மனிதனால் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்…” பிறந்த பலனை இழக்காதீர்கள் – ஈஸ்வரபட்டர்

மனிதனால் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்…” பிறந்த பலனை இழக்காதீர்கள் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.

பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்பச் சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்ம உயிர்கள் குடியேறி உள்ளது.

அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.

அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.

ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக… பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை…
4.உயர்ந்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால்… எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு…
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.

அதை மாற்றிடத் தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.

இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.

மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.

எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.

1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.

அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.

அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.

போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.

மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.

புத்தி மழுங்கி விட்டது… என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

புத்தி மழுங்கி விட்டது… என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ அல்லது கோபப்படுத்தும் உணர்வுகளையோ கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகளை நுகர்ந்து கொண்டபின் பாடம் கற்பதிலே குறைபாடுகள் ஏற்படுகிறது.

பள்ளிக்குச் சென்று நன்கு படிக்க வேண்டும்… ஞானத்தை வளர்க்க வேண்டும்… ஞான சக்திகளை வளர்க்க வேண்டும்… என்று எண்ணினாலும் கூட யாரைப் பார்த்துக் கோபத்தை வளர்த்தார்களோ அதைச் சேர்க்கப்படும் பொழுது இந்த உணர்ச்சியின் வேகமே கலக்கின்றது.

ஆனால் பள்ளியில் பாட நிலைகளிலோ முக்கிய குறிப்புகள் இருக்கும். இந்தக் கோப உணர்ச்சிகளின் வேகம் இருக்கும் போது அந்தக் குறிப்புகளைப் பற்றிய சிந்தனைகள் வராது… படித்த நிலைதான் வரும்.

ஆகவே அந்தக் கோப உணர்வுடன் படித்த நிலைகள் வரப்படும் பொழுது என்ன ஆகிறது…?

1.உணர்ச்சி வேகத்தால் படித்து மீண்டும் பாடத்தை நினைவுக்குக் கொண்டு வரலாம்.
2.ஆனால் மீண்டும் அவர்களைக் கண்டபின் உணர்ச்சிவசப்படும் அந்த ஞானம் தான் வரும்.
3.அதோடு சேர்ந்து இந்தக் கோபமும் வரும்
4.அந்தக் கோபத்தால் அவனை எப்படித் திட்டலாம்…? எப்படி விரட்டலாம்…? என்ற உணர்வுதான் வரும்.

அப்படிப்பட்ட உணர்வு வரப்படும் பொழுது
1.நல்லதுக்குள் இது கலந்து நல்லதற்றவையாக அதை மாற்றி…
2.கூர்மையாகச் செயல்படும் அறிவின் ஞானத்தை அந்த ஆயுதத்தை… நல்ல குணங்களை மழுங்கச் செய்து விடுகிறது
3.சிந்தனையற்ற நிலையில் போகின்றது. (புத்தி மழுங்கி விட்டது என்று சொல்கிறோம் அல்லவா..!)

எந்தச் செயலும் சரியாக வேலை செய்வதில்லை அதே சங்கட நிலைகளிலில் யாரிடமாவது ஒரு சொல்லைச் சொன்னாலும் அவர்களையும் அது சங்கடப்படச் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றிட நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி இந்த உணர்வுகளை எண்ணி எடுத்து உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் எந்ததெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாகிப் பிரம்மமாக உருவாகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக நம்மை இயக்குகிறது.

அதாவது…
1.எக்குணத்தின் அணுவின் தன்மை நமக்குள் பெறுகின்றதோ
2.அதன் வழிப்படி தான் அந்த அணு வளரத் தொடங்கும்.

ஒரு மரமோ செடியோ எந்த உணர்வின் தன்மை பெற்றதோ அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றினால்… அந்த வித்தின் உணர்வுகள் எதைச் சேர்த்ததோ… அந்த உணர்வுக்கொப்ப
1.மரத்தின் ரூபமும்
2.அதனுடைய மணமும் குணமும்
3.அதனுடைய வளர்ச்சியும் அடைகின்றது.

இதைப் போன்றுதான் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் சேர்க்கப்படும் பொழுது அந்தக் குணத்திற்கொப்ப அணுவின் தன்மை நம் உடலிலே வளர்ச்சி அடைகிறது.

அத்தகைய நல்லவைகளை நுகரப்படும் போது நம் உடல் நன்றாக இருக்கிறது… சந்தோஷமாக இருக்கின்றது… மகிழச் செய்கிறது…! நம் சொல்களும் இனிமையாக வருகின்றது. நம் சொல்லைக் கேட்போருக்கும் மகிழ்ச்சியாகி நம்முடன் இணைந்து வாழும் செயலாக அமைகின்றது.

சப்தரிஷிகளின் செயல்கள் – ஈஸ்வரபட்டர்

சப்தரிஷிகளின் செயல்கள் – ஈஸ்வரபட்டர்

 

தன் பெருமைக்காகவோ… புகழுக்காகவோ… சித்து நிலை வளர்ப்புப் பெற்ற ரிஷித் தன்மையின் “ஆக்கத் தன்மை” செயல்படவில்லை.

மனித இனத்தின்… வளர்ப்பின் ஞான வித்தின் வழித் தொடரை அந்த வித்து அழியாமல் செயல்படும் செயலுக்காகத் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.மனிதக் கரு உயர் ஞானம் பெற வல்லமை பெற்ற
2.அத்தகைய செயல் கொள்ளும் கோளங்களில் எல்லாம்
3.அவ்வித்தின் நிலை வளர்ந்திட சப்தரிஷிகளின் செயல் முறை செயல்படும் தன்மை தான்
4.ரிஷித் தன்மை பெற்ற வளர் குணத்தின் வளர்ப்பு நிலை.

நம் பூமியைக் காட்டிலும் ஞானத்தில் உயர்ந்து மனித குண வீரிய உயர் சக்தி கொண்ட ஞான வளர்ச்சி பெற்ற மக்கள் நம் சூரியக் குடும்பமல்லாதபடி பேரண்டத்தில் மற்ற இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் உண்டு.

ஆனால் விஞ்ஞானத்தைக் கொண்டு செயற்கையின் ஞானம் பெற்ற இனத் தன்மை நம் பூமியில் உள்ள மனிதனுக்குத்தான் உண்டு.

மற்ற கோளங்களில் உள்ள மனித இனங்கள் எல்லாம் ஞானத்தால் உயர்ந்து… “பறக்கும் தன்மை கொண்ட” சரீர உடல் வளர்ந்த பக்குவ வளர்ப்பாகச் செயல் கொள்கின்றனர்.

நம் பூமியில் தன் ஞானத்தை இயந்திரங்களில் செலுத்திப் பழக்கும் நிலையை இன்று கொண்டுள்ளான் மனிதன்.

இந்தப் பூமியில் ஆதியிலே உயிரணுத் தோன்றி வளர்ச்சி கொள்ளும் வளர்ப்புத் தன்மையில் மோதுண்டு… மோதுண்டு… வளர்ச்சி பெறும் வளர்ச்சி நிலையில் கனி வளங்களும் தாவர இனங்களும் வளர்ச்சி கொண்டு… வளர்ச்சி கொண்டு… வளர்ச்சியின் முற்றிய தன்மை கொண்ட பிறகு தான் “மனித இனங்களே” உருவானது.

தன் உணர்வின் எண்ணத்தால் செயல்படும் அங்க அவயங்களும் சொல்லாற்றும் திறமையின் வளர்ச்சியும் பெற்று வளர்ந்து வந்தாலும்
1.அநத் தொடரின் வளர் தன்மை
2.அடுத்த உயர்ந்த நிலைக்கு மனித இன வர்க்கம் செல்லாதபடி தடையாகி விட்டது.

இப்பூமியில் கிருஷ்ணாவதாரக் காலம் தொட்டே (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) பேராசைப் பிடி உல்லாச வாழ்க்கை எண்ண உரு வளர்ப்பு வளர்ச்சி பெற்றதனால் மனித வளர்ப்பின் சரீர செயல் எண்ண வளர்ப்பும் தடைப்பட்டு தன் ஞானத்தில் செயல்படும் நிலை மாறி விட்டது.

கல்வி என்பதும் அடிமை கொண்ட குண போதனை ஆகி விட்டது. குரு சிஷ்யன் என்ற குரு குலத் தொடர்பு நிலையில்
1.மனிதனின் எண்ணத்தில் தன் உயர்வின் பெருமையில்
2.பிறரின் நிலையை அடக்கி ஆளும் வழித் தொடரில்
3.ஞானிகளால் கொடுக்கப்பட்ட உண்மைகள் அனைத்தும் மறைக்கப்பட்ட போதனையாகி
4.இந்தப் பூமியில் வளர்ச்சி கொண்ட அந்த ஞான வித்தின் வித்தகத் தன்மையே
5.சூழ்ச்சி கொண்ட சூட்சம நிலையில் மறைக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதே சமயத்தில்…
1.சூட்சமத்தால் வெளியிடப்பட்ட சில சுவடிகளின்படி
2.உண்மையைக் காவியக் கதை கற்பனை ரூபமாகக் காட்டிய தொடர் கொண்டு
3.விஞ்ஞான ஆராய்ச்சியின் செயல் திறமையினால்
4.மனித உருவக வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சூரிய அலையுடன் சில அலைத் தொடர்களைப் பாய்ச்சி தன் விஞ்ஞானச் செயலுக்காக சில சக்தி அலைகளைப் பிரித்தெடுத்துக் கொண்டேயுள்ளார்கள்.

அதனால் மனித ஞானத்தை வளர்க்கவல்ல காந்த மின் அலையின் ஒளி அலையில்… “வெண்மை அணு சக்தியின் வளர் சக்தியே” தடைப்பட்டு… ஞான வளர்ச்சியும் தடைப்பட்டு விட்டது.

இதிலிருந்தெல்லாம் எண்ணத்தின் வீரிய குணம் கொண்டு இந்தப் பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் விண்ணுலக மகரிஷிகளின் அலைத் தொடர்பைப் பெறவேண்டும்.

இன்று பலவாக உள்ள எண்ண குண ஈர்ப்பின் சரீர உணர்வை… நல் அணு வளர்ப்பின் குணத் தன்மை கொண்டு… மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணத்தின் ஞானத்தால் “நேராக எடுக்கும்” பக்குவத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பெற்றால்…
1.தன் ஆத்ம பலம் பெற்ற தன்மையில் எவ்வீர்ப்புப் பிடியிலும் இந்த ஆத்மா சிக்காமல்
2.இந்தப் பூமியின் மாற்றத் தன்மை எதுவாக இருந்தாலும்
3.வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் ரிஷித் தன்மையின் வலுவுடன் நாமும் கலந்து
4.மனித வித்துக்களை அழியாத் தன்மைப் படுத்தலாம்.

அதற்குத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை என்றால் என்ன…? எப்படி விடுபடுவது…?

 

நமது வாழ்க்கையில்
1.தெளிந்த சக்தியான நல்ல குணங்கள் நமக்குள் இருப்பினும்…
2.பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன ஆகின்றது…?

பாலில் பாதாமைப் போட்டு வைத்திருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தப் பாதாமிற்கே சக்தி இழந்தது போல வேதனையை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் சக்தி இழந்து விடுகின்றது.

1.ஒரு விஷம் பட்டால் எப்படி நம் தலை சுற்றுகின்றதோ
2.விஷம் பட்டால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றதோ அதைப் போல
3.எதை எடுத்தாலும் பெரும் பாரம் போலத் தோன்றும்.

நம் காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றால் “கோபம்…” என்ற உணர்ச்சிகள் வரும். நம்மை அறியாமலேயே தவறு செய்யும் நிலைகள் உருவாகும்.

நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து விடுபடுவதற்கு அதிகாலையில் துருவ தியானத்தை எடுத்து “வாழ்க்கையே தியானம்” என்ற நிலைகள் கொண்டு வாருங்கள்.

உங்கள் நினைவு எப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே இருக்கட்டும். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள யாம் உபதேச வாயிலாகப் பதிவு செய்ததை எண்ணினால்
1.இந்தக் காற்றில் உள்ளதை அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் தீமைகளை நீக்கச் செய்யும்.
2.சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெருகி வாழ்க்கையை நல் வழியில் வழி நடத்தும் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கும்.

உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெறச் செய்வதே நமது குரு காட்டிய அருள் வழியில் இந்தத் தியானம்

உதாரணமாக ஒரு பேட்டரியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நொடியிலேயும் அது இயங்கிக் கொண்டே உள்ளது.

அதில் சார்ஜ் குறைவாகி விட்டால் மறுபடியும் பேட்டரியைச் சார்ஜ் செய்ய வேண்டும். சார்ஜ் செய்யவில்லை என்றால் அதிலுள்ள மற்ற செல்கள் எதுவும் இயங்காது.

இதைப் போல… உயிரிலும்… உயிர் வழியாக உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் வீரியத்தை ஊட்டினால் சிந்திக்கும் வலிமையான ஆற்றல்கள் கிடைக்கும்.

பேட்டரியில் சார்ஜ் சரியாக இருந்தால் தான் அதன் மூலம் அந்தக் கருவிகள் எல்லாம் சீராக இயக்கும். அது உறுதுணையாக இருக்கும்.

1.மற்ற உணர்வுகளைக் கேட்டுச் சோர்வின் தன்மை வரப்போகும் போதெல்லாம்
2.மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் இயக்கி
3.நமக்குள் அந்த வலிமை பெறச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்

“அஷ்டமாசித்து” – ஈஸ்வரபட்டர்

 

இக்கர்ம வாழ்க்கையின் முறையிலிருந்து… ஆத்ம ஞானத்தின் சூட்சம நிலையான “நிர்வாண நிலை அடையக்கூடிய வலு ஈர்ப்பிற்கு… இஜ்ஜீவ சரீரப் பாத்திரம்…” இருந்தால் தான் ஆத்ம வளம் பெற முடியும்.

எவ்வுலோகத்தால் செய்த பாண்டமானாலும் அதனை அடுப்பில் வைத்து நீரில்லாமல் எரிக்கும் பொழுது உஷ்ணத்தின் நிலை கூடக் கூட அடுப்பில் ஏற்றிய அப்பாண்டமும் உருக்குலைந்த நிலை ஏற்பட்டு மாற்று நிலை கொள்கிறது.

ஆனால் அதையே சமையல் செய்யும் பக்குவத்தில்
1.”நீர் சக்தியைக் கொண்டு” அதில் சமைக்கப்படும் நிலைக்கு
2.எத்தனை காலங்கள் ஆனாலும் அதன் தேய்மானமோ துவார நிலையோ ஏற்படாத காலங்கள் வரை
3.அடுப்பில் ஏற்றிச் சமைக்க இப்பாண்டம் உபயோகப்படுகின்றது.

அதைப் போன்று தான்… இச்சரீர சமைப்பிற்கு ஜீவ சக்தியின் தொடர்பு கொண்டு இவ்வாத்ம பாத்திரம் செயல்படும் வழி முறையில்… எண்ணத்தில் எடுத்து உணர்வில் சமைக்கும் ஜீவ சக்தியின் வலுக்கொண்டு இவ்வாத்மா வளர்கின்றது.

இக்கர்ம வாழ்க்கைக்கு உட்பட்ட தேவையின் விகித நிலை ஒவ்வொன்றிலும் இருந்துதான் வாழ்க்கைச் செயலே ஓட வேண்டியுள்ளது.

அவ்வீர்ப்பின் பிடியில் பேராசை கொண்டு “கர்மம்” என்ற சிந்தையில் செயல் பிடியின் உணர்வாகி… எண்ணத்தின் சுவாசமே அந்தக் கர்ம சிந்தனையில் சிக்கி விட்டால்
1.தன்னுள் உள்ள தன் வளர்ப்பின் வளர்ப்பான
2.”ஆத்மாவின் வளர்ப்பு தான் இச்சரீர கர்ம வாழ்க்கை..!” என்பதனை மறந்து
3.இது தான் (இப்பொழுது வாழும் கர்மா) வாழ்க்கை…! என்ற பிடி உணர்வுடன்
4.பூமி ஈர்ப்புடன் ஈர்ப்பாக்கிச் சுழலும் வட்டத்திலேயே ரங்கராட்டினம் போல் சுழல வேண்டியிருக்கும்.

இதிலிருந்து மீள
1.மேல் நோக்கிய சுவாசத்தால்…
2.எண்ணத்தின் ஞானத்தை இச்சரீரப் பிடிப்பிலிருந்து
3.உயரும் ஞான ஈர்ப்பிற்குச் செல்வதாக நம் செயல் வழி இருக்க வேண்டும்.

காந்தம் தன் ஈர்ப்பிற்கு இரும்பை இழுப்பதைப் போன்று… இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பின் வளர்ப்பை தன் ஈர்ப்புப் பிடிக்கு சுழல் ஓட்டத்தின் சுழற்சியுடன் பிடித்துக் கொண்டுள்ள “அத்தகைய ஈர்ப்புப் பிடியில் தான்” இன்று நாம் வாழுகின்றோம்.

ஆக… இன்றைய சூழலில் (கலியில்) இந்தப் பூமி… மனித இன ஞானத்தின் வளர்ப்பலையை வளர்த்த செயல் அலைத் தொடர் குன்றியுள்ளது.

இந்தக் கலியில் நாம் மேல் நோக்கிய சுவாசத்தால்… ஞானத் தொடர்புடைய மகரிஷிகளின் எண்ண ஜெப தியானத்தால்… இப்பிடியின் உணர்விலிருந்து… எவ்வலையிலும் மனித ஞானம் வளரும் வளர்ப்பில்… நாம் பெற்ற வலுவின் வலுவால் வளர்ச்சி கொள்ள வேண்டும்.

ஆகவே… இக்கர்ம வாழ்க்கைச் சிந்தையில் சிக்குண்டு…
1.பக்தி என்று பகவானை எண்ணியே ஏங்காமல்
2.ஞானத்தின் உயர்வால் தன்னுள் உள்ள ஆத்மாண்டவனை உயர்த்தும் உயர்வான எண்ணத்தை
3.ஞான வளர்ப்பு ஈர்ப்பலையினால் வலுக் கூட்டிடல் வேண்டும்.

ஆகாய விமானத்தை மேல் நோக்கிய உந்தலினால் அதற்குகந்த காற்றழுத்த இயந்திரச் செயலைக் கொண்டு மனித விஞ்ஞானம் பறக்க விடுகின்றதல்லவா…!

அதைப் போன்று உணர்வின் எண்ணத்தால்… தன் ஞானத்தால் இச்சரீர பிம்பத்தை மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பினால் எந்நிலைக்கும் இச்சரீரத்தைப் பறக்க விடவும் முடியும்… பிரித்து மீண்டும் கூட்டுச் சேர்க்கையாக்கவும் முடியும்.

அத்தகைய தன்மைக்கு இவ்வுடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையும் ஒளியான உயிராத்மாவாக்கி
1.இவ் ஒரு சரீரத்தில் இருந்தே
2.பல கோடிச் சரீர செயல் அலைக்கே
3.உயர் ஆத்ம வலு கொண்டவர்களினால் செயலாக்குவது என்பது தான்
4.அஷ்டமா சித்து என்பதின் மூன்றாம் சித்து.

முருகா…! என்றதும் முருகன் ஓடி வந்து செய்வானா…? என்பது வேறு கதை. போகநாதனின் வலுத் தன்மையினால்… எண்ணத்தால் எண்ணும் பல கோடி ஆத்மாக்களுக்கும் “அவன் அருள் ஞான ஆசி கிட்டுகிறது…” என்றால் அவனின் அலைத் தொடரின் அருளும் ஆசியும் தான்.

1.ஆயிரம் கண்ணுடையாள் அகிலத்தைக் காத்தருள்வாள் அமராவதி… அபிராமவல்லி…! என்றெல்லாம் உணர்த்தும்
2.சித்தின் தொடர் அப்படிப்பட்டது தான்.

அதாவது பல கோடி ஆத்மாக்களும் ஒரே சமயத்தில் அத்தேவியின் பால் செலுத்தும் பக்தியின் ஜீவ சக்தி கொண்ட சித்தினால் அழியாத் தன்மை கொண்ட சரீர ஆத்மாவினால் ஆயிரம் கண்ணல்ல… அகிலத்தையே கண்ணாகக் கொண்டு வளரும் சக்தியைப் பெற்றவர்கள் தான் அவர்கள்.

நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சுவாச அலையின் வளர்ப்பினால் இந்தக் கர்ம வாழ்க்கையின் சிக்கலில் இருந்து மீண்டு உயர் ஞான ஈர்ப்புடன் சித்துத் தன்மையில் வழித்தொடரை நாம் பெற வேண்டும்.

1.போற்றி வணங்கும் தெய்வ சக்தியின் அருளை வேண்டி
2.பக்தியுடன் பணிவெய்திப் பணிந்திடமால்
3.அத்தெய்வத்தின் சக்தியையே மேல் நோக்கிய ஞான தொடர்பின் ஈர்ப்பினால்
4.அத்தெய்வத்தின் தொடர்புடனே நாமும் தெய்வ சக்தி பெறும் தன்மையைத் தொடரலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே..!

நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்

நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்

 

எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,

1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி…
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி… உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.

ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக… பிரம்மமாக… உருவாக்கும்.

அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.

எதை எண்ணுகின்றோமோ… எதைக் கேட்கின்றோமோ… அது எத்தகைய குணமாக இருந்தாலும்… அதை எல்லாம் சதாசிவமாக… உடலாக… நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.

தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.

அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.

உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி… மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.

மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.

அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.

எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து… தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.

ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.

எதன் வழி மாற்றுகின்றது…? நம் உயிர் வழி…!

1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி… இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது…?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.

இதை உருவாக்குவது எது…?

ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது… தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.

கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.

இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.

சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.

ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.

வெண்மை நிறத்திற்குண்டான உண்மையான சக்தி என்ன…? – ஈஸ்வரபட்டர்

வெண்மை நிறத்திற்குண்டான உண்மையான சக்தி என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

பன்னிரெண்டு வகை குண அமிலங்கள் கொண்ட… உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்ப இயக்கத்தில்… ஆத்மீக போதனையின் வழித் தொடரில்… ஞானத்தின் பால் செயல்படும் உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய பக்குவ முறை யாது…?

பல குணங்களின் உணர்வின் உந்தல் கொண்ட வாழ்க்கையில் மனிதனின் எண்ண உணர்வு தான் வளர வேண்டிய ஆத்ம வளர்ப்பின் வலு நிலையைக் கூட்ட என்ன செய்ய வேண்டும்…?

இச்சரீர பிம்ப இயக்க எண்ணத்தை சமநிலை கொண்ட நற்குணத் தொடர்பினால்
1.சாந்த குண அமிலமான “வெண்மையின் அமிலத்தின்” சேர்க்கை விகிதம் கூடிடல் வேண்டும்.
2.அதன் தொடர்பு கொண்ட காந்த மின் அலை ஈர்ப்பு செயலினால்
3.இச்சரீர பிம்பமே ஆத்ம வார்ப்பிற்கு வளர் நிலை தரத்தக்க “இயந்திர நிலையாக” உயரும்.

அதாவது சூரியனின் சக்தியைக் கொண்டு… காந்த மின் அலையின் தொடர்பினால்… ஜீவ சக்தியான நீர் சக்தியின் தொடர்புடன்… உலோக ஈர்ப்பில் மின் அலையைச் செலுத்தி.. அதன் செயலின் வீரிய குணத்தை (SOLAR POWER) எடுக்கின்றார்கள் அல்லவா..!

அதைப் போன்ற இயக்கச் செயலாக…
1.சரீர பிம்பத்தின் நீர் சக்தியைக் கொண்டு
2.இச்சம குண உணர்வினால் பெற்ற உறுப்புகளின் வளர்ப்பினால் உருவாகும் காந்த மின் அலைத் தொடர்பினால்
3.இச்சரீர உணர்வு எண்ணத்தைச் சகலத்திலும் கலக்கச் செய்து
4.எவ்வீர்ப்புப் பிடியிலும் இவ்வெண்ணத்தின் உணர்வு மோதாமல்
5.எண்ணத்தின் செயல் கொண்டே ஆத்ம அலையை எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலக்கச் செய்து
6.நிர்வாண சக்தியாக நிலை பெறச் செய்யலாம் இந்த ஆத்ம சக்தியை.

“வெண்மை அமிலத்தின்” தொடர்பு கொண்டு தான் மின் அலையே உருவாகின்றது. வண்ணத்தின் கூட்டு நிலைக்கொப்பத்தான் வளர்ப்பு நிலை ஒவ்வொன்றுமே உருவாகிறது.

வானவில்லின் வண்ணத்தைக் காட்டி இராமாயணக் காலத்தில் வான்மீகியார் எழுதிய காவியத்தின் உட் கருத்தை மாற்றப்படாமல் வைத்திருந்தால்
1.வண்ணங்களின் தொடர்பு கொண்டு
2.உயிர் வளர்ப்பின் அணுத் தொடர் வளர்ச்சியின்
3.அணுவுக்குள் அணு வளரும் உயர் சக்திகளை இன்று நாம் அறிந்திருக்கலாம்.

வெண்மையின் அமிலமான சக்திகளால் தான் நம் உடல் உறுப்பின் எலும்புக்கூறுகள் உருவாகி அதன் தொடர்பு கொண்ட அணு வளர்ச்சி வார்ப்பாக ஆத்மாவின் வலு வலுக் கொள்கின்றது.

சூரியனின் அலைத் தொடர்பிலிருந்து பூமியின் சுழற்சிக்கு பூமிக்கு வடிகட்டி பூமியின் ஈர்ப்பிற்கு வரும் அமிலச் சத்தின் உயிர்ணு வளர்ப்பு அமிலமே “இந்த வெண்மையின் சக்தி தான்…!”

சாந்த குணமான வெண்மையின் சக்தி அலைகளை உணர்த்தத்தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் கலைமகள்… ஞானமகள்…! என்றனர்.

ஆகவே…
1.ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வெண்மை உடுத்தும் தாய் குண சரஸ்வதி என்றும்
2.”ஞானத்தின் தொடர்பு கலைமகள்” என்ற சூட்சம வட்டத்திற்குள்
3.அச்சக்தியின் தொடர்பை நமக்குத் தெளிவாக உணர்த்தினர் நம் சித்தர்கள்.

வண்ணத்தின் சேர்க்கைக்கொப்பத்தான் உருவக செயல் உருவாகின்றது. அதன் தொடர்பு கொண்ட உணர்வின் செயல் தான் மாற்றங்களின் நிலையும்.

இன்றைய இக்கோளத்தின் உயர் வார்ப்பான உயர் வண்ணமான வெண்மையின் தன்மைக்கே கருமையின் பழுப்பு நிலை கூடிக் கொண்டே வருகின்றது.

இன்றைய கலி காலத்தில்…
1.மனிதனின் ஞானம் நிர்வாண உணர்வாக… வார்ப்பின் வார்ப்பாக
2.ஆத்ம வளர்ப்பை வளர்க்கும் ஞானம் பெற்று
3.நிர்மலமான ஜோதி நிலையுடன் கலந்திட வேண்டும்.

சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்

சக்கரம் போன்று சுழன்று எடுக்க வேண்டிய தியானம்

 

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.

இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.

இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.

இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.

ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.

1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.

அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.

நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

உலக ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞானிகள் வழியில் செல்வதா…? – ஈஸ்வரபட்டர்

உலக ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞானிகள் வழியில் செல்வதா…? – ஈஸ்வரபட்டர்

 

மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.

இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?

அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.

மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.

அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.

இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!

தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.

உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?

1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.

பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!

1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.

ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.

இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.

உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.

எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

இச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.

1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல் வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.