சரீரம் பெறும் அந்த மூச்சலைகளைப் பூமியில் பரவச் செய்வோம்.

தானியங்களின் வித்தைம் விளை நிலைங்களில் ஊன்றி பல பல தானியங்களாக விளைய வைத்து எல்லோருடைய பசியைப் போக்குவது போல மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை நமக்குள் ஊன்றி வளர்த்து அந்த வித்தின் தன்மை பல மகசூலாகப் பெருக்குவோம்.

அதன் மூலம்…
1.பிறருடைய ஆனந்தப் பசியை ஆற்றும் நிலையாக…
2.பேரானந்தப் பசியை ஆற்றும் அருள் வித்தாக நமக்குள் விளைய வைத்து இந்தப் பூமி முழுவதும் பரப்புவோம்.
3.அனைவரும் அதைப் பருகி பேரானந்த பெரு நிலை பெறச் செய்வோம்… அதனை வளர்த்திடுவோம்.

முதுமை என்பது உடல் வாழ்க்கையில் வெறும் வயதினால் வரும் முதுமை அல்ல. இந்த உடலின் தன்மை அது முதுமை அடையப்படும் போது… அதாவது ஒரு தானியம் அது முதுமை அடையப்படும் பொழுது வித்தின் தன்மையை அது முதுமையாக்கி அந்த உணர்வினை வித்தாக (பலன்) உருவாக்குகிறது.

அதைப் போல நம் உயிரின் தன்மை மனித உடலை உருவாக்கிய பின்… அறிந்திடும் உணர்வு கொண்ட ஒளியின் சரீரம் பெற்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.இந்த உடலை முதுமையாக்கி… (பாம்பு தன் சட்டையைக் கழற்றுவது போல்)
2.உணர்வின் தன்மை என்றும் இளமையாக்கும் நிலைகள் நமக்குள் வளர வேண்டும்.

காரணம்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.
2.இளமை பெற்று… அது உடலிலே முதுமை பெறும் போதுதான் முதுமையின் வித்தாக உரு பெற்று
3.உணர்வின் அறிவாக உயிருடன் ஒன்றிய நிலையாக அடுத்த அறிவின் ஞானச் சுடராக உணர்வின் சரீரத்தை வளர்க்கின்றது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு… உயிருடன் ஒன்றி முழுமையின் நிலைகள் பெற்று… முழுமை அடையும் தன்மையாகப் பேரானந்தப் பெரு நிலையை நமக்குள் வளர்த்திடுவோம்.

அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைவித்த அந்த அருள் உணர்வின் சத்தான வித்துக்களை உலகமெங்கும் பரப்புவோம்.

அதை நுகர்ந்தறிவோர் உணர்வுகளிலும் அந்த வித்துக்கள் படர்ந்து அவருக்குள் பேரானந்தப் பெரு நிலை அடையும் நிலையை அடையட்டும்.

அருள் ஞானிகளின் அரும்பெரும் சக்தியை அனைவரையும் பெறச் செய்வோம் என்று நாம் வாழ்த்தி வளர்த்திடுவோம்… வளர்ந்திடுவோம்…!

தன்னிச்சையாகப் பெற வேண்டிய உயர் ஞானம் – ஈஸ்வரபட்டர்

தன்னிச்சையாகப் பெற வேண்டிய உயர் ஞானம் – ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது…
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி…
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை… உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ… எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ…
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்… அச்சம்… நாணம்… என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ… அவ்வுணர்வின் குணமும்… செயலும்… கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக…
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்… வாழ்க்கையின் செயலுக்கும்…
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.