சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

Brahma creator.jpg

சிருஷ்டியை மாற்றும் ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!”

நமது வாழ்கையில் காலையில் இருந்து இரவு வரையிலும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற என்ற எத்தனையோ நிகழ்வுகளைப் பார்க்கின்றோம்
1.வெறுப்படைவோரைப் பார்க்கின்றோம்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கின்றோம்
3.வேதனைபடுத்துவோரைப் பார்க்கின்றோம்
4.கோபப்படுவோரைப் பார்க்கின்றோம்.

இவை அனைத்தும் நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து அறிகின்றோம். நாம் பார்த்து நுகர்ந்து அறிந்தாலும் அதை எல்லாம் நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலிலே அது பெருகச் செய்து விடுகின்றது.

ஆகவே பல கோடி உடல்களில் இருந்து நஞ்சினை வென்று நம் வாழ்கையில் நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று இன்று மனித உரு கொடுத்த நமது உயிரை நாம் மதித்தல் வேண்டும்.

நம் உயிரை மதிப்பதற்கு என்ன வழி…?

நமது வாழ்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்தாலோ பார்த்து நுகர்ந்தாலோ அதை நம் உடலுக்குள் புகாதபடி தடுத்தல் வேண்டும். உயிரால் வளர்க்கப்பட்ட இந்த உடலான சிவத்தை நாம் பாதுகாத்தல் வேண்டும்.

ஏனென்றால் சிவத்திற்குள் (உடலுக்குள்) நல்ல சக்திகள் இருந்தால் தான் உடலில் நோய் இல்லாத நிலைகள் ஏற்படும்.

நம் உடலைச் சிவமாக மதித்து நம் உயிரை ஈசனாக மதித்து நாம் ஒவ்வொரு நொடிகளில் இந்த வாழ்கையில் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ இதைப் போல நிகழ்சிகளை நாம் பார்த்துக் கேட்டுணர்ந்தால் அவை நம் உடலுக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நமது உடலில் இருக்கும்
1.ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றும்
2.அது அறிந்திடும் ஆற்றல் பெற்றது என்றும்
3.அது தீமைகளை நமக்குள் புகாதபடி “பாதுகாக்கும் சக்தி…!” என்றும் தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார்கள்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் நம் உடலுக்குள் அது போகாதபடி அதை நாம் தடுத்து நம் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலைகள் (அணுக்களாக) உருவாகாது அதைத் தடைப்படுத்தல் வேண்டும்.

அதைத் தடைப்படுத்த வேண்டும் என்றால்… முதலில் சொன்ன மாதிரி நாம் கண்களால் பார்த்துக் கேட்டறிந்த உணர்வுகள் (சலிப்பு கோபம் சங்கடம் ஆத்திரம் வேதனை) அனைத்தும் நமக்குள் தீமையின் அணுக்களாக எப்படி உடலுக்குள் அணுக்களாக உருவாகின்றதோ அதே போன்று
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
3.நாம் தீமைகளைக் கேட்டறிந்த அடுத்த நிமிடத்திலேயே இதை இணைத்திடல் வேண்டும்.

நாம் எப்படி ஒரு குழம்பை வைக்கும் போது பதம் பார்த்து அதாவது காரம் புளிப்பு உப்பு போன்ற மற்ற நிலைகளை அறுசுவைகளை ஒரு சுவையாக மாற்றி சுவைமிக்க குழம்பாக வைக்கின்றோமோ அதைப் போன்று
1.தனித்தனியாக வரும் இந்த வெறுப்பு கோபம் வேதனை என்ற உணர்வுகளுக்குள்
2.அருள் ஞானியின் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை நுகரப்படும் போது நம் உடலுக்குள் ஒளியான அணுக்கள் பெருகுகின்றது. ஆகவே
1.நமது வாழ்கையில் ஒவ்வொரு நிமிடமும்
2.நாம் அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அணுக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அதனால் தான் நம் ஆறாவது அறிவை முருகா என்று காட்டி “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…!” என்று நம் சாஸ்திரங்களில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இப்படி சந்தர்ப்பத்தால் நாம் சந்திக்க நேரும் எந்தத் தீமைகளும் நமக்குள் உருவாகாதபடி
1.அருள் உணர்வை நமக்குள் உருவாக்கும் சக்தியாக
2.அந்தச் சிருஷ்டியையே நாம் மாற்றுகின்றோம்.

காமதேனுவின் (ஹேமப் பறவை) சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kamadhenu.jpg

காமதேனுவின் (ஹேமப் பறவை) சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“காமதேனு பாலை ஊட்டிடுவாள்…!” என்று இயம்பிய சொல்லில் அது எப்படி..? என்ற வினா எழும்பும். அன்றைய சித்தன் இந்த அரிய உயிரணுக்களின் சக்தியில் ஹேமம் என்ற நாமப்படுத்தி பறவையாகக் காட்டினார்கள்.

பூமியின் தொடர்பிற்கே வந்திடாத வண்ணம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு வட்டத்திற்கு மேல் ஹேமப் பறவைகள் பல்கிப் பெருகி உள்ளன என்று சுட்டிக் காட்டினர்.
1.அதைப் பற்றிய சூட்சமத்தை அறிய வேண்டும் என்றால்
2.ரிஷித் தன்மைக்குத் தன் சக்தியை உயர்த்திடும் எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும்.

மறைக்கப்பட்ட விஷயமாக இது இருந்தாலும் அந்த மகரிஷிகளின் ஆசியுடனே இப்பொழுது அதைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும் தன்மைக்கு வந்துள்ளது.

பூமியைச் சுற்றி ஓடும் அந்த அரிய உயிரணுக்களின் தொடர் வட்டமே அனைத்தின் கூட்டுத் தொகுப்பில் “காமதேனு…” என்று அழைக்கப்படுகிறது.

அவைகளின் சுவாசத்தில் ஈர்த்து வெளியிடும் சக்திப் பிரவாகம் பால் அமுதமாக வருவதை
1.ஒளி காந்த சக்தியாக ஈர்த்திடும் பக்குவத்தில்
2.அந்த ஈர்ப்பின் வலுச் செயலுக்கு
3.நாம் அந்த ஆகாரத்தைப் பெற வேண்டும்.

அகண்ட அண்டத்தில் (UNIVERSE) உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் விரிவாக்க மூல சூட்சமத்தை அறிந்து உணர்ந்து தெளிந்த பின் தனித்தன்மை வாய்ந்த செயல் நிகழ்வாக ஒளி நட்சத்திரங்களாக நாம் சுழன்று ஓடும் செயல் வளர்ப்பிற்குண்டான சகல சக்திகள் நம்முள்ளும் உண்டு.

யோகிகளுக்கு ஆத்மனும் ஞானியர்களுக்குப் பரப்பிரம்மமும் சொல் நாம வேறுபாடே தவிர அனைத்தும் ஒன்று தான்.
1.தன் எண்ணத்தின் வலுவால்
2.நல் வினைப்பயனால் சகலத்தையும் அறியும் சக்தியால்
3.ஆத்மாவாக உணர்ந்தறியும் உயிர் சக்தியின் கலப்பால் சூட்சமச் சரீரமே சூட்சமத்தில் வாழும்
4.ஒளி காந்த உயிரோட்டமாக நிலை நின்று ஒளிரும் வளர்ப்பே
5.ஆதிசக்தியின் மூலசக்தியாகக் கலந்திடும் செயலுக்கு வாயிலாகின்றது.

பரப்பிரம்ம ஆத்ம சூட்சமம் பதியும் ஒவ்வொரு செயலையும் இந்தச் சரீர உணர்வுடன் ஒன்றி வளர்க்க அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் பூமியின் தொடர்பில் சூரியக் குடும்ப வீரிய அலையின் சக்தி பரவிப் பாய்வதையும் அது ஒன்றாகக் குவிந்து வருவதையும் அறிந்தனர்,

1.தங்களுடைய உயர் ஞான அறிவின் வளர்ப்பால்
2.உள் நுணுக்கு… நுண் சூத்திரம்… என்ற கணித முறைச் சூத்திரங்கள் பலவற்றைக் கையாண்டு
3.அவைகளை எல்லாம் ஆக்கச் சக்திக்காகப் பயன்படுத்தும் வகைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு மண்டலங்களின் சுவாசத் தன்மைகளில் அந்த மண்டலங்கள் ஈர்த்துச் சமைத்து வெளிவிடும் சுவாச அலைகளை ஈர்த்திடும் செயலில் பல குண அமிலத் தன்மை கொண்ட அலைகள் உண்டு.

அவைகள் எல்லாம் ஒன்றாகக் குவிதலும் குவிந்த பின் விரிந்திடும் நிலைகளையும் அதற்கென்ற கருவிகளை வைத்து இன்றைய விஞ்ஞானம் விளக்கமாக அறிவின் தொடரில் அறிந்து கொண்டது.
1.அறிந்தாலும் அதை அழிவுக்கே பயன்படுத்துகின்றார்கள்.
2.வளர்க்கும் ஆக்கச் சக்தி இல்லை.

மண்டல இயக்கங்களின் மோதலினால் உருவாகும் அந்த நுண்ணிய “மின் காந்த அலைகளை… ஒளி காந்த சக்திகளை…” எல்லாம் அழிவின் சக்திக்கே கொண்டு செல்கிறார்கள் இன்றைய மனிதர்கள்.

ஆனால் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் படைப்பின் படைப்பை ஒளி சக்தியின் வளர்ப்புக்காக அதைக் காத்திட்டார்கள்.

நம்முடைய குணங்கள் எல்லாம் எப்படி மாற்றமடைகிறது…? நல்லதாகவே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

siddhars.jpg

நம்முடைய குணங்கள் எல்லாம் எப்படி மாற்றமடைகிறது…? நல்லதாகவே இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒருவர் மற்றொருவரை வேதனைப்படுத்துகிறார் என்று உற்றுப் பார்க்கின்றோம். “பாவிப்பயல்…! இப்படி வேதனைப்படுத்துகின்றானே…!” என்று எண்ணுகின்றோம்.

பிறரை வேதனைப்படுத்தும் போது அதை நாம் கூர்மையாகப் பார்க்கும் போது அந்த மனிதனை நம் கண்ணின் கரு விழி ருக்மணி படமாக்கி எலும்புக்குள் ஊனாகப் ப்திவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் அந்த மனித உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது. இதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இந்தக் காற்றிலே வைத்துக் கொள்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை (அதாவது அதனின் சத்தை) சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதே சமயம் அந்தச் செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றும் போது சூரியனால் ஏற்கனவே கவரப்பட்ட அந்தச் சத்தினை இந்த வித்து தனக்குள் கவர்ந்து அதே செடியைப் போன்று விளைகின்றது.

இதைப் போன்று தான் வேதனைப்படும் உணர்வுகள் ஒரு மனிதனுக்குள் விளைந்து அது சொல்லாக வெளிப்படும் போது நாம் அவனைக் கூர்மையாக பார்த்து அவன் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நமக்குள்ளும் அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.வேதனைபடுபவனைப் பார்த்து நாம் அனுசரிப்போம். அவன் வேதனையால் அழுவான்.
2.அதை வைத்து வேதனைப்படுத்துபவனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்கிறாய்…?” என்று நாம் கேட்கத் தொடங்குகின்றோம்.
3.அப்பொழுது வேதனைப்படுத்தும் உணர்வும் வேதனைப்படும் உணர்வும் நம் உயிருக்குள் படுகிறது.
4.இந்த இரண்டு உணர்வும் கலந்த பின் இது பிரம்மமாக (சிருஷ்டி) உருவாகிறது.

வேதனைப்படுபவன் வேதனைப்படுத்துவனை எண்ணி அந்த வேதனை ஒன்றைத் தான் நினைக்கின்றான். அதனால் வேதனைப்படும் உணர்ச்சியை அவனுக்குள் தூண்டுகின்றது.

வேதனைப்படுத்துபவனோ வேதனைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றான். அந்த உணர்ச்சிகளை அவனுக்குள் தூண்டுகிறது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்த இரண்டையும் நுகர்ந்து சிந்திக்கும் பொழுது நமக்குள் இது புது குணமாக புது அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.

வேதனயால் வாடுபவனை அங்கே காக்க எண்ணுகின்றோம். அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் உருவாகின்றது. அந்த நேரத்தில் நியாயத்தையும் பேசுவோம். ஆனால் நாம் வேதனைப்படவும் செய்வோம்.

வாழ்க்கையிலே நான் நியாயத்தைப் பேசுகிறேன்…! என்று சொல்லலாம். அதே மாதிரி அயோக்கியத்தனம் செய்கின்றான்…! என்றும் சொல்லலாம்.

ஆக அயோக்கியததனம் செய்பவனையும் அதனால் வேதனைப்படுபவனையும் இந்த இரண்டையும் சேர்த்து நாம் நுகர்கின்றோம். இந்த இரண்டையும் சேர்த்துத் தான் நாம் நியாயத்தை வாதிக்கின்றோம். இந்த வலு நம்மிடம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது எப்படிப் பேசுவோம்…? நம்மை அறியாமல் இந்த இரண்டு உணர்வையுமே சொல்வோம்.
1.வேதனை உணர்வையும் சொல்வோம்…
2.வேதனைப்படுத்துவது நியாயமா…? என்று அதையும் அதிகமாகச் சொல்வோம்.

இரண்டும் இப்படிக் கலந்து வந்த பின் நம் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் அதற்கு உணவு தேவை.

உதாரணமாக ஒரு செடிக்குள் மற்ற செடியின் ஜீன்களை (GENE) இணைத்து விட்டால் இது இரண்டும் கலந்து எந்த ஜீன் அதிகமாக வளர்ந்துள்ளதோ அதற்கொப்ப அந்த மலரின் தன்மையும் அதிலே விளையும் காயின் சுவைகளும் மாறுகின்றது.

இதைப் போல உயிரினங்களில் எடுத்துக் கொண்டாலும் ஒரு உயிரினத்திலிருக்கும் அணுக்களின் சிசுக்களை எடுத்து இன்னொரு உயிரினத்தில் இணைக்கப்படும் போது இரண்டு சிசுக்களும் ஒன்றாகி
1.புதுவிதமான உடலின் அமைப்பைப் பெறுகின்றது….
2.குணத்தின் தன்மைகளும் மாறுகின்றது…!

விஞ்ஞான அறிவில் பார்க்கலாம்… கொடூர குணம் கொண்ட மிருகங்களைச் சாந்தமான மிருகமாக மாற்றுகின்றார்கள். பரிணாம வளர்ச்சியில் இப்படி வருகிறது…!

இதைப் போல நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அத்தனையும் நமக்குள் கலந்து…கலந்து கலவையாகிப் புதிய குணங்களாக அணுக்கள் உருவாகிறது. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாறாது காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் ஞானிகள் உணர்வை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்.

வீட்டிற்குள் தூசி வந்தால் மீண்டும் மீண்டும் அதைத் தூய்மையாக்கிக் கொண்டே இருப்பது போல்
1.அன்றாட வாழ்க்கையில் நமக்குள் நாம் நுகர நேரும் எல்லாக் குணங்களுக்குள்ளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

அவ்வாறு இணைத்தால் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளையும் ஒன்றாக்கிப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து பேரொளியாக நாம் மாற முடியும். அழியாத ஒளியின் சரீரம் பெறலாம்.

அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

agastya-rishi-pindam.jpg

அகஸ்தியன் ஆதியிலே வெளிப்படுத்திய “உண்மையான சக்திகளை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான்.

ஏனென்றால் அவனுடைய தாய் காடுங்களில் வாழ்ந்து வரும் நிலையில் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மற்ற மிருகங்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல தாவர இனங்களையும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தன் உடலிலே அரைத்துப் பூசிக் கொண்டது.

தன் உடலிலே பூசிய அந்தத் தாவர இனங்களின் மணங்களை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது இரத்தத்தின் வழியாகக் கருவிலிருக்கும் சிசுவுக்கும் போய்ச் சேர்கின்றது.

அத்தகைய சத்துக்களைப் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்தபின் வானத்தை நோக்கிப் பார்த்துப் படுத்திருக்கின்றது. ஆனால் சூரியனுக்குள் நடக்கும் அதிசயங்களைப் பார்க்கின்றது… அந்த உணர்வை நுகர்கின்றது.

ஏனென்றால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் “சூரியன் கடவுளாக வருகிறான்…!” என்று சூரியனை அக்காலத்தில் வணங்கியவர்கள்.

அது விஷத்தின் தன்மை உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த சக்தியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குழந்தையால் பார்க்க முடிகின்றது.

அவர்கள் சூரியனைக் கடவுள் என்று வணங்கினார்கள். இங்கே அந்தச் சூரியனின் அதிசயங்களைக் காணுகின்றது இந்தக் குழந்தை.

1.இருப்பினும் இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையபடும் போது
2.அகஸ்தியன் அருகிலே வரும் எந்த விஷ ஜந்தும் மற்ற மிருகங்களும் அவனைக் கண்டு அது அஞ்சியே நிற்கின்றது
3.இதைக் கண்ணுற்ற தாயும் தந்தையும் இது கடவுளின் அவதாரம் என்ற நிலைகளில் அந்தக் குழந்தையைப் போற்றித் துதித்தார்கள்.
4.அங்கிருந்த அந்தக் காட்டுவாசி மக்களும் குழந்தையைக் கண்டு அதிசயக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தக் காலங்களில் மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள இந்த மனிதனுக்கு ஒரு சிறு புத்தி உண்டு.

தன் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தான் கண்டுபிடித்த உணர்வைக் கொடுப்பார்கள். அடுத்தவர்களுக்குக் காண்பிக்க மாட்டார்கள். இதைப் போன்ற நிலைகள் இன்றும் உண்டு… அன்றும் உண்டு…!

ஆகவே அந்த அகஸ்தியன் குடும்பத்தில் மட்டும் இந்த நிலைகள் பெற்றபின் அந்தச் சுற்றுள்ள வட்டாரங்கள் அனைத்தும் இதனுடைய அதிசயங்களைப் பார்க்கின்றது. இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.

இருந்தாலும் அந்த வட்டாரங்களில்
1.அகஸ்தியன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரப் போகும் போது
2.அதை உற்றுப் பார்த்தபின் இந்த உணர்வின் தன்மை
3.அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இது தெரிந்திடும் அறிவாக விளைகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகள் உற்றுப் பார்த்துக் கூர்மையாக பார்க்கப்படும்போது “இவன் காணும் அதிசயங்கள்…” மற்றவர்களுக்கும் இந்த உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டும் நிலை பெறுகின்றது.

அன்று அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த ஆற்றல்கள் இன்றும் உண்டு. அதை எல்லோரும் பெற முடியும்.

அதற்காக வேண்டித்தான் அந்த அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும் பகுதி நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்து வந்தது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சுமார் பத்து வருடம் காடு மேடெல்லாம் அலைந்தது.

1.அகஸ்தியர் எந்தப் பகுதிக்குச் சென்றாரோ அந்தப் பகுதி எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.அவர் பதித்த அந்த உணர்வினை அங்கங்கு சென்று அதைப் பதிவாக்கியபின்
3.எது உண்மை…? எது பொய்…? என்ற நிலையில் அறியும் அந்த பருவத்தைக் கொடுத்தார்.

இன்று நீங்கள் எல்லோரும் அதை நுகர முடியும்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு அந்த அகஸ்தியனை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்தால் அதைப் பெற முடியும்.

அதை நுகர்வதற்குதான் மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வுகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

கை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…? எப்படி நீக்குவது…?

Health bliss

கை கால் வலி மூட்டு வலி எதனால் வருகிறது…? எப்படி நீக்குவது…?

அடுத்தவரிடம் கஷ்டத்தைக் கேtகும்போது கேட்பபவருக்குக் கைக் கால் குடைச்சல். வீட்டில் அமர்ந்து கேட்டால் கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம்.

பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள். அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்துப் பேசினார்களோ அங்கேதான் அமர்ந்துப் பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்தவுடன் இந்த இராமாயணம் தான்…! சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்…? என்பார்கள்.

ஆக இந்த உணர்வுகள் அவர்களைக் கண்டவுடன் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும். அதே சமயத்தில் காதிலும் கேட்போம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம்.

வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தாலும் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலைவலி எல்லாம் வந்துவிடும். அப்புறம் டாக்டரிடம்தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தால் உடனே எழுந்திருந்து விடலாம்.
1.ஆனால் அடிக்கடி சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.உடலுக்குள் அங்கங்கே விஷம் தேங்கி நிற்கும்.
3.பேசிய சங்கட உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் எல்லாம் இந்தப் பிராணவாயு நாம் மூச்சு எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும்.

இந்த இடத்தில் தடைப்பட்டால் என்ன ஆகும்…?

நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் சீராகத் துடிக்க வேண்டும். இந்தச் சங்கடமும் சலிப்பும் போய் மோதியவுடன் அந்த இடத்தில் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.
1.அது தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி நடக்க முடியாமல் கூட வரும்.
2.நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படி வலி வரும்.
3.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.
4.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.
5.அந்த விஷமான தன்மைகள் பலவீனப்படுத்தும்.
6.நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும்.

சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்மசுத்தி செய்து வாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். எத்தொழிலே முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும். நாளைய விஞ்ஞான அழிவுகளில் இருந்து வரக்கூடிய சில விஷத் தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ளவும் உதவும். சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சயப்படுத்தி விடாதீர்கள்.

ஆகையினாலே வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானமிருங்கள். இறந்தவர்களுடைய உயிராத்மாக்காளை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேர்ந்து அந்த உயிராத்மா அது ஒளிசரீரம் பெற வேண்டுமென்று விண் செலுத்துங்கள்.

அவசியம் இதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலிலிருக்கிறது. இந்த முறைப்படி இந்தத் தியானத்தைச் செய்து வாருங்கள்.

பௌர்ணமி தியானத்தில் எல்லாம் உங்களுக்கு அந்தச் சக்தியை அதிகமாகக் கொடுக்கிறோம். உங்கள் புலனறிவுக்கு விண்ணை விட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு அந்த விண்ணுடன் தொடர்புக் கொள்ள வைக்கிறோம்.

அதே சமயம் இந்த இறந்தவர்களின் உயிராத்மாவை நீங்கள் எண்ணி உந்தி அங்கே தள்ள வேண்டும். விஞ்ஞானி இராக்கெட்டைச் செலுத்தி அதற்குள் மனிதனை அனுப்பி இயந்திரத்தை வைத்து இங்கிருந்தே கம்ப்யூட்டர் அலை வரிசையை பார்க்கிறான். அங்கிருக்கக்கூடிய செய்தியை ஆண்டனா வைத்து இழுக்கிறான்.

அதே மாதிரி இறந்த நம் முன்னோர்களை விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திவிட்டு
1.நம் ஆண்டனா… கண் இருக்கிறது.
2.உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அங்கே ஏங்குங்கள்…. கேளுங்கள்.
3.மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை எடுங்கள்.
4.தெரிந்து எடுப்பதில்லை… தெரியாமலே எடுக்கலாம்…!
5.ரேடியோ அலைவரிசையைத் திருப்புவது போன்று லேசாகக் கொடுக்கிறோம்.

“ஆகாயச் சித்தனின் அருள் பெற வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

siddhar agastyar.jpg

“ஆகாயச் சித்தனின் அருள் பெற வேண்டும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறவிகள் ஏழு என்று கூறுவதே தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நிலம் வாழ் ஊர்ந்திடும் உயிரினங்கள், உலவிடும் மிருகங்கள், பறக்கும் இனங்கள், மனிதன், தெய்வப் பிறவி..! இவை அனைத்தும் பொதுச் சொல்லாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திடும் இயற்கையின் சுதியில் உயிர் தொகைகள் வாழ்ந்திடும் செயலைக் குறிப்பது ஆகும்

1.ஒவ்வொரு உயிரும் இந்த ஏழு பிறவியில் எதிலே பிறப்புக்கு வந்தாலும்
2.அந்தப் பிறவியிலேயே எண்ணிலடங்காத பிறப்புக்கு வந்திடவும் கூடும்.
3.எடுத்துக் கொண்டிட குணங்களின் வலுவால் பிறிதொன்றில் அகப்பட்டே உழலவும் கூடும்.

ஆனால் விவாதம் புரிகின்றவன் கூறுகின்றான்… மனிதனாகப் பிறப்பதுவே ஏழு பிறவி என்று. மனிதனாக ஏழு பிறவிகள் பெற்று முடித்து விட்டால் “அடுத்த நிலை என்ன என்று உரைத்திட முடியுமோ…?”

1.மனிதன் சமமான எண்ணம் கொண்டு தன்னை உணர்ந்திடும் ஞானத்தால் அன்றி
2.வேறொன்றால் பிறவித் தளையை அகற்ற முடிந்திடாது.

எண்ணிறந்த பிறவிகள் பெற்றே இளைத்தேன்…! என்ற கூற்றுப்படி மனிதப் பிறவி அமைந்திடும் நிலை பற்றிச் சிவவாக்கியம் கூறுகின்ற “இறப்புக்குப் பின் மனிதன் பிறப்பது இல்லை… இல்லையே..! என்ற சூட்சமப் பொருளை அறிந்து கொண்டாயா…?

மனிதன் என்ற பிறவி வாய்க்கப் பெற்றாலும் தன்னை உணர்ந்திடும் வழியில் “பூரணமாக மனிதன்…” என்ற முழுமைத்துவம் பெற்றிடல் வேண்டும்.

மனிதன் என்ற பூரணத்துவ சக்தி பெற்றுவிட்டால் பிறப்பின் தளை அகன்றுவிடும்.
1.பிறவா நிலை பெறும் தெய்வத் தன்மை பெறுவதையே
2.மறை பொருளாகக் கூறுகின்றதப்பா சிவவாக்கியம்.
3.பிறவி நோயை அகற்ற முயல்பவனே மனிதன்.

பிறவி நோய் களைய வந்த சித்தர்கள் சரீர நோயகற்றும் மருத்துவன் செயலுக்கும் செயலாக்கினார்கள்.

தன் அனுபவ ஞானத்தால் சரீர பிம்பங்களை வெளிப்பார்வையில் நேருக்கு நேர் கண்ணுற்றுப் பார்த்து ஆய்ந்துரைத்த மருத்துவக் குறிப்புகளில் போகரால் உணர்த்தபட்ட ஏழு பிறவிகள் என்ற முறையுமுண்டு.

உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமச் செயலில் ஏழு பிறவியின் தொடர்களைப் பற்றி முழுவதையும் நாம் உரைத்து விட முடியாது. ஏனென்றால் சப்தரிஷிகளின் இரகசியங்கள் அனைத்தையும் சொல்லாகச் சொல்லி அதன் மூலமாக அறிந்திட முடியாது.
1.ஆகாயச் சித்தனின் அருள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.வான இயல் சூட்சமங்கள் அனைத்தையும் அறிவின் ஞானத்தால் அறிந்து கொண்டே உயர்ந்திட வேண்டும்.

போகர் தான் கண்ட மருத்துவ அனுபவத்தால் உரைத்த உண்மை என்ன என்றால் ஒருவர் உருவத்தைப் போல் எழுவர் உலகம் எங்கும் உண்டு. ஆனால் ஒருவர் பெற்ற வீரியம் மற்றொருவருக்கு அமைந்திடாது.

ஒருவரை ஒருவர் சந்தித்திடும் வாய்ப்பும் அமைந்திடாத தன்மையில் குரலின் ஒலி நாதத்தின் மாறுபாட்டை உணர்ந்திடும் சூட்சமத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆகாயச் சித்தனும் உரைத்திடப் போகின்றான். அவன் பரிசுத்தம் என்னும் பிரம்மத்தைப் பூண்டவனப்பா…!
1.சிந்தனையைத் தூண்டிடும் வினா ஒன்றைப் போட்டு விட்டேன்.
2.அதனின் ஈர்ப்பு நிலை பெற்றே “என்னை முந்திச் செல்ல…” என்றும் ஆசிகள்.

காரண காரியம் கசக்குமப்பா
கண்டு தெளிவுற்றவனுக்கு விண்டு புகட்டிட
ஈசனே வந்தாலும் ஏற்றிடாது
கருத்தொன்றும் மெய் ஒளி என்பான்
ஈசன் என்பான் மெய் ஞானி

கண்டுணர்ந்த மெய் ஞானிகள் உரைக்கும் உண்மைப் பொருள் கேட்பவனுக்குக் கசக்குமப்பா. அவ்வாறு கண்டு தெளிவுற்றவன் கொண்ட மெய் ஞான விழிப்பின் உண்மையின் பொருளை மாறுதலாக விண்டு உரைத்திட ஈசனே முயன்றிட்டாலும் அது முடியாதப்பா…!

ஏழு ஜென்மங்கள் உண்டா…?

Cycle of birth and death.jpg

ஏழு ஜென்மங்கள் உண்டா…? 

ஒரு மாட்டை நாம் வீட்டில் வளர்க்கின்றோம். உதாரணமாக ஒருவர் அந்த மாட்டைப் பார்த்து “அதை மிரட்டுகின்றார்…!” என்று வைத்துக் கொள்வோம்.

மாடு அவரைப் பார்த்த உடன் அந்த மிரட்டும் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு “மிரண்டு துள்ளும்…!”

ஆனால் அதே சமயத்தில் சாந்தமான நிலைகளில் அந்த மாட்டைப் பார்த்துப் பேசப்படும் போது “வாடா ராஜா… நீ இப்படிப் போ.. உட்கார்…! என்று சொல்லிப் பதிவாக்கினால் அந்த மாடு சாந்தமாக வரும். ஏனென்றால்
1.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகளும் எண்ணங்களும் மிகச் சக்தி வாய்ந்தது.
2.மற்றொன்றை இயக்கக் கூடிய சக்தி பெற்றது.

புலி மற்றதைப் பார்க்கும் போது கொடூர நிலை கொண்டு இயக்கப்படும் சக்தி பெற்றது. அதை நாம் நுகரப்படும் போது அஞ்சி ஓடுகின்றோம் அல்லவா…!

இதைப் போல மனிதன் கோபமான உணர்வுடன் பார்க்கப்படும் போது மாடு அந்த உணர்வை நுகர்ந்த பின் அதற்குள் வலுவாகின்றது. வலுவான பின் நம்மைக் கண்டு அஞ்சி ஓடும் உணர்வுகள் வந்து அதுவே கூர்மையாகின்றது.

அந்தக் கோபப்பட்டோரின் உணர்வுகள் மாட்டிற்குள் பதிவாகி விளைந்த பின் அந்த மாடு இறந்தாலும் அதே மனிதனின் உடலுக்குள் தான் போகும். (மாட்டின் உயிரான்மா கோபித்தோர் உணர்வின் வலிமையை எடுத்து மனித உணர்வுக்குள் வரும்)
1.மனித உடலுக்குள் வந்து
2.மனிதனாகப் பிறக்கும் கருத் தன்மை பெறுகின்றது.

மாட்டின் ஆன்மா கருவாகி இந்த உடலுக்குள் வரப்படும் போது இங்கே விளைந்து அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவின் தன்மை அடைகின்றது.

முதலில் அந்த மனிதர் கோபமாகப் பேசியிருந்தாலும் இந்த மாட்டுக்குள் விளைந்த கோப உணர்வுகள் இங்கே மீண்டும் தோன்றி இவருக்குள் வந்து இந்த உணர்வுகளைத் தூண்டி அதே உணர்ச்சியின் தன்மை கொண்ட மனிதனாக பிறக்கும் உருத் தன்மை பெறுகின்றது.

அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெற்றாலும் இந்த வீரிய உணர்வுகள் அதற்குள் பட்ட பின் அது பிறக்கும் போதே குழந்தையின் நுண்ணிய நாளங்களை அது இழந்துவிடும். பிறக்கும் போதே அந்தக் குழந்தை இறந்துவிடும்.

உங்களுக்குள் தெளிவாக்குவதற்காக மீண்டும் சொல்கிறோம்.
1.ஒருவர் கோபமான நிலையில் மாட்டை அதிவேகமாகத் தாக்கியிருந்தால்
2.அதனுடைய உணர்வுகளை எடுக்கப்படும் போது மாடு அந்த இறந்தபின்
3.யார் விரட்டினார்களோ அதே உடலுக்குள் வந்து அவருடைய உணர்வை எடுத்து இங்கே கருவாகும்.
4.மனிதனாகப் பிறக்கும் தகுதி ரொம்ப சீக்கிரமாக வருகின்றது.

இப்படி உருவான அந்தக் கருவின் உந்து வேகம் மற்றதைத் தள்ளிவிட்டு முதலில் கர்ப்பத்திற்கு வரும் தகுதியும் வருகின்றது. அப்படிப் பெற்றதனால் கருவிலேயே அதனுடைய நுண்ணிய நாளங்கள் இழந்து பிறக்கும் பொழுதே இறந்து விடுகின்றது.

இவையெல்லாம் இந்த உணர்வுகளுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

ஆக மாட்டிடம் கோபமாகப் பேசிய உணர்வுகள் இப்படி வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை இறந்து விடுகின்றது. அந்தக் குழந்தை இறந்து விட்டால் அந்தத் தாயின் ஈர்ப்புக்குள்ளே வந்து விடுகின்றது.

குழந்தை இறந்துவிட்டதே…! என்று தாய் பாசத்தால் எண்ணும் பொழுது அந்தக் குழந்தையின் உயிரான்மா தாயின் ஈர்ப்புக்குள் வந்து அது தன்னுடைய சுழற்சியில் இன்னொரு பிறவிக்கு வருகின்றது.

சாந்தம் கொண்டு இந்தப் பாசமான உணர்வுகள் அடுத்து வரப்போகும் போது அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது. இதில் இத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றது…!

ஆனால் அதே சமயத்தில் அந்த மாட்டைச் சாந்தமான நிலைகள் கொண்டு வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மாடு இறந்த பின் பாசமாகப் பழகிய அந்த மனித உடலுக்குள் மாட்டின் உயிரான்மா சென்று கருவாகி மனிதனாக உருபெரும் தகுதியைப் பெறுகின்றது.

இந்த உணர்ச்சிகள் அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நல்ல ஞானத்தின் நிலைகள் கொண்டு பிறக்கும் அந்தக் குழத்தையாக வருகின்றது.

இவர் வளர்ந்து கொண்டு இருந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் இவர் யாரிடம் நட்புடன் பண்பு கொண்டு அதிகமாகப் பழகுகின்றாறோ அந்த உடலை விட்டுச் சென்றபின் அந்தப் பண்பு கொண்ட மனிதனின் ஈர்ப்புக்குள் மாட்டின் உயிரான்மா செல்லும்.
1.பின் அதனுடைய வரிசைத் தொடரில் வளர்ச்சி பெற்று
2.ஏழு சரீரங்களுக்குச் சென்ற பின் அது மனித உருவைப் பெறும் தன்மையாக முழுமை பெறுகின்றது.
3.ஏழு ஜென்மங்கள் என்று சொல்வார்கள்.

இதையெல்லாம் ஞானிகள் தெள்ளத் தெளிவாக கண்டு உணர்ந்து உணர்த்திய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை உணர்த்துகின்றோம்.

 

நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றீர்கள் என்று சொல்வதே “பெருமைப்பட வேண்டியதும் புகழப்பட வேண்டியதும் ஆகும்…!”

blissful ADI PERUKKU

நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றீர்கள் என்று சொல்வதே “பெருமைப்பட வேண்டியதும் புகழப்பட வேண்டியதும் ஆகும்…!”

 

குருநாதர் சொன்னது…! குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, அதைப் போல குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம்.
1.நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்
2.உனக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணத்தை அந்த வைரத்தை,
3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய், அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

அவர்களிடமிருந்து மகிழ்ச்சியை நீ எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்…! என்ற நிலைகளை நமது குருநாதர் எமக்குச் சொன்னதினாலே நீங்கள் மகிழ்ச்சியான உணர்வை எப்பொழுது வெளிப்படுத்துகின்றீர்களோ அதில்தான் யாம் (ஞானகுரு) சொர்க்கத்தைக் காண்கிறோம்.

எப்பொழுதுமே நீங்கள் மகிழ்ந்து
1.நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்
2.மகிழ்ச்சியான நிலையில் தொழில் செய்கிறோம்
3.மகிழ்ச்சியான நிலைகளில் வாழ்கிறோம் என்று சொல்வதுதான் எமக்குப் பெருமை.

அந்த பெருமையைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேனே தவிர எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல.

உங்களிடம் தவறிருந்தால் அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். அதற்காக வேண்டித் தவறை வளர்க்கச் சென்றால் அப்பொழுது யாம் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம்.
1.எப்படி இருந்தால் என்ன…?
2.நீங்கள் எம்மை மதித்தால் போதும் என்ற இந்த மதிப்பு அல்ல…!

நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக நஇருக்கிறீர்கள் என்றால் அதுதான் எமக்கு பெருமையும் புகழும்…! இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எம்மைப் பற்றிச் சொல்லி இப்படி இருக்கிறார்,… அப்படி இருக்கிறார்…! என்று புகழ்ந்து பேசுவதை யாம் எதிர்ப்பார்க்கவவில்லை.

அதே சமயத்தில் நாம் யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக்கூடாது.
1.அங்கே குறைபாடுகள் இருந்தாலும் நாம் அணுகி
2.அதை நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ அதற்கு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சொல்லிப் பார்ப்போம்… முடியவில்லை…! என்கிற பொழுது அது அவருடைய சந்தர்ப்பம். அதற்காக வேண்டி.. முடியவில்லையே… அவர் தவறு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஏனென்றால் அவர்கள் இப்படித் தவறு செய்கிறார்களே என்று நாம் எண்ணினோமானால் அவர்களுடைய உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம்.

அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன…?

யார் எதைப் பேசினாலும் குறைத்துப் பேசினாலும்
1.வாழ்க்கையிலே அவர்கள் உயர வேண்டும்
2.அவர்களை அறியாமல் அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா…!” என்று
3.உங்களுக்குள் நின்று உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை எண்ணிச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வு உங்களுக்குள் விளைகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செய்தோமானால் அவர்களை அடிக்கடி எண்ணத் தொடங்கினோமேயானால் அவர்களுக்கும் நிச்சயம் நல்லது உண்டாகும். இதைத்தான் யாம் உங்களிடம் எதிர்பார்ப்பது.

தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

Father day mother day.jpg

தாய் தந்தையரின் ஆசி பெற்று நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்

நமக்கு கடவுள் யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நமது அன்னை தந்தை உயிரே ஈசன். அவர்களுடைய எண்ணங்களால் தான் தனக்குள் எடுத்து நம்மை உருவாக்கினர்.

தாய் தந்தையர் கடவுளாக இருந்து தெய்வமாக நம்மைக் காத்தார்கள்…! எப்படி…?
1.நாம் பாம்பாக இருந்திருப்போம் அல்லது கொசுவாக இருந்து அவர்களின் இரத்தத்தை குடித்திருப்போம்.
2.அடித்த பின் அவர்கள் உடலுக்குள் போயிருப்போம்.
3.வீட்டில் எறும்பு தொல்லை கொடுத்தது என்று நசுக்கி இருப்பார்கள்.
4.நம் உயிர் அந்த உடலுக்குள் போயிருக்கும். அந்த உடலிலிருக்கும் உணர்வை எடுத்து மனிதனாக பிறக்கும் தகுதி பெறும்.

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கியது யார்…? கடவுள் எங்கே இருக்கின்றான்…? நமது தாய் தந்தை தான் கடவுள். நம்மை மனிதனாக உருவாக்கிய அவர்கள் தான் கடவுள். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் மனிதன் ஆனார்கள். பல இன்னல்களைக் கடந்து வந்து இன்னலிலிருந்து மீண்டிடும் நிலை பெற்றார்கள். இன்னலிலிருந்து மீள்வதற்காக ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அந்த உயிர் அங்கே சென்றது. மனிதனாக உருவானது.

ஆகவே நமக்கு மனித உரு கொடுத்தது யார்..? நம்முடைய தாய் தான். தெய்வமாக காத்ததும் நம் தாய் தான்.

கர்ப்பிணியாக இருப்பவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்…? குழந்தை பிறந்த பின் அந்தத் படுகிர அவஸ்தையைப் பார்த்தால் தெரியும். குழந்தைக்குத் தலை வலிக்கிறது என்றால் தாய் என்ன செய்கிறது…?
1.உடனே பதறுகின்றது… குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? என்ற உணர்வை நுகர்கின்றது,
2.காக்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
3.அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலேயும் பதிவாயிருக்கின்றது.

குழந்தைப் பருவத்தில் அதை எண்ண முடியவில்லை என்றாலும் வளர்ந்த பின் தாயின் காக்கும் உணர்வை எண்ணினால் எத்தகைய தீமையாக இருந்தாலும் நாம் காக்கப்படுவோம்.

“தாயின் உணர்வு நம்மைக் காக்கும்…!” என்ற நிலையை நாம் மறந்தே விட்டோம். விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் கூறப்படுகின்றது.

இன்று தாயைத் திட்டுவதும் பேய் என்று விரட்டுவதும் அவஸ்தைப் படச் செய்வதும் தான் பெறும் பகுதிக் குடும்பங்களில் இருக்கிறது.

வேதங்களைக் கற்றுவந்த பின் யாக சாலைகளில் மந்திரங்கள் ஓதி பல உணர்வுகளைத் தீயிலே போட்டுப் பொசுக்கிப் பிற ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யம் ஆக்கி மந்திரமாக்கிக் கொண்டு நான் கடவுளையே கை வசம் வைத்திருக்கிறேன் என்று தான் உலக மதங்கள் கூறுகின்றது.

இதிலிருந்தெல்லாம் நாம் என்று மீளப்போகிறோம். முழுமையாக அழியும் தருணத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழவேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

இன்று கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுகுண்டாகவும் ஹைட்ரஜன் குண்டுகளாகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பரீட்சாந்திரமாக விண்வெளியிலும் வெடிக்கச் செய்துள்ளார்கள்.

வான் வீதியில் உள்ள நிலைகளைத் தெரிந்து கொள்ள இராக்கெட்டுகளை உந்து விசையால் அனுப்புகிறார்கள். அவைகள் வெளிப்படுத்திய கதிரியக்கச் சக்திகள் அனைத்தும் அங்கேயும் கலக்கப்பட்டு விட்டது.
1.சூரியன் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் போது
2.நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அந்த விஷக் கதிரியக்கங்கள் கலந்து விட்டது.

உதாரணமாக இரண்டு மின்சாரம் (PHAES TO PHASE) ஒன்றானால் என்ன ஆகும்…? வீட்டில் உள்ள பல்புகள் பீஸ் ஆகிறது. அதைப் போன்று மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் சிதறப் போகின்றது. அந்த ஒரு நொடிக்குள் மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்.

அதாவது மனித உடலாக இருந்தாலும் சிந்தனைகள் சிதறி மிருகங்களைப் போன்ற இயக்கமாகிவிடும். (ஏற்கனவே சில இடங்களில் அப்படித்தான் இருக்கிறது)

இந்த நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஒரு நொடிக்குள் மாறி விடுகிறது. நமக்கே தெரியாது. மனிதனுக்கு மனிதன் கொல்லும் நிலை வருகின்றது.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை எடுப்பது போல் விஷமான உணர்வுகள் கலந்திருக்கும் இந்த உலகிலிருந்து மீண்டிட அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய தீமைகள் வருவதற்கு முன் நுகர்ந்து பழகுங்கள்.

காலையில் விழித்தவுடன் வானை நோக்கி ஏங்கித் தன் கணவருக்கு/மனைவிக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அந்த அருள் என்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருவருமே எண்ண வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் என்றுமே தீமைகளைப் பற்றிடாமல் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

ஞானத்தின் பாதையில் தன்னை (ஈஸ்வரபட்டரை) எப்படி முந்திச் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ESWARAPATTAYA GURU.jpg

ஞானத்தின் பாதையில் தன்னை (ஈஸ்வரபட்டரை) எப்படி முந்திச் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!