“முருகப் பெருமான்…!”

Muruga Peruman

“முருகப் பெருமான்…!”

நம் உயிர் “ஓ…ம்” என்று பிரணவமாக்கி இயக்குகின்றது. நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையை ஜீவனாக்கி ஜீவனின் மலமாக நம் உடலை ஆக்கிக் கொண்டேயிருக்கின்றது.

“ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம்
1.எனக்குள் எண்ணியதைச் சிருஷ்டித்து அதனின் இயக்கமாக இயக்கி
2.ஈசனாக எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறாய் என்று
3.நம் உயிரை ஈசனாக மதிக்கும்படிச் சொன்னார்கள் ஞானிகள்.

நாம் எண்ணியதை இயக்கி எண்ணியதைப் பிரம்மமாக்கி நமக்குள் உடலாக்கி அந்த உணர்வின் செயலை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கின்றான் உயிரான ஈசன்.

அந்த உயிரே ஆண்டவன்.

1.நம் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
2.பெருமாளாக வீற்றிருப்பதும் உயிரே.
3.பெருமானாக இருப்பதும் உயிரே.

மனிதனின் நிலைகள் உருபெற்ற நிலைகளை உங்களுக்குள் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவு என்பது “முருகு…”. அதாவது மாற்றி அமைக்கும் பெருமானாக இருப்பது நமது ஆறாவது அறிவு.

1.உடலின் இயக்க உணர்வுகள் அனைத்திற்கும் பெருமாளாக இருப்பது உயிரானாலும்
2.இயக்கத்தின் தன்மை ஈசனாக இருப்பினும்
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பினும்
4.ஆறாவது அறிவின் தன்மையை “முருகப் பெருமான்…!” என்றனர் ஞானிகள்.

அதாவது இந்த உடலை ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது ஈசனாக இருப்பினும் அவனின் நிலைகள் கொண்டு மாற்றியமைக்கும் பெருமானாக இந்த ஆறாவது உணர்வின் துணை கொண்டே இந்த உயிர் நம்மை ஆட்சி புரிகின்றான்.

இது அனைத்தையும் ஆட்சி புரியும் நிலைகளை நாம் நினைவு கொண்டு நாம் அல்ல என்ற நிலைகளுக்கு வருதல் வேண்டும்.
1.நம் உடலை அவனின் உடல் என்றும்
2.அவனின் உணர்வு என்றும்
3.அவனின் கண் என்றும் உணர்தல் வேண்டும்.

எல்லாமே அவனின் நிலைதான் என்று அறிந்து கொண்ட பின்  ஒருவன் என்னைக் கேவலமாகப் பேசி விட்டான்… நான் அவனை விடுவேனா…! என்ன செய்கிறேன் பார்…” என்ற நிலைகளில் சொல்லி “ரோசப்படுவது…” என்பது  தேவையற்றது.

ஒரு உடலுக்குள் விளைந்த உணர்வுகளை எடுக்காது உத்தராயணம் என்ற நிலைக்கு வர வேண்டும்.

அதாவது மகாமகம் என்று சொல்வார்கள். நாம் சமையல் செய்யும் போது எப்படிப் பொங்கி வடிக்கின்றோமோ இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “உத்தராயணம்…” தீமைகளை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இந்த நிலை வரும் போது தான் பங்குனி உத்திரத்தை நாம் தெளிவாகக் கொண்டாட முடியும். தெளிந்திடும் உணர்வு கொண்டு நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இதற்குத் தான் மாதத்திற்கு நாள் என்று விழாக் கோலம் வைத்தனர் ஞானிகள். பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

பன்னிரண்டு ராசி என்று சொல்லும் போது நமக்குள் எந்த ராசி அதிகரிக்கின்றமோ அதனின் விளைவின் தன்மை தான் நமக்குள் வருகின்றது.

“முருகப் பெருமான்” – நாம் மாற்றி அமைக்கும் ஆறாவது அறிவின் நிலைகள் கொண்டு அது உயர்ந்த நிலைகள் கொண்டு நமக்குள் பெருமாள் ஆக இருந்து ஆட்சி புரியும் உயிருடன் அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆகும் நிலையே மகரிஷிகள் அன்று உணர்த்திய தியானம்.

தியானம் என்பது என்ன?

நம்மை மாற்றி அமைக்கும் முருகப் பெருமானின் உறு துணை கொண்டு மெய் ஞானி உணர்வை நமக்குள் இணைத்து உயிருடன் ஒன்றிடும் நிலையாக அந்தப் பெருமானுடன் ஒன்றி என்றுமே நாம் ஒளியின் சுடராக வாழ்வதே தியானம்.

நமது எல்லை எது? இனி உடல் பெறாத நிலை தான் உத்தராயணம்.

இந்த மனித உடலை விட்டு நாம் அகன்ற பின் ஒளியின் சிகரமாக நாம் ஆவதற்கே இந்தத் தியானம்.

இந்தப் புவியின் வாழ்க்கையில் நமக்குள் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் அனைத்தும் பற்றற்றதாக மாற்றுவோம்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றுவோம்.
2.மகரிஷிகளுடன் நாம் மகரிஷிகளாக நாமும் கலந்திடுவோம்.

மெய் ஞானிகளின் ஞான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம்

AGATHIAR -sages

மெய் ஞானிகளின் ஞான உணர்வுகளை (ஞான வித்துக்கள்) நீங்கள் “பதிவு செய்ய வேண்டியதன் அவசியம்”

மகரிஷிகளின் உடல்களில் விளைந்த உணர்வுகள் விளைய வைத்த உணர்வின் வித்துக்கள் இன்றும் நமக்கு முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அதனை நாம் எல்லோரும் எளிதில் பெற முடியும்.

ஆனால் உங்களுக்குக் கதையாக ஏதோ வேடிக்கையாகச் சொல்லி “சாமி பெரியவர்…!” என்று என்னைப் புகழ்ந்து விட்டுப் போவதற்கு இல்லை.

சாமிக்கு என்ன…?
1.அவருக்கு அவர் குருநாதர் கொடுத்தார்..
2.அந்தச் சக்தி நமக்கு யார் கொடுப்பார்கள்? என்று எண்ண வேண்டாம்.

எனக்குள் குரு உபதேசித்தார்.
1.அவரை உற்றுப் பார்த்தேன்.
2.அவரின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கினேன்.
3.அவர் உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தேன்.
4.மீண்டும் நான் குருவை நினைவு கொண்டேன்.

எதை?

குருநாதர் பதிய வைத்த உணர்வை மீண்டும் எண்ணும் போதுதான் அவர் கற்றுணர்ந்த உணர்வின் சத்தும் அவருக்குள் விளைய வைத்த நிலையும் அவர் அறியாது தீமைகளை நீக்கிய நிலையும் எனக்குள் வருகின்றது.

அவரை நினைக்கும்போது அந்த உணர்வுகள் எனக்குள் அது கவரும் நிலை வருகின்றது.

அந்தப் பாதை தெரியவேண்டும் அல்லவா…!

1.மின் அணுவின் – உயிரணுவின் தோற்றமும்
2.உணர்வின் இயக்கங்களும் எவ்வாறு? என்ற நிலையை அவர் உபதேச வாயிலாக எனக்குத் தெளிவுற உணர்த்தினார்.

உபதேசத்தின் உணர்வின் அருளை அவர் காட்டிய உணர்வினை  இன்று யாம் பேசுவதை ஒன்றும் அறியாத “MIC…” காந்தப் புலனில் பூசிய முலாம்கள் இந்த உணர்வின் தன்மைகளைப் பதிவாக்கி
1.மீண்டும் காந்த ஊசியை இணைத்த பின்
2.திருப்பி நமக்குப் பதில் சொல்கின்றது விஞ்ஞான அறிவு.

நாம் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்த்தப்பட்ட நிலைகள்தான் இப்போது பதிவு.

MIC மூலமாக யாம் பேசுவதை பல மடங்கு (AMPLIFIER) பெருக்கி ஆயிரம் பேர் இருந்தாலும் தெளிந்த நிலைகள் கேட்கும் நிலைகளுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளது.

இதைப் போலத் தான் அகண்ட அண்டத்தின் நிலைகளுக்குள் நுண்ணிய அலைகளாக மறைந்த நிலைகள் இருந்தாலும் அதனின் உணர்வின் அதிர்வின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர்கள் மெய்ஞானிகள்.

கண்டுணர்ந்து அதற்குள் மறைந்த நஞ்சினை ஒடுக்கி நஞ்சினை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சுடராகத் தனக்குள் விளைய வைத்தது மெய் ஞானிகள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் போது மீண்டும் நினைவு கொள்ளுங்கள்.
1.நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும்.
(அது என்ன கேட்டுக் கொண்டா இருக்கிறது…?)

மரம் செடி கொடி தன் உணர்வுக்குள் பதிவு செய்த பின் தன் மணத்தின் தன்மை கொண்டு காற்றில் இருப்பதைத் தன் மணத்தால் எடுத்துத் தன்னைப் பாதுகாத்து கொள்கிறது.

தன் இனமான உணர்வின் தன்மையைக் காற்றில் இருந்து தன் உணவாக நுகர்ந்து அதை உட் கொள்கின்றது.

அதற்கு அறிவில்லையா? அதனில் தோன்றிய உணர்வின் அறிவுதான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றமோ அதில் உருவான உணர்வுகள் அதனின் அறிவின் ஞானமாக நமக்குள் வருகின்றது.

அதைப் போன்று தான் நமக்கு மெய் ஞானிகளைப் பற்றியோ மகரிஷிகளைப் பற்றியோ ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த ஞானிகளின் (ஞான வித்தை) உணர்வுகளைப் படித்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டேயிருந்தால் போதும்.

இது உங்களுக்குள் விளைந்து அந்த ஞானிகளின் செயலாக உங்களை மாற்றும்.

மற்றவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கலாமா…?

Divine Sages Light

மற்றவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கலாமா…?

உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களைக் கேவலமாகப் பேசினால் அதை ஆழமாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறீர்கள். பதிவு செய்த பின் என்ன செய்கிறோம்?

என்னை.. இப்படிப் பேசினான் “கேவலமாகப் பேசினான்… கேவலமாகப் பேசினான்…!” என்று இதைத் தியானம் செய்கின்றோம்.

அவர் எப்படிக் கேவலமாகப் பேசினாரோ அந்த உணர்வு நமக்குள் வந்து அவர் நம்மைக் கேவலப்படுத்திய பிற்பாடு நம் சொல் செயல் எல்லாமே கேவலமான செயல்களைச் செய்யும் செயலாக மாற்றும்.

எப்படி இருக்கிறான்..? அவன் என்னை இப்படியெல்லாம் பேசினான்.. என்னைப் பார் நான் என்ன அப்படியா…? என்று அவன் சொன்ன மாதிரி நம்மையும் பேச வைத்துவிடும்.
1.அவன் பேசினான் ஒரு தரம்.
2.நாம கேட்டோம் பல நேரம்.
3.அந்தப் பல உணர்வு நமக்குள் வந்துவிடுகின்றது.

அவன் நம்மைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதைப் பற்றி அடுத்து நாம் பேசும் போதெல்லாம் நம்மையறியாமலே சொல்வோம்.

“பாருங்கள்…! என்னைப் பற்றி அவன் அப்படிப் பேசினான் இப்படிப் பேசினான் இகழ்ச்சியாகப் பேசினான்.. என்று அடுத்தவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்.
1.அவன் எபப்டி எப்படி நம்மைத் திட்டிக் காண்பித்தானோ
2அதே மாதிரி அதையெல்லாம் நாம் அப்படியே செய்வோம்.

என்ன…! இப்படி… நீங்கள் அசிங்கமாகப் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்?

என்னை அப்படியெல்லாம் பேசினான் அல்லவா…! என்று இங்கே நம்மிடல் கேட்பவர்களிடம் சொல்வீர்கள்.

அடுத்தவர்களிடம் இந்த விஷயத்தைப் பேசும் பொழுது அசிங்கமான நிலைகளை பேசும் உணர்வே நமக்குள் வந்து விடும்.

இன்னும் யாராவது அடுத்த ஆள் கேட்டால் நாம் மறுபடியும் அசிங்கமாகப் பேசுவோம். இது குருவாக வந்து விடுகின்றது.

எது…?

அப்போது அந்த உணர்வுகள் அசிங்கமாக வரப்போகும் போது இது குருவாக நமக்குள் வந்து அசிங்கமான செயலைச் செய்ய வைக்கும். அசிங்கமாகப் பேசச் செய்யும்.

கேவலமாகப் பேசுபவரின் உணர்வைப் பதிவாக்கினால் அவரைப் பற்றிப் பேசும்போது நாமும் அசிங்கமாகத்தான் பேசுவோம் – “நாம் தவறு செய்யவில்லை…” உணர்வின் இயக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஆகவே அதைப் போன்ற அசிங்கத்தை எல்லாம் துடைப்பதற்கு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அந்த உணர்வுகளை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டீர்கள் என்றால்
3.இது குருவாக வந்து விடும்.

யாம் உங்களுக்கு உபதேச வாயிலாக உணர்த்தும் அந்த மெய் ஞானிகள் வழியில் இந்தத் தியானத்தை நீங்கள் அடிக்கடிச் செய்தீர்கள் என்றால் இது குருவாக வந்து இந்த அசிங்கத்தை எல்லாம் போக்கிவிடும்.

உதாரணமாக “உடலில் புண் வந்துவிட்டது.. ரோகம் வந்துவிட்டது…” என்று இதையெல்லாம் திரும்பத் திரும்பச் பேசிக் கொண்டு இருந்தால் அதனாலேயே உடலில் கொப்புளம் வரும்; உடல் கொதிக்கும்; தலை வலி வரும்; காது குத்தும்; நெஞ்சு வலிக்கும்; வயிற்றில் வலிக்கும்.

இது எல்லாம் வரும்.

இப்படி வரப்போகும்போது வயிற்றில் வலிக்கிறது என்றால் அந்த நேரத்தில் யாராவது முன்னாடி வந்து சந்தோஷமாகப் பேசினால் எப்படி இருக்கும்?

அவர்கள் மேலே வெறுப்பாக வந்து கொண்டு இருக்கும்.

அவர்கள் மேலே வெறுப்பாகி விட்டால் அடுத்தாற்போல் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் வெறுப்பாகப் பேசுவோம். அப்பறம் இது குருவாக வரும்.

எது…? வெறுப்பாகப் பேசும் உணர்வு தான் உங்களுக்குக் குருவாக வரும்.

குருநாதர் இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து “அவர்கள் நிலைமை எல்லாம் எப்படி இருக்கிறது…?” என்று பார்க்கச் செய்து என்னைக் கஷ்டப்பட வைத்தார்.
1.நீ பார்ப்பவன் உணர்வுகள் எல்லாம் உனக்குள் வந்து
2.என்ன வேலை செய்கிறது? என்று பார்க்கச் சொன்னார்.

இப்படி அதையெல்லாம் நான்… “பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான்” உங்களிடம் சொல்கிறேன்.

நீங்கள் உட்கார்ந்து கேட்கிறீர்கள். நான் அலைந்து திரிந்து சுற்றித்தான் தெரிந்து கொண்டேன். நீங்கள் உட்கார்ந்து கொண்டே இதைத் தெரிந்து கொள்கிறீர்கள். நான் காடு மேடெல்லாம் சுற்றிக் கஷ்டப்பட்டு எனக்குள் அறிந்து கஷ்டத்தையெல்லாம் தெரிந்து வந்தேன்.

உங்களிடம் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுத்து உங்கள் தீமைகளை எல்லாம் நீங்கள் நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன்.

குருநாதர் எனக்கு அப்படிக் கொடுக்கவில்லை. நான் உங்களுக்கு இப்படிக் கொடுக்கின்றேன். இதை உதறிவிடாதீர்கள்.

அந்த மெய்ஞானி உணர்வை உங்களுக்குள் குருவாக ஏற்று அந்த உணர்வின் தன்மை வளர்க்கும் போது அவர்கள் மெய் ஒளி பெற்றதைப் போல அதை நிச்சயம் நீங்களும் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன். இதையே நீங்கள் மீண்டும் எண்ணுவீர்கள் என்றால்
1.அது குருவாக வந்து உங்களுக்குள் நல்வழி காட்டும்
2.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றும்.
3.மெய்ப் பொருள் காணும் உணர்வை வழிகாட்டும்.
4.அதனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
5.மெய் ஞானிகளுள் ஒருவராக நீங்களும் ஆக முடியும்.

திருஞான சம்பந்தர் இளம் வயதில் அறிவின் ஞானம் எப்படிப் பெற்றார்?

Image

thirugnana sambandhar thevaaram

திருஞான சம்பந்தர் இளம் வயதில் அறிவின் ஞானம் எப்படிப் பெற்றார்?

 

திருஞான சம்பந்தர் பல அற்புதச் செயல்கள் செய்தார் என்று காவியங்களிலே உண்டு. அவருக்கு அந்த ஆற்றல் எப்படிக் கிடைத்தது?

 

அவருடைய தாய் வெகு நாட்களாகத் தனக்குள் குழந்தை இல்லை என்று ஏங்கியது. அந்த ஏக்கத்தின் பால் சீர்காழி என்ற ஊரில் சிவன் ஆலயத்தில் தாய் ஏங்கி எடுத்த உணர்வே குழந்தை உருவாகக் காரணமாக அமைந்தது.

 

கடல் அருகில் இருப்பதனால் கடல்களில் இருந்து அலைகள் வரும் போது பொங்கி எழும்போது அதிலே சிவனும் பார்வதியும் படகில் வந்து காப்பாற்றினார்கள் என்ற தத்துவங்களை ஸ்தல புராணங்களாக எழுதி வைத்திருக்கின்றனர் அன்றைய அரசர்கள்.

 

ஸ்தல புராணங்களையும் அதற்குண்டான காவியங்களைத் தீட்டி அந்த (அரசர்களால் காட்டப்பட்ட) உண்மையை மக்களுக்கு உபதேசிப்பதற்குப் பல யாக வேள்விகளில் உயிர்களை இணைத்து அந்த உயிரிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தனக்குள் கவர்ந்து மந்திர ஒலிகளை எழுப்பி பல அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் பண்டைய கால அரசர்கள்.

 

அதிலே சீர்காழி என்ற ஊர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

 

அந்த இடத்தில் தான் “தனக்குக் குழந்தை இல்லை” என்ற நிலைகளில் வரம் வேண்டி அந்தச் சிவன் ஆலயங்களுக்குத் தினம் சென்று வருவதும் அங்கே அற்புதக் காட்சிகளைக் கேட்டறிகின்றது அந்தத் தாய்.

 

“இவ்வளவு அற்புதம் செய்தவன்…” எனக்கு ஏன் குழந்தை கொடுக்கக் கூடாது..! என்ற நிலைகளில் சிவனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் ஆற்றல்களைத் தன்னுடைய எண்ணத்தால் வளர்த்துக் கொண்டது.

 

கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அந்தக் காவிய படைப்பின் பிரகாரம் தங்கள் எண்ணத்தை ஓங்கித் தனக்குள் வளர்க்கச் செய்தார்கள். அங்கே அந்தத் தாய் கருவுருகின்றது.

 

பக்தியின் நிலைகள் கொண்டு அங்கே விநாயகனை முதலில் வணங்குகின்றது அந்தத் தாய்.

 

பின் ஆலயத்திற்குள் சென்று அந்த சிவ தத்துவத்தின் காவியத்தைக் கவிகள் பாடியதைத் தான் படித்துணர்ந்த உணர்வை நினைவு கொண்டு உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மைகள் பெற வேண்டும் என்று ஏங்குகின்றது.

 

கருவுற்ற நிலைகளில் விநாயகரை எண்ணும் பொழுது சிவனுக்கு முந்தியவனாக நின்று நீ எல்லாவற்றிலும் முதன்மையாக ஜீவனாக இருந்து இயக்குகின்றாய்…! என்ற அந்தக் காவியத் தத்துவப்படி அந்தத் தாய் விநாயகரை எண்ணிப் பார்க்கின்றது.

 

ஆனால் காவியத்தில் உள்ள மூலம் என்ன என்ற உண்மை தெரியாது.

 

இருப்பினும் காவியப் படைப்பைப் படித்ததன் நினைவு கொண்டு

1.நீ சிவனுக்கு முந்தியவனாக இருக்கின்றாய்.

2.நீ எல்லாவற்றுக்கும் ஜீவன் கொடுப்பவனாக இருக்கின்றாய்.

3.அதே போல என்னுடைய குழந்தைக்கும் கருவிலேயே ஜீவன் கொடுத்தாய்.

4.என் குழந்தை அவன் உன்னுடைய ஞானத்தை அங்கே வளர்க்க வேண்டும் என்று விநாயகரைப் பார்த்து

5.கருவுற்ற அந்தத் தாய் ஏங்கி இந்த உணர்வைச் செலுத்துகின்றார்.

 

ஒவ்வொரு நாளும் இதைப் போன்ற உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்துச் சேர்த்து எதையெல்லாம் காவியப் படைப்பில் உயர்ந்த நிலைகள் உணர்த்தினரோ அவையெல்லாம் இந்தத் தாயும் தந்தையும் உற்று நோக்குகின்றார்கள்.

 

அதையே விரதமாக வைத்து வேண்டுகின்றார்கள்.

1.அருள் ஞானக் குழந்தையாக வளரவேண்டும்.

2.சிவனுடைய புத்திரனாக எனக்குள் வளர வேண்டும்.

3.எவர் ஒருவர் எனக்கு இந்த அருள் கொடுத்தனரோ

4.அந்த ஈசனும் சிவனும் இது முன் நின்று வழி நடத்தி

5.அந்த விநாயகனின் தத்துவங்களை எனக்குள் நின்று

6.அந்த அருள் ஞானத்தைப் பொழிந்திட வேண்டும்.

என்னுடைய கருவில் வளரும் ஜீவனுக்கு எனக்குள் வளரும் அந்தச் சிசுவிற்கு உங்கள் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று அந்தப் பத்து மாத காலமும் கடுமையாக ஏங்கி அதையே தியானித்தது அந்தத் தாய்.

 

இவ்வாறு விநாயகரையும் சிவனையும் பார்வதியையும் எண்ணி

1.அதையே தனக்குள் உணவாக எடுத்து கொண்டு

2.அதையே ஞானப்பாலாகக் கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்தத் தாய் ஊட்டியதால்

3.அதன் வழியில் பிறந்த குழந்தையால் அதன் பின் பல அற்புதங்கள் நடந்தது.

 

நஞ்சு தீண்டிய ஒருவனை மந்திரத்தால் நஞ்சை நீக்குகின்றனர். இந்த அற்புதத்தையெல்லாம் அந்த ஆலயத்தில் செய்து காட்டுகின்றார்கள்.

 

இதை உற்றுப் பார்த்த இந்தத் தாய் இதே போல நஞ்சை உட்கொண்டோரையோ அல்லது நஞ்சு தீண்டியவர்களையோ என் குழந்தை பார்க்குமேயென்றால் அவன் பார்வையால் அந்த நஞ்சுகள் நீங்க வேண்டும் என்று ஏங்குகின்றது.

 

இந்தச் சிவனால் கொடுக்கப்பட்ட இந்த விநாயகனால் கொடுக்கப்பட்ட என் குழந்தைக்கு அவர்களாக் உருவாக்கப்பட்ட இந்தக் குழந்தைக்கு அந்த அற்புத நிலைகளெல்லாம் செய்யக்கூடிய ஞானப்பால் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்தது.

 

அந்த உணர்வின் தன்மை கொண்டே குழந்தை பிறக்கின்றது. பிறந்த பின் முதலில் அந்தச் சிசுவை ஆலயத்திற்குள் தரிசனைத்திற்காகக் கொண்டு வருகின்றார்கள்.

 

அப்படிக் கொண்டு வரப்படும் போதே எந்த விநாயகனைப் பார்த்துத் தாய் ஏங்கி எடுத்ததோ அதைப் பார்த்ததும் ஏற்கனவே பார்த்துப் பழகியது போல் விநாயகரிடம் அது தவழ்ந்து சென்று சிரிக்கின்றது.

 

அதே போலச் சிவனை பார்க்கப்படும் போதும் அதனுடைய துடிப்பின் நிலைகள் தவழ்ந்து அங்கே சிவனிடம் அணுகிச் செல்கின்றது.

 

ஏனென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பம் அது

1.அந்தத் தாய் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடவுளாக நின்று

2.இந்த உணர்வின் செயலாக உடலில் இயக்கி அந்த உணர்வின் ஆற்றல்கள்

3.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

 

அதுவே கடவுளாக நின்று தாய் எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமே கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

 

அதனின் வழி தொடர் கொண்டுதான் சிறு குழந்தையாக இருந்தாலும் அவனை அறியாமல் ஞானத்தைப் பேசும் திறன் அவனுக்குள் வருகின்றது.

 

அந்தக் குழந்தை தன் வயதுக்கு மிஞ்சிய செயலாக

1.அவர் பேசும் பேச்சினுடைய திறமை கண்டு

2.அவரைக் “கடவுளின் பிள்ளை” என்ற நிலைகளில்

3.திருஞான சம்பந்தர் என்ற நிலையில் பெயரை இடுகின்றார்கள்.

அகஸ்தியனின் அருளை எப்படிப் பெறலாம்…?

Image

Agastya Lobamuthra

அகஸ்தியனின் அருளை எப்படிப் பெறலாம்…? 

நம் உயிரணு (உயிர்) கதிரியக்க நட்சத்திரத்திலிருந்து உருவானது தான்.

மனிதன் வரை வளர்ந்து அந்த ஆற்றலான உணர்வின் சத்து கொண்டுதான்
1.உடலான இருளுக்குள் இருப்பதை
2.அந்த மறைந்த நிலையைத் தன் உணர்வின் நிலையால்
3.ஒலி/ஒளி அலைகளாக எண்ணங்களாக மாற்றுகின்றது.

இதையெல்லாம் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

தாய் கருவிலே அவன் இருக்கும் பொழுது தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த விண்ணின் ஆற்றல்கள் அனைத்தும் அதாவது அந்த நஞ்சின் இயக்கமான கதிரியக்கத்தின் உணர்வுகள் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

பூர்வ புண்ணியத்தால் தான் பெற்ற அந்த உணர்வின் சக்தி கொண்டு விண்ணை நோக்கி ஏகுகின்றான்.

அப்படி ஏகும் போது “உயிராற்றல்…”
1.எதனின் தன்மை கொண்டு அந்த நட்சத்திரத்தின் இயக்கங்கள் இயக்கியதோ
2.அதையே நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
3.அதனின் உணர்வின் தன்மையே ஒளியாக மாற்றிக் கொள்கின்றான் அகஸ்தியன்.

விண்ணின் ஆற்றலை எடுத்து இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் தனக்கென்ற நிலைகள் இதைப் பிரித்துப் பிரித்து அந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி இன்றும் விண் உலகில் வாழ்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அதாவது துருவப் பகுதியிலிருந்து நம் பூமி கவரும் உணர்வின் சத்தைத் தான் (அகஸ்தியன்) அங்கேயே நிலை கொண்டு அந்த உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்தான்.

அவ்வாறு கவர்ந்த சத்திலிருக்கும் நஞ்சினைப் பிரித்து விட்டுத் தன் உயிரான ஒளியின் சிகரத்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்தானோ அதனின் இனத்தின் தன்மையை இந்த உணர்வின் தன்மையை உணவாக எடுத்துக் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக மின்னிக் கொண்டுள்ளான் அவன்.

அதைப் போன்று எந்த நட்சத்திரத்தின் தன்மை நம் உயிரணுவின் தன்மையாக இருப்பினும் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை நாம் கவர்தல் வேண்டும்.

அந்த அகஸ்தியனின் உணர்வின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை நம் உயிரான இயக்கத்திற்குள் இணைத்து இந்த வாழ்க்கையில் எதிர் நிலையான இயக்கங்களாக இருப்பினும் ஒருக்கிணைந்த இயக்கமாக நாமும் மாற்ற முடியும்.

இதையெல்லாம் நீங்கள் படிக்கும் பொழுது “என்னடா…! நாம் எல்லாம் அந்த அளவிற்குப் படிக்காதவர்கள். “சாமி என்னென்னமோ… இப்படிச் சொல்கிறார்..!” என்று எண்ணாதீர்கள்.

1.நான் படிக்காதவன் தான்.
2.மூன்றாவது வகுப்பு முழுவதும் படிக்கவில்லை.

என் குருநாதர் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை எல்லாம் எனக்குள் கொடுத்து இயக்கச் சக்தியாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அதனால் சாமி சொல்வது அர்த்தம் தெரியவில்லை. எங்கேயோ ஏதோ உலகத்தில் ஏதோ பெரியதாகச் சொல்கிறார் என்று இப்படி விட்டு விட்டீர்கள் என்றால் நான் சொல்வதைத் தள்ளிவிட்டுவிடும்.

சாமி சொல்கின்ற சக்தியை நான் பெற வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் “இறுக்கிப் பிடித்து வைத்துக் கொண்டால்…” இது வளர்க்கச் செய்யும்.

திட்டுகிறவர்களையும் கேலி செய்கிறவர்களையும் நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம். “இவன் இப்படிச் செய்தான்… அவன் என்னை மோசம் செய்தான்…” என்று நீங்கள் பதிவு செய்தால் இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைகிறது.

அதைப் போல் அகஸ்தியனின் உணர்வுகளை இங்கே பதிவு செய்கின்றோம். பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்
1.அகஸ்தியனைப் போன்று ஒளி நட்சத்திரமாக ஆகமுடியும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
3.ஏகாந்த நிலை அடைய முடியும்.

கரையான் தன் மலத்தால் மரத்தை ஆவியாகக் கரைத்து தன் உணவாக எடுக்கும் ஆற்றல் பெற்றது – அது போல “தீமைகளைக் கரைக்கும் ஆற்றலை…” நாம் கவரவேண்டும்

Image

Karaiyan _ Termites

கரையான் தன் மலத்தால் மரத்தை ஆவியாகக் கரைத்து தன் உணவாக எடுக்கும் ஆற்றல் பெற்றது – அது போல “தீமைகளைக் கரைக்கும் ஆற்றலை…” நாம் கவரவேண்டும்

 

கரையானைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

 

அது தன் உணவுக்காக தாவர இனச் சத்தை அனைத்தும் எடுத்துக் கொண்டு குவித்து தன்  மலத்தை அதன் மீது போடுகின்றது. அதாவது

1.இப்பொழுது நாம் சமையல் செய்வது போல

2.பல சத்தையும் ஒன்றாக ஆக்கி அது உணவாக உட்கொள்கின்றது.

 

கரையான் புற்றுக்களைப் பார்த்தால் மேலே மண்ணாக இருக்கும். மண்ணை எடுத்துத் தன் உணர்வின் தன்மை உமிழ்நீரைச் சுரந்து அது மேலே கூடாகக் கட்டிக் கொள்கிறது.

 

அதன் மூலம் வெளியிலேயிருந்து வரக்கூடிய உணர்வுகள் அனைத்தும் இது உள்ளுக்குள்ளிருந்து மற்ற தாவர இனச் செடிகளைக் கவர்கின்றது. கவர்ந்து உள்ளே சென்றாலும் அதிலே இதனுடைய மலத்தைப் பாய்ச்சிவிடும். அதைக் குவித்து வைத்துவிடும்.

 

குவித்து வைத்தபின் நாம் சமையல் செய்வது போல அதைக் கரைத்து அதனுடைய மணம் வெளிப்படாது கூட்டிற்குள் அடைத்து  உணவாக எடுத்துத் தன் இனக் குஞ்சுகளுக்கும் அதை உணவாகக் கொடுக்கின்றது.

 

கரையான் வெளிவந்த பின் ஓர் மரத்தின் மேல் இது பட்டுவிட்டால் அந்த மரத்தின் சத்தில் இதனுடைய மலம் பட்டபின் அதிலுள்ள சத்தைப் பூராம் ஆவியாக மாற்றித் தன் உணவாக உட்கொள்ளுகின்றது. பின் இந்த மரமே மண்ணாகப் போய் விடுகின்றது.

 

காலையில் கரையான் பிடித்தது என்றால் சாயங்காலம் பார்த்தீர்கள் என்றால் அந்த மரம் காணாமல் போகும.

 

நம் வீட்டு வாசலில் உள்ள நிலையில் (மரத்தினால் செய்யப்பட்டதை “நிலை” என்று சொல்வோம்) பத்து நாளைக்கு விட்டு விட்டோம் என்றால் போதும்.

 

பத்து நாள் கழித்துப் பார்த்தால் நிலை மாதிரித்தான் இருக்கும்.

1.மரத்தை எல்லாம் தின்று விட்டுக்

2.கடைசியில் உள்ளுக்குள் கூடாகத்தான் இருக்கும்.

3.மண்ணாகத்தான் இருக்கும்.

 

இதைப் போல அது உட்கொண்ட உணர்வின் சத்தை இதனுடைய மலத்தை இட்ட பின் இது கரைத்து விடுகின்றது.

 

இதைப் போன்று தான் இந்த உணர்வின் சத்து முதன் முதலிலே இது உருவானபின்

1.இதைப் போல அணுக்களின் தன்மை பிரிந்த அணுக்கள்

2.மீண்டும் மண்ணுக்குள் மறைந்து “கரையான்களாக…” மாறுகின்றது.

 

கரையானாக மாறியதை எது எது கொன்று புசித்ததோ இது வரப்படும் போது அதைத் தனது உணவாக உட்கொள்ளும் நிலையில் கரைக்கும் ஆற்றல் பெறுகின்றது.

 

(கரையானைத் தின்னாத உயிரினமே இல்லை என்று கூடச் சொல்லலாம்.)

 

1.கரையான் எப்படிக் கரைக்கின்றதோ

2.இப்படித்தான் (கரைக்கக்கூடிய) அமிலங்கள் மாறுவதும்

3.உணர்வின் சத்து இயக்கத்தின் தன்மை மாறுவதும் என்ற நிலையைத்

4.தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

 

ஏனென்றால் உயிரணு தோன்றிய பின் முதலிலே எப்படி இருந்தது என்ற நிலையை அறிவதற்காக வேண்டி என்னைக் கரையான் புற்றிலும் எறும்புப் புற்றிலும் அமர வைத்துக் காட்டினார்.

 

எறும்புகளும் கரையானைப் போன்றே செய்கிறது. அதிலேயும் ஒரு விதமான அமிலங்கள் உண்டாகும்.

 

அந்த அமிலத்தைச் சேர்த்துக் கொண்டபின் கரையான் எவ்வாறோ இதைப் போலச் சேமித்துச் செத்தை குப்பைகளை எல்லாம் பச்சையாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

 

குவியலாகப் போட்டு இது மலத்தை உருவாக்கிவிடும். அது குறிப்பிட்ட காலம் வந்தபின் எடுத்து உணவாக உட்கொள்ளுகின்றது. இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கம்தான்.

 

செடியின் சத்து மணம் என்று இருந்தாலும் அந்த செடிக்குள் சேர்த்த (செடியின் மணம்) இயக்கத்தின் தன்மை உணர்வாக இயக்குகின்றது.

 

அந்த மணத்தின் நிலைகள் எவ்வாறு இயக்குகிறதென்ற நிலை தான் என்னைக் கரையான் புற்றில் அமரச் செய்து எவ்வாறு இயற்கையின் நிலைகள் உருவாகின்றது என்ற நிலையைக் காட்டினார்.

 

இப்போது நீங்கள் டி.வி.யிலேயும் பார்க்கின்றீர்கள்.

 

கடலுக்குல் நீருக்கடியில் போகும்போது ஆழப்பகுதிகளில் அதற்கென்ற விஞ்ஞானக் கருவி கொண்டு டெலஸ்கோப்பை வைத்துக் காணுகின்றார்கள்.

 

நீருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வின் அணுக்களையும் நீருக்குள் நுண்ணிய அணுக்கள் (ORGANISMS – உயிரினங்கள்) உருவாகுவதையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள்.

 

இதைப் போல மெய்ஞானி தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தைக் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று மற்றொன்றை உருவாக்கி அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் உணர்ந்து கொள்கின்றான்.

 

1.இது தீயது இதை விலக்கவேண்டும்

2.இது நல்லதி இதை இணைக்க வேண்டும் என்ற நிலையில்

3.தன் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தனக்குள் இயக்கச் சக்தியினை மாற்றி அமைத்துக் கொள்கின்றான்.

 

1.உயிர் எப்படித் துடிக்கின்றதோ

2.அது உயிர் எப்படி இயக்குகின்றதோ அதைப் போல

3.உணர்வின் அணுக்களில் ஒருக்கிணைந்து

4.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானவர்கள் அந்த மகரிஷிகள்.

5.சப்தரிஷிகளாக சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

 

கரையான் கரைக்கும் ஆற்றல் கொண்டது போல் இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்துக் கரைத்திடல் வேண்டும்.

 

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை அடைவதே நம்முடைய கடைசி எல்லை.

விண்ணிலே தோன்றிய உயிரணு பூமிக்குள் வந்து “மனிதனாக முழுமை பெற்ற நந்நாள் தான்… மகா சிவன் இராத்திரி”

Image

Maha siva rathri

விண்ணிலே தோன்றிய உயிரணு பூமிக்குள் வந்து “மனிதனாக முழுமை பெற்ற நந்நாள் தான்… மகா சிவன் இராத்திரி”

 

ஒரு உயிர் பூமிக்குள் வந்த பின் உயிரணு. உயிரணு தன் துடிப்பால் மின்னிக் கொண்டிருக்கும் அந்த உணர்வே உயிரின் நிலை.

 

அந்த உயிரணு நம் பூமிக்குள் வந்த பின் உதாரணமாக ஒரு பருத்திச் செடியின் மீது அந்த உயிரணு விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது

1.பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்த இலையின் சத்தை

2.இந்த உயிரணுவின் (தன்) துடிப்பின் ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு

3.அந்த உயிரைச் சுற்றி மூடி விடுகிறது.

 

1.ஒரு “சப்…” என்று இருக்கும் பொருளில்

2.நாம் பாகைக் காய்ச்சி ஊற்றிய பின்

3.(முலாம் பூசியது போல்) மேலே மூடிக் கொள்வது போல்

4.பருத்திச் செடியின் சத்து அந்த உயிரணுவை மூடி விடுகின்றது.

 

பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்தச் செடியின் சத்தை சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அதை அலைகளாக படரச் செய்கின்றது.

 

அவ்வாறு படரச் செய்து கொண்டிருக்கப்படும் போது எந்தச் செடியின் மேல் உயிரணு வீழ்ந்ததோ அதிலிருந்து வெளிப்படும் அலைகள் அணுக்களாக மாறுவதை

1.அந்த உயிரணு அதைக் கவர்ந்து அதைச் சுவாசித்து

2.“ஓ…” என்று ஜீவனாக்குகின்றது.

 

இந்த உயிரணு எவ்வாறு தோன்றியதோ இதைப் போல அந்தத் தாவர இனச்சத்தை அது நுகர்ந்து

1.இந்த உயிரின் துடிப்பு போல

2.தாவர இனச் சத்தையும் துடிப்பாக உருவாக்குகின்றது.

 

அப்பொயழுது அது ஜீவ அணுவாக மாற்றுகின்றது. அது தான் “ஓ…” பிரணவம், ஜீவனாக உருவாகத் தொடங்கி விடுகின்றது. அந்த உணர்வின் சத்து உடலாக ஆகும் போது “சிவமாகின்றது”.

 

1.இந்த உயிரணு

2.அந்தத் தாவர இனச்சத்தால் மூடப்படும் போது இரவு.

3.இது தான் சிவன் ராத்திரி.

 

முதன் முதலில் இவ்வாறு தோன்றிய உயிர் பரி\ணாம வளர்ச்சியாகி இன்று நாம் மனிதனாக இருக்கிறோம் என்றால் அது தான் “மகா… சிவன் ராத்திரி”.

 

எத்தனை விதமான குணங்களை நமக்குள் எடுத்தாலும் உடலுக்குள் இருக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு அறிகின்றோம்.

1.ஆனால் உடலுக்குள் நமக்குள் பலவும் மறைந்திருக்கின்றது.

2.இது தான் மஹா சிவன் ராத்திரி.

 

ஒரு உயிரணு… “மனிதனாக முழுமை பெற்ற நன்னாள்” என்ற நிலையினைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் மகா சிவன் ராத்திரி என்று மகரிஷிகளால் உணர்த்தப்பட்டது.

இந்தப் பயிற்சியின் மூலம் புருவ மத்தியில் எண்ணி “ஒரு நிமிடத்தில்” தீமைகளை அகற்ற முடியும்

om shanti brahma

இந்தப் பயிற்சியின் மூலம் புருவ மத்தியில் எண்ணி ஒரு நிமிடத்தில் தீமைகளை அகற்ற முடியும்

தீமைகளை அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?

1.ஓ..ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி நினைக்க வேண்டும்.

1.தீமைகள் மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.

இதில் உங்களுக்கு என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில் வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.

அதே மாதிரி ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப் பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.

ஏனென்றால் நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.

நாம் கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்  எடுத்து நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.

ஆனாலும் நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பிற்பாடு என்ன செய்கிறது?

உதாரணமாகத் தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால் சுடாமல் என்ன செய்யும்? சுடத்தானே செய்யும்

“சுருக்…” என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.

அதே போல் சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.

முதலில் கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும் “வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.

சுட்டுவிடும் என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை பொத்துப் போகுமா… இல்லையா…?

தண்ணீராகத்தான் தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.

விரலை விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது  முதலிலேயே முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?

கை வெந்து போகுதா… இல்லையா…?

இதே மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.

அதாவது உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

தண்ணீர் சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப் போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!

அப்பொழுது உடனே என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.

1.நம் உயிர் என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப் பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால் பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான் அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.

சாபமிட்ட உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம் வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள் இழுக்கின்றது.

அப்பொழுது அதைத் தடுக்க வேண்டும்

தடுப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.

வலுவான பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?

உள்ளுக்குள் இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…” போகின்றது,

“ஒரு நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.

நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச் சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

ஏனென்றால் நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.

சாபமிடும் உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து வைத்துக் கொள்கிறது. யார்? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.

நமது கண் என்ன செய்கிறது?

அவனைப் பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது…?

கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் உயிர் கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.

உயிருக்குக் கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும் அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்.

செய்து பாருங்கள்…!

இதைப் போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ… என்னமோ பேசுகிறான்…!  என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.

அடுத்தது என்ன எண்ண வேண்டும்?

1.பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.

ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற  வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?

1. உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி

1.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது. இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி” இது தான். செய்து பாருங்கள்.

“குருநாதரின் இயக்கம் தான்… எல்லாம்” என்பதை அனுபவபூர்வமாக உணர்த்தினார் – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

Image

Divine Master Guru

“குருநாதரின் இயக்கம் தான்… எல்லாம்” என்பதை அனுபவபூர்வமாக உணர்த்தினார் – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

நான் (ஞானகுரு) சித்தான பின் குருநாதர் என்னைத் திருப்பதிக்கு போகச் சொன்னார். அங்கே மலையில் பாபநாசம் என்று இருக்கிறது. அதையும் தாண்டி மேலே போனால் நாரதர் மன்றம் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் வழிந்து சில இடங்களுக்குச் செல்கிறது.

 

அந்த நாரதர் மன்றத்தைத் தாண்டி இந்தப் பக்கம் ஒரு காட்டுக்குள் போனவுடனே அங்கே போய் என்னைத் தியானம் (48 நாட்கள்) எடுக்கச் சொல்கிறார் குருநாதர்.

 

தியானம் எடுக்கும் பொழுது அன்றைக்கு இரவில் கரடி வருகிறது. “உ..ம்ம்ம்ம்…” என்று வருகிறது. கரடியைக் கண்டவுடனே பயம் வருகிறது.

 

நான் இந்தக் கரடிக்கு பயந்து என்ன செய்வது?

 

அப்போது அதற்காக வேண்டி எந்த உணர்வை எடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்கிற வகையில் குருநாதர் சொன்னவுடன் பேசாமல் அவர் சொன்ன முறையில் இருக்கப்படும் போது என்னைச் சுற்றி வருகிறது.

 

“தன்னாலே…” அப்புறம் போய் விட்டது.

 

அந்த இடத்திற்குப் போன அன்றைக்கு இரவிலேயே இது நடக்கிறது. பயமும் இதுவும் வருகிறது. அப்புறம் அது ஒதுங்கி இன்னொரு பக்கத்தில் போய் இருந்தேன்.

 

அங்கே வருடத்தில் பத்து மாதங்களிலேயும் கனி வர்க்கங்கள் விளைகிறது. நவாப்பழம் மாதிரி இருக்கிறது. கொய்யாப்பழம் இருக்கிறது. ஈச்சம்பழம் இருக்கிறது.

 

இதே மாதிரி ஒவ்வொரு சீசனுக்கும் சாப்பாடு இல்லாமலேயே அந்த கனிகளைச் சாப்பிட்டு அங்கே வாழலாம்.

 

ஏனென்றால் சாப்பாடு எதுவும் நாம் கொண்டு செல்லவில்லை. இதைத் தான் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட்டுக் கொள்வது. ஈச்சம்பழம் இருந்தது. அதைச் சாப்பிட்டேன்.

 

திருப்பதியில் துளசி மாதிரி ஒன்று கொடுப்பார்கள். அதைச் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் குடித்தோம் என்றால் போதும் வயிறு நிறைந்து விடும். கொஞ்சம் இனிப்பாக இருக்கும்.

 

இதையெல்லாம் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்கும் போது எனக்கு முன்னாடி நடக்கிறது ஒரு நிகழ்ச்சி.

 

ஒரு குரங்குக் கூட்டம் இருக்கிறது ஒரு தாய்க் குரங்கு குட்டி போட்டிருக்கிறது. வருகிற குரங்குகள் எல்லாம் அந்தக் குட்டியை முத்தமிகின்றது. அதை எல்லாம் வந்து பார்க்கிறது.

 

அப்பொழுது ஒரு முரட்டுக் குரங்கு வருகிறது.

 

அதைக் கண்டவுடனே “உர்…ர்ர்..” என்கிறது. அந்தக் குட்டிக்கு இந்த முரட்டுக் குரங்கு முத்தம் கொடுப்பதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

 

அங்கே தேங்கி நின்று அங்கே இருந்து கொண்டே “வவ்.வா..வவ்..வா என்கிறது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக இது போனவுடனே இங்கே இருந்தே வாயிலே முத்தம் கொடுக்கின்ற மாதிரிச் செய்து கொஞ்சம் ஒரு அடி முன்னாடி நகர்கின்றது.

 

“ஓ…” என்று தாய்க் குரங்கு சப்தம் போடுகின்றது. (இது ரௌடிக் குரங்காக இருப்பதால்)

 

தன் குழந்தையைக் காத்துக் கொள்ள… தாய்க் குரங்கு “என்னென்ன வேலை செய்கிறது…?” என்று இந்த நிலைகளை எல்லாம் நான் பார்த்து கொண்டு இருக்கின்றேன்.

 

தன் குட்டி மேல் எவ்வளவு பாசமாக இருக்கிறது? அதோடு சேர்ந்த மற்ற குரங்கெல்லாம் எப்படி இருக்கிறது? அந்தக் குட்டியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறது.

 

அப்பொழுது என் ஞாபகம் என் வீட்டிலுள்ளோர் மீது செல்கிறது.

 

என்னுடைய சிறிய குழந்தை தண்டபாணியை வீட்டில் விட்டு விட்டுத்தான் இங்கே வந்திருக்கின்றேன். இதை நினைவுகள் எனக்கு அதிகமாகிவிட்டது.

 

நாம் மனிதனாக இருக்கின்றோம். குழந்தை குட்டியை எல்லாம் விட்டு விட்டு நாம் இப்படி இங்கே வந்து இருக்கிறோம்.

 

ஆனால் இந்தக் குரங்குக் கூட்டம்… “தன் குட்டியை.. இப்படிப் பாதுகாக்கிறதே…!” என்ற இந்த எண்ணம் வருகிறது.

 

குருநாதர் இந்த உணர்வுகளைத் தூண்ட வைக்கிறார்.

 

நான் வெளியிலே சென்றால் எந்தெந்த நிலைகள் உருவாகிறது? இந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுப் பார்க்கும் போது என் நினைவுகள் எங்கே செல்கிறது?

 

அப்பொழுது என் வீட்டு நினைவு தான் எனக்கு வருகின்றது.

 

“குரங்கிற்கு இருக்கக்கூடிய புத்தி கூட… நமக்கு இல்லையே…!? வீட்டில் எல்லோரையும் விட்டு விட்டு இப்படி நாம் வந்திருக்கின்றோமே என்ற இந்த எண்ணம் வருகிறது.

 

அப்போது அந்த உணர்வுகள் என்ன செய்கிறது?

 

நீ வந்த காரியம் என்ன…? நீ வீட்டிற்குப் போக வேண்டும் என்றால் போ…! என்று சொல்கிறார் குருநாதர்.

 

காட்சி கொடுத்துச் சொல்கிறார். நீ போகிறதென்றால் போ…! நான் சொன்னது என்ன? நான் எதைச் சொன்னேன் நீ எதைச் செய்கிறாய்…?  என்று இந்த நிலையில் கேட்கிறார்.

 

அப்புறம் அவருடைய உணர்வுகளைப் பார்த்த பிற்பாடு கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் அந்த உணர்வுகளை உந்தச் செய்து

1.நீ எதை எடுக்க வேண்டும்?

2.எப்படி எப்படி இருக்க வேண்டும்?

3.உயிரணுக்களுடைய தோற்றங்கள் என்ன? என்கிற வகையில் பல நிலைகளை உணர்த்தினார்.

 

இது முடிந்தவுடனே அடுத்தாற்போல ஒரு நிகழ்ச்சி நடந்தது.

 

அந்தப் போக்கிரி குரங்கு முத்தம் கொடுத்து விட்டு வந்தது. வந்த பின்னாடி திரும்ப வரும் போது் இடைவெளியில் இ்ன்னொரு குரங்கைப் பிடித்து “லபக்…” என்று கடித்து விட்டது.

 

அவ்வளவு தான்…!

 

எல்லாம் சேர்ந்து “திமு.. திமு.. திமு..,” என்று துரத்துகிறது. துரத்தினால் என்னைச் சுற்றி கொண்டு வருகிறது அந்த முரட்டுக் குரங்கு. எல்லாக் குரங்குகளும் இதை விரட்டுகின்றது.

 

என் மேலே தாவிவிட்டுப் போகிறது. என்னை அங்கே உட்காரவே விடவில்லை.

 

ஏனென்றால் இந்த நிகழ்ச்சிகள் அது தன் வேகத்தில் போகும் போது “மனிதன்…” என்று கூடப் பார்க்க மாட்டேன் என்கிறது. எல்லாம் சேர்ந்து அந்தப் போக்கிரி குரங்கைத் துரத்துகின்றது.

 

ஏனென்றால் சின்னக் குட்டியைக் கடித்து விட்டது. அதனால் எல்லாம் ரோசமாக விரட்டுகின்றது.

 

மரத்திற்கு மரம் எங்கே தாவினாலும் விடுவதில்லை. என் பின்னால் வந்து ஒளிகின்றது. அப்புறம் இதைப் பார்த்து விட்டு வந்தேன்.

 

இது பாசமாகவும் இருக்கிறது அதே சமயத்தில் எதிர்க்கும் உணர்வுகள் எப்படி இருக்கிறது? என்று இதையும் காட்டுகிறார் குருநாதர்.

 

அது எல்லாம் போனவுடனே ராத்திரியில் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது தான் கீழே அரிக்கிற மாதிரி இருக்கிறது.

 

நான் தியானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன். அரிக்கிற மாதிரி இருக்கிறது. “என்ன..!” என்று பார்த்தோம் என்றால் உள்ளுக்குள் இருந்து அந்தக் காலங்களில் பதித்து வைத்திருந்திருப்பார்கள் போலிருக்கின்றது.

 

பருப்பு போல் “தங்கக்காசு…!” முத்திரை போட்டுப் பாதம் போட்டு வைத்து இருக்கிறது மண்ணுக்குள்.

 

இது என்னடா… தங்கக் காசு இங்கே இருக்கிறது….? இது நம்மைச் சோதிப்பதற்காகக் குருநாதர் இந்த மாதிரி வைக்கின்றாரா…! என்று தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றேன்.

 

எல்லாம் வீட்டு ஆசையும் குழந்தையும் காட்டி விட்டு இப்பொழுது தங்கமும் வருகின்றது. கடைசியில்… நம்மை “எங்கே கொண்டு மாட்டிவிடுவாரோ…?” குருநாதர் என்ற பயம் வந்து விட்டது.

 

அதை எடுத்து நன்றாகப் பொட்டணமாகக் கட்டி வைத்து வைத்துக் கொண்டேன். சுமக்கின்ற அளவுக்கு இருந்தது. பூராம் சுத்தமான தங்கம்.

 

அப்புறம் யோசனை செய்து பார்த்தேன்.

 

அங்கே அந்த இடத்தில் நாற்பத்தெட்டு நாள் தியானமிருக்கச் சொல்லியிருந்தார் குருநாதர். 48 நாள் ஆனவுடனே அந்தத் தங்கக் காசுகளை நேராகத் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

 

அது “உனக்கே ஆகட்டும்…!” என்று போட்டேன்.

 

ஆனால் என்னிடம் இருந்த காசு எவ்வளவு? நாலணாவோ எட்டணாவோ தான் இருந்தது. ஒரு டீ குடிக்கும் அளவுக்கு இருந்தது.

 

அதை வைத்துக் கொண்டு “நீ திருப்பதி மலையை விட்டுப் போ…” என்கிறார் குருநாதர்.

 

மொட்டை அடித்துக் கொண்டு மேலே இருந்து கீழே நடந்து வருகிறேன். நடந்து வரப்போகும் போது பார்த்தோம் என்றால் சரியான வெயில். காலில் செருப்பு இல்லை.

 

இடைவெளியில் ஒருவன் குடித்து விட்டு வந்தான். அவன் என்ன செய்தான்? ஒரு மாட்டையும் ஓட்டிக் கொண்டு வருகின்றான். அதை உதைக்கின்றான். அது கீழே விழுந்துவிட்டது.

 

இந்த மாட்டை எழுப்பி விடு என்கிறான். கீழே விழுகிறது. “அய்யய்யோ… நூ பண்டிட்டு வாரானான்… இட்டிக்குப் போனாலும் நீ ரைய்ரா…” என்று தெலுங்கில் சொல்லிக் கொண்டு அழுகிறான்.

 

இந்த நேரத்தில் நான் அங்கே போகிறேன்.

 

அட.. “ராரா… நைனா…!” என்கிறான். கொஞ்சம் தூக்கி விடு என்கிறான்

 

நான் எப்படி வருகிறேன் என்றால் அங்கிருந்து வெயிலில் நடக்கப்படும்போது முதலில் நான் ஒரு வேலை செய்து விட்டேன்.

 

அந்த வழியில் மாங்காய்த் தோப்பு இருக்கிறது. ஒரு பிஞ்சு விழுந்து இருந்தது. அதை எடுத்து வந்து தண்ணீர் தாகத்திற்காக எடுத்துக் கடித்து விட்டேன்.

 

அது என்ன செய்தது?

 

இந்தப் பால் தொண்டையில் பட்டுவிட்டது போலிருக்கின்றது. அவ்வளவு தான். தொண்டை கர..கர.. என்று ஆகிவிட்டது.

 

தண்ணீர் தாகமோ அதிகமாகிறது. இந்த நேரத்தில் வந்து கொண்டு இருக்கின்றேன். “தண்ணீருக்கு எங்கேயாவது போய்ப் பார்க்கலாமா…” என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றேன்.

 

வெயில் அடிக்கிறது. தலையில் மொட்டை அடித்து இருக்கிறேன். அப்பறம் என்ன செய்வது? செருப்பும் போடக்கூடாது. மேலே சட்டையும் கிடையாது. ஒரு துண்டும் வேஷ்டியும் தான்.

 

இப்படி நான் போகும் போது மாட்டுடன் வந்து கட்டிக் கொண்டு அழுகிறான். “தூக்கிவிடு நைனா…” என்கிறான்.

 

“நீயே தூக்கிக் கொள் நான் போகிறேன்…” என்று சொன்னால் நீ தூக்கிவிடாமல் போகக்கூடாது. குடித்துவிட்டு தண்ணி வெறியில் இப்படிப் பேசுகின்றான்.

 

இது என்னடா வம்பாகப் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன்.

 

எனகு இங்கே நாக்கு வரளுகிறது என்றேன்.

 

நீ தூக்கிவிடு உனக்குத் தண்ணீர் கிடைக்கும் என்கிறான். அவன் பாட்டுக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கிறான் ஒரு அரை மணி நேரம் போராட்டம்.

 

அப்புறம் இந்த இடைவெளியில் இன்னொரு ஆள் வந்தான். டேய்…! “நீ குசும்பு தனம் தாளாது… விடுடா மனுசனை…!” என்கிறான்.

 

பேசாமல் ஒடுங்கி விட்டான். அப்புறம் நான் வந்துவிட்டேன்.

 

அந்த நேரத்தில் “அவனை நான் எதுவும் செய்ய முடியாத நிலை…”

 

ஏனென்றால் இதுவெல்லாம் குருநாதர் பரிச்சாந்திர நிலையில் என்ன செய்கிறார்…! என்று நமக்குத் தெரியாது.

 

அப்புறம் தான் அங்கிருந்து போனவுடனே ஒரு தோட்டத்திற்குள் போனேன். அந்த ஆளும் தண்ணி மாஸ்டர்தான் போலிருக்கின்றது.

 

கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்றேன்.

 

“தாகு நைனா… தாகு நைனா..” என்கிறார்.

 

“ராரா…!” என்று கூட்டிக் கொண்டு போனார். “தாகு நைனா…! அங்கே போனால் இந்தத் தொட்டியில் தண்ணீருக்குள் புழுக்கள் எல்லாம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

 

தாகமோ எனக்கு இங்கே தாங்க முடியவில்லை. குருநாதர் அந்த இடத்தில் வசமாகக் கொண்டு போய் இப்படிக் காட்டுகின்றார்.

 

அதில் இந்த வால் மாதிரி சின்னப் புழுக்கள் உள்ளே அரிந்து கொண்டிருக்கிறது. கிணற்றில் நீர் இல்லையா என்று கேட்டேன்.

 

கிணற்றில் தண்ணீர் இல்லை. ஏன் இந்த நீருக்கு என்ன? இதைக் குடி என்கிறான்.

 

அப்பறம் எனக்கு வேறு வழி இல்லை. மேலே போட்டிருக்கின்ற துண்டைப் போட்டு இதில் அள்ளி தண்ணீர் நிறையப் பிடித்தவுடனே “ஆ..” என்று அண்ணாந்து குடிக்கின்றேன்.

 

புழுக்கள் எல்லாம் இருக்கிறது. பார்த்தால் “கொச…கொச…” என்று இருக்கிறது.

 

வேறு வழி இல்லை. புழுக்கள் உள்ளே போகாமல் அதைச் சாப்பிட்டேன். அது சாப்பிட்டாலும் தாகம் அடங்கவில்லை.

 

வெயிலில் போகப் போக… போகப் போக… வறட்சி மயக்கம் வந்து விட்டது. அது மாதிரிப் போனவுடனே அப்படியே கிறங்கிவிட்டேன். என்ன செய்வது?

 

ஒன்றும் புரியவில்லை. தாகத்தை அடக்க முடியவில்லை.

 

“புளியந் தழை” அப்படியே மேலிருந்து வந்தது. நான் கிறங்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது புளியந் தழை கிடைக்கிறது.

 

அப்போது ஒரு உணர்வு வருகின்றது. அதைப் பறிக்க வேண்டும். சாப்பிட வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது.

 

எடுத்து வாயில் போட்டு மென்றேன். தண்ணீர் உமிழ் நீர் வருகிறது. தாகம் அடங்குகிறது.

 

அப்பறம் நிறையப் புளியந் தழைகளை எடுத்து வைத்துக் கொண்டு தின்று கொண்டே நடந்து வந்தேன்.

 

1.இந்த மாதிரியெல்லாம் உணர்வை ஊட்டுவதும் அவர் தான்.

2.இந்தச் சந்தர்ப்பத்தை ஊட்டுவதும் அவர் தான்.

 

ஏனென்றால் இதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அனுபவரீதியில நீ் எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்காக வேண்டிப் பல இன்னல்களைப் பட வைத்தார்.

 

ஆனால் இதையெல்லாம் தெரிந்து தான் உங்களிடம் உபதேசமே செய்கின்றேன்.

 

ஏனென்றால் குருநாதர்.. “அவர் எந்த நிமிடத்தில் எதைச் செய்வார்…?” என்று எனக்குத் தெரியாது.

 

ஒரு இடத்தில் நான் போய் உட்கார்கிறேன். அந்த ரெக்கத்தில பார்த்தோம் என்றால் விஷக் கொடுக்குத் தேள் இருக்கின்றது. அது எனக்குத் தெரியவில்லை.

 

நடந்து போன மயக்கத்தில் தெரியவில்லை. சாப்பாடு இல்லை. அந்த நேரத்தில் கொடுக்குத் தேள் இருக்கிற இடத்தில் சாய்ந்து கொண்டு இருக்கிறேன்.

 

அது மேலே இருந்து இறங்கி வருகிறது.

 

பயந்து போய்த் தட்டினோம் என்றால் என்னை அது கொட்டும். அது கடுமையான விஷம் உள்ளது.

 

அப்பறம் நாம் பேசாமல் அப்படியே இருந்தேன். அது போகிற வரையிலும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 

குருநாதா…! என்னை நீ இப்படிச் சோதிக்காதே…! கொட்ட வைக்காதே…! கொட்டினால் நான் தாங்கமாட்டேன்…! என்ற இந்த எண்ணம் தான் வருகிறது.

 

இதை எல்லாம் சில நேரங்களில் சில விசித்திரமான நிலைகளை அவரே நடத்திக் காட்டுவார்.

 

ஒவ்வொரு நிமிடத்திலேயும்

1.இல்லாத ஒரு நிலைகளெல்லாம் நமக்கு அங்கே நடக்கிறது என்றால்

2.அது எப்படி?

3.அவருடைய நிலை தான் என்கிற வகையில் தெரிந்து கொண்டேன்.

4.”அவர் தான்” என்று தெரிந்து கொண்ட பிற்பாடு

5.கொஞ்சம் தெம்பு வந்து… இதையெல்லாம் கண்டு பயம் கொஞ்சம் தெளிந்து விட்டது.

6.எல்லாம் நீயே பார்த்து கொள்.. என்னமோ பார்த்துக் கொள்…! என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவாகின்றது.

 

ஆனாலும் அந்தப் பய உணர்வு வரும் போது என்ன செய்யும்? என்கிற வகையில் அதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

 

பய உணர்வு வரப்படும் போது அது உனக்குள் என்ன செய்கிறது? பய உணர்வு வந்தவுடனே அதைப் பார்த்து அந்தத் தேள் தன் கொடுக்கை என்ன செய்கிறது? கொட்டுவதற்காக அப்படியே தூக்குகிறது.

 

நான் ஏற்கனவே தேள் எல்லாம் பிடிப்பேன்.

 

இந்தத் தேள் மோசமான தேள். வெள்ளையாக இருக்கிறது. “ராஜத்தேள்” என்று சொல்வார்கள். அது கொட்டியது என்றால் பயங்கரமான விஷம்.

 

பயமும் இருக்கிறது. ஆனால் பயப்படும் போது என்னவாகின்றது. அந்த உணர்வை நுகர்ந்தவுடனே அது பயந்து போய் “ஜிர்…” என்று அது விரைத்துப் பார்க்கிறது.

 

அப்போது அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிறார் குருநாதர்.

1.அது இறங்கிப் போகவேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீ எண்ணிக் கொண்டிரு.

2.அது போய்விடும் என்று சில உணர்வுகளைக் கொடுக்கிறார்.

 

நீ பயப்பட்ட உணர்வுகள் உனக்குள் எப்படி இயங்குகிறது? அதே உணர்வுகளை நீ அதிகமாகச் சேர்த்தாய் என்றால் அதிகமான இந்த விஷத்தன்மைகளை எடுத்தால் அது உமிழ்த்தும் உணர்வு உனக்குள் சேர்ந்தால் இது “நடுக்க வாதமாக…” நிச்சயம் வரும் என்று சொல்கிறார்.

 

தேளைக் கண்டு பயப்படுபவர்களைப் பாருங்கள். இனம் புரியாமல் கை கால் எப்படி நடுங்கிக் கொண்டு இருக்கும்.

 

அவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஒரு சமயம் தேளைக் கண்டு பயந்திருந்தார்கள் என்றால் அந்த நினைவுகள் அடிக்கடி வரப்போகும் போது இந்த உணர்வுகள் எப்படி வருகிறது என்று காட்டுகின்றார் குருநாதர்.

 

இந்த இயற்கையின் சில நியதிகள் மனிதனுக்குள் எப்படி மாற்றங்கள் உருவாக்குகிறது என்ற வகையில் தெளிவாக்கிக் கொண்டே வருகிறார்.