ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

secrets of soul

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனித உணர்வின் சூட்சுமத்தை… “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்…” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை… இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது…!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்… ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு… நாணம்… முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு… உடை… இருப்பிடம்… ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை… இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்… இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்…
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று… ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்…”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்… மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்… வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்… பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்… ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்… அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை… ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி… உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி… அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்… படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்… “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி – உருப்பெறும் நிலை…!”

இச்சரீரத்தின் உணர்வை… “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை…!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை… ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்… ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு…
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது…?

தன்னில் உள்ள இறைத் தன்மையை… தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்

Curse protection

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்

தியான வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது சுற்றி இருப்பவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் திருந்த வேண்டுமென்ற எண்ணங்களை எண்ணிச் செய்வதில்லை.

1.தான் உண்மைகளை எல்லாம் அறிந்தும்
2.தான் சொல்லியும் கேட்காமல் பிழைகளைத் தான் செய்கின்றார்கள் என்ற
3.வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர
4.தவறு செய்வோர் உண்மைகளை அறிய வேண்டும்… மூலக்கூறுகளை அறிய வேண்டும்…
5.மூலத்தை அறிந்து சரியான பாதையில் அவர்கள் செயல்படவேண்டும் என்ற
6.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா…? என்றால் இல்லை…!

காரணம்… சாங்கிய உணர்வுகள் வளர்த்துக் கொண்ட வழியின் துணை கொண்டே
1.பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி
2.குறை… தவறு… என்ற நிலைகள் கொண்டு
3.தன்னைப் பலவீனப்படுத்தும் வேதனை உணர்வைத் தான் வளர்க்க முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசித்து அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மையை உங்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் வேதனை என்ற நிலைகளாக உங்களுக்குள் புகுந்து அது தீமை விளைவிக்காதபடி பாதுகாக்க “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தையும் முறைப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இத்தனையும் வாக்காக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நினைவு கொள்ளும்போது
1.உங்களை அறியாது வந்த தீமைகளை நீங்களே அகற்ற முடியும் என்ற
2.தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இத்தனையும் யாம் செய்தாலும் அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப்பெற்ற நிலைகள் கொண்டு இயங்கி
1.தன்னைச் சீர்படுத்தும் நிலையே மாறி
2.தியான வழியில் உள்ளோரும் இதிலே சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

“ஒரு சிலரே” இதனின் உணர்வை உணர்ந்து… அறிந்து…
1.தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப் பெற்று
2.தன்னுள் தீமை நாடா நிலையும்
3.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கு கொண்டு பதியச் செய்து
4.வளர்ந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட தியான வழி அன்பர்களும் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறர் படும் கஷ்டமோ பிறர் செய்யும் குறைகளையோ அதை எல்லாம் நாம் முதலிலே தெரிந்து கொண்டோம்… அறிய முடிகின்றது. இருந்தாலும்…
1.இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து
2.இந்த வாழ்க்கையைப் புரிந்து இருள் சூழும் நிலைகளிலிருந்து விடுபட்டு
3.இருளைப் பிளந்து பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
4.என்றென்றும் மெய்ப் பொருளாக அந்தப் பொருள் கண்டுணரும் நிலையும்
5.நஞ்சினை பிளந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் சக்திகளை நமக்குள் வளர்க்க முடியும்… வளர்க்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.

இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Third eye glow opening

இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.என்னுள்ளே நான்… என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள்ளுள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள்ளுள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி உயிரை மணியாக்க
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்…” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே.. “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில்

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம் தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர… “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மாவை வித்தாக்கி
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயிர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்
4.தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
5.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவபடுத்தி
6.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
7.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
8.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தீமைகளை அகற்றலாம் என்று அறிந்த பின்னும் அதை எடுக்கவில்லை என்றால் அது நம் குற்றம் தான்

Bluish violet Poari rays

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தீமைகளை அகற்றலாம் என்று அறிந்த பின்னும் அதை எடுக்கவில்லை என்றால் அது நம் குற்றம் தான்

 

சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த ஒரு தீமையான உணர்வின் தன்மை இரத்தத்திலே கருவாகி அணுவாகும் போது அந்த அணுக்கள் உணர்ச்சியைத் தூண்டி தன் உணவுக்காக அது ஏங்குகின்றது.

அப்பொழுது நம்மை இயக்குவது யார்…?

நம்மை அறியாது நுகர்ந்த அத்தகைய உணர்வின் அணுக்கள் விளைந்த பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டி தன் இனமான உணர்வலைகளைக் காற்றிலிருந்து நுகர்கின்ரது. அதுவே நமக்கு மன நோயாகி உடல் நோயாக அதிகமாகப் பெருக்குகின்றது.

இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் தீமைகளை அகற்றிய அகஸ்தியனின் அருள் உணர்வுகளை இங்கே உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

அகஸ்தியன் துருவனான்… திருமணமான பின் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றானார்கள். ஒளியின் சரீரம் பெற்றார்கள். துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

இதை நமது காவியத் தொகுப்புகள் கூறினாலும் காலத்தால் மறைந்து விட்டது. இப்பொழுது நமது குருநாதர் ஈஸ்வரபட்டரால் அறியும் பருவம் பெற்றோம்.

1.குரு வழியில் இதை எல்லாம் அறிந்த பின்னும்
2.நம் வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கத் தவறினால்
3.இது நமது குற்றமே ஆகுமே தவிர வேறு யாருடைய குற்றமாகாது…!.

நல்ல குணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிட அதைக் கேட்டறிந்து நாம் உதவி செய்தாலும்… தெய்வப் பண்போடு நாம் நடந்தாலும்…
1.நாம் நுகர்ந்த தீமை என்ற உணர்வுகளைத் துடைக்காது நாம் சென்றோம் என்றால்
2.சுவை இருக்காது… உணர்வுகள் மாறும்… மனம் மாறும்… நம் நல்ல குணங்கள் வலிமை குறையும்.

நிலக் கடலைப் பருப்பு இருக்கின்றதென்றால் தோடை (தோல்) உறிக்காமல் உட்கொண்டால் அதனின் சுவை மாறும்.

ஆடு மாடுகள் அதை அப்படியே சாப்பிடும். ஆனால் நாம் கடலைப் பருப்பைப் பாதுகாக்கும் அந்தத் தோடுடன் உட்கொண்டால் நம் உடலுக்குள் கடும் தீமையே உருவாகின்றது.

தோலை அகற்ற வேண்டும் என்று தெரிந்தும் தெரியாத நிலைகளில் உட்கொண்டால் என்ன ஆகும்…?

அதைப் போன்று தான் “தீமை வருகிறது” என்று தெரிந்தும்
1.வாழ்க்கையில் அதை (கோபம் வேதனை சலிப்பு சங்கடம்) அகற்றத் தவறினால்
2.நமக்கு நாமே… உயிரான ஈசனை… அந்த உருவாக்குபவனை… அவமதிக்கின்றோம் என்று தான் பொருள்
3.ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலை மதிப்பதில்லை என்று தான் பொருள்
4.மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை பாதுகாக்கத் தவறுகின்றோம்…! என்ற நிலை தான் வரும்.

மனிதனின் வாழ்க்கையில் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

உடல் நோயாகி… வேதனைப்பட்டு… மனித உணர்வுகள் சீர்குலைந்தால்… சீர்குலைத்து உணவாக உட்கொள்ளும் மிருக நிலையாக மீண்டும் உயிர் உருவாக்கிவிடும் என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

ஆனால் இதைப் போன்ற நோய்களை எல்லாம் நீக்கியவன்… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன்… துருவ நட்சத்திரமாக உள்ளான் என்று
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் செவி வழி ஓதப்பட்டு
2.அந்த உணர்ச்சிகளை கண் கொண்டு உற்றுப் பார்க்கச் செய்து
3.தீமைகளை அகற்றும் வல்லமைப் பெற்ற அந்தச் சக்திகளை
4.ஊழ்வினையாக… வித்தாகப் பதிவு செய்கின்றோம்…!

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமையைப் பார்க்க நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டுமென்று அடுத்த கணமே உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி தீமையின் உணர்வுகள் அதிகம் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பு கைப்பாக இருப்பினும் குழம்புக்குள் அதைச் சிறுக்கப்படும்போது சுவையாகின்றது. காரம் உணர்ச்சியை அதிகமாகத் தூண்டினாலும் “ஆ…” என்று அலறச் செய்தாலும் குழம்புக்குள் அந்த காரத்தின் உணர்வுகளைச் சமப்படுத்தும்போது சுவையாக ஆகின்றது

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் கண்டாலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உடலில் பெருக்கிக் கொண்டு
1.எந்தத் தீமையான செயலாக்கங்களும் வீரியமாகாது
2.வீரியமான அணுக்களாக உடலுக்குள் மாற்றிடாது
3.அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் மீண்டும் மீண்டும் நுகர்ந்து
4.அந்தத் தீமையான உணர்வுகளை நமக்குள் அடிமையாக்குதல் வேண்டும்.

இதைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைப் போட்டுக் காண்பித்து “அங்குசபாசவா…” என்று காட்டினார்கள் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் நாம் அதை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று உணர்த்துகின்றனர்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சினை அடக்கி அந்த நஞ்சினை மலமாக நம் உடல் மாற்றுகின்றது.

இதைத் தான்… நஞ்சு அறிந்த பின் அதை அடக்க வல்லமை பெற்றது மனித ஆறாவது அறிவு என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நமது குரு அருளைப் பெற வந்த நீங்கள் அவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வைப் பெற அந்த உணர்வினை நுகரச் செய்து அந்த அணுவின் தன்மை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

இந்த உபதேசத்தின் வாயிலாக தீமையென்ற அணுக்களைத் தணியச் செய்து மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டச் செய்கிறோம். தீமையை அகற்றிடும் வல்லவர்களாக நீங்கள் ஆக வேண்டும்.

1.மேலும் மேலும் தீமைகளை அகற்றிடும் வல்லமை பெற்று
2.மேலும் மேலும் பேரருள் என்ற நிலைகளைத் தனக்குள் பெற்று
3.மேலும் மேலும் பேரொளி என்ற உணர்வை உருவாக்கி
4.இந்த மனித உடலுக்குப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

அத்தகைய தருணத்தைத் தான் உருவாக்கிக் கொடுக்கின்றோம். இதை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுடையது…!

உடலின் தரத்தையும் உயிராத்மாவின் தரத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Quality of human

உடலின் தரத்தையும் உயிராத்மாவின் தரத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா… அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா…? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை… ஆத்ம உணர்வை அறியாமல்… எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்…
1.இவர்களுக்கே இந்த நிலை…
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்… நாம் என்ன செய்ய முடியும்…! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு… மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்… தனது…” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு… பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து… அதைத் தன் சக்திக்குகந்தாக்கி… மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று…
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் சாந்தம் என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா…?

gnanaguru upadesams

ஒவ்வொரு நாளும் நமக்குள் நல்ல உணர்வுகளின் வளர்ச்சி கூடுகிறதா என்று பார்க்கின்றோமா…?

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்த்திருப்போம். நோயாளிகளைப் பார்த்திருப்போம்… சண்டை போட்டவர்களையும் பார்த்திருப்போம்.

நோயுற்ற உணர்வுகளையும் சண்டை போட்ட உணர்வுகளையும் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் உருவாக்குகின்றோம்… அதாவது சதா சிவமாக்கிக் கொண்டே இருக்கின்றது நமது உயிர். (சிவம் என்றால் உடல்)

ஆனால் இதை மாற்றுவதற்கு நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…? அந்த அருள் ஞானியின் உணர்வைச் சிவமாக்க வேண்டும். இதைப் பழகுதல் வேண்டும்.

காலையில் விழித்தவுடனே “ஈஸ்வரா…!’ என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

என்னடா…! சாமி (ஞானகுரு) திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்று நினைக்க வேண்டியதில்லை. யாம் சொல்வதைத் திருப்பிக் கேட்டு என்ன சொன்னேன்…? என்று கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்போது சொன்னதைத் தான் இப்பொழுதும் சொல்கின்றார்… திரும்பச் சொல்வதுதான் இவருக்கு (ஞானகுரு) வேலை போலிருக்கிறது என்று எண்ணுவீர்கள்…!

இராமயாணத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் வருடம் தோறும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலே எதாவது மாற்றிச் சொல்கின்றார்களா…? இல்லையே…!

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்…
1.அந்த ஞானிகளின் உணர்வின் தன்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான்
2.உங்கள் உடலில் அந்த அணுக்களின் பெருக்கமாகின்றது.

பல உணர்வுகளில் நீங்கள் இருக்கும் பொழுது ஒரு இரண்டு தடவை சொன்னால் இது மறைந்துவிடும். ஏனென்றால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…?

அவன் அப்படிச் செய்தான்…! இவன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்க்கின்றான்…! இங்கே உடம்புக்குச் சரியில்லை…! என்று
1.எத்தனையோ வேதனைப்படும் உணர்வை ஒரு நாளைக்கு நூறு தடவை சொல்கின்றீர்கள்
2.நல்லது செய்வதை ஒரு தடவை அல்லது இரண்டு தடவை சொன்னால் பற்றாதே… இது அழிந்துவிடுமே…!
3.அப்போது எங்கிருந்து மாற்றுவது…?

ஒரு அழுக்குத் தண்ணீருக்குள் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்றத் தான் அது தெளிவாகிக் கொண்டே வருகின்றது

அதைப் போன்று தான் நீங்கள் எத்தனையோ சங்கட உணர்வுகள் கொண்டிருக்கும்போது…
1.மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை
2.உங்களுக்குள் செலுத்தச் செலுத்தத் தான்…
3.அந்த உணர்வை வலுப்பெற கூடிய நிலையே வருகின்றது.
4.வலுப்பெறச் செய்ய வேண்டுமென்று தான் இதை உங்களிடம் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அடுத்தாற் போல் என்ன செய்ய வேண்டும்…?

இந்த வாழ்க்கையில் யாரை யாரை எல்லாம் நாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
1.என்னிடம் “கஷ்டம்…” என்று சொன்ன அந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பக் கஷ்டமெல்லாம் நீங்க வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று இதை நாம் எண்ணிப் பழக வேண்டும்

அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணினால் “அந்த நலம் பெறும் சக்தி” என்னிடம் இது வந்துவிடுகின்றது. அந்த உணர்வு எனக்குள் என்னோடு சேர்த்துதான் வாழுகின்றது.

அவர்கள் நல்லாக வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் எனக்குள் நல்லதாகின்றது.

அதே போல வேதனைப்படுவோரைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அந்த வேதனை எல்லாம் நீங்கி ஒன்று சேர்த்து வாழும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி எல்லோரும் செய்ய வேண்டும்…!

அகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

lightnings - agastya

அகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

இருபத்தியேழு நட்சத்திரங்களும் விஷம் கொண்டது. அதில் ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவது இன்னொரு நட்சத்திரத்துடன் அந்தத் தூசிகள் மோதும் போது “மின்னலாக மாறுகின்றது…”

அந்த மின்னல் வேகமாக வந்தாலும்…
1.குழந்தைப் பருவத்தில் இருக்கும் அகஸ்தியன் கண் கொண்டு அவைகளை உற்றுப் பார்க்கும் போது
2.அது அவனுக்குள் அடங்கி அது மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வருகின்றது.

அத்தகைய மின்னலின் செயலாக்கங்களையும் அது எந்தெந்த நட்சத்திரத்திலிருந்து வருகின்றது…? மோதுகின்றது…? என்ற நிலையை அறியும் தன்மை பெறுகின்றான் அகஸ்தியன் அந்தக் குழந்தை பருவத்திலேயே…!

உதாரணமாக ஒரு குளவி ஒரு புழுவைக் கொட்டித் தன் விஷத்தால் தீண்டி… தன் இனம் என்ற நிலையைப் பெருக்கச் செய்கின்றது.

தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கொண்டு மண்ணால் ஒரு கூட்டை அமைக்கின்றது. விஷத்தைப் பாய்ச்சி அந்தப் புழுவை எடுத்துக் கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து விடுகின்றது.

குளவியின் விஷம் தாக்கியபின் புழுவின் உயிரின் துடிப்பு அதிகரிக்கின்றது. புழுவின் துடிப்போ கம்மியானது.
1.ஆனால் குளவியின் விஷத்தால் புழுவின் உயிர் துடிப்பு அதிகமாகி
2.அந்த விஷத்தின் தன்மையால் புழுவின் அணுக்களில் அதிகமாகத் துடிக்கும்போது
3.புழுவின் உடல் சுருங்கி விடுகின்றது.

சுருங்கிய உணர்வு கொண்டு “குளவியின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து…” அந்தக் குளவி எப்படி உருவானதோ அதே ரூபமாக புழுவை மாற்றி விடுகின்றது அந்தக் குளவியின் விஷத் தன்மை. அதனுடைய கலவை இப்படி மாற்றி விடுகின்றது.

இதைப் போலத்தான் அந்த விஷத்தின் தன்மை கொண்டு தாய் கருவிலிருக்கும் போது நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்ற இந்த அகஸ்தியன்… அந்த மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் வரும்போது இந்த உடல் பெறும் உணர்வின் தன்மையைச் சுருக்குகின்றது. உணர்வின் தன்மை வளர்க்கின்றது.

அதனால்தான் அன்று அகஸ்தியனை ரொம்பக் கூழையாகப் (குள்ளமாக) போட்டு காட்டியிருப்பார்கள்.
1.தசைகளின் வளர்ச்சி கம்மி…!
2.ஆனால் உணர்வின் அணுக்களின் சக்தி “வீரியம் அடைந்தது…!” என்ற நிலையை
3.அவ்வாறு தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்

ஆகவே நட்சத்திரங்களிலிருந்து மின்னல்கள் வெளி வருவதைத் தனக்குள் நுகரப்படும்போது அந்தச் சக்தியால் அகஸ்தியன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் வீரியத் தன்மை பெறுகின்றது.

எதனை நுகர்ந்தாலும் அதை மாற்றியமைக்கும் சக்தியை அவன் பெறுகின்றான். இப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன்.

எத்தகைய விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் அதனுடைய இயக்கக் சக்தி அறிந்துணர்ந்தவன் ஆகின்றான் அகஸ்தியன்.

கடலை வித்து எண்ணையான பின் எரி பொருளாகி வெளிச்சம் தருவது போல் “மனித வித்துக்கள் முதிர்ந்து பேரொளியாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

oil glow soul

கடலை வித்து எண்ணையான பின் எரி பொருளாகி வெளிச்சம் தருவது போல் “மனித வித்துக்கள் முதிர்ந்து பேரொளியாக வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு மனிதனுக்கும்…
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை… உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு… இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது… தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்… புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல…!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும் பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திராவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி… குளிர்ந்து நீராகி… நீரின் தொடர்பு கொண்டு… தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது… நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகிக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக் கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா…!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்…!

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்கும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

nature and artificial

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்கும் இன்றைய விஞ்ஞானத்தின் செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி…” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்… சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்… சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்… பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்… பூமியும்… பூமியின் வளர்ச்சியும்… பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை… மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க… ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து… வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்…!

அப்படிப்பட்ட வழித் தொடரில்… பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது…? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து… சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்… இந்த நேரத்தில் மழை வரும்…! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்…” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்… மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த… தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

 

நாம் இட வேண்டிய ஆக்கினை…! (ஆக்ஞை)

akkinai sixth chakra

நாம் இட வேண்டிய ஆக்கினை…! (ஆக்ஞை)

உயர்ந்த உணர்வுகளை அகஸ்தியன் பெற்றான். அவன் பெற்ற வழியிலேயே தான் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத்தான் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் நம் குருநாதர்.

1.காட்டிற்குள் அகஸ்தியன் போன இடங்களில்…
2.எங்கேயெல்லாம் அவன் உணர்வுகள் பதிவாகியிருக்கின்றதோ
3.அங்கெல்லாம் போகச் சொன்னார் குருநாதர்.

அவன் எடுத்துக் கொண்ட நிலைகள் பார்த்தால் மலை உச்சியில் உட்கார்ந்து இருக்கின்றான் அகஸ்தியன். அந்த இடத்தில் பார்த்தால் மேகங்களைக் கூட்டிக் குவித்து நீராக மேலே உச்சியிலே உருவாகிறது.

அதனால் தான் அகஸ்தியருக்குக் கையிலே கமண்டலத்தைக் கொடுத்துக் காண்பித்தார்கள். “முதலில் ஜீவ சக்தி ஆனது இது மிகவும் முக்கியம்…!”

அந்த மாதிரி இடங்களை எல்லாம் குருநாதர் காண்பித்ததனால் யாம் தெரிந்து கொண்டு அவ்வப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.
1.சொல்வதோடு மட்டுமல்ல… உங்களிடம் இந்த கவனத்தைப் பதிவு செய்து
2.அந்த அகஸ்தியன் நிலைக்கே உங்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த அகஸ்தியன் பெற்ற வழிகளிலேயே இந்தக் காற்றிலிருந்து “நல்லதைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்…”

அப்படிப் பெறக் கூடிய தகுதியை நீங்கள் பெறுவதற்காக வேண்டித்தான் அடிக்கடி இதை உபதேசிப்பது. எம்முடைய (ஞானகுரு) பிரார்த்தனையும் இது தான்.

ஏனென்றால்… இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலுக்கு நாம் சொந்தமல்ல…
1.உயிரை நாம் சொந்தமாக்கிக் கொண்டே போக வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையாக
3.நாம் என்றும் ஒளியான நிலைகளைச் சொந்தமாக்க வேண்டும்… அது தான் முக்கியம்.

ஆகையினால் இதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளையும் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பம் எது வந்தாலும்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு
2.”இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நாம் ஆணையிட வேண்டும்.