பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஒளியாக வாழும் உயிரான்மாக்கள் உண்டு

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றி இங்கே உபதேசிக்கும் பொழுது… அவன் கண்ட உணர்வுகளை நீங்கள் நுகர நுகர… அந்த அணுக்கருக்களாகப் படிப்படியாக உங்கள் உடலுக்குள் மாற்றம் ஆகும்.

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தாக உங்களுக்குள் மாறி அதன் வழி கொண்டு தீமைகளை அகற்றிடும் அணுக்கள் பெருகும்.

அத்தகைய அணுக்கள் பெருகினால்…
1.பிறவியில்லா நிலை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியரிடம் அழைத்துச் செல்லும்
2,அடுத்து நாம் பிறவியில்லா நிலையை அடையலாம்.

உதாரணமாக ஒரு நண்பர் வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம். அந்த வேதனையை அதிகமாக நாம் நேசித்து விட்டால் அவரின் உனர்வு நமக்குள் விளையத் தொடங்குகிரது.

ஆனால் நண்பர் உடலில் வேதனை அணுக்கள் பெருகி வளர்ந்த நிலையில் நோயை விளைய வைத்த அந்த உயிரான்மா வெளி வந்துவிடுகிறது.

வெளி வந்தபின் நம் உடலில் புகுந்து விடும். ஏனென்றால் அவருடைய உணர்வு நம் உடல் வலிமையாக இருக்கும் பொழுது நமக்குள் வந்துவிடுகின்றது

உதாரணமாக ஒரு ஆடு நரியைப் பார்த்து அதனுடைய வேக உணர்வைக் கண்டு அஞ்சி… அதையே சுவாசித்தது என்றால் நரியின் உணர்வை ஆடு நுகர… நுகர… அந்த நரியின் வலுவான உணர்வு ஆட்டின் உடலுக்குள் வந்த பின் நோயாக மாறுகின்றது.

பின் நரியை எண்ணி எண்ணி இந்த உடலின் தன்மை வலுப் பெற்று விட்டால் ஆடு மடிந்த பின் உடலை விட்டு வெளி வரும் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சியில் நரியாக விளைகின்றது.

இப்படித் தான் நாம் பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களைப் பெற்று மனிதனாக இன்று வந்துள்ளோம். ஆனால் நோயுற்றவரின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகப் பெருக்கிய பின் அதே நோயின் தன்மை நமக்குள்ளும் வளர்கிறது.

நோயினால்…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றி… விஷத்தின் தன்மை அதிகமாகப் பெருகி
2.எந்த மனிதன் பாசத்துடன் நம்மை அதிகமாக நேசித்தானோ
3.நாம் இறந்தபின் அந்த உடலுக்குள் தான் செல்வோம்… நம் இருப்பிடம் அதுதான்

ஆனால் இந்த மனிதனின் வாழ்க்கையில் முழுமை பெற்ற ஞானிகளும் மகரிஷிகளும் பிறவியில்லா நிலையை அடைந்து அகண்ட அண்டத்தில் இன்றும் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை என்று முடிவடைந்த அந்த உயிர்கள்
2.அகண்ட அண்டத்தில் எங்கே… எது… உருவானாலும்
3.அதனின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
3.இப்படி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒளியாக ஆனவர்கள் உண்டு.

நம் சூரியக் குடும்பம் மட்டும் இந்த அண்டத்தில் வாழவில்லை. எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்கள் உண்டு ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் நம் பூமியைப் போன்று ஒரு பூமி உண்டு.

அதிலே வடித்த உணர்வுகள்… அதிலே உருவான உயிர்களுக்கு ஒளியாக மாறும் ஆற்றலும் உண்டு, அத்தகைய நிலையை நாமும் பெறுவதற்குத் தான் இந்த உபதேசம்.

மனித ஜெனனம் எப்படி நடக்கிறது…? – ஈஸ்வரபட்டர்

மனித ஜெனனம் எப்படி நடக்கிறது…? – ஈஸ்வரபட்டர்

 

“ஒலி கொண்டு உராயும்…” அமிலச் சேர்க்கையின் வார்ப்பின் வார்ப்பாகத்தான் பல தொடர்பலையில் வலுக் கொண்ட உயிராத்மாவானது… சுவாச ஈர்ப்பில் நம் உடலுக்குள் எண்ண நிலைக்கொப்ப குண நல ஈர்ப்புப் பிடியில்… சில சில காலங்களில் வந்து சேர்கிறது.

அதாவது மனித எண்ணத்தின் பன்னிரெண்டு வகை குண அமில நிலைக்கொப்ப எந்தக் குண நிலை கொண்டுள்ளோமோ அக்குண ஈர்ப்புத் தொடர் கொண்ட ஆத்ம உயிரானது… நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் உணர்வின் குண நிலைக்கொப்ப “நம் சுவாசமுடன்” நுரையீரலில் உட்புகுந்து விடுகிறது.

எந்த ஆத்மா நம் குண ஈர்ப்பிற்கு நம் சுவாசமுடன் வந்ததோ அவ்வுயிராத்மாவின் துடிப்பு நிலை நம் சுவாசமுடன் நுரையீரலில் உட்புகுந்து அதன் துடிப்பான அணுக்களை வளர்த்து இரத்த நாளங்களில் உட்புகுந்து விடுகிறது.
1.ஆத்மாக்கள் பெரும்பகுதி குடியிருக்கும் இடம் இரத்தநாளங்கள் தான்.
2.அதிலே சுழன்று கொண்டே இருக்கும்.

அப்படிச் சுழலும் நிலையில் அதற்குகந்த வேட்கை குண அணுக்களை நம் உடலில் வளர்க்கத் தொடங்குகிறது.

நாம் சில சந்தர்ப்ப காலங்களில்
1.தன் நிலை மறந்த உணர்வுடன் கூடிய ஈர்ப்பு எண்ணத்தில் செல்லும் பொழுது
2.நம் உடலுக்குள் குடி வந்த ஆத்மாவானது
3.அது வளர்க்கும் அணுக்களின் அதன் எண்ணச் செயலில் வேகத்தால்
4.அதன் ஈர்ப்புப் பிடிக்கு நம்மை உட்படுத்தி… அதன் வசத்திற்கு நாம் செல்லும் காலங்களும் உண்டு.
5.அவையே நம் வளர்ப்பின் கருவாக உருப்பெற்று குழந்தைகளாக ஜெனனம் பெறுவதும் உண்டு.

நற்குண சுவாச ஈர்ப்பில் முந்தைய காலத் தொடர்பு கொண்ட வலுப் பெற்ற உயிராத்மாக்களும் தொடர்பு கொண்டு ஈர்ப்புப் பிடியில் ஜெனனத்திற்கு வருகின்றன.

இரத்தநாளங்களில் உள்ள இவ்வுயிராத்மாக்கள் தான் ஆண் பெண் உறவு நிலையில்
1.காந்த ஈர்ப்பு நுண் அலையை வளர்க்க வல்ல வண்ணங்களில்
2.வெண்மை அமிலக்கூறின் வார்ப்புச் செயலான ஆணின் அணு வளர்ப்பின் சேர்க்கை வித்துடன்
3.காந்த மின் அலையை ஈர்க்க வல்ல வீரிய உணர்வு கொண்ட உஷ்ண அலையின் சேர்க்கைக் காலங்களில்
4.நம் உடலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
5.பெண்ணின் வீரிய குண உஷ்ண அணுக்களின் உயிரணு வளர்க்கும் காலங்களில்
6.ஆணின் அமிலச் சேர்க்கையில் கரு ஈர்ப்பிற்கு வந்து கருத்தரிக்கின்றது.

கருத்தரித்த காலத்தில் தாய் எடுக்கும் சுவாசத்தால் இக்கருவானது அதன் உயிர் ஆத்மா திடம் (உடல்) கொள்கிறது, திடம் கொண்ட நிலையில் அவ்வாத்மா வளர்க்கும் அவ்வமிலத்தின் உஷ்ண அலையில் உயிரணுக்கள் வளரத் தொடங்குகிறது.

கருவுற்ற நிலையில் அந்த ஆத்மா உராய்ந்து உராய்ந்து வலுப் பெற்று உருவாகி வளரும் அந்த அணுக்களின் மலம் வெளிப்பட்டு அதுவே மீண்டும் அணுவாகி வளரும் கரு வளர்ப்பு வார்ப்பு சரீர நிலையாக உருவாகின்றது.

தாயின் கர்ப்பத்திலேயே கர்ப்பப் பையில் தான் அவ்வாத்மாவும் வளர்கின்றது. ஆத்மாவின் ஈர்ப்பு உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் அக்கரு வளர்ந்து அக்கருவின் எலும்புப் பாகங்கள் உறுதி கொள்கிறது.

எலும்பின் ஈர்ப்பு வளர்ச்சி வளர்ந்த பின்பு தான் அந்த உயிராத்மாவானது ஜெனனப் பிறப்பிற்கு வருகின்றது.

வலுக் கொண்ட காந்த ஈர்ப்பு வார்ப்பு வார்ப்பாக சரீரம் உருவான பிறகு…
1.அச்சரீரத்தை இயக்கி வளர்ந்த ஆத்மா வலுக் கொண்ட பிறகு
2.தாயின் சரீரத்திற்கும் சேயின் சரீரத்திற்கும் தொடர்பு கொண்ட
3.தொப்புள் கொடியின் தொடர் ஓட்ட நிலை சேய் வளர்ச்சி கொண்ட நிலையில்
4.தாயின்றித் தனித்துச் சக்தி பெறும் ஆற்றல் கொண்ட நேரத்திலேயே
5.அதன் துடிப்பு வேகம் அதிகப்பட்டு…
6.தாய்க்கும் சேய்க்கும் தொடர்பான தொப்புள் கொடியைப் பிரித்துக் கொண்டு
7.தன் இச்சைக்கு வளரும் சிசுவாகப் பிறக்கின்றது.

தாயின் கருவில் சிசுவாக வளரும் காலத்தில் துடிப்பு நிலையின் இயக்கம் ஒன்று தான் அச்சிசுவிற்கு உண்டே தவிர… சிறுநீர் கழிப்பதோ.. மலம் கழிப்பதோ… சுவாசம் எடுப்பதோ… உணவு எடுப்பதோ… இச்செயல்கள் எவையும் இல்லை.

ஆனால் தாயெடுக்கும் சுவாசத்தால்… தாய் எடுக்கும் உணர்வுகளின் எண்ணத்தின் அலைத் தொடர்பு யாவையுமே… ஒலி ஈர்ப்பின் தொடர்பை அச்சிசு பெறுகின்றது.

கரு வளர்ப்பில் அக்கருவின் ஆத்மா தாய்க்கும் சேய்க் கருவிற்கும் தொடர்பு கொண்ட “உதிரத் தொடர்பில்”
1.உதிர அணுக்களின் வளர்ப்பணு உராய்வு திட வளர்ப்பினால் தான்
2.அணு முட்டையாகத்தான் கரு உருவகம் பெறுகின்றது
3.உண்டு கழித்து உருவாகுவது இல்லை… “உருவாகும் உயிரணுக் கரு…!”

உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் உயிராத்மா தாயின் உதிரத் தொடர்பைக் கொண்டு தன் வளர்ப்பிற்குச் சத்தெடுத்து உருவாகின்றது.. வளர்கின்றது… பிறக்கின்றது.

பிறந்த பிறகுதான் தன் இச்சையில் சுவாசம் எடுத்து உணவெடுத்து செவி ஈர்ப்பும் ஒளிப் பார்வையும் ஒளி வீச்சும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனித உரு கரு உருவாகும் தருணத்தில் உருவங்களும் நிறங்களும் அங்க அவயங்களின் வார்ப்புகளும் தாயின் உதிர உஷ்ண ஓட்டத்தால் இவ்வாத்ம உயிர்…
1.ஏற்கனவே எந்தெந்த முலாமில் எல்லாம் வார்ப்பாகி வார்ப்பாகி வலுக் கொண்டு வழித் தொடர் பெற்று
2.எதை வளர்க்கக்கூடிய வித்தாக அவ்வுயிராத்மாவின் முலாம் இருந்ததோ
3.அதன் தொடர்பு கொண்ட உருவக அங்க இலட்சணங்கள் தான்
4.கருவகக் காலத்தில் பெற்று வந்த வார்ப்பு உருவாகப் பிறப்பெடுத்து வளர முடியும்.

படித்தவர்கள் என்னவோ…! என்று விட்டுவிடுகிறார்கள்… படிக்காதவர்கள் “கூர்ந்து பதிவாக்குகின்றார்கள்…”

படித்தவர்கள் என்னவோ…! என்று விட்டுவிடுகிறார்கள்… படிக்காதவர்கள் “கூர்ந்து பதிவாக்குகின்றார்கள்…”

 

அணுவின் ஆற்றலை அறிந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று அகஸ்தியன் ஒளியின் சரீரமாககித் துருவ நட்சத்திரமாக நிலை கொண்டுள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவன் உணர்வைக் கவர்ந்து துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக ஒளியாக வாழுகின்றனர்.

இதை எல்லாம் கேட்கும் நீங்கள்… சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார் அர்த்தமாகவில்லை…! எதை எதையோ பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.

காரணம்… படிக்காதவன் தான் இத்தனையும் நான் பேசுகிறேன். எம்முடைய பேச்சைக் கேட்பவர்களில்…
1.படித்தவர்கள் சிந்திக்கும்போது அவர்கள் படித்ததை வைத்து… “சாமி என்னமோ சொல்கிறார்…!” என்ற நிலைகளில் விட்டு விடுகின்றார்கள்
2.மிகவும் படிக்காதவர்கள் “சாமி என்ன சொல்கிறார்…?” என்று கூர்மையாக உற்றுக் கவனிக்கின்றார்கள்.

படிக்காதவர்களுக்குள் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால்
1.தன்னையும் அறிகின்றனர்… அண்டத்தையும் அறிகின்றனர்… அகண்ட அண்டத்தையும் அறிகின்றனர்.
2.அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆகி
3.எப்படி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றானோ அந்த நிலையை அவர்கள் அடைகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று கண்டறிந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் கருவாக உருவாகி விட்டால் அதே நோயின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

நோயாளியைப் பார்த்துத் திரும்பத் திரும்ப அவனை எண்ணும் பொழுது
1.கோழி கேறுவது போன்று அந்த உணர்வின் தன்மையாகி
2.நோயை உருவாக்கும் கரு முட்டையாகி அந்தக் குஞ்சாக ஆன பின் அதே நோயின் தன்மையை ஊட்டி
3.இரத்த நாளங்களில் கலந்து உயிருக்கு எட்டி
4.அந்த நோயின் உணர்வைக் கண் காது மூக்கு என்று அனைத்திற்கும் இழுத்துக் கொண்டு வரும்.

வேதனையாக இருக்கும் பொழுது உங்கள் மேலே யாராவது தொட்டால் உடனே சுருக்… என்று கோபம் வரும். வேதனையாக இருக்கும் பொழுது ஒருவர் நம்மிடம் மகிழ்ச்சியாக ஒரு சொல்லைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது… அந்த மணம் நம்மைத் தடுத்துவிடும்.

ஆனால் வேதனையைப் பற்றிச் சொன்னால் இந்த உடல் மிகவும் ரசிக்கும். ஆகவே… வேதனையாக இருக்கும் பொழுது
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் ஆன்மாவிலிருந்து இதைத்தான் பிரித்தெடுத்து உயிருக்குக் கொடுக்கும்.
2.அந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் சென்று அந்த அணுவிற்கு ஆகாரமாகப் போய்ச் சேரும்.

இதைப் போன்று…
1.நோயை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதைத் திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் போதும்
3அந்தக் கரு முட்டை உங்களுக்குள் வளர்ச்சி அடைந்து அணுக்களாகப் பெருக்கப்படும் பொழுது அது உணவுக்காக உந்தும்.
4.அந்த உணர்வின் தன்மை உந்தும் போது அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் பெருகும்.

ஞானிகளின் உனர்வை இப்படித்தான் நமக்குள் பெருக்கிக் கோண்டு வர முடியும்.

நம் ஆன்மாவுடன் பேச முடியுமா…? – ஈஸ்வரபட்டர்

நம் ஆன்மாவுடன் பேச முடியுமா…? – ஈஸ்வரபட்டர்

 

நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.

எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)

இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.

இniniனி வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.

அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.

அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.

இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.

ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.

மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”

1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இது நாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.

சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.

சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.

அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”

அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!

ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்…
1.ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
2.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
3.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
4.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.

வரப் போகும் மாற்றத்திலிருந்து உங்களால் விடுபட முடியும்…!

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது… உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்

 

எந்தச் செல்வமும் நம்மைக் காப்பது இல்லை. எந்த உயர்ந்த குணமும் நம்மைக் காப்பதில்லை.
1.அருள் மகரிஷியின் அருள் சக்தியின் துணை கொண்டு தான்
2.அந்த உயர்ந்த குணங்களை நாம் காத்திடல் வேண்டும்.
3.உலகைக் காத்திடும் உணர்வு வரவேண்டும்
4.உலகைக் காத்திடும் உணர்வுகள் நம்மில் விளைய வேண்டும்.

நாம் வெளியிட்ட உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவ வேண்டும். இதனின் துணை கொண்டு வந்தால் தான் இந்தப் பூமியும் சுகம் பெறும்… நம் உடலும் சுகம் பெறும்… நம் உணர்வும் சுகம் பெறும்…!

ஆகவே மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதைப் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.

உலகில் நடக்கும் அசம்பாவிதங்கள் இன்று எத்தனையோ… சொல்ல முடியாது. பத்திரிக்கையை வாங்கிப் படித்தால் அல்லது டி.வி.யைப் பார்த்தால் உலகில் நடக்கும் அந்தத் தீமைகள் எதுவோ அதைக் கண்ணுற்று பார்க்க நேர்கிறது.

அந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் நமக்குள் பதிவு செய்து “அந்த நினைவினைக் கொண்டே தான்” உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் அடுத்த சில நொடிகளுக்குள் அது உலகம் முழுவதும் பரவும் அளவிற்கு விஞ்ஞான அறிவு வந்துவிட்டது.
1.இங்கே நடக்கும் செயல்களை அங்கே பார்க்கின்றோம்…
2.அங்கே நடக்கும் செயல்களை இங்கே பார்க்கின்றோம்.

நாம் பார்த்து… கேட்டு… உணர்ந்து வெளிப்படும் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து உலகெங்கிலும் தீமையை விளைவிக்கும் உணர்வுகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய வேளையில் யாம் உபதேசமாகக் கொடுக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு பத்திரிகையையோ டிவியையோ பார்த்தாலும்
1.அதற்கு பின் ஒரு நிமிடமாவது ஒதுக்கி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
3.உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்… உடனே தூய்மைப்படுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்தின் உணர்வலைகளைப் படரச் செய்யுங்கள்.

நாளை நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரது உணர்வுகளிலும் ஊடுருவ வேண்டும். தீமைகள் மறைந்து விட வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் உலகம் எங்கும் பரவ வேண்டும். உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை அனைவரும் ஒருங்கிணைந்து பரப்புங்கள்.

1.நாம் விடும் மூச்சலைகள் வீண் அல்ல
2.நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள்ளும் தீமையை நீக்கிடும் உணர்வாக விளைகின்றது
3.மற்றவரின் தீமையைப் போக்கும் சக்தியாகவும் வளர்கிறது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் இப்போது கொடுக்கும் அருள் சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று பல முறை சொல்லுங்கள்.

வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்… துயர்பட்ட நிலைகள் இருந்தாலும்… வேதனைகள் எது இருந்தாலும் அதை எல்லாம் கொடுக்கும் சக்தியை வைத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் அறியாது சேர்ந்த நம் உடலில் பல நோய்கள் இருக்கும். பல இன்னல்கள் இருக்கும். அந்த நோய்கள் இருப்பினும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது என் உடல் முழுவதும் படரவேண்டும் என் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்க வேண்டும். தீய வினையால் வந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இதை எண்ணிச் செய்யுங்கள்.

நோய்களை மறக்க இதைச் செய்யுங்கள் அந்த மகரிஷிகள் சக்தியைப் பற்றுடன் பற்றுங்கள்.

1.எனக்கு வந்த தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…
2.உலக மக்களைக் காத்திட வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள தீமைகள் மாறும். தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைய விளைய… கல்கி என்ற பத்தாவது நிலையான ஒளி நிலை அடைகின்றோம்.

ஒளியாக விளைந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டு நாம் அகன்றால் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும். தீமைகள் நாடாத நிலைகள் கொண்டு நிச்சயம் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு) – ஈஸ்வரபட்டர்

மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு) – ஈஸ்வரபட்டர்

 

1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.

சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.

அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.

இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.

1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.

ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.

உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.

ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”

ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?

1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).

இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.

துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி

துருவப்பகுதி கரைந்து கடல்கள் பெருகிக் கொண்டுள்ளது… கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி

 

மீண்டும் மீண்டும் தீமையின் உணர்வின் எல்லைக்கே சென்று இன்று உலகம் முழுமைக்கும் அசுர உணர்வுகள் பெருகும் நிலை வந்துவிட்டது.

இந்தக் காற்று மண்டலத்தில் விஷத்தின் தன்மை அதிகமாகப் பரவி மனிதனின் சிந்தனை இழக்கப்பட்டு, மனிதனுக்கு மனிதனே இரக்கமற்றுக் கொல்லும் உணர்ச்சிகள் அதிகமாகி விட்டது. மனிதனைக் காக்கும் உணர்ச்சிகள் எங்கும் இல்லை.

மனிதனுக்குள் அரக்க உணர்வு கொண்டு உடலுக்குள் உள்ள நல்ல பண்புகளை இழக்கச் செய்து எடுத்துக் கொண்ட அசுர உணர்வுகள்தான் நம்மை ஆளுகின்றதே தவிர நமது நல்ல உணர்வு கொண்டு ஆட்சி புரியும் செயலை இழந்திருக்கின்றோம்.

உலக நிலையில் இன்று பார்த்தால் தீவிரவாதம் என்று மதம் இனம் மொழி என்ற நிலையில்தான் அரக்க உணர்வுகளின் செயல்கள் உண்டாகி இன்று மனிதனை மனிதனே ஒரு நொடிக்குள் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றான்.

ஒரு குண்டு வெடித்தால் 1000 கிலோமீட்டர் வரையிலும் அந்த மனிதர்கள் மடிவார்கள். இப்படிப் பல குண்டுகளை வெடித்தால் வெடித்த ஆவியின் தன்மை வெளியிலே படரும்.

அந்த ஆவித்தன்மை படர்ந்து சூரியனின் ஒளிக்கதிர்கள் எங்கே அதிகமாகத் தாக்குகின்றதோ அங்கே குளிர் பிரதேசமாக மாறும்.
1.ஒரு பக்கம் அந்த நீரின் தன்மை குளிர் பிரதேசமாகி எடை கூடப் போகின்றது
2.கடல் மாறப் போகின்றது.

இதைப் போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நிமிடமும் நாளுக்கு நாள் இப்பொழுது மாறிக் கொண்டுதான் வருகின்றது.

ஓசோன் திரை கிழிந்ததனால் அதனின் வலு குறைந்ததால் துருவப் பகுதியில் விஷத்தின் அழுத்தம் வெப்பத்தின் தணல் அதிகமாக்கப்பட்டும் விட்டது.

அணு விஷக் கதிர்கள் (கதிரியக்கங்கள்) எவ்வளவு துரிதமாக ஒரு இயந்திரத்தை இயக்குகின்றதோ… அணுகுண்டை வெடிக்கச் செய்த உணர்வுகள் துருவப் பாதையில் அங்கே வந்தவுடனே வான்வீதியில் பறந்து செல்கிறது.

அப்பொழுது…
1.விஷக் கதிரியக்கங்கள் துருவத்தின் வழி கவரப்பட்டு
2.நமது துருவ எல்லையில் உள்ள பனிப் பாறைகளைக் கரைத்து
3.கடல்களும் பெருகிக் கொண்டே வருகின்றது (உபதேசித்த வருடம் 2001).

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்லும் முதலிலே தோன்றிய அகஸ்தியன் இந்தப் பூமியை நல் வழியில் திசையில் சீராகத் திரும்பும்படி அவனுடைய சக்தியின் திறமை கொண்டு செய்தான்.

இன்று அதே போலத்தான் விஞ்ஞான உலகின் தன்மை வரப்படும்போது அணுக் கதிரியக்கங்களைச் செயல்படுத்தும்போது ஒரு பக்கமிருந்து சீராக்குவதற்குப் பதில் நம்மையெல்லாம் கடலுக்குள் ஆழ்த்தப் போகின்றான் விஞ்ஞானி.

குண்டை ஒரு பக்கம் வெடித்தால் இதற்குள் சென்று விஷத்தை நுகர்ந்த உயிரணு (நம் உயிர்) விஷத்தின் உணர்வின் அணுக்களை உருவாக்கும். இறந்தபின் விஷப் பூச்சிகளாகத் தான் நாம் பிறக்க வேண்டுமே தவிர மனிதனாகப் பிறக்கும் நிலை இல்லை.

மனிதன் என்ற நிலையில் ஒன்று இரண்டு தப்பினாலும் அவனும் வாழும் சந்தர்ப்பம் இழந்திருக்கின்றான்.

ஆகவே இதிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால்…
1.ஒவ்வொரு நொடிப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருள் சூழாத நிலைகள் கொண்டு நம்மைக் காத்துக் கொள்வதற்கு நாம் செயல்பட வேண்டும்.

ஐந்துமுகச் செயலின் வலுவால் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

ஐந்துமுகச் செயலின் வலுவால் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும் – ஈஸ்வரபட்டர்

 

ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.

இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.

1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.

உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.

ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.

எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.

இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

தியானம் செய்பவர்கள் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

உதாரணமாக இங்கே தியான மண்டபம் இருக்கிறது என்றால் அடிக்கடி இதில் குப்பைகளும் தூசிகளும் வரத்தான் செய்கின்றது அதை உடனுக்குடன் தூய்மைப்படுத்தித் துடைத்தால் தான் மண்டபம் தூய்மையாக இருக்கும்.

அது போன்று நம்முடைய உடலில் ஏற்கனவே பதிவான அழுக்குகள் எத்தனையோ உண்டு.
1.நம் உடலில் உள்ள அணுக்கள் அதனதன் உணவுக்காக ஏங்கும் பொழுது
2.அந்த மணம் குவிந்து அதைச் சுவாசிக்கும் பொழுது அத்தகைய குணங்களே நமக்குள் வரும்.

தியானம் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை… என்னால் தியானிக்க முடியவில்லை என்ற நிலையை எண்ணாது
1.எப்படியும் அருள் ஒளியை நான் பெறுவேன்…
2.வலு கொண்டு நான் தியானிப்பேன்…
3.தியானித்து அருள் சக்தியை எனக்குள் சேர்ப்பேன்… என்று
4.வலுக்கட்டாயமாகத் தனக்குள் உள் செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

எப்படி இந்தத் தியான மண்டபத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல நாம் திரும்பத் திரும்ப எண்ணி அருள் சக்திகளைச் சேர்த்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம்… நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவும் கொண்டு தான் வாழுகிறோம். பிறர் வேதனைப்படுவதைப் பார்த்து அவர்களைப் பண்புடன் அணுகிக் கேட்டறியும் போது அவர்படும் வேதனைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் நம் உடலில் அவை “அணுக்கருக்களாக…” மாறி விடுகின்றது.

குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தையும் சொத்தையும் சேர்த்தோமே… நோயினால் உடலை விட்டுப் பிரியப் போகிறோமே… என்ற ஏக்கத்துடன் அவர்கள் கடைசியில் வாழ்ந்தாலும் அவரின் உணர்வைக் கேட்டறிந்த நமக்குள் அந்த அணுவின் தன்மை வளர்ந்திருந்தால் அவர் இறந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி மன வேதனையைக் கொடுக்கும் நிலையாக மாறிவிடும்.

அதே சமயத்தில் அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்து மீண்டும் மீண்டும் அதே வேதனையான உணர்வை உணவாக எடுத்து அதன் இனங்களை நம் உடலிலே பெருக்கிவிடும்.

1.ஞானிகளைப் பற்றி இங்கே யாம் (ஞானகுரு) சொல்லும் போது நல்ல உணர்வுகளை நுகர விடாது அது தடுக்கும்.
2.தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.
3.தியானத்தில் அமர்ந்தாலும் எழுந்து ஓட வைக்கும்.

காரணம் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதால் அதன் படியே வெளிப்படுத்தும். நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அதை அதை அடக்கப் பழகுவதே யாம் சொல்லும் தியானம்.

அதை நாம் அடக்கப் பழகவில்லை என்றால் அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையாகப் பெறச் செய்துவிடும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் மன வேதனை வரும் பொழுது மன நோயாக வருகின்றது. பின் உடல் நோயாக மாறி மனித உடலையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

எத்தகைய நிலைகள் இருந்தாலும் சரி… நல்லதை எண்ண விடவில்லை என்றாலும்
1.கண்களைத் திறந்து நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
2.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும்
3.இருள் மறைய வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்
4.மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும் என்று இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1.என் உடலில் உள்ள ஆத்மாக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று…
2.அது அடங்கி… உயர்ந்த நிலைகளை என்னுள் இருந்து பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

இதனால் நம் உடலில் உள்ள அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு நற்பயன் ஏற்படுகின்றது. நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒளியாக மாறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

தியானத்தில் உட்கார்ந்தால் என்னால் முடியவில்லை… வெறுப்பாக இருக்கின்றது… எங்கெங்கோ நினைவுகள் போகின்றது…! என்று நிறையப் பேர் சொல்வார்கள்.

தியானத்தில் கண்ணை மூடிய பின் இப்படிப் பல உணர்வு வந்தால் உடனே கண்ணைத் திறந்து விண்ணிலே நினைவைச் செலுத்தி மகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால்
1.தன்னிச்சையாகவே நம் கண்களை மூட வைக்கும்.
2.நம் நினைவுகளைத் தன்னிச்சையாகத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்லும்.
3.அப்பொழுது துருவ மகரிஷியின் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் வழி வருவதை
3.துருவப் பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை நாம் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

தொடர்ந்து இதை வழிப்படுத்தி வாருங்கள்… நல்லதாக அமையும்.

விஞ்ஞான வளர்ச்சியின் தவறான செயல்கள் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞான வளர்ச்சியின் தவறான செயல்கள் – ஈஸ்வரபட்டர்

 

அன்றைய ஞானிகள் காட்டிய “ஞானச் சித்தின் செயல் வளர்ப்பு…” வளர்ந்துவிட்ட மனித ஆத்மாவின் சரீர வளர்ச்சியின் பெருக்கத்தால் இன்றளவும் வளரவில்லை. உயர் ஞானத்தின் செழிப்பைக் காண முடியவிலை.

இன்று பக்தி மார்க்கம்… மத வழி போதனை… விஞ்ஞானச் செயல் எல்லாமே செயற்கை உருவாகத் தான்… செயற்கை உல்லாசப் பிடிப்பு வாழ்க்கையுடன் ஒன்றியதாகத் தான் உள்ளது.

இவாத்மாவின் உண்மை நிலை அறியாத தன்மையில்… உலக நிலையே மாசு கொண்ட நிலையில்… எண்ணத்தின் ஈர்ப்பு வட்டமே பேராசைப் பிடியில் சிக்குண்ட நிலையில் உள்ளது.

இப்பூமியில் உள்ள சத்து நிலையையே செயற்கையின் செயலுக்காக வளர்ப்பின் தன்மை குணங்களை இம்மனித விஞ்ஞானம்… தொடர்ந்து பிரித்துக் கொண்டே உள்ளது.

சூரிய இயக்கத்தின் நுண்ணிய கதிரியக்க வலுவைப் பிரித்து அதை வைத்துப் பல பல வேலைகளைச் செய்கிறார்கள். இப்பூமியில் சில பாகங்களில்
1.இவ்வரசியல் நாட்டுப் பற்றின் விஞ்ஞான வேவு செயலுக்காக
2.ஒருவரை ஒருவர் அழிக்க அந்தச் சூரிய அலைக் கதிரின் சக்தியைக் கொண்டே
3.செயற்கை நிலையில் நில அதிர்வுகளையும் எரிமலை வெடிப்புகளையும்
4.இன்றைய விஞ்ஞானச் செயல் செய்விக்கின்றதப்பா…!

பிற கோளங்களுக்கு ஏவப்படும் ஏவுகணையில் வீரியமான கதிரியக்கச் சக்திகளைச் சேமிக்கப்பட்டு அனுப்புவதால் அதன் இயக்கத்தின் அலை வீச்சின் தொடராகத் தான் பூமியில் இன்றைய மனிதனின் விஞ்ஞானச் செயல் செல்கின்றது.

இத்தகைய தொடரினால் மனித உணர்வின் எண்ணங்கள் அனைத்தும் சிதறுண்ட குண வட்டங்களாக இன்றைய பூமி ஆத்மாக்களின் தன்மை உள்ளது.

இதன் இயக்க வட்டத்திலிருந்து தன் ஞானத்தால் ஆத்ம வலுவைப் பெருக்கிக் கொண்டால் இவ்வாத்ம வலுவானது எவ்வீர்ப்புப் பிடியிலும் சிக்காமல் இருக்கலாம்.

ஞான ஈர்ப்புத் தொடர்பில் பெற்ற ஆத்ம பலத்தைக் கொண்டு இப்பூமியின் நிலையே மற்றெந்த செயல் பிடிப்போ எவற்றிலுமே இவ்வாத்மா சிக்காமல் உயர் சக்தி கொண்ட ரிஷி அலையுடன் தொடர்பு கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல்…
1.இந்தச் சூரியக் குடும்பமல்லா மற்ற சூரியக் குடும்ப அலைத் தொடரிலும்
2.நம்மைக் காட்டிலும் ஞான வலுக் கொண்ட ஆத்மாக்களின் மனித வாழ்க்கை முறையையும் காண முடியும்.

மேலும் ஆதிசக்தியின் சக்தி வார்ப்பின் தொடர் அனைத்தின் கூட்டுச் சேர்க்கை வார்ப்பையும்… மாற்றத் தன்மையையும் வளர்த்துக் கொள்ளும் சக்தி வலு அனைத்தையும் காண முடியும்.

பிறவா வரம் என்பது… ஞான வார்ப்பின்… சித்து நிலை வளர்ப்பின் வளர்ப்பை வளர வைக்கும் அந்த வலு சக்தி தான் “பிறவா நிலை…!

ஆகவே
1.மனிதனின் உண்மையை மனிதனே அறியாமல்
2.தன்னைத் தானே செயற்கைக்கு அடகு வைத்து
3.மீளமுடியா வட்டிச் சுமையாக மூழ்கி விடும் தன் நிலை இழக்கின்ற இன்றைய கலி காலத்திலிருந்து
4.இந்த உடலின் உண்மைத் தத்துவ உயர்வை உணரும் ஆத்மாவாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகுங்கள்.