மனித இனம் புனிதம் பெற்று ஒன்றுபட்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்திடச் செய்யும் சக்திகளைப் பெறுவதற்காக ஆலயங்களை நிர்மாணித்தனர் ஞானிகள் – ஞானிகள் காட்டிய வழியில் வழிபடும் இடமாக வைத்திருக்கின்றோமா…?

Image

Agastya Temple siddhantha

மனித இனம் புனிதம் பெற்று ஒன்றுபட்ட நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்திடச் செய்யும் சக்திகளைப் பெறுவதற்காக ஆலயங்களை நிர்மாணித்தனர் ஞானிகள் – ஞானிகள் காட்டிய வழியில் வழிபடும் இடமாக வைத்திருக்கின்றோமா…?

 

 

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கே படர்ந்திருக்கும் தெய்வ சக்திகளை நாம் எவ்வாறு எடுப்பது என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் அவ்வழியில் நாம் செய்கிறோமா…!

 

நான் போனேன். தேங்காய் பழம் அர்ச்சனைத் தட்டு வாங்கினேன். சாமிக்கு அதைச் செய்தேன்.

 

ஏனென்றால் கோயிலுக்கு முன்னாடி கடை இருக்கின்றது. அவர்களுக்கு லாபம் வேண்டும். ஏனென்றால் சாமிக்குத் தானே கொடுக்கப் போகிறார்கள். அதை உற்றுப் பார்க்கப் போகிறார்களா? இல்லை.

 

வீட்டுக்குக் குழம்புக்காகக் காய்கறி வாங்கினால் சுண்டிப் பார்ப்பார்கள். தட்டிப் பார்ப்பார்கள். தேங்காய் நன்றாக இருக்கிறதா இல்லை அழுகலா என்று பார்ப்பார்கள்.

 

சாமிக்கு போகும் போது தாம்பாலத் தட்டிலே வைத்துத் தேங்காயையும் இரண்டு பழத்தையும் பூவையும் பத்தியையும் வைப்பார்கள்.

 

பத்தியை எப்படித் தயாரிக்கின்றார்கள்?

 

கரியை நசுக்கி கொஞ்சம் மெழுகைப் போட்டு அதனுடன் குச்சியிலே உருட்டியவுடன் ஒரு நல்ல வாசனை உள்ள பொருள்களுடன் கொண்டு போய் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைப்பார்கள்.

 

இதெல்லாம் போட்ட உடனே  அந்த வாசனை அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காகிதத்தில் சுற்றிக் கொள்வார்கள். அதை எடுத்துக் கொஞ்சம் நுகர்ந்து பார்த்தோம் என்றால் நல்ல வாசனையாகத் தெரியும்.

 

கொஞ்சம் நேரம் வெளியில் வைத்தால் வாசனை எல்லாம் பறந்து போய்விடும். வெறும் கரிக்கட்டை மட்டும் தான் இருக்கும். கெமிக்கல் கலந்ததைச் சாமிக்காக என்று ஊது பத்தியைக் கொடுத்து விற்பார்கள்.

 

ஆனால் எந்தக் கோயிலிலும் ஊது பத்தி வைப்பது இல்லை.

 

சாமிக்கு நீ நல்ல பத்தியைக் கொடு என்று கேட்டால் சாமி பேரைச் சொல்லித் தப்பு பண்ணி இப்படிச் சம்பாதிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

 

இதை போன்ற நிலைகளைத் தான் நாம் கற்றுக் கொண்டோம்.

 

1.ஆலயத்திற்கு வருவோர் அனவரும் புனிதம் பெற வேண்டும் என்று சொல்வார் யாரும் இல்லை.

2.புனிதம் பெறுவதற்குண்டான அருள் ஞானத்தை அவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை

3.அதற்குண்டான அருள் சேவை நாம் செய்ய வேண்டும் என்ற நிலைகள் எதுவும் இல்லை.

 

செய்யும் தொழிலே தெய்வம் என்ற நிலையை மறந்த நிலலையில் தான் உள்ளார்கள்.

 

உயர்ந்த குணங்கள் கொண்டு

1.பொருளை வாங்கிச் செல்வோர் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தை கூட்டி

2.பொருளை வியாபாரம் பேசி அனுப்பப்படும் பொழுது

3.அவர்களும் நலம் பெறுகின்றார்கள்.

4.நலம் பெறும் சக்தியால் அவர்கள் மகிழ்ந்திடும் நிலை வரும் பொழுது நாமும் மகிழ்ச்சி அடைவோம்.

 

நம்மால் மற்றவர் மகிழ்வதும் அதைக் கண்டு நாம் மகிழும் நிலைக்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள்.இப்போது நாம் எதைச் சேர்க்கிறோம்?

 

முருகன் கோயிலுக்கோ மற்ற கோயிலுக்கோ போகும் போது விலை பேசி இவர்கள் செய்யும் போது அங்கே ஏமாற்றம் அடைகின்றார்கள்.

 

பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து காண்ட்ராக்டில் கடைகளை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வேறு வழி இல்லை. நாங்கள் இதில் தானே பணத்தை எடுக்க வேண்டும்.

 

கோவிலுக்கு வருகிறவர்களிடம் தான் நாங்கள் வசூல் பண்ண வேண்டும். ஆக கோவிலுக்கு வந்தவர்களிடம் ஏமாற்றுகிறார்கள். இப்படித்தான் நமது ஆலயங்களில் உள்ள திருப்பணிகள் போய் விட்டது.

 

ஆலயங்களில் பத்தியோ தேங்காய் பழமோ மலர்களோ அங்கு தேவையில்லை. ஆலயத் திருப்பணியாளர்கள் அங்கு அதையெல்லாம் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதைச் செய்யட்டும்.

 

1.நீங்கள் எந்த ஆலயத்திற்குப் போனாலும்

2.திருப்பணிக்கு உதவும் நிலையில்

3.இந்தக் காசை உண்டியலில் வேண்டுமானால் போடுங்கள்.

4.ஏனென்றால் திருப்பணியாளர்கள் அதைச் செய்வார்கள்.

 

நீங்கள் பழத்தை வாங்கி சாமிக்கு அபிஷேகம் கொடுத்து அதைக் கண்டு மகிழ்வது அல்ல.

 

நீங்கள் எப்படித் தேங்காயை இரண்டாக உடைக்கின்றீர்களோ… அதைப் போல

1.உங்களுக்குள் இருக்கும் தீமையைப் பிளந்துவிட்டு

2.அருள் ஞானியின்  உணர்வுகளை எண்ணி எடுக்க வேண்டும்

3.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இதைப் போன்ற அபிஷேகக் காலத்தில் நீங்கள் சாமியைச் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் எப்படி எண்ண வேண்டும்?

 

1.இந்த பாலைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும்.

2.தேனைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்.

3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்

 

கனி அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் கனியைப் போன்று சொல்லிலே இனிமையும் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும் என்று இதை நுகர்ந்து சுவாசிக்க வேண்டும்.

 

அங்கே அபிஷேகம் தெய்வத்திற்கு நடக்கும் பொழுது அதை எண்ணி இப்படி நுகர்ந்தீர்கள் என்றால் உங்கள் (புருவ மத்தியிலிருக்கும்) உயிரான ஈசனுக்கு அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் அபிஷேகம் ஆகின்றது.

 

அப்பொழுது

1.ஈசனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

2.அந்த உணர்ச்சிகள் உமிழ்நீராகி உடலுக்குள் செல்லும் பொழுது

3.உடலான சிவனுக்கு அமுதாகின்றது.

4.உங்கள் உள்ளமும் உடலும் களிப்படைகின்றது.

 

அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்.

 

உலகில் எங்கேயும் இல்லாத தத்துவங்கள் நம் நாட்டில் தோன்றிய  “அகஸ்தியன் கொடுத்த… சைவ சித்தாந்தத்தில் உண்டு”. ஆலயங்களுக்குச் சென்றால் இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி நடந்து வழிபடுவோம்.

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – எப்படித் தடுப்பது? 

வாழ்க்கையே தியானம்.

இரவு தூக்கத்தில் கெட்ட கனவு வந்தது… என்னை அப்படியே அமுக்குவது போல் இருந்தது… “ஒன்றுமே செய்ய முடியவில்லை” என்று சொல்வார்கள் – எப்படித் தடுப்பது?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்புச் செய்யும் போது எந்த ஸ்டேசனில் வைக்கிறோமோ TV ரேடியோ மூலம் அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அது வருகின்றது. பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

மனிதனின் வாழ்க்கையில் யாருக்கும் நாம் தீங்கு செய்யவில்லை. நாம் ரோட்டிலே அல்லது பஸ்ஸிலே போகும் போது ஒரு ஆக்சிடென்டைப் பார்க்கின்றோம். அவன் உடல் சிதைகின்றது.

அந்த மனித உணர்விலிருந்து அலறும் அந்த ஓலங்கள் ஒலி அலைகள் பரவுகின்றது. அடிப்பட்ட நிலையில் எத்தனை விதமான ஒலி அலைகள் பரவுகின்றதோ இதைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி நம் உடலிலே பதிவாக்கி விடுகிறது.

அடிபட்ட மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது. அதை நாம் நுகர நேருகின்றது.

நம் உடலிலே ஆக்சிடெண்டைப் பார்த்த உணர்வுகள் வலுவாக இருப்பதால் மற்ற சிந்தனை இல்லாது இரவிலே உறங்கப்படும் போது அது கிளர்ந்தெழுகின்றது.

பதிவாக்கி நுகர்ந்த உணர்வுகள் இயக்கி நம்மை அறியாமலேயே இரவில் “திடுக்…” “திடுக்…” என்று பயப்படுவோம்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு விஷத்தைப் கலந்தால் அந்த விஷம் தான் முன்னிலையில் வரும். ஒரு “சப்…” என்று இருக்கக்கூடிய பொருளுடன் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னிலையில் இருக்கும்.

வாழ்க்கையில் நல்லொழுக்கங்களும் நல் செயல்களும் நல்ல நிலைகளைப் பார்த்து வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நிலையில் ஆக்சிடெண்ட் ஆகி அவன் உடல் சிதைந்ததைப் பார்க்கின்றோம்.

அடிபட்டவர்களைக் கருவிழி இங்கே உடலில் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வைக் கவர்கின்றது. நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து நுகர்ந்த பின் (சுவாசித்தது) அவன் வேதனைப்பட்டது போல் நமக்குள் பயமும் அச்சுறுத்தும் உணர்வுகளும் உருவாகின்றது.

நுகர்ந்தாலும் அந்த அணுத் தன்மையை நமக்குள் அதிகமாகப் பெருக்கி விட்டால் புலனடங்கித் தூங்கும் போது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு
2.பயமான உணர்வலைகளை அதிகமாக இழுத்து
3.நம் ஆன்மாவில் வந்து சுவாசித்து
4.உயிரிலே  பட்டபின் நம்மை அறியாமலே தூக்கத்திலே அலறுகின்றோம் துடிக்கின்றோம்.

சில பேருக்கு  ஆக்சிடெண்டைக் கண்டவுடனே “எழுந்து ஓடும் நிலைகள் வரும்.”

ஆக்சிடெண்டைப் பார்த்து அதை நுகர்ந்தவர்கள் தூக்கத்தில்  அதே உணர்ச்சிகள் வந்த பின் “என்னை யாரோ அடிக்க வருகிறார்கள்…!” என்று  எழுந்து ஓடுபவர்களும் பலர்  உண்டு.

விபத்தில் மனிதன் அடிபடுவதை வேடிக்கை பார்க்கின்றனர். அந்த உணர்வின் தன்மை கருவிழி பதிவாக்கி விடுகின்றது. அவன் உடலிலிருந்து வரக் கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் படர்கின்றது

1.அடிப்பவனைப் பார்க்கின்றோம்
2.விபத்தினால் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம்.
3.இரண்டு உணர்வையும் நம் கருவிழி பதிவாக்கி உடலுக்குள் வைத்து விடுகின்றது.

இதைக் கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இங்கே வருகின்றது. (நன்றாகக் கவனிக்க வேண்டும்).

Agricultureல் பல பொருள்களைச் சேர்த்து புதுப் புது வித்துக்களை உருவாக்குகின்றனர். அதைப் போல ஆக்சிடெண்டைப் பார்த்த பின் இத்தகைய புதுவிதமான உணர்வின் வித்துக்கள் நமக்குள் உருவாகின்றது.

அடிபடுபவனின் வேதனைகளும் அடிபடுகிறோம் என்று அரண்டு ஓடும் உணர்வுகளையும் இரண்டும் கலக்கப்படும் போது உயிரால் நுகரப்படுகின்றது.

நுகர்ந்தது இதில் எதனின் ஆக்கம் அதிகமாகின்றதோ… “இப்படிச் செய்கின்றானே பாவி…” என்ற நிலை வரும் போது ஓடுபவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த பயத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

“இந்தப் பதிவின் துடிப்பு…” அதிகரிக்கப்படும் போது இரவிலே நாம் தூங்கும் போது  அவன் உடல் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆனால் இரவில் நாம் தூங்கிக் கொண்டு இருந்தாலும் யாரோ என்னை அடிக்க வருகின்றனர் என்ற உணர்வு கொண்டு அஞ்சி  எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது
2.நம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள்
3.இயற்கையில் நாம் விழித்திருக்கும் போது என்ன செய்வோமோ
4.அதே செயலைச் செய்யும் அந்தச் செயலாற்றலைக் கொண்டு வருகிறது.

சிலர் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். சிலருக்கு
1.“ஐயோ என்னைக் கொல்கிறார்களே என்ற நிலைகளும் வரலாம்.
2.என்னை அமுக்குகின்றனர் கொல்கின்றனர் என்றும் சொல்வார்கள்.

விபத்துக்குள்ளாகித் தாக்குதலான நிலைகளை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அங்கே இப்படி நடந்தது. இங்கே இப்படி ஆனது என்பார்கள்.

நண்பர் சொல்வதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பதிவாக்கினால் அந்த அதிர்சியின் உணர்வுகள் அது வலு கொண்டதாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும் போது நண்பன் சொன்ன நிலைகள் இரவிலும் வருகின்றது.

அவர் விபத்தைப் பார்த்தார்; நாம் பார்க்கவில்லை. ஆனால் பேசும் பொழுது நாம் கூர்மையாகக் கேட்டிருப்போம்.

என்னப்பா…! அநியாயத்துக்கு இப்படி அடித்துக் கொல்கிறார்களே என்று அவர் நம்மிடம் சொன்னால் போதும். அவருக்குள் பதிவான உணர்வுகள் சொல்லாக வருகின்றது.

அவர் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அந்த உணர்ச்சிகளைச் சொல்லாக வெளிப்படுத்துகின்றார். ஆனால் நாம் ஆளைப் பார்க்கவில்லை.

1.அவர் சொல் நமக்குள் பதிவான பின்
2.நாம் புலனடங்கித் தூங்கும் போது
3.அந்த மனிதனின் ரூபமே நமக்குத் தெரியும்.

அவன் வேதனைப் படுகின்றான் துரத்துகின்றான் அவனை அடிக்கச் செல்லுகின்றான் என்று பதிவான உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்ட பின்  இரவிலே

1.“நம்மை அடிக்க வருகிறான்” என்று நாம் எழுந்து ஓடுவோம்.
2.அல்லது என்னை அடிக்க வருகிறான் என்று தூக்கத்தில் கத்துவோம்.

ஒருவன் நீரிலே மூழ்கினான். அதனால் அவன் மூச்சுத் திணறி இறந்துவிட்டான். அதை இன்னொருத்தர் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்.

“ஒரேயடியாக இந்த மாதிரி மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்று சொல்வார். அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று சொல்லுவார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் அந்த உணர்வுகள் அப்படியே பதிவாகும்.

வீட்டிலே அன்றைக்குக் கஷ்டம் என்ற நிலைகள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய சலிப்பான சங்கடமான நிலைகளோடு அவர் தூங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

சோர்வென்ற நிலைகள் இருக்கும் போது அவர் சொன்ன நிலைகள் கிணற்றில் விழுந்து மூழ்கினான் கதறினான் கத்தினான் என்று பதிவான உணர்வுகள்
1.தூங்கும் பொழுது இயக்கி அறியாமலேயே
2.குளத்துக்குள் மூழ்குவது போலவே அவருக்குத் தோன்றும்.
3.தண்ணீருக்குள் மூழ்கினால் கத்துவது போல் கத்துவார்.
4.இவையெல்லாம் பதிவான உணர்வின் இயக்க நிலைகள்.

புலனடங்கித் தூங்கிக் கொண்டிருந்தாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை நம் உடலிலே சுழலச் செய்து 2.அதே செயலாக்கமாக இயக்கிக் காட்டும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

விபத்துகளையோ அசம்பாவிதங்களையோ பார்க்க நேரந்தால் அல்லது கேட்க நேர்ந்தால்
1.அடுத்த கணம் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணி
3.அதைத் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வை உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின் விபத்தில் அடிபட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் விரைவில் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டவர்கள் இறந்திருந்தால்… உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று விண்ணை நோக்கி உந்திச் செலுத்த வேண்டும்.

அதே போல் படுக்கப் போகும் முன்பும் காலையில் எழும் பொழுதும் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று கண்டிப்பாகத் தியானிக்க வேண்டும்.

1.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக அமைய வேண்டும் என்று இரவிலும்
2.இன்றைய செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று காலையிலும்
3.ஒவ்வொரு நாளும் இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால்
4.நம் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் என்றுமே குடிகொண்டிருக்கும்.

மலரில் உருவாகும் மதுரத்தைப் போல மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்

Image

Honey bee flower

மலரில் உருவாகும் மதுரத்தைப் போல… “மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொண்ட மதுரத்தைப் பெறுங்கள்”

 

செடியிலோ மரத்திலோ மலர் மலர்ந்து விட்டால் மீண்டும் மீண்டும் மலர்ந்து அதிலிருந்து அதனின் மணம் கமழ்கிறது.

 

மலராக உருவான பின்

1.அதில் மதுவான இனிமை கொண்ட மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து

2.அந்தத் தேனினை இணைத்து அதற்குள் கருவுற்று

3.கருவுற்ற நிலைகள் கொண்டு தன் வித்தாக உருவாக்குகின்றது.

 

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மகரிஷிகளின் உணர்வின் தன்மை மலரின் மணம் போன்று அருள் மணமாகக் கமழ்கின்றது.

 

1.மகரிஷிகளின் மணத்தை நுகர்ந்தால் அது மதுரமாகி

2.மகிழ்ச்சியான அலைகளாக நம் ஆன்மாவாக மாறி

3.அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும்பொழுது

4.நமக்குள் வளர்ந்து அருள் ஞான ஒளியின் வித்தாக

5.முழுமை பெறும் தன்மையினை நாம் நிச்சயம் அடைய முடியும்.

 

ஆகவே என்னமோ ஏதோ என்ற நிலையில் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை அலட்சியப்படுத்தாது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நீங்கள் பெற வேண்டும். குருவின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை வேண்டும்.

 

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். உங்களை நான் பார்க்கும் பொழுது எனது குருவின் அருளை உங்களிடம் பார்க்க விரும்புகின்றேன்.

 

உங்களை அறியாது வந்த இருள்களை நீங்கள் போக்கும் நிலை பெறவேண்டும். அப்பொழுது மகிழ்ந்திடும் பேரானந்த நிலையான அந்த மதுரம் உங்களுக்குள் வரும்.

 

அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது எனக்குள்ளும் மதுரமாகின்றது. உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலையாக நிலைக்கும் நிலைகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

 

சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் கலந்து வரும் நஞ்சினைப் பிரித்து விட்டு உணர்வின் ஒளியாக மாறுகின்றதோ இதே போல

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பேரொளியாக மாற்றினார்.

2.அவர் வழியில் நான் பெற முடிகின்றது.

3.அதன் வழி நீங்கள் அனைவரும் பெறமுடியும்.

4.இதில் கடினம் எதுவும் இல்லை.

 

அனைவரும்  இந்த முறைப்படுத்தி வாருங்கள். பிறர் தீமையான நிலைகளில் செயல்பட்டாலும் அதை நீங்கள் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

 

இந்த உணர்வின் தன்மை கொண்டு உங்களை அறியாது வரும் அவர்களுக்குள் (பிறரின் இருளான உணர்வுகள்) பட்ட இருள் உங்களை மறைத்திடாது தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வை ஒளியாக மாற்றுங்கள்.

 

அந்த வலுவின் துணை கொண்டு

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்.

2.உங்கள் பிணிகள் அகலும். உடல் நலம் பெறுவீர்கள்.

3.மகரிஷிகளின் அருள் ஒளியால் உங்கள் நோய்கள் நீங்கும்.

4.உங்கள் குடும்பம் நலமாக இருக்கும்.

5.உங்கள் தொழில்கள் வளரும்.

6.உங்கள் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பீர்கள் என்று

7.உங்கள் வாக்கை மற்றவர்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவு செய்யுங்கள்.

 

இதன் வழி கொண்டு மெய் வழியில் தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்.

 

1.தீமைகள் அகன்று தீமைகளை அகற்றும் உணர்வுகள் அனைவரது உடல்களிலும் விளைந்து

2.அந்த உணர்வலைகள் வெளி வரும்போது

3.சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு

4.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகப் பரவச் செய்யும்.

5.இந்த அருள் உணர்வுகள் பரவப்படும் போது கடவுளாக – இந்தப் பரமாத்மாவுக்குள்

6.தீமையை அகற்றும் அலையின் தொடராக

7.யார் எண்ணி ஏங்கினாலும் அடுத்த கணம் அவர்கள் தீமைகளை அகற்றும்.

8.அந்தக் கடவுளாக மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மை வரும்.

 

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எதை இந்தப் பரமாத்மாவில் கலந்து கொண்டிருக்கின்றோம்?

 

பஸ்சில் போனால் பயம்; வீட்டில் இருந்தால் பயம்; அதிகமான காசு கொண்டு போனால் பயம்; ஏதாவது வாய் திறந்து பேசினால் பயம் என்ற நிலையில் அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வுகளை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றோம்.

 

இந்த உணர்வலைகள் படரப் படர அலைகளாக மலர மலர மகரிஷிகளின் அருள் ஒளியை அந்த மெய் ஒளியை இங்கே நாம் பெற முடியாது இருள் சூழும் நிலையே வருகின்றது.

 

அந்த இருளான உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து பரவச் செய்யும்போது அச்சுறுத்தும் உணர்வின் தன்மை கொண்ட கடவுளாக – அதைத்தான் பரமாத்மாவாக மாற்றுகின்றோம்.

 

அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நமக்குள் வந்து அஞ்சி வாழும் நிலைகளைத்தான் நம்மை இயக்கச் செய்யும்.

 

இதைப் போன்ற நிலைகளை அகற்றுங்கள். உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

 

உலக மக்கள் அனைவரும் பூரண நிலா போல ஒளியின் சுடராக மாறித் தெளிந்த நிலைகள் கொண்டு மனிதன் என்ற முழுமை அடையுங்கள்.

 

இந்த உடலை விட்டு அகன்றால்

1.என்றுமே நிலைத்திருக்கச் செய்யும்

2.அழியாத ஒளியின் சரீரங்கள் நாம் அனைவரும் பெற வேண்டும் பெறுவோம் என்று

3.ஏகோபித்த நிலைகளில் நாம் வாழ்வோம் வளர்வோம்.

நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

X rays - divine rays

நம் கண்களுக்குள் இருக்கும் “எக்ஸ்ரே” ஆற்றலை அறிந்திருக்கின்றோமோ…?

1.விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை ஊடுருவி
3.தசைகளைத் தாண்டி எலும்புகளைப் படமாக்கி
4.எலும்பிற்குள் உறைந்து இருக்கும் சளியைக் காணுகின்றார்கள்.

எலும்பிற்குள் இருக்கும் சளியின் விளைவால் ஏற்படும் அணுக்களின் சிதைவின் தன்மையும் அது எலும்புகளை எப்படி அரிக்கின்றது (டி.பி. நோய்) என்பதையும் எக்ஸ்ரே மூலம் மருத்துவர்கள் காணுகின்றனர்.

அதைப் போல உடலின் உறுப்புகளில் உள்ள பாகங்களில் இந்தத் தசை மண்டலங்களில் விஷத்தின் ஆற்றல் அளவு கோல் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளில் வீக்கமோ அல்லது சீராக இயங்க முடியாமல் ஏதாவது அடைப்பாகிவிடும்.

இவ்வாறு அந்தந்த உறுப்புகள் செயலற்றதாக ஆகின்றது என்பதனை  விஞ்ஞானிகள் எக்ஸ்ரே மூலம்  கண்டறிகின்றனர். கருவி கொண்டு அவன் அறிகின்றான்.

எக்ஸ்ரே என்றால்
1.உணர்வின் ஒளிகளை ஒன்றிலே (ஊடுருவிப்) பாய்ச்சி
2.அதன் உணர்வின் அதிர்வுகளை வெளியாக்கி
3.அதைப் படமாக்கி எடுத்துக் கொள்வது.

எக்ஸ்ரே என்று அதற்குக் காரணப் பெயர் வைக்கின்றனர்.

உடலுக்குள் இருக்கும் நிலையை இந்த விஞ்ஞான அறிவால் நம்மை அறிந்திடச் செய்கின்றனர். இதைக் கண்டறிந்தது மனிதன் தான்.

ஆக உடலிலுள்ள உணர்வைக் கூர்மையான நிலையில் கண்டறிந்து எக்ஸ்ரே என்று படமாக எடுக்கின்றார்கள்.

அதைப் போன்று நாம் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம். அவர்களுடன் பழகுகின்றோம். அவர்களை அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு அவர்கள் உணர்வுகள்
1.நமக்குள் பதிவான உணர்வுகளில்
2.மீண்டும் மீண்டும் பதிவானதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.எந்த  மனிதனின் உணர்வோ அது நுகரப்படும் போது
4.இதுவும் எக்ஸ்ரே தான்.

அடுத்தவர்களைப் பற்றி ஊடுருவி அதன் வழி அவர்கள் உணர்வலைகளை நாம் நுகரப்படும்போது அந்த (அவர்) உணர்வுகள் அதன் வழிப்படி நமக்குள் இயக்குகின்றது.

டி.பி. நோய் வந்தது என்றால் எலும்புகளையோ தசைகளையோ கரைக்கும் அணுக்களுக்கு அதற்கு மாற்றான அணுக்களை நம் உடலிலே உருவாக்குகின்றார்கள்.

மற்ற மருந்தின் துணை கொண்டு அதாவது இவன் எடுக்கும் உணர்வுகளை உள் செலுத்திப் புது விதமான அணுக்களை எலும்புக்குள்  உருவாக்குகின்றார்கள். நோயை நீக்குகிறார்கள்.

இது விஞ்ஞான அறிவால் கண்டறிந்து செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அந்த மருந்தின் அளவு கோல் உடலுக்குள் அதிகமாகும் பொழுது
1.நம் உயிரான்மாவில் நஞ்சு அதிகமாகின்றது.
2,அதற்குத்தக்கத்தான் அடுத்த உடல் நாம் பெறுவோம்.
3.விஞ்ஞான அறிவு கொண்டு உடலைக் காக்கலாம்.
4.உயிரான்மாவை ஒளியாக ஆக்க முடியாது.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழிப்படி அவர்கள் தங்கள் கண்ணின் புலனறிவை விண்ணிலே செலுத்தி அந்த ஆற்றல்களைத் தங்கள் உடல்களிலே வளர்த்து வாழ்க்கையில் வந்த நஞ்சை வென்று உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சுடராக மாற்றினார்கள்.

அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எக்ஸ்ரே போன்று நம் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து உறுப்புகளில் உள்ள தீமையான அணுக்களை அடக்கி அருள் ஒளியின் அணுக்களாக உருவாக்கும்.

தீமைகளையும் அகற்றுகின்றோம். நோயையும் அகற்றுகின்றோம். அதே சமயத்தில் ஞானிகள் உணர்வுகள் நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக விளையத் தொடங்கும்.

விளைந்தது உயிரான்மாவில் சேர்ந்து ஒளியின் சுடராகும். இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அவர்கள் இருக்கும் எல்லையை நாம் அடையலாம். ஒளியின் சரீரம் பெற முடியும்.

ஞானகுரு உங்கள் உணர்வுக்குள் தான் இருக்கிறேன் – பயன்படுத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள்

Image

துருவ நட்சத்திரம், POLARIS

“ஞானகுரு… உங்கள் உணர்வுக்குள் தான் இருக்கிறேன்” – பயன்படுத்திக் கொ‌ள்ளு‌ங்க‌ள்

 

நான் (ஞானகுரு) வந்தவுடன் “எங்கள் வீட்டுக்கு வாருங்கள்… எங்கள் வீட்டுக்கு வாருங்கள்…. வந்து சாப்பிட்டுவிட்டுப் போங்கள்…!” என்று சொல்வதற்குத்தான் ஆள்கள் இருக்கின்றது.

 

சாமி…!

1.நீங்கள் சொன்ன சக்திகள் அனைத்தும் எங்களுக்குள் உருப் பெறவேண்டும்.

2.நாங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.

3.எங்கள் பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்பவர்கள் “யாரும் இல்லை”.

 

சாமி உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். “சாமி…” உங்கள் உணர்வுக்குள்ளே தான் இருக்கிறேன்.

 

1.குருவின் உணர்வை நீங்கள் பெற்றீர்கள் என்றால்

2.அந்த உணர்விலிருந்து எல்லாமே நீங்கள் பெறலாம்

அந்த நிலையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றேன்.

 

சாமியாரைப் பார்த்து.. அவரைப் பார்த்து… இவரைப் பார்த்து… கடைசியில் “சாமியார் தான் எல்லாவற்றையும் மீட்டிக் கொடுப்பார்…” என்று நினைக்கிறீர்கள்.

 

அருள் ஞானியின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் எண்ணம் உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வை நீக்குகின்றது. உங்கள் உடலை நலமாக்குகின்றது. உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.

 

இந்தப் பழக்கங்கள் வரவேண்டும்.

 

டி.வி, ரேடியோவில் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்கள் என்றால் எந்த ஸடேசனை நீங்கள் திருப்பி வைக்கிறீர்களோ அதுதான் வருகிறது. அந்த அலைகளை நீங்கள் காட்சியாகவும் பார்க்கின்றீர்கள். பாடல்களையும் கேட்கிறீர்கள்.

 

இதே மாதிரித்தான்  உங்கள் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

 

பல பேரைச் சந்திக்கிறீர்கள். சண்டை போடுகிறவர்களைப் பார்க்கின்றீர்கள்; வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள் கோபப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்;  சஞ்சலப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; சங்கடப்படுவோரைப் பார்க்கின்றீர்கள்; குரோதமாக இருக்கிறவர்களையும் பார்க்கின்றீர்கள். குரோதத்தால் பிறரை அழிக்கக்கூடிய உணர்வையும் பார்க்கின்றீர்கள்; தெரிந்த்தே தப்புப் பண்ணுபவர்களையும் பார்க்கின்றீர்கள்.

 

இதை எல்லாம் பதிவாக்கிக் கொள்கிறீர்கள்.

 

1.இதிலே நீங்கள் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றீர்களோ…

2.”அடப் பாவிப் பயலே… இப்படிச் செய்கிறேயடா..!” என்று

3.அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் அந்தக் காட்சிகள் தான் வரும்.

 

எந்தக் காட்சி? அவன் சண்டை போடுவது திருடுவது ஏமாற்றுவது.

 

நான் அன்றைக்கு அந்தப் பையனைப் பார்த்தேன்… கஷ்டப்படுகிறான்… என்ற நினைவு வந்து அந்த ஸ்விட்சைப் போட்டீரகள் என்றால்

1.“அடப்பாவமே அவன் இப்படிக் கஷ்டப்படுகின்றான்…” என்று  இந்தக் காட்சி உங்களுக்குள் வரும்.

2.அந்த வேதனை உங்களுக்குள் வரும். இத்தனை வேலையும் நடக்கும்.

 

அதே மாதிரி பணம் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை. அவன் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே என்று அந்த ஸ்டேசனை வைத்தால்

1.ஏமாற்றப்பட்ட உணர்வலைகள் காற்றிலிருக்கின்றது,

2.உடனே அது உங்களுக்குள் வந்து வேலை செய்கிறது.

3.அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுகள் வாடுகின்றது.

 

இதே போலத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வு இந்தக் காற்றிலே கலந்திருக்கின்றது. உங்களுக்குள் ஆழமாக அதைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

 

சூரியன் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? மனிதனான பின் அகஸ்தியன் ஒளிச் சரீரம் எப்படி ஆனான் என்று சொல்கிறோம்.

 

அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறோம். அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

 

1.இந்த ஸ்டேசனைத் திறந்தால்

2.அந்த அகஸ்தியனின் உணர்வு வரும்.

3.நமக்குள் கோபிக்கும் உணர்வை தடுக்கும்.

4.நமக்குள் அருள் ஞானத்தை வளர்க்கும்.

5.நம்மை அறியாத வந்த தீமைகளைத் துடைக்கும்.

 

இதை நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன். ஏனென்றால் குருநாதர் அந்தச் சக்தி கொடுத்தார். எல்லாமே செயல்படுத்திக் கொண்டு வருகிறேன்.

 

சாமி பார்த்துக் கொள்ளும் என்று கோயிலில் போய் கஷ்டத்தை எல்லாம் சொல்கிற மாதிரி அந்த நம்பிக்கையிலே இருக்கும் போது என்னைப் பார்த்தவுடனே ஆயிரம் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். ஆயிரம் வம்புகளைச் சொல்கிறார்கள்,

 

நான் இதையெல்லாம் கேட்டு என்ன செய்ய…!

 

இப்படி நூறு பேர் வந்து என் காதில் சொன்னால் நான் எடுத்துக் கொண்ட சக்தியை நீங்கள் தடைப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

1.நீங்கள் நல்லதைப் பெறுவதற்கு பதில்

2.அதைத் தடை விதித்துக் கொள்கிறீர்கள்.

 

உங்களுக்குள் அந்த உணர்வு வளர்ந்து விட்டால் நான் சொன்ன அந்த வாக்கை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது போய் விடுகிறது.

 

1.அருள் ஒளி பெற வேண்டும்.

2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும்.

3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.

4.உடல் நலம் பெற வேண்டும்.

5.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்.

6.என் தொழில் நலம் பெற வேண்டும்.

7.என் பையன் நல்லவனாக வேண்டும் என்று கேளுங்கள்.

 

அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களுக்கு இந்த நிலை வேண்டும் என்று தான் நான் கேட்கச் சொல்கிறேன்.

 

எத்தனை பேர் இப்படிக் கேட்கிறீர்கள்…!

 

இவ்வளவு தூரம் நான் சொல்கிறேன். இருந்தாலும் இப்பொழுத் தான் உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். “நீங்கள் பெரிய மகான்…” என்று சொல்லி “என் கஷ்டம் இப்படி இருக்கிறது…!” என்று சொல்லி உடனே அழுக ஆரம்பித்துவிடுகிறார்கள்.

 

நான் சொன்னதை எல்லாம் மறந்துவிடுகின்றார்கள். அவர்களுக்குள் எது பதிவானதோ அந்த உணர்வு தான் வேலை செய்கிறது.

 

யாம் சொல்லும் உயர்ந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அவர்கள் பெறும் தகுதியை அவர்கள் உடலுக்குள் இருக்கும் உணர்வே தடை படுத்துகின்றது என்று உணர்கிறார்கள். உணர்ந்தாலும் அதை அறிய முடிவதில்லை.

 

ஒரு இடத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்றால் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம்.

1.இன்னும் கொஞ்சம் இருக்கிறது

2.அதையும் தூய்மையாக்கிப் பழக வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்,

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை பெற்று உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது ஒவ்வொரு நொடியிலும் விழித்திருத்தல் வேண்டும்.

நிலநடுக்கம் வருகிறது என்றால் பூமியின் அதிர்வை நுகர்ந்து எலி எறும்புகள் பாதுகாப்பாக வெளி வந்துவிடுகின்றது – அதிலிருந்தெல்லாம் வளர்ச்சியாகி மனிதனாக இன்று வந்தாலும் அதை நுகர முடியவில்லை 

Image

Earthquake.jpg

 

நிலநடுக்கம் வருகிறது என்றால் பூமியின் அதிர்வை நுகர்ந்து எலி எறும்புகள் பாதுகாப்பாக வெளி வந்துவிடுகின்றது – அதிலிருந்தெல்லாம் வளர்ச்சியாகி மனிதனாக இன்று வந்தாலும் அதை நுகர முடியவில்லை

 

 

அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதர்களோ அவன் மற்ற மிருகங்களைக் கண்டு அஞ்சி குகையில் வாழ்ந்தார்கள்.

 

பகலிலே மிருகங்கள் ஒதுங்கி நிற்கின்றது. இரவிலே இரை தேடி வருகின்றது. தன் உடலுக்குள் இருக்கும் நஞ்சின் தன்மை கொண்டு மிருகங்கள் நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றது.

 

உதாரணமாக

1.பூமிக்குள் வங்கிட்டுக் குடிகொண்டு வாழும் சில  உயிரினங்கள்

2.நிலநடுக்கம் வருகிறதென்றால் முன்னாடியே அறிந்து

3.வெளி வந்து விடுகின்றது.

 

அதே சமயத்தில் மழை வருகிறதென்றால் அந்த உணர்வுகளை நுகர்ந்து எறும்புகளும் எலிகளும் இடம் விட்டு இடம் மாறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுகின்றது.

 

ஏனென்றால் அவைகளுக்கு அறியும் அறிவு ஜாஸ்தி உண்டு.

 

1.தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு

2.ஊடுருவும் சக்தியால் கவர்ந்து

3.அந்த நுண்ணிய உணர்வின் அணுக்களை

4.இது தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

 

ஆகவே அது தன்னை அறிந்து செயல்படுகின்றது.

 

இன்று விஞ்ஞானியோ சாதாரண எலக்ட்ரிக் என்ற நிலைகளை வைத்து எலக்ட்ரான் என்ற நிலையை  மாற்றுகின்றான்.

 

விஷம் கொண்ட உணர்ச்சிகளை ஊட்டும் அல்லது கவரும் தன் உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுகளை அது அதிர்வுகளுக்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கத்தை மனிதன் கண்டுணர்ந்தான்.

 

1.ஒலி நாடாக்களில் பதிவு செய்து

2.அந்த நாடாக்களில் தட்டெழுத்துகளில் எழுதுவது போலத் தட்டினால்

3.அந்த உணர்வின் அதிர்வுக்கொப்ப அதனுடைய செயலாக்கங்கள் எலக்ட்ரானிக்காக மாற்றி

4.இவன் எண்ணும் உணர்வுகளைக் கணக்கிடுகின்றது. உருவமாக்குகின்றது.

5.எத்தனையோ வேலைகளைச் செய்கின்றது.

 

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செய்வதை இன்று பார்க்கின்றோம்.

 

இதே போன்றுதான் (நாம்) நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனின் ரூபங்களை உயிர் அமைக்கின்றது.

 

உயிர் எலெக்ட்ரிக்காக இருந்தாலும் தனக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்போகும் போது உயிர் நுகர்ந்ததை (அந்த) உணர்வுகொப்ப ரூபங்களை மாற்றுகின்றது.

 

எதிர் நிலைகள் காணும் போது அதிலிருந்து வரும் நுண்ணிய அணுக்களையும் மற்ற உயிரினங்கள் காணுகின்றது. ஆனால் இதை எல்லாம் கடந்து வந்த நாம் மனிதன் இருக்கும் (ஒரே) இடத்தில் இருக்கின்றோம்.

 

மற்ற உயிரினங்கள் தன் மணத்தால் நுகர்ந்தறிகின்றது.

1.இரையைத் தேடி எண்ணித் தன் மூச்சலைகளை விடும் போது

2.வெகு தொலைவில் இருக்கும் மணத்தையும் கவர்கின்றது.

3.கவர்ந்ததைத் தனக்குள் இருக்கும் விஷத்தால் மோதும் போது

4.அருகிலே வெளிச்சம் தெரிகின்றது

5.அப்பொழுது அதற்குத் தான் போகும் பாதையும் தெரிகின்றது.

 

அது இருக்கும் இடங்களில் மற்ற உயிரினங்களுக்குக் கண்கள் தெரியும். தன் அருகிலே ஒளி மோதும் போது அந்த வெளிச்சம் வருகின்றது. தன் உணர்வுகளில் அதை அறிகிறது. அதன் வழி அங்கே செல்லுகின்றது.

 

விஞ்ஞானி இருளுக்குள் இருப்பதையும் படமாக எடுக்கின்றான். இன்று நாம் பார்க்கின்றோம்,

 

மற்ற உயிர் இனங்களுக்கு மோதலில் எப்படி வெளிச்சம் வருகின்றதோ அதே போல் விஷத்தின் தன்மை கொண்டு அவன் கேமராவில் நிறுத்தப்படும் போது இந்த ஒலி அதிர்வுகள் எதைக் குறி வைக்கின்றானோ படமாக எடுக்க முடிகின்றது.

 

1.அந்த உணர்வின் அதிர்வினைப் பாய்ச்சி

2.எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கதிரியக்கப் பொறிகளை வைத்து

3.உணர்ச்சிகளை ஊடுருவச் செய்யும் போது

4.மோதும் உணர்வுகளை வடிவமைத்துக் கொடுக்கின்றது.

 

பூமியின் அதிர்வை வைத்து பூமிக்குள் வாழும் உயிரினங்கள் நிலநடுக்கத்தை அறிவது போல பல கோடிச் சரீரங்களில் நாம் எப்படி மாறி மாறி வந்தோம் என்ற உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 

இன்று விஞ்ஞானிகள் பல நவீனக் கருவிகளைக் கண்டுபிடித்தாலும் தன் ஆசையின் நிமித்தம் செயல்படும் பொழுது மெய்யை அறியும் நிலை தடையாகிவிடுகின்றது.

 

புகழுக்கும் பேருக்கும் இந்த உடலுக்குத்தான் கொண்டு செல்கின்றார்களே தவிர உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று ஞானிகள் சொன்ன நிலைகளை அறிய முடியவில்லை.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை எம்மை அறியும்படிச் செய்தார். அந்த ஆற்றல்களையும் பெறச் செய்தார். என்னாலும் அறிய முடிந்தது.

 

அந்த உண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றது என்று பார்க்கின்றோம் அதனின் உண்மை நிலை என்ன? – “மகரிஷிகளுடன் ஒட்டிக் கொள்ளும் நிலை”

Image

Conjoined BABIES

குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றது என்று பார்க்கின்றோம் அதனின் உண்மை நிலை என்ன? – “மகரிஷிகளுடன் ஒட்டிக் கொள்ளும் நிலை”

 

 

நாம் யாரும் தவறு செய்யல்லை.

 

இருப்பினும் நாம் நம் தாய் கருவிலே வளரப்படும் போது தாய் பாசத்தால் பரிவால் அன்பால் தனது வாழ்க்கைத் தொடரில்

1.பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணர்ந்திருந்தால்

2.அந்த உணர்வின் ஆற்றல் தாய் கருவுக்குள்ளே வளர்ந்து வரும் சிசுக்களில்

3.(நமக்குள்) இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

4.அவ்வாறு பதிவாகியதைத் தான் பூர்வ புண்ணியம் என்பது,

 

தாய் கேட்டுணர்ந்த உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாக அமைந்து விடுகிறது.

 

இவ்வாறு தாயின் கருவிலே நாம் வளரும் பருவத்தில் தாயால் உலகை அறிந்து தீமைகளைத் தீமைகள் என்று உணரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

 

கருவுற்றிருக்கும் போது ஒரு ஊனமுற்ற குழந்தையைத் தாய் உற்று நோக்கினால்

1.அந்த ஊனமுற்ற உணர்வுகள் கருவிலே சேர்ந்து

2.கருவிலிருக்கும் குழந்தயை ஊனமாக மாற்றிவிடுகிறது.

 

அதே போல் சில வித்தியாசமான குழந்தைகளைப் பற்றி அங்கே இப்படி இவ்வாறெல்லாம் நடந்தது என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்ததை “ஒரு ஒட்டுக் குழந்தை… பிறந்தது…” என்று பேசிக் கொள்வார்கள்.

 

ஒட்டுக் குழந்தையைப் பற்றி இவ்வாறு அவர்கள் பேசிக் கொள்வதைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உன்னிப்பாகக் கூர்மையாகக் கேட்டுணர்ந்தாலே போதுமானது.

 

அந்தக் குழந்தை தாயின் கருவிலே சில நிலைகள் உருமாறி இதுவே ஒட்டுக் குழந்தைகளாகப் பிறந்து விடுகிறது. தாயின் கருவிலே விளையும் நிலைகள் தான் இது.

 

இதைப் போல சில சில நிகழ்ச்சிகளைத் தாய் கர்ப்பமாக இருக்கும் போது கேட்டுணர்ந்த நிலைகள் தான் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அப்படித்தான் நாம் அனைவருமே வந்துள்ளோம்.

 

தாயின் கருவிலே இருக்கப்படும்போது ஞானிகளை உற்று நோக்கி

1.ஞானிகளின் அருள் உணர்வுகளுக்கு ஏங்கி இருந்தால்

2.அந்த உணர்வுகள் தாயின் கருவிலே இருக்கும் குழந்தைக்கு இணைந்து

3.அது ஞானியாக வளர்கின்றது.

 

திருஞானசம்பந்தர் போன்ற ஏனைய ஞானிகள் எத்தனையோ பேர் குழந்தைப் பருவத்தில் இது போல் ஞானிகளாக வந்தவர்கள் தான். இது எல்லாம் தாய் கருவிலே வளர்ந்தது தான்.

 

குடும்பத்தில் செல்வமும் செல்வாக்குடனும் இருப்பினும் பண்டைய காலத்தில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த குடும்பங்களில் ஒருவருக்கொருவர் குறைபாடுகள் பற்றி பாகப் பிரிவினையிலோ வாழ்ந்த காலத்தில் சற்று ஒற்றுமையில் பிசகாகி ஒருவருக்கொருவர் சாபமிட்டால் சாப வினைகள் குழந்தைக் கருவிலேயே பதிவாகி விடுகிறது.

 

அந்த உணர்வுகள் வழி தொடந்து இப்போது நம் உடலிலும் பின் தொடர்ந்தே வருகிறது.

 

1.ஒட்டுக் குழந்தைகளாகப் பிறப்பது போல

2.ஒட்டு மரங்களை வளர்ப்பது போலத்தான்

3.சாப வினைகள் நமக்குள் ஒட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு

4.தீமைகளாக நமக்குள் விளைந்து வருவதும் உண்டு.

 

நாம் பிழைகள் செய்யவில்லை என்றாலும் பக்தியில் பல நன்மைகள் செய்தாலும் பிறர் செய்யும் தீமைகளைக் கேட்டறியும் போது அவர் உடலிலே விளைந்த தீமைகள் நமக்குள் ஒட்டி விடுகின்றது.

1.அது ஒட்டுச் செடி போன்றே விளைந்து விடுகின்றது.

2.நம் நல்ல குணங்களுடன் தீய குணங்கள் ஒட்டிக் கொள்கிறது.

 

இதைப் போன்ற தீயவினைகளை நீக்கத் தான் இந்த உபதேச வாயிலாக துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் அந்த மகரிஷிகளைப் பற்றியும் உங்களுக்குள் பதிவாக்கி ஒட்ட வைக்கின்றோம்.

 

மகரிஷிகளும் மகான்களும் தீய வினைகளை அகற்றும் உணர்வினைத் தனக்குள் ஒட்ட வைத்து அப்படி ஒட்டிய வலுவாகத் தீய வினைகளை ஒடுக்கி தீயவினைகளை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சிகரமாக மகாமகம் போன்று  விளைந்து சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.

 

மகா மகமாக விளைந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் விளைவித்துக் கொண்டால்

1.நமக்குள்ளும் அந்தப் பேரருள் உணர்வுகள்

2.மகா மகமாகப் பொங்கி வழியும் நிலைகள் வருகின்றது

3.மகரிஷிகள் சென்ற இடத்தை நாமும் அடைகின்றோம்.

4.அழியாத நிலைகள் அடைகின்றோம்.

பெனிசிலின் மருந்தை விஞ்ஞானிகள் தயாரித்த விதம் – சிலருக்கு அதனால் பாதகமாகின்றது ஏன்?

Image

Penicillin-injection

பெனிசிலின் மருந்தை விஞ்ஞானிகள் தயாரித்த விதம் – சிலருக்கு அதனால் பாதகமாகின்றது ஏன்?

 

விவசாயப் பண்ணைகளிலும் ஆராய்ச்சிக் கூடங்களிலும் மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு

1.புதுப் புதுச் செடிகளை உருவாக்குகிறான்.

2.புதுப் புது மிருகங்களை உருவாக்குகின்றான்.

3.புதுப் புது உயிரினங்களை உருவாக்குகின்றான்.

 

பெனிசிலின் இஞ்செக்சன்க்காக (injection) காளானை உருவாக்குகிறான். அந்தக் காளானுக்குள்  பல  உயிரணுக்களைச் செலுத்துகின்றான்.

 

அந்தக் காளானில் உரு பெறும் உயிரணுக்களை அது சேர்த்துக் கொண்ட பின்

1.அந்தக் குறிப்பிட்ட நாள் வந்த பின்

2.அது அனைத்தையும் கொன்று விடுகின்றான்.

3.அதிலே உண்டான (கொசு போன்ற) உயிரணுக்களிலிருந்த இரசத்தை வடிகட்டி எடுக்கின்றான்.

4.பின் அந்த இரசத்தைத் தான் இஞ்செக்சனாக மாற்றுகின்றான்.

 

விஞ்ஞான அடிப்படையில் இப்படிச் செய்தாலும் பெனிசிலின் ஊசி சிலருக்கு மிகக் கடுமையான நிலைகளை உண்டாக்குகின்றது. மற்றவர்களுக்கு உடலில் நோயை நீக்கி நன்றாகவும் ஆக்குகின்றது.

 

ஒரு  துளி  அந்த  அணுக்களில் இவன் எடுத்துக் கொண்ட நிலைகள் இஞ்செக்சன் எடுக்கும் போதே

1.அதில் கொஞ்சம் காற்று புகுந்து விட்டால்

2.அதிலே இந்த அணுக்கள் உருவாகி விடும்

3.அது பட்டு விட்டு மருந்தைச் செலுத்தினால் எதிர்மறை (reaction) ஆகி விடுகிறது.

 

இதைப் போல பல நிலைகள்.

 

இவன் எதைக் கண்டு பிடித்தானோ அதை உருவாக்கினாலும் கூட ஊசிக்குள் அந்த மருந்தைப் (powder) போட்டுக் கலக்கி அதைச் செலுத்தினாலும் எடுக்கும் நிமிடத்திற்குள் இந்த உடலுக்குள் செலுத்துவதற்கு முன் மாற்றமாகிவிட்டால் ஆளை மரணம் அடையச் செய்துவிடும்.

 

 

ஏனென்றால் அந்தக் காளானில் அதில் பட்ட மணம் எந்த அணுக்களின் தன்மை உருவானதோ

1.அந்த தசைகளைக் கொன்று,

2.அதில் உருவான இரசத்தை எடுத்துத்தான்

3.பெனிசிலின் தயார் படுத்துகின்றான்.

 

பெனிசிலினிலிருந்து எடுத்து உடலில் போடும் போது இந்த உடலுக்கும் அவன் போடக் கூடிய நிலைகளுக்கும் எதிர் பார்க்காத நிலை வந்து விட்டால் கொன்ற உயிரணுக்களை மீண்டும் உடலில் உருவாக்கத் தொடங்கி விடும்.

 

அதாவது மருந்தைத் தயார் செய்யும் பொழுது எந்த அணுக்களைக் கொன்றானோ

2.நோயாளிக்குப் பெனிசிலினை injection பண்ணும் போது

3.அந்த அணுக்களின் இரசத்திற்கு பதில்

4.அதிலே உருவான அணுக்கள் இங்கே உருவாகி உடல் முழுவதும் பரவி

5.நோயை நீக்குவதற்குப் பதில் அந்த மனிதனைக் கொன்றே விடுகிறது.

 

அந்த மாதிரி அணுக்கள் உருவானவர்களுக்கு அருகிலே மற்றவர்கள் யார் இருந்தாலும் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் பரவி அவர்கள் உடலிலும் இந்தத் தீமையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி விடுகின்றது.

 

பெனிசிலின் ஊசி மிகவும் உயர்ந்த தடுப்பு மருந்து தான்.

 

தடுப்பு மருந்தாக உடலுக்குப் போட்டாலும் தடுக்கும் ஆற்றலாகச் செயல்படுத்தி வியாதியின் தன்மையை மாற்றக்கூடிய வல்லமை பெற்றது.

1.ஒரு நொடி மாறி விட்டால்

2.ஒரு சிலருக்கு எத்தனையோ வேலைகளைச் செய்கிறது.

 

விஞ்ஞான அறிவால் இந்த ஆறாவது அறிவு கொண்டு தான் செயல் படுத்துகின்றான். ஆறாவது அறிவால் இதைப் போல பல எத்தனையோ நிலைகளைச் செயல் படுத்துகின்றார்கள்.

 

இதைப் போன்று தான் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது மகரிஷிகளின் அருள் சக்தியை அவ்வப்போது இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அடக்கும் நிலை வரும்.

 

1.எத்தனை தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்

2.உங்கள் உடல் பாதிக்காதபடி

3.உங்களுடைய நினைவாற்றல் அந்த சப்தரிஷி மண்டலத்திலே இணைந்துவிடும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றும் வலுவைப் பெற்று விடுகின்றோம். இந்த உடலை விட்டுச் சென்று விட்டால் யாருடைய துணையும் வேண்டியதில்லை.

 

நேராக நம்மைச் சப்தரிஷி மண்டலத்திற்கே கொண்டு போய் நிறுத்தும்.

“கண்ணன்…” கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசம் செய்தான் – விளக்கம்

Image

Krishna upadesh

“கண்ணன்…” கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசம் செய்தான் – விளக்கம்

 

குழந்தை கருவில் இருக்கப்படும் போது சந்தர்ப்பவசத்தால் தன்னிச்சையாக அந்தத் தாய்க்கு ஒரு இம்சை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

 

அதில் இருந்து தான் எப்படியும் மீள வேண்டும் என்பதற்காக

1.தனக்குத் தெரிந்த ஞானியின் உணர்வை எண்ணி

2.அவர் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும்

3.என்னை அறியாது இந்த இருள்கள் நீங்க வேண்டும்.

4.என்னை ஏசுவோர் என்னை இம்சிப்போர் இதை உணரவேண்டும் என்ற எண்ணத்தை ஏங்கிப் பெற்றால்

5.தாய் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

 

ஞானியின் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது. அந்த இரத்தத்திலிருந்து வரும் உணர்வை உணவாக உட்கொள்ளும் கருவிலிருக்கக்கூடிய உயிரின் உணர்வுகளுக்கு அந்த அருள் சக்திகள் இணைந்து விடுகின்றது.

 

ஏனென்றால் கருவுற்ற தாய் தன்னை இம்சிப்போர்களை விட்டு விட்டு அதில் இருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றது. தனக்குத் தெரிந்த எந்த மகரிஷியோ வாழ்க்கையில் அதைக் கண்டுணர்ந்து உணர்ந்த நிலையைத் தனக்குள் எடுக்கப்படும்போது அது நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.

 

அப்பொழுது மகா ஞானிகள் வெளியிட்ட உணர்வை அந்தத் தாய் நுகர நேர்கின்றது. தாயின் கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கு அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

 

அந்தத் தத்துவ ஞானிகள் எதையெல்லாம் பேசினரோ உணர்த்தினரோ அந்த உணர்வுகள் கருவிலே வித்தாக ஊன்றப்பட்டு அந்தக் குழந்தை பிறந்த பின் அது வளர வளர அந்தக் குழந்தையிடம் தத்துவ ஞானங்கள் வளர்கின்றது. அதைச் செயல்படுத்துகின்றது.

 

அதே சமயத்தில் “பாவிகள்… என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? அவர்கள் குடும்பம் நாசமாகப் போய் விடும்…! அவர்கள் குடும்பம் இப்படி எல்லாம் போய்விடும்… கண் காது முடமாகப் போய்விடும்…” என்று கர்ப்பமுற்ற தாய் பேசிச் சாபமிட்டால் போதும்.

 

கீதையிலே கண்ணன் சொல்வது நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

 

அந்தத் தாய் தான் எண்ணியது எதுவோ அந்தச் சாபமிடும் உணர்வைச் சுவாசிக்கும் போது உயிரான ஈசன் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று தன் உடலுக்குள் ஆக்கும் போது அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அது உருவாகின்றது.

 

கருவுற்ற தாய் தன்னை இம்சித்தவர்களுக்கு எதையெல்லாம்  செய்ய வேண்டும் என்று எண்ணியதோ அது அனைத்தும் அந்தக் குழந்தைக்குள் பதிவாகி குழந்தை பிறந்து வளரப்படும்போது தன் தாயையே உதைக்கக்கூடிய நிலைக்கு வந்து விடுகிறது.

 

யாரையெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று எண்ணியதோ தன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த நிலை ஆகி தாயை இரக்கமற்றுக் கொல்வதையும் பார்க்கலாம்.

 

ஆகவே சந்தர்ப்பத்தால் பிறர் ஏசும் அந்த உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணங்களை எண்ணாது பதிலுக்கு அவர்களைக் கடுமையான நிலைகளில் தாக்க வேண்டும் என்ற எண்ண உணர்வுகள் வெளிபட்டபின் இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

 

சாபமிட்டுப் பேசும் நிலையில் மீண்டும் செவிப்புலனில் உந்தப்பட்டு இந்த உணர்வின் சக்தி மீண்டும் தன் உடலுக்குள் போனவுடனே கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

 

அந்தக் குழந்தை பிறந்த பின்னாடி பார்க்கலாம். எந்நேரமும் பார்த்தாலும் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.

 

எல்லோரும் வீட்டில் நன்றாக முக்கியமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் இந்தக் குழந்தை “வீல்..!” என்று கத்தும்.

 

நல்ல நேரத்தில் “சனியன் மாதிரிக் கத்துகிறதே…!” என்று சொல்வார்கள். ஒருவருக்கொருவர் சண்டை மூட்டிக்கொண்டே இருக்கும்.

 

அப்போது கடவுள் என்ன செய்கின்றார்? இது தான் கீதையிலே கண்ணன் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

 

நம் கண்ணின் நினைவுக்கு வரப்போகும் போது யாரை நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கவர நேர்கின்றது. அதைச் சுவாசிக்கும்போது அதன் வழி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கும் அது போய்ச் சேர்கின்றது.

 

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று ஞானிகள் சொன்னார்கள்.

 

நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதற்குண்டான காரணப் பெயரை வைத்து இவ்வாறு இன்னென்ன சந்தரப்பத்தில இவ்வாறெல்லாம் இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உரைத்துள்ளார்கள் ஞானிகள்.

 

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

நாம் நுகரும் உணர்வுக்கொப்பத்தான் நம் உடலில் அணுக்கள் உருவாவதும் குழந்தை உருவாவதும் எல்லாமே அப்படித்தான்.

 

ஒவ்வொரு நொடியிலேயும் கண்ணின் நினைவினை மகரிஷிகளின் பால் செலுத்தி விண்ணிலிருந்து அருள் உணர்வுகளைக் கவரும் பழக்கம் வந்துவிட்டால் நமக்குள்

1.ஒளியான அணுக்களையும் உருவாக்க முடியும்.

2.அருள் ஞானக் குழந்தைகளையும் உருவாக்க முடியும்.

நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும்

Consciousness Creates Reality

நம் முன்னோர்களில் “ஒருவரையாவது” மோட்சம் பெறச் செய்ய வேண்டும் 

பௌர்ணமி அன்று உங்கள் குடும்பத்தில் கூட்டுத் தியானம் இருந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்குப் பின் உங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பழகிக் கொண்ட பின் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாளாவது எண்ண வேண்டும்.

காரணம் அவர்களது உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

இன்னொரு உடலில் இருந்து முன்னோர்களின் ஆன்மா வெளி வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்ட வலிமையால் உந்தித் தள்ளினால் அந்த உயிராத்மாக்களைப் பிறவா நிலை பெறச் செய்ய முடியும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள மூதாதையர் எவரேனும் விண் சென்றால் தான் நீங்களும் அவர்களைப் பின் தொடர்ந்து விண் செல்ல முடியும்.

இது அல்லாது மார்க்கம் இல்லை.

1.பக்தி மார்க்கத்தில் காட்டிய வழிப்படியோ
2.மதங்கள் காட்டிய முறைப்படியோ
3.தனித்த ஒரு மனிதன் கடும் ஜபம் இருந்தாலும்
4.நிச்சயம் விண்வெளி செல்ல முடியாது.

எடுத்துக் கொண்ட ஜபம் ஓங்கி வளர்ந்திருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த ஜபம் எடுத்தோமோ அதே ஜபத்தை வேறு யாராவது செய்தால் நம் உயிரான்மா அங்கே ஈர்க்கப்பட்டு அவருக்குள் போய்விடுவோம்.

அங்கே சென்றபின் இரண்டு மனிதனாக சக்தி வாய்ந்தவராக ஆகலாம்.  ஆனால் அவ்வாறு சென்றாலும் அதனின் துணை கொண்டு பிறருடைய துயர் துடைக்க உதவும்.

பிறருடைய உடலில் உள்ள துயரங்கள் விளைந்த உணர்வுகளை ஈர்த்து அவர்களுக்குப் பதில் சொல்லவும் முடியும்.

எப்படி அந்த உடலுக்குள் போனோமோ
1.பிறருடைய உடலில் விளையும் தீமைகளைக் கவர்ந்து
2.தீமையான உணர்வுகள் இந்த உடலில் விளைந்து
3.இந்த இரண்டு ஆன்மாக்களும் நஞ்சு கொண்ட நிலையில் மீண்டும் வளர்ந்து பின் மடிந்து விடும்.

பக்தியில் காட்டிய ஜபம் என்பது இன்று நமக்கு எளிதாக இருக்கலாம். அந்த வழியில் செய்து அனுபவித்து வந்தவர்களுக்கு ஏதோ நாம் ஜபம் இருக்கிறோம். ஆன்டவனை அடைய முடியும் என்று இருக்கலாம்.

ஆனால் இது அல்ல முறை.

இன்று சக்தி வாய்ந்த அணு குண்டை வீச பல இயந்திரங்களின் துணை கொண்டு விண்ணில் வீசுகின்றான். தனித்து வீசினான் என்றால் அதில் இயக்கச் சக்தியின் கிளைகள் இல்லை என்றால் அது இயங்காது.

சக்தி வாய்ந்த அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வலுப் பெறச் செய்து விண்ணில் செலுத்துகின்றான். எத்தனையோ செயற்கைக் கோள்களையும் இராக்கெட் மூலம் விண் செலுத்துகின்றார்கள்.

மனிதனான விஞ்ஞானி இவ்வாறு செய்வது போல
1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலில் கலந்த நஞ்சினைப் பிளந்து
2.உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணுலகம் செல்லும் மார்க்கங்களைச் செயல்படுத்தினார்கள்.

தன் சீடர்களுக்கு இதையெல்லாம் உபதேசித்து இந்த உடலை விட்டுக் கடந்த பின் அந்த உயிரான்மாவை விண் செலுத்தப் பழக்கிக் கொடுத்துச் சென்றவர்கள் மெய் ஞானிகள்.

அரசர்கள் பக்தி என்ற முறைகளில் மதங்கள் என்ற நிலையில் பிரித்து அவர்கள் போதித்த தன்மை கொண்டு மீண்டும் மீண்டும் இது மனிதனுக்குள் சிக்குவதும் மற்ற உடலில் தப்புவதும் இப்படி இன்னொரு உடலுக்குள் (மனித உடலுக்குப் பின் விஷமான உடல்) தான் சென்றடைந்தார்கள்.

கடும் தவம் இருப்பவர்கள் நான்கு ஐந்து உடலுக்குள் செல்லலாம்.

1.இந்த அரசனாக இருப்பவன் கடும் தவங்கள் எடுத்திருப்பான்.
2.பல மந்திர ஒலிகளைத் தனக்குள் சேர்த்திருப்பான்.
3.அந்த அரசனை எண்ணி ஏங்கிய மற்ற மக்களுடைய நிலைகளும்
4.அவன் இறந்த பின் அதே ஜபத்தால் அவனைக் கவர்ந்து கொள்வார்கள்.

அதனின் வலுக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் சாகாக்கலை என்ற நிலைகள் தான் அவர்கள் சென்றார்கள். வேகா நிலைக்குச் செல்லவில்லை.

அரசர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்களும் மதத்தின் அடிப்படையில் விண் செல்வோர்கள் சாகாக்கலையாக இங்கே தான் சுழன்று கொண்டுள்ளார்கள்,

தீயிலே குதித்தால் நம் உயிர் வேகுவதில்லை. விண்ணில் வரும் எத்தகைய நஞ்சும் இதை வேக வைக்க முடியாது. இந்த உயிர் வேகுவதில்லை.

ஆனால் எத்தகைய நஞ்சினையும் ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.
1.வேகா நிலை பெற்றவர்கள் மகரிஷிகள்.
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்தோம் என்றால்
3.நாமும் வேகா நிலை அடையலாம்.

நமக்குள் வரும் தீமைகளை ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதே யாம் சொல்லும் இந்தத் தியானம்,

அந்த ஆற்றலைப் பெறவேண்டும் என்றால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து
1.நம் மூதாதையர்களை அங்கே இணையச் செய்தே ஆக வேண்டும்.
2.நம் தூதுவர்களாக அவர்களை அங்கே முதலில் செலுத்த வேண்டும்.

அவர்கள் துணையால் அங்கு இருக்கும் உணர்வுடன் எளிதில் நாம் தொடர்பு கொள்ள முடியும். சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பெரும் சக்திகளை நாமும் கவர்ந்து என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரமாக அந்த இடத்தில் என்றுமே நிலைத்திருக்கலாம்.