நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

meditation-results.jpg

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது. அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால் அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை உந்தித் தள்ளி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்த தீமை என்ற உணர்வுகளை இப்ப நாம் என்ன செய்கிறோம்.

நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால் அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகிவிடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நம் ஆன்மாவில் அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
1.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
2.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் ஏற்கனவே பதிவானது அழிவதில்லை. பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

இராமகிருஷ்ண பரமகம்சர் கூறிய முக்கியமான தத்துவம்

Ramakrisna Paramahamsar

இராமகிருஷ்ண பரமகம்சர் கூறிய முக்கியமான தத்துவம் 

 

ஒரு சமயம் இராமகிருஷ்ணர் காலாற நடந்து வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.

ஏனென்றால் இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர். ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக் கூறுகிறார்.

இவர் அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு என்ன…? என்று அறிகின்றார்.

1.அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…?
2.எதனை அறிகின்றார்…?
3.எதனைப் பின்பற்றுகின்றார்…? என்று அவரைச் சூழ்ந்திருந்த, பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.

மாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது, இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.

அப்பொழுது, “ஐயோ… இருட்டாகிவிட்டதே…! விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே…!” என்று ஒருவர் சொன்னார்.

இதனால் அவர்களுடன் வந்த மந்திரவாதி ஒருவர் “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!’ என்று சொன்னவுடன் ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது. இதன் உணர்வை எனக்கு (ஞானகுரு) அப்படியே காண்பித்தார் ஈஸ்வரபட்டர்.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது, இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.
1.நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை…!
2.என் உடலில் அக வெளிச்சமும்…
3.இருளை அகற்றி, நான் செயல்படும் “முன் சிந்தனை” என்ற
4.இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…!” என்று சொன்னவுடன்
5.,கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக் காண்பித்தார் ஈஸ்வரபட்டர். இந்த உணர்வின் ஒலி அலைகள் பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும்போது அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று ஏவல் செய்தார்.

எந்த வாயினால் கூறினாரோ… அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து அவரை உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.

உண்மைகளைத் தெரிந்து கொண்டபின், மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்
1.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று,
2.முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார், இராமகிருஷ்ண பரமகம்சர்

ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம், உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்..! உயிருடன் ஒன்றிய உணர்வுகள், நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும்.
1.இந்த உடல் கழியக் கூடியது…!
2.இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்று பல முறை எடுத்துக் கூறியும்,
3.கேட்காமல் எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழவேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர். இராமகிருஷ்ண பரமகம்சர், தவறேதும் செய்யவில்லை.

ஆனால் மந்திரவாதி பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார் என்று எண்ணி அவர் உணவுகூட உண்ண முடியாதபடி செய்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று சொன்னால், யாரும் கேட்கவில்லை.

பரமகம்சர் இறந்தார். ஆனால், அவருக்குக் கேன்சர் என்றுதான் மற்றவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர் என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.

தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

Eswara

தேடிச் சென்றால்… நம்மை நாடி வரும்… கோடிக் கோடி…

 

“நீ (ஞானகுரு) வேதனையை அறிகின்றாய்…!: அதே போல நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது..?

உதாரணமாக ஒரு பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா…? என்று பார்க்கலாம்,

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஈஸ்வரபட்டர் எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு, அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மை, “எது…?”

“அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்…!”

உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து நான் அடிக்கும்.. அதாவது அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை,
1.என் (ஈஸ்வரபட்டர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்
2.அந்த நினைவால் கலந்த உணர்வும் உன்னுடன் எப்படி அது சேர்ந்து
3.அண்டத்தை எப்படி அறிகின்றாய் என்று நீ பார்…! என்று குரு காட்டுகின்றார்.
4.நீ அண்டத்தை அறிந்துவிடு…!

மனிதனின் உணர்வுக்குள் நீ அருள் ஞானத்தைப் சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி, நுகர்ந்தறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால் அவனை மாற்ற முடியாது”.

1.ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது.
2.அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,
3.மாறாத நிலைகள் கொண்டு நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்
4.ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுத்து “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்றும் இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள் என்று அவர் சொல்வார்,

1.“கோடி…கோடி” “கோடி….கோடி” “கோடி…கோடி”, என்ற நிலையில்
2.தேடித் தேடி… தேடித் தேடி…! இதை நான் பெற்றேன்
3.கோடி…கோடி என்ற நிலைகளில் தேடித் தேடித் தேடிச் சென்று பெற்றேன்
4.உன்னை நாடி…நாடி…நாடி வருகின்றது…!
5.ஆனால் நீ தேடித் தேடி அதைப் பெறவேண்டும்…! என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால் இப்படி என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். இது அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்ற நிலையைத்தான் இந்த கோடியின் நிலைகளை
1.நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக,
2.குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
3.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
4.அவர் (ஈஸ்வரபட்டர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில்
5.நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

பிரம்ம அட்சரனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Bluish violet Poari rays

பிரம்ம அட்சரனைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதி சக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.(சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்)

செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொண்டிட இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

1.இவற்றிலிருந்து நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.

மரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…?

polaris lights.jpg

மரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது…?

பன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.

இதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது
1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி
2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக…
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர…
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.

அங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலும் சரி… அகண்ட அண்டத்திலும் சரி… அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்….!”

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்
1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.
2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்
3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.

ஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய் பிறை என்ற நிலை வருகின்றது.

ஆரம்பத்தில் சூரியன் தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

சூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதனான நிலையில் அறிந்து… உணர்ந்து… தெளிந்து… தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்…
1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்
2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக ஆக்கிவிடுகிறது.

ஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி
1.இந்த உடலைப் பிளந்து விட்டு
2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

சூரியன் அழியலாம்… ஆனால் உயிரணுக்வாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.

1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்
2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு
3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு
4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.

அந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

குரு என்றால் என்ன…?

om-eswara-gurudev-judge

குரு என்றால் என்ன…?

 

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது. இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்.

குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்…?

உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால், அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கேயாகும்.

எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள், உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டதுதான் இந்த உயிர்.

பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு, நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.
1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால்
2.அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
3.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள், நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும் என்றார்.

1.பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து
2.அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ
3.அதைப் போல யானையின் மணத்தை நுகர்ந்து கொள்.
4.திரும்பத் திரும்ப நுகர்ந்து, அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
5.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும்,
6.அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி
7.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.

காட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அனுபவத்தைச் சொல்லுகின்றேன்.

நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை. அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.

சுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

kundalini sakthi rakasiyam

சுவாச நாடிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

கால நேரம் இரவு பகல் என்ற செயல்களை மனிதன் அறிந்து கொள்ள விநாடி நிமிடம் மணி என்று அறிவுப் பூர்வமாக உபகரணங்கள் கொண்டு காலத்தைக் கணித்தாலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தன் காலத்தை எப்படிக் கணித்தான்…? எதைக் கொண்டு காட்டினான்…?

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தை அளந்தான்.
1.பிண்டமாகிய இந்தச் சரீரத்தில்
2.சுவாசத்தின் ஓட்ட கதியில் உயர் ஞானத்தைச் செலுத்தி அறிந்து கொண்டான்.

தன்னை உணர்ந்த நிலையில் இந்தச் சரீரத்தின் உள்ளே நடக்கும் சகல காரியங்கள் கொண்டே வான இயலையும் உலக வாழ்க்கைக்குகந்த நல் நெறிகளையும் உலகினுக்கு ஈந்தான்.

நாழிகை என்று அன்று காட்டியது சொல் நாமத்தில் தான் இன்றைய மாறுபாடு. அறுபது நாழிகையை ஒரு நாள் என்று தன் சுவாசத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தான் அன்றைய சித்தன்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்கு பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

மூலம் குறி நாபி இருதயம் கண்டம் அறுகொண கருவறை உச்சி என்றும் உச்சியின் மேல் பகுதி சிரசைக் கடந்த ஆகாயம் என்ற சூட்சமச் செயல்களை உணர்வதோடு அல்லாமல்
1.இந்தச் சரீரத்தில் ஓடிடும் சகல நாடிகளையும் அறிந்து
2.அவற்றில் பத்தைத் தெளிந்து
3.அவற்றிலும் சிறப்பு மூன்று என்று காற்று நூலை அறிந்துணர்ந்தான் சித்தன்.

நோய்களை நீக்க மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…?

Kideny meditation.jpg

நோய்களை நீக்க மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…?

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை நாம் கேட்டறிந்து நுகர்கின்றோம். நமது சிரசின் பாகம் உயிர் இருக்கும் பாகம் ஈஸ்வரலோகமாகின்றது. நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) அனைத்தும் அங்கே தான் ஜீவன் பெறுகிறது.

நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கருவாகப்படும் போது இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் எந்த உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தோமோ அதன் உணர்வின் தன்மை கருவாக்கி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அந்த வாழ்க்கை வாழச் செய்கிறது.

காரணம் நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்து நாம் பரிவுடன் கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம். அவரைப் பற்றி எண்ணி மீண்டும் மீண்டும் அதை நாம் நுகரப்படும் போது அதனின் கருக்கள் நம் உடல்களிலே இந்திரலோகமாக உரு பெறுகின்றது.

அந்த நோயாளியின் உடலில் எந்த நோயின் அணுக்கள் உருவாகி அவர் துயரப்பட அது காரணமானதோ அதே உணர்வு கொண்டு நம் உடலிலும் அத்தகைய நோயின் அணுக்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

நாம் இப்படிப் பலருடைய நோய்களின் உணர்வுகளைக் கவர நேர்ந்தால் அதன் வழி கொண்டு நமக்குள் அந்த அணுக்கள் பெருக்கம் அடைந்து விடுகின்றது.
1.அது பிரம்மலோகமாக மாறிவிடுகின்றது.
2.தீமைகளை உருவாக்கும் அணுவின் தன்மையை நமக்குள் பெருக்கும் தன்மை வந்து விடுகின்றது.

இவ்வாறு தீமைகளை உருவாக்கும் தன்மை அதிகரிக்கும் போது ஒரு சிலரைப் பார்க்கலாம் சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும். ஆஸ்த்மா நோய் இருக்கும். T.B. இருக்கும்.

1.ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்புக்கு உண்டான மருந்தைச் சாப்பிட்டால் அது ஆஸ்த்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்த்மா நோய்க்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்புக்கு ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்திற்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் அந்த இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது.

இப்படித் தனித்தனித் தன்மை ஆகி நம் உடலுக்குள் பலவிதமான போர் முறைகளை ஆரம்பித்து விடுகிறது. எத்தகைய மருந்துக்கும் அது கட்டுபடாத நிலையாகின்றது.

அந்த மூன்றுக்கும் சேர்த்து மருந்துகளைக் கொடுக்கும்போது நமது கிட்னி – சிறுநீரகங்கள் என்ன ஆகின்றது…?

விஷம் கலந்த கடுமையான மருந்துகளை நாம் சாப்பிடும்போது கிட்னி இந்த விஷத்தையைப் பிரிக்கும் தன்மை இழந்து உப்புச் சத்தாக மாறி விடுகிறது.

உப்புச் சத்தும் சரக்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இதே போன்ற பல நிலைகள் வரப்படும்போது மனிதனுடைய உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தையும் நலிவடையச் செய்துவிடுகின்றது.

மனித உடலில் சீராகச் செயல்படும் உறுப்புகளை இயக்கும் அந்த அணுக்கள் பழுதடையும் போது அதில் விளைந்த நுண் அணுக்களின் தன்மை விஷம் கொண்டதாக உயிராத்மாவில் சேர்கின்றது.

ஆகவே இந்த உடலில் நல்ல அணுக்கள் வளரமுடியாத தன்மை ஏற்படுகின்றது. அப்படி வரப்படும்போது தான் உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது. மீண்டும் மனிதனாகப் பிறக்கும் தகுதியை இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் வாழ்க்கையில் எந்த நோயாளியைச் சந்தித்தாலும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தாலும் அதை உடனடியாக மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி நோயாளிகளைப் பற்றி நுகர்ந்திருந்தாலும் அவர்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட வேதனையான உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி தொந்திரவு உள்ளவர்கள் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கிட்னிக்குள் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும்.
1.நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும்.
2.உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் அதை உருவாக்கிய அணுக்களும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களிடம் யாம் கேட்கும் வரம்

Gnanaguru - Venugopalswami

உங்களிடம் யாம் கேட்கும் வரம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.அண்ட வீதியெல்லாம் தேடி அலைந்து,
2.அந்த சக்திகளை அந்தந்த காலத்திற்குத் தக்கவாறு அதை யாம் (ஞானகுரு) சுவாசித்து
3.என்னைச் சந்திப்போர் அனைவருடைய உயிரையும் கடவுளாக மதித்து
4.இந்த உணர்வின் மணமான நிலைகளை ஆராதனை செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த ஆராதனையினுடைய மணத்தைத்தான் நீங்கள் எங்கிருந்தாலும் பார்க்கின்றீர்கள், நீங்கள் ஆலயத்தில் சென்று ஆராதனை செய்கின்றீர்கள். ஆனால் உங்கள் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு எமது குருநாதர் அருள் வழி கொண்டு உங்களுக்கு அந்த ஆராதனை செய்கின்றேன்.

அப்பொழுது அந்த மணத்தை நுகரும்போது தான் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியின் உணர்வாகவே நீங்கள் வெளியிடும் மூச்சலைகளை யாம் சுலபமாகப் பெற முடிகின்றது.

நீங்கள் “நான் நன்றாக இருக்கின்றேன்…!” என்று சொல்லும் போது அங்கே மகிழ்ச்சியான மணத்தை உயிரான ஆண்டவனிடமிருந்து நல்ல மணத்தை நல்ல வரத்தை வாங்குகின்றோம்,

1.மறந்திட வேண்டாம் உங்களிடமிருந்து தான் நல்ல வரத்தை வாங்குகின்றோம்.
2.காரணம் அந்த மகிழ்ச்சியான உணர்வு ஆராதனை கொடுக்கப்படும்போது
3.உங்கள் உயிரான நிலைகள் அது சமைத்து அந்த மகிழ்ச்சியான உணர்வலைகளைப் பரப்பச் செய்கின்றது
4.அதை யாம் பெறுகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் எமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு பேரண்டத்தில் அலைந்து திரிந்து உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி அந்த நறுமணமான நிலையும், அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மையும் அதைச் சுவாசித்து அதன் உணர்வுகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற ஏக்கத்துடன் பிரார்த்திக் கொண்டிருக்கின்றோம்,

எமது பிரார்த்தனை இதுதான்…! இந்த நிலைகள் கொண்டு இந்த மணத்தை, உங்களுக்குள் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிற உணர்வின் தன்மையை அதை இன்புறச் செய்வதற்கு யாம் பிரார்த்தனை செய்கின்றோம். ஏனென்றால் உயிரான கடவுள் அவன் சிருஷ்டித்த ஆலயம் அது.

உங்களுக்கு இந்த உயர்ந்த சுவாசத்தின் நிலைகளைப் பெறச் செய்ய யாம் பிரார்த்திக்கின்றோம்.

நீங்களும் அந்த நிலைகொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டுமென்று நினைவைச் செலுத்தினால்தான்
1.உங்கள் கதவு திறக்கும்,
2.அப்பொழுது தான் அந்த மணத்தின் தன்மைகள் அங்கே பிறக்கும்.
3.அதனால், அங்கே கிடைக்கக்கூடிய இந்த ஆற்றல் மிக்க சக்திகள் உங்களிலே துன்பத்தைப் போக்க உதவும்.

 

மரகத வண்ணப் பஞ்ச லிங்கங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

emerald panchalingam

மரகத வண்ணப் பஞ்ச லிங்கங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்…!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

நம் பூமியின் தொடருக்கும் இதே தன்மைகள் உண்டு.

பூமியின் காந்த ஈர்ப்பின் தொடர்பில் சூரியன் உள்ளிட்ட மற்ற கோளங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குள் இயற்கைக் கனி வளங்களைச் சுவாசத்தின் மூலம் உள் நிறைத்தே வளர்ச்சி பெற்று வருகிறது.

அந்த ஈர்ப்பு நிலைகள் பூமிக்குள் எப்படி எங்கே உள்ளது…?

கடலினுள் இருந்தே எழுந்து லிங்க வடிவில் சுயம்பாகக் காந்தப் பாறைக்குள் மரகத வண்ண வடிவாகத் தோன்றிடும் தன்மைகளில் பூமித் தாயின் அத்தகைய ஈர்ப்பு சக்திகள் செயல்படுகின்றது.

1.சூரியன் ஒளிக்கிரணங்கள் பாய்ந்திடும் செயலிலும்
2.சுழல் வேகம் கொண்டு மேலிருந்து அந்தப் பாறைகளின் மீது விழும் நீர்ச் சக்தியின் தொடர்பிலும்
3.அதனால் ஏற்படும் “அதீத காந்தப்புலம்..”
4.பூமியின் பல்வேறு இடங்களில் இயற்கையாகச் செயல் கொள்ளும் இரகசியத் தன்மைகளில்
5.பாரதத் தேசத்தின் தென் கோடியில் மகரிஷிகளால் சூழப் பெற்ற ஓர் இடம் உண்டு.

பூமியின் கரைப்பிளவுகளில் உள் மறைவாக கடல் பூமியில் உள் நுழைந்து கடல் பகுதியிலிருந்து காணும் பொழுது வெளியிலே தெரியாதபடி “மரகத வண்ணப் பஞ்சலிங்கங்கள் உண்டு…!”

கடலினுள் அமைந்த அந்த ஐந்து மரகத லிங்கங்களில் மையத்தில் அமைந்த லிங்கத்தின் மீதே மலை உச்சியிலிருந்து விழும் நீர் விழுந்து மற்ற லிங்கங்களின் மீது மோதிடும் செயலில்
1.சூரிய ஒளிக்கதிர்களினால் பற்பல வண்ணங்கள் ஏற்படும் இடத்தின் காந்தப் புலமாக
2.அந்த இடமே மகரிஷிகளால் சூழப் பெற்றுள்ளது.

மலையின் உச்சியில் சங்கு வடிவமாக அமைந்துள்ள இயற்கை ஊற்றில் நீர் பீறிட்டு மேலே கிளம்பி கடலினுள் அமையப் பெற்ற மரகத லிங்கம் மீது விழும் ஊற்று நீரும் தனித்துவத் தன்மை கொண்டது.

யாரும் நெருங்கிடாத வண்ணம் இயற்கையின் அமைப்பில் மறைபொருளாக உள்ளது.
1.இயற்கை வனப்பால் ஆகாயத்தில் இருந்தும் காண முடியாது.
2.தரை மார்க்கமாகப் பகலிலும் இருளாகத் தோன்றும் கானகத்தினுள் விலங்கினங்களைக் கடந்து சென்றாலும் மரத்தில் வாழும் இரு இனத்தவரால் தடுக்கப்படும் ஓர் சூட்சமம் உள்ளது.
3.ஞானிகள் அறிவர் ஞயம்பட உரைத்தலை.

அரபிக் கடல் தவழும் கேரளத்தின் தென் கோடியில் மேற்கு மழைத் தொடர்ச்சியில் உள்ளது அந்த இடம்.