அகஸ்தியா… தெற்கில் போ…! என்று சிவன் சொல்கிறார்

Agastyar

அகஸ்தியா… தெற்கில் போ…! என்று சிவன் சொல்கிறார் 

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனை போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டி கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூம சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வை பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வை சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

 

எல்லாமே போகும்போது நாமிருந்து என்ன பயன்…? என்றில்லாமல் மனித ஞான மகசூலாக உருவாக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human gems

எல்லாமே போகும்போது நாமிருந்து என்ன பயன்…? என்றில்லாமல் மனித ஞான மகசூலாக உருவாக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொல்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!

நம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…

demise of our sun

நம் சூரியன் முதுமை அடைந்து கொண்டிருக்கின்றது…

 

சூரியன் தன் சக்தியை இழந்தால் அது மீண்டும் கரைந்து விடும். மனிதர்களாக நாம் உருவாகி வாழ்ந்து மடிந்த பின் புதைத்தால் இந்த உணர்வின் தன்மை கரைந்து விடுகிறது. நம் உடல் மற்றொன்றுக்கு இரையாகின்றது.

இதைப் போன்று தான் சூரியக் குடும்பம் இருக்கிறது என்றால் இந்த 27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பங்களாக மாறுகின்றது,
1.கார்த்திகை நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது…
2.ரேவதி நட்சத்திரமும் சூரியனாக மாறுகின்றது.
3.இந்த இரண்டு மட்டுமல்ல மற்ற நட்சத்திரங்களும் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
4.முழுமையாக மாறி விட்டால் நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது.

அப்பொழுது நம் சூரியன் முதுமை அடைகின்றது, இப்படி ஒரு சரி பகுதி நட்சத்திரங்கள் சூரியக் குடும்பங்களாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரை இல்லை.

அப்பொழுது இந்தச் சூரியனின் சுழற்சியின் தன்மை அதனின் ஈர்ப்பு வட்டம் குறையும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ அந்தச் சுழலான சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா…! இதிலே ஒவ்வொன்றும் மாறிப் போகும் இதனுடைய உணர்வுகள்… அதற்கு உடலாகி இதனின் உணர்வின் தன்மை மாறும்.

இப்படித்தான் 2000 (நட்சத்திரங்கள்) சூரியக் குடும்பங்கள் ஓர் குடும்பமாக மாறுகிறது. நம் பிரபஞ்சத்தில் இந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியனாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது… பேரண்டமாகின்றது.

இதன் வளர்ச்சி இதே போல் மாறி மாறித் தான் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்தது.

1.நான் வெறுமனே சொல்லவில்லை…
2.படிக்காதவன் தான் இதைச் சொல்கிறேன்…
3.படித்திருந்தால் இதை எல்லாம் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த உணர்வின் தன்மை வரும் பொழுது நீங்களும் இதைப் பதிவாக்கி
1.இந்த உண்மைகளை நுகர்ந்து அண்டத்தையும் அறியலாம்
2.அதை இந்தப் பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையவும் செய்யலாம்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

மனித உடல் பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Almighty and human

மனித உடல் பிம்பத்திற்குண்டான உண்மையான ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தன் உணவைத் தான் எடுக்கப் போகன் செய்த செயல் முறைதான் “முருகா” என்ற சிலை.
1.ஒவ்வொரு சக்திக்கும் (அது) எந்தச் சக்தியாக இருந்தாலும்
2.தன் சக்தி வளர உணவு தேவை.

உணவை எடுக்க அவரவர்கள் உணர்த்திய முறை கொண்டு தான் போகனால் சீனாவில் பல மருத்துவங்களையும் வெடி குண்டுகளையும் முகம்மது நபியின் உடலை எடுத்து முஸ்லீம் நாடுகளில் தன் உணர்வைப் பதித்து உணர்வின் எண்ணமுடன் தன் உணவை எடுத்தார்.

இப்படித் தான் வளர தனக்குகந்த வளர்ச்சியில் ஆகாரமாகப் பல நிலைகளை உணர்வின் எண்ணமுடன் பதியச் செய்த முறை கொண்டு தான் அன்றிலிருந்து இன்று வரை பக்தி முறை தொடர் கொண்டுள்ளது.

பக்தியின் உண்மையான உணர்வின் எண்ணத்திற்கு அவர்களின் சக்தியைக் கொண்டு பக்திக்குகந்த பலனை அளித்துத் தனக்கு உணவை எடுக்கின்றார்.

கவிதைகளையும் பல காவியங்களையும் எழுத்தில் பதியச் செய்து பல சித்தர்கள் அதைப் படிப்பவர்களின் எண்ண உணர்வைத் தனக்குகந்த உணவாக எடுக்கின்றனர் “இன்றும்…!”

அன்றெழுதிய இராமாயணம் கீதை பைபிள் குரான் இவை எல்லாம் காலப் போக்கில் உருக்கள் மாறினாலும் அன்றெழுதிய உணர்வின் சக்தித் தொடரில் படிப்பவருக்கும்… எண்ணுபவர்க்கும்… அவ்வுணர்வின் சுழற்சியைக் கொண்டு…
1.இன்றளவும் அதனை எழுதியவருக்கு உணர்வின் எண்ணத்திற்கு
2.அவர்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டேயுள்ளது.

இந்தப் பூமியில் பல கோடிச் சித்தர்கள் பல உணர்வுகளில் இருந்தாலும் அவரவர்களின் வளர்ச்சிக் குணத்திற்கு உகந்தபடி எல்லாம் தன் எண்ண உணர்வை என்றும் அழியாத் தொடரிலும் சில சொல் ரூப மந்திரங்களிலும் பதியச் செய்துள்ளான் அந்தச் சித்தன்.

ஐயப்பனை எண்ணும் பொழுது ஒரு கோஷம். முருகனை எண்ணும் பொழுது வேறு ஒரு கோஷம். இப்படி இயேசு கிறிஸ்துவுக்கும் முகம்மது நபிக்கும் புத்தருக்கும் கொங்கணவருக்கும் அவர்கள் பதிய வைத்த இக்கோஷத்தால் இன்றளவும் தன் உணர்வுக்குகந்த உணவை எடுத்து தான் வாழ்ந்து… வளர்ந்து… பலவற்றையும் வாழ வைத்திருக்கின்றார்கள் “சக்தி கொண்ட சக்திகளை…!”

உணவில்லாமல் எதுவுமே வளர்வதில்லை…!

பிம்ப உடல் கொண்ட ஜீவத் துடிப்பு உருவங்களுக்குத் திடமான உணவு தேவை. ஆனால்
1.பிம்ப உடல் கொண்ட திட உணவை உட்கொள்ளும் இந்த மனித சக்தியில் இருந்து தான்
2.உணர்வின் எண்ண உணவையும் உட்கொள்ளும் சக்தி நிலை வளர்கின்றது.

தாவரங்கள் நீரையும் சில எருக்களையும் உணவாக உட்கொண்டாலும் உணர்வுடன் கூடிய எண்ண உணவெடுக்கும் முறை மனித ஞானத்திற்குத்தான் உண்டு. மனித ஞான உணர்வின் உயர் சக்தியில் ஊன்றியுள்ள உண்மைதனை உணரல் வேண்டும்.

மனித நிலையிலிருந்து மாறி மிருக நிலையிலும் மற்ற பட்சிகளின் புழு பூச்சிகளின் நிலையிலும் உணர்வின் எண்ண ஞான உணவெடுக்கச் சக்தியில்லை.

1.ஞானத்தின் உணவை எடுத்துச் சித்தன் என்ற செயலாகிச் சப்தரிஷியின் செயலாக்கி
2.ஆதி சக்தியின் சக்திக்கே துணை சக்தி கொள்ளும்
3.வடிவெடுக்கும் உருவங்கள் தானப்பா… இந்த மனித பிம்ப உடல்…!

பல கோடி ஆண்டுகளாகவே நற்சக்தியின் விதைகள் விதைக்கப்பட்டுப் பலனை எடுத்து மீண்டும் மீண்டும் பலன் கொண்டு தான் எடுத்த உயர் ஞானத்தைக் கொண்டு பல ஞானங்களின் உணவு எடுத்துக் கருவாகி உருவாகி தனியோரு மண்டலமாக உருவாகிச் சுழன்று கொண்டேயுள்ள சக்தியில் முதல் எது… கடைசி எது…?

27 நட்சத்திரங்களின் சக்திகள் பூமிக்குள் வருவதைக் காட்ட “அந்த லயன்… இந்த லயன் (LINE)…!” என்பார் குருநாதர்

Vedic Eswarapattar

27 நட்சத்திரங்களின் சக்திகள் பூமிக்குள் வருவதைக் காட்ட “அந்த லயன்… இந்த லயன் (LINE)…!” என்பார் குருநாதர்

 

நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்… … …! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது… … …!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்… பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது…இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதை பெற வேண்டும் என்று எண்ணினால்
உங்களையும் காக்கின்றீர்கள்
நாட்டையும் காக்கின்றீர்கள்
மக்களையும் காக்கின்றீர்கள்
இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!

சித்து நிலையை எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

power of Eswarapattar

சித்து நிலையை எப்படிப் பெறுவது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.

படைப்பின் இரகசியத்தையும் படைப்பவனின் இயக்கத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

food point

படைப்பின் இரகசியத்தையும் படைப்பவனின் இயக்கத்தையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பருப்பைப் பயிராக்கினால் பல பருப்பை அந்த ஒரு பருப்பு பலன் தருகிறது. ஒன்று வளர தன் வளர்ப்பின் பலன் தான் ஒவ்வொன்றும். சூரியன் தான் வளரப் மற்றதை வளர்க்கிறது.

1.ஒவ்வொரு இயற்கையின் ஜீவ வளர்ப்பும் தான் வளர
2.தன் வளர்ப்பில் பிற வளர்கிறதே தவிர
2.தன் வளர்ப்பில்லாமல் பிற வளர்ப்பு எச்சக்தியும் வளர்த்திக் காட்ட முடியாது.

தன் உணவைத் தான் எடுத்து தான் வளர்த்து தன் வளர்ப்பில் பிறவற்றையும் வளர்க்கச் செய்கிறது சூரியன். மற்ற மண்டலங்களின் ஈர்ப்பைத் தனக்கு உணவாக எடுத்துத் தான் வளர்ந்து தன் வளர்ச்சியின் பலனை வெளிப்படுத்தி அவ்வளர்ச்சியின் நிலையால் பிறவும் வளர்ந்து ஒன்றின் வளர்ப்பில் படர்கின்ற வளர்ப்பின் செயல் தான் எல்லாமே…!

தான் உட்கொண்டு தன் உணர்வை ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ சக்தி கொண்டு உணர்வால் எடுக்கும் முறை கொண்ட வழி கொண்ட தொடர் நிலைப்படி தான் சகல நிலைகளும் உள்ளன.

1.மிகவும் சக்தி வாய்ந்த அகில சக்தியான ஆதி சக்தியின் படைப்பிற்கே
2.தன் படைப்பின் உணவை உட்கொண்டு உட்கொண்டு
3.தன் படைப்பின் படைப்பில் பலவற்றையும் படைக்கின்றான்.

உயிரணு தோன்றி..
அவ்வுயிரணுவின் உயிர் தோன்றி..
உயிர் செயலின் வழித் தோன்றி…
உயர் ஞான சக்தியாகி…
சகலமும் காணும் சப்தரிஷியானாலும்…
“அந்தச் சப்தரிஷியின் உணர்வுக்கும்…!” தன் வளர்ப்பை வளர்க்க உணவு தேவை.

தான் உண்டு… தான் வாழ… பிறரையும் வாழ வைக்க முடியுமேயன்றி “பிறர் வாழ்ந்தால் தான் வாழ முடியும்…!” என்ற நிலை எதற்குமே இல்லை.

நட்சத்திர மண்டலங்களும்… வளர்ந்து விட்ட சகல மண்டலங்களும்… காற்றினில் கலந்துள்ள பல கோடி அமிலங்களின் ஜீவ சத்துக்களும்… நீரும்… ஒளியும்… அனைத்துமே… தன் உணவை உட்கொண்டு தான் வளர்ந்து கொண்டுள்ளளன.

1.உணர்வின் சுழற்சிக்கு உணவு தேவை
2.உணவில்லாமல் எந்த ஜீவத் துடிப்பும் உயிர் வாழ்வதில்லை.

ஜீவனுடன் கூடிய பிம்ப உடலுடைய மனிதன் “ஜீவ சக்தி கொண்ட நீரையும் திடப்பொருள் உணவையும்” உட்கொண்டு வாழ்கின்றான்.

மிருகங்களும் மனிதனை ஒத்த நிலையில் வாழ்கின்றன. தாவரங்களின் நிலை “ஈர்ப்பின் சுவாசமுடன் உணவை” உட்கொண்டு அவை வாழ்கின்றன.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப தன் உணர்வு அழியாவண்ணம் நுகர்ந்து
1.தான் வாழ்ந்த காலத்தில் உண்டு வாழ்ந்த ஆகாரங்களின் வாசனையின் உணர்வை ஈர்த்து
2.தன் உணர்வுக்குகந்த உணவைக் காற்றிலிருந்து தன் சுற்றத்தாரின் உணர்வுடன் கலந்து
3.தன் உணவை உட்கொண்டுதான் ஆவி நிலையில் உள்ளவர்களும் வாழ்கின்றனர்.

ஆக..
1.ஜீவனற்ற பொருள்களுக்கு எதுவும் தேவையில்லை.
2.ஆனால் ஜீவனற்ற பொருளும் ஆவியாகக் கரைந்து பிறவற்றுக்கு ஆகாரமாகத்தான் செல்கிறது.
3.உணவில்லாமல் எந்த ஜீவ சக்தியும் வாழ்வதில்லை…

உபதேசத்தாலோ… நூலில் இருந்து படித்தோ மட்டும் ஞானத்தின் வளர்ச்சி பெற்றிட முடியாது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

saptarishis

உபதேசத்தாலோ… நூலில் இருந்து படித்தோ மட்டும் ஞானத்தின் வளர்ச்சி பெற்றிட முடியாது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்…? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப்பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!

அமெரிக்கா மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் செயல்கள்

hold the truth

அமெரிக்கா மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் செயல்கள்

 

அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் உதவி செய்வது போல் செய்து மற்ற நாட்டைத் தனக்குக் கீழ் கொண்டு வரும் நிலையே உள்ளது.

உதாரணமாக வேப்ப மரம் என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வேம்பை மாரியம்மனுக்குச் சாற்றி ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள். எத்தனையோ இலட்சம் ஆண்டுகளாக வணங்கி வந்த நிலை.

இந்த வேப்பமரத்தின் உண்மை உணர்வுகள் கேன்சரை நீக்கவும் பல தீமையான கொடுமையான உணர்வுகளை மாற்றவும் உதவுகிறது. அதே போல் மஞ்சளும் வேப்ப மரத்தின் சத்தும் இரண்டும் உராயப்படும் பொழுது அதனால் சில சில விஷத் தன்மைகளை நீக்கும் சக்திகள் உண்டு.

உடலில் உள்ள சில தீமையான அணுக்களை மாற்றும் நிலை இதிலே உண்டு என்று அறிந்து கொண்டான் அமெரிக்கா. இரசாயணக் கலவைகளாக மாற்றி அதிலே சில குறைகளை அவன் கண்டு கொண்ட பின் அவன் வலிமை கொண்ட நாடாக இருப்பதால்
1.எங்கள் நாட்டில் வளர்ந்தது தான் அது…!
2.நீங்கள் அதிலே எந்தப் பொருள் செய்தாலும் எங்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று இப்படிக் கொண்டு வருகிறார்கள்.

இதைப் போன்று தான் அன்றைய அரசர்கள் ஒரு நாட்டில் மற்றொரு அவன் கேட்ட பொருளைக் கொடுக்கவில்லை என்றால் உடனே போர் தொடுத்து அவனை அடிமையாக்கித் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.

ஆக நல்லது செய்வது போல் பண்பு கொண்ட நம் நாட்டையும் பண்பற்றவர்களாக மாற்றுகின்றனர். அதே சமயத்தில் மதத்தின் அடிப்படையில் அமெரிக்கா வளர்க்கப்படும் பொழுது அவன் எந்த மதத்தைத் தழுவினானோ அந்த மதத்தின் உணர்வுகளை இங்கே நம் நாட்டுக்குள்ளும் கூட்டி தன் இனத்தை இங்கே பெருக்குகின்றான்.

1.மதம் என்ற நிலைகள் கொண்டு அவர்கள் கடவுளை முன் நிறுத்தித் தவறுகளைச் செய்கிறார்கள்.
2.அதே சமயத்தில் பரிவு கொண்ட மனம் கொண்டு உதவி செய்வது போல் காட்டி – ஐந்தாம்படைகளாக மாற்றிக் கொண்டு
3.இங்கிருக்கும் நல்லவைகளை எடுத்துச் சென்று இந்த நாட்டின் நிலைகளையே சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அன்றாண்ட அரசர்கள் போல் இன்றும் இதன் நிலைகளில் உலகையே அவனுக்குக் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டு வரப் பார்க்கின்றான். அவனுக்கு இணங்கிச் செயல்படுத்தவில்லை என்றால் தன் வலுவின் தன்மை கொண்டு அடிமைப்படுத்தும் உணர்வே வளர்ந்துவிட்டது… இன்றும் நடக்கின்றது.

அப்படி அடிமைப்படுத்தும் உணர்வுகள் தொடர்ந்து வரப்படும் பொழுது
1.எத்தனை கோடி தெய்வங்களை வணங்கினாலும் சரி மற்ற எத்தனை நிலைகள் செய்தாலும் சரி
2.அவன் கற்றுணர்ந்த ஆயுதங்களை நம்மிடம் பயன்படுத்தினால் நமது தெய்வமும் சரி
3.நம் நாட்டுப் பற்றும் சரி முழுமையாக அணைந்துவிடுகிறது… நஞ்சின் தன்மையாகி விடுகிறது.
4.சிந்திக்கும் தன்மையே இழந்துவிடுகிறது…!
5.இதைப் போன்ற சூழ்நிலையில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்கள்

Socialism

இன்றைய உலகில் “உதவி செய்வதிலும்… உதவி பெறுவதிலும்…” உள்ள உபத்திரவங்கள்

 

உலக நிலைகளிலேயே இன்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மைகள் அதிகரித்துவிட்டது. அந்த உணர்வுகள் எல்லாமே அரசர்களால் உருவாக்கப்பட்டது. மனிதனான பின் அரவணைக்கும் உணர்வையே மறந்து அடக்கி ஆளும் தன்மையே பெறுகின்றது.

1.எப்படியும் ஏதோ ஒரு வகையில் மிரட்டி வாழ்வது
2.இல்லை என்றால் ஒன்றைக் கொடுத்து தனக்குக் கீழ் அடிமையாக்குவது.

அதாவது உங்களுக்கு நான் ஒரு பொருளைக் கொடுத்து அதன் வழியில் அடிமையாக்குவது. உங்கள் நிலைகளிலிருந்து அதை நான் பெற்று என்னுடைய சுகத்திற்கு வருவது.

1.ஆனால் நான் கொடுத்து நீங்கள் பதிலுக்கு உதவவில்லை என்றால்
2.நான் எண்ணியபடி நீங்கள் வரவில்லை என்றால்
3.உடனே உனக்கு நான் இன்னதைச் செய்வேன்…! என்று
4.அந்தத் தீங்கின் நிலையே (மிரட்டும் நிலையாக) வருகின்றது.

ஆக ஒருவருக்கு உதவி செய்யப்படும் பொழுது அவன் தனக்கு இணைந்தவனாக வர வேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அடுத்து அவனைக் குற்றவாளியாக்கும் நிலையே வருகின்றது.

மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் அவரவருக்குத் தகுந்த மாதிரி மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். ஆனால் உதவி செய்தபடி அந்த உதவி பெற்றவர்கள் தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் உதவி செய்தேன்… அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை
2.ஆகவே அவன் தீங்குள்ளவனாக ஆகி விட்டான்..! என்ற
3.இப்படிப்பட்ட பகைமை உணர்வைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

பகைமையை ஒரு பக்கம் வளர்க்கின்றோம். அதே சமயத்தில் அன்பு கொண்டு மற்றவரைத் தனக்குள் அடிமையாக்க வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.

தன் வீரிய உணர்வு கொண்டு ஒருவரை அடக்கி ஆளும் உணர்வு கொண்டு செயல்படுத்துகின்றனர். அடுத்து பொருள்களைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்கும் தன்மையே வருகின்றது.

1.உண்மையின் உணர்வின் தன்மை கொண்டு ஒன்றி வாழ வேண்டும்
2.இணைந்து வாழ வேண்டும்
3.பேதங்கள் நீங்க வேண்டும்
4.பேரருளைப் பெறவேண்டும் என்ற உண்மை நோக்குடன்
4.உதவிகளைச் செய்தால் அங்கே எதிர்பார்ப்பின் தன்மை இருக்காது.

உதவி செய்தேன்…! என்றால் உங்களிடம் ஒன்றை எதிர்ப்பார்க்கும் தன்மையே தான் இன்று வருகின்றது.

சில இடங்களில் பார்க்கலாம். சில உபகாரங்களைச் செய்வது போல் செய்வார்கள்.
1.ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமையாக வேண்டும்
2.அப்படி அடிமையாகவில்லை என்றால் அதற்கு வேண்டிய தொல்லைகளைக் கொடுப்பார்கள்
3.நான் அவனுக்கு இவ்வளவு உபகாரம் செய்தேன்… எனக்கு இவன் இவ்வாறு தீங்கு செய்கின்றான் என்று
4.குற்றவாளியாக்கும் உணர்வுகளைத்தான் பாய்ச்சுகின்றார்கள்.

தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் தன்மைகள் தான் இங்கே வருகின்றது. ஒன்று… அடக்கி ஆள்வது இரண்டாவது… அரவணைத்துப் பார்ப்பது. வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக்குவது..!

அன்றைய அரசர்கள் காலங்களில் அரசர் பண்பு கொண்ட நிலைகள் வளர்க்கின்றனர். ஒரு அரசன் அடுத்த அரசனுக்கு உதவி செய்கின்றான்.

உதவி செய்யப்படும் பொழுது அந்த அரசனிடம் உன் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடு என்கிறான்… அல்லது இந்த ஊர் எனக்கு உகந்தது அதைக் கொடு…! என்று கேட்கின்றான்.

அவன் கேட்டதை எல்லாம் உதவி பெற்ற அரசன் கொடுக்கவில்லை என்றால் இதுவரை உனக்கு அரவணைத்து உதவி செய்திருக்கிறேன். பதிலுக்கு உன்னால் இந்தச் சிறு உதவி செய்ய முடியவில்லையா…? என்று உடனே போர் முறை தொடுக்கின்றான்.

இதைப் போல் தான் மக்கள் மத்தியிலும் அன்று அரசன் எதைச் செய்தானோ அதே உணர்வுகள் இங்கே படரப்பட்டு இயக்கிக் கொண்டிருக்கிறது.

எதிர்ப்பில்லாது இருக்கும் என்பதற்காக இந்த உதவிகளைச் செய்கின்றனர். அந்த எதிர்ப்பில்லாத நிலைகளில் இந்த உதவிகளைச் செய்தாலும் தான் எதிர்பார்க்கும் நிலைகள் ஏராளம் உண்டு.
1.தான் தவறு செய்து கொண்டு
2.அந்தத் தவறைக் காக்க
3.மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய பண்புகள் தான் இருக்கின்றது.

தன் தவறை மாற்ற தன் தவறின் நிலைகளை மாற்றியமைக்க மற்றவர்ககளுக்கு உதவி செய்து கடைசியில் அந்தத் தவறு செய்யும் நிலைகளே தான் அதிகரிக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் தான் மக்கள் மத்தியில் இன்று ஒரு அலுவலகத்திலும் சரி… வீட்டிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி.. இருக்கின்றது.

இப்படி வரப்படும் பொழுது இது சுயநலத்தைக் கூட்டுகின்றது. பொது நலம் ஆகாது.

அந்தப் பொது நலத்தின் தன்மைகளை அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துவிட்டால் அந்தக் குற்ற இயல்புகள் இருவரிடத்திலும் வராது.

1.நல்ல பண்பினைக் காக்க
2.பரிவினை ஊட்ட
3.அன்பினைக் கூட்ட அரவணைக்கும் தன்மை வந்தால்
4.அந்த அரவணைக்கும் உணர்வே நாம் செய்த பண்பின் அரவணைப்பு நமக்குள் என்றும் நிலைத்திருக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும்… இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்… அவர்கள் வாழ்வில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்ற நிலையில் நாம் செயல்பட வேண்டிய நெறிகளைத்தான் நம் குருநாதர் தெளிவாக்கினார்.