தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் “அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?”

 

ஜீவனுள்ள மண்டலம் ஜீவனற்ற மண்டலம் என்று இரண்டு நிலை பெற்ற மண்டலங்கள் பல சுற்றி கொண்டுள்ளன. ஜீவனுள்ள மண்டலங்களைப் பகர்ந்துள்ளேன் பல நிலையில்.

ஜீவனற்ற மண்டலம் எந்நிலையில் வந்தது…? அஜ்ஜீவனற்ற மண்டலங்களில் ஒலி ஒளி காற்று நீர் மற்ற ஜீவராசிகள் எவையுமே அந்நிலையில் இல்லை.

வெறும் கல்லும் மண்ணும் கலந்த பெரும் பெரும் கோளங்களாக இருண்ட நிலைகள் கொண்டு அந்தரத்தில் அப்படியே நிற்கும் நிலையில் பல மண்டலங்கள் உள்ளன.
1.அம்மண்டலங்கள் மற்ற மண்டலங்களுடன் மோதும் தன்மையும் இல்லை
2.சூரியன் தன்னுள் அதை ஈர்க்கும் தன்மையும் அதற்கு இல்லை… ஜீவனே இல்லாமல் உள்ளன அம்மண்டலங்கள்.
3.வளர்ச்சியும் இல்லை குறைவும் இல்லை…
4.எந்த நிலையில் அது பிற மண்டலத்தில் இருந்து ஜீவன் இல்லாத நிலையில் உதிர்ந்ததுவோ
5.அதே நிலையில் அந்த நிலை கொண்டே அது உள்ளது… அம் மண்டலங்களுக்கு ஒலியும் இல்லை.

இப்பொழுது பூமி சுற்றும் வேகத்தில் ஓ…ம் ஓ…ம் என்ற ஒரு நிலை கொண்ட நாதத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. அந்நாதத்திற்குத் தகுந்த மணங்களைத் தான் நாம் பெறுகின்றோம்.

நம் பூமிக்கு மேல் பெரிய பூமியான வியாழனின் நாதம் வேறுபடுகின்றது. நம்மைக் காட்டிலும் சிறிய மண்டலமான சந்திரன் செவ்வாய் இப்படிப் பல மண்டலங்களின் நாதமும் வேறுபட்டுத் தான் உள்ளது.

அதனதன் ஈர்ப்புத் தன்மையைக் கொண்டும் அவை சுற்றும் நிலையைக் கொண்டும் அவற்றின் நாதம் வேறுபடுகின்றது.
1.சூரியனின் வேகம் வெகு துரிதமாக உள்ளதால் அதனுடைய வேகத்தைக் கொண்டு
2.அதனுடைய ஓங்கார இசை பெரும் ஓசையான “ஓ-ஓ…” என்றே தான் அதுவும் சுற்றுகின்றது.

இம்மண்டலங்களின் ஒவ்வொன்றின் நிலையையும் ஊன்றிப் பார்த்தால் பல உண்மை நிலைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம்.

இப்பொழுது இப்பாடநிலையில் வரும் மண்டலங்களின் தன்மையை வைத்து இதைப் படித்திடும் ஒவ்வொருவரின் நிலைக்கும்
1.அவரவர்களின் நிலைக்கு ஏற்ப எண்ணங்கள் தோன்றி இந்நிலையின் தத்துவம் உண்மையா…? என்ற வினாவும் எழுந்திடலாம்.
2.இந்நிலை கொண்ட வினா எழும்பத்தான் இப்பாட நிலையே வந்துள்ளது.

கண்டார் விண்டதில்லை விண்டார் கண்டதில்லை என்று உரைப்பர் நம் முன்னோர். நாம் நம் ஜெப அருளினால் கண்டுள்ளோம் இவ்வுண்மையை. நாம் அறியா உண்மை பலவும் உள்ளன.

இவ்வுலகினில் உதித்துள்ள மனித உயிரணுக்கள் எல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையால்
1.நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல. தனித்து நிற்பவை எவையும் இல்லை.
2.எல்லாவற்றிலுமே எல்லாமாகக் கலந்துள்ள நாம்… நம் உயிராத்மாவை பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி… சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
3.இவ்வுலகத்தின் உண்மை மட்டுமல்ல பல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.

ஆனால் இன்று நம்மில் இருந்து நம்முடன் கலந்து பிறந்த பல ஜீவாத்மாக்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டு தன்னைத்தானே அழிக்கும் நிலையில் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்குச் செல்லும் நிலைக்காகப் பல நிலைகளை விஞ்ஞானத்தில் சென்று காண பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.

நல்வழிக்குச் செய்திடலாம். ஆனால் ஒருவர் செய்வதை ஒருவன் அழிப்பதற்காக இவ்வுலகின் காற்று மண்டலத்தில்… காற்று மண்டலத்திற்கு மேலும் பல நிலை கொண்ட விஷ ஊசிகளை (இராக்கெட்டுகளை) ஏவி விட்டிருக்கின்றார்கள்.

அவன் செய்து அனுப்பிய விஷ ஊசிகள் அவனைத் தாக்காத நிலை கொண்டு அவன் அனுப்பும் கூடுகளை அவ்விஷ ஊசிகள் வந்து தாக்கினாலும் பாதிக்காத தன்மையில் பல நிலைகளில் பறக்க விட்டுள்ளான்.

பிற மண்டலங்களின் நிலையை அறிந்திட தன்னைத்தானே அழித்து ஒருவனுக்கு மேல் பொறாமை கொண்டு விஞ்ஞானம் என்ற நிலையில் காலத்தைக் கடத்திக் கொண்டு ஏனப்பா அந்த நிலை பெற வேண்டும்…?

அன்றிலிருந்து இன்று வரை பல சித்தர்கள் பல உண்மை நிலைகளைத் தன் எண்ணத்திலும் தன் ஜெபத்திலும் ஈர்த்து எடுத்துத் தன் உடலுடனே பறந்து பல மண்டலங்களுக்குச் சென்று… பல ஆற்றல்களை அறிந்து அவர்கள் எழுதிய பல நூல்கள் தானப்பா… இன்றைய விஞ்ஞானிகள் ஆராயும் தன்மை கொண்டு நடத்தி வரும் நாடகங்கள் எல்லாம்.

அந்நாடகத்தின் நிலையினால் தன்னைத்தானே அழிக்கப் பார்க்கும் அழிவு நிலைக்கு ஏன் செல்ல வேண்டும்…?

உண்மை நிலைதனை ஜெப நிலை கொண்டு அறிந்திடத் தான் நாம் அறிந்த உண்மைகளை இந்த நூல் வழியில் ஒவ்வொருவரும் அறிந்து நல் ஜெபம் பெற்று நடத்திடத் தான் இப்பாட நிலை.

இப்பாட நிலையில் உள்ள கருத்துக்களின் உண்மையை அறிந்திட ஒவ்வொருவருமே ஜெபத்தில் இருந்து கண்டிடலாம்.
1.எல்லோருமே அச்சக்தியின் சக்திகள் தான்
2.ஜெபம் பெறும் நிலையில் இது உண்மைகளை எல்லோரும் அறிந்திடலாம்.

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே

 

இவ்வுலக நிலையினிலே நாம் பெறும் சக்தி நிலை கொண்டே ஒவ்வொரு உயிரணுவின் நிலையும் மனிதர்களின் நிலையும் உள்ளதுவே.

1.நாம் எந்த நிலையில் வசிக்கின்றோமோ அந்த நிலை கொண்ட பழக்க வழக்கங்களும் இந்நிலை கொண்ட சுவாச நிலையும்
2.ஒவ்வொரு தன்மையில் கூடி வசிக்கின்ற மனிதர்களின்
3/எண்ண நிலைகளும் உருவ அமைப்புகளும் எப்படி ஏறக்குறைய ஒன்று போல் உள்ளனவோ
4.அவற்றை ஒத்துத் தான் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலையும் சுவாச நிலையும் உள்ளன.

இன்று உலகில் ஒவ்வொரு பாகத்திலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம் வாழ்க்கை முறை இதைப் பொறுத்து அங்காங்கு வாழும் மக்களின் வாழும் வாழ்ந்திட்ட காலத்தில்
1.அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ அந்த நிலைகொண்டே
2.அவர்கள் ஆவி பிரிந்து அந்தந்த நிலையில் அவ்வாவிகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப்பற்றும் ஒற்றுமைப் பற்றும் கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும்… அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்ற நிலைதனிலே… இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்றுபோல் சுற்றிக் கொண்டுள்ளதினால்… அத்தெய்வத்தையே கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு… இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே… அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.

தன் சுவாச நிலைக்கு ஏற்ப அந்த நிலை கொண்டு தான் இங்குள்ள மக்களின் மனோநிலையும் தெய்வ பக்தியும்… தன் எண்ணத்திற்கு உகந்த நிலை கொண்டு இங்கு சுற்றியுள்ள ஆவிகள் கோவிலுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில்… நிலையில் என்னும் பொழுது
1.அவ்வாவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்லுவதும்
2.சாமி வந்து வாக்குச் சொல்கிறது என்பதும் அருள் வந்து ஆடுவதும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்நாட்டில் தான்.

நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாஷையில் வந்ததுவே இந்நிலை இந்நாட்டினிலே. இந்த நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.

அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் எத்தன்மையில் அங்குள்ளனவோ தன் நிலை கொண்ட வாழ்க்கை வாழ்ந்த நாட்டில்… பக்தி தெய்வப்பற்று என்ற நிலைகளை எல்லாம் எந்தெந்த நிலை கொண்டு அங்குள்ள மக்கள் வழி நடத்திச் சென்றார்களோ… அந்தந்த நிலை கொண்டு தான் அங்கு வாழ்ந்தவர்களின் ஆத்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.

அந்த நிலைகொண்டே அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு உள்ள நிலை.

பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…? இங்கு மட்டும்தான் ஆண்டவன் உள்ளானா…? இங்கு தான் அருள் வருமா…? ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்…? என்றெல்லாம் இங்கு மற்ற பாகங்களின் உள்ளவர்களின் எண்ணத்திலே.

இங்கு ஆண்டவனின் நிலை நம் சித்தர்கள் நமக்கு உணர்த்திய நிலையை நாம் ஏற்றுக் கொண்ட நிலை கொண்டு வந்ததுவே இந்நிலை.

இன்னும் பல பாகங்களில் பல நிலை கொண்டு ஆண்டவனை எண்ணி பல வழிகளில் வணங்குகிறார்கள்.
1.அவர்களெல்லாம் எந்த நிலையில் நம் ஆண்டவனின் அருள் வருகிறது…? என்ற
2.புரியாத நிலை கொண்டு வணங்குகிறார்கள்.

இன்று இவ்வுலகினில் எல்லாப் பாகங்களிலுமே தன்னைத்தான் நம்பாமல் ஜோசியம் என்ற நிலையில் நம்பி வாழுகின்றார்கள். அந்த நிலையில் எல்லாம் யார் வந்து சொல்கிறார்கள் என்று உணராமல் “பல ஆவிகளின் தொடர்புடன்” தன்னைத்தான் நம்பாமல் பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா இன்றைய இவ்வுலகமே.

ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது.
1.அந்நிலைக்கே அடிபணிகின்றான் ஆண்டவனின் ரூபமாக
2.அவ்வாவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழுகின்றான்.

எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன…? அவ்வாவியே வந்து நமக்கு நல் உபதேசம் அளிக்கும் பொழுது பல நன்மைகளை நமக்கு அது செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது…? என்று எண்ணிடலாம் எல்லோரும்.

ஆவிகளின் நிலை எல்லாம் எம் மனிதன் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ அதே நிலையில் அம் மனிதன் உள்ள நாள் வரை தான் அது மனிதனுக்கு உதவி செய்திடும்.

அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது… எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவி வந்ததோ அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அவ்வாவிகளின் நிலை எல்லாம்.

இதிலிருந்து மனிதன் மீள்வதற்கு…
1.தன் எண்ணத்தையும் தன் செயலையும் தன்னைத்தான் நம்பும் நிலையையும்
2.தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் தந்திடாமல்
3.தன் உணர்வின் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கி வாழ்ந்திடும் நிலையில்
4.அவன் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் கொண்டே நல் நிலை பெற்று வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் மனிதராகப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலையெல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இவ் உடலில் வாழ்ந்திடவில்லை. பல அணுக்களின் நிலை எல்லாம் மனிதர்களின் நிலைக்கு வந்து தாக்கித்தான் இம்மனிதன் வாழ்கின்றான்.

ஆகவே… நல் உணர்வை எடுங்கள்…!

இவ்வுலகுடனே மட்டும் நாம் வாழவில்லை. இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தொடர்புடைய 48 மண்டலங்களுடன் அம்மண்டலங்களுக்குத் தொடர்புடைய பல நிலை கொண்ட மண்டலங்களின் தொடர்புடனும் வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்து…
1.நாம் இந்நிலை கொண்டு வாழ்வதற்கு
2.எந்தெந்த நிலையில் இருந்தெல்லாம் நமக்குச் சக்தி கிடைக்கிறது…? என்பதனை உணர்ந்து வாழ்ந்திட வேண்டும்.

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.

மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.

இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து… மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.

சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.

ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.

மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?

ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.

மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.

சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.

மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.

இம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று… மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.

அந்நிலையில் இருந்து மீண்டு… மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்…
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி…
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான… அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.

சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது

சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது

 

இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நுகரும் விஷத்தன்மையை சூரியன் தனக்கு அருகில் கொண்டு வரப்படும் பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வின் வலுவால் எதிர்த்துத் தாக்கி வெப்பமாக்கி விஷத்தைப் பிரித்து அதற்குள் உண்டான சத்தை ஒளிக்கதிர்களாக மாற்றும் நிலை பெறுகின்றது.
1.விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் உருவாக்கப்படுகிறது.
2.ஆனால் நகர்ந்து செல்லும் பொழுது முதலிலே நுகர்வது விஷத்தன்மையைத்தான்.
3.காரணம் அந்த விஷம் இயக்கச் சக்தியாக வருகின்றது
4.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் வருகின்றது வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும் உருவாக்குகின்றது.
5.அதன் வழியில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தான் நாம்.
6.ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சுகள் அனைத்தும் சூரியனுக்குள்ளும் இன்று பரவிக் கொண்டுள்ளது.

காரணம்… மிக சக்தி வாய்ந்த விஷத்தன்மைகளை உருவாக்கத் தெரிந்து கொண்டான் மனிதன். அதை வைத்து மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் தான் அதைச் செயல்படுத்துகின்றான். “மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும்” என்று தான் விஞ்ஞான அறிவு கூறுகின்றது.

ஆனால் மெய்ஞான அறிவு விஷத்தை ஒடுக்கித் “தனக்குள் ஒளியின் அறிவாக வளர்க்க வேண்டும்…” என்று கூறுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஆக இன்று உலக நாடுகள் அனைத்துமே தன் நாட்டைக் காக்க வேண்டும் என்று செய்தாலும்
2.அவர்கள் நாட்டையும் அவரால் இன்று காக்க முடியவில்லை

உலகத்தையே அடிமையாக்கி தன் சொல்லுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அமெரிக்கா சில செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.

மற்றவர்கள் யாரும் அவனை மீறி எதுவும் செய்யக்கூடாது. தானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று “வான மண்டலத்தையே நச்சுத் தன்மையாக்கி விட்டார்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும்…”

அவர்களைப் பின் தொடர்ந்த மற்ற நாடுகளும் வான மண்டலத்தை விஷத்தன்மை ஆக்கிக் கொண்டுள்ளார்கள்

1.அதனால் சூரியன் ஜீரணிக்கும் சக்தி இழந்து அந்த விஷத்தன்மைகளை சிறிதளவு தான் இப்போது மாற்றிக் கொண்டுள்ளது
2.விஷக் கதிர்கள் அதற்குள் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை உருவாக்கும் தகுதியை சூரியன் இழந்து கொண்டுள்ளது.

குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இப்படி உலகின் நிலைகள் இன்று எத்தனையோ வளர்ந்து விட்டது வளர்ந்து கொண்டே உள்ளது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது… தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் பக்தி மார்க்கங்கள் ஏராளமாக வந்துவிட்டது.

அரசர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ளது போன்று… மனிதனை மனிதனாக வாழ விடாது ஆசையின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவ்வழியிலேயே வாழ்வோம் என்று உருவாக்கப்பட்டு விட்டது.

தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைப்பட்டு அந்த நஞ்சை வளர்த்து நஞ்சு கொண்ட உணர்வின் அணுக்களாக மாற்றி மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாக இன்று உருவாகிக் கொண்டுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.இதிலிருந்து விடுபட குரு காட்டிய அருள் வழியில்
2.தெளிந்த மனம் கொண்டு ஒவ்வொருவரும் அருள் வழியில் வளர வேண்டும்.

அருள் ஒளியின் உணர்வை வளர்த்துக் கொண்டால்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து… அங்கே நிலை கொண்டு பேரண்ட அகண்ட உலகில் உருப் பெறும் உணர்வினை ஒளியாக மாற்றி… என்றும் பேரின்ப்ப் பெரு வாழ்வாகவும்… மரணமில்லாப் பெருவாழ்வாகவும் வாழ்ந்திடவும் முடியும்

1.இதை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
2.இந்த உடலை விட்டு அகன்றால் அடுத்து மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையே இருக்கக் கூடாது

அப்படி நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்
1.அதனுடைய எல்லையை அடைவது தான்
2.நம்முடைய வாழ்க்கையின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.

எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை

எல்லாமே ஒரே சொந்தம் தான்… நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை

 

ஒவ்வொரு மனிதனும் தன் நிலை உணர்ந்து வாழ வேண்டும்.

எப்படி நாம் உண்ணும் உணவு நான் சந்தோஷ நிலை கொண்டு இருக்கும் பொழுது நல்ல மணமும் நல்ல சுவையும் கூடியதாக நம் நாவிற்கும் மனதிற்கும் தெரிகிறது

அந்நிலையில் உண்ணும் உணவு நம் உடம்பிற்கு அமிழ்தமாக அரும்பெரும் சுவை கூடியதாக நம் உள்ளமும் உடலும் ஏற்கிறது.

நாம் நம்மில் உள்ள பல கலக்கங்கள்… பல கஷ்ட நிலைகள் சோர்ந்த நிலை கொண்டு மனச்சங்கடத்துடன் உள்ள பொழுது… நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலும் மனமும் பெரும் சங்கடத்துடனே ஏற்று… அதில் உள்ள சுவையும் நம் நாவிற்கு ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாமல் நம் உடல் நிலையும் அதனால் பாதிக்கப்படுகிறது.
1.ஒன்று போல் உள்ள உணவை உண்டாலும்
2.நம் மனநிலையைப் பொறுத்துத் தான் உடல் ஆகாரத்தை எடுத்து நாம் ஆத்மாவிற்கு அளிக்கிறது.
3.ஒவ்வொருவரும் தன் சுவாச நிலையும் எண்ண அலைகளும் கொண்டு தான் இவ் உயிர் உடலை இயக்கி வாழ்கின்றோம்.

எப்படி ஒரு பொருளையோ நாம் சமைக்கும் சமையலையோ நம் எண்ணத்தை அதன் மேல் செலுத்திப் பக்குவப்படுத்திப் பதம் பார்த்துச் செய்கின்றோமோ… எந்த ஒரு பொருளுக்கும் நாம் செய்யும் பொழுது “அதன் பதம் அறிந்து செய்தால்தான்” அது முழுமை அடைகிறது.

அதைப் போல் தான் இவ்வுடல் எனும் கூட்டை
1.இவ்வுள்ளத்தினாலும் இச்சுவாசத்தினாலும் தான் இவ்வுடலுக்குப் பதமறிந்து
2.சந்தோச நிலை கோப நிலை என்ற நிலையில் நாம் நம்மைச் சமமாக நிலைப்படுத்திக் கொண்டு இவ் உடலையே பக்குவப்படுத்திப் பதமறிந்து
3.நாம் நம் ஆத்மாவை வணங்கி வாழும் நிலைக்கு நம்மை நாம் பதப்படுத்தி வாழ்ந்திட வேண்டுமப்பா.
4.நம்மில் நம்மைச் சுற்றிப் பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் அடிபணிந்து வாழ்ந்திடாமல் “நமக்கு நாம் அடிபணிந்து வாழ வேண்டும்…”

நாம் எடுத்திடும் சுவாச நிலைகள் எல்லாம் நம் உடலுக்கு எந்தெந்த நிலையில் நாம் எடுக்கின்றோமோ அதைக் கொண்டுதான் “நன்மையும் தீமையும் அமைகின்றது” என்பதனை உணர்ந்து நம்மை நாம் பக்குவப்படுத்திச் சமப்படுத்தி வாழ வேண்டும்.

இப்பாட முறை கொண்டு நீங்கள் பகுத்தறிந்து உணர்ந்து… நமக்கு முன் உபதேசித்த பல பெரியோர்களின் வழியில் நடந்து ஏற்றமுடன் நல் எண்ணம் கொண்டே பதப்படுத்தி வாழ்ந்திடுங்கள் “பக்குவ நிலையில்…”

நாம் வேறல்ல இவ்வுலகம் வேறல்ல இவ்வுலக அனைத்திலும் உள்ள உயிரணுக்கள் வேறல்ல அச்சக்தியின் அருளில் உருளும் இவ்வுலகத்தில் உதித்துள்ள உயிரணுக்கள் எல்லாமே… “எல்லாமே ஒரே சொந்தம் தான்…”
1.நம்மை நாம் பிரித்து வாழ வேண்டியதில்லை. நம்முள் கலந்தது தான் எல்லாமே.
2.அவ் எல்லாவற்றிலும் கலந்து உள்ளவர்தான் நாமுமே.
3.நான் என்ற தனி நிலை இல்லாத நாம்…
4.இந்த உருளுகின்ற உலகுடன் உலகமாகச் சுற்றி நாம் பெற்ற அருளை நம்முள் ஈர்த்து வாழ்ந்திடுவோம்
5..நல் மனத்துடனும் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம்.

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது

“தானாக உணர்ந்து செயல்படும் நிலை” இன்றுள்ள மனிதர்களுக்குக் குறைவுபட்டு விட்டது

 

அறியாதவர்க்கு அரிய எண்ணத்துடனே அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற அதிக ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர் கல்லாதவர் அறிந்தவர் அறியாதவர் ஏழை செல்வந்தன் இப்படிப் பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இவ்வுலகமே சுழல்கின்றது.

கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும் கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு எண்ணமும் தன் மனதிலுள்ளேயே உலக மக்கள் ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த மாய ரூபத்தையே மனதினில் எல்லாம் கலக்கவிட்டு வாழ்கின்றார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தி உள்ளார். இன்றுள்ள நம் மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணத்துடன் தான் எண்ணி வாழ்கின்றார்கள்.

ஏட்டுப் படிப்பிற்கு பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தி உள்ளதால் அந்நிலைக்காக ஏங்குபவர் பலர் உள்ளனர். படிப்பும் பட்டமும் இன்று அளித்த மாய ரூபங்கள் தான் இவை.

1.தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
2.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
3.அன்று கம்பர் எழுதிய கவிதை எல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்று படிக்கப்பட்டதப்பா…?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசரும் வால்மீகியும் சேக்ஸ்பியரும் இப்படி எண்ணிலடங்காப் பல ஞானிகளும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டு தான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளியிலும் கல்லூரியிலும் சொல்லி வருகிறார்கள்.

அப்படிப்பைக் குழந்தைகள் நிலைக்கு இன்றுள்ள உபாத்தியாயார்கள் மதிப்பெண்ணும் தருகின்றார்கள். இன்றுள்ள இக்கலியுகமே தானாக உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றி வருகிறது.

உலகில் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மமனிதனின் எண்ணத்தில் மட்டும்தான்… தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழுகின்றான் இன்றுள்ள மனிதன்.

1.மனிதர்களின் மனம் எல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
2.பிறர் சொல்லிய உண்மைகளை ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
3.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.
4.இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது.

ஏன் அச்சூரிய சக்தியின் நிலை ஒரே நிலையில் உள்ள பொழுது நம் உணர்வின் நிலையும் உயிரணுவின் நிலையும் மாறுபட்டுள்ளன என்று மனநிலையில் நீங்கள் எல்லோரும் எண்ணிடலாம்.

நாம் உண்ணும் உணவிலும் தாவரங்களிலும் அதனதன் தன்மை கொண்டு அவைகள் உற்பத்தியாக இன்றுள்ள பூமி நிலை இல்லையப்பா.

இன்று இப்பூமியில் வீசிடும் காற்றே பெரும் விஷத்துடன் வீசும் போது
1.அந்தத் தாவரங்கள் எந்த நிலை கொண்டு வளருமப்பா…?
2.தாவரங்கள் மட்டுமல்ல இன்று வளரும் குழந்தைகளின் நிலையும் எப்படியப்பா இருந்திடும்…?

விஷமான காற்றைச் சுவாசிக்கும் மனிதனின் மனநிலையும்… தாவர நிலைக்கும்… இன்றைய மனிதர்களின் ஆராய்ச்சியில் வந்த “பல வகை மருந்துகளின் நிலை கொண்டு தான்” மனிதனும் தாவரங்களும் வாழ்கின்றதப்பா.

பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலம் எந்த நிலை கொண்டு வீசுகின்றதோ அந்த நிலை கொண்டு தான் அச்சூரியனின் ஒளி காற்றில் பட்டவுடன் தாவரங்களின் தன்மையும் வளரும் நிலையில் உள்ளது.

இக்காற்றையே நம் செயற்கைக்காக நம்முடைய எண்ணத்தில் எண்ணும் சுகபோகங்களுக்காக நாம் உற்பத்தி செய்திடும் பல செயற்கையின் தன்மையினால் இப்பூமியிலிருந்து எடுத்த பல உன்னதத் திரவியங்களை (பெட்ரோல்) நம் செயற்கைக்காக உபயோகப்படுத்தி… அதை விஷமாக இக்காற்றிலே கலக்க விட்டு அவ்விஷத்தன்மையுள்ள காற்றையே இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் சுவாசிக்கும் நிலையினால் தான்… இன்றைய மனிதர்களின் நிலையும் மற்ற ஜீவராசிகளின் நிலையும் உள்ளதப்பா.

இப்பூமியில் விளைந்திடும் பலவித நறுமணங்கள் கொண்ட நல் மணத்தை நம் சுவாச நிலைக்கு நாம் ஏற்றுக் கொள்ளும் நிலையை நாம் மாற்றிக் கொண்டு வாழ்கின்றோம்.

பல வகைத் தாவரங்களிலிருந்து நம் உடலுக்கும் மனதிற்கும் எந்தெந்த நிலையில் அவை நன்மை அளிக்கின்றன…? அதனால் நம் உடலுக்கும் எண்ணத்திற்கும் எந்த நிலை பெறுகிறது…? என்று உணர்ந்து
1.இன்று பல தாவரங்களை மரம் செடி கொடிகளை நம் தேவைக்காக அழித்து வாழ்ந்திடும் நாம் ஒன்றை அழிக்கும் பொழுது
2.இரண்டை உற்பத்தி செய்யும் நிலைக்கு ஏனப்பா நாம் வரக்கூடாது…?

தாவரங்களினால் தான் இக்காற்றி கலந்துள்ள விஷத் தன்மையை ஈர்த்து இக்காற்றைச் சுத்தமாக்கும் நிலை உள்ளதப்பா. இத்தத் தாவரங்களின் உற்பத்தியை உணர்ந்து ஒவ்வொரு மனிதரும் இச்செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா.

இயற்கையின் உன்னத அழகைக் கண்டு சுவாசித்து மகிழ்ந்தாலே நம் உயிரணுவிற்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றதப்பா.

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அச்சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும். தானும் ஒரு திருவள்ளுவராகவும் வான்மீகியாகவும் இயேசு பிரானாகவும் இப்படிப் பல நிலை கொண்ட ஞானிகளைப் போல் தானும் ஆகலாம் என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து ஒன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

இருந்த உண்மையையே விவாதத்திற்கு ஏற்கும் தன்மையை மாற்றி
1.தான் கற்கும் கல்வி தன் உணர்வினால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
2.இவ்வுலக நன்மைக்காக இவ்வுயிரணுக்களின் நன்மைக்காக இவ்விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
3.கல்கி எனும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கைச் சக்தியைப் பெற்றிட
4.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

தேவர்களுடன் தேவர்களாக நாம் ஐக்கியப்பட வேண்டும்

 

இன்றைய உலகம் பெரும் விஷத்தன்மை வாய்ந்த உலகமாக மாறிக் கொண்டு வருகின்றது… நல்ல பாம்பின் விஷம் கொடும் விஷம் என்கிறார்கள்,

அந்த நல்ல பாம்பிற்கு… அந்த நாக தேவனுக்கு அவ்விஷம் எங்கிருந்தப்பா வந்தது…?
1.இக்காற்றினில் கலந்திருக்கும் கடுமையான விஷ நிலையை…
2.தன் சுவாச நிலைக்குk கடும் விஷத்தை ஈர்த்துத் தன் ஆகாரமாக ஏற்று… அவ்விஷத்தையே உண்டு…
3.பல நூறு ஆண்டு கணக்குகள் தான் சுவாசித்த விஷ அணுக்களைத் தன்னுள்ளையே பல ஆண்டுகள் அடக்கி
4.விஷத்தையே மேலும் மேலும் ஈர்த்து அவ்விஷத்தைக் கொண்டு பெரும் மாணிக்கமாக
5.அதைத் தன் ஜீவன் முடியும் காலத்தில் கக்கி வெளிப்படுத்துகின்றது.

நல்ல பாம்பு… விஷத்தைத் தன் தொண்டைக்குழி இடத்தில் சிறுகச் சிறுகப் பல ஆண்டுகள் சேமிக்கிறது. அச்சூரியனின் சக்தி அந்த நல்ல பாம்பின் மேல் படும்பொழுது அதன் பார்வையைக் கொண்டு தன் நிலைக்கு நேராக ஈர்த்து…
1.தான் எடுக்கும் சுவாச நிலை… மேல் நோக்கி…
2.அச்சூரியனின் சக்தியிலிருந்து தன்னுள் ஈர்ப்பதாக இருக்கின்றது.

இந்நிலை கொண்டு அப்பாம்பு இக்காற்றில் கலந்துள்ள விஷமான காற்றைத் தன் சுவாசத்திற்கு ஈர்த்துக் கொடிய விஷத்தைக் கொண்டே தான் சேமித்து வைத்திடும் விஷத்தையே மாணிக்கக் கல்லாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது அந்த நல்ல பாம்பு.

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன.
1.தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி
2.அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி… எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!

வசி…வசி…! என்று வசியம் செய்யும் மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளிடமிருந்து விடுபடுங்களப்பா…!

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்று வசிய மந்திரம் ஜெபித்த ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

“வசி… வசி… வசி…” என்று எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா.

நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் “ஜெபம் என்றால் என்ன…?” என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன…? என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியை தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் “மகான்” என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் முதலில் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியைப் புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

மறைக்கப்பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டு…! என்றார் குருநாதர்

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட நிலையில் இன்று நம் சூரியனே பாழடையும் தன்மையில் இருக்கின்றது அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழுகின்றோம். இதிலே வளர்ந்த மனிதன் அணுகுண்டுகளை நான்கு திசையிலும் செலுத்தினான் என்றால் இந்த சூரியனே அழிந்துவிடலாம்.

மற்ற பிரபஞ்சம் சிதைந்து அதிலிருந்து விலகி வரும் கோள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்தால்… பூமிக்குள் வந்து தாக்கி விடாதபடி இராக்கெட்டுகளைத் தயார் நிலையில் வைத்து… அணுகுண்டுகளையும் வைத்து… அதன் வீரிய உணர்வு சுக்கு நூறாகத் தெறிக்கச் செய்வதற்காக விஞ்ஞானிகள் வைத்திருந்தார்கள்.

ஆனால் அப்படி வந்த அந்தச் சிதைந்த கோள் வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இணைந்ததால் அங்கே விழுந்து… அதனின் சுழற்சியில் கவரப்பட்டு… வெப்பத்தால் கரைந்து ஆவிகளாக மாறி… அந்த ஆவியின் தன்மை உறைபனியாக மாற்றி வைத்துக் கொண்டது.

பூமியை விடப் பெரிதான கோள் தான் வந்தது நம் பூமியிலே அது விழுந்தால் எந்தப் பகுதியில் விழுகின்றதோ மக்கள் தங்கள் அழிக்கப்படுகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விட்டால் பெரிய கோளாக மாறும். இரண்டு மடங்கு ஆகிவிட்டால் சுழற்சியின் வேகம் கூடி ஈர்ப்பின் தன்மை அதிகரித்துவிடும்.

அதிகரித்தால் வியாழன் கோள் போலவே நம் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் மடியும் தன்மை உருவாகிவிடும்.
1.இப்படி பிரபஞ்சங்கள் பலவாறு பல வகைகளிலும் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதையெல்லாம் அடித்து நொறுக்கும் சக்தி பெற்றிருந்தாலும் மக்களைக் காக்கும் நிலை இல்லை.

அன்று ஒரு காலம் அகஸ்தியன் தன்னுடைய பார்வையால் தனது உணர்வின் சக்தி கொண்டு…
1.பூமி நீளமாக வளர்ந்து கொண்டே செல்வதைக் குறைப்பதற்காகத் திசை திருப்பி
2.வட துருவத்தில் உருப் பெற்ற பனிப்பாறைகள் தென் துருவத்தின் வெப்பத்தால் கரைந்து கடல் நீராகப் பெருகச் செய்து சமப்படுத்தினான்
3.இன்று வரை சீராக ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞானத்தின் நிலையில் பூமியிலே ஒரு பக்கம் அணுகுண்டுகளை வெடித்தார்கள் என்றால் சூரியனுடைய பிடிப்பு… அந்தக் காந்த அலைகளைத் தடுத்து நிறுத்தப்படும் பொழுது ஒரு பக்கம் ஈர்க்கும் தன்மை அதிகரித்துப் பூமி குடை சாயும் நிலை வரும்.

ஆக காலம் கடந்த நிலைகள் கொண்டு
1.இப்போதாவது இந்த உண்மைகளை அறிந்து கொண்டோம்… தவறவிட்டால் தப்பும் மார்க்கம் ஏது…?
2.இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அறிவதற்காக வேண்டிக் காடு மலைகளை எல்லாம் குருநாதர் எம்மை (ஞானகுரு) அலைய வைத்தார். பல உணர்வுகளைப் பதிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அந்தப் பதிவின் நிலைகள் அனைத்தும் அறிந்து கொண்ட பின் நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். குருநாதர் சொன்னது
1.மறைந்த நிலையினை மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டு.
2.இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும்
3.மக்களின் உணர்வுகள் உனக்குள் உண்டு அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை நீ எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகிறது.
4.நீயும் ஒளியாக ஆகின்றாய் கேட்பவர் உணர்வுகளிலும் ஒளியாகின்றது
5.பிறவி என்ற நிலையை அகற்றுகின்றாய் அருள் ஒளி என்ற நிலையில் வாழ்கின்றாய்.
6.உன்னுடைய வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமைகின்றது.
7.பேரருளை உனக்குள் வளர்த்துவிடு… எல்லோரையும் பேரின்பம் பெறச் செய்.
8.அதுவே உனக்குப் பேரானந்த நிலையில் ஏகாந்த நிலை பெற உனக்கு உதவும் என்று கூறினார்.

அதன் வழி தான் உங்களுக்குள் இருளை அகற்றும் அருள் ஒளியைப் பாய்ச்சி… உங்கள் நினைவு கொண்டு மாற்றிக் கொள்ளும் சக்தியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

அருள் ஒளியை நீங்கள் பெற்று இருளை அகற்றிடும் ஞானிகளாக நீங்கள் வளர வேண்டும்… விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து அனைவரையும் மீட்டிட வேண்டும்.

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

ஜீவனுள்ள கனி “எலுமிச்சங்கனி”

 

1.ஈர்க்கும் கனி…
2.ஈசனின் சக்தியையே ஈர்க்கும் கனி…
3.ஈசனின் கனி எலுமிச்சங்கனி.

இக்கனியின் தன்மையை வைத்துப் பூஜைக்கும் உணவிற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். நற்காரியங்களுக்கு இக்கனியைத் தருகின்றார்கள்.

பல வழிச் சாமியார்களும் இக்கனியைப் பூஜை செய்து இக்கனியில் மந்திரித்து மக்களுக்கு அளிக்கின்றார்கள். இக்கனியின் தன்மை என்ன…?

இவ் ஈசனின் எலுமிச்சங்கனியின் தன்மை “பெரும் ஈர்க்கும் சக்தி உள்ள கனியப்பா…” இக்கனியைக் கையில் வைத்து நீ சில நிலைகளை நினைக்கும்போது உன் சுவாச நிலையைக் கனி ஈர்க்கிறது.

அந்நிலையில் அக்கனியை நீ முகர்ந்திட்டால் அக்கனியின் மணத்தை வைத்து உன் நிலை என்ன…? என்பதைக் கனியின் மணத்திலிருந்து உன் மன நிலையை நீ அறிந்திடலாம்.

இவ் ஈசனின் கனியைக் கையில் ஏந்தி
1.உன் மன நிலையைச் சந்தோசமாக்கி வேண்டிக் கொண்டால் நீ நினைக்கும் எந்தக் காரியத்தையும் அக்கனி ஈர்க்கிறது.
2.காரியம் முடியும் வரை தன் சக்தியின் அருளை உனக்கு அருள்கின்றது.

ஒரு எலுமிச்சங்கனியை உன் இல்லத்திற்கு வாங்கி வந்து உன் கையில் வைத்து அவ்வாண்டவனை வணங்கி அக்கனிக்குக் கற்பூர ஆராதனை காட்டி… அந்நிலையில் ஒரு காரியத்தை எண்ணிக் கொண்டு நீ வணங்கிடும் தெய்வ நிலையில் உள்ளவர்களை அழைத்திட்டால்… அந்நிலைக்கு அவர்கள் வருகின்றார்கள்.

அவ்வீர்ப்புத்தன்மை அந்தக் கனிக்கு உள்ளது. “காந்தத்தின்” ஈர்ப்பு நிலை போல் அக்கனிக்கும் ஈர்ப்பு நிலை உள்ளது.
பல சாமியார்களைப் பற்றிச் சொன்னேன் அல்லவா…! அவர்கள் நிலையில் எல்லோரும் எலுமிச்சங்கனியை வைத்திருப்பார்கள். அவர்கள் ஜெபத்திற்கும் அக்கருவித்து வேலைக்கும் இந்த எலுமிச்சங்ககனியைத்தான் தன் வசத்திற்கு வைத்துக் கொள்கின்றார்கள். இக்கனியின் தன்மையைப் பற்றி பல பல செப்பிடலாம்.

இக்கனி ஈர்க்கும் நிலையில் தன்னுள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொள்கின்றது.
1.இக்கனிக்குச் சுவாச நிலை உள்ளது
2.இக்கனியைக் கையில் வைத்தால் இவ்வுலக சுற்றலையே அறிந்திடலாம்.

இக்கனியை வீட்டின் முகப்பில் கட்டுவது இக்கனியைக் காண்பவர்கள் எண்ணத்தைத் தன்னுள் ஈர்க்கிறது இக்கனி. அவர்கள் எண்ணம் நம்மை வந்து தாக்குவதில்லை. புரிகிறதா…?

கனியின் தன்மையிலேயே அவர்கள் எண்ணம் அந்த இடத்தில் அடிபடுகிறது. நம்மை வந்து அது அண்டுவதில்லை.

திருஷ்டி என்ற பெயரில் நீ கட்டுகின்றாய்… என்ன என்று புரியாமல்…! ஏன் மற்ற கனிகளை அந்நிலைக்குக் கட்டக்கூடாதா…? இக்கனிதான் சக்திக்கனி. இதனுடைய நிலை எக்கனிக்கும் இல்லை இவ்வுலகம் முழுவதுமே.

இக்கனியை வைத்துதான் பிழைக்கின்றார்கள் பல பல சாமியார்கள் எல்லாம் புரிந்ததா…?

1.இக்கனியின் சாறு எடுத்து மஞ்சளைக் கலந்து புருவத்தின் மத்தியில் இடுவதும் அவ்வீர்ப்பு நிலைக்குத்தான்.
2.நல்ல எண்ணத்துடன் இக்கனியில் செய்த குங்குமத்தை வைத்துக் கொண்டால்
3.தீய துர் ஆவிகள் வந்து அண்டிடாது என்பதெல்லாம் இதன் பொருளே.