“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

“இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் உடல் இச்சைகளுக்காகத் தியானித்தால் நமக்கு வளர்ச்சி இருக்காது

 

எனக்கு இடைஞ்சல் செய்கின்றான் பாவி…! இப்படிச் செய்தால் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று நமக்கு ஆகாதவனைப் பற்றி நாம் பேசுகின்றோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் அந்த உணர்வின் தன்மையையே எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால் இடைஞ்சல் செய்தவனின் எண்ணமே நமக்குள் தோன்றுகின்றது. அதன் அணுக்களே நமக்குள் பெருகுகின்றது.

பின் அதற்கப்புறம் ஒன்றும் சொல்ல வேண்டாம். உடலில் அது நோயாக மாறி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி பகைமையை உருவாக்கும் அணுக்களாக விளைய வைத்த பின் உடலை விட்டுச் சென்ற பின் எங்கே போவோம்…?
1.அவர் முன்னாடி இறந்தார் என்றால் அவர் ஆன்மா இங்கே வந்து விடும்.
2.நாம் முதலில் இறந்தால் அவருக்குள் செல்வோம்.
3.இதே உணர்வை அந்த உடலிலும் விளைய வைத்து அந்த உடலையும் வீழ்த்தும்.

அவர்களும் அதேபோல தன் நினைவு கொண்டு மற்றவர்களை எண்ணுவார்கள். அந்த ஆன்மா வேறொரு உடலுக்குள் போகும்.

ஆனால் இந்த உடலை விட்டு வெளி வந்த ஆன்மாவோ நஞ்சு கலந்த உணர்வின் அணுக்கள் எதுவோ இந்த உயிருடன் ஒன்றிய கருவின் ஆன்மாவாக மாறுகின்றது.

அடுத்து உயிராத்மாவில் சேர்ந்த மணம் எதுவோ தேளோ பாம்போ விஷமான ஜெந்துக்களோ அத்தகைய உடலுக்குள் தான் போவோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

புழுவிலிருந்து பாம்பாக தேளாக மற்ற எத்தனையோ விஷ ஜந்துகளாகப் படிப்படியாக உருவாகித் தான் இன்று நாம் மனிதனானோம்.
1.மனிதனான பின் மீண்டும் விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டுமா…?
2.சற்று சிந்தியுங்கள்.

ஆகவே உடல் இச்சைகளுக்கு எண்ணி “இது தான் நடக்க வேண்டும்…!” என்ற குறிக்கோளுடன் வந்தால் மீண்டும் சாதாரண வாழ்க்கையில் இருப்பது போன்று அந்த உணர்வுகளை வளர்த்துக் கீழே தான் போவோம்.

1.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் மக்கள் மத்தியில் வந்து
2.தோல்வியைக் கண்டு வெறுப்படைந்துதான்
3.இத்தகைய (மனித) ஆன்மாக்களின் மீது பற்று இருந்தால் நம்மையும் இது இழுத்துக் கொண்டு போய்விடும் என்று
4.அவ்வாறு விலகிச் சென்ற ஞானிகள் ஏராளம்.

தீமையை அகற்றிடும் உணர்வை விளையச் செய்து அனைவரையும் ஞானியாக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் அந்த ஞானிகளுக்கு வரப்படும் போது தான் தகுந்த உபாயத்தைக் கொடுக்கின்றனர்.

அவருக்குள் உருபெற்ற இந்த நிலையை அவர் வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்வை நுகர்வோருக்கெல்லாம் அது கிடைக்கின்றது. ஆனாலும் உடல் இச்சையுடன் இந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்தால் அது எங்கே கொண்டு செல்கின்றது…?

1.உடல் மீது பற்றின் தன்மை வரப்படும் போது விண்ணின் ஆற்றலை மறக்கச் செய்கின்றது.
2.பின் நாம் எங்கே போகின்றோம்…? கீழே தான் போகின்றோம்…!
3.அப்பறம் தியானத்திற்கு வந்தால் என்ன ஆகும்….?

சிலர் நீங்கள் தியானத்தில் என்ன பார்த்தீர்கள்…? என்ன பார்த்தீர்கள்…! என்று இப்படித் தான் மற்றவர்களைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில்தான் இவர் நடக்கிறார்.
1.அப்படி இருந்தும் இப்படித்தான் நடக்கின்றது… ஒன்றும் நல்லதாகவில்லை…! என்று இலேசாகத் தூண்டி விட்டால் போதும்…!
2.ஆமாம்…! என்று தலையாட்டி விட்டு… தான் பெற்றுக் கொண்டிருக்கும் நல்லதைக் கெடுக்கத்தான் உதவும்.
3.ஆக அவரும் பெற முடியாது… இவரும் பெற முடியாது…!

ஏனென்றால் நான் (ஞானகுரு) இவர்களிடமிருந்து ஏதோ சக்தி பெறுவதாகத் தான் அர்த்தமாகின்றது.

எல்லோரும் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்ற என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான் எனக்குள் அது உருபெருகின்றது. அந்த ஆசையைத் தான் நான் பெறுகின்றேன்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உபதேசத்தைத் தான் கொடுக்க முடியும்.

ஞானத்தின் தன்மை விளைந்த அந்த வித்தின் உணர்வுகள் சொல்லாக வரப்படும் போது சீதா. சூரியன் எடுத்து கொண்டால் உணர்வின் அலைகளாகப் படர்கின்றது.

அதை நினைவுக்குக் கொண்டு வந்து நீங்கள் எடுக்க எடுக்க அந்த உணர்வலைகள் உங்களுக்குள் சென்று
1.உங்களுக்குள்ளும் அருள் ஞானம் பெருகும்…
2.மெய் வழியில் செல்ல முடியும். பேரானந்த நிலை பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

 

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி…?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் வையுங்கள்…” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று மெதுவாகக் கண்களை மூடுங்கள்.

1.உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவனைத்தும் உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.மூக்கின் வழி செல்லாதபடி புருவத்தின் வழி காந்தத்தால் ஈர்த்து உங்களுக்குள் அந்த உயிர் உணர்வின் ஒளி அலைகளாக மாற்றும்.
3.இப்பொழுது அந்த ஈர்க்கும் சக்தி புருவ மத்திக்கே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிரிலே வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி…
1.துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் முழுமையான எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… ஆசைப்பட்டு அதை நுகருங்கள்.

இவ்வாறு இச்சைப்பட்டு நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் பிரம்மம் ஆனால் பிரம்மகுரு வசிஷ்டரின் மனைவி அருந்ததி…! அந்தச் சக்தியாக நமக்குள் நல்லதை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வையுங்கள். உயிருடன் ஒன்றிய உணர்வை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்தநாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுகர்ந்தது ஜீவ அணு… ஜீவான்மா…! “ஜீவான்மா…” என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் “இறந்த பின் அந்த ஆன்மா…” நம் உடலுக்குள் வந்தால் அது இரத்தத்தில் தான் இருக்கும்.

இரத்தத்தின் வழி உணர்வை எடுத்துத் தான் அந்த அணுக்களும் வளரும்.
1.உயிர் பாகம் செல்லும் பொழுது அதன் உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும்…
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகையினால் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் அந்த அருள் உணர்வுகள் பெற நாம் தியானிக்க வேண்டும்.

நண்பனை உற்றுப் பார்த்து அவரை நமக்குள் பதிவு செய்திருந்தால் இறக்கும் போது இறந்ததைப் பாசத்துடன் கண்களால் கவர்ந்திருந்தால் நம் இரத்தத்திற்குள் அது தேங்கி இருக்கும்.
ஆக… ஜீவான்மாக்கள் எதுவாக இருப்பினும் அந்த ஆன்மாக்களுக்கு மாற்றத் தெரியாது. அதனால் மாற்ற முடியாததை துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தத்தில் இருக்கும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஜீவான்மாக்களும்
2.ஒளியின் உணர்வாக மாறும் தகுதி பெறுகின்றது.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துச் சேர்த்து ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நம் கண்களால் செலுத்தப்படும் பொழுது நல்ல கருக்களாக இரத்தத்தில் உருவாகும்.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போன்று
2.இரத்த நாளங்களில் மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலக்கும்
3.மகிழ்ச்சியூட்டும் உணர்வாக உங்களுக்குள் வளரும்.

ஆனால் ஒரு சிலருக்குத் தீமை என்ற உணர்வு உடலில் இருந்தால் அது அடங்கும் பொழுது அதனால் கொஞ்சம் சோர்வடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் பித்த சுரப்பிகளில் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.“விஷத்தைத் தணித்திடும் அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்…”
2.நாகன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணர்வை எடுத்து வளர்த்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ
3.அது போல் நம் உடலில் உள்ள அணுக்களை ஒளியாக மாற்ற முடியும்.

விஷம் இல்லையேல் ஜீரணம் இல்லை…. ஆனால் விஷம் அளவுக்கு அதிகமானால் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளிலே செலுத்தப்படும் பொழுது அது சம அளவாகிச் சாந்தமான அணுக்களாக நல்ல ஜீரணமாக்கும் சக்தி பெறுகிறது.

இதே போல் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்.

நோய்களை நீக்க விஞ்ஞானிகள் மருந்தைத் தயார் செய்து அதை இரத்தத்தில் தான் கலக்கச் செய்கின்றனர்
1.ஆனால் நோயின் வீரியம் அதிகமாகி விட்டால்
2.நரம்புகளிலே… அந்த வாயு மண்டலங்களிலே அதாவது உடலை இயக்கக்கூடிய நரம்புகளுக்குள்ளேயே மருந்தினைப் பாய்ச்சி விடுவார்கள்.

அதே போன்றுதான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் கண்ணின் நினைவினை உறுப்புகளுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் ஒரு அற்புதமான உணர்ச்சிகள் வருவதை உணரலாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் உடலில் அற்புதங்களைச் செயல்படுத்தும்.
2.அந்த அற்புத உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் படர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை தணிந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்கள் விளைய இது உதவும்.

இப்பொழுது உங்கள் உடலிலே புது விதமான உணர்ச்சிகள் பரவும். உடல்களிலே வலியோ… எலும்புகளில் வலியோ… மூட்டுகளில் வலியோ… சிரசில் வலியோ குறையத் தொடங்கும்… வேதனைகள் நீங்கும்.

உடலி இருக்கக்கூடிய நரம்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரும் பொழுது அதிலிருக்கக்கூடிய குறைபாடுகள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும்.

1.அழுக்குகளை அகற்ற நந்நீரை விடுவது போன்று
2.கண்ணின் நினைவை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி
3.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுக்கும் ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

“பயிற்சி…” தியானம் மிக மிக முக்கியமானது

“பயிற்சி…” தியானம் மிக மிக முக்கியமானது

 

துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுவதற்குண்டான முறைகள் “எத்தனையோ கொடுத்துள்ளோம்…!” பழக்கத்திற்காக வேண்டித் தியானம் எடுக்கவும் சொன்னோம். ஆனால் ஒரு சிலர் “அது எங்களால் எடுக்க முடியவில்லை ஒன்றும் புரியவில்லை…!” என்று சொன்னார்கள்.

ஆகையினால் அந்தச் சக்தி உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) மௌன விரதம் இருந்து கடும் தவமிருந்து கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நான் உங்களை எண்ணித் தியானிக்கின்றேன்.
1.அப்போது அடிக்கடி நீங்களும் தியானித்தால்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளவும்
3.தீமை என்ற உணர்வு உங்களுக்குள் பரவாது தடுக்கவும்… உங்களைக் காத்துக் கொள்ளவும் இந்தச் சக்தி பயன்படும்.

பெரிய “சாமி” என்ற நிலையில் என்னை நீங்கள் பார்க்கலாம். நான் வாக்குகளாகச் சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கலாம் அதன் மூலம் உங்கள் நோய்களும் நீங்கலாம்.. அல்லது கஷ்டங்களும் போகலாம்…!

அடுத்த கணம் அது வராது தடுக்கும் சக்தி “உங்களிடம் இல்லை…” என்றால்
1.என்னைப் பார்த்த பின்… அன்று ஒரு நாளோ அல்லது சில காலமோ வேண்டும் என்றால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம்.
2.அடுத்தடுத்து வரும் மற்ற உணர்வுகளை நுகர்ந்தால் அவைகளின் வலிமை கூடி
3.நான் கொடுத்த வாக்கும் உங்களுக்குள் செயலற்றதாக மாறிவிடும்.

சிறிது காலம் தான் அது இருக்கும். பின் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ நீங்கள் சந்திக்கின்றீர்கள். வெறுப்பு வேதனை சங்கடம் சஞ்சலம் வேதனை ஆத்திரம் பயம் இது போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எனது வாக்கு எத்தனை நேரம் நிற்கும்…?

சாமியிடம் போனேன்… சந்தோஷம் கிடைத்தது… எனக்கு நல்லதாக ஆனது…! சாமியிடம் சென்றேன்… என் தொழில் நன்றாக ஆனது…! என்று நீங்கள் எண்ணலாம்.
1.ஆனால் நான் கொடுத்த பயிற்சியை மேற்கொண்டு…
2.அதைக் கடைபிடிக்க வேண்டும் அல்லவா…!

சந்தர்ப்பங்கள் வரும் பொழுது தீமைகள் புகாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… இதை வலு சேர்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பழகிக் கொண்ட பின்… அடுத்தடுத்து உங்கள் வாழ்க்கையில் எது நன்மையோ அதைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் கூட்டினால் தீமைகள் புகாது தடுக்கலாம்… அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கலாம்.

சிந்தித்துச் செயல்படும் சக்தியும் பெறலாம்… அறியாது வரும் வேதனையோ கோபமோ சங்கடமோ அது எல்லாம் வராது தடுக்கவும் செய்யலாம்.

ஏனென்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு வெள்ளியும் எப்படி ஆவியாக மாறிப் பிரிந்து சென்று விடுகின்றதோ அது போன்று
1.தீய வினைகளை நீக்கிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.உங்கள் உடலுக்குள் நீங்கள் அதிகமாகப் பாய்ச்சிப் பழகிக் கொண்டால் தான்
3.தீமைகள் வராது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

வேதனை என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம் நல்ல அணுக்களில் பட்டு உறுப்புகளில் கடுமையான நோய்கள் வருகிறது.

அதை மாற்றிட துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தினால்
2.ஒரு இன்ஜெக்சன் செய்த மாதிரி இந்த உணர்வு சீக்கிரம் ஊடுருவி
3.நாளுக்கு நாள் அந்த அணுக்கள் வலுப்பெற உங்கள் உடலில் உள்ள நோய்களும் குறையும்.

உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்திற்குச் செல்லும். சிந்திக்கும் ஆற்றல் வரும்… உயர்ந்த பண்புகள் வரும்… கோபத்தைத் தவிர்க்கும்… ஆத்திரத்தைத் தவிர்க்கும்… வேதனையைத் தவிர்க்கும்… அருள் வழியில் உங்களால் வாழ முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை விட விட அழுக்குத் தண்ணீரும் சிறுகச் சிறுக நல்ல நீராக மாறுவது போல் நம்மை அறியாது சேர்ந்த தீமைகள் குறையத் தொடங்கும்.

எத்தகைய தீமைகளும் புகாதபடி நீங்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால்…
1.எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் உருவாக்கும்.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி வளர்க்கின்றோமோ அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கூறுங்கள்.

அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க உங்கள் வீடுகளில் அற்புதமான வாசனைகள் வரும்… மகிழ்ச்சியான உணர்வுகள் பெருகும். உற்சாகமும் வரும்…!

ஒவ்வொரு உயிரும் கடவுள்… உயிர் வீற்றிருக்கும் உடல் ஆலயம் என்ற நிலைகள் கொண்டு அதைத் தான் நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்.
1.அதன் வழி நீங்கள் வளர நல்ல உணர்வுகள் பெருக
2.உங்கள் மூச்சலைகள் காற்றிலே பரவ
3.காற்று மண்டலம் புனிதம் பெற
4.உலக மக்கள் நலமும் வளமும் பெற இது உதவும்.

27 நட்சத்திரங்கள் 27 விதமான உணர்வுகள் பரப்பப்படும் பொழுது மின்னலாகப் பாய்கிறது… தூசிகளாகப் படர்கிறது.

இதிலே ஏதாவது ஒரு நட்சத்திரம் அதிகமான நிலைகள் துருவத்தின் வழி கவரப்பட்டுப் பூமிக்குள் நுழைந்து விட்டால் காற்று அழுத்த மண்டலத்திலே துகள்கள் அதிகரிக்கின்றது.

அப்படி அதிகரிக்கப்படும் பொழுது மற்ற நட்சத்திரங்களின் தூசுகளுடன் கலந்தவுடன் எதிர்மறையாகிப் பெரும் சூறாவளியாக சுழல் காற்றாக வந்து விடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உருவானது. நாளுக்கு நாள் இது அதிகரிக்கும் போது அதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும். தப்புவதற்குத் தான் மிக மிக வலிமை மிக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

 

செடி கொடிகளுக்கு அதனுடைய வித்துக்களை நிலத்தில் ஊன்றிய பின் அது முளைத்து வருகின்றது. பின் வளர்ச்சியாகி… மீண்டும் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகிறது.

அந்த வித்துக்களைப் பரவச் செய்தால்… மீண்டும் அதனின் வித்துக்கள் நிலத்தில் பட்டால் அதே தாய்ச் செடியின் சத்தை நுகர்கின்றது… இப்படித்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.
1.செடி கொடிகளுக்குண்டான வித்துக்கள் போன்றது தான்
2.நம் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனும்.

கண்களால் ஒன்றை (அல்லது மற்ற மனிதர்களை) உற்றுப் பார்க்கப்படும் போது “கருவிழி ருக்மணியால்” அது பதிவாக்கப்படுகிறது.

யார் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவாக்கி அந்தந்த உணர்வுகளை நுகரப்படும் போது உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதும் போது உயிர் அதனின் உணர்ச்சிகளாக நம்மை இயக்கி நம்மை அறியச் செய்கிறது… அதனின் செயலாகவே நம்மை அது மாற்றுகிறது.

எந்தெந்தக் குணங்களை எடுத்தோமோ அது எல்லாம் நம் எலும்புக்குள் ஊனாக மாறுகின்றது.

உதாரணமாக…
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை அதிகமாகப் பதிவாக்கியிருந்தால் அது வேதனைப்படும் ஊனாகிறது.
2.எலும்புக்குள் வேதனைப்படும் அணுக்களாகப் பெருகி நம்மை வேதனைப்படும் செயலுக்கே கொண்டு செல்கிறது.
3.நாளடைவில் அதுவே நோயாக மாறத் தொடங்குகிறது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா.

வேதனைப்படும் உணர்வைப் பதிவாக்கினால் அது ஊனாகி நம்மை வேதனைப்படும்படி செய்து நோயாக மாற்றுவது போல்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் எண்ணங்களைக் கண்ணுடன் இணைத்து
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து… உயிருடன் இணைத்து… ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி
4.அறியாது வந்த வேதனைகளையும் தீமைகளையும் நீக்கிடும் சக்திகளைப் பெறச் செய்வதுவது தான்
5.நம் குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் நோக்கம்.

அதன் வழியில் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வெளி வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் பேரருளை நீங்கள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் உடலிலே பரப்பச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீய அணுக்களை மாற்றி உயிரைப் போல உணர்வின் தன்மை என்றுமே ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ இதைப் போன்று நமது வாழ்நாளில் நாமும் ஒளியின் சரீரம் பெற முடியும். மனிதனின் கடைசி நிலை பிறவியில்லா நிலை நிலை தான்

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒன்றாக்கி என்றும் ஒளியின் உடலாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தை ஒளியாக மாற்ற வேண்டும்.

பாம்பினம் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவுக்காக முழுமையாக விழுங்கினாலும்
1.அந்தந்த உடல்களில் உள்ள விஷத்தினைத் தனக்குள் வடிகட்டி
2.பல விதமான வர்ணங்கள் கொண்ட விஷத்தன்மைகளைத் பாம்பினம் தனக்குள் சேர்த்து நாகரத்தினமாக உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையிலே ஏற்கனவே சொன்னது போன்று வேதனை வெறுப்பு கோபம் பயம் ஆத்திரம் என்ற பல விதமான விஷத்தன்மைகளை நாம் நுகர்ந்தாலும்…
1.பல விதமான விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் உணர்வாகப் பெற்ற
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றோம்.
4.எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
5.இந்த உடலை விட்டுச் செல்லும் நிலை தான் கடைசி நிலை.

ஆகவே… பிறிதொன்றின் ஈர்ப்பிற்குள் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி உயிருடன் ஒன்றி ஒளியாகின்றோம்.

“இது எல்லாம் ஒவ்வொரு உயிரின் கடமைகள்…”

காரணம்… “இந்த உயிர் தான்…” தன்னைக் காக்கத் தன் உணர்வின் தன்மையைச் செயல்படுத்துகின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

மனிதனாக ஆன நிலையில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியாக அங்கங்களும் அதற்குத்தக்க உறுப்புகளையும் உருவாக்கியது இந்த உயிரே.

ஆகவே… தீமையிலிருந்து விடுபடச் செய்யும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் சேர்த்தோம் என்றால் மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து விடுபட்டு உயிரைப் போன்று உணர்வின் தன்மை ஒன்றி வாழும் திறன் பெற்று… “பிறவி இல்லை” என்ற நிலை அடையலாம்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

அகஸ்தியரையும் காணலாம்… ஈஸ்வரபட்டரையும் காணலாம்… துருவ நட்சத்திரத்தையும் காணலாம்… உங்களால் முடியும்…!

அகஸ்தியரையும் காணலாம்… ஈஸ்வரபட்டரையும் காணலாம்… துருவ நட்சத்திரத்தையும் காணலாம்… உங்களால் முடியும்…!

 

ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை… ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்… அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ… கேட்கின்றோமோ… அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை… ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்…
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்… பேரருளையும் பேரருளையும் பெற முடியும்…!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்… எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று… காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை… குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

தாய் கருவிலே நாம் பெற்ற உணர்வுக்கொப்ப மனிதனாக உருப்பெற்றாலும்
1.நமது வாழ்க்கையில் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வுகளைப் பதிவாக்கி
2.அதன் வழி உணர்வுகளை நுகர்ந்து அறியும் சக்தி பெற்ற நாம்
3.நமது வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்தோமோ எத்தனை பொருள்களை உற்றுப் பார்த்தோமோ
4.அவையெல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக நமது உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊன்களில் பதிவாகி விடுகின்றது.

எப்படி செல்ஃபோன்களில் பதிவாக்கி வைத்துக் கொண்ட பின் அதனின் இயக்கங்களை முழுமையாக நாம் இயக்க முடிகின்றதோ இதைப் போன்று எலும்புகளில் உள்ள செல்களில் இயக்கி எத்தனையோ கோடி உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்ளலாம்.

“பதிவான நிலைகளில்…” நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நினைவாற்றலே மீண்டும் வருகின்றது. அதன் வழி அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மைச் செயலாக்குகின்றது. அதிலே தீமைகளும் பதிவாகி இருக்கிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனை கோடி தீமையின் உணர்வுகள் நம் ஊன்களில் உண்டு. அதை இயக்க விடாது தடைப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளை
1.எல்லா உறுப்புகளிலும் படரச் செய்ய வேண்டும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்
3.எலும்புக்குள் இருக்கும் எல்லா ஊன்களிலும் அதைப் பரவ செய்ய வேண்டும்.

எப்படி விஞ்ஞான அறிவு கொண்டு இரத்தங்களில் இன்ஜெக்க்ஷன் மூலமாக மருந்தினைச் செலுத்தி உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மற்ற அணுக்களுக்கும் சேரும்படிச் செய்கிறார்களோ அதைப் போன்று தான்… துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் கவர்ந்து… இரத்த நாளங்களிலே கவரச் செய்து… உடல் முழுவதற்கும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் பழகி அந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் “நன்மை செய்தார்…!” என்று எண்ணும் பொழுது எங்கே இருந்தாலும் அது பாய்ந்து விக்கலாக மாறுகின்றது அதே தொடர்பில் இருவரையும் நல்லதாக அது இயக்குகின்றது.

ஆனால் பகைமையானால்… எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று வேக உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
1.உணவு உட்கொள்ளும் பொழுது அது இயக்க மறுத்து புரையும் ஓடுகிறது.
2.வாகனங்களிலோ அல்லது நடந்து செல்லப்படும் பொழுது விபத்தாகிறது.

மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் எப்படி செல்ஃபோன்களில் இயக்கி நாம் ஃபோனில் தொடர்பு கொள்கின்றோமோ அதே போல் அந்தப் பதிவுகள் இயக்கப்பட்டு அந்த மனிதனுக்கும் சரி… நமக்கும் சரி… அதே இயக்க நிலை ஆகி தொல்லைகளுக்கு ஆளாகின்றோம்.

நமக்கும் அந்த வெறுப்புகள் கூடும் போது பள்ளம் மேடு தெரியாதபடி இயக்கி நமக்கும் விபத்துகள் ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

அல்லது நாம் மற்ற வேலைகளைச் செய்தோம் என்றால் சிந்தனையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. அவர்களுக்கும் அதே போன்று சிந்தனை இல்லாத செயல்களாக இயக்கி விடுகின்றது…
1.விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகி விடுகின்றது.
2.இது எல்லாம் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்த முந்தைய பதிவுகள்.

இது போன்ற முந்தைய வினைகள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும்
1.நம் கண்ணின் பார்வை கொண்டு அந்த அழுத்தமான நிலைகளில் அதிகமாகச் செலுத்தச் செலுத்த
2.முந்தைய பாவ வினைகளோ தீய வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம வினைகளோ எது இருப்பினும்
3.அதை எல்லாம் சிறுகச் சிறுக நம்மால் குறைக்க முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் எப்படி அது குறைவாகின்றதோ இதே போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து முந்தைய (தீமையான) பதிவுகளைத் தூய்மையாக்குதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடல் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை இணைக்கக்கூடிய முயற்சிகளை நாம் செயல்படுத்துதல் வேண்டும்…!

நாளுக்கு நாள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் ஊன்களாக நமக்குள் உருவாக்க வேண்டும். அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சாதாரணமாகவே நாம் பெற முடியும்

 

காலையிலிருந்து இரவு வரையிலும் நல்லவர்களையும் பார்க்கின்றோம் அதே சமயத்தில் கெட்டவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

நல்லது கெட்டது என்று இந்த உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தங்களிலே கலந்து கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் இரத்தத்தில் உள்ள சில அணுக்கள் கெட்டதை ஏற்க முடியாமல் மறுக்கின்றது.
1.அந்த அணுக்கள் மறுக்கும் பொழுது நம் உடலில் சோர்வு வருகின்றது.
2.சோர்வு அதிகமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம்.
3.இந்த வேதனையின் உணர்வுகள் அடுத்து விஷமான அணுக்களாக உடலுக்குள் மாறுகின்றது.

சலிப்புப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ நாம் பார்த்து அவர்களுடைய உணர்வுகளை நுகர்ந்தால் நம் இரத்தங்களில் அத்தகைய அணுக்கள் நிச்சயம் வளரத்தான் செய்யும். அது வெளியே செல்வதில்லை.

நாளுக்கு நாள் இதிலே எது பெருகுகின்றதோ உடலில் அணுக்களாக மாற ஆரம்பித்து விடும்… நாளடைவில் நோயாக மாறிவிடும். இது எல்லாம் நம்மை அறியாமலே உடலுக்குள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

இதையெல்லாம் நாம் தூய்மைப்படுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் பெருகப் பெருக தீமை செய்யும் அணுக்களின் வலுவை அது குறைத்துவிடும்.

உதாரணமாக நாம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சந்தோசமான செய்தியை யாராவது நம்மிடம் வந்து சொன்னால் ஏற்க முடிகின்றதா…? வேதனை அதை ஏற்க விடுகின்றதா…! இல்லை.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக பெருக்கிக் கொண்ட பின்
1.தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி
2.தீமையான அணுக்கள் விளையாதபடி அதைத் தள்ளி விட்டு விடுகின்றது
3.தீமைகளை நுகர்வதற்கும் வழியில்லை… தீமை உள்ளே புகுவதற்கும் வழியில்லை.

அதற்கடுத்து நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்களுக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்… தெளிவான மனிதர்களாக அவர்கள் வரவேண்டும்… குடும்பத்தில் அனைவரும் பற்றுடன் பரிவுடன் அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இதைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க…
1.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகளாக மற்றவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும்
2.நமக்குள் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக மாற்றிக் கொள்கிறோம்… தீமைகள் சிறுத்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் பிறருடைய தீமைகள் நம் மீது மோதினாலும் அதை மாற்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தந்தக் குணங்களில் எல்லாம்
2.அதாவது வேதனை வெறுப்பு சலிப்பு கோபம் ஆத்திரம் சங்கடம் போன்ற குணங்களில் எல்லாம்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலந்து கொண்டே வருகின்றது.

இப்படி நாம் சாதாரண வாழ்க்கையின் நிலைகள் கொண்டே சக்தி வாய்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்க முடியும்.

அதற்குண்டான பக்குவ முறைகளைத் தான் உணர்த்திக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).

குரு கவர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவரப் பழக வேண்டும்

குரு கவர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவரப் பழக வேண்டும்

 

ஆயுள் மெம்பர்கள் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அருள் வழிகளை நமக்குக் காட்டினார்.
1.அவர் காட்டிய நெறிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்
2.அவருடன் ஒன்ற வேண்டும்.
3.அவருடைய ஒளி பட இருள் நீங்கும்
4.அருள் பெற நமக்குள் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறலாம்.

அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது என் (ஞானகுரு) நெற்றியைப் பார்க்கச் சொல்கின்றேன். அதிலிருந்து நமது குருநாதரின் அருளை நீங்கள் பெற முடியும்.
1.குருநாதர் எனக்கு இப்படித்தான் செயல்படுத்தினார்
2.அவர் நெற்றியைப் பார்க்கும் பொழுது அவர் கண்ட உண்மை எல்லாம் எனக்குத் தெரிய வந்தது… அதே போன்று நீங்களும் காண வேண்டும்.

குருநாதர் நமக்குக் காட்டியது துருவ நட்சத்திரம். அதிலிருந்து ஒளி அலைகள் இங்கே வருகின்றது. அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க வளர்க்க உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகப் பெருகப் பேரருள் என்ற நிலைகளில் இருளை நீக்க கூடிய சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்

ஆகவே புருவ மத்தியை எண்ணுங்கள். ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த உணர்வின் சக்தியை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் காட்டிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நான் நுகர்கின்றேன்
2.நுகர்ந்த உணர்வை நீங்கள் கவரக்கூடிய சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி என் புருவ மத்தியைப் பாருங்கள்.

என் உயிரான ஈசனை வேண்டி… குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் அருளும்… அவன் துருவனான அந்த அருள் உணர்வும்… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் ஏங்கும் போது அந்த உணர்வுகள் ஒளி அலைகள் இங்கே வந்து.. உங்கள் உடல்களில் உணர்ச்சிகள் பரவி அந்தப் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.