குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அருள் உபதேசம் கொடுக்கும் விதம்

Guru Eswarapattar

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அருள் உபதேசம் கொடுக்கும் விதம்

 

பரிணாம வளர்ச்சியில் பல கோடி நிலைகளிலே விஷத்தை வென்றிடும் உணர்வு பெற்று இன்று மனிதனாக வந்த பின்
1.இன்று விஷத்தை வெல்லத் தவறினால் நீ மீண்டும் மிருக நிலை அடைகின்றாய்…
2.விஷ ஜந்துகளின் உருவத்தை நீ பெறுகின்றாய்…
3.உன்னில் எது…? என்ற நிலைகளை எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஆகவே தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் நினைக்கலாம் ஒரு பத்து நிமிடத்தில் அல்லது ஒரு அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் செல்லலாமே என்று…!

ஆனால் குருநாதர் எம்மைத் தெளிவாக்கும் போது குறைந்தபட்சம் ஏழு நாட்கள் ஆகிவிட்டது. அந்த ஏழு நாட்களாக… இந்த விளக்கவுரைகளையும்
1.உணர்வின் அலைகள் எப்படி பதிகின்றது…? என்பதனையும்
2.பதிந்த உணர்வுகளை நீ எப்படி நுகர வேண்டும் என்பதனையும்
3.அதை நுகர்ந்த பின் நீ எதை மாற்றிக் கொள்ள வேண்டும்…?
4.எதனை நீ பெருக்கிக் கொள்ள வேண்டும்…? என்பதனையும்
5.சற்று சிந்தித்துப் பார்… என்ற உணர்வினைக் கொடுத்தார் குரு.

என் குருநாதர் எனக்குக் கொடுத்த இதே உணர்வைத்தான் இந்த இயற்கையின் நிலைகளில் இருந்து உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். நீங்கள் பெற வேண்டியது எது…? அடுத்த எல்லை எது…? என்று சற்று சிந்தித்து இந்த வாழ்க்கையின் நிலைகளை நமது கடைசி எல்லை எது…? என்ற நிலையை முடிவு செய்து அதனின் நிலைகளைப் பெறுங்கள்.

இதன் வழிகள் பெற்றவர் தான் நம் குருநாதர். வைகுண்ட ஏகாதசி அன்று இந்த உடலை விட்டுக் சென்ற பின் ஏகாந்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டல எல்லையை அடைந்தார்.

ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் மனைவியார் தன் கணவன் சொன்னபடி அந்த அருள் உணர்வின் தன்மை பெற்ற பின் அவருடன் இணைந்தே வாழ்ந்தார்.

அதன் வழியில் இவர் உடலை விட்டுச் சென்ற பின்… தன்னுடன் (குருநாதர்) அரவணைத்த உணர்வு கொண்டு விண்ணின் ஆற்றலை தனக்குள் கருவுற்று… உணர்வின் தன்மை ஒளியாகும் நிலைகள் பெற்று… இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இன்றும் ஒளியின் சரீரமாக இருவருமே சப்தரிஷி மண்டலத்தில் நிலை கொண்டுள்ளார்கள்.

அவர் ஒரே நிலையல்ல… பல வழிகளில் அதாவது எத்தனையோ வகைகளில் எத்தனையோ உணர்வுகள் எதனதன் வழிகளில் எவ்வாறு ஆகின்றது என்ற நிலையைத் தான் எமக்குத் தெளிவாக்கிக் காட்டினார்.

அவர் எதாவது ஒன்றைச் சொல்வார். இது சரியா…? என்பார்.

சரி தான்… இதுதான் சரி…! என்று சொன்னால் எப்படி சரி…? என்று கேட்பார்.

1.சரி என்ற நிலைகள் சொன்னாலும்…
2.அவர் சொன்ன முறைப்படி நான் சரி என்றாலும்
3.திரும்ப இதை எப்படிச் சரி…? என்று கேட்டு
4.இதுவல்ல…! இதற்கு இந்தந்த நிலைகள் இப்படி மாற்று…! என்றும்
5.ஒவ்வொரு உணர்வுகளிலும் ஒவ்வொரு இணை சேர்க்கப்படும் போது
6.இந்த உணர்வுகள் எப்படி மாறுபடுகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டே வருவார்.

இவை அனைத்திற்கும் முடிவு… உயிர் ஒளியானது… நம் உணர்வுகளை எல்லாம் அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்.

குடும்பப்பற்று கொண்ட ஆத்மாக்களின் நற் செயல்களும் துர்க்குணம் கொண்ட ஆத்மாக்களின் செயலையும் அறிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

Acts of souls

குடும்பப்பற்று கொண்ட ஆத்மாக்களின் நற் செயல்களும் துர்க்குணம் கொண்ட ஆத்மாக்களின் செயலையும் அறிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்… நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு…
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக் குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்…
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதேபோல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது. அம்மிருக உணவை பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ளபொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன…?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக்கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே… ஷாஜஹான் என்னும் ஆவியும்…!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே…!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

“பூதம் காத்த புதையல்” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

devil and trreasure

“பூதம் காத்த புதையல்” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரனங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?

தன் நாட்டைக் காக்க தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

உயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்

om eswara gurudeva

உயிருடன் நாம் ஒன்ற வேண்டியதன் அவசியம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது உங்கள் உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உங்கள் உயிரே குரு…!

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும்போது அனைவரும் ஒன்றுபோல உங்கள் உயிரான ஈசனை வேண்டி ஏங்கி யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி எண்ணும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

1.நீங்கள் யாரையும் வேண்டவில்லை… உங்கள் உயிரைத்தான் வேண்டிக் கொள்கின்றீர்கள்
2.அவனின்றி ஒரு அணுவும் அசையாது
3.இந்த உயிர் உடலில் இல்லையென்றால் உடலான சிவம் சவமாகி விடுகின்றது
4.சிறிது நேரமானால் நீசமாகிவிடுகின்றது என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் மீண்டும் சொல்கின்றேன். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கும்போது…
1.அருள் உணர்வைப் பெறலாம்
2.அறியாத இருளை நீக்கலாம்
3.பொருளறிந்து செயல்படும் திறனும் பெறலாம்
4.அருள் வாழ்க்கையும் வாழலாம்.
5.இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றவும் முடியும்.

இந்த சக்தி ஒவ்வொரு மனிதர் உடலிலும் உண்டு. இப்படி நாம் பக்குவப்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையே… சந்தர்ப்பமும் மற்ற சூழ்நிலைகளாலும் பல திசைகளிலும் இயக்கப்பட்டு அதன் மூலம்
1.மனிதன் வாழ்க்கையில் உயர்வதும்
2.மனிதன் வாழ்க்கையில் நோய் வருவதும்
3.மனிதன் வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் வருவதும்
4.ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் சந்தர்ப்பத்தால்… “நுகர்ந்தறிந்து உணர்ந்த உணர்வால் நிகழ்வதுதான்… இது எல்லாம்…!”

யாரும் தவறு செய்யவில்லை என்று மீண்டும் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளையச் செய்தால் அந்தச் சந்தர்ப்பத்தால் வரும் இன்னல்களை அகற்றலாம்.

நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக நாம் என்றுமே உருவாக்க முடியும். அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்கின்றோம்.

உலகச் சுழற்சியிலிருந்து மீண்டு மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

Kalki of our aoul

உலகச் சுழற்சியிலிருந்து மீண்டு மெய் உலகிற்கு வாருங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும் அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்று பிறவி எடுத்திட…!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை பாக்கியம் பெற்ற வாழ்க்கை என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஒளி கொண்ட மெய் ஞானியாக உருவாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

agastiya-rishi

இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் மெய் ஒளி கொண்ட மெய் ஞானியாக உருவாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்து தன் ஒலியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒலியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளை சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும் அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்… அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்… வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்… பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் யானை எதைப் பழக்கப்படுத்தி செய்விக்கும் செயலறிந்து உழைப்பைத் தருகின்றதோ அந்நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன் தன் செயலுக்காக.

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

அதனுடைய வாழ்க்கையில் அதைப் போன்றே மனிதனும் இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும்தான் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழும் வாழ்க்கை உடலுடன் மடியும் நிலை.

ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தில் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி அமைதிப்படுத்தும் ஞானி மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்கு செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீத செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவ செயலுக்காக சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்ப சொந்த பந்த செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும் உணர்வுடன் உடல் சொந்தம். மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும் சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியை குற்றம் குறைகளை குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்கு சொந்தமாக்கும் செயலாய் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.

மண்ணிலிருந்து எல்லாமே விளைவது போல் உடலான நிலத்தில் மெய் ஞானத்தினை விளைய வைக்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

meditation poses

மண்ணிலிருந்து எல்லாமே விளைவது போல் உடலான நிலத்தில் மெய் ஞானத்தினை விளைய வைக்க முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி… மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து… அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள… மீண்டும் மழை வர… பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற… இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.

இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு… ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.

பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்…
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்…! என்றுதான் ஒதுக்கி விடுகின்றான்.

மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.

இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தை பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா சரீர இயக்கத்தில் செயல்படும்.

1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி
2.இச்சரீரம் மண்ணாக நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாக சத்தாகும் அமைப்பாய்
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து… பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளை பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்… பல கனி வளங்களிலும்… அபூர்வ இயற்கைத் தன்மைகளும்… இயற்கை சக்திகளும் வளருகின்றது.

இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்…
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.

நம் ஜீவ உடல் உண்மையல்ல…! இயற்கையின் சதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்… ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்… சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்கு செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.

ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவில் “உடல்” இயக்கக் கோளம்.

உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மா மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.

வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்… என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாக செயலாக்கும் செயலுக்கு… மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.

உபதேசத்தின் வாயிலாக யாம் கொடுக்கும் அமுத சுரபிகள்

Salaivary glands

உபதேசத்தின் வாயிலாக யாம் கொடுக்கும் அமுத சுரபிகள்

 

மனிதன் நாம் நல்லதைச் செய்யும்போது நல்லதைக் காக்கும் திறன் வேண்டும்.
1.அந்தத் திறனை இழந்து விட்டால்
2.நல்லதைத் தீயது மறைத்து விடுகின்றது.

இன்று ஒரு மரம் வளர்வதற்கு எத்தனையோ வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த மரத்தை ஒரு நொடியில் வீழ்த்தி விடலாம்.

பல வருட காலம் நாம் இந்த உடலை வளர்த்திருந்தாலும் இது என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் போது சிலர் தற்கொலை செய்து உடலை அழித்து கொள்கின்றனர்… ஒரு நொடியில்…!

ஆனால் எண்ணிய உணர்வின் தன்மை தன் உணர்ச்சிகள் வளர்க்கப்படுவதற்கு எத்தனையோ ஆசாபாசங்களை வைத்து இவ்வளவு காலம் வாழ்ந்து வந்துள்ளோம். இதைப் போல் விஷத்தின் துடிப்பு ஒரு நொடியில் இயக்கி விடுகின்றது.

அத்தகைய விஷத்தின் தன்மைகளை எல்லாம் வென்றவர்கள் தான் மெய் ஞானிகள். அத்தகைய நிலைகள் அனைத்தும் வென்று இந்த விஷத்தின் தன்மையின் ஆற்றலைத் தனக்குள் அடிமைப்படுத்தி… அந்த ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் ஒளியாக மாற்றினார்கள்.

இன்று வைரம் தன்னிச்சையாக ஒளி கொடுக்கிறதென்றால்
1.விஷத்தைத் தன் உள்ளடக்கி…
2.விஷத்தின் ஆற்றல்மிக்க நிலையை ஒளிச் சுடராக…
3.தன்னிச்சையாக அது ஒளியாக இனிமையாக நம் கண்ணிலே பார்க்க முடிகின்றது குளிர்ச்சியாக.

இந்த விஷங்கள் அனைத்தும் ஒடுங்கி அந்த இயக்கச் சக்தி ஒளியாக மாறுகின்றது. ஆனால் அதைத் தட்டி விழுங்கினாலோ… “நம்மை மாய்த்துவிடும் வைரம்….”

இதைப் போன்று
1.விஷத்தின் தன்மை தனக்குள் எடுத்து…
2.இனிமை கலந்த செயலாக இயக்கக்கூடிய… ஆற்றல்மிக்க… வலிமைமிக்க…
3.மகரிஷிகளின் உடலில் விளைவித்த அந்த எண்ண அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
4.அதைக் கவர்வதற்குத்தான் உங்களுக்குள் இந்தத் தியானப் பயிற்சி.

நாம் குழம்பு வைக்கும்போது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் கலந்து ஒரு சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்க்கையிலே நலிந்து நெளிந்து சலித்து வெறுப்பு உவர்ப்பு வேதனை இதைப் போன்று எத்தனையோ எண்ணங்களுடன் நாம் இங்கே வந்து கூடியிருக்கின்றோம்.

ஆனால் அதே சமயம்… நம் குரு காட்டிய வழிப்படி மெய் வழியைக் காண வேண்டும்… அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று ஒரே சீர்படுத்தி… இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து கொண்டுள்ளோம்.

விண்ணை நோக்கி யாம் (ஞானகுரு) ஏகி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் அலைகள் நீங்கள் பெற வேண்டுமென்று சதா தியானமிருக்கின்றோம்… தவமிருக்கின்றோம்.

அதே உணர்வின் ஏக்கத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானமிருப்போர் அனைவரும் பெற வேண்டும்… என்று ஒருக்கிணைந்த எண்ணத்துடன் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் படரப்படும்போது மற்றவர்கள் எந்தெந்தத் துன்பத்தில் இருந்தாலும் நாம் தியானித்த இந்த உணர்வலைகள் ஒன்று சேர்ந்து
1.எந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டுமென்று எண்ணினோமோ
2.இந்த உணர்வின் அலைகள் நம் ஒலி அலைகளுடன் கலந்து
3.இந்த உணர்வின் சுவாசங்கள் உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரந்திருப்பதையும் பார்த்திருக்கலாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்த மூச்சலைகளை வெளியிடும்போது உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரப்பதை இங்கு பார்க்கலாம்.

“இப்பேர்ப்பட்ட அமுத சுரபிகள்” நமக்குள் சேர்ந்து விட்டால்… அந்த ஞானியின் அருள் வித்தை அது வளர்த்து.. நமக்குள் நம்மை அறியாது உள் சென்று வேதனையை உருவாக்கும்… பல நோயினை உருவாக்கும் நம் சொல்லின் இனிமையைக் கெடுத்திடும்… இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் அது தணித்து விடும்.

அதாவது வைரக்கல்கள் எப்படி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுகின்றதோ அது போன்ற நிலைகளை நாமும் பெற முடியும். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அதைப் பெற முடியும்.

பல பொருள்கள் சேர்த்து அதை ஒரு குழம்பின் சுவையாகச் சுவைத்து சமைக்கும் நிலை போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரது உள்ளங்களின் நிலைகளும்
1.ஒருத்தர் கோபமோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ இருந்தாலும்
2.அதைச் சரிசமமாகச் சமைக்கும் நிலைகள் கொண்டு சுவை பெறும் சக்தியாக உருவாக்கவும்
3.ஒளியின் சக்தியாக ஆக்கிடவும் தான் இந்த அருள் வித்துகளை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

நிஜமற்ற வாழ்க்கை பற்றியும் அழிவில்லா வாழ்க்கை பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

life of soul and body

நிஜமற்ற வாழ்க்கை பற்றியும் அழிவில்லா வாழ்க்கை பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.

மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.

உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.

கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.

வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்…! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்து தான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.

உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.

அதைப் போன்று…
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு – ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.

சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.

1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது

1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை…!

சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்…!”

தியான மண்டபத்தில் அமர்ந்து நல்லது பெற தியானிக்க வேண்டிய முறை

MMEG

தியான மண்டபத்தில் அமர்ந்து நல்லது பெற தியானிக்க வேண்டிய முறை

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்கு நீங்கள் வந்தாலே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லி எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது.

உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்… பிள்ளைகளுக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்… உங்கள் குடும்பத்தில் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்… என்று எண்ணுங்கள்.

உங்கள் விவசாயமோ தொழிலோ எது எது சீராக வேண்டுமோ அதை எல்லாம் எண்ணி ஒரு பத்து நிமிடம் தியானம் இருங்கள். மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று இது போன்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து நீங்கள் தியானித்த உணர்வலைகள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களை நீக்க உதவும்.

“உங்களுக்கு இது எல்லாம் கிடைக்க வேண்டும் என்று தான்” சதா நான் (ஞானகுரு) எங்கிருந்தாலும் தியானிக்கின்றேன்.

ஆனால் இங்கே வரக்கூடியவர்கள் சிலர்
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது
2.அது என்னை விட்டு போகமாட்டேன் என்கின்றது என்று
3.அதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.

“அப்படிக் கேட்காதீர்கள்…” என்று சொன்னாலும் கூட அடுத்தாற்படி என்ன செய்கின்றார்கள்…?

யாம் பிரசாதம் கொடுக்கும்போது மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்குத் தொழில் வளம் பெற வேண்டும் மன பலம் பெற வேண்டும். என் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். என் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.

இப்படிக் கேட்டால் “இதெல்லாம் நடக்கும்…” என்று ஒரு சொல்லில் யாம் (ஞானகுரு) ஆசிர்வாதம் கொடுக்கலாம்.

யாம் நல்ல வாக்கைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது என்ன செய்கின்றார்கள் என்றால்… என் பேரன் சரியாகப் படிக்க மாட்டேன் என்கின்றான்… ஒரே தலை வலியாக இருக்கின்றது…! என்று யாம் சொல்வதை விட்டுவிட்டு அதையே பிடித்துக் கொள்கின்றார்கள்.

நாம் கொடுக்கும் நல்ல வாக்கைக் கூட வாங்க மாட்டேன் என்கின்றார்கள்.

இன்னும் சிலர்… போன தடவை உடல் நோயை எண்ணி இங்கே வந்திருப்பார்கள். இரண்டாவது தடவை இப்பொழுது இங்கே வரும் போது “நலமாகிவிட்டது” என்று சொன்னால் பரவாயில்லை.

ஏனென்றால் முக்கால்வாசி உடல் நன்றாக இருக்கும். ஆனால் என்ன சொல்கிறார்கள் என்றால்… என் மேல் வலி இன்னும் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… இன்னும் போகவே மாட்டேன் என்கின்றது…! என்றே சொல்லியே கேட்கின்றார்கள்.

1.போன தடவை இங்கே வந்து மருந்து சாப்பிட்டேன் உடல் வலி நீங்கியது
2.இனி கொஞ்சம் இருக்கிறதும் நீங்க வேண்டும்
3.என் உடல் முழுவதும் நன்றாக வேண்டும் என்று கேட்கும் மனது யாருக்கும் வரவில்லை.

கொஞ்சநஞ்சம் இருக்கும் வலியும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் போக வேண்டும் என்று கேட்பதற்கு மனது வர மாட்டேன் என்கின்றது.

ஆனால் யாம் இதைப் பழக்கிப் பழக்கிச் சொல்கிறோம்.

ஏனென்றால் நாம் கோவிலிற்குச் சென்று கஷ்டத்தை எல்லாம் சொல்லி அழுது தான் புலம்பி இருக்கின்றோமே தவிர
1.கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.கோவிலில் நின்று அவ்வாறு வேண்டிய பழக்கம் இல்லை

அந்தப் பழக்கம் இருந்தால் தானே இங்கே எம்மிடமும் அவ்வாறு கேட்கும் பழக்கம் வரும்.

காரணம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டு வந்த அந்த உணர்வு தான் அவ்வாறு பேச வைக்கின்றது. ஆகையினால் இங்கே வந்தீர்கள் என்றால் தயவு செய்து…
1.கூட்டு தியானம் இருந்தாலும் இல்லாமல் போனாலும்
2.வந்தவர்கள் ஒரு அரை மணி நேரமாவது மேலே சொன்ன மாதிரி தியானம் செய்ய வேண்டும்
3.அப்பொழுது உங்கள் மனதுக்கு அமைதி கிடைக்கும்… மன பலம் கிடைக்கும்
4.இந்த எண்ணம் உங்களை நல்லதாக்கும்.

அத்தகைய பழக்கத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் வர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான மண்டபத்தையே கட்டி வைத்தது.

தயவு செய்து உங்களை நம்பிப் பழகுங்கள்…!

ஏனென்றால் சாமியார் செய்வார் ஜோசியம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் தான் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கின்றது.

அந்த மெய் ஞானிகள் சொல்வது நமது உயிர் கடவுளாக இருக்கின்றது. நாம் எண்ணிய எண்ணம் இறையாகின்றது.
1.நம் உடலுக்குள் இறையான பின் அந்த உணர்வுகள் நமக்குள் செயலாகும்போது தெய்வமாக இருக்கின்றது.
2.நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அது எல்லாம் நமக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…? என்பதை
3.ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.