மருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது புதிய நோயை உருவாக்கவா…? – ஈஸ்வரபட்டர்

மருந்து என்பது நோயை நீக்கவா… அல்லது புதிய நோயை உருவாக்கவா…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய வியாதியின் தன்மை கொண்ட குணநிலை ஒத்துத்தான் இருக்கும்.
1.குண நிலைக்கு ஒத்த வியாதி தான் மனிதனுக்கு வருகின்றது.
2.மனிதனுக்குத் தான் பலவிதமான புதுப்புது வியாதிகள் வளர்ந்து கொண்டே உள்ளன
3.மற்ற மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் அந்த அளவுக்கு இல்லை
4.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வியாதிகள்.

தாவரங்களுக்கு ஒன்றை ஒத்த நிலையில் தான் அதனதன் வியாதி அணுப்பூச்சிகள் அவைகளைத் தாக்குகின்றன. மிருகங்களின் நிலையிலே மனித நிலைக்கு முற்றிலும் மாறு கொண்ட நிலையுள்ளது.

மிருகத்தின் உணர்வின் எண்ணம் ஒலியின் ஈர்ப்பைக் கொண்டு பழக்கப்பட்ட ஒன்றின் செயலில் செல்வதனால் ஏறக்குறைய தாவரங்களின் நிலைக்கொத்த
1.பருவக் காலங்களில் தாக்கக்கூடிய விஷ அணுக்களின் நோய்த் தன்மை
2.ஒன்றுக்கொன்று தொடர் கொண்ட “ஒட்டும் நிலையில்”
3.ஒன்றை ஒத்த வியாதியில் தான் மிருக இனம் தாக்கப்படுகின்றது.

மனிதனுக்கும் சில காலகட்டத்தில் சீதோஷ்ண நிலைக்கொப்பவும் பூமி இழுத்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் வெக்கைக்குகந்த நிலை கொண்டு அந்தந்தக் காலங்களில் வளரக்கூடிய விஷக்கிருமிகளின் நிலையினாலும் காற்றிலும் நீரிலும் தொக்கியுள்ள விஷக் கிருமியினால் சில நோய்கள் வருகின்றன.

ஜுரம் வாந்தி பேதி கண்களைக் தாக்ககூடிய சில நோய்க் கிருமிகளும் கால நிலையில் இயற்கைக்கொப்ப ஒன்றின் தொடர் கொண்டு ஒருவரைப் படர்ந்த நிலையில் ஒன்றைப் போல் பலருக்கும் (தொற்று நோய்) சில வியாதிகள் தாக்கப்படுவதுண்டு.

கால நிலைகள் மாறி… இயற்கையின் மாற்றத்தால்…
1.அவ்வணுக்களின் ஈர்ப்பு குண விஷங்களும் மாறும் தருவாயில்
2.விஷக் காய்ச்சல்கள் தொற்றிப் பலருக்கு ஒரே சமயத்தில் இந்த வியாதி வந்தாலும்
3.இவ்விஷக் கிருமியினால் தாக்கக்கூடிய வியாதிகள் தொடர் கொண்டு வளராமல்
4.சிறிது காலத்தில் அதன் குணம் மாறிவிடுகின்றது.

ஆனால்… “உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு ஏற்படும் வியாதிகள்…!” அவரவர்களின் எண்ண நிலைக்கொப்ப உடலின் அணுவின் அணுவாக ஒன்றி வளர்ந்து இந்த உடல் அழியும் வரை அதன் குணப்பிடிப்பிலேயே தான் மனிதன் சிக்கி அந்த நோயினாலேயே மாளுகின்றான்.

அம்மை வியாதிகள் மலேரியா டைபாய்டு வாந்தி பேதி போன்றும் இன்னும் புதிய புதிய விஷத் தன்மை கொண்ட வியாதிகளும் அந்தந்தக் காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண நிலைக்கொப்பப் படரக்கூடிய விஷத் தன்மையின் பாதிப்பு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தைப் போலவே அந்தப் பாதிப்பின் தன்மை வருகிறது.

இந்தப் பூமியின் ஈர்ப்பில் வெளிப்படும் உஷ்ணத்தின் விஷ அணுக்கள் இந்தப் பூமியில் வாழும் ஜீவ ஜெந்துக்களின் நிலையிலும் அதன் நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடன் ஒன்றிய ஜீவன்களுக்கும் சாடுகின்றது.

அவ்வலையின் விஷத்தின் தாக்குதல்… காற்றலையில் கிருமிகளாகப் படர்ந்துள்ள அந்த நிலையில்
1.தன் சுவாசத்தில் ஈர்ப்புடன் எடுப்பவர்க்கெல்லாம்
2.குறிப்பிட்ட காலத்தில் ஒரே தன்மை கொண்ட வியாதி தான் பலரைத் தாக்கும்.

அதன் பின் கால நிலையில் அதன் சக்தியின் வலுக் குன்றி மாற்றமும் கொண்டு விடுகின்றது.

இத்தன்மையான தாக்குதல்…
1.நீருடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட
2.உணர்வின் துடிப்பு கொண்ட எவரையும் தாக்கத்தான் செய்யும்.

தன் சக்தியையே தெய்வ சக்தியாக்கிச் சப்தரிஷியின் நிலையில் ஜீவன் கொண்டு உள்ளவனாக இருந்தாலும்… “கால நிலையின் மாற்றத்தில் ஏற்படும் சில விஷ அணுக் கிருமிகளின் தாக்குதல்…” சுவாசமுடனும்… நீருடனும்… தாக்கத்தான் செய்யும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது…!

பூமியின் நிலையுடன் கூடிய கால மாற்றமாகும் பொழுது இவ்வணுவின் தன்மையும் மாறிவிடும். இவை இயற்கையின் உண்மையுடன் உருண்டுள்ள செயல் தொடர்பான குண நிலைகள் தாம்.

தாவரங்கள்… மிருகம்.. மனிதன்…! என்று இனம் பார்த்துத் தாக்காமல்
1.காற்றுடன் கலந்துள்ள நச்சுத் தன்மையின் செயல் வடிவங்கள் உண்டு
2.இதன் நிலையை மாற்றவோ அழிக்கவோ தப்பவோ முடியாதப்பா..!

ஏனென்றால் அதற்காக வேண்டி இயற்கைக்கு மாறாக நாம் சென்று செயற்கை வழியில் விஷமான மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளும் பொழுது மற்ற நல்ல உறுப்புகளின் சீரான இயக்கத்தை அது பாதித்து விடுகிறது.

மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குப் பதிலாக மருந்தே வாழ்க்கையாகி விடுகிறது… மருந்தையே உணவாக உட்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிடுகின்றோம்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நல்லது.

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்னது என்ன…?

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்னது என்ன…?

 

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர்.

என்னிடம் எதை நாடி வந்தார்கள்?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும்…. உடல் நலம் வேண்டும் என்றும் எனக்கு “அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்…” என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும்
3.உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.
4.பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். 6.நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.
1.“தனக்காகத்தான்… கேட்டார்களே தவிர…
2.எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால் அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்…? நீ எதைப் பெறப் போகின்றாய்…? நீ பெறவேண்டிய தகுதிகள் எது…? அதைப் பெறுவது எப்படி…? என்று பல வினாக்களளை எழுப்பி இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்…?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

ஆகவே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய்…! என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

சர்க்கரைச் சத்து உப்புச் சத்து இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? – ஈஸ்வரபட்டர் சொன்னது

சர்க்கரைச் சத்து உப்புச் சத்து இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் மனிதனுக்கு எப்படி வருகின்றன…? – ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எதனையும் மாற்றியமைக்கும் சக்தி மனிதனுக்குண்டு.

சர்க்கரை வியாதி மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது…? சர்க்கரை வியாதியின் குண நலன் என்ன…?

சிறு வயது முதற் கொண்டு ஒரு நிலையான வாழ்க்கை வாழ்ந்துள்ள நிலையில்
1.அதிகமான சந்தோஷங்கள் ஏற்பட்ட காலங்களில் – சந்தோஷ அலையின் சுழற்சி வாழ்க்கையில்
2.அதன் தொடர் அலையில் ஏற்படும் சலிப்பு குணம் உந்தப்படுபவனின்
3.உடல் அமிலத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாசத்தால்
4.சர்க்கரைச் சத்து என்ற அமிலச் சுரப்பி உடலுக்கு வேண்டிய இரத்தச் சக்தியிலிருந்து
5.அதிகமான சத்து நிலைகள் சிறுநீரில் கலந்து விடுகின்றன.

மருத்துவத்தில் சில நிலைகளை (INSULIN) இந்த உடலில் செலுத்தி மருந்துகளை அந்தந்தக் காலங்களுக்கு உணவுடனும் மருந்துடன் கொடுத்துச் சமப்படுத்தலாமே தவிர பூரண குணம் கிடைப்பதில்லை.

வியாதியில் சிக்குண்ட மனித ஆத்மாவானது “ஆத்ம தியானம்” என்ற குண நிலையைச் சமமான நிலைப்படுத்தி நற்குணங்களின் ஈர்ப்பில் தன் எண்ணத்தைச் செலுத்தித் தான் எடுக்கும் ஞானத்தால் மெய் ஞானிகளின் உயர் அலையின் தொடரை உடலிலே சுவாசிக்கும் தியானத்தை மேற் கொண்டால் எந்த வியாதியையும் மாற்றி அமைக்கலாம்.

1.தான் வாழ்ந்த எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டே
2.உண்ணும் உணவாலும் மருந்தாலும் மட்டும் எந்த வியாதியையும்
3.எந்த மகான் வந்தாலும்…
4.அகிலத்தையே ஆட்டுவித்த ஆட்டுவிக்கும் ஆதிசக்தியின் தொடர்பிருந்தாலும் நலம் காண முடியாது…!
5.உணர்வின் எண்ணத்தைச் சமப்படுத்தும் செயல் எண்ணம் இருந்தால் தான்
6.மனித ஆத்மாவின் உடல் பிணியும் தீரும்… உயர் ஞானமும் வளருமப்பா…!

ஏனென்றால் உணர்வால் எடுக்கும் எண்ணத்தைக் கொண்ட வியாதிகள் தானப்பா இந்த மனித உடலில் ஏற்படும் எல்லா வியாதிகளும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது…?

உணர்வின் எண்ணத்தை கோபத்தின் அலையில் எடுக்கும் சுவாசம் கொண்டு கோபத்தின் தன்மையை அதே ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் எடுத்து அதை வெளிப்படுத்திக் கோப அலையில் வாழ்பவனுக்கு
1.இரத்த நாளங்களின் துடிப்பு நிலை அதிகமாகி
2.உஷ்ணமான கனம் கொண்ட ஈர்ப்பின் சுவாசத்தால்
3.உணர்வின் கொதிப்பே இரத்தக் கொதிப்பாகின்றது.

சஞ்சலம் கொண்ட சலிப்புக் குணத்தின் ஈர்ப்பின் உணர்வின் எண்ணச் சுவாசம் தான் புற்று நோய்க்கும் எலும்புருக்கி நோய்க்கும் வித்தப்பா…!

காமாலையும் உப்புச் சத்தும் எப்படிக் கூடுகின்றன…?

தன் உடலின் உறுப்புக்களின் சுரப்பி நிலைகளுக்கொப்ப அவன் செய்யும் வேலைகளும் அவ்வுடல் நிலையின் சக்திக்கு மேல் உடல் உழைப்பும் உறங்கும் கால நிலையும் மாற்றியமைக்கப்பட்டால் இத்தகைய வியாதிகள் வரும்.

ஏனென்றால் கடினமான உழைப்பால் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வையிலிருந்து உடலிலுள்ள அமில உப்புக்கள் வெளிப்பட்டு விடுகிறது.

அந்த நிலையில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த ஆகாரங்கள் உண்ணும் பொழுது அந்த உடலின் தன்மையில் அவை ஏற்கப்படாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு விடுகிறது.

ஆக… இரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய சில அவயங்களில் இவன் உண்ணும் உணவால் உடலில் ஏற்கனவே இருந்த சத்துக்கள் வெளிப்பட்டவுடன்
1.இந்தக் கனமான கொழுப்பு நிலை கொண்ட ஆகாரங்கள்
2.செயல்படாத நிலையில் தான் இம்மாதிரி வியாதிகள் வருகின்றன.

கோபத்தைத் தன்னுள் அடக்கி அடக்கி… பிறர் மத்தியில் தன்னைச் சாந்தமானவனாகக் காட்டுபவனின் உணர்வின் எண்ணம் கொண்டவனுக்கு… குடல் புண்களும் (அல்சர்) சில மூல வியாதிகளும் வருகிறதப்பா…!

கோபத்தைக் கட்டுப்படுத்துவதாக… அவன் எண்ணம் வெளியில் தெரியாத இவனது குணத்தின் செயலை… உள் அடக்கிக் கொள்வதால் குடல் புண் நோய்கள் எல்லாம் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வியாதியும் ஏற்படுவது இந்தத் தொடர்ச்சியில் தான்.

அதே சமயத்தில்…
1.இவ்வலைத் தொடர் கொண்ட ஆவிகளின் தொடர்ச்சியும்
2.பலவீனமான உணர்வுடன் நாம் எடுக்கும் சுவாசத்தால் பலவீனம் கொண்ட தொடர்பலையின் ஈர்ப்பும்
3.அந்தக் குணம் கொண்ட ஆவிகளின் தொடரும் நம்முள் எறிக் கொள்கின்றன.

நற்குணங்களின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் இந்தக் குணமுண்டு. நாம் எடுக்கும் எந்தத் தொடருக்கும் இந்தக் குணமுண்டு.

நல்லவையானாலும்… தீயவையானாலும்…
1.இந்தச் சுவாசத்தால் எடுக்கும் உணர்வின் எண்ணச் சுழற்சியில் தான் நாம் வாழ்கின்றோம்.
2.எண்ணத்தின் உணர்வின் குண நிலைக்கொப்ப ஈர்ப்புடனே நாம் சுழல்கிறோம்.

நம் சுவாச நிலையை ஞானிகளுடன் தொடர் கொண்டு உயர்வாக்கி விட்டால் இந்த வாழ்க்கையில் வரும் இடரினை அகற்றிடும் சக்தி பெற்று நோய் வராது தடுத்து அந்தச் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் ஐக்கியமாகலாம்.

“செல்வம் நம்மை என்றுமே காப்பதில்லை…” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

“செல்வம் நம்மை என்றுமே காப்பதில்லை…” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

நாம் செல்வத்தைச் சம்பாதிக்கிறோம். செல்வங்களைச் சேமித்து வைத்த பின்… பையன் சொன்னபடி கேட்கவில்லையே…! நாளை இந்த சொத்தை எல்லாம் அவன் என்ன செய்வான்…! என்று பையன்பால் எண்ணம் வருகிறது.

இந்த உணர்வின் சத்து வளர்ந்தபின்…
1.எந்தப் பையனை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்த்தோமோ
2.உடலை விட்டுப் பிரிந்த பின் உயிரான்மா நேராக அந்த உடலுக்குள் தான் செல்லும்.
3.பையன் உடலுக்குள் சென்றாலும் அவனைக் காக்காது அந்த உடலிலும் நோயாகி வேதனையைத் தான் அங்கே உருவாக்கும்.

அப்போது பையனும் எண்ணுவான்…! என் தந்தை சொன்னார்… நான் கேட்கவில்லையே… இப்படி ஆகிவிட்டதே…! என்று அந்த வேதனையை எண்ணுவான்.

இந்த உணர்வு தோன்றினாலும் விஷத்தன்மை வளர்ந்து அந்த உடலையும் மடியச் செய்து விடுகின்றது. ஆக… பையன் உடலுக்குள் சென்று விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்டபின் பையனை வீழ்த்தி விட்டு அவனைக் காக்காதபடி வெளிவந்து விடுகிறது தந்தையின் உயிரான்மா.

தொக்கி வைத்திருந்த பணம் அவன் நோயைப் போக்குவதற்குச் செலவழிப்பதற்குத் தான் சரியாக இருக்கும்.

1.அப்பா சம்பாதித்து வைத்திருந்தார். பையன் செலவழித்தான்…
2.கடைசியில் அனாதையாகப் போய் நோய்வாய்ப்பட்டுச் செத்தான்.
3.சொத்தெல்லாம் மறைந்துவிட்டது…! என்று மற்றவர்கள் சொல்வதை நாம் எத்தனையோ கேட்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் செல்வம் நம்முடன் என்றுமே வருவது இல்லை. செல்வத்தால் வந்த வினைகள் “தன் பையன் அதைக் காப்பான்..” என்று எண்ணினாலும் கடைசியில் இந்த நிலை ஆகிவிடுகின்றது.

இப்படி வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்ட பின்… உடலில் அணுக்கள் மாறி… உயிர் அந்தக் கணக்கின் பிரகாரம் சிவனாக உடலாக மாற்றும் பண்பால்
1.அடுத்து விஷத்தையே உணவாக உட்கொண்டு வாழும் உயிரினமாக
2.பாம்பாகவோ புலியாகவோ உயிர் உருவாக்கிவிடும்.

இது போன்ற நிலைகள் உருவாகும் நிலையை நமக்கு உணர்த்துவதற்குத்தான் ஒவ்வொரு ஆலயங்களிலும் அங்கே ஒரு தெய்வ குணத்தை முன்னணியில் வைத்துக் காட்டியிருப்பார்கள்.

காளியம்மன்… மாரியம்மன் கோவிலுக்கு முன் அக்னி குண்டமும் அங்களேஸ்வரி கோயிலுக்கு முன் அக்னி குண்டத்தையும்… தீமை செய்யும் உணர்வின் குணங்களுக்கு எல்லாம் அதை வைத்துக் காட்டியிருப்பார்கள்.

அக்னி குண்டம் இறங்கும்படி சொல்வார்கள். அந்த அக்கினியில் இறங்குவதற்கு அல்ல.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் அனைவரும் இந்த வாழ்க்கையில் தீமைகளை வென்றவர்கள் அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் அக்கினியாக மாற்றிக் கொண்டவர்கள்.

1.அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
2.அந்த உணர்வை நம் உடலான குண்டத்திற்குள் இறக்க வேண்டும்…
3.தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்துவதற்குத் தான் சிலையை வைத்து
1.நாம் எண்ண வேண்டியது எப்படி…?
2.மனித வாழ்க்கையில் தீமை அகற்றுவது எப்படி…? என்ற நிலைகளைத் தெளிவாக்குகின்றனர் ஞானியர்.

ஆடிப்பெருக்கு என்ற நிலையில் கூடுதுறை என்ற மூன்றும் சேர்த்து நன்மையைப் பெருக்குவது போல் நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்ற அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி அருள் வழியில் நாம் செயல்பட வேண்டும்.

உயிருடன் ஒன்றி தீமைகளை அடக்கி தனக்குள் அந்த அருள் ஒளியைக் கூட்டுதல் வேண்டும். ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை தியானிப்போம்.

அதைப் பெருக்கிக் கூட்டி அருள் சுடராக வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம். உலகம் நலம் பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.

இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள் – ஈஸ்வரபட்டர்

இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள் – ஈஸ்வரபட்டர்

 

ஜீவ சக்தியுடன் கூடிய இந்த மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உண்டு.

உடல் கூற்றை ஆராயும் மருத்துவ விஞ்ஞானிகள் மனிதனுக்கு ஏற்படும் வியாதியை அவன் உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் மற்றும் எத்தனையோ நிலைகளில் உள்ள அணுக்களை ஆராய்ந்து காணுகின்றார்கள்.

அந்தந்த வியாதிக்குகந்த இரத்தத்தில் ஏற்படும் அணுத் தன்மையின் மாற்றத்தையும் எவ்வணுவின் நிலை உயர்ந்துள்ளதோ அவ்வுடலுக்குகந்த அணுத் தன்மையில் மனிதனின் வியாதிக்குகந்த மாற்றத்தையும் கண்டறிகின்றார்கள்.

1.நாம் “உணர்வின் குண அமிலம்” என்று உரைக்கின்றோம்.
2.அதையே விஞ்ஞான மருத்துவத்தில் “வைட்டமின்கள்” என்று உரைக்கின்றார்கள். (வைட்டமின் A B1 B2 B6 B12 C D K E)
3.இதுவல்லாமல் உடலில் உள்ள மாறு கொண்ட “விஷ அணுக்கள்” (VIRUS) உள்ளதையும் உணர்ந்து வெளிப்படுத்துகின்றார்கள்.

இந்நிலையில் சில அமிலங்களை அதில் செலுத்தி அணுக்களின் தன்மையை நுண்ணிய கருவிகளைக் கொண்டு கண்டுணர்ந்து
1.மனித உடலின் அணுக்களின் ஆராய்ச்சியின் விகித நிலைக்கொப்ப
2.மருத்துவ விஞ்ஞானம் மிக மிகத் துரித கதியில் முன்னேறி உள்ளது இன்று.

ஜீவன் பிரியக்கூடிய ஒரு மனிதனை மருத்துவ விஞ்ஞானத்தால் ஜீவிக்க வைக்கின்றான் மருத்துவன்.

ஆனால் மருத்துவ ரீதியிலும் விஞ்ஞான ரீதியிலும் நோய்க் கிருமிகளை ஆராய்ந்து அதற்குத் தகுந்த மாற்றுக் குணங்களை ஏற்றி அந்நோய்கள் பரவா நிலைக்காக
1.தன் செயலின் சக்தியையும்… பணத்தின் வலிமை கொண்டும்…
2.பல சாதனைகளை இயந்திரங்களின் நிலைக்கொப்ப
3.மனித உணர்வின் எண்ணங்களை விஞ்ஞான மருத்துவம் இழுத்துச் செல்கிறது.

ஆனால் இயற்கையின் குண அமில மாற்று நிலையை வழிப்படுத்தி
1.ஆத்ம தியானம் என்ற இயற்கையுடன் ஒன்றி
2.இயற்கைக் கோளமான மனிதக் கோளத்தின் வீரிய உயர் சக்தியின் ஞானத்தை
3.இயற்கை ஈர்ப்பின் குண அமிலத்துடன் ஒன்றச் செய்து
4.மண்டலங்களாக உருப்பெறும் இவ்வுடல் மண்டலங்களைச் செயலாக்கும் திறமைக்கு
5.இவ்வெண்ண ஈர்ப்பு உணர்வைச் செலுத்த முடியாதவர்களாகி விட்டனர்
6.இன்றுள்ள செயற்கை விஞ்ஞான மருத்துவ இயந்திர மனிதர்கள்.

இந்தப் பிம்ப ஜீவ மனித உடலில் பல கோடிக் கோடி உயிரணுக்கள் வாழ்கின்றது. சந்தர்ப்பத்தில் அதற்குள் பிணி ஏற்படுகிறது. அது எப்படி வந்தது…? என்று அறியும் நிலை இல்லை.

ஆக அந்த ஈர்ப்பிலேயே தொடர்ந்து செல்லும் நிலையில் அதே வியாதி நிலை சிக்குண்டு
1.அந்த ஆரம்ப வியாதி குணமாகாமல்…
2.அதன் சுழற்சியில் (குணமாகவில்லை என்ற வேதனையால்) உணர்வின் எண்ணத்தைக் கடினமாக்கிச் செலுத்தி
3.மேன்மேலும் அதன் ஈர்ப்பின் சுவாசத்தால் குறைவாக உள்ள இவ்வியாதியின் அணுவே
4.உடல் முழுமைக்கும் ஏற்றச் செய்து விடுகின்றனர்.

ஓர் நோயின் அணு பல அணுவையும் தன் குணத்தின் தொடரின் சுழற்சியினால் உடல் முழுவதற்கும் அந்த (அதன் குணச் செயல்) வியாதி தொற்றிக் கொண்டு விடுகிறது.

நோயாகி விட்டது… நோயாகி விட்டது… என்ற அதே சுழற்சி பயத்தினல்
1.அந்த உடலுக்குகந்த நல்ல அமிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டு
2.ஒன்றின் ஈர்ப்பு வியாதியுடன் ஒன்றி கடைசியில் பிரிவது தான் இஜ்ஜீவன்.

ஆசை ஒரு பக்கமும் எண்ணம் ஒரு பக்கமும் இருந்தால் ஏற்படும் விளைவுகள்

ஆசை ஒரு பக்கமும் எண்ணம் ஒரு பக்கமும் இருந்தால் ஏற்படும் விளைவுகள்

 

ரோட்டிலே நாம் செல்கின்றோம். ரோட்டிற்கு அந்தப் பக்கம் பார்க்கப்படும் பொழுது அங்கே ஒரு தங்க ஆபரணம் கிடைக்கின்றது.
1.உடனே ஆசை வருகின்றது… அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுகின்றது.
2.அந்த ஆபரணத்தின் மீது தான் நமக்கு எண்ணம் வருகின்றது.
3.எதிர்த்து வண்டி வருகின்றதா…? குறுக்கே வேறு எதுவும் வருகிறதா…? என்று அப்பொழுது சிந்திப்பதில்லை.

ஆனால் அதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லப்படும் பொழுது எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்கவில்லை என்றால் அடித்து நொறுக்கி விடுகின்றது. பொருளை எங்கே எடுப்பது…?

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் இந்தத் தெய்வத்தை வணங்கினால் சக்தி கிடைக்கும் என்று அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம்.
1.செய்த பின் அதன் வழி நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால்
2.நிச்சயம் நமக்குள் வரும் தீமைகளை அறிய முடியாது
3.அந்த ஆசை ஒன்று தான் வளரும்.

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புடன் சென்றால் ஆசை உருவாகும். ஆனால்
1.தீமைகளையும் துன்பங்களையும் அகற்றும் வழி வராது
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைகளும் வராது.

உதாரணமாக ஒரு தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்குப் பாதுகாப்பான எண்ணங்கள் தேவை. அது வளர வேண்டும்.

ஆனால் வெறும் ஆசையை மட்டும் வளர்த்து விட்டால் என்ன நடக்கிறது…?

அடுத்த கடையில் வியாபாரம் அதிகமாக நடந்தால் போதும்…! பார்… அவன் எப்படி எப்படியோ மோசமான பொருளை வைத்து வியாபாரம் செய்கின்றான். அதை வாங்க அங்கே கூட்டம் கூடுகின்றது. என்னிடம் யாரும் வாங்குவதில்லை…!

அவருக்கு வியாபாரம் ஆகிறது என்ற எண்ணத்தைத் தான் தனக்குள் வளர்க்கின்றோம். மேலும் எனக்கு இப்படி ஆகிறதே…! சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கிறதே…! என்று இப்படித்தான் எண்ணுகின்றோம்.

ஆக… இதை வளர்த்துக் கொண்டபின் இதே உணர்வுகள் அந்த சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றோம். அடுத்து நம் கடையின் விற்பனைக்காகத் துணிகளை வாங்கச் சென்றாலும் அல்லது ஒரு பொருளின் தரத்தைப் பார்த்தாலும் சிந்தனை இல்லாத இயக்கமாகவே வருகின்றது.

அந்த உணர்வுக்கு ஏற்ப
1.“விலை குறைவாக இருக்கிறது…” என்று
2.அதை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று
3.அத்தகையை பொருளை வாங்கி வந்து விடுவோம்.

வாங்கி வைத்த பின்னாடி இது விற்குமா…! என்று அப்போது தெரியாது. இந்த உணர்வு வரப்படும் பொழுது வியாபாரம் ஆவதில்லை.

அதே சமயத்தில் ஒரு நல்ல சரக்கு என்று வாங்கிக் கொண்டு வந்து “தரமான பொருள்” என்று வைப்போம். இது விலை அதிகமாக இருக்கின்றதே… வாங்குவார்களா…? என்ற உணர்வு வந்துவிடுகிறது.

இதைத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்தப் பொருளை ஒருவர் கேட்கிறார் என்றால் அதற்கு முன் இந்த மனம் (மேலே சொன்ன நினைவு) வந்துவிடும்.

சரக்கைப் பார்க்கப்படும் பொழுது நம் மனம் குறைந்த உணர்வு அவருக்குச் சாடி “இந்தச் சரக்கு வேண்டாம்…” என்று சொல்லிவிடுவார். இப்படி நம்முடைய மனமே அங்கே இப்படி இயக்கப்படுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த ஆலயம் வருவோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும். நம்மிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நாம் “கூடுதுறை…” ஆக வளர்க்க வேண்டும்.

நமக்குள் இப்படிப்பட்ட உணர்வை வலுவாக்கும் சக்தியாக வளர்த்துக் கொண்டோம் என்றால் தீமைகளை அகற்ற முடியும். நம் சொல்லும் இனிமை பெறும்.

காரணம்… நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அதை உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

1.ஞானிகள் காட்டிய வழிப்படி தீமையை நீக்கும் சக்தியை எண்ணி எடுத்தால்
2.அது நமக்குள் விளைந்து தீமையை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆதிசக்தியின் குழந்தைதான் மனித உடலாக உருப்பெற்ற ஆதிமுதல்வன் என்ற விநாயகர் – ஈஸ்வரபட்டர்

ஆதிசக்தியின் குழந்தைதான் மனித உடலாக உருப்பெற்ற ஆதிமுதல்வன் என்ற விநாயகர் – ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…?

உணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.
1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்
2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.

ஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.

அதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.

1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்
2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு
3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு
4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே
5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.
6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே
7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…!”

மனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.

ஆனால் மனிதன்…
1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு
2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி
3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்
4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…!

இவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிசக்தியின் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.

ஆதிசக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…!

அப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.

மூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன…?

ஆதிசக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை
1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)
2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.

சித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.

இன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.

ஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்
1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு
2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்
3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான
4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயர வேண்டும்.

உடல் என்ற பிம்பத்தை அழகுபடுத்த ஆடை தேவை. உயிர் என்ற ஆத்மாவை ஞானப்படுத்த வாழ்க்கை என்ற சமுதாய எண்ணம் தேவை. சமுதயாச் சுழற்சி எண்ணத்தால் ஆத்ம ஞானத்தை அழகுபடுத்துங்கள்…!

கூடுதுறை…. சங்கமம்… பற்றிய விளக்கம்

கூடுதுறை…. சங்கமம்… பற்றிய விளக்கம்

 

நீர் ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஒரு பக்கம் செம்மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் வண்டல் மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் எந்த நிறமும் இல்லாது நன்னீராக இருக்கும்.

1.இந்த மூன்று நீரும் கூடுதுறை என்ற நிலையில் கலக்கப்படும் பொழுது
2.சிறிது தூரமே இதன் கலர்கள் அங்கே தெரியும்.
3.பின் அந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து சங்கமமாகி வேறு ஒரு நிலையாக மாறும்.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் “நமக்குள் கூடுதுறை போன்று ஆகி… உடலுக்குள் சங்கமம் ஆகின்றது…!
1.அதிலே எதனின் குண நிலை அதிகரிக்கின்றதோ
2.அதன் வழி கொண்டு தனக்குள் பெருகுகின்றது.

இதனை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் நாம் அனறாடம் பலருடன் பழகுகிறோம். அவர்கள் தீமைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் பார்க்க நேர்கின்றது… நுகர நேர்கிறது. நுகர்ந்த பின் அவர்களுக்குப் பண்புடன் உதவி செய்கின்றோம்… பரிவுடன் அவர்களைக் கவனிக்கிறோம்.

ஆக அந்தப் பரிவும் பண்பும்
1.அவர் உடலிலிருந்து வரும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் நுகரச் செய்து
2.அவர் வேதனைப்படுகிறார் என்று உணர்த்துகின்றது
3.இருந்தாலும் அது நமக்குள் சங்கமம் ஆகி விடுகின்றது.

அவர்கள் மேல் உள்ள பற்று நமக்குள் சங்கமமாகி அவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அதே உணர்வு நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அவர்களைப் பாதுகாக்க நாம் முற்படுகிறோம். ஆனால் அந்த மனித உடலில் விஷத்தன்மையான உணர்வுகள் பட்டுத் தான் அவரைத் துடிக்கச் செய்கின்றது. அதனை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் வந்து நம் நல்ல அணுக்களைச் சீர்கெடச் செய்கின்றது.

அவர் எப்படி அம்மா… அப்பா… என்று அலறினாரோ அதே உணர்வு நமக்குள் சங்கமமான நிலைகள் கொண்டு அதன் வழியில் அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படித்தான் மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தீமைகள் வந்து சேர்கிறது.

1.பரிவுடன் பண்புடன் ஒருவரை நாம் காக்க வேண்டும் என்று செயல்படும் பொழுது
2.நுகர்ந்ததை உயிர் இயக்கி நம் உடலுக்குள் சங்கமமாக்கி விடுகின்றது
3.அதன் உணர்வின் அணுக்களாக நமக்குள் அதை வளர்க்கச் செய்கின்றது.

அது வளரும் பருவத்தில் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் போது எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ
1.நம் உடலில் வந்து அணுக்களாக உருவாகி அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.
2.அது தன் இனத்தைப் பெருக்குகின்றது… அதன் உணர்வாக நம்மை இயக்குகின்றது.

இதனை நினைவுபடுத்துவது தான் ஆடிப்பெருக்கு. ஆகவே ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தீமையை வென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கினால் அது கூடுதுறையாகி நமக்குள் அருள் ஒளியின் உணர்வுகள் சங்கமமாகும். தீமையை நீக்கும் சக்தியாக இப்படிப் பெருக்க வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இன்று பூமி உள்ளது – ஈஸ்வரபட்டர்

விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இன்று பூமி உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொள்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

தீமைகளை அகற்றும் ஞானத்தின் பெருக்கு…!

தீமைகளை அகற்றும் ஞானத்தின் பெருக்கு…!

 

ஆடி மாதங்களில் பெரும்பகுதி கேரளா கர்நாடகா உத்தரப்பிரதேசம் மத்தியப்பிரதேசம் இந்த பகுதிகள் எல்லாம் நல்ல மழை பெய்கின்றது… நீர் அங்கே பெருகுகின்றது.

1.அங்கே பெய்யும் மழை நீரின் அழுத்தம் அதிகரிக்கப்படும் பொழுது
2.அதிலிருந்து மோதும் காற்று அலைகள்
3.மழை இல்லாத இடங்களுக்குக் காற்றாகத் தள்ளி வருகின்றது.

அதாவது அங்கே மழை பெய்தாலும் இதனின் உணர்வின் காந்த அலைகள் ஈர்ப்பாகி இங்கே தள்ளிக் கொண்டு காற்றாக வருகிறது.

உதாரணமாக நாம் அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே பொருளைப் போட்டுக் கொதிக்க வைக்கும்போது ஆவியாக நகர்ந்து மேலே செல்வது போன்று…
1.சூரியனின் வெப்பத் தணலால் அந்த குளிர்ச்சியின் வேகம் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது
2.இந்த வெப்பத்தின் தன்மையால் காற்றின் சக்தி அதிகமாகப் படுகின்றது.

ஒரு கேஸ் (GAS) அதிக அழுத்தமானால் அது மூடியை எப்படித் தள்ளிக் கொண்டு செல்கின்றதோ இதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணலைக் கவர்ந்து அலைகளாக வரும் பொழுது வேகம் அதிகரிக்கின்றது. பெரும் காற்றாக வீசத் தொடங்குகிறது.

அது வரும் பாதையில் மற்ற தாவர இனங்கள் அதன் வித்துகள் அங்கே படர்ந்து இருப்பினும் அதை அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே ஒரு இடத்தில் மழை பெய்கின்றது அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை… இங்கே வருகின்றது.
1.அது நீரைக் கவர்ந்து வந்த நேரத்தில்
2.வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

வேகத்தின் தொடர் அதிகரிக்கப்படும் பொழுது மற்ற தாவர இனங்களில் உள்ள வித்துகளைப் பரவச் செய்கின்றது. மற்றொரு பக்கம் விளைந்திடும் சத்தின் தன்மையை தாவர இனத்தில் இணையச் செய்யும் பொழுது அந்தத் தாவர இனங்களில் நஞ்சான அணுக்கள் உருவாவதை இது அப்புறப்படுத்துகின்றது.

ஆகவே இந்த ஆடிக் காற்று அது மிகவும் சிறந்தது.

எதைப் பெருக்குகின்றது…? தீமையை அகற்றும் சக்தியாகப் பெருகுகிறது. ஒரு பக்கம் பெய்யும் மழை நீரின் சத்தைத் தனக்குள் கவர்ந்து நீர் இல்லாத இடத்தில் அதைப் பெருக்கும் தன்மையை அடைகின்றது.
1.அங்கே நீரின் தன்மை பெருகுகின்றது
2.இங்கே காற்றின் தன்மை பெருகுகின்றது

அதனால் தீமைகளை அகற்றும் சக்தியும் மற்ற தாவர இனங்களில் மோதும் பொழுது அதில் இருக்கும் நஞ்சினை நீக்கும் வல்லமையும் பெறுகின்றது.

இது வழி தொடர்ந்து… ஒன்றின் பின் ஒன்று தொடராக… அது இணைந்திடும் சக்தியாக… அந்த இயல்பின் தன்மையாக… இயற்கையின் நிலையாக… ஒன்று ஒன்றுடன் இணைக்கப்படும் பொழுது இது செயல்படுகின்றது.

உதாரணமாக
1.நாம் கோபப்படுவோரைக் கண்டால் அந்தக் கோப உணர்வு நமக்குள் பெருகுகின்றது
2.ஒருவன் வேதனைப்படுகிறான் என்று அறிந்தால் அந்த வேதனையான சக்தி நமக்குள் பெருகுகின்றது
3.ஒருவன் நோயினால் அவதிப்படுகிறான் என்று அவனை உற்றுப் பார்த்தால் நமக்குள் வலியும் வேதனையும் பெருகுகின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கிக் கொண்டால் அது நமக்குள் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருகும்.

அங்கே நீரின் சக்தியில் விளைந்து அதன் உணர்வின் தன்மை ஆவியாக மாறி இங்கே தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி நல்ல வித்தின் தன்மை பெருகும் தன்மை வருகின்றது.

அதே போல்
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கித் தீமையை அகற்றும் சக்தியைப் பெருக்கி
3.அனைவருக்கும் இந்தத் தீமையை நீக்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு…!