சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

 

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.

இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்…” என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.

அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…!” என்று இந்தக் கௌரவ போர் வருகின்றது

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.

கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.

போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.

ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார் என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் அப்பா திட்டுவார் என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில் அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை…” என்போம்.

ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.

கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் – கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.

மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.

கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.

அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.

கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?

இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.

அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்… என்றால் முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான். நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.

1.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்…” என்று
3.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.

குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிகின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.

நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?

உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…? என்று மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும் மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.

“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்று செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத் தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே…! என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே… செயலும் அவனே… எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…? என்ற எண்ணம் “நமக்குள்ளே…!”

அனைத்துமே பரம்பொருள்தான். அப் பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…? அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர். வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப் பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கின்றான். அப்பரம் பொருளின் சக்தியில் சக்தி பெற்று… வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள்… அப்பரம் பொருளிடமே ஐக்கியப்பட்டு… அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்து பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியிலிருந்து உயிர் ஜீவிதம் பெற்று இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலைபெற்று ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் ஏழு சந்தர்ப்பங்களில்தான் அவ்வாத்மாவினால் நற்சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித்தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித்தொடர் கொள்ளும் அமில சக்தியை…
1.இவ் ஏழு தொடரில் ஞானத் தொடர் வழியை அறிந்து
2.அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால் அந்நிலையில் சித்து நிலை பெற்று
3.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு
4.ஒவ்வோர் உயிராத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
5.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
6.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பலகோடி மண்டலங்களும் இப்பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம் பொருளினால் படரவிட்டவைதான்.
1.கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்
2.ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம் பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதி சக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் அவை அவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டு தான் அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும்… செயல் முறையும்… வந்திடும்.

விருந்தில் உணவு படைக்கின்றார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப்படுத்துகின்றதோ அவ்வுணவைத்தான் நம் எண்ணம் விரும்புகின்றது.

அதைப்போல் நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம் பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாகவும் சுழல்வது உயிராத்மாதான்… புழுவாக நெளிவதும் இவ்வுயிராத்மாதான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பதுதான் அனைத்துமே…!

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…?

சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிர்ந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச் சூரியனுக்கும் “தான்…!” என்ற நிலை வந்து விட்டால் கோடி கோடி கோடி ஆண்டாகப் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும். அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
1.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும்
2.சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப் பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குத்தான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு பல கோடி ஆண்டுகள் வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால்தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய் புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகலாம்.

அச் சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான் நம் நிலை உயர்ந்திட முடியும். இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கென்ன ஏற்றத்தாழ்வு…? (ஓரவஞ்சனை)
3.ஆண்டவன் அளித்த கஷ்டம்…! என்று இந்த வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல் ஞானம் பெறும் நிலையை எய்திட
5.நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
6.எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
7.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினைப் பெறுதல் வேண்டும்.

அதைப் பெறுவதற்குத் தான் இந்த உபதேசமே…!

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாக உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிரணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிர் அணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்.
1.நம் உடலிலுள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலமாக்கி
2.பரமாத்மாவின் சொத்துத் தான் நாம் என்பதனை உணர்ந்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்பட்டால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலிலிருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்கள் அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு… சுவாசமுண்டு அமில சக்தியுண்டு…!
1.மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால்
2.இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்
3.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில் நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம் நம் வசப்படுத்திடல் வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… என்ற எண்ணத்துடன் புருவ மத்தியில் எண்ணி ரிஷிகள் ஞானியர்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை அங்கே ஈர்க்கும் பழக்கம் வந்து விட்டால் உயிருடன் இணையச் செய்ய முடியும். ஜோதி நிலை காண முடியும்… ஒளியுடன் ஒளியாகக் கலக்கலாம்.

நோய் வராது தடுக்கும் வழி

நோய் வராது தடுக்கும் வழி

 

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.

1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை – வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.

அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.

நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?

சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?

நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.

அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.

அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது என்ன செய்கின்றது…? நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.

என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே என்று இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.

ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. நான் தியானத்தில் உட்கார்ந்தாலும் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

ஒன்றே குலம்… ஒருவனே தேவன் – ஈஸ்வரபட்டர்

ஒன்றே குலம்… ஒருவனே தேவன் – ஈஸ்வரபட்டர்

 

உபதேசம் புகட்டிய நாள் தொட்டே யான் (ஈஸ்வரபட்டர்) உணர்த்திய உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான் மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றின் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியிலிருந்து இச்சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் அன்பென்னும் ஆயுதத்தினால் தான் செயல்படும்.

1.இவ் அன்பினாலேதான் எச்செயலையும் நிலைநாட்ட முடியும்.
2.அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாக்கி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

ஆனால்… நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல்கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் அன்பு செலுத்துகின்றோமே என்ற நிலையில்
2.அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு
3.நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.
4.பிறரின் அன்பிற்காக ஏங்காதீர்….!

நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும்.

பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்…!

“ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…” என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைப்பிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத்தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும்… எச்செயலாயினும்… “அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான்… சிறந்த மதம்…”

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல்கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகளுண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர் “அவரவர்கள் மதம் சிறந்ததென்று…”

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழி முறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர். இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறுகொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல் அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிருஸ்து மதத்தில் பரமபிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித்தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்திவிட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

இந்து மத வழிபாட்டில் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி… ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்துமதச் சட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றனர்.

ஆனாலும் தன் செயலுக்குகந்த சாதகப்படி…
1.நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து
2.மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால்
3.மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதப்படுத்தி
4.நமக்குகந்த சத்திய நிலையைக் காலப்போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலையை அறிந்தாரில்லை…!

ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானதுதான் கிருஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

இந்து மதத்தின் நெறி முறையென்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்றில்லை. இந்து மதத்தின் நிலையிலிருந்துதான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள். ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பது எம்மதமாயினும் “அச்சத்திய நியதியைக் கடைப்பிடித்துச் செயல்படுமாயின் அதுவே சிறந்தது…”

1.மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே நம் எண்ணத்தை அடிமை கொள்ளாமல்
2.எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத்தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களைப் பெற்றால் “நமது” என்று அதைச் சொந்தம் கொண்டாட முடியும்

குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களைப் பெற்றால் “நமது” என்று அதைச் சொந்தம் கொண்டாட முடியும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.

அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.

சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும்.

ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும். ஆனால் பெற வேண்டுமென்ற ஏக்கமிருந்தால் நிச்சயம் பெறலாம்.

சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள். கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.

ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.

ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.

அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.

ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.

இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிணந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.

அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.

ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.

ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) என்றால் நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.

எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.

இந்நேர வரையிலும் வலு கொண்டு உபதேசித்த உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெறவே இதைச் செய்தது.

இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் “இதுவே ஒரு பெரிய தியானம்…!
1.அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு ஈர்க்கப்பட்டது
2.நீங்கள் நுகர்ந்தீர்கள்…. ஒவ்வொரு நிமிடமும் இதை வளர்த்துக் கொள்ளுங்கள்…!

குரு பலம்… குரு வாக்கு… குரு ஆசி…!

ஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது

ஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது

 

“எல்லாம் பரம்பொருளின் ஐக்கியம்தான்…” என்ற எண்ண நிலை செயல்பட்டு அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற வேண்டும்.

1.அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட நல் உபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்த நல் உபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும் தான் நல்லதை உபதேசிக்க முடிந்திடும் என்ற கால நிலை இன்று மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே…
தீயோர் சொல் கேட்பதுவும் தீதே…
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே…!
என்றெல்லாம் முந்தைய காலத்தில் செய்யுள் படுத்தி உபதேசித்தனர்.

விஷமாகத் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை… சத்தியத்தை நிலைநாட்டுபவர்… “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப் பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது. ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதல் இடம்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…” என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்…!

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.
1.அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!
2.பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று
3.அவ்வாண்டவனை எண்ணி துதி பாடப் பொருள் உதவி அளிக்கப்பட்ட பின் தான்
4.அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்.

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான்.

ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்…! பக்தியையே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதி பாட பக்க மேள மனித ஆத்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவனின் பக்தியினால்
2.அவ்வாண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற வாதங்கள் புரிவார்கள்.

சோம்பேறி வாழ்க்கையாய் பிறரின் உழைப்பிலிருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆத்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்குள்ளான் அவ்வாண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்குத்தான் அடிமைப்பட்டதேயன்றி “ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை…”

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு பூண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாய் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் அப்பக்தி இசையில் வழி நடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் (ஈஸ்வரபட்டர்) மாறு கொண்ட வாதம் உள்ளதே… சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலையெல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வோர் ஆத்மாவும் அச்சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
1.தீயது என்ற சொல்லுக்கே இடமில்லாமல்
2.தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராய் இருந்துவிட்டால் எச்சஞ்சலத்திற்கும் இடமில்லை.

தீயோரையும் காணலாம் தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம். தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?

நம் சத்தியத்தின் நேர் வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான். தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான். நம்மால் அத்தீயவனையும் நல்லுணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை…!

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த முருகரின் சிலை நவபாஷானத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.
1.விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து
2.இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்.

இது எதை உணர்த்துகின்றது…?

விஷம் என்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம் பயந்த நிலையில்…!

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும். சத்திய ஜெபம் பெற்றுவிட்டால் எத்தீய சக்தியையும் நற்சக்தியாக்கிடலாம். நம் உடலில் உள்ள பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்திடலாம்.

1.இந்த நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்து சித்து நிலைகளையும் கண்டிடலாம்
2.சித்தனுடனே கலந்திடலாம் சிவ பதம் எய்திடலாம்…!

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால்தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கிய நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித்தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

அந்த உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ்வுடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறாவிட்டால் அங்கங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாய் கட்டி நிலைபெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமலாகி இக்கோழை வெளி வரும்வரை இவ்வுடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகிறது.

அங்குகங்கு தங்கிடும் இவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகிறது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

1.நாமே சம்பாதித்துக் கொள்வதுதான் இவ்வியாதியே அன்றி
2.உண்ணும் உணவிலிருந்து மட்டுமோ அல்லது மற்றதிலிருந்தோ
3.நம்மைத் தொற்றிக் கொள்கிறது என்பதல்ல இந்த வியாதியின் அணு.

வியாதியில் அடிப்பட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்த நிலைகொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெறல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளி

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

 

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார். முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளை பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயே… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின் அதை எப்படித் திருத்துவது என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

1.“உயிரான ஆண்டவன் உங்களை ஆண்டு கொண்டிருக்கின்றானே…”
2.அவனுக்கு என் சேவையை நான் செய்வதற்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அனுப்பி வைக்கின்றேன்.

ஆனால் அப்படி அனுப்பும் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கஷ்டத்தையும் வேதனையையும் எண்ணிக் கொண்டு வந்தால் எப்படி உள்ளுக்குள் போக போடுவீர்கள்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அதுதான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இறை ஆத்மாவின் அன்பு கொண்ட சக்தி ஜெபம் பெற்றவர்கள் (ரிஷிகள்) இறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி அவ்வுயிராத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ் இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்… அவ்வாத்மா வேறல்ல தனதாத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி… ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு… “தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்… மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும்…” என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயலாக்குகின்றார்கள்.

1.ஆனால் அது அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது
2.நாம் ஏன் வேதனையுறல் வேண்டும் என்ற சுய நல மிக்க ஆத்மாக்களினால்
3.நற்செயலையே செய்து நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும்
4.மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவனாகின்றான்…”

“எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான்…!” என்ற எண்ணம் கொண்ட உயிராத்மாக்கள்தான் “ஞான ஒளி…” ஆகின்றார்களே அன்றி சுயநலம் மிக்க ஆத்மாக்களினால் அருள் நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நச்சுப்படுகின்றது என்று எண்ணுகின்றோம். அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே…
1.அவ் எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும்
2.அதை நசுக்குபவனே ஏற்றுக் கொள்கின்றான்.

பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம். அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் உடலிலேயே அவற்றின் சக்தியை எல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல் நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிர் அணுக்களுக்குமே எண்ணமுண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு.
1.ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம்
2.அஜ்ஜெந்துவின் நிலையையும் நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை உணரல் வேண்டும்.

மனிதர்களில் இருந்துதான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று முதலிலே சொல்லியுள்ளேன். மிருகங்கள் மற்றப் பறவைகள் எல்லாம் மனித இனமாக வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

1.அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
2.அம் மனிதக்கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
3.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்று பிறப்பிற்கு வருகின்றது.

அஜ் ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது…!

இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்த நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும் “அவை வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி… “அன்பென்னும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்…!”

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ண கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்.

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு… ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்கும் மனிதன் முதல் எறும்பு வரை அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு… அதற்குகந்த காந்த அமில சக்தியுண்டு…!

1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல
2.எல்லாம் அப் பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

நன்றாக இருப்பவர்களுக்குத் திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?

நன்றாக இருப்பவர்களுக்குத் திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?

 

நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது…?

அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

உதாரணமாக… வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை… ஏமாற்றுகின்றான்…! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.

ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே…! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.

ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்…? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது…?

அதை நினைத்தாலே கோபம் வரும்… கண்கள் சிவக்கும்…! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்…?

இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது… என்று சொல்வார்கள்.

அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது…?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தை சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது… உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.

1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று….!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை…! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.

கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.

ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே…? அவர்களுக்கு என்ன சொல்வது…? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.

அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.

1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது… நோயாகவும் மாற்றாது.

எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் ஆண்டவன் ஆகலாம் – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் ஆண்டவன் ஆகலாம் – ஈஸ்வரபட்டர்

 

இங்கே கொடுக்கும் உண்மைகளைப் படிக்கும் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இவ் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்.
1.நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தை சேமித்திடல் வேண்டும்.
2.நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும்.

இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை ஏக்கத்தினாலும் பேராசை வெறியினாலும் சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று அவ்வெண்ண அலையுடனே ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ள வேண்டுமென்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமனையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கைகூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வோரு சக்தி நிலையுண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாக நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகிறதோ அந்நாமம்தானே அப்பதார்த்தம் பெறுகிறது. நீங்கள் செய்த பதார்த்தத்தின் நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

அது போல் பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்…
1.நாம் சத்தியவனாய் உள்ளோம் நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…?
2.ஆண்டவா அவனைப் பார்த்துக்கொள்… அவனைச் சும்மா விடலாகாது
3.நம் சத்தியத்தை அவன் மீறி நம்மைத் துவேஷிக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி
4.ஆண்டவனை வணங்கி அவன் செய்த பாவத்திற்கு நாம் எண்ணும் நிலையிலேயே
5.நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்.

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித் தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நாம் அறிந்தே நமக்கு ஒருவர் தீங்கு இழைக்கின்றார். நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும்…? என்று எண்ணத்தில் சலிப்புத் தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றவில்லை. “அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்…”

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை…. ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.

அவனையேதான் அவன் பொறாமைப்படுத்துகின்றான்… ஏக்கப்படுத்தி கொள்கின்றான்…! இது தான் உண்மை.

அது போன்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் சிக்காது…
1.நாம் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
2.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! எனக்கு நல்ல மனதைத் தா
3.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற
4.இந்த ஜெபத்தைத்தான் நாம் பெறல் வேண்டும்.

அவர்கள் செய்யும் வினையல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்தி தான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா…”

இக்காற்றினில்தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று மட்டும் வந்த நிலையல்ல இது…!

பல காலமாய் இம் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறியுணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில் பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக் குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித்தொடரினால் வந்த வினை தானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத்தான் நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்மா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது…!

நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும்
1.அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து
2.அவரையே நம் எண்ணத்தினால் புனிதமடையச் செய்திடலாம்.
3.நம் எண்ணச் சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி “கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை…!”

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தனாகவும் ரிஷியாகவும் ஆனானேயன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி… பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை…!

அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனை இவ்வெண்ணத்தினால் பூஜித்துப் புனிதப்படுத்தி பக்குவ நிலை பெற வேண்டுமேயன்றி “பஜனை பாடி கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது…”

ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக் கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
1.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் தான் ஆண்டவன் ஆகலாமேயன்றி
2.அவ் ஆண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.