எது நடந்தாலும் உண்மையை அறியக்கூடிய “ஒரு நிமிட சிந்தனை… அந்த நிதானம் வேண்டும்”

எது நடந்தாலும் உண்மையை அறியக்கூடிய “ஒரு நிமிட சிந்தனை… அந்த நிதானம் வேண்டும்”

 

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?

சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்குச் செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.

ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.

ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.

உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.

அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.

சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.

இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.

ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று.

இதைப் போன்ற ந்நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?

நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.

இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.

ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்குச் செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்

 

நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.

நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.

அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.

நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.

பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.

தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.

ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்குப் பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.

மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”

தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக் கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்கள்.

உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக் கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக் கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.

ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையை பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

நம் சித்தம் தெளிவாக வேண்டும்

நம் சித்தம் தெளிவாக வேண்டும்

 

காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.

நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.

ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று அடைகின்றனர்
1.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
2.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.

கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.

ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது

ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்புநிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.

வளர்ச்சியில் வெளிக் கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.

பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்

சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்குப் பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.

இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.

நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!

அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.

ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.

1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.

கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.

மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.

கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!

சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே சீர்படும் சிகரமாகுமே…!

உடலின் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் “மனிதன் – தன் உயர்வை அறிய முடியவில்லை”

உடலின் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் “மனிதன் – தன் உயர்வை அறிய முடியவில்லை”

 

இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மை சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.

பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!

இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.

1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி.. ஒளி… நீரைக் கொண்டு…
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய்ப் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.

இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.

அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்குச் சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.

1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?

இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!

உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.

எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.

உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!

மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.

1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…”

தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…”

 

ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.

1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.

உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.

ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.

சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.

செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?

இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.

உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”

திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.

சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.

1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.

ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.

தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.

சித்து நிலையின் அஷ்டமா சித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.

இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்

இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!

இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவே

ஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்.

ஒலி கொண்டு தான் ஒளியை வளர்க்க முடியும்

ஒலி கொண்டு தான் ஒளியை வளர்க்க முடியும்

 

நம் முன்னோர்கள் ஒலியின் நாதம் கொண்டு ஒளித் தன்மை வளரும் உண்மையைத் தன் சித்தத்தில் அறிந்து கொண்டனர்.

சூரியனும் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களுக்கும்… பூமியின் தொடர்பு பெற்ற இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும்… சனிக் கோளில் உருவாகிக் கரையும் பன்னிரண்டு கோள்களுக்கும் தொடர்பு கொண்டு… பன்னிரண்டு மாதங்களின் நாமகரணத்தை ஒலியின் ஒளியால் சூட்டினார்கள்.

இயற்கையின் தொடர்களை…
1.கோள்களின் ஈர்ப்பில் விகித கணிதத்தை வான சாஸ்திரத்தில் அறிந்த தொடரில்
2.ஒவ்வொரு ஜீவ உயிரின் வீரியமுமே… மூன்று நட்சத்திர ஒலி ஒளி பெற்ற பின் தான்
3.ஜீவ உயிரணு உயிர் பெறுகின்றது.

மனித நிலை பெற்ற பின் அடுத்த நிலை பெற மனித உணர்வின் எண்ண அலையின் ஜீவகாந்த ஈர்ப்பு வலுப் பெறுவதினால்… வலுவின் தொடர் இப்பூமி இழுக்கும் ஒலி அலைகளைக் காட்டிலும் மனித ஜீவ உணர்வின் வீரியம் பெற்று விடுகின்றது.

பூமியின் தொடரிலேயே… நடைமுறை வழக்கத்திற்கொப்ப மனிதன் வாழ்ந்தான் என்றால்
1.இப்பூமி எதன் தொடரில் சக்தி பெற்று… சமைத்து பூமியின் வளர்ப்பின் வளர்ச்சி சுழற்சி வளர்கின்றதோ
2.அதன் அதன் ஈர்ப்பு பிடிப்பில் தான் இப்பூமியில் பிறந்த நாம்
3.இப்பூமியின் ஈர்ப்பு சுழற்சியுடன் சுழன்று கொண்டிருக்க முடியும்.

ஜீவகாந்த பகுத்தறியும் எண்ண உணர்வைக் கோள்களின் தொடர்புடன் மனிதன் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மனிதனின் உண்மை நிலையை சிவரூபத்தில் உணர்த்தினார்கள் நம் முன்னோர்களாகிய அன்றைய ரிஷிகள்.

சிக்கலைத் தீர்க்க சிலை வைத்தான்
சிந்தனைச் சிலையை (மனித உடல்) உணர்ந்தானா…?

சிறுமையின் உருவாய் சிலையென்று
சந்தியில் நிற்கும் நிலையென்ன…?

சஞ்சலத்தில் சச்சரவை
சங்கடத்தில் சிக்கலின்றி
சிந்தனையில் சீர்தூக்கி
சிந்தைதனில் சீர்படுத்து…!
(சிவன் படமும் விளக்கமும்)

இதன் தொடரை மனிதன் பெற்றால் மனித நிலை தெய்வ நிலை பெறக்கூடிய தொடர்பிற்கு வளர முடியும். ஒலி கொண்டு ஒளி பெறும் ஆத்ம பலத்தின் தொடர்பைப் பெறலாம். ஆகவே இயற்கையின் தொடர்புடன் உயரும் நிலை தான் தெய்வ நிலை.

இப்புவியின் ஈர்ப்பில் வளரும் கனிவளங்களும் மற்றத் தாவரங்களும் சத்தெடுத்து அதனதன் மாற்றுத் தன்மை சிலவற்றில் வீரியமாக இருப்பது போன்று
1.இயற்கையின் ஒலித்தன்மையில் மனித ஜீவாத்மாவில் சிலருக்கு
2.சரீர உணர்வின் ஜீவ நிலையே ஒளித் தன்மை கூடியிருக்கும்.

அத்தொடரில் இயற்கையை ஒன்றி… கோள்களின் தொடர்புடன் எண்ணத்தில் ஒளிரும் ஆத்மா… நட்சத்திர நிலை போன்று என்றுமே மாறாத நிலையில்… இப்பால்வெளி மண்டலத்திலுள்ள எண்ணிலடங்கா அமிலத்தின் சமைப்பை எடுக்கவல்ல “ஜோதி நிலை பெற்று… வளர்ச்சியின் வளரும் நிலை பெறலாம்…”

ஆனால்… மனித நிலையிலேயே பிற ஆத்மாவின் ஈர்ப்பின் ஒலி அலைகள் சாடும் நிலைக்குத் தன் ஆத்மாவை அடகு வைக்கும் நிலை தான் “மந்திர தந்திர மாய நிலை…!”

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்…!

மனிதன் தான் மகானாக முடியும்… மாமகரிஷியாக முடியும்… மண்டலமாக முடியும்…!

 

மனிதன் முதலில் வாழ்க்கையில் “எளிமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்…”

வாழ்க்கையில் எளிமையும்… ஆத்மாவில் சுகத்தையும்… அனுபவிக்கும் எண்ணத்தின் குணத்தைப் பெறும் மார்க்கமே மனிதன் மனிதனாக்கும் முதல் நிலை.

இம்முதல் நிலையில் மனிதனால் எடுக்கப்படும் அறிவின் பகுத்தறிவு… உயர் ஞானத்தின் மெய் ஞானத்தில் கண்டறியும் உண்மையின் சக்தியை… மனிதருக்குள் மனிதராய் விதைக்கப்படும் ஒலி அலைகள் ஒளி பெறும்.

1.ஆகவே மனிதனைப் பக்குவப்படுத்தும் நிலைதான் மகானாகக்கூடிய நிலை என்பது.
2.“உயர்ந்து விட்டோம்…” என்பதை விட்டு
3.“உயர்ந்திடுவோம்…” என்ற எண்ணம் வர வேண்டும்.

பிற ஆத்மாக்கள் மனிதனின் (தன்) உயர்வைக் கண்டு… நாடி வந்து வணங்க வேண்டும்… என்ற எண்ணத்தில் இருளைக் கூட்டிக் கொள்ளும் பொழுது “எம்மனிதனும் மகானாக முடியாது…”

தன் உயர்வை உயர்த்திக் காண வேண்டும் என்றால்…
1.பிறரை உயர்த்தும் பொழுதுதான் தான் உயர முடியும்
2.தன் உயர்வை நாடி எல்லாம் வர வேண்டும் என்று எண்ணுவதல்ல உயரும் நிலை…!

சூரியன் எப்படி மற்றக் கோள்களின் அலையைத் தான் பெற்று… தன்னில் அதைச் சமைத்து மீண்டும் ஒளியைத் தந்து உருளுகின்ற உண்மையில்… சூரியத் தொடர்பில் சுழலக் கூடிய கோள்கள் தானும் ஓர் நாள் வளர்ந்து… தன்னுடைய ஈர்ப்பின் சுழற்சியில் குடும்பம் அமைத்து… அதுவும் சூரியனாக வளர்ச்சி அடையக்கூடிய நிலையை அது அது பெறுகிறது.

அண்ட கோள்களில் உருள்பவை யாவும்… மண்டலக் கோள்களின் ஈர்ப்பில் மோதப் பெறும் சமைப்பு நிலையால்தான் “மறு நிலை… உரு நிலை…” பெறுகின்றது.

இத்தொடரின் சூட்சுமமே ஜீவகாந்த ஒளித் தன்மை உயிர்ப்பு நிலை வந்த பிறகு தான். ஜீவ ஆதி நிலை கொண்டு
1.ஆரம்ப நிலை – புழு நிலை
2.முதிர்வு நிலை ஜீவனின் தொடர் – மனித நிலை
3.மனித நிலையில் மகானாகி – ஒளி பெறும் நிலை
4.என்றென்றும் வளரும் நிலை – வளர்ச்சியின் ஒளி நிலை.
5.மனிதனின் நிலை தான் – தெய்வமாகும் நிலை.

இதை அறிந்து… மனிதனிடம் இருக்கும் “எண்ணத்தின் பகுத்தறிவு தான் உண்மையான சொத்து…” என்பதை உணர்ந்து
1.ஒவ்வொரு மனிதனுக்கும் நல்லுணர்வைத் தந்து
2.நல்லொழுக்கத்தை ஆத்ம பலத்தில் வளர்க்க உரமிடுபவன் நிச்சயம் மகானாக முடியும்.

“மனிதருக்குள் தெய்வம்” என்று மகான்களைக் சொல்வதைப் போல்… தன் உணர்வின் எண்ணத்தில் சுகத்தைக் காணும் “ஆத்ம பலத்தின் ஒளித் தன்மை பெற” சரீர வாழ்க்கையில் எளிமையைக் காணுங்கள்.

மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம்

மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம்

 

1.அறுசுவையின் முதிர்வு உணரும் நிலை ஏழு…
2.வண்ணத்தில் ஏழும்… இப்பூமியின் சுழற்சியில் இப்பூமிக்கு ஏழு நாட்களின் வாரத் தொடர்பும்…
3.“சப்தரிஷிகளின் ஏழு நிலையின் உண்மைத் தத்துவ நிலையும் தான்…!”
4.இப்பூமியின் உண்மை நிலை.

ஐம்புலனைப் பகுத்தறியக் கூடிய நிலை கொண்டது தான் “ஆறறிவு பெற்ற மனித நிலை…” மிருகங்கள் ஐந்து நிலையைப் பெற்றிருந்தாலும் இயற்கையின் தொடர்புடன் புல்லையும் பூண்டையும் நீரையும் இயற்கையுடன் ஒட்டித்தான் அதனுடைய ஜீவ வாழ்க்கை வளருகின்றது… வாழுகின்றது.

உண்ணவும் உடுக்கவும் இருக்கவும்… தன் ஆறாம் அறிவை மனித ஞானம் பயன்படுத்திக் கொண்டது.

ஏழாம் நிலையான உயர் ஞானத்தால் இச்சரீர உணர்வின் அறுகுணத்தின் அறியும் நிலை கொண்டு அடையும் நிலையை மாற்றி… ஞானத்தால் உணரும் மெய் ஞானம் கொள்ளும்… “ஏழான நிலையை” மனிதன் பெற வேண்டும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான்… இப்பூமியின் சுழற்சியின் மூல அமில ஒலியின் சப்தரிஷி ஒளி செயலினால்… ஏழு தன்மையின் வளர்ப்பின் செயல் சக்தி ரிஷித் தொடர்பினால்… இப்பூமியில் வளரக் கூடிய மூலத்தின் கருவின் வித்தில் வளர்ந்த பலன்கள் தான் அறு குணம் பெற்ற நிலை.

இந்தப் பூமியின் முதிர்வு நிலை மனித நிலை ஆறறிவு நிலை…!
1.அதற்கு அடுத்த நிலை மெய் ஞான நிலை
2.மெய் ஞானம் பெற்ற மனித நிலையும் இந்தப் பூமியின் சுழற்சியில் முதிர்வு நிலை
3.இவ் ஏழைக் கடக்கும் மெய் ஞானி தன் சித்தத்தை உணர்ந்த சித்தனாகி விட்டால்
4.அது எட்டாம் நிலையான அஷ்டமா சித்து நிலையை அடையும் நிலை.

இயற்கையின் மெய் உணர்ந்து மெய் ஞானத்தால் ஒளி பெற்று தன் சித்தத்தின் வலுவாகும் சித்து நிலையே ரிஷியாகும் வழி நிலை.

இப்பூமியின் உணர்வுடன் இப்பூமியின் சுழற்சியில் எடுக்கக்கூடிய ஒலி அலைகள் யாவையும்… தன் ஒளியாய் எடுத்து இவ்வாத்மாவின் ஒளி ஒளிரக் கூடிய தன்மை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அந்தத் தகுதி உண்டு.

வளர்ச்சியின் தொடர் வளர… மனித உணர்வில் தன் சரீர உணர்வால் மனிதன் பெறக்கூடிய கண்டு… கேட்டு… நுகர்ந்து… சுவைத்து… உணரும்.. இந்த ஐந்து நிலையும் அடையும் நிலை மனிதனுக்கே உண்டு.

இந்த ஐந்து நிலையில் இனிமை நிலை கூட்டுவது… மனித நிலையில் இரு நிலையான ஒவ்வொரு இயற்கை நிலையிலும் தன்னுடன் மோதக்கூடிய
1.ஜீவ நிலையான பெண்மை நிலை… வளர்ச்சி நிலை…
2.அறுநிலை கொண்ட முதிர்வு நிலை… சிவசக்தி நிலை…
3.பெண் சக்தியின் வளர்ச்சியின் தொடர் கொண்டு வளரக்கூடிய நிலைக்குத்தான்
சப்தரிஷியின் சக்தித் தொடர்பை உணர்ந்த ரிஷிகள்… சக்தியைப் பெண்ணாகக் காட்டினார்கள்.

மனித உணர்வில் அடையக் கூடிய இவ் அறு நிலைக்கும் முதிர்வு நிலையான… மெய் ஞானத்தை உணரும் ஜீவ நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டும்.

ஏழான ஜீவ நிலையுடன் எட்டாகும். சித்தனால் ஒவ்வொரு கோள்களாய் உருவாகும் தன்மை எடுக்கும் இவ்வுணர்வின் எண்ணம் கொண்டு தான் உயர முடியும்.

பிற ஒலி அலைகளை இச்சரீர உணர்வுடன் எடுக்கும் சித்து என்பது..
1.இப்பூமியின் சுழற்சியுடனே…
2.இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்தவுடன் (ஆவிகள்)
3.எந்தெந்த ஒலியெல்லாம் எடுத்து இச்சரீரத்தைச் சித்தாக்கி வளர்த்துக் கொள்கின்றோமோ
4.அதன் ஈர்ப்புப் பிடிப்பினால் ஆத்மாவைச் சிதற அடிக்கும் நிலைதான் சித்து விளையாட்டு நிலை. (இதிலே நாம் சிக்கக் கூடாது)

மனிதன் எத்தாய் தந்தை தந்த இஜ்ஜீவ உடலை பெற்றானோ அதைப் போன்றே தாய் தந்தையென்ற ஆத்மாவில் மனித ஜீவனை மனிதன் பெற்ற தொடரைப் போன்று இரண்டு ஆத்மாவின் ஒரு நிலையான எண்ணத்தின் ஒற்றுமையால்
1.உணர்வின் இன்பம் (உடலின் இன்பமல்ல) உணர்வின் இனிமையை… ஆத்மாவின் இனிமையாய்…
2.ஆத்மாவின் ஜீவ இனிமை நிலையை மனித உணர்வுடன் உள்ள பொழுதே
3.குணத்தின் அன்பால் உணரக்கூடிய சம குணமுடன்
4.விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒலியை இருபாலரும் எடுத்து ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆகவே இச்சரீர வாழ்க்கையில்… மனிதனென்ற வித்தின் மூலத்தைத் திருமூலமாக்கும் மந்திரம் தான் இது..! இரு குணத்தை ஒரு குணமாக்கி அன்பென்னும் ஆலயத்தைச் சிவசக்தியாக்கச் செய்யுங்கள் ஒவ்வொருவரும்.

மனிதனுக்கு மேலானது தெய்வ குணம் என்று காட்டியதன் உட்பொருள் என்ன…?

மனிதனுக்கு மேலானது தெய்வ குணம் என்று காட்டியதன் உட்பொருள் என்ன…?

 

பசு மடியில் சுரக்கும் பால்… தன் கன்று குடித்து அதன் பின் மீண்டும் பலரும் பருக அது பயன்படுகின்றது.
1.அந்தப் பசு மடி சுரக்கும் பால் போல்
2.நாமெடுக்கும் உயர் ஞானத்தின் தன்மை
3.பலருக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

நாமெடுக்கும் உயர் ஞானம் நம் உயிரானது… நம் உயிராத்மா கன்று போல் பருகி… பலரும் பருகக்கூடிய பலனாய் ஞானியின் சக்தியாகச் செயல்படல் வேண்டும்.

ஒவ்வொருவருக்குமே… தன் உணர்வில்… தன் எண்ணத்தால்… தன் ஆத்மாவில் பதியப்பட்டது தான் நியாயமாகவும் உண்மை என்றும் புலப்படும். ஆகவே
1.தன் உண்மைக்கு ஒத்த கருத்துக்கள் கொண்டு உறவாடுவதை தனக்கு உகந்ததாயும்
2.மாறுபட்ட எண்ணங்கள் யாவையுமே எதிர்ப்பு உணர்வைத் தோற்றுவிக்கும் எதிர் நிலைகளைத்தான் உண்டு பண்ணும்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியக்கூடிய உயர் தன்மைக்காகத்தான் அன்றைய மாமகரிஷிகள் மனிதனுக்குள் இறைத் தன்மையை வளர்க்கும் நிலையை நெறிப்படுத்தினார்கள்.

மனிதனுக்கு மேல்… மேல் நிலையாக தெய்வ குணங்களையும்… தெய்வச் சிலைகளையும்… ஆலயங்களையும்… நல்லொழுக்க நடைமுறைக்குக் கொண்டு வந்து… உண்மையின் சித்தத்தை மனிதன் அறியச் சீரிய வழிகளையும் வழிப்படுத்திச் சென்றனர்.

இதை உணர்ந்து…
1.நாம் ஒவ்வொருவருமே தெய்வ குணங்களைப் பெற்று
2.தெய்வ சக்தியை வளர்த்துத் தெய்வங்களாகும் தன்மை பெறல் வேண்டும்.

மெய் உணரும் தியான முறை

மெய் உணரும் தியான முறை

 

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது… வேகக்கூடிய உஷ்ணமும்… அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்… “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்…” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே… இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ… செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது… நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்… பூக்களானாலும் சரி… காய் கனிகளானாலும் சரி… ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து… தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை… இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப… பிறப்பின் நிலை… ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்… உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்… ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ… அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை…
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது… மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா…!

அதைப் போன்று…
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு… உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு…
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய… நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்…
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்… தீயவை எதுவாகிலும்…
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்குக் கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை…!”