நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

Image

Good is blissful

நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் நாம் தவறு செய்யாமலேயே நாம் ரோட்டிலே செல்லப்படும் போது நம்மை அறியாமல் எத்தனையோ நிலைகள் ஏற்படுகின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே மகிழ்ச்சியாக நடந்து செல்கின்றோம். நாம் போவதற்கு முன்னாடி ஒரு சிறு பையன் அவன் வீட்டிற்குத் தேவையான எண்ணெயைப் (கண்ணாடி) பாட்டிலில் வாங்கியவன் அவன் எதிர்பாராது கை நழுவிக் கீழே போட்டு உடைத்து விடுகின்றான்.

அப்பொழுது அவனுடைய எண்ணம் என்ன ஆகின்றது…? இந்த பாட்டில் விழுந்து விட்டதே…! பணம் போய் விட்டது… எண்ணெயும் போய்விட்டது… பாட்டிலும் உடைந்து விட்டது…! என்று அவன் மனம் பதறுகின்றது.

வீட்டிற்குப் போனால் அம்மா என்ன சொல்வார்களோ…? என்ற இந்த அச்சத்தின் நிலைகள் ஓங்கி அதனால் வேதனையான எண்ணங்களைச் சுவாசிக்கும் போது இந்த உடைந்த பாட்டிலை அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றான்.

வீட்டிற்குப் போய் நடந்ததைச் சொன்னதும் அவனுக்கு ஏச்சு… அவனுக்குப் பேச்சு… உதை… அனைத்தும் வருகின்றது. ஆனால் இவனுடைய சந்தர்ப்பம் எதிர்பாராது விழுந்து பாட்டில் உடைந்து விட்டது.

தாய்க்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. சிரமப்பட்டோம்…! ஆனால் இப்படிச் செய்து விட்டானே…! என்று பொருளும் பணமும் போய்விட்டது என்ற வேகத்தின் துடிப்பு வருகின்றது.

இந்த வேகத்தின் துடிப்பு வரும் போது தான் எடுத்துக் கொண்ட காந்தத்தின் புலனின் சக்தி குறைகின்றது.
1.எத்தனையோ கோடி ஆண்டுகள் நாம் ஒவ்வொன்றிலிருந்தும் காத்துக் கொள்வதற்காக
2.நம் உடலின் தன்மை விஷமாக மாற்றி
3.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கச் செய்து மனிதனாக வந்ததுள்ளோம்.
4.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து
5.இந்த உணர்வுடன் கலந்து அந்தக் காந்தப்புலனின் ஆற்றலையும் பெருக்கி வந்த நிலையில்
6.அடுத்தவர்கள் செய்யும் தவறான செயல்களைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரம் அதிகமாகின்றது.
(ஏனென்றால் நம் எண்ணத்தில் கலந்த விஷத்தின் உணர்வு அவ்வாறு துரிதமாக இயக்குகின்றது)

தன் பையன் மேல் ஆத்திரமும் கோபமும் அதிகமானதும் அதைத் தாங்காத நிலை வரும் போது நற்குணங்களைச் சிந்திக்கும் செயல் இழந்து குழந்தை மேல் பாசமாக இருந்தாலும் அது சமயம் இவன் செய்கையைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இயக்கி ஆத்திரத்துடன் அவனைத் தாக்கும் எண்ணங்களே தோன்றுகின்றது.

குழந்தையோ தாயைக் கண்டவுடனே பயத்தாலே தன்னைத் தாக்க வருகின்றது என்று வெறுப்பின் உணர்வுகள் இங்கேயும் தோன்றுகின்றது இங்கேயும் அதை ஜீரணிக்கும் செயல் இழக்கின்றது. தாயின் உடலிலேயும் அதே நிலை ஆகின்றது.

ஆனால் அதே சமயம் முதலில் சொன்ன மாதிரி நான் என்னுடைய தொழிலின் நிமித்தமாக ரோட்டிலே நடந்து செல்கின்றேன். ஆனால் நடுரோட்டிலே இந்த உடைந்த பாட்டில் கூர்மையாகக் கிடைக்கின்றது.

நான் மகிழ்ச்சியோடு போனாலும் வேகமாகக் கால் வைக்கப்படும் போது அதைப் பார்த்து விடுகின்றேன். எதிர்பாராது உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் வருகின்றது.

“அறிவு கெட்டத்தனமாக… இப்படி ரோட்டிலே பாட்டிலைப் போட்டு உடைத்து விட்டுப் போயிருக்கின்றார்கள் பார்…!” என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனால் அந்த எண்ணத்தின் வேகம் வரும் போது நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நல்ல எண்ணத்துடன் தான் சென்றேன். ஆனால்
1.என் காலில் குத்தி இருந்தால் என்ன ஆகும்…? என்ற இந்தப் பயமும் அந்தப் பயத்தின் உணர்வாலே ஆத்திரம் தூண்டும் போது
2.நம்மை அறியாமலே அந்த வேகத்தின் துடிப்பு அதிகமாகி
3.முன் பின் யார் செய்தது என்று நாம் பார்க்கவில்லை என்றாலும்
4.ஆத்திரத்தின் உணர்வின் வேகங்கள் அதிகமாகக் கூடுகின்றது.

இப்படிக் கூடிய இந்த ஆத்திரம் கோபம் வேதனை என்ற உணர்வின் சத்துக்கள் உடலுக்குள் சேர்ந்த பின் அந்த உணர்வின் வேக நிலைகள் எனக்குள் கலக்கின்றது.

ஆனால் நமது கண் “இது கெட்டது…!” என்று தான் காட்டுகின்றது. ஆனால் அதை நீக்குவதற்கு நாம் என்ன செய்கின்றோம்…?

நாம் தப்பித்துக் கொண்டோம். முதலில் நாம் பார்க்காமல் இருந்தால் அது நம்மைக் குத்தியிருக்கும். குத்தியிருந்தால் மிகவும் வேதனைப்படுவோம்.

நமது கண்ணோ இது குத்திவிடும் என்று காட்டுகின்றது. ஆனால் அந்த உடைந்த கண்ணாடிப் பாட்டிலை அப்புறப்படுத்த நமக்கு மனம் வருகின்றதா…? இல்லை…!
1.உடைந்ததை அப்புறப்படுத்த நமக்கு மனம் வரவில்லை.
2.உடலுக்குள் சேர்ந்ததை (ஆத்திரம் கோபம் வேதனை) நாம் எப்போது அப்புறப்படுத்துவது…?
3.ஆக நம் உடலுக்குள் எதைச் சேர்த்துக் கொள்கின்றோம்…? சிந்தித்துப் பாருங்கள்.

நம் கண் அதைக் காட்டும் போது இந்தப் பாட்டிலை அப்புறப்படுத்த வேண்டும். பிறருக்குக் குத்தக் கூடாது. பிறருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற இந்த எண்ணத்தை ஏற்றுத் தீயதை நீக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

இதைத்தான் கம்சன் என்ற துஷ்டனை சம்ஹாரம் செய்யக் கண்ணன் சிறையிலே பிறந்தான் என்று வியாசகர் சொன்னது. அதாவது
1.ஒரு தீய பொருளை நம் கண் பார்த்தவுடனே
2.அதை அப்புறப்படுத்த எண்ணினால் அந்தத் தீயது நமக்குள் சேர்வதில்லை.

ஆனால் அப்புறப்படுத்தாதபடி இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற எண்ணங்கள் வரப்படும் போது நமக்குள் தீய சக்திகள் கூடி நாம் வெறுக்கும் நிலையும் ஆத்திரப்படும் நிலையும் தான் வருகின்றது… தீமைகளே நமக்குள் வளர்கின்றது.

அந்தத் தீமையான பொருளை அப்புறப்படுத்தாமல் அதற்கு மாறாக மற்றவர்களை ஏசும் நிலையும் தீமையைப் பார்த்து வேதனையான உணர்வுகளையும் தான் நாம் சுவாசித்து நம் நல்ல குணத்திற்குள் அதைக் கலந்து விடுகின்றோம்.

கண் தெரிந்த பின் இந்தக் கண்ணின் செயலாக்கத்தை எவ்வாறு நீ செயல்படுத்த வேண்டும்..? என்று இந்தப் பேருண்மையைத்தான் “கீதா உபதேசமாக…” வியாசக பகவான் அன்று மகாபாரதத்தில் காட்டியுள்ளார்.

காற்றிலே மிதந்து இருக்கும் நல் உணர்வின் சக்தியைப் புலனறிவான கண்களால் ஈர்த்து நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று உணர்த்தினார்.

1.நுண்ணிய அலைகளைத் தனக்குள் உணர்வாகச் சேர்த்து
2.தன் உடலுக்குள் அதை விளைய வைத்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி
3.பத்தாவது நிலையான ஒளியாக விண்ணிலே சென்றடைந்த அந்த மெய் ஞானிகளின் பால் நம் கண்ணின் நினைவைச் செலுத்க்தி
4.அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசித்து நமக்குள் சேர்த்து
5.நம் உடலுக்குள் வந்த தீய சக்தியினை விலக்கும்படி சொன்னார் வியாசக பகவான்.

ஆகவே வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் சத்து தான் நமக்கு உதவும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று நான் நன்மை செய்தேன்… ஆனால் பாவி எனக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று எண்ணினால் கடைசியில் எங்கே போவோம்…?

Image

Almighty destination

அன்று நான் நன்மை செய்தேன்… ஆனால் பாவி எனக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று எண்ணினால் கடைசியில் எங்கே போவோம்…?

 

உதாரணமாக நம் மனித வாழ்க்கையிலே நாம் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றோம். நண்பராகவும் பழகுகின்றோம். ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நல்லது செய்தார்…! என்று அவர் மீது மகிழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

அதே சமயம் வெறுப்பான எண்ணங்கள் தோன்றி விட்டால் நான் அன்று நன்மையைச் செய்தேன். ஆனால் எனக்கு இன்று தீங்கு செய்கின்றான் பார்…1 என்று
1.தான் செய்த நன்மையைத் தான் எண்ணுவார்களே தவிர
2.மற்றவர்கள் அவர்கள் செய்த நன்மையை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.

ஒருவருக்கு ஒருவர் தான் செய்ததை உயர்வாக எண்ணித் தன் கௌரவத்திற்காக அந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் கடும் சொற்களாலே ஒருவருக்கு ஒருவர் ஏசிக் கொள்கின்றார்கள்.

இந்த உணர்வுகள் இரண்டும் பேர் உடலுக்குள்ளும் பதிந்து விடுகின்றது. பதிந்த பின் என்ன செய்கின்றது…?
1.நான் அன்று நன்மை செய்தேன்… எனக்குத் தீங்கு செய்தான் பாவி…
2.அன்று நன்மை செய்தேன்…. இன்று தீங்கு செய்தான் பாவி…! என்று
3.இதையே தான் தியானிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.

நாம் கடும் உழைப்பு உழைத்திருப்போம். நாம் சுவைமிக்க ஆகாரங்களைப் புசித்திருப்போம். அந்த ஆகாரம் நம் வயிற்றில் தேங்கி இருக்கும்.

ஆனால் நண்பனிடத்தில் நட்பாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட மகிழ்ச்சி இழந்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்…! என்று வேதனயையும் துன்பத்தையும் ஆத்திரத்தையும் எண்ணித் திரும்பத் திரும்பச் சுவாசிக்கும் பொழுது “மூஷிகவாகனா…!”

நாம் சுவாசித்த அந்த உணர்வின் தன்மை நமக்கு வாகனமாக அமைந்து நம் உடலைச் சோர்வடையச் செய்கின்றது. அந்த உணர்வின் உமிழ் நீர் நம் ஆகாரத்தையும் நஞ்சாக மாற்றுகின்றது.

நாம் பாலிற்குள் விஷத்தைப் போட்டுச் சாப்பிட்டால் நம்மை எப்படி மயக்கம் அடையச் செய்கின்றதோ இதைப் போல
1.ஆகாரத்திற்குள் இருக்கும் நல்ல சத்தையே நஞ்சாக்கும் தன்மையாக
2.அதி வீரியமான தன்மை கொண்டு நம் உடலிற்குள் இருக்கும் “இரத்தத்தையும்…” நஞ்சாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் பல நற்குணங்கள் பலவும் இருந்தாலும் வேதனையான உணர்வும் எரிச்சலான உணர்வும் கோபமான உணர்வும் கலந்து விட்டால் அந்த உணர்வின் சிந்தனையே மீண்டும் மீண்டும் வரும்.

பாலுக்குள் அது சுவைமிக்க பொருள்களைப் போட்டுப் பாதாமையும் போட்டிருந்தாலும் காரத்தைப் போட்டு விட்டாலோ அல்லது விஷத்தைப் போட்டு விட்டாலோ அது முன்னணியில் வந்துவிடுவது போல் நமக்குள் இந்தக் கடுகடுப்பான உணர்வு முன்னணியில் வந்துவிடும்.

அது வளர வளர எப்படி ஒரு விஷச் செடி பூமியிலே பட்டுவிட்டால் அது நீரின் சக்தியைக் காற்றில் இருந்து தனக்குள் எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கிறதோ அதைப் போல நமக்குள் விளையும் ஒவ்வொரு வித்தின் தன்மையும் விஷம் கொண்ட உணர்வாக வளரச் செய்து நம் உடலுக்குள் நோயாக உருவாக்கி விடுகின்றது.

1.ஆனால் நாம் அதைத் தான் தியானிப்போம்….
2.வேறு யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டோம்…!
3.எனக்கு இப்படித் தொல்லையைச் செய்தான்… தொல்லையைச் செய்தான்… எனக்கு இம்சை கொடுத்தான்… என்ற எண்ணத்தையே நாம் சதா சுவாசிக்க நேருகின்றது.

இந்த அளவுக்கு வெறுப்பான எண்ணங்களை எடுத்த பிற்பாடு ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அதிலே “தரம் பார்க்கச் சொன்னால்… நாம் வெறுப்புடன் பார்த்து ஊ… ம்…! எங்காவது கொண்டு போய்ப் போடு…! என்போம்.

நல்ல பொருளை நாம் காண்பதே கடினமாகும். எதைப் பார்த்தாலும் வெறுக்கும் நிலை தான் வரும். நமக்குள் இந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் இந்த உடலை விட்டு உயிராத்மா சென்ற பின் நமக்கு குடி இருக்கும் இடம் எதுவாகும்…?

எந்த நண்பன்பால் நாம் இந்த வெறுப்பை எடுத்துக் கொண்டமோ… யாரால் பல தொல்லைகள் வந்தது என்று சிந்தித்துத் திரும்பத் திரும்பத் தியானித்தோமோ… அந்த உடலுக்குள் புகுந்து இதே விஷத்தின் தன்மை கொண்ட தீயதை விளைய வைத்து அங்கேயும் நோயைத்தான் உருவாக்க முடியும்.

ஏனென்றால் பொதுவாக யாராக இருந்தாலும் சரி…! நான் எல்லோருக்கும் நன்மைதான் செய்தேன்… ஆனால் எனக்கு யாரும் நன்மை செய்யவில்லை என்ற இந்தப் பாட்டைத் தான் பாடுவோம்.
1,அப்படிப்பட்ட நிலைகளில் நம் எண்ணம் இருக்குமானால் அதனின் முடிவு கடும் வேதனையாகி
2.நோயைத்தான் தனக்குள்ளும் அடுத்த உடலுக்குள்ளும் உருவாக்க முடியும்.

ஆகவே நம் வாழ்க்கையின் எல்லை எது…? என்றும் இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்,

“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

Image

sages-station

“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

கண்ணன் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று அன்று ஞானிகள் காட்டினார்கள். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்தத் துன்பத்தை நீக்க
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரை வேண்டி
2.மனித வாழ்க்கையிலே துன்பத்தை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற நினைவை
4.நம் கண்ணான ஆன்டெனாவிற்கும் கண்ணனாக உபதேசித்த நம் கண்ணிற்குள்ளும் அதைச் செலுத்தி
5.விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளிலும் படர வேண்டும் என்று ஏங்கிடல் வேண்டும்.

எப்படி…?

சாதாரணமாக ரேடியோவோ டி.வி.யோ பார்க்க வேண்டும் என்றால் ஆன்டெனா என்று ஒரு சாதனத்தை அதனுடன் இணைத்து வெளியிலே வைத்திருப்பார்கள். அந்த ஆன்டெனாவிற்குள் காந்தத்தை பரப்பச் செய்திருப்பார்கள்.

வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகளை இந்த ஆன்டெனா கவர்ந்து டி.வி.க்குள் மோதியவுடன் அந்தந்த அலை வரிசையின் உணர்வுகளைப் படமாகக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் எண்ண அலைகளைக் கண்ணான ஆன்டெனா மூலமாக விண்ணிலே பாய்ச்சச் செய்கின்றோம்.

எதை எண்ணி ஏங்குகின்றமோ அந்த உணர்வின் அலைகளை இந்தக் காற்றிலிருந்து கவர்ந்து நேரடியாக நம் உடலுக்குள் சென்று அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பி அந்த உணர்வின் நிலையை நமக்குள் செயலாக்கும்.

மனித வாழ்க்கையில் வரும் வேதனைகளையும் இன்னல்களையும் தடுக்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
1.எல்லோருடைய நினைவையும் கூட்டி
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏக காலத்தில் ஏங்கும் பொழுது
3.உங்கள் அனைவருக்கும் அந்த நேரடித் தொடர்பு கிடைக்கின்றது.

அதாவது தீமையை நீக்கி மெய் ஒளி பெறும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்தும் போது
1.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மைக்கும் அது உபதேசிக்கப்பட்டு
2.மெய் உணர்வின் வழியில் அதன் உணர்வுகள் நமக்குள் செயலாக்கத்திற்கு வரும்.
3.என்றுமே அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் அலைகளை துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வதற்கே இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…?

Image

Magnetic power of human body

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…? 

உதாரணமாக பெரும் கொண்ட மிளகாயைப் பார்க்கலாம். ஆனால் “செக்கச்செவேல்…!” என்று இருக்கும். அதற்குள் விஷத்தின் தன்மை கம்மியாக இருக்கும். ஆனால் அந்த மிளகாயில் காரம் இருக்காது.

அதே சமயம் இன்னொரு மிளகாயை எடுத்துக் கொண்டால் வாயில் வைத்தவுடனே “சுரீர்…!” என்று காரம் உடல் முழுவதற்கும் ஊடுருவும். ஆனால் அதில் விஷம் அதிகமாக இருக்கும்.
1.விஷம் அதிகமாக இருப்பதால் அந்த மணத்தை வேகமாகத் தூக்கிச் சென்று
2.அதை இயக்கவல்ல ஆற்றலாகச் செயல்படுத்துகின்றது.

இதைப்போல தான் ஒவ்வொன்றிலேயும் இருக்கும் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப அதனின் ஆற்றலை நாம் காணலாம்.

சாந்த குணத்தை எண்ணுகின்றோம் என்றால் அதில் விஷம் கம்மி. நாம் கோபமான நிலைகளை எண்ணினால் அதிலே விஷத்தின் ஆற்றல் அதிகம். பயத்தின் நிலைகள் அதிகமாக எடுக்கின்றோம். அதிலும் விஷம் ஜாஸ்தி.

அதை அதிகமாக எண்ணிச் சுவாசிக்கும் போது இந்த விஷத்தின் தன்மை நம் உடலை வேகமாக இயக்கச் செய்து நம்மை ஆபத்தில் இருந்து நம்மை காக்கவும் செய்கின்றது. ஆனால்
1.ஆபத்திலிருந்து காத்தாலும் நம் உடலின் சக்தியை அதிகமாக இயக்கப் போகும் போது
2.நாம் எடுக்கும் இந்தக் குணத்தை ஈர்க்கும் நிலைகள்
3.நம் உடலில் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி அது பலவீனமடைகின்றது.

உதாரணமாக ஒரு மோட்டாரில் மேக்னட் இருக்கின்றது. மோட்டார் சுழன்று ஒரு ரைஸ் மில்லிலே அது இயக்குகின்றது. நெல்லை அரைக்கும் பொழுது அதிலே நெல்லை அதிகமாகக் கொட்டி விட்டால் அரைக்கும் திறன் குறைந்து “மோட்டார் சூடாகிவிடுகின்றது…!”
1.ஆக அது சூடாகும் போது அதில் (WINDING) இருக்கக்கூடிய காந்த சக்தி குறைகின்றது.
2.இப்படி மோட்டாரில் இருக்கும் காந்தம் குறைந்து விட்டால்
3.அடுத்து சிறிதளவு நெல்லைப் போட்டாலும் அதனின் அரைக்கும் திறன் குறைகின்றது.
4.மோட்டார் வலு குறைந்துவிட்டது (WEAK) என்று சொல்கிறோம்.

இதைப்போல தான் விஷத்தை முறியடிக்கும் உணர்வின் சத்து நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக இருந்தாலும் அடிக்கடி நாம் எடுக்கும் கோபமும் வெறுப்பும் பயமும் வேதனையும் ஆத்திரமும் அதிகமாகி விட்டால் நமக்குள் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி குறைந்து விடுகின்றது.

அதனால் நாம் சுவாசிக்கும் உணர்விற்குள் வரும் விஷத்தின் சத்தை வடிக்கும் திறன் இழக்கப்பட்டு நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் கோபம் பயம் வேதனை என்ற குணங்களின் “விஷம்” கலந்து விடுகின்றது.

சத்தான பாலாக நாம் குடித்தாலும் சத்தான சுவையான ஆகாரம் என்று சாப்பிட்டாலும் அதற்குள் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அந்த விஷம் அதிகமாகி அது உட்கொள்பவரை மாய்த்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணம் அனைத்தும் காந்தப்புலனின் தன்மை குறைக்கப்படும் போது இந்த விஷத்தை நீக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நாம் சுவாசித்த உணர்வுக்குள் வரும் விஷத்தைக் கழிக்க முடியாததால் நம்மை மனிதனாக இயக்கச் செய்யும் அறிந்துணர்ந்து செயல்படும் நற்குணங்களின் ஆற்றல் அனைத்தும் குறைந்து விடுகின்றது.

ஆரம்ப நிலைகளிலே மிருகங்கள் எப்படி விஷத்தின் தன்மையைத் தன் உடலாக மாற்றிக் கொண்டதோ அதைப் போன்றே நல்ல குணங்கள் அனைத்திற்குள்ளும் விஷம் புகுந்து அதிலே ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இப்படித்தான் நம் நல்ல குணங்கள் பாழாகின்றது. நல்ல குணங்களால் உருவான நல்ல உடலிலும் நோயாகின்றது. பின் குறுகிய காலத்திலேயே மடிந்து பின் மனிதனல்லாத உடலுக்குள் தான் சென்று பிறக்க நேரும்.

இதைப் போன்ற நிலைகளைத் தடுப்பதற்காகத் தான்
1.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று
2.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிய
3.அந்த மகா ஞானிகளின் உணர்வை உங்களைப் பெறச் செய்கின்றோம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டே வந்தால் நம் நல்ல குணங்களுக்கு அது ஊட்டச் சக்தியாகி விஷத்தைக் கழிக்கும் வீரிய சக்தியாகப் பெறுகின்றது.

அதாவது நாம் சுவாசித்த கோபம் பயம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களை இயக்கும்
1.விஷத்தின் சக்தியை நாம் அடக்குகின்றோம்.
2.அடக்கி நல்ல குணங்களை இயக்கும் வீரிய சக்தியாக மாற்றுகின்றோம். அவ்வளவு தான்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷம் வந்தாலும் அதை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையில் உள்ளது.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

எவ்வளவு வேகமாக நீர் விழுந்தாலும் எதிர் நீச்சலாகி மேலே செல்லும் மீன்களைப் போல் வாழ்க்கையில் மோதும் தீமைகளிலிருந்து எதிர் நீச்சலாகி விண்ணுக்குச் செல்ல முடியும் – “அப்படிச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்…!”

Image

Upstream spiritual jump

எவ்வளவு வேகமாக நீர் விழுந்தாலும் எதிர் நீச்சலாகி மேலே செல்லும் மீன்களைப் போல் வாழ்க்கையில் மோதும் தீமைகளிலிருந்து எதிர் நீச்சலாகி விண்ணுக்குச் செல்ல முடியும் – “அப்படிச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்…!”

 

நீருக்குள் நீந்திச் செல்லும் மீன் தனக்குள் ஓட்டத்தின் வேகம் அதிகமாகி அது தேய்ந்து குறையும் போது – அதற்குள் மின் உற்பத்தி அதிகமாகும். மின் உற்பத்தி அதிகமாக ஆனாலும் நீருக்குள் இருக்கும் காந்தப்புலனுடன் உராய்ந்து உராய்ந்து வேகமான நிலைகள் உராய்ந்தபின் மீனின் உடலுக்குள் இருக்கும் காந்தப் புலன்கள் அது குறைந்து விடுகின்றது.

அது மீண்டும் தனக்குள் அந்த உணர்வின் சத்தாகப் பெற வேண்டும் என்றால் மீண்டும் நீருக்கு வெளியிலே வந்து வெளியிலே இருக்கும் காந்தப் புலனைத் தனக்குள் சுவாசித்தே ஆகவேண்டும்.

ஆகவே வெளியில் வந்து சுவாசித்துக் காந்த சக்தியைத் தனக்குள் கூட்டிய பின் மீண்டும் நீருக்குள் சென்று அதில் இருக்கக் கூடிய காந்தப் புலனறிவிற்குள் உராய்ந்து கரண்டை உற்பத்தி செய்து “எதிர் நீச்சலாகின்றது…!”

அதாவது நீரின் ஓட்டம் எவ்வளவு வேகமான நிலைகள் வந்தாலும் அதில் எதிர் நீச்சலாகித் தான் வாழ தான் எதை எண்ணியதோ அதை அடைய அதனின் வேகத்தின் துரித நிலைகள் பெறுகின்றது.

செங்குத்தான இடங்களில் இருக்கும் நீர் வீழ்ச்சிகளில் பார்க்கலாம். மீன்கள் அந்த நீர் வீழ்ச்சியில் மேலே ஏற முடியவில்லை என்றால்
1.மீண்டும் வெளியிலே வந்து தனக்குத் தேவையான காந்தத்தைச் சுவாசித்துச் சென்று
2.உள்ளே சென்று செங்குத்தான நீரின் வேகத்தின் சுழலிலும் அந்தக் காந்தப்புலனில் உராய்ந்து
3.தான் மேலே செல்லும் ஆற்றலை அது பெறுகின்றது.
4.நீர் எவ்வளவு வேகமாக விழுந்தாலும் அந்த மீன் மேலே செல்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே நமக்குப் பல தீங்குகள் விளைவிக்கும் வேதனையோ சங்கடமோ வெறுப்போ துன்பமோ எத்தனை நிலைகள் வந்தாலும் அதனை எதிர்த்து எதிர் நீச்சலாகி நாம் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும்.

ஏனென்றால் நம் புலனின் (ஐம்புலனறிவு) ஆற்றல் சாதாரண மனிதர்கள் பால் நாம் எண்ணத்தைச் செலுத்தும்போது இது நமக்குள் ஊடுருவி இந்தப் புவியின் ஈர்ப்பிற்குள்ளேயே நம்மைச் சிக்க வைத்து விடுகின்றது.

அத்தகைய உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றி விண் சென்ற ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் விண்ணிலேயும் மிதந்து கொண்டு இருக்கின்றது. நமக்கு முன்னாடியும் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த அருள் வித்தின் தன்மையை நம் உடலுக்குள் புகுத்தச் செய்யும் இந்தச் சந்தர்ப்ப நிகழ்ச்சி தான் இந்த மெய் ஞான உபதேசம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த ஞானியின் அருள் சத்தை நாம் பெற்றுப் பழக வேண்டும்.

அவ்வாறு பெற்றோம் என்றால்
1.எப்படி மீன்கள் செங்குத்தான நீர் வீழ்ச்சியிலும் அது எதிர் நீச்சல் ஆகின்றதோ
2.இதைப் போல மனிதர்களாக வெளியிடப்பட்ட மூச்சின் எண்ண அலைகள்
3.இந்தப் பூமியிலே வேதனை சங்கடம் சலிப்பு துயரம் துர்மரணங்கள் தீவிரவாதம் வன்முறைகள் இதைப் போன்று எத்தனையோ கொடிய உணர்வின் அலைகளாக வீசிக் கொண்டிருந்தாலும்
4.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு சக்தியைக் கூட்டி நாம் இதையே சாதகப்படுத்தி
5,நம் உடலைச் சுத்தப்படுத்தி நம் உணர்வுகளைச் சுத்தப்படுத்தி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற ஒளி நிலையை அடையலாம்.

அந்த நிலையை அடைவதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்…!

என் மனைவி மூலமாகத் தான் பழனியில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் பற்றிய உண்மைகளை அறியும் சந்தர்ப்பம் எனக்கு உருவானது…!

Image

Saami saami amma

என் மனைவி மூலமாகத் தான் பழனியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் பற்றிய உண்மைகளை…!” அறியும் சந்தர்ப்பம் எனக்கு உருவானது…!

இயற்கையின் நிலைகளிலே இந்தியாவில் தோன்றிய மெய் ஞானியான அகஸ்தியன் தான் மெய் உணர்வுகளை இந்த உலகிற்கே உணர்த்தியவன்.

1.ஒரு சூட்சம சக்தி அது உறைந்து திடமாகும் போது “சிவம்” என்றும்
2.அந்தச் சிவத்திற்குள் இயக்கச் சக்தியின் உணர்வை “சக்தி” என்றும்
3.இரண்டும் சேர்ந்து சிவசக்தியாக இயங்குகிறது என்றும்
4.சிவமில்லை என்றால் சக்தி இல்லை… சக்தி இல்லை என்றால் சிவமில்லை…! என்றும் ஆதியிலே கண்டுணர்ந்தான்.

சக்தியின் தன்மை ஓர் திடப்பொருளாக ஆனபின் தான் அது உருவத்தின் தன்மை அடைகின்றது. தன் உணர்வுடன் அணைத்துக் கொள்கின்றது… உணர்வின் சத்திற்கொப்ப அது இயங்குகின்றது… என்ற நிலையை அன்று அகஸ்தியன் தெளிவுற எடுத்துரைத்த உணர்வுகள் தான் பின் வந்த ஞானிகளால் காவியப் படைப்பாகப் படைக்கப்பட்டது.

ஆனால் அரசர்கள் இதை மதங்களாக மாற்றி மதத்தின் அடிப்படையில் சாங்கிய சாஸ்திரங்களாக உருவாக்கித் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு நிலையிலேயும் மாற்றியமைக்கப்பட்டதால் நாம் ஞானிகளின் உண்மைகளை உணர முடியாத நிலையாகி விட்டது.

ஞானிகள் கொடுத்த நிலைகள் அரசர்கள் கையிலே சிக்கப்பட்டதால் அதை அவர்கள் தன்னுடைய சுகபோகத்திற்காக மறைத்து விட்டனர். காலத்தால் அது மறைந்து போய்விட்டது. நாம் யாரும் அதை அறிந்துணர்ந்து அதன் வழிகளிலே செல்ல முடியாத நிலைகள் ஆகிவிட்டது.

என்னுடைய (ஞானகுரு) சந்தர்ப்பம் நான் படிப்பு அறிவே இல்லாதவன். நானும் ஒரு மூடன் தான். நிர்மூடத்தனமாக எதையும் செய்வேன்… எதையும் பேசுவேன்… என்ற இந்த நிலை பெற்றவன் தான்.

இருந்தாலும் என் மனைவி நோயாக இருக்கப்படும் போது மெய் ஞானியான ஈஸ்வராய குருதேவரை நேரடியாக அணுகும் சந்தர்ப்பம் அமைந்தது. ஆனால் அவரை நான் பித்தராகத்தான் பழனியிலே சந்தித்தேன்.
1.அவரைப் பித்தன் என்றே நான் வெகு காலம் பார்த்திருந்தாலும்
2.பித்தனுக்குள் மறைந்து உள்ள ஆற்றல் மிக்க சக்தியை
3.நான் பின்னாடி தான் அறிந்து கொள்ள முடிந்தது.

என் மனைவிக்கு வாத நோய் எப்படி வந்தது…! என்றும் அதை நீக்குவதற்காக குருநாதர் தன் வாக்கைக் கொடுத்த்து வெறும் விபூதியால் என் மனைவியை எழுப்பினார் என்று அறிந்து கொண்ட பின் தான்
1.அவர் பித்தனல்ல…
2.அவர் பெரிய மகான்…! என்று நான் எண்ண வேண்டிய நிலை வந்தது.

என் மனைவி ஒரு மாதத்தில் பூரண குணம் அடைந்த பின் அவர் சொன்ன நிலைகளைப் பின்பற்றினேன். மனைவிக்கு நோய் எப்படி வந்தது…? மனைவியின் உணர்வுகள் எதனால் மாறியது…? மனைவியினுடைய சுய நினைவுகள் கெட்டது எப்படி…? அதை எப்படி மாற்ற வேண்டும்…?

அதே சமயத்தில் இதைப் போன்ற நிலை
1.ஒவ்வொரு மக்களுக்கும் நோய்களும் துன்பங்களும் அது எவ்வாறு ஏற்படுகின்றது…?
2.தவறே இல்லாத நிலைகள் இருந்தாலும் தவறுகள் எப்படி ஏற்படுகின்றது…?
3.அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்ற அந்த உண்மைகளை எல்லாம்
4.சுமார் 12 வருட காலம் காடு மேடெல்லாம் என்னை இந்தியா முழுவதும் சுற்றச் செய்து அனுபவபூர்வமாக உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். நீ எந்த அளவுக்குத் தெளிவுபடுத்தி மனிதனாக உடல் பெற்று வந்தாயோ இதற்கு அடுத்த நிலையாக உன் வாழ்க்கையில் வந்த விஷத்தை நீக்க
1.மெய் ஞானிகளின் அருள் வழியில் நீ செல்.
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நீ உனக்குள் வளர்த்துக் கொள்.
3.இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த மெய் ஞானத்தில் வளர வேண்டும் என்று நீ எண்ணு.

நீ இதை எண்ணி எண்ணி வளர்த்து வந்தால் அந்த உணர்வின் தன்மையே உனக்குள் வளரும். நீயும் மெய் ஞானியாக ஆவாய். கீதையிலே கண்ணன் சொன்னது போல் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்…! என்று குருநாதர் சொன்னார்.

எனக்கு எப்படி குருநாதர் மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பம் என் மனைவியால் கிடைத்ததோ அதே போல் நீங்கள் துன்பம் என்று இங்கே வரும் பொழுது அதை நீக்க மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இந்த உபதேசத்தின் வாயிலாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்களும் மெய் ஞானியாக ஆகலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

கண்ணன் புல்லாங்குழலை வாசித்து மாடுகளை மேய்க்கின்றான்…! நம் கண்களின் (கண்ணனின்) செயல் என்ன…?

Image

Kannan flute and cow

கண்ணன் புல்லாங்குழலை வாசித்து மாடுகளை மேய்க்கின்றான்…! நம் கண்களின் (கண்ணனின்) செயல் என்ன…?

 

தொடர்ந்து ஒருவன் எனக்குப் பல விதமான இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கின்றான். ஆகவே அவனை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். அந்த எண்ணத்தின் வலிமை கொண்டு என் பார்வையிலே வருகின்றது.

அப்பொழுது கண்ணன் (நம் கண்கள்) என்ன செய்கின்றான்…? நமக்கு இடைஞ்சல் செய்தவனைக் கண்டவுடனே….
1.இங்கே இந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருக்கின்றான்…!
2.அவனை உதைக்க வேண்டும் என்று வழி காட்டுகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று கீதையில் கண்ணன் உபதேசிக்கின்றான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அப்போது உதைக்க வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனை அழித்து விடுகிறேன்.

ஆனால் அவனை அழித்தாலும் அந்த அழித்து விடும் உணர்வின் தன்மை என் உடலுக்குள் வந்து என் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அவனை உதைக்கும் பொழுது அவன் வேதனைப்படுவதைக் கண்டு எப்படி நான் ரசித்தேனோ அதைப் போல
1.என் உடலுக்குள் வரும் அவனின் வேதனையான உணர்வுகள்
2.என் நல்ல குணங்களை எல்லாம் ரசித்துச் சாப்பிடும்.

அடுத்தாற்போல் நோய்வாய்ப்பட்டு ஐய்யய்யோ… அம்மம்மா… இடுப்பு வலிக்கிறதே…! என்ற நிலைகள் வந்து விடுகிறது. ஆகவே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய். இதை யார் சொல்வது…? கண்ணன். நம் கண்கள் தான்…!

கண்கள் நமக்கு என்னவெல்லாம் செய்கிறது…?

ரோட்டிலே நாம் நடந்து போகும் போது இது மேடு.. இது பள்ளம்…! இங்கே ஒருவன் தவறு செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் தவறுகள் இல்லாத இடம் அங்கே இருக்கின்றது. இந்தப் பக்கம் ஒரு மாடு மிரண்டு வருகின்றது. அதிலிருந்து நீ ஒதுங்கி நில்…! என்று இப்படி உபதேசம் செய்து கொண்டே இருக்கின்றது.

ஆக நமது கண்கள் நல்லது… கெட்டது…! என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கைக்கு வழிகாட்டி உபதேசித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

அதன் வழியில் நுகர்ந்தறியும்போது அந்த உணர்வின் தன்மை உயிருடன் இணைக்கப்பட்டு
1.“ஒளியின் நாதமாக…!” மாறுகின்றது.
2.அதனால் தான் “கண்ணன் புல்லாங்குழல் வாசித்து… மாட்டை மேய்க்கின்றான்…!” என்று ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

இதிலே கண்கள் என்பது கண்ணன் (ஒளி). புல்லாங்குழல் என்பது கவர்ந்த உணர்வின் ஒலி (நாதம்). மாடு என்பது உடல் (உடலை இயக்கி மேய்க்கின்றான்).

அதாவது கண்கள் நாம் பார்க்கும் உணர்வின் தன்மையைக் கவர்ந்து சுவாசிக்கச் செய்து
1.உயிரிலே படும்போது அந்தந்த உணர்வின் அலைகளாக நாதங்களாக இயக்கி நமக்கு உணர்த்துகின்றது (ஒன்றைப் பார்த்ததும் நமக்குள் எத்தனை விதமான எண்ணங்கள் ஓடுகிறது…!)
2.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு தான் இந்த உடலை இயக்குகின்றது என்ற இந்த நிலையெல்லாம்
3.அணுவின் இயக்கத்தின் அறிந்துணர்ந்த இந்தியாவில் தோன்றிய ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகள்.

மிருக நிலையிலிருந்து எப்படி நீ மனிதனாக ஆனாய்…? மனிதனான பின் நீ நல்லது எண்ணுகின்றாய். ஆனால் உன்னை அறியாது வரக்கூடிய வேதனையான உணர்வுகளை எப்படி நீக்க வேண்டும்…? என்று தான் அந்த ஞானிகளால் கொடுக்கப்ப்ட காவியங்களில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை அதே கண்களின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலேயும் எண்ணி எடுத்துக் கொண்டால் உடலுக்குள் இருக்கும் இருளை நீக்கி அந்த மெய் ஞானிகள் சென்ற இடத்தை நாம் சென்று நிச்சயம் அடையலாம்.

“அகஸ்தியரின் உணர்வு கொண்டு தான்… இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்…!”

Image

SAVE THE EARTH

“அகஸ்தியரின் உணர்வு கொண்டு தான்… இந்த உலகில் இனி நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்…!”

 

உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள். கோபிப்பது நீங்களா…? வேதனைப்படுவது நீங்களா…? இல்லை… சந்தப்பத்தால் நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறது.

கஷ்டமான நிலைகளோ வேதனையோ நுகரப்படும் போதெல்லாம் அது உள் புகுந்து தீமைகளைச் சேர்த்திடாது தீமைகளை உருவாக்கிடாது அருள் ஒளி என்ற உணர்வை நீங்கள் நுகர்ந்து தீமைகளை அகற்றி அல்லது தனக்குள் இணைந்த தீமைகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
1.அழுத்தமான எண்ணெய்ப் பிசுக்குகளை மண்ணெண்ணெய்யைக் (KEROSENE) கொண்டு தான் நீக்குகின்றோம்.
2.தண்ணீரைக் கொண்டு அதைக் கழுவ முடியாது.

இதை போல தான் அருள் ஞானி அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கலந்து அவன் கண்ட மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்று உங்கள் உடலுடன் ஒட்டிய தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு விஞ்ஞான அறிவு கொண்டு இன்னது இன்னது என்று சொல்லி முழுமையின் நிலைகளை ஊட்டுவது போன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையையும் அவன் தீமைகளை நீக்கிய மெய் உணர்வின் தன்மையையும் உங்களுக்குள் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே வருகின்றோம்.

உங்களுக்கு முன்னாடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. நஞ்சை ஒளியாக மாற்றி முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நாளை வரும் எதிர்காலத்தில் இந்தத் தியானத்தில் உள்ளோர் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அருகில் உள்ளோர்களுக்கும் இதைச் சொல்லி அவர்கள் உணர்வுகளிலும் பதிவாக்க வேண்டும். பின்
1.இந்தத் தியானத்தின் பொது விதிப்படி
2.நீங்கள் வெளியிட்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்களையும் நுகரச் செய்து
3.அவர்களுக்குள்ளும் தீமையை வென்றிடும் உணர்வுகளை வளரச் செய்வது நம் தலையாயக் கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏன்…? உயிரே கடவுள். நுகர்ந்ததை உடலாகச் சிவமாக உருவாக்குகின்றது உயிர். ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்ற நிலைகளில் ஒவ்வொருவரும் எண்ணி அங்கே பகைமை உணர்வு போகாதபடி உயர்ந்த ஞானத்தைச் சொல்லி அந்த உணர்வை அங்கே பதிவாக்கினால்
1.அந்த ஆலயத்தைப் பரிசுத்தமாக்க நம் உணர்வுகள் செயல்படும்.
2.அதே சமயத்தில் நாம் எண்ணும் இந்த உணர்வுகள் நமக்குள் தீமைகள் புகாது தடுக்க இது உதவும்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள்.

உலகம் முழுவதும் நடப்பதை நாம் இருந்த இடத்திலிருந்தே டி.வில் பார்ப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் மெய் உணர்வுகள் வளர்ச்சியாகி உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் பரவச் செய்து உண்மையின் இயக்கத்தை அறியும் நிலைகள் எல்லோருக்கும் வரும்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவரும் அருகிலுள்ளோர் ஒரு கூட்டமைப்பாக இருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை ஏங்கிப் பெறத் தியானிக்க வேண்டும்.
1.உலகில் படர்ந்துள்ள நச்சுத் தன்மை நீங்க வேண்டும்.
2.மக்கள் மத்தியில் இருளை அகற்றும் அருள் ஒளி பெற வேண்டும்.
3.உலக மக்கள் அனைவருக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
4.நாம் ஏகக்காலத்தில் ஏங்கிப் பெற்று இந்த உணர்வலைகள் ஏகோபித்த நிலையில் படரச் செய்யப்படும் போது
5.எந்தப் பகுதியில் இதைப் பெருக்குகின்றோமோ நாம் வாழும் அப்பகுதியில் எந்தத் தீமையும் வராது பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பூமியில் பரவியுள்ள அசுர உணர்வுகளை மாற்றிடவும் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளை மாற்றிடவும் பக்தி என்ற நிலையில் மதத்தால் உருவாக்கப்பட்ட வெறி கொண்ட தாக்கும் உணர்வுகளை மாற்றிடவும் ஒவ்வொருவருக்குள்ளும் பேரருள் என்ற உணர்வினை உருவாக்க வேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டுங்கள்.

அந்தச் சக்தி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உலக மக்கள் ஒவ்வொரு உடலை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அபிஷேகியுங்கள்.

இவ்வாறு அபிஷேகித்து உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு அமுதாகக் கொடுத்து அருள் உணர்வை வளர்க்கும் ஊட்டச் சக்தியாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

டாக்டர்கள் உடல் நலிந்தால் சத்துள்ள உணவை ஊட்டச் சத்தாக்கி உடலைப் பெருக்கச் செய்கின்றனர். அதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை ஊட்டச் சக்தியாகக் கொடுக்கின்றோம். உங்களை அறியாமலேயே அதைச் சேர்க்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் பூமியின் தன்மைகள் நீண்டு செல்லப்படும் போது அதன் உணர்வுகள் முட்டை வடிவாகி தலை கீழாகப் பிரளும் சந்தர்ப்பத்தில் அகஸ்தியன் அதனை மாற்றி அமைத்தான்.

அதனின் நிலைகள் தான் இன்று வரையிலும் இயங்கிக் கொண்டுள்ளது. ஆனாலும் இன்று விஞ்ஞான அறிவால் பூமியின் ஓசோன் திரை கிழிக்கப்பட்டு பல விஷத் தன்மைகள் இங்கே பரவிக் கொண்டிருக்கின்றது.

இதை நாம் மறுபடியும் சீரமைக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு தான் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்… ஏற்படுத்த முடியும்…!

கடவுளின் அவதாரத்தில் வராகன் எப்படிச் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்து மனிதனாக உருவாக்கியது போல் மனிதனான பின் இந்த நச்சுத் தன்மையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து
1.விஞ்ஞான அழிவிலிருந்து வரும் பேரழிவிலிருந்து மீள வேண்டும்.
2.இந்தப் பூமியின் நிலைகளைக் காத்திட வேண்டும்.

விஞ்ஞான அறிவிலிருந்து வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டு இனி பிறவி இல்லா நிலையை அடைய வேண்டும் என்ற இந்த ஆசையைத்தான் நீங்கள் வளர்க்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
1.காலம் நெருங்க நெருங்க…
2.உங்களை நீங்கள் காத்து…
3.உங்களைச் சார்ந்தோர் நிலைகளையும் காத்து…
4.அவர்கள் அவரைச் சார்ந்தோரைக் காத்திடவும்…
5.யாம் உபதேசித்த அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகியது நிச்சயம் நினைவுறுத்தும்…!

காற்று மண்டலத்தில் பெருகிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மை நமக்குள் புகமால் தடுக்கச் செய்யும் “எளிமையான தியானப் பயிற்சி…!’

Image

Protected zone - eternal

காற்று மண்டலத்தில் பெருகிக் கொண்டிருக்கும் நச்சுத் தன்மை நமக்குள் புகமால் தடுக்கச் செய்யும் “எளிமையான தியானப் பயிற்சி…!’

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தலையிலிருந்து கால் வரையிலும் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள். ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.
1.நம் உடல் மேல் இருக்கும் தோல் மண்டலத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
3.ஒரு “முலாம் பூசியது போன்று…!” வலுவான பாதுகாப்புக் கவசமாகின்றது.

இன்றைய காற்று மண்டலம் மாசுபட்டு மிகவும் நஞ்சாக இருக்கும் (POLLUTED AIR) நிலையில் அது உடலிலே பட்டாலும் நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அந்தக் கெட்டதை நம் அருகிலே வராதபடி விலக்கித் தள்ளிக் கொண்டிருக்கும்.

சந்தர்ப்பத்தில் அதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தோ அல்லது கேட்டுத் தெரிந்து கொண்ட பின் அத்தகைய நமக்குள் பதிவு இருந்தால் அது நமக்குள் பயத்தையும் பதட்டத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும். தோல் மண்டலத்தின் மீது துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் பயத்தை விலக்கிவிட்டு மன உறுதியை நமக்குக் கொடுக்கும்.

அதே போல் மற்றவர்கள் வெளிப்படுத்தும் வெறுப்போ கோபமோ குரோதமோ சலிப்போ வேதனையோ பயமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்வுகளை வராது தடுக்கும்.

உதாரணமாக ஒரு உணவுப் பொருள் மீதோ அல்லது வீட்டுக்குத் தேவையான ஒரு பொருள் மீதோ நாம் ஆசைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் என்ன கெடுதல் இருக்கிறது…! என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதை நாம் வாங்கிப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதை உபயோகித்தாலும் தோல் மண்டலத்திற்கு நாம் எடுக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் கெடுதல் ஆகாது தடுத்துவிடும். அடுத்து அதனின் உண்மையை உணர்த்திச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தையும் ஊட்டும்.

அதே சமயத்தில் நம் உடலில் இந்த வாத நோயோ இரத்தக் கொதிப்போ அல்லது மற்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் தோல் முழுவதும் வலுவாக்கப்படும் போது அதையெல்லாம் தள்ளி விட்டுவிடுகின்றது.

இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் நாம் எத்தனையோ மோசமானவர்களைப் பார்க்க நேர்கின்றது. அவர்களுடன் பழக நேர்கின்றது. அப்படிப் பழகும் பொழுது நம்மை அறியாமலே கெட்ட பழக்கம் வந்து விடுகிறது.

அதனால் நம்மை அறியாமலே கோபப்படச் செய்வதும் வேதனைப்பட்டு அழுகச் செய்வதும் சிந்தனையற்ற செயலைச் செய்வதும் போன்ற நிலைகள் வந்துவிடுகின்றது. நம் நல்ல செயல்களையே மாற்றி விடுகின்றது.

அதை எல்லாம் மாற்ற தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கொஞ்சம் அதிகமாக எடுத்து வலுவேற்றிக் கொண்டீர்கள் என்றால்
1.அத்தகைய கெட்ட பழக்கத்திற்கு இழுத்துக் கொண்டு போகாதபடி
2.நம்மைத் தடுத்து நிறுத்தச் செய்யும்
3.நமக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஒருவன் திட்டியவுடனே பதிவு செய்து விடுகின்றீர்கள். திருப்பி எண்ணும் போது நம் மன அமைதியை இழக்கச் செய்கின்றது. அதே போல் ஒன்றை ஆசைப்படுகின்றீர்கள். அது நடக்கவில்லை… மற்றவர்கள் தடைப்படுத்துகிறார்கள்… என்றால் உடனே வேதனை வருகிறது.

அதைப் போன்ற நிலைகள் எதுவும் நம்மை இயக்காது தடுப்பதற்காகத்தான் தோல் மண்டலத்தின் அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி வீரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். எடுத்துப் பழக்கம் செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக காபியிலோ டீயிலோ சீனி அளவாகப் போட்டுப் பாருங்கள். ருசியாக இருக்கும். ஆனால்
1.குறைந்தாலும் ருசி கெடுகிறது.
2.கூடினாலும் கெடுகின்றது.

அது போல் வாழ்க்கையில் தீமைகள் வந்தாலும் முதலில் படும். படும் பொழுது தீமை என்று அறிய முடியும். அறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அதனின் இயக்கத்தைத் தடைப்படுத்த வேண்டும்.

ஆகவே உங்கள் தோல் மண்டலத்தில் கூடுமான வரையிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை கொஞ்சம் அதிகமாகச் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஒரு பாதுகாப்பாகக் கிடைக்கும்.

செய்து பாருங்கள். உங்களுக்குப் பாதுகாப்பு உங்கள் எண்ணமாகத்தான் இருக்கும். அனுபவத்தில் நிச்சயம் பார்க்க முடியும்.

புரட்டாசி மாதம் கொண்டாடும் நவராத்திரி நாள்களில் கொலு வைத்து அதை எல்லோரும் பார்க்கச் செய்வதன் உட்பொருள் என்ன…?”

Image

NVARATRI KOLU

புரட்டாசி மாதம் கொண்டாடும் நவராத்திரி நாள்களில் கொலு வைத்து அதை எல்லோரும் பார்க்கச் செய்வதன் உட்பொருள் என்ன…?”

 

விண்ணிலே தோன்றிய ஒரு உயிர் பூமிக்குள் வரும் பொழுது ஒரு தாவர இனச் சத்தை அது கவர்ந்து கொண்டால் அந்தச் சத்து உயிருடன் உறையும் பொழுது புழுவாக உடல் பெறுகின்றது. உடல் என்பது சிவம் (திடப்பொருள் – சிவம்)
1.ஆனால் உயிரோ அந்தப் புழுவின் உடலுக்குள் மறைந்து விடுகின்றது… சிவன் ராத்திரி…!
2.அதாவது ஒரு உயிரணு பூமிக்குள் உடல் பெற்ற நாளை சிவன் ராத்திரி என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.இவ்வாறு இருளுக்குள் உயிரின் ஒளி கொண்டு புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் வரையிலும்
4.பலவிதமான உணர்வுகளையும் குணங்களையும் எடுத்துக் கொண்டோம் என்ற நிலையை உணர்த்துவதற்காக “நவராத்திரி…!” என்றும் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் மனிதனாக வரும் வரையிலும் எந்தெந்தச் சக்திகளை எல்லாம் எடுத்தோம் என்பதைக் “கொலுவாக ஏற்றி வைத்து…” ஒவ்வொருவரும் நாம் அதைப் பார்த்து அறிந்து கொள்வதற்காக கொலு வைக்கச் செய்தார்கள்.

ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட சக்திகள் என்றால் அது எது..?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ந்து வரும் வரையிலும் ஒன்றை ஒன்று கொன்று தின்று வந்தாலும் அந்த ஒவ்வொரு சரீரத்திலும் தான் தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்… என்று தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சக்திகளை எடுத்து எடுத்துச் சேர்த்துக் கொள்கிறது.

அவ்வாறு எடுத்துக் கொண்ட வினைகளுக்கொப்ப உருப்பெற்ற உணர்வின் எண்ண அலைகள் அது மீண்டும் உயிராத்மாவாகச் சேர்த்துச் சேர்த்து இதனின் கலவையின் தன்மை கொண்டு அதைத் தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடிய உணர்வின் ஆற்றலாக விளைந்து மனிதனாக வந்துள்ளோம்…! என்பதையே கொலுவாக வைத்துக் காட்டுகின்றார்கள்.
1.பல விதமான சக்திகள் இந்த உடலுக்குள் இருளுக்குள் மறைந்திருக்கிறது… என்று
2.தனக்குள் இருக்கக்கூடிய சத்தை உணர்த்துவதற்குத்தான் நவராத்திரி என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

ஏனென்றால் உயிர் விண்ணிலே தோன்றி பூமிக்குள் வந்து பல உடல்கள் பெற்றுத் தாவர இனச் சத்திற்குள் இருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலைத் தன் உடலாக்கி அதை வலுவாக்கிய பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையாக அது உருவாக்கியது.

கொலுவில் முதலில் நாம் பார்க்கும் பொழுது சிறு கல் மற்ற பாறையின் நிலைகளை வைத்து நமது பூமியின் இயக்கத்தைக் காட்டியிருப்பார்கள். அடுத்து காளானிலிருந்து மற்ற செடி வகைகள் வரை வரிசைப்படுத்தி யாவும் நமது பூமியில் உருவானது…! என்று காட்டியிருப்பார்கள்.

அவை அனைத்தையும் வைத்துக் கீழ் இருந்து மேல் வரையிலும் எவ்வாறு வளர்ந்தது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காகக் கொலு வைத்தார்கள்.

அடுத்து சரஸ்வதி பராசக்தி லட்சுமி என்று பராசக்தியை மையமாக வைத்து அதன் அருகிலே லட்சுமியும் சரஸ்வதியும் வைத்து ஒரு அணுவின் தன்மை இவ்வாறு உருவானது..? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வதற்காகச் சிலைகளை வைத்திருப்பார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் – பராசக்தி.. ஈர்க்கும் காந்தம் – லட்சுமி.. அதிலிருந்து கடந்து வெளி வரப்படும்பொழுது ‘அல்ட்ராவயலட் – ஆதிசேஷன் இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமியில் இயங்கினாலும் பூமிக்குள் வந்து ஒரு செடியின் சத்தைக் கவர்ந்து தன்னுடன் இணைக்கப்படும் பொழுது மணம் ஞானம் சரஸ்வதி…!

எந்தச் செடியின் சத்தை அது கவர்ந்து கொண்டு இயக்குகின்றதோ வெப்பம் பராசக்தி காந்தம் லட்சுமி அடுத்தது ஆதிசேஷன் (விஷம்) மணம் சரஸ்வதி (ஞானம்)
1.நான்கும் ஒன்றாகச் சேர்த்து ஒரு புது இயக்கமாக
2.எந்த மணத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றதோ
3.இது ஐந்தாவது நிலை அதற்குப் பெயர் ‘”காயத்ரி”

ஆக எந்த மணமோ அதனின் சக்தியாக தன் மணத்தால் காத்துக் கொள்வதும் தன் மணத்தால் மற்றொன்றைத் தன் உணர்வின் சத்து எதனுடன் இணைந்ததோ அந்த இனத்தின் சக்தியைத் தனக்குள் வளர்க்கும் திறன் கொண்டது.

அதே சத்து ஒரு செடியுடன் இணைந்து இயக்கப்படும் பொழுது தன் உணர்வான சத்தை வலுக்கொண்டு தன் இனத்தை வளர்த்துத் தனக்குள் வளர்வது என்பது “உணர்வு…”இப்படிப்பட்ட வளர்ச்சியில்
1.அந்தந்த வினைக்கு நாயகனாக உடல்கள் எவ்வாறு உருவானது…? என்று
2.புழுவின் உருவத்திலிருந்து பல பல உயிரினங்களை வைத்து வரிசைப்படுத்தி
3.இந்த மனிதப் பிறவிக்கு எவ்வாறு வந்தோம்…? என்ற இந்த நிலையைக் கொலுவாக வைத்து
4.ஒவ்வொருவரையும் அதைப் பார்க்கச் செய்து நாம் தெளிவுறத் தெரிந்து கொள்ளும் நிலைக்கு அன்று உருவாக்கினார்கள் ஞானிகள்.