பத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்

Saamigal spiritual upadesam

பத்து வருடம் அமர்ந்து கேட்க வேண்டிய உபதேசத்தைப் பத்து நாளில் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்

ஒவ்வொரு அணுவிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இருந்தாலும்
1.உயிருக்குள் ஏற்படும் “வெப்பம் – விஷ்ணு” என்றும்
2.அதில் ஈர்க்கும் “காந்தம் வருவதை லட்சுமி” என்றும்
3.காரணப் பெயர் வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

உதாரணமாக… கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால் கொண்டது. அதன் உணர்வின் சக்தி மற்றொன்றோடு மோதும் போது “வெப்பத்தின் தணல்” கூடுகின்றது. அந்த வெப்பத்தை உருவாக்கும் உணர்வின் சக்தியாக உருவாகிறது.

அந்த வெப்பத்தின் தன்மை கூடும்போதுதான் “ஈர்க்கும் சக்தி…” என்ற காந்தமே உருவாகின்றது. ஆகவே இதை லட்சுமி என்றும் காரணப் பெயர் வைத்துச் சுருக்கமாகக் கூறுகின்றார்கள் ஞானிகள்.

சந்தர்ப்பத்தில்… கார்த்திகை நட்சத்திரம் பெண்பால் என்ற ரேவதி நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் இணைத்து அதனுடன் இணைந்து வாழச் செய்யும் உணர்வுகளாக “ஒரு உயிரணுவாக” உருப் பெறுகின்றது.

ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து என்று ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். “இதில் எத்தனையோ இருக்கிறது,..!” அதில் உள்ள உள் பிரிவுகளைச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கு ஆயுளே பத்தாது.

ஒரு அணுவின் தன்மை பல சத்துகளை எப்படிச் சேர்த்தது…? என்ற விளக்க உரை கொடுக்க வேண்டும் என்றால்
1.ஒரு உயிரணு உண்டாவதற்குரிய (தோற்றம்) மூலம்
2.அது எதன் எதன் வழிகளில் சேர்ந்தது…? என்று
3.ஆதிசக்தியிலிருந்து… விஷத்திலிருந்து பிரித்துக் கொண்டு வர வேண்டும்.
4.அதற்குப் பின் கோளாக ஆனதையும்… அதற்குப் பின் நட்சத்திரமாக ஆனதையும் அதற்குப் பின் சூரியனாக ஆனதையும்
5.மற்ற கலவைகள் எப்படி ஆனது…? என்ற நிலையில்
6.அந்த உயிரணு தோன்றுவதற்கு உரிய மூலத்தை உங்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றால்
7.குறைந்தது பத்து வருடம் நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும்… இதைக் கேட்பதற்கு…!

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படித்தான் சொன்னார். பத்து வருடத்தில் வளர வேண்டிய வளர்ச்சியைப் பத்து நாளில் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன்…! என்றார்.

இயற்கையின் உண்மைகள் உபதேச வாயிலாகப் உனக்குள் பதிவானதை பத்து வருடத்திற்குள் நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்றும் சொன்னார் குருநாதர்.

அதே போல் தான் இப்போது உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பத்து வருடத்திற்குள் நிச்சயம் உங்களுக்குள் நீங்கள் இதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதாவது…
1.பத்து வருடத்திற்கு அமர்ந்து கேட்கக் கூடியதை இந்த உபதேச வாயிலாகக் கேட்டு
2.அதைப் பதிவாக்கி நீங்கள் எடுத்தீர்கள் என்றால்
3.பத்து வருடத்தில் நீங்கள் நிச்சயம் வளர்ச்சி பெற முடியும்

இப்படி உங்கள் உடலில் உள்ள… ஒவ்வொரு உணர்வின் இயக்கமும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும்
1.அது எவ்வாறு…? என்று உணர்ந்து உணர்ந்து விட்டாலே
2.நீங்கள் அந்த மெய் ஒளியின் உண்மையைப் பெறுகின்றீர்கள்.

இப்படித்தான் குருநாதர் எனக்கு உபதேசித்தார். அதைத்தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

இதை நினைவு கொண்டு எவர் எடுக்கின்றனரோ “அவரே…” தன் வாழ்க்கையில் இனிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Adi Sakthi Eswara

“ஆதிசக்தியின் சூட்சமம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்… முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்…” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்…
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது…? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது…?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி… காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது…!

அதைப் போன்று… நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி… வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

விண் செல்லும் மார்க்கம்

soul propulsion ultimate

விண் செல்லும் மார்க்கம்

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் முழுவதும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவினைக் கூர்மையாக்கி உடலுக்குள் செலுத்தி ஏங்கித் தியானிக்கவும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை நாம் விண்ணிலே உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

1.அப்பொழுது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது.
2.மனிதனாக வளர்ந்த தெளிவான அறிவு நிலைக்கின்றது
3.உயிருடன் ஒன்றி… அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளி பெற்று
4.அங்கே பேரின்பப் பெரு வாழ்வு வாழத் தொடங்குகின்றார்கள்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நம்முடன் வாழ்ந்து வந்த தாத்தாவோ பாட்டியோ அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தாலும் மேலே சொன்னபடி செய்ய மறந்திருந்தாலும் இப்பொழுது நாம் அதைச் செய்ய வேண்டும்… அவர்களை விண் செலுத்த முடியும்.

அதே போல் கணவனை இழந்திருந்தாலும் அல்லத் மனைவியை இழந்திருந்தாலும் இங்கே உடலுடன் இருப்பவர்கள் அந்த உயிரான்மாவை யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்திடல் வேண்டும்.

கணவனும் மனைவியும் வாழ்ந்த காலங்களில் இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்தது தான். ஆனால் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் அவர் உணர்வு உங்கள் உடல்களில் உண்டு.

ஆகவே அந்த உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் தான்…
1.அவர்கள் அங்கே ஒளிச் சரீரம் ஆகும் போது
2.அவர் ஒளியான உணர்வை நாமும் பெற்று
3.இந்த உடலை விட்டு நாம் சென்ற பின்னும் அவருடன் ஐக்கியமாகி
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதைப் போன்று
5.அருள் ஒளிக் கதிர்களை உருவாக்கி ஒளியின் சரீரமாக்கி நாமும் நிலைத்துக் கொண்டிருக்க முடியும்.

சூரியனின் ஒளி மங்கப்பட்டு… இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… இதில் உருவான மனிதர்கள்… ஒளி நிலை பெற்ற சப்தரிஷிகள் அகண்ட உலகில் சென்று அந்த உணர்வினைத் தனக்குள் பெற்று “ஒளியாக மாற்றி… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்க முடியும்…!

1.அத்தகைய நிலையைப் பெறுவதற்குத்தான்
2.பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் முயற்சிக்கின்றனர்.

மகரிஷிகள் என்பவர்கள் இதை எல்லாம் (ஒளி) சிருஷ்டித்துக் கொண்டவர்கள். ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகள் உயிருடன் உருவாக்கப்படும்போது ரிஷி ஆகின்றார்கள்.

1.ஞானத்தின் வழி கொண்டுதான் ரிஷியின் தன்மை உருவாக்க முடியும்.
2.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் விமானத்தை உருவாக்குகின்றான்
3.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் இராக்கெட்டை உருவாக்குகின்றான்
4.ஞானத்தின் துணை கொண்டுதான் மனிதன் கம்ப்யூட்டரை உருவாக்குகின்றான்
5.அதே ஞானத்தின் துணை கொண்டுதான் விண்ணிலிருக்கும் பல பல நட்சத்திரங்களையும் மனிதன் கம்ப்யூட்டர் கொண்டு பதிவு செய்கிறான்.

பதிவு செய்த உணர்வை இராக்கெட்டின் முன்னாடி முகப்பில் வைக்கின்றனர். இராக்கெட்டின் முகப்பில் வைத்தபின் எந்த நட்சத்திரமோ அங்கே அழைத்துச் செல்கின்றது. அங்கே அழைத்துச் சென்று அங்கிருப்பதை எல்லாம் படமாக்குகின்றது. அங்கே படமாக்குவதை எல்லாம் தரையில் இருக்கக்கூடிய கம்ப்யூட்டர் மூலம் உணர்கின்றனர் பார்க்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

இதைப் போலத்தான்…

1.தன் கணவரின் உணர்வை முகப்பில் வைத்து
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைத்து விட்டால்
3.அதே சப்தரிஷி மண்டல உணர்வினை முகப்பில் வைத்துத் தானும் வளர்ந்து கொண்டிருந்தால்
4.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவருடன் இணையச் செய்து… இரு உயிரும் ஒன்றச் செய்து
5.அணுவின் ஒளிக் கதிராக மாற்றும் தன்மை அடைகின்றோம்.
6.இது ஒன்றும் கடினமல்ல… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
7.மெய் ஞானிகள் பல காலத்திற்கு முன்னாடியே சொன்னார்கள்…!

அதைத்தான் யாம் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி விண் செல்லும் உணர்வை ஊட்டுகின்றோம்.

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்

eternal gateway

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்

மனிதன் ஒரு மிருகத்தைச் சுட்டுக் கொல்கின்றான் என்றால் அந்த மிருகன் சுட்டவனின் நினைவு கொண்டு அந்த மனிதன் உடலுக்குள் வந்து மிருகம் மனிதனாகப் பிறக்கின்றது.

அதே போல் பாம்பை ஒரு மனிதன் அடித்துக் கொல்கின்றான் என்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா மனித உடலுக்குள் வந்து பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

ஆனால் பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் மனித நினைவுகள் இழந்து விடுகின்றது. பாம்பின் நினைவு உயிராத்மாவில் அதிகமாகச் சேரும் நிலையில் அடுத்து பாம்பாகத் தான் பிறக்க முடியும். இந்த நிலைகளில் தான் வளர முடியும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதே சமயத்தில் மாமிச உணவுகளை அதிகமாக உண்டு பழகி இருந்தால் அந்தந்த மணங்கள் உயிராத்மாவில் சேர்ந்த நிலைக்கொப்ப இன்று மனிதனாக இருந்தாலும் அடுத்து அந்த உடல்களிலே தான் உயிர் நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

1.இதைப் போல் உடலை விட்டுப் பிரியும் சமயம் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று
2.அத்தகைய சரீரங்களை மனிதன் பெறத் துவங்கி விட்டால்
3.மீண்டும் நரகலோகத்தைத் தான் சந்திக்க நேரும்.
4.ஆகவே இன்று மனித உடலில் வாழும் நிலைகள் சொர்க்கலோகம் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிர் சொர்க்கவாசலாக இருக்கின்றது. “புருவ மத்தியிலிருந்து எண்ணி” விண்ணுலகம் செல்லும்போது சொர்க்கத்தைப் போய் அடைகின்றோம்.

அதாவது… கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து… உயிரின் நினைவு கொண்டு நாம் விண்ணின் ஆற்றலைப் பெறப்படும் போதுதான்
1.இது சொர்க்கவாசலாக அமைகின்றது
2.மனிதனின் உடலில் – புருவ மத்தியில்…!

ஆகவே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் அங்கே சொர்க்கலோகத்தை அடைகின்றோம்… பிறவியில்லா நிலைகள் அடைகின்றோம்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இதைச் செயல்படுத்த வேண்டுமென்று பிரார்த்தித்து நீங்கள் அனைவரும் இதைப் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

இரண்டாவது… நாம் இந்த உடலில் நீடித்த நாள் வாழ்வதில்லை. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்திற்குள் அந்த அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானத்தைப் பெருக்கித்தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும்.

இந்த உடலைச் சொந்தமாக்கி… எந்த செல்வத்தையும் வைத்தோர் எவரும் இல்லை. செல்வத்தை வளர்த்துக் கொண்டோரும் செல்வத்துடன் பேயாகத்தான் காத்திருக்க முடிகின்றது.

இந்த உடலை விட்டு சென்ற பின்னும் அதன் மேல் ஆசை கொண்டு
1.இன்னொரு உடலுக்குள் சென்று
2.அதே செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதன் வழியில் அந்த உடலையும் வீழ்த்தத்தான் முடியும்
4.தேடிய அந்தச் செல்வம் எவரையும் காப்பதில்லை.

ஆனால் அருள் செல்வத்தை வளர்த்து அருள் வழியைத் தனக்குள் பெற்று அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்கவாசல் என்ற நிலையை இந்த மனித உடலிலிருந்துதான் செல்ல முடியும்.

ஏனென்றால் நம் உயிரே கடவுளாக இருக்கின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கும் தெய்வமாகவும் இருக்கின்றது. இதை எல்லாம் அறிந்து கொண்ட பின் அருள் உணர்வின் தன்மையை விளைய வைத்து எந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றோமோ உயிர் அங்கே அழைத்துச் செல்லுகின்றது.

எனவே இதை எல்லாம் நாம் பெறுவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு)

அறம் பொருள் இன்பம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

justice

அறம் பொருள் இன்பம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப… “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்…” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்… இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்…
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை – “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்… பொருள்… இன்பம்…
1.அறம் – நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் – அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் – என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்… மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று… அகத்தின் பொருளறிந்து… “அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின…”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்… எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று… விதியை மதி கொண்டு… ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்… தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து வினைப் பயன் என்ற முத்திரையை… “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்…”

உடல் உபாதையையும்… உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு… இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ… அச்செடியாக அது வளர்ந்தாலும்…
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்… செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது…
1.தன்னைத்தானே தான் உணர்ந்து…
2.இச்சரீர உணர்வின் வாசனையை… இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை…
3.உயர்ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை… நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை…
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப்போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா – உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

polaris agastyan

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…?

உபதேசம் கொடுக்கும் போது சில நேரங்களில் நான் (ஞானகுரு) மெதுவாகப் பேசுகின்றேன்.. நிறுத்திப் பேசுகின்றேன்…!

இதைப் போல முதலில்… சாமி கொஞ்சம் நிறுத்தி மெதுவாகப் பேசினால் எனக்கு அர்த்தம் ஆகுமே….! என்று சிலர் எண்ணலாம்.

ஆனாலும்… “வேகமாகப் பேசுகின்றார்… எனக்கு அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ணினால் அது அர்த்தமாகாது தான்…!

1.குருநாதர் வேகமாகப் பேசும் உணர்வுகள் “எனக்குள் பதிவாக வேண்டும்” என்ற
2.ஏக்க உணர்வுடன் ஒன்றி வந்தால்
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆகி
3.அந்த உணர்ச்சியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசத்தை (https://wp.me/p3UBkg-1Ag) அழுத்தமாகவும் வேகமாகவும் உங்களுக்குள் பாய்ச்சுவது. அதாவது ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் (ஊடுருவி) அவ்வாறு செய்கின்றேன்.

எவரொருவர் இதைப் பெற வேண்டுமென்று (அதே அழுத்தத்துடன் வேகமாக) இதைக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ அவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கின்றது. மகரிஷிகளின் ஆற்றலை விண்ணிலிருந்து பருகும் ஆற்றலை எளிதில் பெறுகின்றனர்.

“என்னமோ சாமி பெரிதாகச் சொல்கின்றார்…! நமக்குப் புரியவில்லையே…” என்றால் வரும் அலைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டே இருக்கும்

ஆகவே இதைப் போன்ற நிலைகளைத் தவிர்த்துவிட்டு எப்போதும் உபதேசிக்கும்போது அந்தக் கருத்துக்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் பதிவாகும்.
1.இந்த உணர்வின் தன்மை
2.உங்களை அந்த அருள் வழிக்கு அழைத்துச் செல்ல உதவும்.

மந்திர ஒலியை ஒலிக்கக் கூடியவர்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

mantra (2)

மந்திர ஒலியை ஒலிக்கக் கூடியவர்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
3.ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு…!

யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…? தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…? மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாசமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது.. இறைவன் யார்…? மனிதன் யார்…?

மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!

இந்தத் தத்துவத்தை தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்… கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

SOUL PROTECTION UPDATED

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

குரு உணர்த்திய அருள் வழியில் எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும்… எவ்வளவு தர்மத்தின் சிந்தனையில் இருந்தாலும்…
1.பிறர்படும் கஷ்டங்களையோ
2.பிறர்படும் துயரங்களையோ
3.பிறர் செய்யும் தவறுகளையோ எதையும் கேட்டுணராது நாம் இருக்க முடியாது.

பாலிலே சுத்தமான பாதாமைப் போட்டுச் சத்தாக உருவாக்கி உணவாக அதைக் குடித்தாலும் சந்தர்ப்பத்தால் தீமை என்ற உணர்வினை நுகர்ந்தறிந்தால் அந்த பாலின் சத்து நமக்குள் வளராது அதையே அழித்துவிடும்.

அதே போல் எவ்வளவு சத்து கொண்ட உணர்வை உணவாக உட்கொண்டாலும் வேதனையான உணர்வினை அடிக்கடி சுவாசிக்கும் போது வேதனையின் தன்மை வளர்ந்து… நீங்கள் உணவாக உட்கொண்ட சத்தான ஆகாரத்தையும் அது பலியாக்கி விடும்.

இதைப் போன்ற நிலைகளில்…
1.நம்மைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நஞ்சு கொண்ட உலகில்
2.விஞ்ஞான அறிவால் வெளிப்பட்ட சில விஷத் தன்மைகள்
3.தீமையின் உணர்வாக மனிதருக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியாலும் கவரப்பட்டு உலகம் முழுமைக்கும் நஞ்சு கொண்ட அலைகளாகச் சேமித்து வைத்துள்ளது. அதே சமயத்தில் நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகளை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பதிவாக்கி வைத்துள்ளோம்.
1.அப்படிப் பதிந்து கொண்ட உணர்வுகள்
2.மனிதர்கள் வெளி விட்ட நிலைகளை… அது வளர… அது கவரும்.
3.கவர்ந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகரும் போது
4.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்கும்.
5.அதனின் சத்து நம் உடலுக்குள் விளைந்து தீமையின் நிலைகளே விளையும். (நோயால் இன்றைய உலகம் அவதிப்படும் நிலை)

ஆகவே இதை அகற்ற வேண்டும் என்றால் தீமையை அகற்றிய அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும். அந்த நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… நமது குருநாதர் காட்டிய நிலைகளில் இந்த உபதேச வாயிலாக உண்மைகளை உரைக்கின்றோம்… உயிரின் ஆக்கங்களைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

அருள் மகரிஷிகள் பெற்ற உணர்வினைப் பெற உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளாக இந்த உணர்வினைப் பதிவு செய்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வின் இயக்கத்தால் (உபதேசங்கள் மூலம் https://wp.me/p3UBkg-4BE) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் தகுதியினை ஏற்படுத்தினால்தான் தீமைகளை அகற்றிட முடியும்… உங்களால் சாத்தியமாகும். 

தவமோ குண்டலினி யோகமோ மற்ற யோகங்களோ செய்தாலும் இதைப் பெறுவது மிகக் கடினம்.

அந்த மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் அதிகமாச் சேர்த்து… ஒருக்கிணைந்த அதனின் உணர்வின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்த வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்..

உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து விட்டு… இந்த வாழ்க்கையில் அறிந்திடும் அறிவின் நிலைகள் நிலைக்கச் செய்து… உயிருடன் ஒன்றி… என்றும் உண்மைப் பொருளாக மெய்ப் பொருளாக ஒன்றி… பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து ஒளியின் சரீரமாக நாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

முன்னோர்களின் உயிரான்மாக்களை இப்படி நிலைக்கச் செய்த பின் அவரின் உணர்வைக் கொண்டு நாம் விண்ணை நோக்கி ஏங்கும்போது அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வை நாம் எளிதில் பெற முடியும்.
1.நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்
2.இந்த வழி இல்லாதபடி நாம் எதையும் செய்ய முடியாது…!

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் இதனைச் செயல்படுத்த வேண்டும்.

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self trust and confidance

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர்த் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்

hybrid agastyar

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்

தீமைகளை எல்லாம் அகற்றி… பேரொளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் ஒவ்வொருவரும் நுகர்ந்து பழக வேண்டும்

1.அந்த மரபணுவின் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி
2.பகைமையை மாற்றிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று
3.ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்தப் பேருண்மையைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன். அந்த மரபணுக்களை நாம் எல்லோருமே பெற முடியும்.

இதை நிலை பெறச் செய்வதற்குத் தான் “துருவ தியானம்” என்றும் “பௌர்ணமி தியானம்” என்றும் வழிப்படுத்தியுள்ளோம்.

அந்தத் தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து நஞ்சினைக் கரைத்துவிட்டு அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் “உயிர்” என்ற நிலைகள்… “ஒளி” என்ற உணர்வின் அறிவாகத் தெரிந்து கொண்ட பின் தீமைகளை எல்லாம் கரைத்துவிட்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலையை அங்கே பெறச் செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் அங்கே ஒளியாகச் செல்லப்படும்போது “நம்மைக் காத்திட வேண்டும்…” என்ற அந்த மரபணு நம் தீமைகளை எல்லாம் அகற்றி நம்மைக் காக்கும்.

1.அதே மரபணுவை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு நாம் ஏங்கும் போது
2.பேரருள் பேரொளி என்று பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த அந்த உணர்வுகளை
3.நாம் எளிதில் பெற முடியும்… அந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்… சாங்கிய சாஸ்திரப்படி உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சுட்ட சாம்பலைக் கரைத்துவிட்டு “மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன்” என்று விநாயகர் கோவில் போய் “மோட்சத் தீபம்” காட்டுவதற்கல்ல.

ஒளியான மரபணுக்களைப் பெறுவதற்குத் தான் அன்று விநாயகத் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள். மனிதனாக வாழும் போது சந்தர்ப்பத்தால் வந்த பகைமை உணர்வுகளை அகற்றிவிட்டு ஒளி என்று உணர்வினை உருவாக்கி… ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் அகஸ்தியன் “துருவ நட்சத்திரமாக..”

அதை நாம் அனைவரும் இதை எளிதில் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும். மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும். மெய்ப் பொருள் காண முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உபதேச வாயிலாக ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்…!

1.உணர்வின் அழுத்தத்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரச் செய்து
2.அந்த மகரிஷிகள் அருளாற்றல்களை உங்களுக்குள் இணையச் செய்கின்றோம்.

அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால்… நினைவு கொண்டு மீண்டும் மீண்டும் அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் வரும் பகைமையை மாற்றி பேரருள் என்ற உணர்வை ஊட்டி… “இனி பிறவியில்லை” என்ற நிலையை அடையலாம்.
1.குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம்.
2.பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம்
3.பரிவான நிலைகளில் வாழவும் முடியும்
4.பரிவால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்.