“விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றை மட்டும் குறியாக வைத்துக் கொள்ள வேண்டும்

polaris-northern-star-big-dipper

“விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றை மட்டும் குறியாக வைத்துக் கொள்ள வேண்டும்

உதாரணமாக இரண்டு பேர் நம்மைக் கடுமையாகத் திட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமக்கு எரிச்சல் வருகின்றது… வேதனையும் வருகின்றது…!

அப்போது அந்த எரிச்சலும் வேதனையும் வரும் போது அவனை நினைக்கும் போதெல்லாம் “என்னை இப்படிக் கேவலாமாகப் பேசினான்… பேசினான்.. பேசினான்…! என்று நாம் அதிகமாகப் பேசுகின்றோம்.

எரிச்சலையும் வேதனையையும் அதிகமாகச் சுவாசிக்கும் போது நம் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இரத்தமாகக் கலக்கப்படும் போது கை கால் குடைச்சல் தலை வலி மேல் வலி இடுப்பு வலி அஜீரணக் கோளாறு இதைப் போல நிலைகளெல்லாம் உரு பெற்று விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று வேதனைப்படும் சந்தர்ப்பம் வந்தால் அடுத்த கணம் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் இரத்தத்தில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் நினைவைச் செலுத்திச் சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் வெள்ளி பித்தளை ஆவியாகப் போவது போன்று எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ அப்போதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்துத் தீமைகளைப் பிரிக்க வேண்டும்.

நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. பத்திரிக்கைகளைப் பார்க்கின்றோம். பயங்கர ஆயுதங்கள் கொண்டு ஒரு குடும்பத்தைத் தாக்கிவிட்டு வீட்டிலுள்ள பொருளை எடுத்துச் சென்றான் என்று படிக்கின்றோம்.

அந்த நினைவுகள் நம்மை இயக்கி இரவிலே அந்த நினைவுகள் வந்து “சறுக்…!” என்று சத்தம் கேட்டாலே நம்மை அலறச் செய்கின்றது…! பதட்டமாகின்றோம். ஏனென்றால்
1.நமக்குள் எதைப் பதிவு செய்கின்றமோ
2.அந்தப் பய உணர்வுகளும் “இப்படி ஆகிவிட்டதே…” என்ற வேதனை உணர்வுகளும்
3.உமிழ் நீராகச் சேர்த்து நம் உடலுக்குள் வித்தாகின்றது.

பதிவானதை நீக்க வேண்டும் என்றால் மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் எடுத்து அதைச் சுவாசித்து அந்த உமிழ் நீரை நம் உடலுக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

தங்கத்திற்குள் திரவகத்தை விட்டதும் அழுக்குகள் ஆவியாக ஆனது போன்று எவ்வளவு கொடிய வேதனையோ எரிச்சலான நிலைகள் இருந்தாலும் அதை அகற்றிட முடியும். மனதைச் சமப்படுத்த முடியும்

கெட்டதைச் சந்திக்கின்றோம் என்றால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அப்போதைக்கப்போது சேரும் அழுக்கை துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படிக் கற்று கொண்டால் தான் நாம் மனிதன் என்ற நிலைகளில் முழுமை அடைந்து எங்கே ஒளியாகச் செல்ல வேண்டுமோ அந்தப் பாதையிலே செல்ல முடியும்.

மீன் தனக்குள் இருக்கும் காந்தம் குறையும் பொழுதெல்லாம் வெளியில் வந்து தனக்குத் தேவையான காந்தத்தை எடுத்துக் கொண்டு தான் அடைய வேண்டிய நிலைகளுக்குச் செல்கின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்த பின் விண் செல்ல வேண்டும் என்பதே ஞானியர்கள் அறிந்துணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மையின் நிலைகள்.

ஆகவே
1.”விண் செல்ல வேண்டும்…!” என்ற நினைவு ஒன்றைக் குறியாக வைத்து
2.அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் நடந்து
3.”அழியா ஒளிச் சரீரம் பெறும் நல்ல சந்தர்ப்த்தை…” இந்த வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

பல நினைவுகளில் நாம் இல்லாமல் “ஈஸ்வரா…..!” என்று ஒரு நிலையில் நம் நினைவு இருக்க வேண்டும்

Peace of Mind

பல நினைவுகளில் நாம் இல்லாமல் “ஈஸ்வரா…..!” என்று ஒரு நிலையில் நம் நினைவு இருக்க வேண்டும்

ஒருவர் நோயோடு ரொம்ப வேதனைப்படுகிறார் என்று நாம் பார்க்கின்றோம். ஐயோ.. பாவமே…! என்று சொல்லி விட்டு அந்த நோயை நீக்குவதற்கு அவருக்கு நாம் உதவி செய்கிறோம்.

ஆனாலும் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லை என்றால் என்ன ஆகும்….?
1.அவரின் நோயின் தன்மையைப் பற்றிக் கேட்டு நுகர்ந்த பின்
2.அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த நோயின் தன்மை நமக்குள் வரும்.

நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெற வேண்டும். அவர் உடல் நலமாக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அவருக்கு வந்ததைப் பார்த்து “ஐயோ…! என்றால்…
1.நமக்குள்ளும் ஐயோ என்று அந்த நோயை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
2.அவர் பட்ட வேதனையைத்தான் உருவாக்கும்.

நல்லதைச் செய்கிறேன் என்ற நிலையில் “நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்…! என்று அந்தப் பக்குவ நிலை தவறினால் என்னாகும்..?

வடையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் காயாமல் தட்டிப் போட்டால் ஒரு வடை போட்டால் வேகும். இரண்டாவது வடையை போட்டவுடன் சூடு அமர்ந்து விடும்.

அப்போது வடை வேகுமா…? எண்ணெயைத்தான் எடுத்துக் கொள்ளும். சட்டியில் எண்ணெய் காணமல் போகும். வடையில் ருசி இருக்காது.

ஆகையால் வாழ்க்கையில் எந்த ஒரு தீமை என்ற உணர்வை நுகர்ந்தாலும் அடுத்த கணம் அதைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்குப் பக்குவம் வர வேண்டும்.

ஒருவன் தீய வினைகளைச் செய்கிறான். அதைப் பார்க்கிறோம் என்றால் அது நமக்குள் வராதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை வைத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தாற் போல் யாரிடம் சொன்னாலும் குற்றங்களில் இருந்து அவன் மீள வேண்டும்… “மீள்வான்…!” என்று சொல்ல வேண்டும். ஆனால்
1.பாருங்கள்…! இந்த மாதிரித் திட்டிக் கொண்டு இருக்கின்றான்.
2.நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று கோபமாகச் சொன்னால் என்ன செய்யும்?

பக்குவம் தவறினால்… இதே உணர்வு கோபமாக அவரையும் நம் மீது திருப்பிப் பேசச் செய்யும். நம் மீது தான் குற்றவாளி ஆக்கும். ஏனென்றால்
1.அவன் உணர்வு நமக்குள் வந்து
2.இதே சொல் அங்கே போய்
3.நம்மைக் குற்றவாளியாக ஆக்கும்.
4.அப்போது தவறு செய்பவனுடைய உண்மையை நாம் எடுத்து சொல்ல முடியாது.

ஆகவே அந்த மாதிரி ஆகாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெறவேண்டும்… உண்மையை அவர் உணர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அந்தப் பரிபக்குவத்தைப் பெற்று தீமையை நமக்குள் புகாதபடி தீமையை மாற்ற வேண்டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாமியார் செய்வார்… சாமி செய்யும்.. கடவுள் செய்வார்… என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்
1.உள் நின்று இயக்கும் நம் உயிரே கடவுள்
2.நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகின்றது – அதுவே நம்மை இயக்குகின்றது.

தீமையான இயக்கங்களிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். தீமையை நீக்கிய மகரிஷிகளின் உணர்வினை எடுத்து ஒவ்வொரு செயலையும் நமக்குள் பக்குவப்படுத்த வேண்டும்.

அந்த நிலை பெறுவதற்காகத்தான்
1.பாட்டை மட்டும் பாடி விட்டுப்
2.பல நினைவில் நான் இல்லாமல் பரி பக்குவ நிலை நான் பெற
3.எனக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கேட்கின்றோம்.

“கண்ணன்” கம்சனையும் நரகாசுரனையும் கொன்றான் – விளக்கம்

Image

Narakasura vadam

கண்ணன் கம்சனையும் நரகாசுரனையும் கொன்றான் – விளக்கம்

 

கண் தெரிந்த பிற்பாடு தன் இரையைத் தேடிச் செல்லுகின்றது ஒரு புழு. எந்த இலையில் பிறந்ததோ அதே ஆகாரத்தைத் தேடி அந்தப் புழு செல்கின்றது.

அப்போது புழுவின் எதிரியான ஒரு குருவி இதை விழுங்க எண்ணுகின்றது. அந்தப் புழுவை விழுங்கித் தன் ஆகாரமாகப் பசிக்கு எடுத்துக் கொள்ள விரும்புகின்றது.

குருவி அந்தப் புழுவைத் தன் வலையில் சிக்க வைப்பதற்காக இனிமையான ஒலியை எழுப்பிக் கத்துகின்றது. புழுவோ குருவியின் ஆட்டத்தைப் பார்க்கின்றது. அதனுடைய ஒலியைக் கேட்டு ரசித்து நிற்கின்றது.

புழுவின் கண்ணிற்குள் இருக்கக்கூடிய கரு விழி குருவியைத் தனக்குள் பதிவு செய்து அந்த ஆட்டத்தை ரசித்துப் பார்க்கின்றது. கரு விழிக்குப் பெயர் “ருக்மணி…”

ஆனால் அதே சமயம் குருவியோ இந்தப் புழுவை விழுங்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதைச் சுவாசித்து அந்த உணர்வின் எண்ணமாக குருவியின் உடலை அது இயக்குகின்றது.

தான் சுவாசித்த அந்த உணர்வு கொண்டு “கண்ணினாலேயே” அந்தப் புழுவை விழுங்கப் பார்க்கின்றது.

புழுவோ அந்தக் குருவியைப் பார்க்கும் போது அது எண்ணிய எண்ண அலையே இங்கே சத்தியபாமா என்ற உணர்வு புழுவிற்கு உண்மையை உணர்த்துகின்றது.

ஏனென்றால் கண் தெரியாத பொழுது…
1.தெரிய வேண்டும் பார்க்க வேண்டும்
2.உண்மையை அறிய வேண்டும் என்று ஏங்கியதால் தான்
3.பரிணாம வளர்ச்சியாகிக் கண்களே தோன்றியது.

கண் தோன்றிய பின் ஒரு இலையைச் சாப்பிட்ட புழுவிற்கு அடுத்த இலை வேண்டுமே என்ற எண்ணத்தில் திரும்பிப் பார்க்கும் போது அங்கே குருவி உட்கார்ந்திருக்கின்றது. அந்தக் குருவி இதை விழுங்கப் பார்க்கின்றது.

அப்போது இதை விழுங்க வேண்டும் என்ற அந்தக் குருவியின் கண்ணில் இருந்து வந்த உணர்வலை புழுவின் மேல் படுகின்றது.

புழுவோ அந்தக் குருவியைப் பார்த்து அது எண்ணிய எண்ணத்தைக் கவரும் பொழுது “சத்தியபாமா…!”
1.அந்த உண்மையைத் தனதாகப் புழுவிற்குள் காட்டி
2.அதைச் சுவாசித்தவுடன் உயிரிலே பட்டு அது கரைகின்றது.
3.அது தன்னை விழுங்க எண்ணுகின்றது என்ற உணர்வின் எண்ணத்தைப் புழுவிற்குள் உணர்த்தி
4.”நீ தப்பித்துக்கொள் “என்ற இந்த உணர்ச்சியை உந்தி அது துரத்தி விடுகின்றது
5.அதாவது “நீ தப்பித்துக் கொள்… இல்லை என்றால் உன்னை விழுங்கி விடும்…!” என்ற உண்மையைச் சொல்லுகின்றது.

இதைத் தான்
1.கண்ணன் வெண்ணெயைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் என்றும்…
2.கண்ணன் கீதா உபதேசம் சொல்கின்றான் என்றும்
3.அசுரனிடமிருந்து காத்துத் தன்னை ரட்சிக்கின்றான் (நரகாசுரனிடமிருந்து) என்றும்
4.கண்ணனைப் பற்றிக் காவியங்களில் தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

ஆரம்பத்தில் கண் இல்லாத உடல் பெற்றாலும் வளர்ச்சியில் கண் உதித்த பின் தன் எதிரியிடமிருந்து தப்பிப்பதற்குக் கண்கள் எப்படி இயக்குகின்றது உண்மையை உணர்த்தி நம்மை எப்படிக் காக்கின்றது என்பதை அறிந்திட அவ்வாறு காட்டினார்கள் ஞானிகள்.

குருவி இதை விழுங்க வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வின் தன்மையை புழுவின் கண் உணர்த்தி அந்த மயக்க நிலைகளில் சிக்காது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வு கொண்டு அது தப்பித்துச் செல்லுகின்றது.

அப்போது அந்த அசுர சக்தியைத் தனக்குள் அது இயக்காத வண்ணம் அதைச் சம்காரம் செய்து தன் உணர்வின் ஆற்றலால் தன்னை தற்காத்துக் கொள்ளும் உணர்வின் நிலைகள் கொண்டு அந்தப் புழு தப்பிக்கின்றது.

அதை உணர்த்துவதற்காகத்தான் அந்த அசுர சக்தியைக் கம்சன் என்று காட்டியிருப்பார்கள். கம்சன் பிறக்கக்கூடிய எல்லாக் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் (தேவகியின் குழந்தைகள்) என்று சொல்லி ஒரு கதையை எழுதி வைத்திருப்பார்கள்.

ஏனென்றால் கண்கள் இல்லை என்றால் தான் வளர்வதற்காக எந்த ஜீவனானாலும் அதைத் தான் புசித்துத் தான் எடுத்துக் கொள்ளும் நிலையை உணர்த்துவதற்காக அவ்வாறு கம்சனைக் காட்டுகின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின் அந்த உண்மையினுடைய நிலைகளை (அந்தக் குருவியின் எண்ணத்தை) இந்த புழு தான் இழுத்துச் சுவாசிக்கும் போது
1.உயிரிலே பட்டு இயக்கித்
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையாக வந்ததைத்தான் “சூரசம்காரம்…!” என்று
3.கண்ணன் அசுரனைக் கொன்று நம்மை இரட்சிக்கின்றான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இப்படித் தான் தனக்கு வரக்கூடிய விபத்துக்களிலிருந்தெல்லாம் கண்களால் தப்பித்து அதற்குத்தக்க உணர்வின் சுவாசத்தைத் தனக்குள் வளர்த்து பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்துள்ளோம் என்றும் காட்டுகின்றார்கள்.

“நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாக ஆகின்றாய்…!” என்று கண்ணன் கீதா உபதேசமாகச் சொன்னான் என்று கூறப்பட்டது.

மனிதனான நாம் நம் கண்களின் நினைவாற்றல் கொண்டு விண்ணிலே எட்டாத தொலைவிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வுடன் தொடர்பு கொண்டு அதை நாம் பருகினால்
1. மனித உடலுக்குள் வரும் தீமைகளை – நரகாசுரனைக் கொன்று
2.இந்த உடலுக்குப் பின் அழியா ஒளி உடலாகப் பெறலாம் என்பதைத்தான்
3.”தீப ஒளி” என்று நமக்கெல்லாம் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

தொழில் செய்யும் இடங்களில் டென்சன் (TENSION) ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

Breathing circle

தொழில் செய்யும் இடங்களில் டென்சன் (TENSION) ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

தொழிலுக்கு அதிபதியாக நான் இருக்கிறேன். தொழில் நடக்கும் இடங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

என்னுடைய உணர்வின் வேகத்தால் அங்கே வேலை பார்ப்பவர்களைக் கடுமையாகப் பார்க்கிறேன். என் சொல் அங்கே அவர்களிடம் படுகின்றது.

அந்தத் தொழிலாளியின் செவியிலே பட்டபின் என்னை உற்றுப் பார்ப்பான்.
1.உற்றுப் பார்க்கப்படும் போது நான் எந்த வெறுப்பின் நிலை அடைந்தேனோ
2.அது அவனிடம் பட்டு அடுத்து முதலாளி என்ற அச்ச உணர்வுகள் இருப்பின்
3.இந்த உணர்வின் தன்மை அது அவன் செயலைப் பலவீனப்படுத்தும் நிலையாகவே அங்கு வருகின்றது.

முதலாளி வந்து பார்த்துவிட்டுச் சென்றார் என்று அந்தத் தொழிலாளி எண்ணினாலும் அடுத்த கணம் நகர்ந்தபின்
1.நான் எப்படி வெறுப்பின் தன்மை கொண்டு இருந்தேனோ
2.அதே வெறுப்பான உணர்வுகள் கொண்டு அவன் இயந்திரத்திலோ மற்றதிலோ கணக்கிலேயோ உற்றுப் பார்க்கப்படும் போது
3.இவன் உணர்வுக்கொப்பதான் கண்ணின் புலனறிவு ஓடும்.

ஒரு தறியை நெய்கிறான் என்றால் அந்த இயந்திரத்திலே இருக்கும் நாடா துரித நிலைகளில் ஓடினாலும் அதற்குள்ளும் ஒரு ஈர்ப்பின் தன்மை உண்டு.

இயந்திரமோ நாடாவோ எல்லாவற்றுக்குள்ளும் காந்தப் புலன் உண்டு. எந்த உணர்வின் தன்மை கொண்டு அதை உற்று நோக்குகின்றோமோ அவனின் வெறுப்பான உணர்வலைகள் அதிலே பட்டபின் பார்க்கலாம்.
1.அந்த நாடா குதித்து ஓடும்
2.ஏனென்றால் அது சீராக ஓடுவதை இந்த வெறுப்பின் உணர்வுகள் இயக்கி இந்த நிலையைச் செய்யும்.

நான் முதலாளி பார்த்து விட்டு வந்தேன் என்றாலும் என்னிடம் வேலை செய்பவனைக் கடுமையாக வெறுத்துப் பேசும் பொழுது
1.முதலாளி என்ற உணர்வுகள் அவனிடம் கலந்து
2.அந்தச் சோர்வின் தன்மை அங்கே இயக்கி நாடா வெளியே ஓடும்.

இப்படி…. மற்றவர்களினுடைய நிலைகளில் ஒவ்வொரு செயல்களையும் நாம் உற்றுப் பார்த்தாலும் அந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் தொழிலும் படுகிறது. ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

நமக்குள் விளைந்த உணர்வின் தன்மை கலந்து கலந்து மற்றவர்களின் உணர்வின் தன்மை
1.நம்மிடம் எதிர்பார்ப்பவர்களிடத்திலும் கலந்து
2.நமக்கே அது எதிரியாக்கிவிடுகின்றது.

நாம் வீட்டிலே அமர்ந்திருக்கும் பொழுது இதே போன்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் இத்தகைய உணர்வுகள் அதிகமாகப் பதிந்து விடுகின்றது.

சூரியனின் வெப்ப காந்த சக்தியின் அலைகள் படரப்படும் பொழுது பதிந்த உணர்வுகள் மீண்டும் அலைகளாகப் படர்ந்து மீண்டும் நமது ஆன்மாவில் கலந்து அதையே (எதை அதிகமாக எண்ணிக் கொண்டிருந்தோமோ) அதிகமாக நினைவு கூறும் தன்மை வந்து விடுகின்றது.

“தொழிலிலே நஷ்டம்…நஷ்டம்… கஷ்டம்…கஷ்டம்…!” என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது அதையே நினைத்துக் கொண்டிருப்போம்.

நஷ்டம் நஷ்டம் என்று எண்ணி எதை உடலுக்குள் விளைய வைத்தோமோ இந்த உணர்வுகள் ஆழமாக நம் வீட்டிலே பதிந்து
1.அது மீண்டும் நினைவாற்றலாக நமக்குள் வந்து
2.அந்தச் சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கச் செய்கின்றது.

இப்படித்தான் நம் சாதாரண வாழ்க்கையில் இருள் சூழ்கின்றது.

யதார்த்தமான நிலைகளில் பிறர் செய்யும் தவறுகளை உணர்ந்தறிகின்றோம். இத்தகைய சூழலில் இருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும் என்ற அறிவின் தன்மையும் இருக்கின்றது.

இருந்தாலும் சந்திரனை மற்ற கோள்கள் மறைக்கும் பொழுது அதற்குப் போகும் ஓளிக் கற்றைகளைத் தடுத்து சந்திரனின் ஒளி மங்குகின்றதோ இதைப் போன்று தான் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வின் தன்மை தடைபடுகின்றது.

நாம் தவறு செய்யாமலே இப்படி ஒன்று வருகின்றது. இதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

அதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பற்றிச் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் இருள் சூழும் சந்தர்ப்பங்களில் அதிலிருந்து விடுபட துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகிய பின்
1.இருள் சூழச் செய்யும் உணர்வுகளைச் செயலற்றதாக்கி
2.ஒளியான உணர்வின் அறிவாக ஞானமாக இயக்கச் செய்து
3.சிந்தித்துச் செயல்படும் தன்மையாக நம்மை இயக்கும்

அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு நம்மில் வந்து மோதும் உணர்வுகளுக்கொப்ப அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையும் நல்லதாக்கச் செய்யும் பரிபக்குவ நிலையும் நமக்குள் வரும்.

நம் சொல் செயல் புனிதம் பெறும். மற்றவர்களையும் அது தெளிந்திடும் நிலையாக இயக்கச் செய்யும்.

நீரை எதிர்த்துச் செல்லும் மீன் போல மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்க்கையில் எதிர்படும் தீமைகளை விலக்கிச் செல்ல நம்மால் முடியும்…!

Image

Matsya avatar

நீரை எதிர்த்துச் செல்லும் மீன் போல மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்க்கையில் எதிர்படும் தீமைகளை விலக்கிச் செல்ல நம்மால் முடியும்…!

 

உதாரணமாக மீன் நீருக்குள் நீந்திச் செல்கின்றது. மீனுக்குள் இருக்கக் கூடிய காந்தம் குறையுமானால் அது மீண்டும் நீரை விட்டு வெளியில் வருகின்றது.

வெளியில் வந்து தனக்குத் தேவையான காந்தத்தைச் சுவாசித்துவிட்டு மீண்டும் நீருக்குள் செல்கிறது.
1.நீரின் வேகம் அதிகமானால்
2.இந்தக் காந்தத்தைச் சுவாசித்து எதிர் நீச்சலாகி
3.தன்னுடைய இடங்களுக்குச் செல்கின்றது.

உயரமான இடங்களிலிருந்து நீர் பாய்ந்து வீழ்ந்தாலும் (நீர் வீழ்ச்சி) அதிலும் சில மீனினங்கள் எதிர்த்துச் செல்லும் ஆற்றல் கொண்டது.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் தீமைகள் வரும் பொழுதெல்லாம் நம் கண்ணின் நினைவை “விண்ணை நோக்கிச் செலுத்தும்…..” பழக்கம் வர வேண்டும்.

“ஈஸ்வரா….!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்திகளை இழுத்துக் கவர்ந்து சுவாசிக்க வேண்டும்.

1.நமக்குள் வரக்கூடிய விஷத் தன்மையான தீமைகளை நீக்க
2.தனக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைக் கூட்டி
3.அந்தக் காந்த சக்தியின் துணையால் எதிர் நீச்சலாகி
4.ஒளியின் சரீரமாகப் பெற்று
5.நாம் விண் வெளி செல்லும் அந்த நிலைகள் பெற வேண்டும்.

வியாசகர் காட்டிய “மச்சாவதாரம்…!” என்பதன் நிலைகள் இது தான்.

கிட்னி (KIDNEY) பழுதடைவது ஏன்…? அதைச் சீராக இயக்கச் செய்யும் வழி என்ன…?

Image

Kidney transplant

கிட்னி (KIDNEY) பழுதடைவது ஏன்…? அதைச் சீராக இயக்கச் செய்யும் வழி என்ன…?

வாழ்க்கையில் நாம் நல்லதையே எண்ணிக் கொண்டிருந்தாலும் பிறர் செய்யும் செயல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் செயல்படும் பொழுது அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

ஒரு வெள்ளைத் துணியை நாம் போட்டிருந்தாலும் அது அழுக்குகள் சேர்ந்துவிட்டால் அடுத்த நிமிடம் சோப்பைப் போட்டு வெளுத்து விடுகின்றோம்.

அதைப் போன்று தான் தீமையை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் உணர்வைச் சுத்தப்படுத்தும் நிலையே யாம் உபதேசிக்கும் இந்த நிலைகள்.

ஏனென்றால் இன்று தாவர இனங்களில் பூச்சிக் கொல்லி மருந்தைத் தூவி பூச்சிகளைக் கொன்று அதிலே விளைந்தவைகளைத் தான் உணவாக நாம் உட்கொள்கின்றோம்.

1.நாம் தூவிய நஞ்சை ஏற்றுக் கொண்டு அந்தப் பூச்சிகள் இறந்தாலும்
2.நஞ்சுகள் புழுவின் உடலில் விளைந்து
3.மிகவும் நஞ்சு கொண்ட கிருமிகளாகப் புழுக்களாக விளைகின்றது.
4,பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆனால் அதே சமயம் நாம் பாய்ச்சிய அந்த பூச்சிக் கொல்லி மருந்து தாவர இனத்திலும் கலந்து அதுவும் நஞ்சாக மாறி அதையே நாம் உணவாக உட்கொள்ளும் போது “நம் உடலுக்குள் பல நோய்களாக விளையத் தொடங்குகின்றது….!”

தாவர இனத்தில் விழுந்த பூச்சிகளையும் புழுக்களையும் மருந்தைத் தூவி இரக்கமற்றுக் கொன்றது போல நமக்குள் அந்த உணர்வின் தன்மை நஞ்சாக நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

நமக்குள் நஞ்சின் உணர்வுகள் அதிகமாக விளைந்து விட்டால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் நிலைகள் கிட்னி (சிறுநீரகங்கள்) செயலற்றதாகி நல்ல அணுக்களைக் கொன்று (பூச்சிகளைக் கொன்றது போல்) பல நோய்களை உருவாக்கும் நிலைகளாக உருவாக்கி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ
2.”அந்தக் கிட்னி” தன் வடிகட்டும் திறனை இழந்து
3.அதனால் நஞ்சின் தன்மைகள் நம் உடலுக்குள் படர்ந்து
4.நம் சிந்திக்கும் திறனைச் செயலற்றதாக்கி
5.நஞ்சை வளர்த்திடும் உடலாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்…?

விஞ்ஞானி அணுவைப் பிளந்து அணு குண்டைத் தயார் செய்கின்றான். மெய் ஞானிகளோ உணர்விற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.

அந்த மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் விஞ்ஞான அறிவால் நம்மை அறியாமல் நமக்குள் சேர்ந்த நஞ்சைப் பிளக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் கிட்னி முழுவதும் படர்ந்து கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினைக் கிட்னிக்குள் பாய்ச்சிப் பழக வேண்டும்.

அந்த ஞானியின் உணர்வலைகள் நீங்கள் சுவாசித்து உங்களை அறியாது வந்த நோய்களையும் தீய வினைகளையும் நீக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு ஆண்டெனாவை (ANTENNA) விண்ணை நோக்கிச் வைக்கப்படும் போது விண்ணிலிருந்து வருவதைக் குவித்துக் கவர்ந்து டிவியில் தெளிவாக உணர்த்துகின்றது.

1.அந்தச் சக்தி வாய்ந்த ஆண்டெனாவைப் போல
2.இந்த உபதேசத்தைக் கூர்ந்து கவனித்த உணர்வின் அலைகள்
3.உங்கள் கண்ணின் கருவிழியின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக மாறி
4.விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எளிதில் சுவாசிக்க முடியும்.

நீங்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று உங்கள் உடலுக்குள் அதைச் சேர்க்க முடியும்.

ஆகவே பிறர் தவறு செய்வதைப் பார்க்கும் பொழுது நமக்குள் அந்த வேதனையும் சோகமும் எரிச்சலும் கோபமும் இதைப் போல உணர்ச்சிகளைத் தூண்டி உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

பின் இது உடலுடன் இணைந்து விட்டால் அதனின் விளைவே அதிகமாகின்றது. அதனை விளைய விடாது தடுக்க வேண்டும் என்றால் இப்போது உபதேசித்த உணர்வின் தன்மை ஊழ் வினையாகப் பதிந்து கூர்ந்து அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தின் நிலைகளில் இருந்தால் இதுவே தியானம்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
2.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.அந்த மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் ஏக்கத்தில்
4.வலு கொண்டு நாம் அமர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தோம் என்றால் அதனின் பலனை நாம் அனுபவிக்கலாம்.

மூட்டு வலியைப் போக்கும் செடி

Mimosa_pudica

மூட்டு வலியைப் போக்கும் செடி”

ஒரு சமயம் குருநாதர் என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கப்படும் போது ஒரு இடத்தில் உட்காரச் சொன்னார்.

அவர் ஒரு பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். என்னை ஒரு பக்கம் உட்காரச் சொன்னார். உட்கார்ந்தபின் அந்த இடத்தில் தரையில் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகின்றது. என்னால் உணர முடிந்தது.

இனம் புரியாத ஈர்ப்பு வரப்படும் போது “என்ன…?” என்று பார்த்தால் மண்ணிற்குள் மறைந்த வித்துகள் மனிதனின் எண்ணத்தைக் கவர்கின்றது. ஏனென்றால்
1.அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு இறந்த மனிதனின் உடல் பட்டபின்
2.அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகின்றது.
3.வளர்ந்த செடிகளின் வித்துக்கள் அங்கே பரவிக் கிடக்கின்றது.
4.அதன் மீது நான் உட்கார்ந்தவுடனே அப்போது ஒரு வித அரிப்பின் தன்மையாகி
5.அந்த ஈர்ப்புடன் அந்தச் செடி ஏங்கி என்னிடம் வருகின்றது.

தொட்டால் வாடி…! என்றும் தொட்டால் சிணுங்கி…! என்றும் சில செடிகளைப் பற்றிக் கேள்விட்ப்பட்டிருப்பீர்கள்… பார்த்திருப்பீர்கள்.

தொட்டால் சிணுங்கிச் செடியை நாம் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் வடியும். நீர் வடியும். தொட்டால் வாடி என்றால் நாம் தொட்டவுடனேயே அப்படியே வாடிவிடும்.. சுருங்கிவிடும்.

தொட்டால் “வாடி…” தொட்டால் “சிணுங்கி…” என்று இப்படிச் செடிகளுக்கும் இத்தகைய உணர்வின் நிலையாக வருகின்றது.

ஒரு மனிதன் இறந்த பின் அந்த உடலில் அவன் என்னென்ன குணங்களை வளர்த்துக் கொண்டானோ அத்தகைய உணர்வுகள் மற்ற தாவர இனங்களில் கலந்த பின் அதனின் நிலையாகச் செடிகள் உருவாகின்றது.

ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் பல உணர்வுகளின் தாக்குதலால் சோர்வடைந்திருப்பான். அந்தச் சோர்வடைந்த (வாடிய) உணர்வுகள் அந்தச் செடிகளில் சேர்த்த பின் மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அதுவும் வாடுகின்றது.

அந்தச் செடியைப் பதப்படுத்தி மனிதனுக்கு நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சிலருக்கு மூட்டு வாதம் இருக்கும். சில உப்புச் சத்துக்கள் இரத்தத்தில் அதிகரித்து விட்டால் இரத்தம் அது உறையும் தன்மை அடைந்து மூட்டுகளில் உறைந்துவிடுகின்றது. அது சீழாக மாறுகின்றது.

தொட்டால் சிணுங்கி என்ற செடியையும் மிளகையும் அரைத்துச் சேர்த்து அதைப் பற்றாகப் போட்டால்
1.இந்த உணர்வின் இந்த கார உணர்ச்சிகள் ஊடுருவிச் சென்று
2.இரத்தம் உறையச் செய்த அணுக்களை வாடச் செய்து
3.அந்த வாதத்தை அகற்றி உடல் நலம் பெறச் செய்கிறது.

இயற்கையின் நிலைகள் மாற்றமாகும் போது தாவர இனங்கள் எப்படிப் புதிது புதிதாக உருவாகின்றது, விஷத்தையே உணவாக உட்கொள்ளும் இத்தகைய (தாவர இன) அணுக்களும் உண்டு.

ஆனால் அந்த அணுக்கள் மற்ற நிலைகளில் படரப்படும் போது எந்தெந்த நிலைகள் ஆகின்றது..? என்ற நிலையைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவபூர்வமாகக் காட்டினார்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்றால் அதே நோய் நமக்கும் எதனால் எப்படி வருகின்றது…? நோயைத் தடுக்கும் வழி என்ன…?

Light atoms -divine

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்றால் அதே நோய் நமக்கும் எதனால் எப்படி வருகின்றது…? நோயைத் தடுக்கும் வழி என்ன…?

ஒரு நோயாளி வேதனையுடன் அவஸ்தைப்படுகின்றான். சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

அவனிடமிருந்து வெளிப்படும் அந்த வேதனை உணர்வலைகளை நாம் நுகர்ந்தறியும் போது அவன் படும் வேதனை நமக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. நம் இரத்த நாளங்களிலே அந்த உணர்வுகள் கலக்கின்றது.

அந்த நோயாளியைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அதே நோயை உருவாக்கும் கருவாகி முட்டையாக வெடித்த பின் நோயின் அணுக்கள் நம் உடலுக்குள் பெருகிவிடுகின்றது.

1.எத்தனை பேர் எந்தெந்த விதத்தில் பேசுகின்றனரோ
2.நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி நினைவாக்கும் பொழுது
2.அந்தந்த விதத்தில் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.

நாம் ரோட்டில் செல்லும் போது நமக்குச் சம்பந்தமே இல்லாத “யாரோ ஒருவன்… வேதனைப்படுகின்றான்…!” என்றால் உற்றுப் பார்த்த பின் “அவனைப் பற்றி நாம் திரும்ப எண்ணுவதில்லை…..!”

அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
1.திரும்ப அவனைப் பற்றி எண்ணாததனால்…
2.அவன் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வளராது தடைபடுத்தப் படுகின்றது.

அதே சமயத்தில் தொழில் செய்யும் இடத்தில் ஒரு நண்பனிடம் நாம் நெருங்கிப் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் அவனுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால் அதை உற்றுப் பார்த்து நுகரப்படும் போது நாமும் “அடடா… உனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று வேதனைப் படுகின்றோம்.

அப்பொழுது அது நம் இரத்தத்தில் கலந்து அணுவாக உருவாகும் கருக்களாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் மேல் நாம் பற்று கொண்ட நிலையில் திரும்பத் திரும்ப அந்த நண்பனை எண்ணும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரத் தொடர்கின்றது.

ஒரு கோழி அது கருவுற்றால் உடனே கேறுகின்றது. கேறும் போது அந்தக் கரு வலு பெற்று முட்டையாக உருபெறுகின்றது. முட்டைகள் பருவமானபின் முட்டை வெடித்து கோழிக் குஞ்சுகளாக உருவாகின்றது.

குஞ்சுகள் வெளிவந்த பின் அது தன் ஆகாரத்திற்காக வேண்டி கத்துகின்றது. கோழியும் கூவி உணவிற்காக அழைத்து மண்ணைப் பறித்துக் காட்டுகின்றது.

இதைப்போன்று தான் நம் நண்பன் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கரு முட்டையாகி விட்டால் திரும்பத் திரும்ப எண்ணும்போது அது வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சி அடைந்து அணுக்களாக உருவான பின் அது உணவிற்காக அந்த உணர்ச்சிகளை வெளியிடும் போது அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

1.அப்போது உயிர் கண் காது மூக்கிற்கு ஆணையிட்டு
2.எந்த நண்பன் உடலில் இருந்து அந்த உணர்வுகள் வெளி வந்ததோ
3.அது காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது
4.அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது நோயாகின்றது.

பின் அந்த நோயை உருவாக்கும் அணுக்கள் பெருக்கிவிட்டால் அந்த நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோயையே நமக்குள்ளும் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக இரத்தக் கொதிப்புடன் வாடுகின்றனர். அத்தகைய நண்பரைப் பார்க்கின்றோம். அவருக்கு வந்த இரத்தக் கொதிப்பை நாம் கேட்டு அதை விசாரிக்கின்றோம்.

அப்பொழுது அந்த நண்பனைப் பற்றித் திரும்ப திரும்ப அதிகமாக எண்ணும் போது அதே உணர்வு நம் இரத்த நாளங்களில் கலந்து நமக்குள் இரத்தக் கொதிப்பை உருவாக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.

அதே மாதிரி நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசுகின்றோம்.. பழகுகின்றோம். சந்தர்ப்பத்தால் பகைமையாகி விட்டால் அந்தப் பகைமை உணர்வுகள் தோன்றிய பின் அவர்களை ஏசிப் பேசித் தாக்கும் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.

அந்த மனிதனை எண்ணும் போதெல்லாம் நமக்குள் அந்தக் கொதிப்பை ஏற்படுத்தும் அந்த உணர்வின் அணுவாக கரு முட்டையாக நமது உயிர் உருவாக்கிவிடுகின்றது.

பின் அவனை நினைத்தாலே கடுமையான கோப உணர்ச்சிகளைத் தூண்டும்.
1.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்து
2.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி
3.நாம் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட முயற்சித்தாலும்
4.அதைச் செயல்படுத்த முடியாத நிலைகள் தடையாகின்றது.
5.அதனால் மீண்டும் இந்தக் கொதிப்பின் தன்மை அடைந்து உச்சகட்டமாகி
6.அவனை எப்படியும் தாக்க வேண்டும் அல்லது அவனைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் பெருகப் பெருக
1.நம்முடைய எண்ணமே நமக்கு எதிரியாகி
2.நாம் சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு மாறாக
3.அவன் மேல் நினைவாகி அவனை எப்படியும் கெடுக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் அதிகமாகி
4.நம் காரியங்கள் தடையாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன பின் நாம் நினைத்த காரியங்கள் செயல்பட வில்லை என்றால் அடுத்தடுத்து நாம் குடும்பத்தில் கோபமாகப் பேசுவதும் தொழிலில் கோபமாகப் பேசுவதும் கொதித்தெழும் சக்திகள் வரும் போது நமக்குள் அந்த இரத்தக் கொதிப்பு முழுமையாகி விடுகின்றது.

இரத்த கொதிப்பு வந்துவிட்டால் நம் அங்கங்கள் கைகால் எல்லாம் நரம்பு மண்டலங்களெல்லாம் இழுத்து விடுகின்றது. கைகால் வருவதில்லை.

1.யாரை நினைத்து இந்தக் கோபத்தின் நிலைகள் பெற்றோமோ
2.நாம் அடிக்கடி அவர்களைப் பேசுவோம்
3.அவர்களும் அதே நிலைகளில் நம்மைப் பற்றிப் பேசுவார்கள்.
4.உடலை விட்டு வெளியே சென்ற பின் இந்த ஆன்மா அவர் உடலுக்குள் தான் புகும்.
5.இறந்த பின்னும் அந்த உடலுக்குள் சென்று இதே வேலையைத் தான் அதை செய்யும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களாக இருப்பவர்கள் இரத்தக் கொதிப்பு ஆகிவிட்டது என்று ஒருவருக்கொருவர் பாசத்துடன் கேட்டறிவதனால் அங்கே விளைந்த உணர்வுகள் இங்கேயும் விளைகின்றது.

இப்படித் தான் வாழ்க்கையில் மனித உருவைச் சீர்குலைக்கும் உணர்வுகளாக மாற்றி விடுகின்றது.

ஆகவே நண்பருக்குள் பகைமை உணர்வுகள் தோற்றுவித்தாலும் அதை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

எப்போது பகைமை உணர்வுகள் வருகின்றதோ அடுத்த நிமிடம் “ஈஸ்வரா….! என்று புருவ மத்தியில் உயிரை நினைத்து அந்தத் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் அதிகமாக வளர்த்து கொள்ளுதல் வேண்டும்.

அப்படி வளர்த்துக் கொண்டபின் அடுத்து
1.என் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று
3.வெறுப்படையும் சக்திகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்துச் சாந்தப்படுத்திப் பழக வேண்டும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் எத்தகைய உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அவைகளுக்குள் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைக்க வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகளின் செயலாக்கங்கள் தணிந்து ஒளியாக மாறும் அணுக்களாக நமக்குள் உருவாகும். வேதனையாக மாற்றாது.

இதைப் போன்று செய்து பழக்கப்படுத்திக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் நோய்களை நாமே நீக்க முடியும். செய்து பாருங்கள்.

“திடுக்…!” என்று பயத்தினால் அதிர்ச்சியான உணர்வுகளை நாம் அதிகமாகச் சுவாசித்தால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Image

Brahma visnu siva

“திடுக்…!” என்று பயத்தினால் அதிர்ச்சியான உணர்வுகளை நாம் அதிகமாகச் சுவாசித்தால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ரோட்டிலே செல்கின்றோம். திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்றால் நமது கண்ணின் கருவிழி அந்த பஸ்ஸைக் கூர்மையாகப் பார்க்கின்றது. அதை நம் உடலுக்குள் இருக்கும் எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கிவிடுகின்றது.

அது இயந்திரம் தான்.

இருப்பினும் அதில் இருந்து வெளிப்படும் இந்த அலையின் வேகத் தொடரை நம் கண்ணுடன் இணைந்த காந்தப்புலன் அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

உயிரின் இயக்க ஓட்டத்திற்குள் ஈர்க்கும் காந்தப்புலனான லெட்சுமி அதை ஈர்த்துச் சுவாசிக்கப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் பஸ் வேகமாக வருகின்றது என்று உணர்கின்றோம்.

உணர்ந்தாலும் அது வரும் வேகத்தில் நம் மீது மோதிவிடுமே…! என்ற பய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

1.கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான் குருக்ஷேத்திரப் போர்

நம்மைக் காக்க நமது கண்ணின் காந்தப் புலனான சத்தியபாமா “பஸ் வேகமாக வருகிறது…!” என்று உண்மையைத் தனதாகத் தனக்குள் நின்று எடுத்துக் காட்டுகின்றது.

உண்மையை உணர்த்துவதைச் சத்தியபாமா என்று பெயரை வைத்தாலும் இரண்டும் சேர்த்து கண்களைக் கண்ணன் என்று பெயர் வைக்கின்றார்கள் ஞானிகள்.

கண்ணின் கரு விழி படத்தைப் பதிவாக்குவதும் மற்றொன்று அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

நமது உயிருக்குள் இயக்கும் காந்தப்புலன் அதைக் கவரப்படும் போது அதைக் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அதாவது
1.நம் உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் குருவாக இருப்பது நம் உயிரே
2.குருவாக இருக்கும் அந்த உயிரின் க்ஷேத்திரத்தில்
3.கண்கள் கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது
4.அந்த உணர்வு எதுவோ அந்த நாதத்தை (சப்தத்தை) நமக்குள் ஊட்டுகின்றது.

பஸ்ஸினுடைய வேகத் தொடரைக் காட்டும் போது அது உயிரணு அல்ல. இயந்திரத்தால் ஓடக் கூடியது. அதனின் வேகத் தொடரை நாம் காணும் போது நம் மீது மோதிவிட்டால் நம்முடைய நிலை என்னாகும்…? என்று சிந்திக்க வைக்கின்றது “சத்தியபாமா…”

அப்போது அதை நுகர்ந்து கொண்டபின் பயத்தின் உணர்ச்சிகள் அதிகமாகக் கூடுகின்றது. சுவாசித்த பின் வெகு வேகமாக அந்த பஸ் வரும் பாதையை விட்டு நம்மை நகர்ந்து செல்ல வைக்கின்றது. நகர்ந்து சென்று தன்னைப் பாதுகாக்கின்றது.

உயிருக்குள் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகளுக்கும் அந்தப் போர் நடக்கின்றது. அது தான் “கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான் குருக்ஷேத்திரப்போர்…” என்று சொல்வது.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை (நம்மைக்) காக்க வேண்டும் என்ற உணர்வினை உண்மையைச் சொல்லுகின்றது கண்ணின் காந்தப் புலனான சத்தியபாமா.

அதாவது தன்னைப் பாதுகாக்கும் உணர்வின் போராக நடந்து இந்த உடலை ஒதுக்கித் தள்ளி விபத்திலிருந்து காக்கப்படுகின்றது என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத் தான் இத்தகைய காவியங்களைப் படைத்தார்கள் ஞானிகள்.

2.காக்கும் சக்தி சத்தியபாமா – வளர்க்கும் சக்தி இலட்சுமி

நாம் பார்த்துணர்ந்த அதனுடைய வேக அலைகள் நமக்குள் பயத்தை உண்டாக்குகின்றது. இயக்க ஓட்டம் அதிகமாகின்றது.

நம்மைக் காக்கக் கண்கள் அந்த உண்மையைச் சத்தியபாமா சொன்னாலும் நமக்குள் பய உணர்ச்சிகளை ஊட்டும் இந்த உணர்வுகளை நமக்குள் உருபெறச் செய்து விடுகிறது நமது உயிர்.

உயிரின் இயக்கம் ஈசனாக இருப்பினும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. அந்த இயக்கத்திற்குள் ஈர்க்கும் சக்தி காந்தம் லெட்சுமி.

1.கண் கவர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றும் போது
2.இயக்கத் தொடர் வரிசையில்
3.நமது காந்தப்புலனான லெட்சுமி உயிருடன் இணைக்கின்றது.

கண்ணின் காந்தப்புலனாக ஈர்க்கும் அந்த உணர்வுக்குப் பெயர் “சத்தியபாமா…” காக்கும் நிலை. நம் உயிரின் இயக்கத்திற்குள் ஈர்த்து அந்த உணர்வுகளை உணர்த்தச் செய்வது “லெட்சுமி” வளர்க்கும் நிலை,

காக்கும் நிலைக்கும் வளர்க்கும் நிலைக்கும் வித்தியாசம் என்றால் இதுவும் காந்தப்புலன் தான். உயிரில் ஈர்க்கக்கூடிய நிலையும் காந்தப்புலன்தான்.

காந்தப்புலன் என்றால் அறிவு. அந்தப் புலனறிவை. நமக்குள் காட்டும் போது காரணப் பெயராக வைத்து சத்தியபாமா….
1.அந்தப் பஸ்ஸின் வேகத் தொடரை நமது ஆன்மாவாக மாற்றிக் காட்டுகின்றது
2.ஆன்மாவில் அமைந்ததை உயிரின் காந்தப்புலன் லெட்சுமி கவர்ந்து
3.தன் இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்துடன் இணைத்து அந்தப் பய அலைகளை உருவாக்குகின்றது
4.பயமாகும் போது நம்முடைய உடலில் “இயக்க ஓட்டம்” அதிகம்
5.பய உணர்ச்சிகளை அது உண்டாக்கப்படும் போது வேகமாக நம்மை நகர்த்திச் செல்லுகின்றது.

வேகமாக நகர்த்திச் செல்லும் உணர்வின் சக்தியான இந்த லெட்சுமிக்கும் விஷ்ணுவிற்கும் இணைந்த உணர்வின் தன்மை கருவாகி அது உருபெறுகின்றது… சிருஷ்டியாகின்றது… “பிரம்மா…” விஷ்ணுவின் மகன் பிரம்மா.

அந்தப் பய உணர்ச்சிகள் உருவாகி நம் உடலுடன் ஓ…ம் நமச்சிவாய… நமக்குள் சிவமாக இணைந்து விடுகின்றது. உணர்வின் சக்தி சிவமாக அது உடலாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்று இந்த நினைவுகள் வரும் போதெல்லாம் பய உணர்ச்சிகளைத் தூண்டும். வேகமாக நம்மைக் காக்கச் செய்யும்.

அவ்வாறு இருப்பினும் திடீரென ஒரு பாத்திரம் தவறி விழுந்தால் ஏற்படும் ஒலி காதிலே கேட்டவுடன் என்ன நடக்கின்றது…? “அதிர்ச்சியில் என்ன ஆகின்றது…? என்று நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றது.

கண் பார்த்து இந்த உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்தாலும் ஒரு பாத்திரமோ அல்லது எதிர்பாராத அதிர்வுகள் செவிகளிலே பட்டபின் இந்த உடலையே திரும்பச் செய்து “என்ன…?” என்று அதை உற்றுப் பார்க்கச் செய்கின்றது.

கண் பார்க்காமல் உள் புகும் இந்த நிலை ஆனாலும் செவிகளில் அதிர்வுகளைக் காட்டி அந்த உணர்வின் தன்மை கண்ணை இயக்கும் போது திரும்பிப் பார்க்கின்றோம்.
1.முதலில் அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் தான்
2.இந்த அதிர்வின் தன்மையைத் திரும்பி பார்க்க வைக்கும்.
3.இந்த உணர்வின் வேகம் நம்மைக் காக்கக் கூடியதாக இருப்பினும்
4.பயத்தின் துடிப்பின் நிலைகள் நம் உடலுக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது.
5.பஸ்ஸிலிருந்து காக்க எண்ணினோம்….
6.உயிரோ அதை நமக்குள் பிரம்மமாகச் சிருஷ்டி ஆக்கிவிடுகின்றது.

உணர்வின் சத்தாக நமக்குள் விளைந்து நம்மைக் காக்கும் நிலையாக பிரம்மனாக இருந்து விடுகின்றது. அந்த உடலுக்குள் சிவமாக இருந்து சிவத்திற்குள் சக்தியாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

3.”குரு பிரம்மா…! குரு விஷ்ணு…! குரு சாட்சாத் மகேஸ்வரா…!”

இதைத்தான் “குரு பிரம்மா…! குரு விஷ்ணு…! குரு சாட்சாத் மகேஸ்வரா…!” என்று ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

குரு பிரம்மமும் குரு விஷ்ணுவும் குரு சாட்சாத் மகேஸ்வரா என்கின்ற போது
1.சர்வத்தையும் உருவாக்குவது உயிரே
2.குரு பிரம்மம் – நீ எனக்குள் குருவாக இருந்து அதைச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றாய். அனைத்திற்கும் நீயே குருவாகின்றாய்.
3.குரு விஷ்ணு – (உயிர்) எனக்குள் நீ இருந்து அது சுழற்சியின் தன்மைகள் இணைக்கின்றாய்
4.குரு சாட்சாத் மகேஸ்வரா – எனக்குள் இருக்கும் அனைத்திற்கும் மகேஸ்வரனாக இருந்து உன்னால் எல்லாம் இயங்குகின்றது என்ற நிலையைத்
5.தன்னுள் தன்னில் தன்னை அறிவதற்குச் சாஸ்திரங்களில் காட்டி இருக்கின்றார்கள்.

இருந்தாலும் “ஏதோ போனால் போகட்டும்…!” என்று நினைத்துக் கொள்கின்றமே தவிர நம் உயிரை எப்படி வணங்க வேண்டும்…? நாம் எதனை எண்ண வேண்டும் என்று…? அந்த உண்மைப் பொருளை நாம் அறிந்து கொள்ளவில்லை.

ஆகவே பஸ்ஸின் சத்தம் அதிகமாக வருகிறது என்றால் “பஸ் வருகின்றதா…!” என்று திரும்பிப் பார்த்து நம்மை விலகிச் செல்லத் தோன்றுகின்றது.

செவிப்புலன் அறிவில் பட்ட பின் நம் கண் கொண்டு தான் பார்க்கின்றோம். ஆனாலும் அந்தப் பய உணர்வு இல்லை என்றால் “நம்மைக் காக்க முடியாது…!”

ஆனால் பய உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் விளைவுகள் என்ன ஆகின்றது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

4.நம் வியாபாரமே கெடுகின்றது

ஒரு தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். இதிலே நஷ்டமாகி விட்டால் என்ன செய்வது…! என்று இந்த நினைவுகளை இயக்கப்படும் போது உணர்வுகள் அதுவும் பிரம்மமாகி விடுகின்றது.

அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது பய அலைகள் நமக்குள் தோன்றி இந்த உயிரில் இணைத்து விடுகின்றது. உடலுக்குள் அணுவாகிவிடுகின்றது.

அப்படி உருவான அணுக்களின் தன்மையால் எந்தத் தொழில் செய்தாலும் பலன் இல்லாத நிலைகள் கொண்டு
1.சந்தேகிக்கும் உணர்வு கொண்டே இயக்கி
2.நம் தொழிலையே முடமாக்கச் செய்து விடுகின்றது.

பின் அந்தச் சிரமமான நிலைகள் கொண்டு அந்த சரக்கு நல்லதாக இருப்பினும் “நாளை வியாபாரம் பொருள்கள் விற்கவில்லை என்றால் என்ன செய்வது…?” என்று தன்னைத் தாழ்த்தும்.

அப்படித் தாழ்த்திய உணர்வுகள் நமக்குள் பட்டாலும் அடுத்தவர் இதை வாங்கி அதிக இலாபத்திற்கு விற்கப்படும் போது “அடடா அன்றைக்கு நாம் விட்டு விட்டோமே…!” என்ற வேதனை தான் வருகின்றது.

என்னுடைய நேரம் பாருங்கள்…! “வியாபாரத்தையே விட்டுவிட்டேன்……!” தன்னை அறியாமலே வேதனையும் சோர்வும் கலந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வளர்கின்றது.

இதனின் வரிசை அடிப்படையில் எதை எண்ணுகின்றமோ அவை அனைத்தும் உயிர் அந்த ஜீவ அணுவாக மாற்றி அந்த உணர்வின் நினைவாகத்தான் மீண்டும் கொண்டு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான் “நீ எதை நினைக்கின்றாய் அதுவாகின்றாய்…”

வியாசகன் கல்வி அறிவு இல்லாதவன். அவன் கண்ட உண்மைகளைச் சாதாரண மக்களும் எளிதில் அறிந்து கொள்ள
1.கண்ணின் இயக்கத் தொடரும் உயிரின் இயக்கமும்
2.உயிரால் இயக்கப்பட்டு உணர்வின் கருவாக்கி உடலாக எவ்வாறு இயக்குகின்றது..?
3.உடலுக்குள் நின்று இந்த உணர்வின் சக்தி எப்படி இயங்குகின்றது…? என்று உணர்த்தி
4.அதிலிருந்து மீளும் வழிகளையும் மகாபாரதத்தில் தெளிவாக எடுத்து உரைத்திருக்கின்றார்.

5.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பஸ்ஸிலிருந்து காக்க அந்தப் பய உணர்ச்சிகளை ஊட்டித்தான் அந்த வேகத்துடன் நம்மைக் காக்க வைக்கின்றது. ஆனால் அந்த வேகமான பய உணர்ச்சிகளை “ஆறாவது அறிவு கொண்டு…” அதைச் சமநிலைப் படுத்த வேண்டும்.

இல்லை என்றால் அந்தப் பய உணர்ச்சிகளே ஊன்றி நாம் வாழ்க்கையில் எதைச் சிந்தித்தாலும் அந்த வேகத் தொடராகச் செய்யச் சொல்லும். சிந்தனையில்லாத செயல்களாக மாறி நம்முடய காரியங்கள் அனைத்தும் தோல்வியாகும்.

ஆகவே பஸ் வந்து விடும் என்று தன்னைக் காத்தாலும் அந்தப் பய உணர்ச்சிகளை நமக்குள் அளவோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால்
1.பயத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் போது
2.மற்றொன்றுடன் இணைக்கும் போதெல்லாம் அந்தப் பயம் நம்மைப் பலவீனப்படுத்தி கொண்டே இருக்கும் என்ற
3.இந்த உண்மையினை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் போதும்.

அதிகாலையில் துருவ தியானம் எப்படிச் செய்ய வேண்டும்…? “மேக்னடார் சக்தி…”

souls-cleaning

அதிகாலையில் துருவ தியானம் எப்படிச் செய்ய வேண்டும்…? “மேக்னடார் சக்தி…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்.

நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும். இந்த மாதிரி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு மாதமும் இப்படிச் சுத்தப்படுத்துவதற்குண்டான வழியைத்தான் நம் ஞானிகள் சொல்லி இருக்கின்றார்கள். நாம் யாராவது இப்படி நினைக்கின்றமா…?

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால்
1.உடனே “ஈஸ்வரா…..!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவர் உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவர் உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று அந்த இடத்தில்
5.இந்த மாதிரி எண்ணி உஷாராக இருக்க வேண்டும்

அதே மாதிரி என் பையன்.. “சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… கேட்க மாட்டேன் என்கிறான்…! என்றும் என்னிடம் காசை வாங்கிச் சென்றவன்.. “திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறான்… கொடுக்க மாட்டேன் என்கிறான்…!” என்றும் இப்படி எண்ண வேண்டியதில்லை.

“நஷ்டம்…நஷ்டம்…” என்றால் நஷ்டமே தான் வந்து கொண்டு இருக்கும். “கஷ்டம்…கஷ்டம்..!” என்றால் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கும்.

நம்மிடம் பணத்தை வாங்கிச் சென்றவனுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். திருப்பிக் கொடுக்கும் அந்தச் சக்தி அவனுக்கு வர வேண்டும் என்று அதிகாலையில் இதே மாதிரி எண்ணி உறுதிப்படுத்திப் பாருங்கள்.

அவனும் நன்றாக இருப்பான். நாமும் நன்றாக இருப்போம்.

எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

என் பையன் நன்றாக கல்வியில் ஞானம் பெற வேண்டும். அவன் கருத்து அறிந்து செயல்படும் திறனும் எல்லோரும் போற்றும் நன்மை பெற வேண்டும். அவனுக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம்மை அறியாத சந்தர்ப்பம் தான் தீயவைகள் நடக்கக் காரணமாகின்றது. தீமை என்ற உணர்வு நமக்குள் வராதபடி நிவர்த்தி செய்வதற்கு எத்தனையோ வகையான வழிகளை ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

நல்லது செய்ய இப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் “துருவ தியானம்” என்பது.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நாம் கவரும் பொழுது
1.நம் ஆன்மாவில் இருக்கும் நம்மை அறியாது புகுந்த தீமையான உணர்வுகள்
2.அவைகள் வலு பெறாதபடி அனாதையாகி விடுகின்றது.
3.அனாதையான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது… ஜீவான்மா சுத்தமாகின்றது உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.
துருவ தியானம் என்றால் என்னமோ ஏதோ என்ற நிலையில் நாம் உட்கார்ந்து “இப்படித் தான் செய்ய வேண்டும்… அப்படித்தான் செய்ய வேண்டும்…! என்று நினைக்க வேண்டியதில்லை.

படுக்கையிலிருந்து எழுந்தவுடனே அப்படியே “டக்…” என்று உட்காருங்கள்.
1.”ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை நினையுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்.

அப்படியே ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஏங்கி இருங்கள். மூன்றாவது நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
1.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
4.உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும் இந்த நினைவு “மேக்னடார்… ஆகின்றது…!”

அதாவது எந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைக்கின்றமோ அதைத்தான் ரேடியோ டி.வி கவரும். அதைப் போல எங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் அந்தச் சக்தியைக் கவரும் நினைவாற்றலைக் கொண்டு வருகின்றோம். (மேக்னடார் என்றால் கவரும் சக்தி)

அப்போது எல்லாம் அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் பொழுது தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லாமல் தடைப்படுத்தப்படுகின்றது. அவைகள் சோர்வடைந்து விடுகின்றது. தீமை செய்யும் அணுக்கள் ஜீவன் பெறுவதில்லை.

எப்படித்தான் இருந்தாலும்…..
1.இந்த உடல் நம்முடன் வருகின்றதா…?
சேர்த்த செல்வங்கள் நம்முடன் வருகின்றதா…? இல்லையே…!

இன்றைக்கு நாம் எந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்கொப்பத்தான் நம் உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணத்திலிருந்தால் அதனின் கணக்கு நமக்குள் ஜாஸ்தியாகக் கூடும்.

1.”நீ வாப்பா…!” என்று
2.அது நம்மை நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே கூட்டிக் கொண்டு போகும்
3.உடலில் சேர்த்த நஞ்சையெல்லாம் கரைத்துவிடும்
4.பேரானந்தப் பெரு நிலை நாம் அடைவோம்…!