துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்ற பின் தொக்கியுள்ள விஷங்கள் கரைந்துவிடும்

heaven destination

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்ற பின் தொக்கியுள்ள விஷங்கள் கரைந்துவிடும்

 

ஒரு வால் நட்சத்திரத்திலிருந்து வந்த கற்கள் மற்ற எதிலேயும் பிடிப்பில்லாதபடி வரும்போது நம் சூரியன் இழுக்கின்றது.

நமது பூமி இடைமறிக்கப்படும்போது துருவப் பகுதியில் அதைக் கவர்ந்து நம் பூமிக்குள் கலந்து கொண்டபின் அந்தக் கற்கள் நமது பூமியில் காற்று மண்டல அழுத்தத்திற்குள் வந்தவுடனே சூடேறிக் கரைந்து விடுகின்றது.

அது கரையவில்லை என்றால்… அத்தனையும் அப்படியே விழுந்தால் இங்கே யார் ஒருத்தரும் இருக்க முடியாது. இதைப் போல் தினமும் எரி கற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.

நமது பூமியின் காற்று அழுத்தத்தில் வரும்போது கரைத்து விடுகின்றது. கரைக்கத் தவறிய சில பெரிய பாறைகள் எல்லாம் பூமியில் விழுகத்தான் செய்கின்றது. இத்தகைய நிலைகள் இருந்தால் நாம் யாரும் வாழ முடியாது

இதைப் போன்று தான்…
1.நமது உடலில் வெளியிலிருந்து வரும் தீமையான உணர்வின் தன்மைகளை
2.அது நமக்குள் ஈர்க்கும் சக்தி அடைவதை நீக்கிவிட்டால்
3.நமக்கு முன்னாடி வரும் இந்த தீமையின் அணுக்களை அந்த தீமையின் உணர்வுகளை
4.சூரியன் காலையில் அழைத்து மேலே கொண்டு செல்கின்றது.

ஆகையினால் தான் காலை துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்யப் பழகிக் கொள்ளச் சொல்கிறோம்.

வாழ்க்கையில் துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப்போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரான ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்குங்கள். அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து அந்தத் தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கிவிடும்.

குழம்பில் காரத்தைப் போடும்போது அது எப்படிச் சுவையாக மாறுகின்றதோ இதைப் போன்று சுவைமிக்க உணர்வாக அத்தகைய அணுக்கருக்கள் நம் உடலில் இந்திரலோகமாக மாறுகின்றது.

இப்படி அதை மாற்றப்படும்போது…
1.தீமையென்ற உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கத் தவறுவதினால்
2.உடலில் உள்ள அந்தத் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்கத் தவறுகின்றது.
3.உணவு கிடைக்கவில்லை என்றால் அது சோர்வடைந்துவிடும்
4.அது சோர்வடைவதோடு மட்டுமல்லாதபடி நம் உடலில் தீய அணுக்கள் உருவாகாதபடி அது செயலிழந்துவிடும்.

ஏனென்றால் “ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் இருக்கும் அந்த உணர்வுகள்…” நிலத்திற்குள் எப்படி விஷ வித்துக்கள் பதிந்தபின் மழை வரும்போது வருகின்றதோ… இதைப்போல இந்த உடல் இருக்கும் வரையில். அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அணுக்களாக நமக்குள் பெருக்கி விட்டால் அது விளைந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு நாம் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் நம் உயிர் உடலில் விளைந்த உணர்வு கொண்டுதான் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

ஆகவே தீமையான ஊழ்வினை என்ற நிலைகள் உருவாகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளாக மாற்றி இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்
1.அந்த அணுக்களில் சேர்ந்த விஷத் தன்மையை
2.நாம் துருவ நட்சத்திரத்துடன் சேர்ந்த பின் தொக்கிய உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது.
3.அங்கே கரைத்தபின் விஷத் தன்மையைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.
4.அந்த ஒளியுடன் ஒன்றிய ஒளியின் அறிவாக அங்கே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் இணைகின்றோம்
5.துருவ நட்சத்திரம் விளைவிக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு
6.அதன் தன்மை கொண்டு நம் உயிரான்மா வளர்ச்சி அடைகின்றது.

ஒரு பிரபஞ்சம்… இந்தச் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதைப் போல் அமைப்பில் நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமோ வலுவடைகின்றது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிமயம் ஆகின்றது.

உலகில் உள்ள உணர்வுகளில் அந்த ஒளி அலைகள் பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளிமயமாக மாற்றும் இந்த உணர்வின் தன்மை பெறப்படுகின்றது.

ஆகவே நம் குருநாதர் காட்டிய இத்தகைய உண்மைகளை உணர்ந்த நிலையில்…
1.மனிதனான பின் இன்னொரு பிறவிக்குச் செல்ல விரும்பாதீர்கள்
2.இந்த உடலின் மீது பற்றை வைக்காதீர்கள்.

குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வுகள் தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அதன் உணர்வை அதிகரியுங்கள்.

அதன் உணர்வுகள் நம் இந்திரலோகத்தில் பெருகும். அதன் உணர்வுகள் பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுத்துவிடும். அது சிறுத்திடும் நிலைகள் கொண்டு அருள் உணர்வுகள் பெருகப்படும் போது நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.

உயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…!

soul is god (3)

உயிர் உடலில் இருக்கும் வரை தான் மதிப்பும் மரியாதையும்…!

 

நாம் எத்தகைய உயர்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்…
1.இந்தச் சரீரத்தை விட்டு உயிரான்மா சென்று விட்டால்
2.நம் அழகையும்… நாம் போற்றித் துதித்த தருமத்தையும்…
3.யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…? இல்லை…!

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள் என்று தான் சொல்கின்றார்கள்.

அத்தகைய நிலைகள் கொண்டு சென்றாலும் அங்கே எரிக்கும் இடத்தில் பார்த்தாலோ அதிலே நெருப்பிலே இட்டு எரிக்கப்படும்போது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் போடும்போது அதனை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? சொந்தகாரர்கள் நாமாவது சடலத்தைத் தூக்கி போடுகின்றோமா…! என்றால் இல்லை.

யாரையோ வைத்துத் தூக்கிப் போடுங்கள் என்று தான் சொல்கின்றோம்… இல்லையா…? இதைத்தான் அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு அவர்களை அதற்குத்தான் (குடியானவன் என்றும் வெட்டியான் என்றும்) என்று வைத்திருக்கின்றோம்.

ஏனென்றால் இவர்களை அது சாடி விடுமாம்…!

ஆனால் இவருடைய சொத்து… செல்வம்… எல்லாம் தேவை. இப்படித்தான் நம்முடைய உணர்வுகள் வருகின்றது.

ஆகவே… இந்த உடல் நமக்குச் சொந்தம் என்று ஆக்க வேண்டாம். இந்த உடலின் சொந்தம் கொண்டாடி அதில் வளர்த்துக் கொண்ட சாபங்களை நீக்கி இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி என்றுமே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் நிலை கொள்ள வேண்டும்.

நமக்கு அந்த நிலையான சரீரம் வேண்டுமென்றால் பற்று எதில் வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருளுணர்வோடு பற்று வேண்டும். அந்தப் பற்றை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் இந்த வாழ்க்கையில் எந்த மகரிஷிகளின் உணர்வை அதிகமாகக் கூட்டுகின்றோமோ அங்கே செல்கின்றோம்.

இல்லையென்றால் இந்தச் சாப அலைகள் சிக்கியவர்கள் நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற நிலை ஆகிறது. பின் தாவர இனங்களைப் புசித்து வரும் நிலை மாறி மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் நிலைகள் வரும்.

1.அப்படிக் கொன்று மற்றொரு உடலுக்குள் புகுந்து
2.இப்படிப் பல நிலைகள் மாறி மாறி நரக லோகத்தைச் சந்தித்த பின் தான்
3.அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் இந்தத் தண்டனைகளை எல்லாம் நாம் அனுபவித்த பின் தான்
4.மீண்டும் மனிதனாக வர முடியும் (உடனடியாக வருவது மிகவும் கடினம்)

ஏனென்றால் சாதாரணமாக மனிதனின் கையில் சிக்கி அந்த உயிரினங்கள் சாகாது. அதனுடைய நிலைகள் தன் பசிக்காக ஏங்கி எடுக்கும் அதன் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி அடித்துக் கொல்கிறது என்றால் அவன் புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பிடம் சிக்கித் தவித்தது என்றால் அடுத்த பிறவியில் அவன் பிறப்பு பாம்பாகத்தான் பிறக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
1.விண்ணுலக ஆற்றலும் மண்ணுலக நிலையையும்
2.உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எதுவாக மாறுகின்றது…? என்ற
5.அந்தப் பேருண்மைகளை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக எடுத்து காட்டினார் நமது குருநாதர்.

உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசியலின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் நமக்குள் பட்ட குணங்களும்… நாம் வளர்ந்து வந்த நிலைகளும்… அவைகளுடன் மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியினை இணைத்தே…
1.அண்டத்தில் இருக்கும் நிலைகள் பிண்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வுடன் இணைத்து
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளை
2.உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேசம்.

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப் போன்று உங்களையும் ஞானியாக உருவாக்க வேண்டுமென்பதற்குத் தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் நிலைகளை இன்று எண்ணத்தால் உங்களிலே பெருக்கச் செய்கின்றோம்.

ஒவ்வொருவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி சிரசில் வரும் வலி தான் – ஈஸ்வரபட்டர்

Heatlh bliss

உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி சிரசில் வரும் வலி தான் – ஈஸ்வரபட்டர்

 

நல்நிலை பெற்று நாம் எந்நிலை கொண்ட சுவாசம் எடுக்கின்றோமோ அந்நிலைக்குகந்த உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் நம் ஆரோக்கிய நிலையும் நமக்குக் கிட்டுகின்றன.

நமக்கு வரும் பிணிகள் எல்லாம் நம்மை வந்து அண்டுவது பிறரிடத்தில் இருந்தோ அனைத்தும் வம்ச வழி கொண்டோ நமக்கு வந்து அடைகிறது என்பது மட்டுமல்ல.

வம்ச வழியில் வருகின்றது பல பிணிகள் என்கிறார்கள். வம்ச வழியில் உதிரத் தொடர்புடன் சில நிலைகள் நமக்கு வருகின்றன.

ஆனாலும் நம்முடைய உணர்வும் உணவும் செயலும் கொண்டு நம் எண்ணத்தினால்… அந்த வம்ச வழியின் தொடரில் வரும் பிணிகள் நம்மை அண்டாமல்… நம் உடல் நிலையை ஆரோக்கிய நிலையில்… “இஜ்ஜெப நிலை என்னும் ஆத்மீக வழிக்கு நம்மை நாம் வழி நடத்தி வரும் பொழுது… எப்பிணியும் நம்மை அண்டாது…!”

1.இவ்வுடல் பிணிகள் அனைத்துமே வருவதெல்லாம் இவ்வெண்ணத்திலிருந்துதான்
2.மனிதனின் குண நிலை கொண்டுதான் அவனுக்கு வரும் பிணி எல்லாம்.

தலை வலி எந்நிலை கொண்டு வருகின்றது…?

சமமான நிலையில் மன நிலை உள்ள பொழுது ஆரோக்கிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருந்தாலும்
1.எண்ணமுடன் எண்ணம் மோதும் பொழுது (எதிர் நிலை)
2.நாம் உட்கொள்ளும் ஆகாரம் நமக்குச் செரித்து நம் நிலையில் அவ்வுமிழ் நீர் சுரக்கும் தன்மை தடைப்படுகிறது.

இந்த உமிழ் நீர் சுரப்பியின் நிலை வேறுபடும் பொழுது நாம் உட்கொள்ளும் உணவும் நமக்குச் செரிப்பதில்லை. அந்த நிலையிலிருந்து தான் நமக்கு வருகிறது தலை வலி.

1.உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி இச்சிரசில் வரும் வலி தான்.
2.இதன் தொடர்நிலை தான் நமக்கு வரும் வாந்தி மயக்கம் காய்ச்சல் இப்படி வரும் அனைத்துப் பிணிகளுமே
3.இந்நிலையின் தொடர்தான் அடிக்கடி உடல் உபாதை உற்றவனுக்கு
4.அவன் உடலில் சில உறுப்புகள் செயல்படும் தன்மையை இழந்து விடுகின்றன.

சில உறுப்புகள் அதிகப் பிணி கொண்டு அதன் செயல் தன்மை இழந்த பிறகு எந்த விதமான வைத்தியத்தாலும் அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளுவதுதான் நமக்கு வரும் பிணிகளெல்லாம்.

1.மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு
2.என்றும் அமைதி கொண்டு வாழ்பவனுக்கு இவ்வலியும் பிணியும் வந்து அண்டாது.

நாம் மாறுபட்ட உணவை உட்கொள்ளும் பொழுது அம்மாறுபட்ட உணவினால் தான் “நம் உடல் நிலை சீர் கெட்டது…!” என்று செப்புகின்றோம்.

1.மாறுபட்ட இடம் மாறுபட்ட உணவு என்று எண்ணும் பொழுதே
2.நம் எண்ணத்தையும் மாறுபடக் கொள்கின்றோம்.

அந்நிலையின் கலக்கத்தினால் நம் எண்ணமே அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதே நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் உமிழ் நீர் சுரக்கும் தன்மையும் மாறுபடுகிறது.

அந்நிலையிலேயே அவ்வுணவு செரிக்கும் பொழுது இவ்வுடலுக்கும் அதை ஏற்கும் தன்மை குறைபடுகிறது. உணவின் மேல் நாம் பாரத்தைப் போடுகின்றோம்.

நம் உடல் நிலைக்குப் புசிக்கும் உணவை நாம் விரும்பி உண்ணும் பொழுது அதன் சுவை “நமக்கு அமிர்தம் போல் உள்ள நிலையாக” உணர்ந்து உண்டிட வேண்டும்.

உணவின் நிலையைப் பற்றி நம் முன்னோர்கள் எழுதிய பல நூல்களில் உணவை உண்ணும் நிலையையும்… நாம் உண்ணும் உணவினால் நம் உடல் பெறும் நிலைகளைப் பற்றியும்… பல நிலைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

1.நாம் உண்ணும் உணவையே நாம் சந்தோஷத்துடன் அவனளித்த அமிர்தத்தை அமிர்தமாகப் புசித்திடல் வேண்டும்.
2.“பசித்துப் புசி…!” என்று நம் முன்னோர் செப்பியுள்ளனர்.
3.பசித்த நிலையில் புசிப்பவனுக்குப் புசித்த உணவெல்லாம் அமிர்தம் போல் உட்சென்று
4.அதன் சத்தினை இவ் உடல் ஏற்கும் பக்குவ நிலைக்கு இருந்திடும்.

நம் முன்னோர்கள் நமக்குகந்த பல உணவுகளைப் பக்குவ நிலைப்படுத்தி நமக்கு உணர்த்திச் சென்றார்கள். உண்ணும் உணவை நாம் ஆசையுடன் புசித்திட்டாலே இவ்வுடல் நிலைக்கும் இவ்வுள்ள நிலைக்கும் எப்பிணியும் வந்து அண்டாது.

நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதற விட்டும் மோத விட்டும் நம் கோபத்தையும் அதி சந்தோஷ நிலையையும் வளரவிட்டும் அந்நிலையில் நாம் உண்ணும் எவ்வுணவையும் நம் உடல் நிலை ஏற்பதில்லை.

நமக்கு வரும் வலியும் பிணியும் இம்மாறுபட்ட சஞ்சல நிலை கொண்ட எண்ணத்தின் மோதலினால்தான் நமக்கு வருகிறது என்பதனை அறிந்திடல் வேண்டும்.

வியாதி உள்ளவனை நாம் சென்று பார்த்தால் அவன் உடல் நிலையிலுள்ள அவ்வியாதியின் அணுக்கள் நம்மையும் வந்து தாக்கி நமக்கும் அவ்வியாதி வரும் என்று சொல்கின்றோம்.

வியாதியஸ்தனைக் காணச் செல்பவனுக்கு…
1.நல்நிலையில்… ஆரோக்கிய நிலையில்… சமமான நிலையில்… அவன் எண்ணத்தில்
2.சிறு அணுவும் தனக்கு அந்த வியாதி அண்டிக் கொள்ளுமே என்ற பயமில்லாத நிலையில் செல்பவனுக்கு
3.எந்த வியாதிஸ்தனின் உடலிலுள்ள எவ்வியாதி அணுவும் வந்து அண்டாது.

ஆனால்… அவ்வியாதியஸ்தனின் “உதிரத் தொடர்புடையவருக்கு” எண்ண நிலையில் ஒரு நிலை கொண்டவருக்கு அவன் சுவாச நிலை பட்டாலே அக்கிருமிகள் வந்து தாக்கும் நிலை உள்ளன.

சில வகை ஜுரங்களின் அணுக்கள் அவ்வியாதியஸ்தன் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்துடனே அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.உடல் நிலையில் ஆரோக்கியமில்லாதவரும்
2.எண்ண நிலையில் கலக்கமுள்ளவர்களும்
3.அந்நிலையிலுள்ள வியாதியஸ்தனின் சுவாசக் காற்று பட்டாலே
4.அவனின் வினையான இவ்வியாதி அணு இவர்களையும் வந்து அண்டிக் கொள்ளும்.

இப்படர்ந்த பூமியில் உள்ள அணுக்கள்தான் யாவையுமே. வியாதியின் அணுவும் இக்காற்றில்தான் உள்ளது. அவ்வியாதியைக் குணப்படுத்தும் மருந்தும் இக்காற்றில்தான் உள்ளது.

நாம் ஏற்கும் சுவாசம் கொண்டுதான் அனைத்து நிலைகளுமே நமக்கு வருகின்றன. “இவ்வெண்ணத்தினால் வருவதுதான் எல்லாப் பிணியும்…!”

இன்று பல புதிய புதிய வைத்தியமும் தான் வளர்ந்துள்ளன.

ஜீவராசிகளின் பெருக்கத்தினாலும் பல ஆலைகளிலிருந்து வெளிப்படும் கழிவின் புகையினாலும் விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் பொக்கிஷத்தை நாம் பிரித்து எடுத்தினாலும் தாவர வர்க்கங்களின் நிலையின் குறைவினாலும் வந்த வினைதான் “இன்று இக்காற்றில் கலந்து வரும் புதிய புதிய பிணிகளெல்லாம்…!”

இன்று இவ்வுலகம் உள்ள நிலையில் ஜீவராசியின் அதிபெருக்கத்தைச் சமப்படுத்தினால்தான் இவ்வுலகம் இனி வரும் மாற்றத்திலாவது தாவரங்கள் செழித்து வளர்ந்திடும்.

1.தாவரங்களின் வளர்ச்சிதான் உலகத்தின் உண்மையான வளர்ச்சி.
2.விஞ்ஞானம் கொண்டு வளரும் வளர்ச்சியல்ல இவ்வுலக வளர்ச்சி.

ஜீவராசிகளின் இனப்பெருக்கத்தைச் சமப்படுத்திடும் நிலை உணர்ந்தே வந்திடுங்கள்.

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?

Agastyan blissful state

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?

 

செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது
2.செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.

செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது. அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.அந்த தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

நம்முடைய அந்தஸ்து எதுவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

hiclipart.com (1)

நம்முடைய அந்தஸ்து எதுவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வாழும் காலத்தில் அவரவர்களின் அந்தஸ்தைப் பொறுத்த வாழ்க்கை நிலை வாழ்வதாக இம்மனிதன் சொல்கின்றான். மனிதன் சொல்லும் அந்தஸ்து இப்பொருள் சுகத்தைக் கொண்ட அந்தஸ்து.

பொருளை வைத்து… அவரவர்களின் கையிலுள்ள செல்வத்தை வைத்து… இன்றுள்ள மனிதன் மனிதனை எப்படி எடை காண்கின்றானோ அந்நிலைக்கு மேல்…
1.இன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் பெற்ற வழி நெறிகளைக் கொண்டு
2.நம் ஆத்மா இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகும்
3.நம் ஆத்மாவிற்கும் அந்தஸ்து நிலையுண்டு (தர நிலையுண்டு).

வாழ்ந்த காலத்தில் மனிதன் தனத்தை வைத்துத் தரத்தை நிர்ணயிக்கின்றான். இத்தரம் எத்தரம்…? மனிதனே மனிதனுக்கு அளிக்கும் தரம் தான் இந்தத் தரம்.

வாழ்ந்த வாழ்க்கையில்… எண்ணம் செயல் அனைத்தையுமே ஆத்மீக நெறி கொண்ட அன்பு நிலை கொண்டு வாழ்பவனின் தரம்தான் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் “நிர்மலமான ஜோதி நிலை கொண்ட தரம்…!”

அத்தகைய தரம் பெற்ற ஆத்மாவுக்கு ஆண்டவனாக வாழும் அரும் பெரும் பொக்கிஷ நிலை கிட்டுகிறது.
1.வாழும் காலத்தில் இவ்வாத்மீக நெறி கொண்டவன் அவ்வழிக்கு வந்துவிட்டால்
2.மற்ற அணுக்களுக்கும் வந்து தாக்கிடவும் செய்யாது.
3.முதலில் அவ்வுடலில் இருந்த மற்ற அணுக்களின் (ஊழ்வினைகள்) சக்தியும் செயலற்றுப் போகின்றன.

ஆத்மீக வழிக்கு வந்து… அறம் பெற்று… வாழும் தரம் கொண்டே வாழ்ந்திட்டால்… இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் வாழும் நாட்கள் தான் மிகவும் குறுகிய நாட்கள்.

இவ்வாவியான உலகில் ஆத்மாவுடன் ஆவி உலகில் வாழும் நாள் தான் நீடித்த நாள் இவ்வாத்மா இருக்கும் நாள்.

இவ்வுடலுடன் உள்ள நாட்களில் நாம் நமக்களித்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
1.நம் ஆத்மாவுடன் ஆவி உலகத்தில் வாழும் வாழ் நாட்களுக்கும்
2.இவ்வுடலுடன் உள்ள பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்ட எண்ணமும் செயலும்தான் வந்து
3.நம்முடன் என்றும் சப்த அலைகளாக சத்து கொண்ட ஆத்மாவாக ஆவி உலகில் வாழப் போகின்றோம் என்பதை உணரல் வேண்டும்.

ஏனென்றால் நாம் சேர்க்கும் சொத்தும் சுகமுல்ல நம்முடன் வருவது.

நாம் உடலுடன் உள்ள நிலையில் நாம் இப்பிறவி எடுத்து நம் ஆத்மா என்று பிரிகிறதோ அன்று வரை “நம் சப்த அலைகள் அனைத்துமே” நம் ஆத்மாவுடன் நம் கூட வருகின்றன.

ஆகவே எண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். தம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

ஞானிகள் வெளிப்படுத்தும் நல்ல அலைகளை ஈர்த்து வாழும் பக்குவத்திற்கு வாருங்கள். பல நிலை கொண்ட தீட்சண்ய ஆவிகளின் செயலில் இருந்து தப்பி வாருங்கள்.

இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் உள்ளன என்று பல முறை உணர்த்தியுள்ளேன்.

நம் உடலுக்குத் தேவையான மருந்தும்… உணவும்… நீரும்… காற்றும்… உலோகமும்… பல நிலை கொண்ட திரவங்களும்… இப்பூமித்தாய் பதித்துள்ள அனைத்து சக்திகளும்… இக்காற்றினிலே கலந்துள்ள பொழுது
1.நமக்கு வேண்டிய நல் நிலைகளை
2.நாம் ஈர்த்து வாழும் பக்குவம் பெற வேண்டும்.

தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்

lord-velaudha murugan

தீமைகளை வென்றிடும் உணர்வுகளாக நம் உடலுக்குள் விளைந்த நல்ல குணங்களை நாம் பாதுகாத்தல் வேண்டும்

 

ஏனென்றால் நாம் தவறு செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கையில் பண்பும் அன்பும் பரிவு கொண்டு மனிதனுக்கு மனிதன் காத்திட வேண்டுமென்று நாம் செயல்படுகின்றோம்.

தீமைகளினால் மற்றவர்கள் சிரமப்படும்போது பண்பு கொண்ட நாம் அவர்களை அணுகி அவர்கள் படும் துயரத்தைக் கேட்டறிந்து அவருக்கு நன்மையும் செய்கின்றோம்.

இது மனிதனின் நற்குணங்களைக் காட்டுகின்றது.

மனிதனானபின் இப்படிப் பண்பும் பரிவும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர் படும் துயரத்தையோ அல்லது பிறரைத் துயரப்படுத்தும் செயலைச் செயல்படுத்துவோரையோ அல்லது பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்போரையோ நாம் உற்றுப் பார்க்க நேருகின்றது.

அப்பொழுது அதை நாம் நுகர்ந்து “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றார்கள்…” என்பதை நாம் அறிந்தாலும் அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்துடன் இணைந்து விடுகின்றது.

ஆக அவர்கள் செய்யும் தவறுகள் நம் நல்ல குணத்தில் பட்டபின் என்ன ஆகிறது…?

உதாரணமாக நாம் கீழே விழுந்து விட்டால் நம்மை எழுந்திருக்க விடாது நம்மை ஒருவன் அடித்துக் கொண்டே இருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

அதைப் போல் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் பார்த்தோமென்றால்
1.நாம் இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும்போது
2.அவனுக்கு ஒருவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
3.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அது பலவீனமடைகின்றது.

ஒருவனைக் கீழே தள்ளி விட்டு நாம் மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படிப்பட்ட துன்பமோ இதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த நல்ல அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.

1.இவ்வாறு நாம் வேதனையுடன் துடிக்கப்படும் போது
2.எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினாலும் கீழே தள்ளும் நிலை போன்று தான் வரும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் அந்தத் தீங்கு செய்வோனை உற்றுப் பார்க்கின்றோம். அதனால் பாதிக்கப்படுபவன் பதறி அழுவதையும் பார்க்கின்றோம்.

அப்பொழுது அவனின் நல்ல குணங்களின் தன்மை கொண்டு நம் நல்ல குணங்களில் இணைக்கின்றது.

ஆனால் அதே சமயம் அந்த தீமை செய்வோன் தாக்கும் உணர்வுகளும்.. அதனால் அவன் பதறும் உணர்வுகளும்… இந்த இரண்டும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்து அறியும் போது நம் நல்ல குணங்களுடன் இந்த இரண்டுமே இணைந்து விடுகின்றது.

இது ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் அடுத்து ஒரு தரம் இதே போல் நடந்தால்…
1.நம்மை அறியாமலேயே என்ன உலகம்..? என்போம்…
2.எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…! என்ற அந்த உணர்வுகள்
3.நல்லதைப் பேச விடாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேசவைத்து விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு டேப்பில் இனிமையான பாடலை ரெக்கார்டிங் செய்கிறோம் என்றால் அதிலே எதிர்மறையான ஒலிகளும் இடையிலே சேர்ந்து பதிவாகி விட்டால் நல்ல பாடலை இடைமறித்து அந்த இனிமையையே மாற்றி விடுகின்றது.

இதைப்போலத் தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நமது உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
1.தீமை செய்வோனையும் தீமையில் சிக்குண்டவனையும் இந்த இரண்டு உணர்வையும் நாம் நுகரப்படும்போது
2.அவன் பதறுவதை இந்த உணர்வு வலு கொண்ட அணுவாக மாற்றுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணம் கொண்டு நாம் உற்றுப் பார்க்கப்படும்போது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பரிவுடன் சென்றாலும்… அவன் வேதனையாகப் பேசும் போது அவன் வேதனைப்படும் உணர்வுகள் எல்லாம் நம் நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால்
1.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள்
2.நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கி விடுன்றது.

நம் நல்ல குணங்களுடன் இதைப் போன்ற தீமைகள் இணைந்து நமக்குள் பதிவாகாமல் தடுக்க வேண்டுமல்லவா…! தடுக்கவில்லை என்றால் நம் நல்ல குணங்கள் பலவீனமாகும்… நம்மை அறியாமல் பதட்டம் வரத் தான் செய்யும்.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

protection from astral souls

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம்மை நாம் பக்குவப்படுத்தி அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் போது பல ஞானிகளும்… முன்னோர்களும்… நம் ஜெபத்துடன் வந்து அருள் தருகின்றார்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தில் நாம் பிறவி எடுத்த இப்பிறவியில் உதிரத் தொடர்புடைய பெரியோர்களின் ஆசியும் நமக்குக் கிட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்பத்தின் மூதாதையர் அவர்கள் இறந்த பிறகு உடனே மறு பிறப்பிற்கு வராமல் தனது உதிரத் தொடர்புடைய வம்ச வழிக்கு ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்து அக்குடும்பத்தைக் காக்கும் தெய்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்ந்த நாளில் அக்குடும்பத்திற்காகச் செய்த நன்மையைக் காட்டிலும் ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்கின்றனர்.
1.தன் உதிரத் தொடர்பு உடையவர்கள் நிலையெல்லாம் மறைந்த பிறகுதான்
2.அவர்கள் மறு பிறப்பிற்கு வருகிறார்கள்.
3.இப்படி பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பல நிலைகள் உள்ளன.

நம் முன்னோரை வணங்கி நாம் ஆகாரம் படைத்து அவற்றைப் பட்சிகளுக்கு வைக்கின்றோம். அப்பட்சிகள் வந்து உண்ணும் நிலையில் நாம் நம் முன்னோரே அதை வந்து உண்டதாக மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் அப்பட்சியின் நிலைக்கு எப்படி வருகிறார்கள்…? அவர்களின் ஆத்மா அப்பட்சியின் உடலில் ஏறுவதல்ல.

ஞானிகளும் ரிஷிகளும் செயல்படுவதைப் போல் இந்நல்நிலை பெற்ற குடும்ப முன்னோர்களும் அப்பட்சியின் எண்ணமுடன் கலந்து அப்பட்சியையே தான் வருவதாக இயங்கச் செய்து அப்பட்சி உணவு எடுக்குங்கால் நாம் படைக்கும் அவ்வுணவில் உள்ள மணத்தை அவர்கள் ஈர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் அவர்கள் எடுத்தார்கள் என்பதனை அறிய அப்பட்சியை ஒரு கருவியாக்கி அவர்களே அப்பட்சியுடன் வந்து எடுத்துச் செல்வதுதான் நாம் படைக்கும் நிலையெல்லாம்.

பறக்கும் நிலைகொண்ட அப்பட்சியின் உடலில் செயல்படுவது எளிது. அதன் நிலை கொண்டு தான் நம் முன்னோர்கள் நிலையும் இங்கு நடக்கின்றது.

எவ்வுடலையும் தன் செயலுக்குக் கட்டுப்படுத்திட எவ்வாவிகளுக்கும் முடியும். அவ்வாவிகளின் குண நிலைக்கு ஏற்பச் செயல்படுத்திடும் நிலை கொண்டவரின் நிலைக்கெல்லாம் அவ்வாவிகள் வருகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் இன்னும் பல இடங்களில் பட்சிகளுக்கு உணவு வைத்தால் அவ்வுணவை அதே நேரத்தில் வந்து அப்பட்சிகள் எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள்.

இன்றும் அருணகிரிநாதர் தன் செயலை பட்சியின் மேல் வந்து அவருக்குப் படைக்கும் உணவை எடுத்துச் செல்கின்றார்.

இவ்வாவி உலக வாழ்க்கை ஒன்று உள்ளது.

மனித வாழ்க்கையில் உண்டு உறங்கி உழைத்து வாழ்கின்றோம். இவ்வாழ்க்கைக்கே ஆவி உலகில் உள்ளவரின் வாழ்க்கையும் கலந்துதான் செயல்படுகின்றது. அவ்வாவி உலகில் உள்ளவரும் நம்முடனே சுற்றிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இன்று மனிதனையும் இப்பிம்பப் பொருள்களையும் நிழல் படம் எடுப்பதைப் போல் ஆவி உலகில் உள்ளவர்களையும் எடுத்திடலாம்.

1.ஆவி உலகில் உள்ளவர்களும் எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்
2.தன் ஆத்மாவிற்கு அவர்களும் நுகரும் தன்மை கொண்டு
3.பல சக்தி ஆகாரத்தை ஈர்த்துத்தான் ஆவி உலக ஆத்மாவும் வாழ்கிறது.

ஜீவ உடலில் உள்ள நாம் திடப்பொருளை உணவாக்கி உண்ணுகின்றோம்.
1.இவ்வுடலில்லாத ஆவி உலக ஆத்மாக்கள் தன் ஆத்மாவுக்கு வேண்டிய உணவை
2.ஆவியாகவே ஈர்த்துத் தன் ஆத்மாவுக்கு உணவாக்கிச் சுற்றிக் கொண்டுள்ளன.

நாம் படைக்கும் உணவையும் சில இல்லங்களில் அவ்வில்லங்களில் உணவைச் சமைத்து வைத்த நிலையிலும் அவ் இல்லத்தில் இறந்தோர்கள் தனக்கு வேண்டிய உணவை இன்றும் வந்து அதன் சுவையை ஈர்த்தெடுத்துச் செல்கின்றார்கள்.

சில இல்லங்களில் கேட்டிருப்பீர்…! உறக்கத்தில் உள்ள பொழுதே எழுந்து நடமாடி வீட்டு வேலைகள் செய்து உணவு சமைத்து உண்பதாக எல்லாம்.

உறக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிட்டு விழித்த பிறகு கேட்டால் மறந்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

உறக்கத்துடன் பல நிலைகளை இன்றும் பலர் செய்கிறார்கள். இவையெல்லாம் தன் ஆசை அடங்காத நிலைகொண்ட ஆவிகளின் நிலைகள் தான்.

தன் நிலையைச் செயல்படுத்திட…
1.தன் ஆசைக்கு இவ் உடல்களைத் தன் எண்ணத்துடன் கலக்கச் செய்து
2.அவர்கள் நிலையை மறக்கச் செய்து தன் செயலை தன் ஆசையை இவ்வாவிகள் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இவ்வாவிகளுக்கு மனிதர்கள் விழித்துள்ள நிலையில் அவர்கள் எண்ணத்தை அடங்கச் செய்து தன் செயலைச் செயல்படுத்திட முடியாத நிலையில் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் பலர் இரவில் தன்னை அறியாமல் உறக்கத்தில் நடந்திடும் நிலையெல்லாம்.

இவ்வாவிகள் தன் ஆசையைச் செயல்படுத்திடும் எண்ணத்துடனேதான் இவ்வுலகினில் சுற்றிக் கொண்டே உள்ளன. ஆகவே
1.நாம் பெறும் ஜெபம் முதலில் பிற ஆவியின் அணுக்களின் உந்தலில் இருந்து தப்பி
2.நம் சக்தியை நாம் உணர்ந்து நல் சக்தியை ஓங்கச் செய்து நாம் வாழ வேண்டும்.

பல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…?

soul cleaning importance

பல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…?

 

விஞ்ஞான அறிவில் படித்துக் கொண்டவர்கள் இன்று எத்தனையோ வகையில் இப்பொழுது தனக்கு வேண்டிய உயிரணுக்களை மற்ற உடல்களில் இருந்த செல்களை எடுத்து மற்ற உடலில் சேர்த்து புது புது ஆட்டினங்களையோ மாட்டினங்களையோ நாயினங்களையோ உருவாக்குகின்றார்கள்.

எத்தனையோ எண்ணிலடங்காத நாய்களைப் பூனை போல்… கரடி போல் உருவாக்கியிருக்கின்றனர். பூனை போல்… கரடி போல் உள்ளது. மற்ற உயிரினங்களிலிருந்து எடுத்து அதை ஒன்றாகக் சேர்த்து புதுப் புது நாய்களை உருவாக்குகின்றான்.

அதே போல் உணவுப் பொருள்களில் பார்த்தாலும் சாதாரண மனிதன் பல வகையான பொருள்களைச் சேர்த்துப் புதுப் புது பதார்த்தங்களை செய்கின்றான்.

மனிதனுக்குச் சுவையாக இருப்பதற்குப் புதுப் புது பதார்த்தங்களைச் செய்கின்றோம். எந்தப் பொருளை எதனுடன் போட்டால் எதன் சுவை வரும்…? என்ற நிலையில் மனிதன் கற்றுணர்ந்து அதன்படி சுவையான பதார்த்தங்களைச் செய்கின்றான்.

அன்றெல்லாம் ரொட்டி கடையில் மட்டும் தான் ரொட்டி தான் இருக்கும். இப்பொழுது வீட்டிலேயே கூட ரொட்டியோ மற்றதோ செய்யக்கூடிய அளவிற்குக் குடும்பங்களில் படித்ததை வைத்துச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இதைப்போல மனிதன் தன் எண்ணத்தால் புதுப் புதுப் பொருள்களை உருவாக்கும் அளவிற்குத் திறன் பெற்றுள்ளான் மனிதன்.

பெண்கள் வீட்டில் வகை வகையான குழம்புகளை வைக்கின்றார்கள். பருப்பை எடுத்து அளவாகப் போட்டு அதற்கு வேண்டிய சரக்குகளைப் போட்டுப் பக்குவப்படுத்திச் சுவையான உணவு வகைகளைச் சமைக்கின்றனர்.

அதே சரக்குகளை அதே அளவுகோல்படி இன்னொரு பெண்மணியிடம் கொடுத்து அதே மாதிரிச் சமைக்கச் சொன்னால் அதன் சுவை வித்தியாசமாகத் தான் இருக்கும்.

காரணம் அவர் உணர்வுகொப்ப அந்த சுவையைக் கூட்டிடும் உணர்வுகளை உருவாக்குகின்றது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்கலாம்.

சில குடும்பங்களில் பார்த்தால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். சுவையாக இருப்பதற்குக் காரணம்… அங்கிருக்கும் பெண்கள்
1.கூடுமான வரையிலும் நல்ல சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்த வேண்டுமென்று
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்டதனால்
3.அந்த உணர்வுகள் அந்தந்தப் பக்குவத்தை பெறப்படும் பொழுது
4.குழம்பைச் சுவையாக செய்கின்றார்கள்.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கொஞ்சம் விரக்தியாக வரட்டும் அல்லது சண்டை போடட்டும்…! ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான உணர்வு வரப்படும்போது அன்று குழம்பு வைப்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலா.

உதாரணமாக.. கோபமாக இருந்தால் காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்கள். சலிப்பு சஞ்சலம் அதிகமாக இருந்தால் இரண்டு உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்கள்.

ஆனால் அதே சரக்குகளை வைத்து சுவையாக முதலில் செய்தவர்கள் தான். அந்த அளவுகோலும் இருக்கின்றது. ஆனால் இந்த உணர்ச்சிகள் அதற்குத்தக்க இந்த உடலை இயக்குவது எது…?

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்தான்…! அவர்கள் தப்பு செய்யவில்லை.

குழம்பு வைத்த பிறகு பார்த்தோமென்றால் ஐய்யய்யோ… நான் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி குழம்பு வைத்துவிட்டேன் என்பார்கள்.

அதே போல் பக்கத்து வீட்டுப் பையன் அடிக்கடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். பார்த்தவுடனே… இப்படியா அவர்கள் வீட்டில் சண்டை போடுவார்கள்…! என்று சலிப்படைந்தேன். அதை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தேன். இங்கே உப்பு அதிகமாகி விட்டது என்பார்கள்.

இதை எல்லாம் மாற்றுவது யார்…?

பிறர் செய்யும் சிந்தனையற்ற செயலின் உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம் உடலுக்குள் ஓடி அவரின் உணர்வுகளுக்குத் தக்கவாறு நாம் குழம்பு வைக்கின்றோம்.

அப்பொழுது யார் தப்பு செய்தது…? நாம் அந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்தது தான் இயக்குகிறது.

கையிலே மண்ணை எடுத்து ஒரு வேலையாகப் பிசைந்து கொண்டிருக்கின்றீர்கள். கையை கழுவாமல் அப்படியே நீங்கள் அடுத்தாற்படி குழம்பை வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும்…?

இந்த மண்ணோடு காய்கறிகளைச் சேர்த்தோமென்றால் இந்த மண்ணும் சேர்த்து நர…முற… நர…முற… என்று இருக்கும். அப்படியானால் நம் கையைக் கழுவுகிறோம் அல்லவா…?

அதே சமயத்தில் வழு வழுவென்று இருக்கக்கூடிய பதார்த்தத்தைத் தொட்டு வேலை செய்கின்றோம். கை கழுவாமல் இருந்தால் அதே உணர்வின் தன்மை நாம் வைக்கும் குழம்பில் சேருமல்லவா…? அதை சுத்தப்படுத்திவிட்டு தானே வேலை செய்கின்றோம்.

இதே மாதிரித் தான்…
1.ஒரு கோபப்படும் உணர்வை நாம் கேட்கின்றோம்… உயிரிலே படுகின்றது
2.இந்த உணர்ச்சிகள் போனவுடனே நம் ஆன்மாவில் தூய்மை கெடுகின்றது
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே கோப உணர்ச்சிகளை இயக்குகின்றது
4.அப்பொழுது நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டுமா இல்லையா?

அதற்கு என்ன ஆயுதம் வைத்துள்ளீர்கள்…?

ஏனென்றால் இதெல்லாம் மறைமுகமாக நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றுகின்றது நல்ல உடலையும் நோயாக மாற்றி விடுகின்றது.

பிறர் செய்யும் தவறுகளை நாம் பார்க்கப் பார்க்க அந்த உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுள்ளவனாக மாற்றி விடுகின்றது.

அதனால்தான் விநாயகர் கையில் கொடுத்திருப்பது அங்குசபாசவா.

அதாவது உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில்
1.ஒவ்வொரு பிறவியிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டுமென்று
2.தன் கண்களால் கூர்மையாகப் பார்த்து அதன் வலிமையை நுகர்ந்து
3.எதிரியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து
4.அதிலிருந்து விலக வேண்டும் என்ற உணர்வு அதிகமானபின் தன் உடலில் இது விளைந்து
5.இது இறந்தபின் எதன் வலுவான உணர்வு நுகர்ந்ததோ அந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனான நிலையில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கிட… ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து… அதை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்ற வேண்டும் என்பதற்கே “அங்குசபாசவா” என்று ஞானிகள் காட்டினார்கள்.

நமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

act of soul

நமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால் நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான் இப்பக்தி நிலை தியான நிலை என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர். ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டு பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

guru spiritual wishes

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

 

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.