நமக்கு முன்னாடி வைத்துக் கொள்ள வேண்டிய நல்ல உணர்வு எது…?

Polaris soul protection

நமக்கு முன்னாடி வைத்துக் கொள்ள வேண்டிய நல்ல உணர்வு எது…?

1.நம்முடைய சொல் என்றுமே பிறரை மகிழ்ச்சி அடைய வைக்க வேண்டும்
2.நம்மைப் பார்ப்போர் அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்து
3.அதை நமக்கு முன்னாடி வைத்துக் கொண்டால் எத்தகைய பகைமை உணர்வும் தீமை செய்யும் உணர்வும் நம்மைச் சாடாது.

இந்த வலுவான உணர்வை நாம் எடுக்கக் கற்றுக் கொண்டால் தீமை புகாது தடுக்கும் அந்த அருள் சக்தியை நமக்கு நாமே தெளிவாகப் பார்க்கலாம்.

என்னை இப்படிச் செய்தானே…! அவனை நான் விடுவேனா பார்…! என்று சொன்னால் அது பழி தீர்க்கும் உணர்வாக நமக்குள் வந்து தீமை செய்யும் உணர்வுகளாக வளர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் வாழ விடாது தீமைகளையே உருவாக்கி விடும்.

பின் அந்தத் தீமையான உணர்ச்சிகள் நம்மை அறியாமலே
1.அடங்காத நிலைகள் கொண்டு உந்தி நம்மை இயக்கி
2.நமது வாழ்க்கையைச் சீர்படுத்தி இயக்க முடியாத நிலையாக ஆக்கிவிடும்.
3.நமக்குள் பெரும் பிழைகளை உருவாகும் நிலைகளை உருவாக்கி விடும்.

ஏனென்றால் ஞானிகள் காட்டிய அறநெறியில் குறை இல்லை. ஆசையின் நிமித்தம் தவறுகளைத்தான் நாம் வளர்த்துக் கொண்டோமே தவிர மீட்டிடும் மார்க்கத்தை இழந்தோம். மீண்டிடும் மார்க்கத்தையே காண முடியாது தவிக்கின்றோம்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள நாம் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்ப்போம். அந்த மகரிஷிகளின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிடும் உணர்வினை நாம் வளர்ப்போம்.

நம் குரு காட்டிய அறவழியில்
1.இருளை அகற்றிடும் நஞ்சை வென்றிடும் அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் சேர்ப்போம்.
2.இந்த வாழ்க்கையில் ஞானத்துடன் வாழ்ந்து இருளை அகற்றி அருள் ஞானத்தைப் பெருக்கி
3.இனிப் பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடைவோம்.
4.இல்லற வாழ்கையில் பற்றுடனும் பாசத்துடனும் வாழ்வோம்.
5.ஒற்றுமையாக வாழும் உணர்வும் தீமைகள் புகாத நிலையும் நமக்குள் வளர்ப்போம்
6.நாம் செய்யும் தொழில்கள் வளம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவோம்
7.நம் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறரைத் தூய்மையாக்கும் சக்திகளைப் பெறுவோம்.
8.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.

மன உறுதி நமக்கு எப்படிக் கூடுகிறது…? மன உறுதி எதனால் இழக்கப்படுகிறது…? மன உறுதியை நாம் எதிலே கூட்டிக் கொள்ள வேண்டும்…?

Image

soul-lights-dasami

மன உறுதி நமக்கு எப்படிக் கூடுகிறது…? மன உறுதி எதனால் இழக்கப்படுகிறது…? மன உறுதியை நாம் எதிலே கூட்டிக் கொள்ள வேண்டும்…?

 

செல்வங்கள் எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருக்கும் குடும்பங்களில் பார்க்கலாம். இன்று “எத்தனை துயரங்கள்…! எத்தனை தொல்லைகள்…! எத்தனை எதிர்ப்புகள் அடைகின்றார்கள்…! என்று பார்க்கலாம்.

அதே சமயத்தில் செல்வம் இல்லாதவர்களும் இது கிடைக்கவில்லையே…! அது கிடைக்கவில்லையே…! என்று இந்த வேதனையின் உணர்வுகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1.செல்வம் இல்லாத போது…
2.உடலில் வேதனைப்பட்டாவது செல்வத்தைத் தேட வேண்டும் என்று வலிமை வருகின்றது

ஆனால் செல்வம் வந்த பின்
1.செல்வதைக் காக்க உணர்வுகள் வலிமை குறைந்து
2.வேதனையைத்தான் வளர்க்க நேருகிறது.
3.அப்பொழுது தேடிய செல்வதைப் பாதுகாக்கும் உணர்வுகளை இழக்கின்றோம்.

செல்வம் உள்ள பொழுது வேதனை என்ற உணர்வினை நம்மால் மீட்க முடியும். ஆகவே செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டும்…! என்ற ஆர்வம் வருகிறது.

அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு கடினமான உடல் உழைப்புகளைச் செய்வதும் அப்பொழுது தன் கஷ்டங்களை எண்ணாது “எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டும்…!” என்று மன உறுதி கொண்டு வளருகிறது.

மன உறுதி கொண்டு வளர்ந்தாலும் கடைசியில் நாளைக்கு உணவு இல்லையென்றால் எப்படியாவது நாளைக்கு உணவைத் தேட வேண்டும் என்ற மன உறுதி வருகிறது.

ஆனால் கூட நான்கு நாட்களுக்குத் தேவையான உணவு இருந்தால்… “சரி விடு… போ… பார்க்கலாம்…!” என்று தோன்றும். அந்தத் தேடி சேமிக்கும் நிலையும் குறைந்துவிடும்.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எது எப்படி இருந்தாலும்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி
2.நமது நல்ல உணர்வுகளை உயர்வாக்கி
3.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலையை அடைதல் வேண்டும்
4.அதற்காகத்தான் தான் யாம் உபதேசிக்கும் இந்தத் தியானமே தவிர
5.சொத்து வேண்டும்… சுகம் வேண்டும்… கௌரவம் வேண்டும்… புகழ் வேண்டும்…! என்ற நிலைக்காக அல்ல.

ஆகவே அழியாச் சொத்தான அந்த அருள் ஞானப் பேரின்பச் சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். நம்முடைய மன உறுதி இதிலே தான் இருக்க வேண்டும்.

வலுவான சக்தியைப் பெருக்குவதற்காக அகஸ்தியனின் உணர்வை உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

Image

spiritual-food-agastya

வலுவான சக்தியைப் பெருக்குவதற்காக “அகஸ்தியனின் உணர்வை உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று அவர் இயற்கையின் உண்மைகளை அறிந்துணர்ந்ததைப் போல எனக்கும் அறியும் பழக்கத்தைக் கொண்டு வருகிறார்.
1.அவர் கூட எத்தனையோ பேர் பழகினார்கள்
2.இருந்தாலும் அவர் எனக்கு அந்த நிலைகளைக் காண்பித்தார்.
3.அதைத் தெரிந்து கொண்டேன். அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன்.
4.இப்பொழுது உங்களிடமும் பதிவு செய்கிறேன்.

அந்த மெய் உணர்வுகளைக் குருநாதர் வெளிப்படுத்தினார். நான் அங்கே காட்டிற்குள் இருந்து அனுபவபூர்வமாகப் பார்த்தேன். அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வைப் பெறுவதற்கு இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவு செய்த பிற்பாடு மீண்டும் நீங்கள் எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் அறிவாக வந்து தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே போய் விடலாம்.

1.அகஸ்தியன் எப்படித் துருவனானோ அந்தத் துருவத்தின் நிலைகள் கொண்டு நீங்களும் ஆவதற்கு உதவும்.
2.அவன் துருவனாகி திருமணமாகி எதை எதைச் செய்தானோ அந்த அறிவும் வரும்.
3.உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும் என்பதற்குத்தான் தான் பதிவு செய்கிறோம்.

வசிஷ்டர் பிரம்ம குரு. அதாவது… ஒரு நோயாளியைப் பார்த்து இப்படி ஆகிவிட்டானே…! என்று அதைக் கவர்ந்து அறியப்படும்போது அவரின் வேதனையை உணர்கின்றீர்கள். அது உங்கள் உடலில் உருவாகிறது பிரம்ம குரு. (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி இணைந்து கொண்ட சக்தி என்று பொருள்)

பிரம்ம குருவாக இருந்து அந்தச் சக்தியை இயக்குவது யார்…? அந்த வேதனை பட்ட உணர்வு தான் நம்முடன் இணைந்து வாழுகின்றது. உடலாக மாறுகின்றது. அதன் குணம் தான் அங்கே வரும். இராமாயணத்தில் “வசிஷ்டர் – பிரம்ம குரு” என்று அவ்வளவு தெளிவாகக் காட்டுகிறார்கள்.

அதே போலத் தான் இப்போது நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகளை எப்படி அது ஒளியானது…? அதன் அறிவானது…? என்ற உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

கஷ்டம் என்று வரும் போது கஷ்டத்தை எண்ணாதபடி இத்தகைய நஞ்சான உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றானோ அந்த அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை அங்கே கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

நோயால் வாடுபவர்களின் துயரமோ அவன் படும் வேதனையோ நம்மிடம் வராதபடி இதைத் தடுத்து நிறுத்திவிட்டு
1.அந்த அகஸ்தியன் அருள் அந்த நோயாளிக்குக் கிடைக்கட்டும்…
2.அவர் பிணியிலிருந்து விடுபடட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.
3.ஆகவே இது பிறரைக் காக்கவும்
4..பிறரைக் காத்த உணர்வு உங்களைக் காக்கவும் இந்த இரண்டும் வேண்டும்.

ஏனென்றால் வழக்கமாக மற்றவர்களைக் காத்து விடுகிறீர்கள். அந்த உணர்வு வேகம் வந்தவுடன் (இருக்கும் பொழுது) கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள்.
1.ஆனால் உங்கள் நிலைமை தடுமாறும் போது
2.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்…
3.ஆண்டவன் என்னைச் சோதிக்கிறானே… இந்தத் தெய்வம் சோதிக்கிறதே…! என்று வேதனைப்பட்டு
4.அந்த வேதனையைத் தான் உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்…!

நல்லது என்று நாம் செய்தாலும் நம் ஆறாவது அறிவு கார்த்திகேயா… என்ற நிலைகள் இந்தத் தீமைகள் என்ன செய்யும்…? என்று அந்த ஞானத்தின் தன்மை கொண்டு அறிதல் வேண்டும்.

ஒரு இயந்திரத்தில் உலோகத்தைப் இணைத்தவுடன் அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று விஞ்ஞான அறிவின்படி கண்டு கொள்கிறார்கள்.

அப்பொழுது அதைத் தாங்கக்கூடிய சக்தி அங்கே வர வேண்டுமென்றால்
1.இந்த உலோகத்தோடு இன்னொரு உலோகத்தை எப்படிச் சேர்த்தால்
2.அந்த அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்கக்கூடிய சக்தியாக வரும் என்று
3.விஞ்ஞானி தன் சிந்தனையைக் கூட்டி அதைச் சரி செய்கிறான்.

அதே மாதிரி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் கடினமான உணர்வுகளின் தாக்குதல் வருகிறது…
1.வீட்டில் குடும்பத்திற்குள் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு வேதனை…
2.நான் உதவி செய்தேன்.. ஆனால் இப்போது எனக்கு எதிராகத் திருப்புகிறார்கள்.
3.நல்ல வழிகளை மற்றவர்களுக்குக் காட்டினேன் ஆனால் அவர்கள் இப்பொழுது என் தொழிலையே செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று
4.இப்படி இத்தனையும் பேசுகிறோம்.

இத்தகைய தாக்குதலான உணர்வுகள் நல்ல குணங்களை மாற்றிவிடாமல் இருக்க வலுவான சக்தியைக் கொண்டுவர வேண்டுமா இல்லையா…?

ஏனென்றால் எல்லாரும் நல்லவர்கள் தான். யாரும் கெட்டவர்கள் இல்லை. ஆனால் பிறரைக் காத்தாலும் உங்களைக் காக்க ஒரு வலு வேண்டுமா இல்லையா…?

நல்லதை எண்ணிச் செய்து செய்து அடுத்தவர்கள் கஷ்டத்தைக் கேட்டுக் கேட்டு இந்த உணர்வுகள் உடலில் வரும் போது அது வளர்ந்து விடுகிறது. நம் நல்ல குணம் மறைந்து விடுகிறது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் பதிவு இருந்தால் தான் உங்களுக்குச் சரியான உதவி கிடைக்கும். அந்த ஞானிகளின் உணர்வுகள் இந்தக் காற்றில் இருக்கிறது. அதை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

அகஸ்தியன் பெற்ற உண்மையின் உணர்வினை நீங்கள் அறிந்து இந்த வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும் அகற்றிட முடியும்.

அந்த அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்குத்தான் குருநாதர் காட்டிய வழியில் உபதேசம் செய்கின்றோம்.

தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

Image

protected-zone

தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

 

தீமை… என்றும் நன்மை… என்றும் மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தாலும்
1.தீமையிலிருந்து விடுபடும் உபாயம் அவைகளுக்குத் தெரியாது.
2.தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீமை செய்யும் உடலை உற்று நோக்கி
3.அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டு
4.அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத் தப்பி ஓடுகின்றது.

உதாரணமாக ஒரு புலியிடம் சிக்கிய மான் அதனிடமிருந்து தப்பிக்க அந்தப் புலியின் உணர்வுகளைப் பயத்தால் அதிகமாக நுகர்ந்து தனக்குள் வலுப்பெற்ற பின் அதனின் உணர்வுகள் மானின் உடலில் விளைகின்றது.

புலியின் உணர்வுகள் மானின் உடலில் விளைந்து இது இறந்த பின் அந்தப் புலியின் உடலுக்குள் சென்று மான் புலியாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. இது இயற்கையின் பரிணாம வளர்ச்சி.

அன்பும் பண்பும் பரிவும் கொண்டு ஒரு நண்பனுடன் நாம் பழகின்றோம். சந்தர்ப்பத்தால் அவன் நோயோடு வாடுகின்றான் என்றால் நூறு பேர் அதைக் கேட்டறிகின்றார்கள்.

ஆனால் நண்பன் மீது பற்று கொண்ட நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து நாம் அதிகமாக அவரை நேசிக்கப்படும் பொழுது அவர் உடலில் பட்ட நோயின் உணர்வுகள் நம்மையும் பலவீனப்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் அந்த நண்பர் படும் வேதனையான உணர்வுகள் கலந்து விடுகின்றது. நண்பரையே எண்ணி ஏங்கும்படிச் செய்கிறது.

நண்பருக்கு நாம் உதவி செய்தபின் “இவர் எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…!” என்று அந்த நண்பருக்கும் நம் மீது எண்ணங்கள் அதிகமாக வருகின்றது.

இரு மனமும் ஒன்றென இணையும் போது அவர் நோயால் மடிந்தால் நாம் உதவி செய்த நமது உணர்வின் எண்ணங்கள் வலு பெற்று அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் நமக்குள் நம்மை அறியாமலேயே பல பகைமை உணர்வுகளை ஊட்டுகின்றது.

நாம் பண்புடன் இருந்தோம்… அன்புடன் இருந்தோம்… எனக்கு ஏன் இந்தத் தொல்லை…? என்று நாம் வேண்டினால் மீண்டும் வேதனையைத்தான் உணர முடியுமே தவிர வேதனையைத்தான் வளர்க்க முடியுமே தவிர பகைமையிலிருந்து மீள முடியாது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பகைமை என்று அறிந்த பின் அந்தப் பகைமையிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் தொடுதல் வேண்டும்.

நெருப்பு சுடுகிறது என்று அறிகின்றோம்.
1.ஒரு சூடான பாத்திரத்தை அதற்கென்ற ஒரு இடுக்கியை வைத்துத் தூக்குகின்றோம்.
2.இடுக்கியிலும் சூடு வருகிறதென்றால் அதைத் தணிக்க மற்ற துணிகளை வைத்து
3.அதைப் பிடித்து நாம் சூடான பாத்திரத்தை எடுக்கின்றோம்.

பகைமை உணர்வு நம்மை இயக்குகிறது என்று அறிந்தால் உடனே “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் நினைவினைச் செலுத்த வேண்டும்.

சர்வ தீமைகளையும் வென்ற அந்த மெய் ஞானியான அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இந்த உணர்வின் வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை எடுக்கும் பழக்க வழக்கம் வந்து விட்டால் அந்த நோயுடன் வாழும் உணர்வினை நமக்குள் வராது அடக்கிவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த உணர்வுகளை நோயுற்றோருக்குப் பாய்ச்சினால் அது அவருக்குள் விளைந்து அவர் நோயைப் போக்க இது உதவும்.

இல்லையென்றாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை அவருக்குள் விளைந்து அவர் உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லும். நமக்குள் வராது. ஆகவே
1.அவரும் பரிணாம வளர்ச்சியான மனிதனுக்கு அடுத்த ஒளி நிலை அடைகின்றார்.
3.அதே சமயத்தில் நமக்குள் வலுவாக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும். ஏனென்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…?

eternal-sages-world

தனித்த நிலையில் சக்தி பெற முடியுமா…? 

நம் உடலுக்கு என்ன தான் முக்கியத்துவம் கொடுத்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?
1.இன்று நம் உடலை எத்தனையோ அழகு படுத்துகின்றோம்.
2.நாளைக்குச் செத்த பிற்பாடு தூக்கிப் போட்டு விடுகிறார்கள்…!
3.இந்த ஈசன் வெளியிலே போய்விட்டது என்றால் உடலான நீசனுக்கு என்ன மதிப்பு…?

தூக்கி இழுத்து வெளியே போட்டு விடுகின்றார்கள். யாராவது சீந்துகின்றார்களா…? அதனை இழுத்து இங்கேயும் அங்கேயுமாகத்தான் போடுகின்றார்கள்.

நம் உடலை எத்தனையோ அழகாகத்தான் வளர்த்தோம்…! ஆனால் செத்த பிற்பாடு யாராவது கவனிக்கின்றோமா…?

இந்த உடலை முக்கியமாக நினையுங்கள். ஆனால் இந்த உடலுக்காக வேண்டி இந்த உணர்வை (என்னை) இப்படிப் பேசுகின்றானே அப்படிப் பேசுகின்றானே… அது பேசுகின்றானே… இது பேசுகின்றானே… என்ற அந்த வேதனை நமக்கு வேண்டவே வேண்டாம்…!

யாராவது நம்மைக் குறையாகப் பேசினால் உடனே மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

நாளைக்கு அவர்களுக்கு நல்லது பேசக்கூடிய எண்ணம் வரட்டும். நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரட்டும்.
1.இதைச் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்.
2.இது நமக்குத் தான்…!

நுகர்ந்த உணர்வு தப்பு என்று தெரிவதற்கே நான் தப்பு பண்ணினேன் என்பது தனக்குத் தெரிந்தால் தானே…!
1.அவன் தப்பு செய்கின்றான் என்று தெரிய வேண்டும்.
2.எனக்குத் தெரியாமலே விட்டால் தப்பை நான் கண்டுபிடிக்க முடியாது.

உதாரணமாக வழக்கமாக நாம் செல்லும் ரோட்டிலே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். நேற்றைக்கு… அதற்கு முந்திய நாள்… அதற்கு முன்னாடி… எல்லாம் நன்றாகத் தானே இருந்தது,
1.பள்ளமாக எப்படி இருக்கப் போகின்றது…! என்று கண் மூடித்தனமாக
2.நானே குருட்டுத்தனமாகப் போய்க் கொண்டிருந்தால் பள்ளத்தில் போய் “லபக்…” என்று விழுந்து விடுகின்றேன் அல்லவா…!

முன்னாடி பார்த்து நான் உஷாராகப் போக வேண்டும் அல்லவா…? நேற்று இந்தப் பாதையில் தானே வந்தேன்… அதனால் ஒன்றும் இருக்காது…! என்று போனால் என்ன ஆகும்.

இதைத்தான் ஆறாவது அறிவின் தன்மையைச் சேவற்கோடியோன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். “சேவற் கொடியோனே…!” என்று சொன்னால் நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது நம் ஆறாவது அறிவு.

காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப் போன்று ஆறாவது அறிவு பெற்றவர்கள் உண்மையின் உணர்வை அறியக் கூடியவர் என்று “சேவற் கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அந்த முன் சிந்தனை வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாம் பெறுகின்ற அந்த மகரிஷிகளின் சக்திகள் எல்லோருக்கும் கிடைக்க வெண்டும் என்று நாம் அதற்காக வேண்டித் தவமிருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன். அதனால் கல்கி யுகத்திற்கு நான் தனியாகப் போவேன் என்று சொன்னால் எங்கேயும் போக முடியாது.

ஒரு அரிசியை வைத்துப் பசியைத் தீர்த்து விடுவேன் என்று நினைத்தால் அது ஏமாளித்தனம். ஒரு நெல்லை வைத்து வேண்டுமானால் பல நெல்களை உருவாக்கலாம். பல நெல்களாக்கி மொத்தமாகக் குவித்துச் சமைத்து ஆக்கிச் சாப்பிட்டோமானால் எல்லோருக்கும் கொஞ்சம் பசி தீரும்.

ஒன்றை வைத்து நான் சமைத்துச் சாப்பிடுவேன் என்று சொன்னால் எப்படி முடியும்…? அதோடு போய்விடும். அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும்
1.இந்தக் கௌரவம் அந்தக் கௌரவம் என்று கௌரவம் பார்த்தோமென்றால் போய்விடும்.
2.எல்லாம் மண் தின்று விடும்.
3.அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
4.அந்த மெய் ஒளியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்து
5.நமக்குள் மெய் ஒளியை வளர்த்து நாம் பறக்க (கல்கி) வேண்டும்.

ஞானப்பால் பெற்ற திருஞானசம்பந்தர் தன் குழந்தைப் பருவத்தில் செயல்படுத்திய ஆற்றல்மிக்க செயல்கள்

Image

Gnana sambandar

“ஞானப்பால் பெற்ற…!” திருஞானசம்பந்தர் தன் குழந்தைப் பருவத்தில் செயல்படுத்திய ஆற்றல்மிக்க செயல்கள்

 

திருஞானசம்பந்தர் தன் இளமைப் பருவத்திலேயே பல ஆற்றல்மிக்க செயல்களைச் செய்தார். எவ்வாறு அவருக்கு அந்த ஆற்றல்கள் வந்தது என்று பார்ப்போம்.

வெகு நாளாகப் புத்திர பாக்கியம் இல்லை என்று ஏக்கத்தில் இருந்த அவரின் தாய் சீர்காழியில் உள்ள ஈசனின் கோவிலில் நடக்கும் கதாகாலட்சேபங்களையும் தெய்வ நிலைகளால் செய்யப்பட்ட மந்திர ஒலியால் நடக்கக்கூடிய சில அற்புதங்களையும் உற்றுப் பார்க்கின்றது. கேட்டுத் தனக்குள் பதிவாக்கிக் கொள்கிறது.

புத்திர பாக்கியம் பெறவேண்டும் என்ற ஏக்கத்தினால் அந்தத் தாய் சுவாசித்த உணர்வுகள் கருவாக உருவாகின்றது. சிவனை எண்ணி எண்ணி ஏங்கிய நிலைகள் அனைத்தும் தாயின் உடலில் ஊழ்வினையாகச் சேருகின்றது.

இவ்வாறு சேர்ப்பித்த நிலைகள் தான் அந்த தாயின் கருவுக்குள் அந்த அணுவுக்குள் மாற்றம் அடைந்து அது வலுப்பெறும் போது கருவாக உருப்பெறும் உணர்வின் தன்மை அங்கே வருகின்றது.

அவ்வாறு கருவுற்றதன் காரணம் தான் வணங்கி வந்த அந்த தெய்வத்தின் கருணையே என்ற நிலையில்
1.கருணைக் கடலே…!
2.நாங்கள் வேண்டியதை அந்த வரங்களை நீ கொடுத்தருளினாய் என்ற உணர்வைத் தனக்குள் பதியச் செய்து
3.அங்கிருக்கும் விநாயகனை வணங்கும் போதெல்லாம் இதை வினையாகச் சேர்த்துத் கொள்கின்றது.

தெய்வீக அருளால் என்னை ஆசீர்வதித்த விநாயகனே… சிவனுடைய அருளும் பராசக்தியின் ஆற்றல் மிக்க சக்தியும் எங்களுக்குள் இயக்க வேண்டும். அருள் ஞானம் இங்கே வளர வேண்டும் என்றும் வேண்டுகிறது.

விநாயகா…! நீ தான் ஞானவான் ஆயிற்றே…!
1.என் கருவிலே இருக்கக் கூடிய குழந்தை பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உன்னுடைய ஞானத்தின் நிலைகள் என் கருவில் வளரும் சிரு பெறவேண்டும் என்று
3.அன்றைய பக்தியின் நிலைக்கொப்பத் தனக்குள் எடுத்து வளர்கிறது.

ஆலயத்தில் காவியப் படைப்பால் நடக்கும் யாகங்களையும் வேள்விகளையும் அதன் வழிகள் கொண்டு பல அற்புதங்கள் நடப்பதையும் கண்டுணருகின்றது அந்தத் தாய்.

அங்கு நடக்கும் அதிசயங்களை மந்திரத்தால் ஏகிய அந்த உணர்வின் தன்மை கண்டபின் இது எல்லாம் என் கருவுக்குள் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது.

இவ்வாறு ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் அந்தத் தாய் சுவாசித்த இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து… தாய் ஏக்கத்தால் எண்ணியது அனைத்தும் குழந்தை உடலுக்குள் வலு கொண்டதாக விளைகின்றது.

இவ்வாறு விளைந்து பத்து மாதம் முடிந்து குழந்தை பிறந்த பின் ஒரு மாதமே ஆன நிலையில் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அந்தத் தாய் ஆலயத்திற்குள் வருகின்றது.

எதையெல்லாம் வேண்டிக் கேட்டோமோ வரம் கொடுத்த ஆண்டவனிடம்… “தன் பிள்ளையுடன் அணுகி… அவன் அருள் பெற வேண்டுமென்று கையேந்தி வருகின்றது…!”

முதலிலே விநாயகனை பார்க்கப்படும் போது அந்தக் குழந்தை கை கூப்பிச் சிரித்திடும் நிலை வருகின்றது. அந்தக் குழந்தைப் பருவத்தில் தன் தாயை உற்றுப் பார்ப்பதும் பின் வைத்திருக்கும் சிலையையும் உற்றுப் பார்க்கின்றது.
1.தனக்குள் சிரித்துக் கொண்டு தவழ்ந்து சென்று
2.அந்த விநாயகனிடம் போக வேண்டும் என்று வேண்டி கண்ணுற்றுப் பார்க்கின்றது
3.ஆலயத்திற்குள் சென்றவுடன் இத்தனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றது.

இவ்வாறு திருஞானசம்பந்தர் தான் வளரும் அந்தக் குழந்தைப் பருவத்திலேயே யாரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தாலும் மகிழ்ந்திடும் நிலையும் அதே சமயத்தில் அவர்கள் இந்தக் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் மகிழ்ச்சியும் பேரானந்தம் ஏற்படுகின்றது.

ஒரு சமயம் எதிர்பாராது நஞ்சு கொண்ட பாம்பு திருஞான சம்பந்தரைப் பார்த்ததும் அஞ்சி ஓடுவதைப் பார்க்கின்றார்கள். அதிசயித்து இந்தக் குழந்தை… “ஆண்டவனால் கொடுக்கப்பட்ட பிள்ளை…!” என்று அதிசயப்படுகின்றார்கள்.

தாய் கொடுத்த ஞானப்பாலின் நிலைகள் கொண்டு அவனின் மழலைப் பேச்சும் அவன் வயதிற்கு மீறிய சொல் தொடரும் அங்கு வருவதைக் கண்டு அனைவரும் பேரானந்தப் படுகின்றனர்.

ஒரு சந்தர்ப்பம் அருகில் இருக்கக்கூடிய குடிசையில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பாம்பு தீண்ட அதனை உற்றுப் பார்த்த திருஞானசம்பந்தர் ஓடி வந்ததும் அவரைக் கண்ட பாம்பு அது அஞ்சி ஓடுகின்றது.

இவனுடைய கண் பார்வையில் நண்பனின் உடலில் பாய்ந்த நஞ்சு நீங்குகின்றது. உற்றுப் பார்த்தோர் பெருமிதம் கொள்ளுகின்றனர். அந்தத் தாய் ஊட்டிய ஞானப்பாலின் நிலைகளில் ஞானங்கள் அங்கே தொடர்கின்றது.

அதிசயத்தக்க அருள் ஞானக் குழந்தை என்று போற்றும் நிலை வருகின்றது. இது தான் அந்தக் காலத்தில் திருஞானசம்பந்தருடைய சிறு வயதில் நடந்த நிலைகள்.

விநாயகர் தத்துவப்படித்தான் வாழ்க்கை வாழ வேண்டும்… ஏன்…?

Vinayagar Gnanavaan

விநாயகர் தத்துவப்படித்தான் வாழ்க்கை வாழ வேண்டும்… ஏன்…? 

பட்சிகளாக இருக்கும் தூக்கணாங்குருவி அதற்குக் கை கால் அங்கங்கள் இல்லை என்றாலும் அதனின் ஞானத்தைக் கொண்டு தான் குடி இருப்பதற்காக வேண்டித் தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கின்றது.

இனத்தைப் பெருக்கிய பின் தன் குஞ்சுகளுக்கு இரவிலே வெளிச்சம் வேண்டும் என்பதற்காக மின் மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு களி மண்ணில் ஒட்ட வைத்து வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இதைப்போல பட்சிகளில் பெற்ற இந்த உணர்வின் ஞானம் தான் அடுத்தடுத்து ஒவ்வொன்றிலும் வளர்ச்சியாகப் பெற்றது.

உதாரணமாகக் கரடிகளை எடுத்துக் கொண்டால் குட்டி போடுகிறது என்றால் மனிதன் எவ்வாறு வீடு கட்டுகின்றானோ அதைப் போல அது பாறைகளை அடுக்கடுக்காக அடுக்கி வைத்துச் சுற்றி கற்களை வைத்துத் தனக்குப் பாதுகாப்பான நிலைகளை குகை போல அமைத்துக் கொள்கிறது.

இயற்கையில் விளைந்த தாவர இனங்களை உணவாக உட்கொண்டு ஞானத்தின் நிலைகளில் மற்ற உயிரினங்கள் வளர்ச்சி அடைந்து
1.அது தனக்கு வேண்டியதை எவ்வாறெல்லாம் அமைத்துக் கொள்கின்றது…?
2.அதனின் ஞானம் எவ்வாறு அமைந்திருக்கின்றது…? என்பதை
3.எம்மைக் (ஞானகுரு) கண்டுணரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

மற்ற உயிரினங்களுக்கு உடல் அங்கங்கள் குறைந்திருப்பினும் தன் உணர்வின் ஞானத்தால் தன்னிடம் இருக்கும் உடலின் அமைப்பின் நிலைகள் கொண்டே தனக்குப் பாதுகாப்பான இருப்பிடங்களை எப்படி அமைத்துக் கொள்கின்றது…? என்பதை ஒவ்வொன்றையும் நேரடியாகக் கண்களாலேயே பார்த்து அனுபவப்பூர்வமாக அறியச் செய்து உணர்த்துகின்றார்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் சேர்த்துக் கொண்ட (சுவாசிக்கும்) உணர்வுகள் அனைத்தும் வினையாகச் சேர்ந்து தற்காத்துக் கொள்ளும் ஞானமாக விளைந்து… விளைந்து… அடுத்தடுத்த சரீரங்கள் பெற்றோம்…! என்பதைக் காட்டுவதற்காகத்தான் விநாயகருக்கு யானைத் தலையை மனித உடலில் பொருத்திக் காட்டினார்கள்.

அதாவது நாமெல்லாம் புரிந்து கொள்ளும்படியாக
1.“வினைக்கு நாயகன் விநாயகன்…! என்றும்
2.முன் சேர்த்துக் கொண்ட நல் வினைகளுக்கொப்ப நாயகனாக இன்று மனிதனாக உருவானோம்…! என்று
3.தன்னை அறிந்திட ஞானிகள் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.

ஒரு சமயம் குருநாதர் ரோட்டுப் பகுதியில் இருக்கும் விநாயகர் சிலையின் மேல் சவாரி ஏறி உட்கார்ந்து கொண்டு “நான் தான்டா விநாயகன்…!“ என்றார்.

அந்த விநாயகன் மேல் அமர்ந்து அவர் “நான் தான் விநாயகன்…!” என்று இருக்கும் போது அதைப் பார்த்து அங்கே வருவோர் போவோர் எல்லாம் என்னை ஏசுகிறார்கள்.

ஒரு பைத்தியத்தை இந்த மாதிரித் தெய்வத்தின் மேல் அமர வைத்துக் கொண்டு நீ வேடிக்கை பார்க்கின்றாயே… “அவரைக் கீழே இறங்கச் சொல்… ஐயா…!” என்று எல்லோரும் சொல்வார்கள்.

அவனுக்கு அறிவில்லை…! நீ நான் சொல்வதைக் கேள்…! என்று எம்மிடம் சொல்லிக் கொண்டே இருப்பார் குருநாதர்.

அவர்கள் “கீழே இறங்கு…!” என்பார்கள். நான் எப்படியடா இறங்குவது…?” என்று சொல்வார் குருநாதர். இப்படிப் பல நிலைகளை உணர்த்தினார்.

காரணம்… இவ்வாறு புழுவிலிருந்து மனிதனாக வரும் நிலையில் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
1.மிருக நிலையிலிருந்து நான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு
2.இன்று என் உடலான… “நான்…” வினைக்கு நாயகனாக என் உடல் அமைந்திருக்கின்றது.
3.இதிலிருந்து… “இவன் என்னை இறங்கச் சொன்னால்… நான் எப்படி இறங்குவேன்…?” என்று இதையெல்லாம் தெளிவுற எடுத்து விளக்கமாக உரைத்தார்.

நல்வினைகளைச் சேர்த்து வளர்ச்சியின் பாதையில் மனிதனாக உருவான பின் அதிலிருந்து நாம் தீய வினைகளைச் சேர்த்து
1.மீண்டும் மனிதனல்லாத நிலையில் மிருகமாகவோ
2.மற்ற விஷம் கொண்ட உருக்களாகவோ தேய்பிறையாகக் கீழே இறங்கக் கூடாது என்பதை அவ்வாறு எமக்குத் தெளிவாக்கினார்.

மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் நமக்குள் தீய வினைகளாகச் சேராதபடி தடுத்துக் கொள்ள அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் சேர்க்க வேண்டும்.

இன்றைய செயலாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் நல் வினைகளாகச் சேர்த்துச் சேர்த்து நாளைய செயலாக ஒளியின் சரீரமாக நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே ஞானிகள் காட்டிய “விநாயகர் தத்துவம்…!”.

சப்தரிஷி மண்டலத்தில் இனைந்திருக்கும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்களின் பூர்வாங்கம் என்ன…?

Image

Big dipper - vashista

சப்தரிஷி மண்டலத்தில் இனைந்திருக்கும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்களின் பூர்வாங்கம் என்ன…?

 

இன்று திருப்பூட்டும் போது பாருங்கள்….! நேரமாகிப் போய்விட்டது. அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் அதைச் செய்ய வேண்டும்.. சீக்கிரம் கூட்டிக் கொண்டு வாருங்கள்…! என்ற இந்த எண்ணத்திலேயே தான் இருப்பார்கள்.

இதில் தாமதமாகும் பொழுது… இவர் என்ன…? இப்படி நீட்டி நெளித்து இழுத்துக் கொண்டே போகிறார் என்பார்கள். பின் கடைசியில் மணியைப் பார்த்துவிட்டு
1.அய்யோ… இரண்டு நிமிடம் தான் இருக்கிறது என்று
2.அந்தப் பதட்டமான பயமான உணர்களைத் தான் கலந்து திருப்பூட்டுவார்கள்
3.மணமக்களை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும்…? என்ற நிலையே இன்று அற்றுப் போய்விட்டது.

அங்கே திருமணத்திற்கு வருகை புரிந்து வாழ்த்த வந்த தம்பதியர்கள் தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் நிலைகளை மணமக்களுக்குப் பாய்ச்சி
1.எதிர்காலத்தில் அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்
2.நம்முடைய எண்ணமும் பார்வையும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் நிலை பெறச் செய்ய வேண்டும்
3.அந்த அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தி மணமக்கள் பெற வேண்டும்
4.நாம் கொடுக்கும் ஆசிர்வாதத்தால் அவர்கள் வாழ்க்கையில் அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒளிச் சுடராக என்றுமே வாழும் நிலை பெறவேண்டும் என்று
5.இப்படி வாழ்த்தும் நிலையைத்தான் அன்று காட்டினார்கள்.

வசிஷ்டரையும் அருந்ததியும் ஏன் காட்டினார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

வசிஷ்டர் பெரும் இராஜ சபையில் தீர்ப்பளித்து நியாயங்களையும் அதனுடைய உணர்வுகளையும் வழிகாட்டி வந்தார். இராஜ சபையை வழி நடத்தினார் என்று சொல்வார்கள்.

இராஜ தர்பாரில் இருக்கும் சிக்கல்களை நீக்கி அந்த அரச வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நல்வழி காட்டும் நிலை பெற்றவர். கடும் முனிவர்கள் வந்தாலும் அதையும் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்தான் வசிஷ்டர்.

முனி என்பது கொடூர நிலைகள் கொண்டு தான் எண்ணியதைச் சாதிக்கும் நிலைகள் கொண்டது. தீமையோ நன்மையோ அறியாது.

முனி என்பது தன் எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்தும் நிலை. ஆனால் தான் எண்ணியது தடைபட்டால் கோபமாகி அதை வீழ்த்திடும் நோக்கங்கள் வரும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் வசிஷ்டர் பொறுமை கொண்டு தன் உணர்வின் ஆற்றலால் அமைதிப்படுத்தி தன் சக்தியின் துணை கொண்டு மற்றவருக்கு வழிகாட்டும் நிலை பெற்றவர்.

ஆகவே தீமைகளை அகற்றும் நிலையும் தன் ஞானத்தால் அரச நீதிகளை நிலை நிறுத்தி ஒருக்கிணைக்கச் செய்யும் அந்த உணர்வின் சக்திகள் அனைத்தும் வசிஷ்டர் உணர்வுடன் ஒன்றி உள்ளது.

அவருடைய மனைவி அருந்ததியும் இதைப் போல் ஒன்றிய நிலைகள் வரப்படும் போது இரு மனமும் ஒன்றாகி வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அரச நீதியாக வாழ்ந்தாலும் அவர்கள் துரித நிலைகள் கொண்டு விண்ணுலகம் சென்றார்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்குள் இது நடந்த நிகழ்ச்சி இது.

மனிதனாக இருந்து ஞானத்தால் வழி தொடர்ந்த பின் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்கள். அதைத்தான் வசிஷ்டர் அருந்ததி என்று சொல்வது.

அவர்கள் சக்தி பெற்ற நிலையில் கொண்டு விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டு இருக்கும் அவர்கள் உடலிலே விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் புகும் தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கணவன் மனைவி அவர்களைப் போன்றே ஒன்றி வாழ முடியும்.

விநாயகரை வணங்கி விட்டு இங்கே வசிஷ்டர் அருந்ததி போல என்று அம்மியும் கல்லையும் வைத்துக் காண்பித்து அதன் பின் தான் திருப்பூட்டுவார்கள்.

1.இரு மனமும் ஒன்றாகி மகிழ்ந்து வாழ்ந்து நீதியின் நிலைகள் வழங்கி ஒருக்கிணைந்து செயல்பட்ட
2.வசிஷ்டர் அருந்ததி என்ற அவர்கள் உணர்வுகளை
3.மனித வாழக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இணைத்து
4.புனிதம் பெறும் நிலையாக வளர வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணை பிரியாத நிலைகளாக என்றும் பதினாறாக
5.விண்ணிலே ஒளியின் சரீரமாக மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் அவ்வாறு காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் அதை ஐதீகமாகத்தான் வைத்து விட்டார்களே தவிர அந்தப் பேருண்மையை அறியாத நிலைகள் ஆகிக் காலத்தால் மறைந்து விட்டது.

துன்பங்களை நீக்கக்கூடிய சரியான சந்தர்ப்பமும்… கூர்மையான ஆயுதமும்…!

Soul protection tool

துன்பங்களை நீக்கக்கூடிய சரியான சந்தர்ப்பமும்… கூர்மையான ஆயுதமும்…!

வாழ்க்கையில் சங்கடம் வரப்போகும் போது என்ன செய்யும்…? சங்கடம் வந்து விட்டாலும் பரவாயில்லை..! அடுத்து வேதனை வந்துவிடுகின்றது.

வேதனை வந்து விட்டது என்றால் எல்லாமே விஷமாக மாறிவிடுகிறது. நாம் சம்பாதித்த சொத்தெல்லாம் கரையத் தொடங்குகிறது.

அதாவது நாம் சுவையான பதார்த்தத்தைச் செய்து வைத்திருந்தாலும் அதில் விஷத்தைப் போட்டால் விஷம் என்ன செய்கிறது…? பதார்த்தத்திலுள்ள அதனுடைய ருசி சத்து எல்லாவற்றையும் அது கவர்ந்து கொள்கிறது. விஷம் வலுவாகின்றது. அதை மாற்ற வேண்டுமா இல்லையா…!

போகமாமகரிஷியின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டோம் என்றால்
1.ஏழ்மையில் வாடப்படும் போது
2.அவருடைய ஏக்க உணர்விற்குள் தான் விண்ணின் ஆற்றல் சிக்கியது அதனால் உண்மையை அறிய முடிந்தது.
3.ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பத்தால் தான் அறிந்து கொண்டார்.

இராமலிங்க அடிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம்தான். வியாசர் வான்மீகி ஆதிசங்கரர் திருமூலர் ஏனைய ஞானிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம் தான்.

ஆகவே யாரும் தெரிந்து கொண்ட பிற்பாடு ஞானத்தை எடுக்கவில்லை. அதே மாதிரியான சந்தர்ப்பத்தைத் தான் இப்போது உங்களிடம் இப்போது ஊட்டுகின்றோம்.

கஷ்டம் என்று வந்து விட்டால் அந்த சமயத்தில் அதை விட்டு விட்டு ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்தக் கஷ்டமான சந்தர்ப்பத்தில் இதை எடுத்தால் அந்த ஞானிகளைப் போன்று மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பமாக இது மாறிவிடுகிறது.

ஆனால் அந்தக் கஷ்டத்தையே எண்ணிக் கொண்டு அந்தச் சங்கடத்திலேயே நீங்கள் இருந்தால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது விஷத்திற்குள் போய்ச் சிக்கிக் கொள்கிறது.

சங்கடம்… கஷ்டம்…! என்று வரும் பொழுதெல்லாம் அதை மாற்றும் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு)
1.”பன்னிரண்டு வருட காலம்… உருட்டி…உருட்டி உருட்டி…உருட்டி உருட்டி…உருட்டி
2.அதாவது பலவிதமான இன்னல்களைச் செயற்கையாக உண்டு பண்ணி
3.அதிலிருந்து மீட்டிடும் அனுபவத்தைப் பெறச் செய்து
4..மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார்.
5.அப்படி அனுபவபூர்வமாகப் பெற்றதைத்தான் ஆத்ம சுத்தி என்ற வாக்காக ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

ஆரம்பத்தில் யாருக்கும் இதைப் பயன்படுத்தவே இல்லை.

(1987-88க்குப் பிற்பாடு தான்) ஆத்ம சுத்தி என்ற அந்த வாக்கைக் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் வரும் போது அதற்குள் பல ஆற்றல்களைச் செருகி வைத்து நீங்கள் ஆத்ம சுத்தி செய்யும் போது அந்தப் பவர் (POWER) கிடைக்கும்படியாகச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்கிற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்து விட்டுத் தான் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை எல்லாம் உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம்.

1.பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
2.அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்கு
3.பேரண்டத்தின் ஆற்றலையும் மகரிஷிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து
4.அதை உங்கள் உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஒரு துன்பம் வரும் பொழுது, “ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய் ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும். அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு இந்த ஆத்ம சுத்தி என்பது.

இது துன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம்.

இதை நீங்கள் எடுக்கும் பொழுது துன்பம் நீங்கும்… நோய்கள் நீங்கும்… பகைமைகள் அகலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும்…! இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும்.

தயவு செய்து இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்…!

 

சில குழந்தைகள் எல்லோரையும் அடிப்பதற்குக் காரணம் என்ன…? “நச்சு…நச்சு” என்று அழுவதற்குக் காரணம் என்ன…?

Image

Child in mother's womb

சில குழந்தைகள் எல்லோரையும் அடிப்பதற்குக் காரணம் என்ன…? “நச்சு…நச்சு” என்று அழுவதற்குக் காரணம் என்ன…?

 

ஒரு தாய் கருவுற்றிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் கருவுற்ற அந்தச் சமயத்தில் மற்றவர்கள் சண்டையிடுவதைச் சந்தர்ப்பத்தால் பார்க்க நேர்கின்றது.

தன் குடும்பத்தில் சண்டை இல்லை என்றாலும் அடுத்த குடும்பத்தில் சண்டை இடுவதை இவர்கள் என்ன பேசுகின்றார்…? அவர் என்ன பேசுகிறார்…! என்று வேடிக்கையாகப் பார்ப்போம்.

ஒருவருக்கு ஒருவர் ஏசிப் பேசி அழித்திடும் உணர்வு கொண்டு பழித்திடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதை உற்று நோக்கிக் கூர்ந்து கவனிக்கும் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குள் இது பட்டுவிடுகின்றது. இந்த உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

1.தாய் சண்டையிடுபவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொழுது
2.சண்டையிட்ட உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகப் பதிவாகின்றது
3.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது.

“பூர்வம்” என்றால் கருவிற்குள் இருக்கும் போது அது செய்த புண்ணியத்தின் நிலைகள் அதாவது
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் தாய் செய்த தவத்தின் பலனே
2.நல்லதோ கெட்டதோ அது பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அமைகிறது.

இந்த உணர்வின் தன்மை குழந்தை உடலில் சிறுகச் சிறுக வளர்ந்து பிறந்தவுடனே ஒன்றும் புரியாது. ஆனால் அவர்கள் எப்படிச் சண்டை போட்டார்களோ இதே மாதிரி நச்சு.. நச்சு… நச்சு.. நச்சு… என அழுக ஆரம்பித்து விடும்.

தாய் குழந்தையைத் தொட்டுக் கொஞ்சி குலாவப் போனால் “பட்…பட்…” என்று போட்டுக் கையை வைத்துத் தாயை பரலும். ஏனென்றால் அந்த உணர்வு அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அந்த உணர்வை இயக்குவது உயிர்.

தாயின் ஊழ்வினைப் பயன்படி அது வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் கொண்டு அவர்கள் எபப்டிச் சண்டை போட்டார்களோ அதே மாதிரி அடுத்த குழந்தையுடன் இந்தக் குழந்தை சண்டைக்குப் போகும்.

யாரிடம் போனாலும் வம்புக்குப் போகும். இன்னொரு குழந்தையைக் கண்டால் வெடுக்… வெடுக்… என்று இழுத்துப் போடும்.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். ஒரு பிள்ளை அது சும்மா நின்று கொண்டிருந்தாலும் அதைக் “குபீர்…!” என்று தள்ளி விட்டுச் சிரிக்கும். திடீரென்று அவ்வாறு செய்யும்.

இதற்கெல்லாம் காரணம் தாய் கருவிலிருக்கும் பொழுது அந்தக் குழந்தை பெற்ற பூர்வ புண்ணியம் தான். ஆகவே நல்ல குழந்தைகளை உருவாக்க நாம் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்…?

ஒரு குடும்பத்தில் கர்ப்பமாகி விட்டார்கள் என்று தெரிந்து கொண்டாலே
1.அதை ஒரு “புனித நாள்” என்று எண்ண வேண்டும்
2.அருள் ஒளி பெறக் கூடிய அந்த ஞானக் குழந்தை வளர வேண்டும்,
3.உலகைக் காத்திடும் அருள் ஞானி வளரவேண்டும் என்று அந்தத் தாய் எண்ண வேண்டும்.

கர்ப்பமான அந்தத் தாய் அருள் உணர்வு பெறவேண்டும். உலக ஞானம் பெறும் தகுதி கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும், நஞ்சை வென்றிடும் அருளாற்றல் பெறவேண்டும், அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் அனைத்தும் அந்தக் குழந்தை பெறவேண்டும்,

அகஸ்தியன் கண்ட உண்மைகளை உலகுக்கு அவன் எடுத்துக் காட்ட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வாறு எண்ண வேண்டும். இப்படித் தியானித்து அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்கிடல் வேண்டும்.

குழந்தை பிறந்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படரவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும், கல்வியில் உயர்ந்த தரமும் சிறந்த ஞானமும் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்ற உணர்வுகளைத் தாய் தந்தையர் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்த முறைப்படி செய்து பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் குடும்பத்தில் உள்ளோரை ஒற்றுமையுடன் வாழச் செய்யும் அறிவாற்றல் கொண்ட ஞானக் குழந்தையாக உருவாகும்.

செய்து பாருங்கள்…!