திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒலி ஒளி வருகிறது…? அதன் இயக்க நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

shiva third eye mystery

திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒலி ஒளி வருகிறது…? அதன் இயக்க நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து/…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…!

 

இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?

ramakrishna and vivekanada

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?

 

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.

1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.

ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.

கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.

“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.

அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.

ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.

1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.

உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.

இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.

அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!

கடவுளைக் காண முடியாது…!

1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.

“ஒரு தலைவலி” ஏன் வருகின்றது…? MIGRAINE HEADACHE

1. “ஒரு தலைவலி” ஏன் வருகின்றது?

நம்முடைய உடல் அமைப்போ விஷத்தின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு உடலின் தன்மையை நல்லதாக மாற்றுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ

எதையுமே சிருஷ்டிக்கும் வல்லமை பெற்றது.

ஆக, தீமைகளை நீக்கும் அத்தகைய ஆற்றல் நமக்குள் இருந்தாலும்

நாம் இப்பொழுது எதை சிருஷ்டிக்கின்றோம்?

 

வேதனை, சங்கடம், சலிப்பு, இன்றைக்கு என்ன செய்வது? நாளைக்கு என்ன செய்வது? நான் அவனுக்கு இப்படியெல்லாம் செய்தேனே என்ற இந்த விஷத்தைத்தான் நாம் அதிகமாக நமக்குள் சிருஷ்டிக்கின்றோம்.

 

சாதாரணமாக, யாராவது ஒரு சிறிய சொல்லைச் சொல்லிவிட்டால் போதும் தாங்க முடியவில்லை. அடிக்கடி வேதனைப்படுபவரைப் பார்த்தவுடனே, கை கால் குடைச்சல் இருக்கும். முதுகு வலி இருக்கும்.

 

பெண்கள் எல்லாம் பாசமாக இருப்பார்கள். “ஐயோ, என் பிள்ளை இப்படி இருக்கின்றானே, அவனுக்கு சரியாகப் படிப்பு வரவில்லையே” என்று இவர்கள் வேதனைப்பட்டால் போதும், உடல் வலிக்கும், நிச்சயம் தலை வலிக்கும்.

 

அதே போன்று மூட்டுக்கு மூட்டு வலிக்கும். எதாவது ஒரு பொருளைத் தூக்க வேண்டுமென்றால் முடியாது.

பெண்ர்கள் யார் யார் மேலே பாசமாக இருந்து

எதை எதை நினைத்து அவர்கள் செய்யவில்லையோ,

உடனே என்ன செய்யும்?

இந்த ஒரு தலைவலி அவர்களுக்கு வரும்.

அடிக்கடி தலைவலி வரும்.

2. நாம் சுவாசிக்கும் தீமையான உணர்வுகளால் தான் உடலில் வலி, நோய் வருகின்றது

அதே சமயத்தில், முதுகுத்தண்டு எலும்பு நான்காவது எலும்பில் வந்து கடுகடுப்பு அதிகம் வரும். ஏன் நான்காவது தண்டு எலும்பில் அப்படி வருகிறது என்றால் நம் எடையைத் தாங்கி இருப்பது அதுதான்.

 

அந்த நேரத்தில் டாக்டரிடம் போனால் எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது பேண்டேஜ் போடவேண்டும், பெல்ட் போட்டுத்தான் ஆகவேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் முதுகு வலி இருக்கும் என்பார்.

 

இதெல்லாம் நம் உணர்வால் ஏற்படக்கூடிய நிலைகள். நாம் எடுத்துக் கொண்ட சுவாசம் நஞ்சாக மாறி, பல நிலைகளைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

3. “முருகு” மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு உண்டு

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும். பின் பூமியின் வட கிழக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தோடு ஒன்ற வேண்டும்.

 

உங்கள் அருளால் (நம் உயிரான ஈசனின் அருளால்) துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

 

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி

எங்கள் உடலில் உள்ள ரத்தங்கள் முழுவதும் படர்ந்து,

உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்று

உயிர் வழி கவர்ந்த அந்த ஆற்றல்மிக்க சக்தியை

கண்ணின் நினைவைக் கொண்டு

உடல் முழுவதும் படரச் செய்யவேண்டும்.

 

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் என்று எல்லா அணுக்களுக்கும் அந்த சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

 

அடுத்து, நம் உடலில் எங்கெங்கெல்லாம் வலியோ, வேதனையோ, அல்லது நோயோ அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகள் அங்கே படர்ந்து, தீமை செய்யும் அணுக்கள் ஒழிந்து நன்மை செய்யும் அணுக்களாக உருவாக வேண்டும் என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

4. மகிழ்வாகனா, மகிழ்ந்து வாழமுடியும்

எப்பொழுதெல்லாம் நமக்கு தீமைகள் வருகின்றதோ, அந்த நேரத்தில் இப்படிச் செய்து வந்தால் தீமைகளை வேக வைத்து அது நமக்குள் வளராமல் தடுக்க முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

 

அதனால்தான், நமது ஆறாவது அறிவை சேனாதிபதி என்றும் 

முருகா என்று ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள். 

“முருகு” என்றால் மாற்றி அமைக்கும் சக்தி என்று பொருள்.

 

அதே சமயத்தில் மகிழ்வாகனா என்றும் உணர்த்தியுள்ளார்கள். தீமைகளை நீக்கினால் மகிழ்ச்சி என்ற நிலைகள் உருவாகின்றது.

 

ஆகவே, நாம் அனைவரும் தீமைகளை நீக்கி, உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல மிக்க சக்திகளை நமக்குள் சிறுகச் சிறுக சேர்ப்போம். அனைவரும் பெற தவம் இருப்போம்.

 

பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோம். இந்த உடலுக்குப் பின் அழியா ஒளி சரீரம் பெறுவோம். என்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வோம். எமது அருளாசிகள்.

இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Rishi-Panchami

இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மையைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுத் பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்

power of ramakrishnar

இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்

இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.

ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.

இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.

அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.

மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்… ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.

இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.

அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்… இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்…. அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.

இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.

அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.

1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.

இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.

இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாக காட்டிய நிலைகள்.

பிறவியில்லா நிலை அடையச் செய்யும் சக்தி

GURU'S Route to sapdharihi mandalam

பிறவியில்லா நிலை அடையச் செய்யும் சக்தி 

 

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்றால் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் நுகரும் அனைத்தையும் ஓ… என்று ஜீவ அணுவாக இயக்கி ம்… என்று தன் உடலாக இணைத்து விடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உணர்வின் அணுக்களுக்கும் நம் உயிரே குருவாக இயக்குகின்றது.

அதே சமயம் நம் குரு… “ஈஸ்வரபட்டர்…”
1.வானுலக ஆற்றலையும்
2.நம் பூமியின் ஆற்றலையும்
3.மனித உடலில் உயிரியல் ஆற்றலையும்
4.மனிதனாக உருப்பெற்ற பின் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும்
5.மனிதனான பின் இனி பிறப்பே இல்லாது “இந்த உடலே ஒளியாகும் முறையை..” அவர் கண்டுணர்ந்தார்.

அந்த உணர்வின் வழிப்படி அவர் கூறும் உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தோம் என்றால் அதன் வழிக் கொண்டு நாமும் அருள் வழி கொண்ட பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அதை அடையச் செய்யும் அந்த ஆற்றல் வழிக்கு நமது உயிர் குருவாக இருப்பினும் நம் குருநாதர் ஈஸ்வரா (ஈஸ்வரபட்டர்) என்று அவர் இத்தகைய சக்தியை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய அந்த அருள் ஞான வித்தை நமக்குள் அதைப் பதித்து அதன் உணர்வை நாம் நுகர்ந்து செயல்படுவோம் என்றால் அதன் வழி
1.அதுவே நமக்குள் குருவாக இருந்து
2.இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி
3.மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் நமக்குள் குரு வழியாக இந்த வாழ்க்கையில் நமக்குள் உருவாக்கி
4.அடுத்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யும் அதன் குருவே நமது குரு..!

நம் உயிர் குருவானாலும் இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றி அருள் ஒளி பெறச் செய்யும் அவர் (ஈஸ்வரபட்டர்) அருள் வழியில் நாம் எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால் அதுவே நமக்குள் குருவாக இருந்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்கிறது.

மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

“ஓ…ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியத்தை உணர்ந்த அன்றைய ஞானிகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Earth sound OM

“ஓ…ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியத்தை உணர்ந்த அன்றைய ஞானிகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா…
3.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

cheating character

தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

 

1.உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.

அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.

மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின் சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று வருகின்றது.

ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர் நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள் “தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.

அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.

மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.

இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும் பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.

இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.

1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.

அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.

தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும் மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக மாறிவிட்டது…!”

ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.

ஆக மொத்தம் நாம் ஏமாற்றப்பட்டோம் ஏமாற்றப்படுகின்றோம் என்ற நிலை வருவதே இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பொழுது உண்மையின் நிலைகள் அந்தச் சரக்கின் தன்மையும் தெரிகின்றது.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!

தெய்வீக இசையின் மூலம் நாம் பெறக்கூடிய ஆத்ம சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

divine music breathing

தெய்வீக இசையின் மூலம் நாம் பெறக்கூடிய ஆத்ம சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.

ஓமுக்குள் ஓமாக இருந்து அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால் எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”

ரிஷிகளின் சக்தியைப் பெறக்கூடிய ஆரம்பப் படியே தெய்வீக இசைகள் மூலம் நாம் சுவாசிக்கும் உயர் ஞான நாதத்தின் சுவாசங்களாகும்.

கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது..?

veera murasu vivekanadar

கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது..?

 

விவேகானந்தரின் தாய் கருவிலே அவர் சிசுவாக வளரப்படும் காலத்தில் உலகம் முழுமைக்குமே அரசர்களால் அன்று அராஜகங்கள் ஏற்படும் நிலை இருந்து வந்தது.

அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் விவேகானந்தரின் தாய்
1.கடவுள் இருக்கின்றானா.. இல்லையா..? என்றும்
2.அமைதி கொண்டு வாழ்வோரையும் இரக்கமற்றுக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.கடவுள் என்று கூறும் அப்படி வணங்கும் “அந்தக் கடவுள்” எங்கே இருக்கின்றான்…?
4.அந்தத் தெய்வ சக்திகள் எல்லாம் எங்கே போய்விட்டது..? என்ற வினாக்களை எழுப்பி
5.உண்மையின் நிலைகள் கொண்டு அங்கே பரிதவிக்கும் உணர்வுகளிலிருந்து
6.”மக்கள் எல்லாம் மீள வேண்டும்…!” என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

பல காவியப் படைப்புகளையும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அன்று விவேகானந்தருடைய தாய் அதை எல்லாம் உற்றுப் படிக்கின்றது.

அன்று அரசர்களால் நாட்டிலே பேரழிவு வரும் பொழுது.. பல மத இனங்கள் போர் செய்யும் நிலையில் இரக்கமற்றுக் கொன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது.. நாம் வணங்கும் தெய்வங்கள் எங்கே போய்விட்டது…? என்ற உணர்வின் ஒலியைக் கூட்டி “அதன் உண்மையின் உணர்வுகலைப் பெறவேண்டும்…” என்று ஏங்கிக் கொண்டிருந்தது அந்தத் தாய்.

தாய் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் எல்லாம் கருவிலே இருக்கக்கூடிய அன்று வளர்ந்த விவேகானந்தருக்குப் பாய்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுக்கு எப்படிப் பல விஷத் தன்மைகளை வென்றிடும் உணர்வுகள் தாய் கருவிலே கிடைத்ததோ… அதை வைத்து அண்டத்தையும் அளந்தறியும் உணர்வின் தன்மையை அகஸ்தியன் பெற்றானோ…! இதைப் போல தாய் கருவிலே ஒரு சந்தர்ப்பம் விவேகானந்தருக்குக் கிடைக்கின்றது.

அரசர்களால் ஏற்படும் அராஜகங்களும் மக்கள் ஒவ்வொருக்குள்ளும் மொழி பேதம் இன பேதம் மத பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அதிலிருந்து கடவுள் எப்படி இயங்குகின்றார்..?
2.அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது இந்தத் தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..?
3.ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…?
4.ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று
5.இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது.

அது எங்கிய உணர்வுகள் தாய் கருவிலிருக்கும் சிசுவான விவேகானந்தருக்கும் அது படுகின்றது. இவ்வாறு கருவிலே பெற்ற வீரிய உணர்வுகள் கொண்டு அவர் பிறந்த பின் “தாய் எண்ணிய அதே உணர்வைப் பெற்று…” கடவுளின் தன்மையை அவர் அறிய விரும்புகின்றார்.

கல்வியில் இந்த அறிவின் தன்மை கொண்டு வாதிக்கும் வக்கீலாக அவர் தேர்வு பெறுகின்றார். கல்வியில் தேர்வு பெற்றாலும் கடவுள் என்ற நிலைகள் தேர்ந்தெடுக்கக் கடவுளை அறியத் தன் ஞானத்தைச் செலுத்துகின்றார்.

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.அவன் எங்கே இருக்கின்றான்..?
3.எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை வினாக்கள் போட்டு
4.அதற்கு விடைகள் கிடைக்காத் தவித்துக் கொண்டிருந்தார்.

இராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் தான் அவருக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது.

கடவுளைக் காண முடியாது… கடவுளை உணரத் தான் முடியும்..! என்ற உண்மைகளை அங்கே உணர்கின்றார். எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகளும் அவருக்குள் வளரத் தொடங்கியது.

அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..? ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…? ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது