நீங்கள் ஒவ்வொருவரும் மகரிஷிகளாக உருப்பெற வேண்டும்

நீங்கள் ஒவ்வொருவரும் மகரிஷிகளாக உருப்பெற வேண்டும்

 

விண்ணுலக ஆற்றலும்… மண்ணுலக ஆற்றலும்… உயிரின ஆற்றலும்… எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எமக்கு (ஞானகுரு) எடுத்துரைத்தார்.
1.உபதேச வாயிலாக எனக்குள் ஞான வித்தாகப் பதியச் செய்தார்.
2.அவர் பதியச் செயத உணர்வினை நினைவு கொண்டு நான் எடுக்கப்படும் போது
3.விண்ணின் ஆற்றலைப் பருகும் தன்மைகள் எனக்குள் வந்தது… மண்ணுலக ஆற்றலை அறியும் தன்மையும் வந்தது.

விண்ணுலகம் சென்றடைந்து ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் மண்ணுலகில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் இங்கே நமக்கு முன் பூமியிலே பரவி உள்ளது.

தீமைகளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றலாகத் தனக்குள் விளைய வைத்த அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் கவர்தல் வேண்டும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் பெறுவோம்… மகிழ்ந்திடும் வாழ்க்கையாக வாழ்வோம்
2.மகிழ்ச்சி பெறும் செயலாகச் செயல்படுத்துவோம்
3.நாம் பார்ப்போரெல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று மகிழ்ந்து வாழ்வோம்.

பிறர் ஆனந்தமாக வாழ்வதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் புத்துணர்வு பெற்று அவர்கள் குடும்பம் நலம் பெறுவதை எண்ணி எண்ணி அந்த நலம் பெறும் சக்திகளைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறுவோம்.

நாம் பார்ப்போர் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும் உலகம் நலம் பெற வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்.

குருநாதர் அனுபவம் பெறுவதற்காக வேண்டி எமக்கு எத்தனையோ இன்னல்களைக் கொடுத்தார். அதை எல்லாம் கடந்து அவர் காட்டிய வழியில் மெய் ஞானத்தை எனக்குள் வளர்க்க முடிந்தது. ஞான வித்துக்களாகப் பெருக்கவும் முடிந்தது.

அந்த நல்ல விதைகளை உங்களுக்குள் விளையச் செய்வதற்கு மீண்டும் மீண்டும் நினைவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).
1.நாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்… என்ற
3,இந்த உயர்ந்த எண்ணத்தை வளர்ப்பதற்காக மகரிஷிகளின் சக்திகளை அருள் ஞான வித்துகளாகப் பதியச் செய்கிறோம்.

இந்தப் பூமி முழுவதும் சுற்றப்பட்டு அந்த அருள் ஞான வித்துக்கள் அழிந்திடாதபடி உங்களுக்குள் அதை விளையச் செய்ய ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானத்திலும் பௌர்ணமி தியானத்திலும் இதை உணர்த்திக் கொண்டே வந்திருக்கின்றோம்.

தீமைகளை அகற்றக்கூடிய வாக்காகக் கொடுத்து அதன் வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யும் பொழுது ஏற்றுக் கொள்வார் எத்தனை பேர் இருக்கிறார்கள்…?

அது போன்று ஆகாதபடி…
1.அருள் ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி அது ஓங்கி வளர்ந்து
2.மகரிஷிகளின் அருள் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் உருப்பெற வேண்டுமென்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

நீர் சக்தி என்ற ஜீவ சக்தியின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

நீர் சக்தி என்ற ஜீவ சக்தியின் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ… அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு…
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்…! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ… அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்… செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே… ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது… “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி… அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு… செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்… காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே… இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்… இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலை பெற… நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது…?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது…?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான… மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்… புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய…
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட… வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை… இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்… வார்த்தையோடும்… எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்… வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி…
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை… இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்… ரிஷிகள் எழுதிய காவியத்தில்…
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்… காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

இந்த மனித வாழ்க்கை மாய வாழ்வாக இருக்கின்றது… நீ எதைக் காணப் போகிறாய்…? என்று கேட்டார் குருநாதர்

இந்த மனித வாழ்க்கை மாய வாழ்வாக இருக்கின்றது… நீ எதைக் காணப் போகிறாய்…? என்று கேட்டார் குருநாதர்

 

1.நோய் எல்லாம் போய்விடும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று யாம் (ஞானகுரு) சொன்னால் எங்கெங்கே…? என்று அதைத்தான் திருப்பிக் கேட்கிறார்கள்.
2.குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது… என்று சொல்வார்கள். “அது எல்லாம் நீங்கிப் போய்விடும்… நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள்…” என்று யாம் சொல்வோம்.
3.நீங்கள் சொல்கிறீர்கள்… என் பையன் எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று சொல்லி
4.யாம் கொடுக்கும் வாக்கினை அப்பொழுதே அதை ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டுத் “தந்திரமாக…” உங்கள் உடலிலே அருள் உணர்வைப் பாய்ச்சி… அருள் ஞான வித்தை உங்களுக்குள் தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி செய்கிறோம்.

ஆனால் விளை நிலத்தில் விதைத்த விதைகளை எறும்புகள் எடுத்துச் சென்று எப்படி முளைக்காமல் செய்து விடுகின்றதோ… அதைப் போல்
1.உங்கள் உடலில் ஏற்கனவே பதிந்த சாப அலைகள் நின்று
2.யாம் கொடுக்கும் உபதேச உணர்வுகளை ஆழமாகப் பதிய விடாதபடி அது தடுத்து விடுகிறது.

எம்மிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். பின் ஊருக்குப் போய் வருகிறேன் என்பார்கள். ஆனால் அடுத்த கணம் என்னுடைய கஷ்டம் இப்படியெல்லாம் இருந்து கொண்டே இருக்கிறதே என்று திருப்பி
1.நான் கொடுத்த வாக்குகளை விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்
2.நான் கொடுத்த அருள் வாக்கை இங்கேயே விட்டுவிட்டு கஷ்டத்தைத் தான் வாங்கிச் செல்கின்றார்கள்.

காரணம் இந்த சாப அலைகளே இதற்கு மூலம் ஆகின்றது. அவருடைய குறை அல்ல. ஆகவே நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை.

முந்தைய நிலையில் உங்களுக்குள் விளைந்த உணர்வுகள் உங்களை அறியாது எப்படி எல்லாம் இயக்குகின்றது…? அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் வீட்டில் ஒருவர் சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படிச் செல்கின்றது…? நன்றாக இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்கின்றீர்கள். ஆனால் அவரால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை என்றால் உங்கள் மனது அது எப்படி ஆகின்றது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் எண்ணிலடங்காத பேர் என்னிடம் வாக்கினை வாங்கிச் செல்கிறார்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று குருநாதர் கொடுத்த நிலைகளை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

என்னை எத்தனையோ ஆபத்தான நிலையில் எல்லாம் குருநாதர் சிக்க வைத்தார். ஒவ்வொரு நொடியிலும் அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது…? நீ எப்படி இருக்க வேண்டும்…? என்று
1.மூன்று லட்சம் பேரின் குடும்ப நிலைகளைக் காட்டி
2.மனித உடலிலே மாய வாழ்வாகத் தான் இருக்கின்றது
3.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…? என்றார்

என்றும் நிலையான நிலைகளில் இருக்கும் மகரிஷிகளின் எல்லையை நீ எப்படி அடைய வேண்டும்…? என்று .தெளிவாகச் சொன்னார். இதை எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டுகின்றார்.

நம்முடைய கடைசி எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான். அவர்கள் ஒளிச் சரீரம் பெற்று வாழும் சப்தரிஷி மண்டல எல்லையில் தான் நாம் இருக்க வேண்டும்.. அதைத் தான் பின்பற்ற வேண்டும்…! என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

மனிதச் செயலின் வீரியம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது – ஈஸ்வரபட்டர்

மனிதச் செயலின் வீரியம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய… விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க… வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய… விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்… மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்… பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
3.விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது…!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்… இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய… உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல… தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்… சூழ்ந்து விட்டது…!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு…
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை… ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது…
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே… செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு… பார்த்து… பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்… எதனையும் உணரும் பக்குவம் மாறி… இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்…
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்…
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்… தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு… செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ… தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை…!

அருள் சேவை

அருள் சேவை

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.

குருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…! என்ற நிலைகள் வேண்டாம்.
1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…
2.அங்கே நீ என்னைக் காணலாம்…! என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .

ஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

எந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…
2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ
3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.

எத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்
1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.
2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.
3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று
4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.

ஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெற வேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .
1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.
3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்
4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.
6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.

இந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது…! என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.

மனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…!

ஞானக்கண் என்ற நம்முடைய கவன ஈர்ப்பு நரம்பு – ஈஸ்வரபட்டர்

ஞானக்கண் என்ற நம்முடைய கவன ஈர்ப்பு நரம்பு – ஈஸ்வரபட்டர்

 

நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நான்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தை செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!

அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பேரானந்த நிலை அடைவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பேரானந்த நிலை அடைவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

எனக்குள் (ஞானகுரு) இருளச் செய்து கொண்டிருக்கும் உணர்வுகளை நான் அறிந்திடும் வண்ணமாக குருநாதர்… அவருக்குள் அறிந்திடும் சக்தியாக வளர்த்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகளைச் சொல்வாக்காக எனக்குள் பதிவு செய்தார்.

அவர் கொடுக்கும் அந்த அருள் சக்திகள் எவ்வாறு இயங்குகின்றது என்று எனக்கு உணர்த்தி… அந்த அருள் ஞான வித்துக்களை எனக்குள் குருநாதர் விளையச் செய்திருந்தாலும்
1.என்னுடைய மனித வாழ்க்கையில் நான் ஏற்கனவே வளர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.அவர் கொடுத்த அருள் சக்தியை நான் அறிய முடியாது இயக்கி
3.மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே மங்கச் செய்து கொண்டு வந்தது.

காரணம்… ஒரு பொருளுடன் நஞ்சு இணைந்து விட்டால் மீண்டும் அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் நஞ்சின் செயலாகவே மாறிக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காக எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

என்னுடைய இந்த மனித வாழ்க்கையில்
1.நான் வளர்த்துக் கொண்ட ஆசைகள் கொண்டும்
2.எனக்குள் மதிப்பைத் தேட வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டும்
3.சுய கௌரவத்தை மனதில் வைத்துக் கொண்டும் நான் இயக்கப்படும் போது
4.அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்
5.பைத்தியக்காரனுடன் (ஈஸ்வரபட்டர்) சுற்றிக் கொண்டிருக்கிறான்
6.பிழைக்கத் தெரியாதவன் என்று இழிவான பேச்சுகளாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் எங்கே போனாலும் சரி… என் நண்பனே என்னால் அவன் சௌகரியப்பட்டிருந்தாலும் கூட “பைத்தியக்காரன்…” என்று என் கண் முன்னாடியே என்னைப் பேசுகிறான்.

தெரிந்தவர்கள் என்று ஒரு கடையிலே போய் உட்கார்ந்தாலும் கூட பைத்தியத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்… நீயும் ஒரு பைத்தியம்… நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போ…! என்று விரட்டி விட்ட நண்பர்களும் உண்டு.

குருநாதரோ… மிகப்பெரிய சக்திகளை எனக்குக் காட்டி அது எவ்வாறெல்லாம் விளைகிறது…? என்ற நிலையையும் பல அற்புதங்களையும் என்னையே செய்யச் சொல்கிறார். அற்புதங்களை என்னை நேரடியாகவேக் காணச் செய்கிறார்.

அதை எல்லாம் செய்து “பொருளை அறியும் ஆற்றலும்…” அறிந்தபின் அது உருபெற்று அதனால் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபங்கள் (பணம்) வரும் என்று இந்த உடலின் தன்மையிலேயும் ஆசையை ஊட்டுகிறார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் ஆற்றலைப் பெற்று இந்த உடலில் வந்த இருளை நீக்கிப் “பெரும் செல்வமான பேரானந்த நிலைகள் எவ்வாறு பெறலாம்…?” என்ற நிலையைக் குருநாதர் காட்டினாலும்
1.அவர் கொடுக்கும் சக்திகளை வைத்து
2.இந்த மனித வாழ்க்கையில் என்னை நீங்கள் மதிக்க வேண்டும்
3.எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்… என்னைச் செல்வந்தனாக மதிக்க வேண்டும்
4.எனக்குள் பெரும் சக்தி இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் எனக்கு அதிகமாக வந்தது

ஆக… ஒரு பக்கம் பேரும் வரும்… புகழும் வரும்… காசும் வரும்… மகிழ்ச்சியும் ஊட்டுவார். ஆனால் என் வீட்டிற்குள் வந்தால் கடும் தரித்திர நிலையைக் காட்டுவார்.

அப்போது தான் ஒன்றைச் சொல்வார்…!

எதன் வழிகளிலே நீ தேடினாலும் அது இருள் சூழ்ந்த நிலைக்கே இந்த உடலின் பற்றுக்கே வருகிறது. உடலின் பற்றுக்கு வந்தால் நான் கொடுத்த பெரும் சக்திகள் மறைந்து விடும். இருளைப் போக்கும் நிலையை அறுத்துவிடும் என்றார்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் காட்டுகின்றார் குருநாதர்.

பூமியில் இருந்து மனிதனாகப் பிறந்த நீ
1.இந்த உடலை விட்டு எவ்வாறு வெளியே செல்ல வேண்டும்…?
2.சென்றபின் எந்த நிலையில் நீ நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரியச் செய்கிறார்…
2.ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்…
3.ஒளியின் சுடராக ஆனபின் அது எந்த நிலையில் இருக்கும்…? என்று
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் அதையும் நிலைத்துக் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். மற்றொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார். இதில் என்ன செய்வதென்றே ஒன்றும் புரியவில்லை.

குருநாதர் பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.இதைப் பிடிப்பதா… அல்லது அதைப் பிடிப்பதா…!
2.அல்லது அவர் சொன்னதைப் பிடிப்பதா…? என்ற நிலை எனக்கு வருகின்றது.

அவர் கொடுக்கும் சக்திகளை நான் சரி வரப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல சந்தர்ப்பங்களில் இப்படி அனுபவத்தைக் காட்டி எனக்குள் தெளிந்து தெரியும்படி செய்தார்.

அதிலே முழுமை பெற்ற உணர்வுகளை… உயிருடன் ஒன்றி ஒளியாகப் பெறும் ஆற்றலைத் தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

மகரிஷிகளின் நேரடி வலுவில் நாம் இருந்தால் எந்த நச்சுக் காற்றும் நம்மைப் பாதிக்காது – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளின் நேரடி வலுவில் நாம் இருந்தால் எந்த நச்சுக் காற்றும் நம்மைப் பாதிக்காது – ஈஸ்வரபட்டர்

 

இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்…”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி… ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்…”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்… நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி… அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்… நமக்குள் இறைவன்…! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு… இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்… அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை… சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை… நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது…
1.நாம் வேறல்ல…
2.அந்த ரிஷிகள் வேறல்ல…! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்… தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்… தான் பெற்ற உயர் ஞானத்தால்… சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது… எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே…
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்…!

பல கோடி வருடங்களாய்… உயிர் பெற்று உருவாகி உருவாகி… உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்… ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்… தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை… தனக்குள் வளரும் இறை அணுக்களை… “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக…!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்… நிச்சயம் செயல் கொள்ள முடியும்.

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

 

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற அந்தப் பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் எண்ணத்தில் தெரிந்து கொண்ட உணர்வுகளுக்கு எல்லாம்… நம் உடல் உறுப்புகளில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் கண்ணின் நினைவைச் செலுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
2.கல்லீரல் மண்ணீரல் சிறுகுடல் பெருங்குடல் தசை மண்டலம் தோல் மண்டலம் இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு
3.அருள் சக்திகளை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு முதலில் வந்து விட்டால் அடுத்து இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை எளிதில் தூய்மைப்படுத்திவிடலாம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தின் வழி சென்று மற்ற உறுப்புகளில் அந்தக் கரு முட்டை அடைகிறது.
2.அங்கே தேங்கி விஷத்தன்மை கொண்ட அணுக்களாக அங்கே உருவாகத் தொடங்கும்.

அத்தகைய அணுக்கள் உருவானால் அந்த உறுப்புகளில் வேதனையோ அல்லது வலியின் தன்மையோ அல்லது மடிந்து போகும் தன்மையோ வரும்.

காரணம் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவானால் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அது பலவீனம் அடைந்து அங்கே வலியும் வேதனையும் வரும்.

வேதனை என்றாலே நஞ்சு. வேதனை என்ற உணர்வை வளர்த்து விட்டால் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் விஷமான நிலைகளாகப் பாய்ச்சப்பட்டு அதில் எத்தகைய உணர்வோ அதற்குத் தக்க இந்த உடலை விட்டு உயிர் செல்லப்படும் பொழுது மாற்று உடலை உருவாக்கும்… மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்…
1.எப்படியோ காசைப் போட்டு இப்படிப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம்… உறுப்புகளை மாற்றித் தப்பித்துக் கொள்ளலாம் என்று…!
2.ஆக… சிறிது நாள் வாழலாம்… பின் நாம் எங்கே செல்கிறோம்…? என்று சொல்ல முடியாது

ஆகவே அருள் ஞானிகள் உணர்வை நாம் பெற்று இனி வரக்கூடிய காலங்களில் அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெற்று அந்த அகஸ்தியனின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகள் உலகமெங்கும் பரவ வேண்டும் உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணித் தியானிக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு உலக மக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அந்த அளவிற்கு நமக்குள் அது வளர்ச்சி அடையும்.

மனிதப் பிறவியின் பலன் – ஈஸ்வரபட்டர்

மனிதப் பிறவியின் பலன் – ஈஸ்வரபட்டர்

 

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதை கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டி தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!