மண்ணுளிப் பாம்பு என்னைக் குத்திவிட்டது – பச்சிலையைக் கொடுத்து என்னைக் காத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

Image

jupiter, eswarapattar

மண்ணுளிப் பாம்பு என்னைக் குத்திவிட்டது – பச்சிலையைக் கொடுத்து என்னைக் காத்தார் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…!”

 

மண்ணுளிப் பாம்புக்கு அதனுடைய வாலில் தான் விஷம். வாலில் ஊசி போல் இருக்கும். பொந்து மாதிரி இடங்களில் இருந்து கொண்டு வாலை மட்டும் வெளியில் நீட்டியிருக்கும்.

ஊசி போல இருப்பதை வைத்துக்கொண்டு மேலே ஏதாவது போனால் குருவியோ எலியோ தவளையோ மற்றதோ போனதென்றால் “டக்…” என்று தேள் கொட்டுவது போல கொட்டிவிடும்.

அது மயங்கி விழுந்துவிடும். அந்த உணர்ச்சி தெரிந்தவுடனே வெளியில் வந்து தன் இரையை விழுங்கும். ஏனென்றால் அதற்கு வேகமாகப் போகத் தெரியாது.

நான் ஒரு சமயம் வயலில் போய் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் வயலில் நெல் விதைதிருந்தார்கள்.

அப்போது ஒரு பொந்து மாதிரி இருந்தது. நான் நடந்து போய்க் கொண்டு இருக்கும் பொழுது தெரியாமல் அதை மிதித்துவிட்டேன்.

ஏனென்றால் சேற்றில் செருப்பு போட்டு நடக்க முடியுமா என்றால் முடியாது. அதனால் செருப்பு இல்லாமல் நடந்தேன். காலில் குத்திவிட்டது.

குருநாதர் உன் உடல் மஞ்சளா இருக்குதுடா? உன் உடலில் ஏறிடப் போகுதுடா…! அப்படிங்கிறார்.

அப்போது எனக்கும் குருநாதருக்கும் பழக்கம் கிடையாது. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.

ஆனால் பதட்டமாக அவர் வந்து “டேய்…! உனக்கு இந்த மாதிரி இருக்கிறது. நான் ஒரு பச்சிலையைத் தருகிறேன். சாப்பிடுடா…! அப்படிங்கிறார்.

அந்தப் பச்சிலையைச் சாப்பிடும் பொழுது அவர் மேலே நம்பிக்கை இல்லை.

ஏனென்றால் அவர் பைத்தியக்காரராக இருந்தார். சாப்பிட்டால் நம்மை எதுவும் கொன்று விடுமோ என்று எனக்குப் பயம். உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது.

விஷத்தின் தன்மை காலில் பட்டவுடன் கால் எல்லாம் மஞ்சளாக இருக்கிறது. இருந்தாலும் இவர் பைத்தியக்காரன் போல இருப்பதை பார்த்து நம்மை ஏதாவது செய்து விட்டார் என்றால் என்ன செய்வது…! என்ற பயம்.

யாரை…?

குருநாதரைப் பார்த்தால் அப்பொழுது பயம்…! ஆனால் குருநாதர் அவர் என்னை அறியாமலே பல சந்தர்ப்பங்களில் என்னைப் பின் தொடர்ந்தே வந்திருக்கின்றார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னைக் காத்திருக்கின்றார். இதையெல்லாம் பின்னாட்களில் என்னிடம் தெளிவாகக் காட்டுகின்றார்.

அந்த மண்ணுளிப் பாம்பை மொன்னைப் பாம்பு என்று சொல்வார்கள். அதில் இருக்கக்கூடிய ஊசி ஆணி போன்று பட்டவுடனே இந்த நிலை ஆகும்.

இந்த மாதிரிப் பாம்பினம் விஷங்களைப் பாய்ச்சி விட்டதென்றால் குறை நோய் என்று சொல்வார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். நோய் மாதிரியே தெரியாது.

பார்ப்பதற்குச் சிலர் நன்றாக இருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேய்ந்து கொண்டே வரும். இந்த நோய் வந்தால் சீழ் எல்லாம் பிடிக்காது.

ஆனால் கை கால் எல்லாம் அப்படியே மொன்னையாகி விடும். மூக்குச் சதை எல்லாம் குறைந்து கொண்டே வரும். அந்தப் பாமின் விஷத்தின் ஆற்றல் அப்படிப்பட்டது.

அந்த விஷத்தின் உணர்வுகள் மற்ற அணுக்களை மாற்றி, உறுப்புகளைச் சுருக்கி மனிதனையை சுருங்கச்செய்து விடும்.

நம்மை இந்த உயிர் எப்படி எல்லாம் வளர்க்கிறது… மாற்றுகிறது… உடலாக்குகிறது… உருமாற்றிக்கொண்டு இருக்கிறது…!

இத்தனை தீமைகளையும் நீக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

அதை நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

நம் ஆன்மா என்பது கண்ணாடி போன்றது – தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

Image

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

நம் ஆன்மா என்பது கண்ணாடி போன்றது – “தூய்மையாக வைத்திருக்க வேண்டும்”

 

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியில் நம் உருவத்தைக் காண முடியுமா…! முடியாது.

இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகிவிட்டால்
1.நம்மை எது இயக்குகிறது என்று அறிய முடியாதபடி
2.நாம் பார்த்திருந்த உணர்வுகள் நமது உடலை இயக்கி
3.நம்மை நாம் அறிய முடியாத நிலைகள் ஆக்கி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறியவேண்டும்?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. ஆன்மாவில் அழுக்குப் படிந்துவிட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கிய பின் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

பிற தீமையான உணர்வுகள் நம்மில் இணைந்து நமது சிந்தனைய மறைக்கும் பொழுது நம்முடைய ஆன்மாவை தூய்மையாக்கும் நிலை பெற்றால் தான் நம்முடைய எண்ணம் கொண்டு நமது செயலாக்கங்களை வலிமையாகச் செயல்படுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் உணர்வின் தன்மையைச் செலுத்துங்கள்.

இவ்வாறு செலுத்தினால் வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

எப்படி..?

1.சோப்பைப் போட்டு நுரையேற்றி அழுக்கை வெளியேற்றுவது போல்
2.தங்கத்தில் திரவகத்தை ஊற்றி அதில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளியைப் பிரிப்பது போல்
3.கரும்புச் சாற்றுக்குள் பொட்டாசியத்தைக் கலந்து அழுக்கைப் பிரித்துச் சர்க்கரையைத் தூய்மையாக்குவது போல்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் ஆன்மாவில் பெருகச் செய்யும் பொழுது
5.தீமை செய்யும் உணர்வுகளைப் பிரித்து அழுத்தமாகத் தள்ளி நம் ஆன்மாவை விட்டே அகற்றி அனாதையாக்கிவிடும்.

நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

செய்து பாருங்கள்…!

பழனியில் முருகன் பெயரைச் சொல்லி ரெக்கால சந்தனத்தையும் திருநீறையும் எடுப்பேன் என்று காண்பித்த அபுபக்கர் என்ற மந்திரவாதிக்கு உணர்த்திய நிலை – நடந்த நிகழ்ச்சி

Image

black magic

பழனியில் “முருகன் பெயரைச் சொல்லி” ரெக்கால சந்தனத்தையும் திருநீறையும் எடுப்பேன்…! என்று காண்பித்த அபுபக்கர் என்ற மந்திரவாதிக்கு உணர்த்திய நிலை – நடந்த நிகழ்ச்சி

 

பழனியில் சைக்கிள் கடை வைத்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். நான் (ஞானகுரு) சித்தாகும் பொழுது முதன் முதலில் நடந்த நிகழ்ச்சிகள்.

அபுபக்கர் என்ற ஒரு மந்திரவாதி முஸ்லிம் பாய்… அவர் முருகன் மாதிரியே பஜனை எல்லாம் பாடுவார். பஜனை எல்லாம் பாடியவுடனே முருகன் மாதிரியே காட்சி எல்லாம் கொடுப்பார்.

ஆறு படை வீட்டில் முருகன் எப்படி இருக்கின்றாரோ அது போல காட்சி கொடுப்பார்.

எனக்கு அவரைத் தெரியும். மணிவேலு என்ற மட்டன் கடைக்கு மூளைக் கறி சாப்பிட அவர் வாடிக்கையாக வருவார். அதே மாதிரி இந்த ஆள் கறி சாப்பிட வந்தார்.

அப்போது அந்த நேரத்தில் என்ன நடந்தது?

ஒரு பேய் (பிடித்தவர்) வருகிறது. பயங்கரமாக ஆடிக்கொண்டு அங்கே வருகிறது. குருநாதர் சொன்ன முறைப்படி அப்போது நான் ஒரு பிரம்பை எடுத்து அடித்தேன்.

இந்த அடி விழுந்தது என்றால் அங்கே இருக்கின்றவர்கள் (அத்தனை பேருக்கும்) ஆவி இருக்கிறவர்களுக்கெல்லாம் அடி விழுகின்றது. அபுபக்கருக்கும் அடி விழுந்து விட்டது.

பேய் பிடித்தவரோ அந்த ஆவி “என்னை விட்டுவிடு… விட்டுவிடு…” என்று சொல்லிக் கொண்டு போனது. அப்புறம் அவர் நன்றாகிவிட்டார்.

ஆனால் இந்த அபுபக்கர் என்னிடம் வந்து.. “ஏனய்யா.. முருகனைப் பற்றி உனக்குத் தெரியுமா…?” என்றார். ஒரு தட்டு தட்டினார். உடனே “ரெக்கால சந்தானம்… வருகின்றது…!”

இதைச் செய்து காண்பித்து நான் அவரை அடித்தைச் சொல்லிக் காண்பித்து நீ கடவுளை எல்லாம் அவமதிக்கின்றாய்” என்றார்.

இது என்னடா விவகாரமாக இருக்கிறது…! என்று நான் நினைத்தேன்.

என் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி இராத்திரி 12 மணிக்கு அபுபக்கர் இருக்கும் இடத்திற்கு என்னைக் வரச் சொல்லிச் சொல்கிறார்.

நான் அங்கே போனேன்.

அங்கே ஒரு பேங்க் மேனேஜர்… அவர் மீசைக்காரர் அவரையும் கூப்பிட்டார். கூப்பிட்டு நீ இவருக்கு விபரத்தைச் சொல்லு என்றார் அபுபக்கர்.

சொன்னவுடனே அவர் நான் காளி பூஜை செய்து கொண்டு வந்தேன். அபுபக்கர் என்ன செய்கின்றார் என்று பரீட்சை செய்து பார்த்தேன். இரண்டு மூன்று நாள் கை கால் வராமல் போய்விட்டது. பேசவும் முடியவில்லை. அப்பறம் ஐயா தான் என்னைக் காப்பாற்றினார். இது தான் நடந்த நிகழ்ச்சி என்று என்னிடம் சொல்கிறார்.

அந்த இடத்தில் ஒரு ஜட்ஜ் சப் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரும் இருக்கிறார்கள்,

என்னைக்கூப்பிட்டதும் என்ன செய்து விட்டார் தெரியவில்லை.

அபுபக்கர், நீரில் இருந்து திரு நீறு எடுப்பேன் தெரியுமா என்று செய்து காட்டுகிறார். நான் யார் தெரியுமா…! என்று மிரட்டுகிறார்.

நான் சொன்னேன் எனக்கு எதுவுமே தெரியாது அது பாட்டுக்கு என்னமோ நடக்கிறது என்று சொன்னேன்.

நீ தெரியாது என்று சொல்கிறாய். ஆனால் நீ பிரம்பில அடித்த அடி முதுகிலே எல்லோருக்கும் வார் வாராக ஓடுகிறது. ஒன்றும் தெரியவில்லை என்றா சொல்கிறாய்…! என்கிறார்.

சப் இன்ஸ்பெக்டருக்கும் அடி விழுந்திருக்கின்றது. நீ ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டு இப்படிச் செய்யலாமா…? நீ என்ன நினைத்து கொண்டு இருக்கின்றாய்…? என்று அவரும் மிரட்டுகிறார்.

நான் மறுபடியும் எனக்கு ஒன்றுமே தெரியாது. என்னமோ நடக்கிறது என்றேன். நான் செய்யவும் இல்லை. என்னை அடிக்கச் சொல்லி கை வந்தது. அடித்தேன்…! உங்கள் மேலே விழுந்தது. அதற்கு நான் என்ன செய்யட்டும்…? என்றேன்.

இல்லை… நீ பெரிய ஆள்..! ஆனால் உன்னை நான் உள்ளே ஜெயிலில் கொண்டு போய் உட்கார வைத்து விடுவேன் என்கிறார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

அந்த இடத்தில் இன்னொரு நிகழ்ச்சி நடக்கின்றது. என்னுடைய நண்பருடைய சம்சாரம்… அது வீட்டு வாசற்படியில் நேராக நுழைய முடியாது. அந்தளவுக்கு நீர் சத்துப் பிடித்துக் கொண்டு குண்டாக இருக்கும்.

மூன்று அடி வாசலில் உள்ளே வர முடியாது. உடலை ஒரு சாய்த்துத்தான் வர முடியும். உடலைக் குறைப்பதற்காக அங்கே கூட்டி வந்திருக்கின்றார்.

பச்சிலையைக் கொண்டு வந்து அபுபக்கர் மருந்து கொடுத்து அதை குணமாக்குகிறேன் என்று செய்து கொண்டிருக்கின்றார்.

அதைப் பார்த்து நான் சொன்னேன். குண்டான இந்த அம்மாவிற்கு மருந்து கொடுத்துக் கொண்டுள்ளீர்கள். நாளைக்குக் காலையில் அது சாகப் போகிறது. இங்கே இருக்கும் நீங்கள் தான் எல்லோரும் நாளைக்கு உள்ளே (ஜெயிலுக்குள்) போகப் போகிறீர்கள்.

நான் என் நண்பரைக் (அந்த அம்மாவின் கணவர்) கூப்பிட்டு அப்பா மருந்து அவர்கள் தான் கொடுக்கின்றார்கள். செத்துப் போனால் நீ போலீஸ் ஸ்டேஷன் போய்ப் புகார் கொடு என்று சொன்னேன்.

உடனே அந்த சப் இன்ஸ்பெக்டர் “என்னையா…! இந்த மாதிரி நம்மளையே மிரட்டுகிறாய்…?” என்கிறார்.

“பெரிய மகான்…!” என்ற நிலையில் சொல்கிறீர்கள் அவர் மருந்து கொடுக்கின்றார். அப்புறம் பாருங்கள்…! என்று நான் சொல்லி விட்டுச் சைக்கிள் கடைக்கு வந்து விட்டேன்.

கொஞ்ச நேரத்தில் பார்த்தால் அந்த அம்மாவிற்கு வயிற்றோட்டமாக போய் கொண்டே இருக்கின்றது. அந்த மாதிரித் தொடர்ந்து போகப்போக போகப்போக கொஞ்ச நேரத்தில் நான் செத்துப் போவேன்… செத்துப் போவேன்…” என்று சொல்ல ஆரம்பித்தது.

அந்தம்மாவின் கணவர் என்னை தேடி வந்தார். ஐயா…! நிஜமாகவே செத்துப் போகும் போல இருக்கிறது. வெறும் தண்ணியாகப் போகிறது என்று சொல்கிறார்.

ஆமாம்ப்பா…! மருந்து அவர்கள் தான் கொடுக்கிறார்கள். அவர்களை வைத்தே காப்பாற்றிக் கொள் என்றேன்.

சம்சாரம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.

கனத்த உடல் ஒல்லியாகப் போய்விட்டது. கொஞ்ச நேரத்தில் செத்துப் போகும் போல இருக்கிறது என்றார்.

“கொஞ்ச நேரத்தில் செத்துத்தானய்யா போகும்…!” என்று சொன்னேன்.

என்னங்க… இப்படிச் சொல்கின்றீர்கள்…? என்றார் அவர்.

அது ஒரு ஆவி. “இறந்தது” உன் சம்சாரத்தின் உடலிலே இருக்கிறது. தண்ணீராகப் போகப் போக அந்த ஆவியினுடைய நிலைகள் பலவீனமாக ஆகிப்போகும். உன் சம்சாரம் தெளிவாகிப் போகும்.

ஆனால் நீ இந்த விபரத்தைச் சொன்னால் மறுபடியும் வந்து விடும் என்றேன் நான்.

ஆகா… நான் சொல்லுவேனா…! என் சம்சாரம் நன்றாக ஆகி எழுந்தாலே போதும் என்றார்.

மறுபடியும் அபுபக்கரிடம் அவர் போனவுடனே அவர்கள் விபரம் கேட்கிறார்கள். எப்படிக் கேட்டாலும் என் மனைவி செத்துப் போகும் என்றேன் தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்று இவரும் சொல்கிறார்.

அடப்பாவி என்று சொல்லி விட்டு எல்லாரும் விழுந்தடித்துக் கொண்டு என்னிடம் வந்தார்கள்.

அப்பொழுது தான் நான் கேட்டேன். நீங்கள் பெரிய மகான்…! எனக்கு ஒன்றும் தெரியாது என்றீர்கள். பிறகு என்னிடம் எதற்காகக் கேட்கின்றீர்கள்..? அவர் செத்துப் போவார். கோர்ட்டில் போய்ச் சொல்லி கொள்ளுங்கள்.

நீரில் இருந்து திருநீறு கொண்டு வருகிறேன் என்று சொல்கின்றீர்கள். ஆவிகளை வைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்கின்றீர்கள்.

பச்சிலையை ஆள்கள் மூலமாகக் கொண்டு வந்து அரைக்கின்றீர்கள். அந்தப் பச்சிலையைத் திருநீறு கொண்டு வருகிற மாதிரிக் கொண்டு வரலாம் அல்லவா…!

நீங்கள் ஆவியின் தொடர் வைத்துத்தான் சந்தனம் கொண்டு வருவது திருநீறு கொண்டு வருவது எல்லாம் செய்கிறீர்கள் என்று விபரத்தை அபுபக்கரிடம் சொன்னேன்.

அதே மாதிரி இந்த அம்மாவின் உடலில் இருப்பதும் ஒரு ஆவி தான். அந்த ஆவிதான் இப்பொழுது பலவீனம் அடைகிறது.

அது வாழ்ந்த காலத்தில் ஊது காமாலை என்று நோயாகி அது உடலில் எப்படி நீர் பிடிப்பு அதிகமாகிச் செத்தது. அதே உணர்வின் இயக்கமாக இந்த உடலிலும் செயல்பட்டது.

அந்த அம்மா உடல் நல்லாகிப் போகும் என்று நான் சொன்னேன்.

அப்புறம் மறுநாள் அந்த அபுபக்கர் வந்தார். நீங்கள் இப்படி எல்லாம் செய்வது சரியில்லை. நான் சொல்கின்ற மாதிரி செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பெண்கள் பிள்ளைகள் எல்லாம் ரொம்ப அவஸ்தைப்படுகின்றார்கள்.

இந்தம்மாவைக் குணப்படுத்தியதற்கு குறைந்தது ஐந்து இலட்சம் வாங்கலாம். நீங்கள் விட்டுவிட்டீர்கள். ஆவி பிடித்தது மற்ற இந்த மாதிரிக் கேசுகள் உங்களுக்குப் பிடித்துத் தருகிறேன். ஆளுக்குப் பங்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார் அபுபக்கர்.

ஐந்து இலட்சம் எதற்கு ஐயா…! நான் செய்யவில்லையே… என் குருநாதர் தான் செய்தார் என்றேன் நான்

அட நீங்கள் ஒரு பக்கத்தில்…! நீங்கள் தான் இதைச் செய்தீர்கள். அந்த ஆள் வசதியானவன். பணத்தை வாங்கி நீங்கள் ஏழைகளுக்கு செய்யலாம் அல்லவா என்றார். எனக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இந்த மாதிரி எண்ணத்தில் இனிமேல் என்னிடம் வராதே. நான் செய்யவில்லை. குருநாதர் ஏதோ செய்து இருக்கிறார். காசு வாங்கும் நிலைகளுக்கு இல்லை என்று சொன்னேன்.

அப்புறம் சைக்கிள் கடைசியில் பார்த்தோம் என்றால் கூட்டம் ஏராளமாக வர ஆரம்பித்து விட்டது. அப்புறம் நீ ஊரை விட்டுக் கிளம்புடா என்றார் குருநாதர்.

உடலுடன் இப்பொழுது இருக்கிறார்கள்.
1.இறந்தபின் இன்னொரு உடலுக்குள் இந்த ஆவி எப்படிப் போகிறது?
2.அதே சமயத்தில் உடலில் இயக்கிய இந்த அணுக்கள் எப்படி உருவாக்கி ஊது காமாலை என்ற நோயாக ஆனது?
3.பின் அது எப்படி பலவீனமாக ஆனது?
4.அது எப்படி நல்லதானது?
5.அவர்கள் அதை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?

ஒவ்வொன்றையும் இப்படி அனுபவத்தில் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார். அறியும்படி உணரும்படிச் செய்தார்.

சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சொன்னால் நண்பர்களாகப் பழகுகின்றோம். அவ்வாறு பழகும் போது ஒரு பிரியமாக இருந்து அது இறந்து விட்டால் அவன் என்ன நோயோட இறந்தானோ “அவன் போய்விட்டானே…!” என்று எண்ணினால் அந்த உணர்வு இந்த உடலில் வரும்.

அதே மாதிரித் தான் அந்தப் அம்மாளிடம் பழகிய பெண் ஊது காமாலையால் இறந்தது. அதே உணர்வை இந்த அம்மாள் எடுத்தவுடனே ஆவியாக இந்த உடலில் உருவாக்குகின்றது.

இந்த விபரங்களைக் குருநாதர் உணர்த்தி எனக்குத் தெளிவாக்கினார்.

“தீமையை நீக்கும்” கூட்டமைப்பு தான் இப்பொழுது தேவை…!

combined-meditaion

“தீமையை நீக்கும்” கூட்டமைப்பு தான் இப்பொழுது தேவை…! 

நாம் எல்லோருமே எல்லாம் தெரிந்தவர்கள் அல்ல. நானும் (ஞானகுரு) எல்லாம் அறிந்தவன் இல்லை. நான் அறிந்து இதைப் பேசவும் இல்லை. நான் கல்வி கற்கவில்லை.

“கல்வி கற்காதவனுக்கு…!” இத்தகைய ஞானத்தின் உணர்வை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பாய்ச்சினார்.

அவர் பாய்ச்சிய நிலைகள் கொண்டு அந்த விண்ணின் ஆற்றலை நுகர முடிகின்றது. அதை உங்களுக்குள் தெளிவாகச் சொல்லவும் முடிகின்றது.

உங்கள் மனதினைப் பண்படுத்தி ஞானிகளின் அருள் ஆற்றல்மிக்க சக்தியை உங்களுக்குள் பதியச் செய்யவும் பதிவானதை நீங்கள் நினைவுபடுத்தி அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் முதுமையடையும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்த நிலையிலிருந்து சிறிது பேரையாவது மீட்டுக் கொள்ளலாம்… மீட்டிட வேண்டும் என்ற நோக்குடன் தான் எல்லா மகரிஷிகளின் செயல்களும் செயலாகிக் கொண்டுள்ளது.

ஆகவே நமது குருநாதர் இந்த உலக மக்களை மீட்பதற்கு அந்த நல்லதை எண்ணி ஏங்கினார். மெய் ஞானியின் அருள் ஆற்றலை உனக்குள் வளர்த்து எல்லோருக்கும் பெறச் செய் என்றார்.

1.இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வாழ எண்ணும் நல்லதை எண்ணும் அந்த நல்ல உள்ளங்களில்
3.அந்த மெய் உணர்வுகள் வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்புச் செய் என்றார்.

அப்படி ஒலி பரப்பு செய்யும் போது அவர்களும் தமக்குள் துன்பத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணி ஏங்கினால்
1.அவர்கள் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது
2.அந்த உணர்வின் ஆற்றலால் விண்ணின் ஆற்றல் அவர்களுக்குள் பெருகி
3.அவர்களை அறியாது வந்த துன்பங்களை நீக்கி
4.அந்த ஞானிகள் அருள் வட்டத்தில் செல்ல இது உதவியாக இருக்கும் என்று குருநாதர் சொன்னார்.

ஒவ்வொரு உள்ளத்திலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளையச் செய்ய வேண்டும் என்றார் குருநாதர்.

சிறு துளி பெருவெள்ளம் போன்று ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி அந்தப் பல நெல்களையும் விளைவித்து எடுத்துக் கொண்டால் மலைபோல் குவிகின்றது.

அப்படி மலைபோல் குவிந்தால் அவரவர்கள் பசிக்கு அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

நாம் எல்லோரும் இந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்றால் அந்தக் கூட்டமைப்பின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.அதற்குத்தான் இந்தக் கூட்டமைப்பை உருவாக்கி (மகரிஷிகளுடன் பேசுங்கள்)
2.ஒவ்வொரு உள்ளத்திலும் அறிந்தோ அறியாமலோ சேர்ந்த
3.தீமையை விளைய வைக்கும் இந்த உணர்வினை மாற்றச் செயல்பட்டு வருகின்றோம்.

நோயை நீக்க “மருத்துவரிடம்…” செல்ல வேண்டும் என்றால் தீமையை நீக்க யாரிடம் செல்ல வேண்டும்…

குரு அருள்

நோயை நீக்க “மருத்துவரிடம்…” செல்ல வேண்டும் என்றால் தீமையை நீக்க யாரிடம் செல்ல வேண்டும்…

நோய் வரும் பொழுது அது எந்த நோயாக இருந்தாலும் உடனே அதை நீக்க மருத்துவரிடம் தான் செல்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் வாழ்க்கையில் தீமை வரும் பொழுதும் துன்பம் வரும் பொழுதும் வேதனை வரும் பொழுதும் கோபம் வரும் பொழுதும் நாம் எதை நினைக்கின்றோம் யாரை நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் நீக்கிப் பழகிய மகரிஷிகளிடம் நாம் செல்கின்றோமா… …?

ஆகவே இங்கே அருள் ஞான உபதேசங்களைப் படிப்பவர்கள் அனைவருமே எங்கே சென்றாலும்… எந்த நிமிடம் ஆனாலும்…
1.“எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்…” என்று அடுத்தவர்களை எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது…” என்று எண்ணாதபடி
3.இந்த எண்ணத்தையே மாற்றிப் பழக வேண்டும்.

அதற்காக வேண்டி ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) அருளிய வழிப்படி உங்களுக்கும் தைரியத்துடன்.., உங்களுக்கும் தைரியம் பெறவே இதைக் கொடுக்கின்றேன்.

குருநாதர் எம்மைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி காடு மேடெல்லாம் அலையச் செய்து இவன் செம்மையாகச் செய்வானா…? செய்ய மாட்டானா…? என்று பல நிலைகளில் பரிசீலித்தார்.

பனிரெண்டு வருட காலம் எல்லோரும் தவம் என்று சொல்வார்கள்.

பனிரெண்டு வருட காலம் ஒவ்வொரு நொடியிலும் எண்ணங்களால் வேதனைப்படுத்துவதும் எண்ணத்தால் அவஸ்தைப்படுவதும் என்ன செய்வது என்ற உணர்வே அறிய முடியாத நிலையில் என்னை ஆளாக்கினார்.

ஒவ்வொரு நிலைகளிலும்
1.நான் பிறருக்கு நன்மை செய்தாலும்
2.அந்த நன்மை பெற்றவர்களும்
3.மீண்டும் எனக்குத் தீமை செய்வார்கள்.

அப்படித் தீமையே செய்யப்படும் பொழுது அந்தத் தீமையை அழித்திட எனக்குப் பல ஆற்றல்களையும் சக்திகளையும் காண்பித்துக் கொடுத்தார்.

கொடூரச் சக்திகள் கொண்டு நான் எண்ணத்தால் எண்ணினால் போதும். அவர்களுடைய நிலைகள் செயலற்றதாக ஆகிவிடும். ஆனால் அதை நான் பயன்படுத்தவில்லை.

அதற்கு மாறாக குருநாதர் காட்டிய அருள் வழியினைத்தான் கடைப்பிடித்தேன்.

பிறர் எனக்கு எவ்வளவு பெரிய தீங்கு விளைய வைத்தாலும்
1.என்னை எண்ணும் பொழுது…
2.அவருக்குள் தீமையை விளைவிக்கும் அந்த எண்ணங்கள்தான் அழிய வேண்டுமே தவிர
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல எண்ணங்கள் ஓங்கி வளர வேண்டும்
3.நன்மை பயக்கும் சக்தியாக அது மலரவேண்டும் என்றுதான்
4.குருநாதர் காட்டிய வழியில் இன்றும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
5.இந்தச் சக்தியினைத்தான் குருநாதர் எனக்குப் பாதுகாப்புக் கவசமாகக் கொடுத்தார்.

நாம் எண்ணும் நல்ல குணங்களே நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…!

 

தாவர இனச் சத்தை உலோகத்துடன் கலந்து புடமிட்டு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டவர்களே மெய் ஞானிகள்

trust-yourself

தாவர இனச் சத்தை உலோகத்திற்குள் கலந்து புடமிட்டு அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டவர்களே மெய் ஞானிகள் 

விஞ்ஞானி கடினமான பாறைகளையும் ஒரு இரும்பைக் கொண்டு மிக எளிதாக அறுத்து எறிகின்றான்.

மரத்தை ரம்பம் கொண்டு அறுக்கக் கடினமாக இருக்கின்றது. ஆனால் விஞ்ஞானியோ
1.இரும்பைச் செறிவு ஏற்றி
2.அதை மிகவும் ஆற்றல் மிக்கதாக மாற்றி
3.மிகக் கடினமான பாறைகளையும் எளிதில் அறுத்து எறிகின்றான்.
4.எவ்வளவு எளிதாகச் செய்ய முடியுமோ அவ்வளவு எளிதாகச் செய்துவிடுகின்றான் விஞ்ஞானி.

இரும்புக்கு எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ அதைப் போன்று சற்று வலுவாகத் தட்டினால் வளைந்து நெளிந்துவிடக் கூடிய உலோகமான அலுமினியத்தை விஞ்ஞான அறிவு கொண்டு செருகேற்றி வலுகொண்டதாக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

சில உலோகத்தின் நிலைகளை கரும்புச் சாற்றுக்குள் கலந்து அதிலுள்ள அழுக்கைப் பிரித்து வெண்மையான சர்க்கரையாகச் சுவை கொண்டதாக மாற்றுகின்றான்.

அப்படி அழுக்கை நீக்கினாலும் அழுக்கான கழிவை விஞ்ஞான அறிவால் மற்ற பொருள்களைச் சேர்த்துப் பிளாஸ்டிக்காக உருப்பெறச் செய்கின்றான்.

அவ்வாறு உருப்பெறச் செய்தால் இந்த பிளாஸ்டிக் அழிவதேயில்லை.

இந்த இனிப்பான சத்தைக் கவர்ந்து கொள்ளும் இச்சக்தியினை விஞ்ஞானி பிரித்து அதைப் பிளாஸ்டிக்காக மாற்றுகின்றான். அதை மண்ணிலே போட்டாலும் மக்குவதில்லை.

இரும்பு உலோகமோ மண்ணிலே போட்டால் அது மக்கிவிடுகின்றது. இரும்புக்குள் மற்ற உப்புச் சத்தின் நிலைகள் பட்டாலோ இரும்பு மண்ணைப் போல ஆகிவிடும்.

அதையும் தனக்குகந்த அமிலத்தின் தன்மையை காற்றலைகளாக மாற்றி அந்தக் காற்றலையின் அழுத்தத்தை இரும்புக்குள் பாய்ச்சி இரும்பு துருப் பிடிக்கும் நிலையை இழக்கச் செய்து அதை “எவர்சில்வர்” ஆக மாற்றுகின்றான் விஞ்ஞானி.

விஞ்ஞானிகள் மிகச் சக்திவாய்ந்த நிலைகளைச் செய்கின்றனர்.

யாம் (ஞானகுரு) இதையெல்லாம் புத்தகத்தில் படிக்கவில்லை. பார்த்துச் சொல்கிறோம். படிக்கவில்லையென்றாலும் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு பார்த்தோம்.

அதை எவ்வாறு செயல்படுத்துகின்றனர்? அந்த உணர்வின் தன்மை எவ்வாறு மாறுகின்றது? என்பதை குருகாட்டிய வழியில் அவரின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தியின் துணை கொண்டுதான் இதை யாம் அறிந்திட முடிகின்றது.
1.உங்களுக்கு அதை உபதேசிக்கவும் முடிகின்றது.
2.உங்களுக்கு உணர்த்திடவும் முடிகின்றது.

அன்று சாதாரண மனிதனாக இருக்கும் பொழுது பிறிதொரு மனிதனின் நோயை நீக்கச் செய்தான் மெய் ஞானி.

ஒவ்வொரு கட்டத்திலும் சந்தர்ப்பத்தால் மனிதன் சந்திக்க நேரும் குணங்கள் அவனுக்குள் வளர்ந்த நல்ல பண்பையும் பாசத்தையும் பரிவையும் அன்பையும் அறிவையும் துணிவையும் ஞானத்தையும் இழக்கச் செய்துவிடுகின்றது.

அத்தகையை விஷத்தின் தன்மைகள் அது மனிதனின் உடலில் தீய விளைவுகளை விளைவிக்கின்றது.

அந்தத் தீயவிளைவுகளை நீக்க அன்று சிந்தனையுடைய நிலைகள் கொண்டு சிந்தித்துத் தன் எண்ணத்தை வலு கூட்டி விண்ணிலே செலுத்தி விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான் மெய் ஞானி.

விண்ணின் ஆற்றல் தாவர இனச்சத்துக்களின் எந்த அளவு கலந்துள்ளது. அதனின் வீரிய செயல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்றும் கண்டுணர்ந்தான் மெய்ஞானி.

அந்த வீரிய செயலுக்குக் காரணமான உலோகங்களின் அமைப்புகள் எவ்வாறு உள்ளது என்றும் இந்த உலோகத்திற்குள் பிறிதொன்றாக மாற்றிடும் அந்த வீரிய சக்தியைக் கண்டுணர்ந்து நுகர்ந்து அதனின் ஆற்றலைத் தனக்குள் எண்ண வலுவாகக் கூட்டிக் கொண்டான்.

அதைக் கொண்டுதான்
1.தாவர இனச் சத்தை உலோகங்களுடன் கலந்து புடமிட்டு
2.அதன் தரத்தை வலுவுடையதாக்கி
3.மனிதனுக்கு வரும் எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்குகின்றான் மெய் ஞானி.

அகத்திற்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றலின் துணை கொண்டு வேகா நிலை அடைந்து மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்கின்றார்கள் அந்த மெய் ஞானிகள்.

செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…?

Image

curry-leaves

செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…?

 

வேப்ப மரம் அந்தக் கசப்பான உணர்ச்சியின் தன்மை கொண்டு தன் வித்தை உண்டாக்குகின்றது. அதை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அதன் சத்தை மட்டும் கவர்ந்து வேப்ப மரமாக விளைகின்றது.

ஒரு ரோஜாச் செடி – வித்து இல்லை என்றாலும் கூட வித்திற்குக் காரணமான அந்தக் கொடியை எடுத்து வைத்தால் தன் உணர்வை எடுத்து அதே போல நறுமணம் கொண்ட செடியாக மாறுகின்றது.

விஷச் செடியின் வித்தினை நிலத்தில் ஊன்றினால் அது தன் இனத்தைக் கவர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

வேப்ப மரத்தின் சத்தையும் ரோஜாப்பூவின் சத்தையும் விஷச் செடியின் சத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டதனால் (பரமாத்மாவாக – காற்று மண்டலம்) அந்தந்த வித்துக்களை நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் ஈர்ப்பு சக்தியின் துணை கொண்டு அந்தந்தச் செடிகள் விளைகின்றது.

இதை நாம் பார்க்கின்றோம்.

விஷச் செடியில் இருந்து வரக்கூடிய சத்தை வேப்ப மரத்தின் அருகிலே வந்தால் வேப்ப மரத்தின் உந்து விசை கொண்டு தன் அருகில் வராதபடி அதைத் தள்ளி விட்டுவிடும். அதை இழுப்பதிலை.

அதே போன்று தான் வேம்பின் உணர்வின் சத்து விஷச் செடியின் பக்கம் போனதேன்றால் இதை அது விடுவதில்லை. அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

ரோஜாச் செடியும் இதே மாதிரித்தான். அது இரண்டும் இது பக்கத்தில் வந்தால் அவைகளை இது தள்ளி விட்டு விடுகிறது. ரோஜாச் செடி தன் நறுமணத்தை மட்டும் நுகர்ந்து கொள்கிறது.

ஏனென்றால் இதையெல்லாம் பூமியின் காற்ற மண்டலத்தில் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது. அதனதன் வலு கொண்டு அதனதன் நிலைகள் எடுத்து விளைகின்றது.

வேப்ப மரம் இருக்கக் கூடிய பக்கம் விஷச் செடியின் சத்துக்கள் அதிகமானால் வேப்ப மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். அதை இழுக்கக்கூடிய தன்மை வந்தால் வேப்ப மரம் குறையும்.

அதே போல் விஷச் செடியின் சத்து அதிகமாக நிலைகள் பரவப் போகும் போது ரோஜாப்பூ செடியின் வளர்ச்சி குன்றி விடும்.

வேப்ப மரத்தின் உணர்வு அதிகமானால் விஷச் செடியின் அந்த வளர்ச்சி அது குறையும். இது அடர்த்தி அதிகமாகும்பொழுது இதற்கு வேண்டிய ஆகாரம் குறைந்து சிறுத்துப் போகும்.

வேப்ப மரத்திலிருந்து வரும் உணர்வின் சத்துக்களை சூரியன் கவர்ந்து அலைகளாகப் பரவி வரும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தைக் கண்டு ரோஜாப்பூ செடியிலிருந்து வெளி வந்த உணர்வலைகள் நகர்ந்து ஓடுகின்றது.

ஏனென்றால் இது பிடிக்க வில்லை. அதனால் நகர்ந்து ஓடுகின்றது. அதனுடைய அழுத்தம் தாங்காது ஓடும் போது ஒரு விஷச் செடியில் வெளிப்படும் உணர்வுடன் மோதிவிட்டால் அப்படியே “கிறு…கிறு…” என்று சுற்ற ஆரம்பித்து விடும்.

அவ்வாறு சுற்றும் போது விரட்டி வந்த வேப்ப மரத்தின் உணர்வின் அலைகளைத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இழுத்தவுடனே மூன்றும் மோதுகின்றது.

இதைத்தான் வேதங்கள் கூறுகிறது. வேப்ப மரமும் ரிக். ரோஜாப்பூச் செடியும் ரிக். விஷச் செடியும் ரிக்.

வேப்ப மரத்தில் இருந்து வரக்கூடிய மணம் சாம இசை. பேப்ப மரத்தின் கசப்பான சத்தை நாம் நுகர்ந்தவுடனே
1.“ஐய்யய்ய.. வாந்தி வர மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம்.
2.“ஓ…ய்..” என்று வெளியே தள்ளிவிடுகின்றது.

ரோஜாப்பூவின் மணத்தை நாம் நுகர்ந்தவுடனே “ஆஹாஹா…” என்று நம்மை அறியாமலே அந்த இசைகள் இயக்குகின்றது. நல்ல நறுமணமாக இருக்கின்றது. சந்தோஷமாக இருக்கின்றது என்று சொல்கிறோம்.

விஷச் செடியின் சத்தை நுகர்ந்தால் “உச்..உச்..உச்…” என்று அரிப்பு எடுக்கின்றதே…! என்ற நிலைகள் தான் உருவாகும்.

அதனால் தான் ஞானிகள் அதனதன் மணத்தின் நிலையை “சாம இசை” என்று சொல்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு பத்து சதவிகிதம் வேம்பும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூவும் ஒரு சதவிகிதம் இந்த விஷத்தின் தன்மையும் இந்த அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதிச் சுழன்று கவர்ந்து கொண்டால் அதற்குப் பெயர் அதர்வண.

வேம்பின் சத்தை அது இழந்துவிடுகின்றது. ரோஜாப்பூவின் நறுமணத்தின் சத்தை அது குறைந்து விடுகின்றது. விஷச் செடியின் அரிப்பின் தன்மையும் குறைந்து விடுகின்றது.

மூன்றும் சேர்த்து ஒன்றோடொன்று மோதுகின்றது. மோதலில் இரண்டறக் கலந்து விடுகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் ஒன்று சேர்ந்து தான் அணுத்தன்மைகள் விளைகின்றது.

இருபத்தேழு நட்சத்திரங்களின் நிலைகள் கடும் விஷமானது. அதைச் சூரியன் உணவிற்காகக் கவர்கின்றது.

கவர்ந்து கொண்ட பின் தன் உடலிலே உருவான பாதரசத்தால் அருகிலே வந்ததும் மோதுகின்றது. மோதியவுடனே வெப்பமாகின்றது. வெப்பமான பின் இந்த விஷம் பிரிந்து செல்லுகின்றது.

நெருப்பில் ஒரு விஷத்தைப் போட்டால் ஆவியாக மாறும். இதே போல் தான் சூரியன் பிரிக்கின்றது. பிரிந்து போகும் போது வெப்பத்தால் ஈர்க்கும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு கிளாசில் தண்ணீர் வைத்துக்கொண்டு சுற்றிப் பாருங்கள். தண்ணீர் சிந்தாது. அது சுற்றும் வேகத்திற்குள் ஈர்த்துத் தன்னுடன் அரவணைத்துக் கொள்ளும்.

இதே போல் தான் பாதரசத்தால் மோதப்படும் போது ஈர்த்துக் கொள்ளும்.
1.இயற்கை எப்படி நம்மை இயக்குகின்றது?
2.இயற்கை எப்படி இயங்குகிறது?
3.இயற்கையில் எப்படி நாம் வாழுகின்றோம்? என்ற நிலையை நாம் புரிந்து நடத்தல் வேண்டும்.

சூரியனில் இருந்து வெப்பமும் காந்தமும் வெளிப்படுகின்றது. கடைசியில் வலுவிழந்த விஷத்தை அந்தக் காந்த இழுத்துக் கொள்கின்றது காந்தம் இழுத்தவுடனே மூன்றும் மோதுகின்றது.
1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் அரவணைக்கும் சக்தி
3.விஷம் இயக்கும் சக்தி என்ற நிலையில் தான் சூரியனில் இருந்து வெளிப்படுகின்றது.

இப்போது செடியில் இருந்து வெளிப்படும் இந்த சூரியனால் அந்த வெப்பம் தாக்கிய பின் அதனுடைய மணம் வெளிப்படுகின்றது.

வெப்பம் தாக்குவதால் அதனுடைய ஈர்க்கும் தன்மை அதனுள்ளே எந்தச் சத்தோ அதே போல தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அது விளைகின்றது.

அதே சமயத்தில் வெளிப்படக்கூடிய சத்தை சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இதைக்கவர்ந்து எடுத்துக் கொண்டால் அந்த மரத்தில் விளைந்த வித்திற்கு பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு அது வளர்க்கத் தொடங்கும்.

மோதும் போது வெப்பமாகின்றது. வெப்பமானால் தான் எதுவுமே வளரும்.

குளிர்ச்சியான நீராக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த வெப்பம் இருக்கும். வெப்பம் இல்லை என்றால் எந்தச் செடியும் விளையாது. (வெளியில் உறை பனியாக இருந்தாலும் உயிரின் துடிப்பால் உடல் உஷ்ணமாக இருப்பது போல்)

ஒரு வித்து நிலத்தின் ஈர்ப்பின் துணை கொண்டு மோதி அதனால் வெப்பமாகி அது விளையப்படும் போது அதனுடன் கலந்த விஷம் இருக்கின்றதே அது உணர்ச்சியைத் தூண்டும்.

ரோஜாப்பூ சத்து பத்து சதவிகிதமும் வேம்பின் சத்து பத்து சதவிகிதமும் விஷச் செடியின் சத்து பத்து சதவிகிதமும் இது சேர்ந்து விட்டது என்றால் அரளிச் செடியாக மாறும்.

அதில் விளைந்த வித்தை நாம் சாப்பிட்டோம் என்றால் ஆளைக் கொன்றுவிடும். உடலில் விஷமான அணுக்களாகி கிருமிகள் ஏற்பட்டால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் அந்த விஷக் கிருமிகளைக் கொல்லும்.

ஏனென்றால் அரளிப்பூ விஷம் என்றாலும் அதற்கு மாறான விஷம் என்று வரும் போது அதை இது கொல்லும்.

வேப்ப மரத்தின் சத்தும் ரோஜாச் செடியின் சத்தும் விஷச் செடியும் சேர்த்தால் மூன்றும் ஒன்றாகி அதர்வண – இதை அடக்கி “யஜூர்” என்ற ஒரு வித்தாக மாறிவிடுகின்றது.

அப்படி வித்தாக மாறியது பூமியிலே படருகின்றது. படரப்படும் போது அதில் கலந்த சத்தை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. எப்படி…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் தூசிகள் ஒன்றோடொன்று மோதியது என்றால் மின்னலாக மாறுகின்றது. அந்த மின்னல் பூமியில் படர்ந்திருக்கும் வித்தில் படும் பொழுது அதற்குள் துடிப்பின் நிலை அதிகமாகி ஈர்க்கும் தன்மைக்கு வருகின்றது.

அப்பொழுது வேம்பின் சத்தையும், ரோஜாப்பூ சத்தையும் விஷச் செடியின் சத்தையும் இழுக்கும் சக்தி வருகின்றது. அவ்வாறு இழுக்கும் பொழுது அது கருவேப்பிலைச் செடியாக மாறுகின்றது.

கருவேப்பிலையில் பார்த்தோம் என்றால் கசப்பு இருக்கும் துவர்ப்பும் இருக்கும். நல்ல மணமும் இருக்கும் அரிப்பும் இருக்கும். இந்த கலவைக்கொப்ப அந்த உணர்ச்சியாகி அந்தச் செடி வருகின்றது.

நமது ஞானிகள் முதன்மையானவன் அகஸ்தியன். அகம் என்றால்” ஒரு இயக்கத்தின் உண்மையை அறிந்தவன் அகஸ்தியன்.

அவன் கூறிய உணர்வு தான் பிற்காலங்களில் வேதங்களாக மாற்றப்பட்டு அதன் உண்மையின் நிலைகள் அனைத்தும் சிதைந்து அறிய முடியாத நிலைகள் போய் விட்டது.

ஜோஸ்யம் ஜாதகம் என்று இப்படிப் பல நிலைகளும் மாற்றி விட்டனர். வைத்தியர்கள் அந்த உணர்வுக்குத்தக்க மருந்துகளை சாம வேதத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள். ஆயுர்வேதம் என்று சொல்வார்கள்.

மனிதனுக்குள் நாடித் துடிப்பு ஏற்படும் போதும் எத்தகைய விஷத்தின் தன்மை ஆனதோ அதற்குத்தக்க துடிப்பு என்றும் இந்த துடிப்பைச் சீராக்குவதற்கு ஆயுர்வேதத்தில அதற்கு தக்க மருந்துகளை மற்ற தாவர இனங்களைக் கலந்து கொடுப்பார்கள்.

அந்த மணத்தை நுகரும் போது இந்த துடிப்பின் தன்மை மாறி மனிதனை நோயில் இருந்து விடுபடும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்கும் நீங்கள் “குறைகளைக் காணுவதற்குப் பதில் குறைகளை அகற்ற ஆசைப்பட வேண்டும்”

Image

Soul cleaning Dhiyanam

எம்முடைய உபதேசத்தைக் கேட்கும் நீங்கள் “குறைகளைக் காணுவதற்குப் பதில் குறைகளை அகற்ற ஆசைப்பட வேண்டும்”

 

சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது உற்றுக் கேட்கின்றோம். கேட்டதைப் பதிவும் செய்கின்றோம்.

ஆனாலும் கேட்பவர்களில் சிலர் “ஞானிகள் உணர்வுகளைச் சாமி அவ்வளவு நேரம் உபதேசித்தார். இங்கே இவர்களைப் பாருங்கள்…! எல்லாம் கேட்டுவிட்டு இப்படித் தவறு செய்கிறார்களே…!” என்று சாமி சொன்னதை விட்டு விடுகிறார்கள்.

சாமி சொன்னதைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
1.மற்றவர்கள் குறைகளையே செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று
2.அந்த அடுத்தவரின் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கிறோம்.
3.இதைப் போன்ற நிலைகளை நாம் தவிர்த்தல் வேண்டும்.

குறைகளைக் காணும் போதெல்லாம் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாங்கள் பெற வேண்டும்.
1.தெரிந்து தெளிந்து நடக்கும் ஆற்றலையும்
2.பிறருக்கு நன்மை செய்யும் உணர்வையும் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை அறியாது நமக்குள் தீமை வந்து விட்டால்
1.நாம் தவறு செய்கிறோம் என்று (நமக்கே) தெரியும்
2.இருந்தாலும் நாம் எதற்குத் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்
3.அங்கிருந்து விலகிச் செல்கிறோமே செய்த தவறை தவிர நீக்குவதில்லை.

தனக்குத் தானே தவறின் தன்மை வந்தாலும் அதை நாம் உடனே நீக்கப் பழக வேண்டும். ஏனென்றால் நம்மை அறியாத இயக்கம் தான் அந்தக் குறைகள்.

நாம் நல்லதைச் செய்யும் போது தான் பிறர் குறைகளைப் பார்க்கின்றோம். அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம்மை அறியாது அந்தக் குறைகளைச் செய்யும் உணர்வுகளைத் தூண்டுகிறது.

பாலிலே சுவை கொண்ட பாதாமையும் நறுமணம் கொண்ட பொருள்களைச் சேர்த்தாலும் சிறிது காரம் பட்டு விட்டால் அந்த சுவையின் தன்மையை மாற்றி காரத்தின் தன்மையே வருகிறது.

நல்ல சுவை கொண்ட உணவை உட்கொள்ளும் பொழுது உடலில் நல்ல அணுக்களை உருவாக்குகிறது. ஆனால் உணவிலே ஒரு துளி விஷம் சேர்ந்து விட்டால் உணவை நஞ்சாக மாற்றி நல்ல அணுக்களை அது அழித்து விடுகிறது.

இது போன்று தான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாமலே இயக்கக் கூடிய நிலைகள் தான் அது. அப்படி இயக்கினாலும் அது தவறென்று நமக்குள் உணர்த்தும்.

அந்த நேரத்திலாவது சுதாரித்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்களை அறியாது இயக்கும் தவறான இயக்கத்திலிருந்து நாங்கள் மீள வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என்றென்றும் எங்களுக்கு உறு துணையாக இருந்து
4.மெய் வழி காணும் நிலைகளை எங்களுக்குத் தர வேண்டும்.
5.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்ற
இதைப் போன்ற உணர்வை மட்டும் கொஞ்சம் எடுங்கள்.

உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும். குறைகளை அகற்றி நம் மனதைப் பரிசுத்தப்படுத்தும். அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

செல்வத்தைத் தேடும் பொழுதும் வேதனைப்படுகின்றோம்…! செல்வத்தை காத்திடவும் வேதனைப்படுகின்றோம்…!

Image

gnana pokkisham

செல்வத்தைத் தேடும் பொழுதும் வேதனைப்படுகின்றோம்…! செல்வத்தை காத்திடவும் வேதனைப்படுகின்றோம்…!

 

நாம் எண்ணும் உணர்வுகள் உயிரிலே படும்போது நம் சிரசின் பாகம் ஈஸ்வரலோகம்.

எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்த நாளங்களில் அது சேரும் பொழுது இந்திரலோகம்.

அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கி விட்டால் அது பிரம்மலோகம்.

அணுவான பின் அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும். எந்த குணத்தின் அணுவாக உருவானதோ அணுவின் மலமே (தசை) உடலாகின்றது. அது சிவலோகம்

நல்ல குணத்தின் தன்மை கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நமது உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆனால் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் பயம் போன்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி அதை இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உருபெற்றுச் சிவலோகமாக மாற்றிவிடுகின்றது.

சிவத்துக்குள் (உடலில்) வேதனை என்ற உணர்வை அது அதிகமாக வளர்த்துக் கொண்டால் நரகலோகமாக மாற்றுகின்றது என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

இருந்தாலும் நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்குத்தான் வாழுகின்றோமே தவிர
1.செல்வம் தேடுகின்றோம்…
2.தேடிய செல்வத்தை வைத்து நிலைத்திக்கினறனரா மனிதர்கள்…!
3.தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா…?
4.செல்வம் குவித்திருந்தாலும் நிம்மதி வருகின்றதா…?

வேதனை என்ற உணர்வு கொண்டு தான் வாழுகின்றோம்.

செல்வம் தேட ஆசைப்படுகின்றோம். தேடிய செல்வத்தைக் காக்க வேதனையும் படுகின்றோம்.

முதல் செல்வம் இல்லாத பொழுது ரொம்பச் சிரமப்பட்டு இருப்போம். செல்வத்தை தேடி குவிக்கும் பொழுது சிரமத்தில் இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் “இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே…! நீ எனக்கு 100 ரூபாய் கொடு…” என்று நம்மிடம் கேட்பான்.

அதைக் கொடுக்கவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும் என்ற உணர்வினை மற்றவருக்குப் பறை சாற்றுவான். “பணம் கொடுக்கவில்லை…” என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறான் என்று வேதனையே வந்து விடுகின்றது.

அத்தகைய வேதனை வந்த பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக ஈஸ்வரலோகமான சிரசுக்குள் அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ அது ஈஸ்வரலோகத்தில் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகும்போது பிரம்மலோகமாகின்றது.

அணுவாக மாறிவிட்டால்
1.எந்த மனிதன் குறை கூறி அதனால் வேதனைப் பட்டானோ
2.அந்த வேதனையை நுகர்ந்து நுகர்ந்து வேதனைகள் உருவாக்கும் அணுக்கள் பெருகி
3.இந்த உடலையே வேதனைப்படும் உடலாக மாற்றிச்
4.சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து விடுகின்றது.

செல்வத்தைத் தேடினாலும்… “சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை…!”

1.செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை.
2.செல்வம் தேடினாலும் உடலை காக்கும் நிலை இல்லை…..?

அழியும் செல்வத்தையும் அழியக்கூடிய உடலையும் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தனை பாடும் படுகின்றோம். இது தான் உண்மை.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கையில்
மனமே… இனியாகிலும் மயங்காதே…!
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!

“நேற்றிருந்தார்…” இன்றிருப்பது நிஜமோ…!
நிலையில்லா இவ்வுலக வாழ்க்கை சதமாமோ…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் பொல மறைவதைப் பாராய்…!
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மனமே இனியாகிலும் மயங்காதே…! மயங்காதே…!

மெய் ஞானிகள் வளர்த்துக் கொண்ட “வினை நீக்கும் விண்ணின் ஆற்றல்கள்”

Image

Eye balls

மெய் ஞானிகள் வளர்த்துக் கொண்ட “வினை நீக்கும் விண்ணின் ஆற்றல்கள்”

 

மிருகங்களில் யானை மிகவும் பெரியது… அது வலுவானது. அது போல உயிரினங்களிலே மனிதன் எண்ணத்தில் மிக வலிமை பெற்றவன். ஞானத்தின் நிலைகள் வளர்க்கப் பெற்றவன்.

தன் எண்ணத்தின் ஞானத்தின் வலிமை கொண்டு பெரிய மலையையும் பாறைகளையும் அவனுடைய சிந்தனையின் வலிமை கொண்டு ஒரு நொடியில் சுக்கு நூறாகத் தகர்த்து எறிகின்றான்.

விஞ்ஞானி தன்னுடைய சிந்தனையால் கண்டுபிடித்த அணுவின் ஆற்றலைக் கொண்டு தன் எண்ணத்தின் வலுவால் நூறு மைல் சுற்றளவு கொண்டதையும் தகர்த்து எறியும் தன்மை பெறுகின்றான்.

ஆனால் அன்றைய மெய் ஞானிகள்
1.தன் எண்ணத்தின் வலுகொண்டு விண்ணை நோக்கி கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.பல இலட்சக்கணக்கான மைல் தூரத்தில் எட்டாத தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும்
3.தன் எண்ண வலுவால் அதனின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் சேர்த்து
4.மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்ற கடுமையானதையும் அடக்கி
5.விண்வெளியில் ஒளி எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே அவர்கள் எண்ணங்கள் ஒளி பெற்று
6.பொருளுக்குள் மறைந்த நிலையை ஊடுருவிக் கண்டறிகின்றான் மெய்ஞானி.

விஞ்ஞானி தான் கண்டுபிடித்த “எக்ஸ்ரேயை…” உடலுக்குள் ஊடுருவிப் பாய்ச்சும்போது எலும்புக்குள் உள்ள ஊனையும் காட்டுகின்றது. நரம்புக்குள் உள்ள நிலையையும் காட்டுகின்றது. குடலுக்குள் உள்ள பழுதையும் காட்டுகின்றது. இதயத்தில் உள்ள பிழையையும் காட்டுகின்றது.

கருவியின் துணை கொண்டு செலுத்தப்படும் அந்த ஆற்றல் மிக்க எக்ஸ்ரே ஒன்றைப் பிளந்து நுண்ணிய அலைகள் எது இருக்கின்றதோ அதைக் காட்டுகின்றது. அதைப் படமாக எடுத்து நோயின் தன்மையை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.

அவ்வளவு ஆற்றல் பெற்ற விஞ்ஞானியால் இதைக் கண்டுணர முடிகின்றது. அதைக் கண்டுணர்ந்து
1.உடலுக்குள் உள்ள கட்டிகளையோ மற்றவைகளையோ அப்புறப்படுத்த முடிகின்றது.
2.அதைச் சரி செய்யவும் முடிகின்றது.
3.எண்ண வலுவால் அந்த நோயை நீக்கவும் முடிகின்றது.

ஆனால் இவன் உடலில் விளைவித்த தீமையான உணர்வின் சக்தியை அகற்ற இவனுக்குச் செயலில்லை. அவன் கண்டுணர்ந்த செயலின் ஆற்றலால் அதை நிவர்த்தி செய்யவும் இயலவில்லை.

அன்று மெய்ஞானி விண்ணில் எட்டாத தூரத்தில் இருக்கும் ஆற்றலையும் தான் கவர்ந்து தன் உடலில் அதைப் பாய்ச்சி வளர்த்துக் கொண்டான்.

வளர்த்த ஆற்றலின் துணை கொண்டு தன் உணர்வின் நினைவலைகளை எக்ஸ்ரே போன்று ஒரு மனிதனுக்குள் ஊடுருவிச் செலுத்தி
1.அவனுக்குள் இருக்கும் நோயையும் மற்ற செயல் சக்தியையும் தான் நுகர்ந்தறிந்து
2.அதற்குத் தன் ஒளியாலே விழியாலே தன் எண்ணத்தை வலுக்கூட்டிப் பாய்ச்சி
3.அங்கிருக்கும் நோய்களை நீக்கினான் மெய்ஞானி.

விண்ணின் ஆற்றலை எண்ணிலடங்காத தூரத்திலிருந்து வரும் விஷத் தன்மையை தன் ஒளிக் கதிரின் சுழற்சியால் வீழ்த்தி தன் உணர்வின் சாந்த நிலைகள் கொண்டு ஒளிச் சரீரமாக வளர்த்துக் கொண்டார்கள் மெய் ஞானிகள்.

அவர்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைத் தன் அருகிலே வராதபடி அதை வீழ்த்தி அதைத் தனக்குள் சாதகப்படுத்திக் கொண்டு பேரொளியாக மாற்றியவர்கள்.

மனிதனில் தோன்றிய எண்ண அலைகள் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கின்றது.

ஆனால் அந்த மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் எண்ண அலைகள் ஆற்றல்மிக்க சக்திகளாக விஷத்தை வீழ்த்தும் தன்மை கொண்ட அணுக்களாக விண்ணிலே மிதந்து கொண்டிருக்கின்றது.

அந்த மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்த அந்த விண்ணின் ஆற்றலை நாமும் பெறுவோம். அவர்களைப் போன்று நாமும் பேரொளியாக மாறி வேகா நிலையை அடைவோம்…!