உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

 

சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.

1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.

அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்கள் சொல்லி முகத்தைப் பார்த்து வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?

வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.

ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டு கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!

ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவர் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.

அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால் அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?

வாஸ்து என்றால் யார்…?

1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவதிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றான்.

ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம் என்று சொல்கின்றோம்.

அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.

அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன் நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.

இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.

ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

தப்பாக நினைக்க வேண்டாம்…!
1.இன்றைக்கு இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோமே தவிர
2.உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் சிந்திக்கவே இல்லை.

எப்படி இருந்தாலும் இந்த உடல் மடிகின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் இத்தனை செல்வங்களை கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.

இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால் இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு. அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.

தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!

கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.

ஒளி உடல் பெறவேண்டும் என்ற நிலையில் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும். அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.

ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து கிடைக்கப் பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதனை ஈர்க்கும் நிலைதனைப் பெறல் வேண்டும்.

அந்தக் காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழலவிட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்கு சக்தி ஏது…? செயல் ஏது…? இவ்வுலகமே ஏது…?
1.சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும்
2.நம் பூமி ஈர்த்து செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவனில்லை.

அதைப் போல் ஒவ்வோர் உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் தான் அதனின் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற்சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையில் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது. இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்த்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர் நிலையென்ற வழியிலேயே வழி பெற்றால் நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்போக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கிறோம்.

“அடகு” என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைகல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…!
1.ஆம்… இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
2.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலையைப் பெற்றிருக்கிறோம் என்பதனை உனர்தல் வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபணியாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சம நிலைப்படுத்தும் பக்குவநிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவ சக்தியை ஒளிபெறும் சக்தியாக்கிடல் முடிந்திடும்.

மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று அஜ்ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியில் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று… மண்டலமாய் உருளும் சக்தியும்.. உயிராத்மாவாய் வாழும் நிலையும்… அதன் தொடர் நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத்தான் உண்டு…”

1.மண்டலமாய் சுழல்வதுவும் இவ்வாத்மாக்களே
2.கொசுவாய்க் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே
3.இவ்வெண்ண சக்தியில் நிலை கொண்டு அமைவதுவே அனைத்துமே.

நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம் என்று பார்க்கத்தான் என்ற எண்ணமும் வேண்டும்…!

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் அருள் நிலையில் தான் உயர்வுபடுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி “ஆலயத்திற்குச் சென்றால் தான் அவனருள் கிட்டும்…!” என்ற நிலையில்லை.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.
1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்
2.ஆதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிபட்டால் பேராசைக்குப் பிடிபடும் நிலையில்
3.சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே இதன் வழித்தொடரினால் ஏற்படும் கோபங்களும்
4.அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
5.எச்சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால்
6.நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். ஆனால்
1.இவற்றிற்கே அடிமைப்பட்டு பேராசை நிலையில் செல்லும் எவையுமே
2.அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர் சக்திதான்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய சரியான முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய சரியான முறை

 

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால் படிப்பு குறைவாகி விடுகின்றது.

படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?

அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.

வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.

அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..” என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.

அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.

அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?

குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?

சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.

குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப் போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச் சொல்வான்.

1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்… எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!

அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச் செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம் உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.

அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன் எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.

தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.

நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத் தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப் படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.

ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.

இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவரவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழிபெற்று வந்தார்கள். இன்றும் வருகிறார்கள்…!

“திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா…” என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்றும் நடத்துகின்றனர். அவரின் நிலையென்ன…?

இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்…! அவர் உடலில் செயல் கொண்டவர்… அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி அவ் இசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி.

அத் தியாகராஜரின் உயிராத்மாவே இசையுடன் கலந்து அவ் இசை ஞானம் பொழிந்திடும் இசையுள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையையே பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அவ் இசையுடனே ஒன்றிவிடுகிறார்கள். இசை ஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

1.இசை ஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையெல்லாம்
2.அவர்கள் இசைக்கும் இசையே அவர்களின் உயிராத்மாவையே
3.இசையமுதின் அமில சக்தியை அவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்து
4.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
5.இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கி…
6.தன் உயிராத்மாவையே ஈசனாக்கிடும் போது இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ் இசையமுதம் பெரும் சொத்தப்பா…!

இசைக்கும் இசையிலேயே ஒவ்வோர் உடலிலும் உள்ள உயிர் அணுக்கள் அனைத்துமே அவ் இசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில்தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவுமில்லை.

வாழ்க்கையே அமுதிசையாக்கி அப்பக்திச்சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாய் இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. அருள் மணம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்த நிலையுணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழி நடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால் அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டுநிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வழிபெற்று வருகின்றது.
1.ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது
2.இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படித்தான் வளர் நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில்தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு
1.இன்றளவும் ஒவ்வோர் ஆத்மாவும் வழி வந்த நிலையிலேயே
2.நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…!

ஜெப சக்தியினால் நம் உயிராத்மா எந்த நிலை பெறுகின்றது…? ஜெப சக்தியிலிருந்து நம் உடம்பிலுள்ள அமில சக்தியை எப்படித் தூய்மை கொண்டிடலாம் என்பதை உணர்ந்திடுங்கள்.

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

 

ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.

இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.

1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.

இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது.

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!

உயர்ந்த நிலைகளைச் சொன்னால் அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.

அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.

கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?

உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் பாச அலை வரும்… அன்பு அலைகள் வரும்… சங்கட அலைகள் வரும்… வெறுப்பு அலைகள் வரும்… மற்ற குரோத அலைகள் நம்மை எத்தனையோ மோதிக் கொண்டிருக்கும்.

இதில் எதிலே சிக்கினாலும் நாம் மூழ்கிவிடுவோம்.

1.ஆக அதிலே சிக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துடுப்பாக வைத்து
2.அந்த எல்லையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானமே…!

அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெறவேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.

வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்…!

மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!

சப்தரிஷிகளின் செயல் யாவும் ஆதி சக்தியே…! – ஈஸ்வரபட்டர்

சப்தரிஷிகளின் செயல் யாவும் ஆதி சக்தியே…! – ஈஸ்வரபட்டர்

 

ஆதி சக்தியின் ஜீவசக்திதான் அனைத்துமே…! அந்த ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளரவிடுகின்றாள். வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருட்சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கு ஒருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பல்ல
2.அவரவர் எடுத்த சுவாச நிலைகொண்டு அமையப் பெற்றது தான் அது.

நல்லவரின் எண்ணத்தை… அச்சக்தியின் நிலையுடன் அச்சக்தியை ஈர்த்து… அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி… அதன் வழித் தொடரிலேயே அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கூடி… அப்பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு… ஆண்டவனின் அருள் பெற்றவனாய்… ஆண்டவனாய்… இன்று சப்தரிஷி நிலைபெற்ற பக்குவம் பெற்ற மகான்கள் பலரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அவர்கள்
1.இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெறச் செய்து
2.நல் ஆத்மாக்களாய்த் தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக
3.மனித ஆத்மாக்களின் அவ் ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து
4.மற்ற மனித ஆத்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி
5.நல்லுணர்வுகளை அருள் ஞானம் என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்த நிலை பெற்று வழி வந்த பல மனித ஆத்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

ஏசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் ஞானம் கொண்டு வெளி வந்தவர்களின் நிலையெல்லாம் உணர்த்தி வந்தேன். அதாவது அவர்களின் உடலை ஒரு சப்தரிஷி நிலை கொண்டவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்வாதிசக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட அவ்வுடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அவ்வுடலின் ஆத்மாவின் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்வுடலில் இருந்து அவ் உயிராத்மா பிரிந்த பிறகு அக்கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடல்களில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அவ்வுடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிஷ்ண பரமஹம்ஸர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்குகந்த ஆத்மாவாய்த் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிராத்மாவின் நிலையென்ன…?

இவரின் உடலிலிருந்து அவ்வுடல் நிலை கெட்ட பிறகு… அவ் உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்…
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்வாத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை இவ்வுயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்துக்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல… அந்த ரிஷி வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல் நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச் சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்.

போகருக்குக் குருவாய் அருள் பெற்ற காளியங்கராய சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாய் கலக்கப் போகருக்குத் தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற அருள் உணர்வுடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளி வட்டமாய் தனதாகப் பல சக்தியை ஈர்த்து இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக் கதிர்களைச் சேமித்துச் செயல் கொண்டு வருகின்றார்.

மனித ஆத்மாக்களில் மட்டும எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை. சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலையுண்டு. ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல் கொள்கின்றது.

1.மனித ஆத்மாக்களுக்குத்தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை
2.நல்லுணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசையில்லை
3.அன்பென்னும் நிலையைச் சிதறவிட்டு வாழ்கின்றனர்.

தீமைகள் நமக்குள் புகாது அடைக்க வேண்டிய இடம் எது…?

தீமைகள் நமக்குள் புகாது அடைக்க வேண்டிய இடம் எது…?

 

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).

அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.

இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.

வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.

ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது இராமயாணம்.

ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.

குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.

அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?

அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!

நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.

1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!

இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படி தடைப்படுகின்றது…?

நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…! நம் சிந்தனையும் தெளிவாகும்.

அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது சான்றோர்கள் வாக்கு. அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம்.

1.அப்படி இருக்க தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…?
2.எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துதான் செயல்படுகின்றோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…! தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா…! ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
இறைவன் படைத்த படைப்பே நாம். நாம் மட்டுமல்ல, சகலமுமே அதிலே ஐக்கியப்படும். இந்த நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.

நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது பாம்புமுள்ளது மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது. மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் ஏன் கேள்வியாக்கினீர்…?

இவ்வுலகில் உதித்த உயிர் அணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கின்றது. உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமேதான் மாறு கொண்டுள்ளது. ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு…? என்ற எண்ணம்தானே உம் எண்ணம்…!

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள்தான் நம் பூமியில் வீசுகின்றது.

நம் பூமிக்கும் மேல் நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேலுள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு… இயற்கைத் தன்மையுண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அப் பால்வெளி மண்டலத்திலுள்ள அமிலத்தில் பட்டு பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத் தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன் அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.

அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள்… மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.

எந்த அமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்த நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது. பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடிவிடுகின்றன.

எந்த எண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்த நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும்
2.உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் உருப்பெறும் நிலையில்
3.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும்தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
4.அப்பரம்பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல நல்லவனை(ளை)யும் கெட்டவனை(ளை)யும்.

இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்திதான். அதிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே…! அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…!

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினில்தான் உள்ளது
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினில்தான் உண்டு.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை. பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால்
1.நமக்குத்தான் நம் ஆத்மா சொந்தம்
2.நம் உடலில் மற்ற உயிரணுக்கள் இருந்தாலும் அதற்கு நம் உடலும் நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப் போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றிலுள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்…!

நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால்தான் நல்லவன்… கெட்டவன்… என்ற நிலை வருவது.

1.ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான்.
2.மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜெந்திற்குச் செல்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்குண்டு. ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!