நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?

நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்துக் கோப்ப்படுகின்றோம். கோபத்தை உண்டாக்கும் அணுவாக உருவாக்கி விட்டால் உடலில் என்ன நடக்கிறது…?

கோழிக் குஞ்சு முட்டையை விட்டு வந்த பின் அது கத்துகின்றது… அதற்கு இரை தேடுகின்றது. அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின் கோழி கூப்பிட்டு இரையைக் கொடுக்கின்றது.

இதைப் போல
1.நம் உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கரு முட்டை நம் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
2.எந்த உறுப்புக்குள் அது தேங்கி விடுகின்றதோ தேங்கிய அணு அதனின்று தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.இந்த இரத்தங்கள் நம் மூளை வரையிலும் போய்வரும்.
4.சிறு மூளை பாகம் சென்ற உடனே இந்த உணர்வுகள் உந்திய பின்
5.ஒருவரை உற்றுப் பார்த்து அந்த அலைகளை முதலில் எப்படி நுகர்ந்தோமோ அந்த நினைவு வரும்.
6.அயோக்கியப் பயல்…! இந்த மாதிரித் தவறு செய்தான் பார் என்று…!
7.நம்மை அறியாமலேயே அவன் நினைவு வரும்… அந்த அலைகளை நாம் நுகர நேரும்.
8.நுகர்ந்த பின் அந்த அணுத்தன்மை நம் உடலில் பெருகும்.
9.இரத்தங்களில் கலந்த பின் நமக்குள் அந்த அணு இதை உணவாக எடுத்துக் கொள்ளும்.

கோழி எப்படித் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கின்றதோ இதை போலத் தான்… நமது உயிர் நாம் எண்ணியதைக் கருவாக்கி உருவாக்கி விட்டால் அணுவாகி விட்டால் அந்த உணர்ச்சியைக் கேட்டவுடன் உயிர் எடுத்து அதை உணவாகக் கொடுக்கும்.

ஆனால் உயிரிலே படும் பொழுது அவனை எப்படி நாம் கோபமாகப் பேசினோமோ அந்த உணர்வெல்லாம் கலந்து நம் இரத்தங்களிலே கலக்கும்.
1.இரத்தங்களிலே ஓடிக்கொண்டிருப்பதை அணுக்கள் சாப்பிடும்.
2.நம் உறுப்புடன் ஒட்டி இருக்கப்படும் போது தன் குஞ்சுகளைப் பெருக்க ஆரம்பிக்கும்… தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறது.
3.தன் இனத்தைப் பெருக்கப் பெருக்க நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட நம்முடைய உறுப்புகள்
4.இரத்தக் கொதிப்பு என்று வரும் பொழுது வீரிய உணர்வாக வரும்.

நல்ல அணுக்களில் இது பட்ட பின் புலி எப்படி மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்கின்றதோ இதைப்போல தசைகளில் இருப்பதைத் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள அந்த அணுக்கள் விழுங்கத் தொடங்கிவிடுகின்றது.

அப்போது தசைகளில் வலியும் வேதனையும் வீக்கமும் அதிகமாக வரத் தொடங்குகிறது. இந்த மணங்கள் தோன்றத் தோன்ற இனம் புரியாதபடி நம்மை இயக்கும்.

ஏதாவது ஒரு வேலையை செய்வோம் அங்கே ஒருவர் வருவார் அவருடைய செயலைப் பார்த்தபின் இனம் புரியாது கோபப்படுவோம்.
1.அந்த உணர்வு அதைச் சாப்பாடாகக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
2.இப்படி இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி விட்டால் நல்ல ஆணுக்கள் பூராமே செயலிழக்கத் தொடங்கிவிடும்.

கோபமான உணர்வை எடுக்க எடுக்க உடல் எரிச்சல் கண் எரிச்சல் கால் காந்தல் இதை போன்று அந்த அணுக்கள் பரவும் இடங்களில் எல்லாம் இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அதே சமயத்தில் மன எரிச்சல்…!
1.நெஞ்சுக்கு முன் அந்தக் கோபமான நிலைகள் இங்கே வந்த உடனே இருதய பாகம் மோதி அங்கே நிறுத்தும்.
2.அந்த உணர்வு வரும் பொழுது கடிகாரம் போன்ற அதை இழுத்து வைக்கும்.
3.இழுத்து வைத்துத் தான் உயிருக்குக் கொடுக்கும் அப்பொழுது இருதய பாகங்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கிவிடும்… எரிச்சல் ஏற்படும்.
4.நாம் சுவாசிக்கும் போது நமக்குள் எரிச்சல் என்ற உணர்வே வரும்.

இப்படி ஒருவன் தவறாகச் செயல்பட்டதை நாம் நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது நம் உயிர் அந்தக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

உருவாக்கி விட்டால் நம் கண்கொண்டு பார்த்ததை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்கி வைத்திருக்கின்றது.

நீங்கள் மருந்து சாப்பிட்டு நோயைத் தணித்தாலும் வயல்களில் களைகள் முளைத்தால் களைகளை நீக்கினாலும் மறுபடியும் களை முளைக்கும். இதைப்போல நமக்குள் அந்தக் கோபத்தின் உணர்வை ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது நம் உடலில் இது பதிவாகின்றது.

இரத்தத்தைப் பரிசோதிக்கின்றார்கள். இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நாம் கோபப்பட்டோமோ ரத்த கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றது இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு வேதனைப்படுத்தினார்களோ வேதனை உருவாக்கும் அணுக்கள் இருக்கின்றது.

ஏனென்றால் கோபம் வரும் பொழுது எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனை என்ற நிலை வரும் அதற்கு சாப்பாடு இங்கே தயாராக இருக்கின்றது.

1.இப்படி இது இரண்டும் மோதும் பொழுது இயக்கச் சக்தி மாறிவிட்டால் நமது உமிழ் நீர் கெட்டியாக மாற்றக்கூடிய அணுக்களாக வந்துவிடும்.
2.சாப்பிடுவோம்… தண்ணீர் குடித்த பின் பார்த்தால் கொழ… கொழ… என்று ஆகிவிடும்… சளியாகிவிடும்.
3.இந்த அணுக்கள் உருவான பிற்பாடு நுரையீரல் பக்கம் சென்று விட்டால்… அஹ்..அஹ்ஹ்… என்று மூச்சுத் திணறல் வந்துவிடும்.

இதையே நாம் சுவாசிக்கும் பொழுது சிரசு பாகம் செல்லும் பொழுது இந்த உணர்ச்சிகளைத் தூண்டும்… மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பிக்கும். இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?

நம்முடைய எண்ணத்தால் வருவது தான்…!

உயிர் என்ன செய்கின்றது…? நாம் எதை எண்ணுகின்றோமோ சீதாலட்சுமியாக இருப்பதை நுகர்ந்த உடனே உயிரிலே பட்ட பின் சீதாராமா நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் (உடலுக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது).
1.ஒரு மனித உடலில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த நிலை.
2.இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் அல்லவா…!

கணவனும் மனைவியும் தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!

கணவனும் மனைவியும் தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!

 

துருவ தியானத்தில் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் ஒவ்வொரு உயிரிலும் ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள் உண்டு பெண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்தால் அது பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி பெண்ணாகும் உறுப்புகளையும் உணர்வுகளையும் மாற்றுகின்றது.

அதே போல் ஆண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமானால் ஆண்களாக மாற்றுகின்றது.
1.ஆண்பால் என்ற நட்சத்திரம் இருந்தாலும் பெண்பாலின் உணர்வுகள் சிறிதளவாது கலந்திருந்தால்தான்
2.இந்த உணர்வே உணர்வாகி அணுவின் தன்மை பெருக்கி உடலை வளர்க்கவே உதவுகின்றது.

பெண்பால் என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது உடலின் அமைப்பு வந்தாலும் ஆண்பால் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது கவர்ந்து தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் கலந்து கொண்ட உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைப்பும்… மற்றதை வளர்ப்பதும்… தனக்குள் உருவாவதும் என்ற நிலை உருவாகின்றது.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒருவனால் தான் உயர்ந்த நிலை பெற முடியும்.

1.முதல் மனிதன் அகஸ்தியன் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த பின் மனைவிக்கு அதையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றான்.
2.கணவன் வழியிலேயே அந்த மனைவியும் செயல்பட்டதனால் அந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றி வாழ்ந்தது.
3.அதன் வழி தான் அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றார்கள்.

அதிலிருந்து வரும் உணர்வைத்தான் எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்ற நிலையும் அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நுகர்ந்து நாம் இந்த உடலில் வளர்த்து பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

1.இரத்த நாளங்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெருக்கப் பெருக்க நம் உடலில் உள்ள அணுக்களில் சிறுகச் சிறுக அது சேரும்.
2.அதன் உணர்வுக்கொப்ப உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறும்.
3.கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் இனி பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.

விஞ்ஞான அறிவால் பேரழிவாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் அவன் பெற்ற பேரருளை நாமும் பெற்று அணுவின் இயக்கங்களை அறிந்து சிந்தித்து செயல்படும் தன்மையும் ஒன்றுபட்ட நிலைகள் கணவன் மனைவிக்குள் வரவேண்டும்.

தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!

அதற்குப்பின் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட விஷத்தன்மைகள் அதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பத்தை விட்டால் நம்மை அது கணவன் மனைவி நிலைகளை மாற்றிவிடும்.

அது போன்ற நிலைகள் வராதபடி தடுத்து கணவன் மனைவியும் அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று அதிகாலையில் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

கணவன் மனைவி வேறு வேறு ஊரில் இருந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
2.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் இருவருமே எண்ணுங்கள்.
3.அதன் உணர்வுப்படி ஒளியான அணுக்களாக மாறும்.

இதன் வழி செய்தால் மூதாதையர்களை விண்ணிலே செலுத்த முடியும். இதற்கு முன் செய்யவில்லை.

இப்பொழுதாவது இதைச் செயல்படுத்தி அவர்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து
1.நாமும் அந்த ஞானிகள் சென்ற வழியில் ரிஷி ரிஷிபத்தினி என்ற நிலையில்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சிருஷ்டிக்கும் சக்தியாக உருவாக முடியும்.

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்

 

“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”

திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”

1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.

உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.

காற்றோலம்… வாயோலம்…!

காற்றோலம்… வாயோலம்…!

 

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் அன்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

 

“அணு ஆயுத இயந்திரங்களை…” கால மணிகளை உருவாக்கும் நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக் முறைப்படி நாடாக்களில் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதன் மூலம் விஷத்தன்மை கொண்ட அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.

மற்ற நாடுகளில் இராக்கெட்டுகளை ஏவுவதற்காக அதாவது அங்கிருந்து எதிர் அலைகள் வந்தால் சீறிப்பாய்ந்து அந்த இலக்கினைத் தாக்குவதற்காக… அடுத்த நாட்டை அழிப்பதற்காக இப்படி வைத்துள்ளார்கள்.

விமானங்களையும் இராக்கெட்டுகளையும் கம்ப்யூட்டர் துணை கொண்டு இயக்கச் செய்யும்… உணர்வின் அறிவு எலக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு எதிர் அலை கொண்டு இவன் இடும் கட்டளைகளைச் சீராக வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் சூரியனுக்குள் இயங்கும் எலக்ட்ரிக் இப்போது அதிகமாகி விட்டால் என்ன நடக்கும்…?

இன்று வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் அதிகமாகிவிட்டால் பல்புகள் ஃபியூசாகி விடுகின்றது. அதைப் போல்
1.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் அதிகரிக்கப்படும் பொழுது உற்பத்தியாகும் எலக்ட்ரிக் அதிகமாகி
2.சீராக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக்… குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்தச் சாதனங்கள் செயலிழந்து விடும்
3.இராக்கெட்டுகளோ மற்ற சாதனங்களோ தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும்.

காரணம் அதற்கென்ற மானிட்டர்கள் வைத்துச் செயல்படுவது செயலிழந்து… சிதைவுண்டு… விஷத் தன்மைகள் அதிகளவில் பரவும் நிலை உண்டு.
1.அத்தகைய நிலை வெகு நாளில் இல்லை… வெகு துரிதத்தில் இயங்கி விடும்.
2.இதைக் குறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்… விஞ்ஞானிகளை அறியாமலே இத்தகைய சிதைவுகள் இனி வரும்.

நடக்கப் போகும் அத்தகைய கொதி நிலைகளில் இருந்து தப்ப வேண்டும் அல்லவா. ஆகவே உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

விஷத்தன்மைகள் பரவி விட்டால் இந்தப் பூமி பரிசுத்தமாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். அதற்குள் மனிதர்கள் வாழ்ந்தால் மிருகமாகத் தான் வாழ வேண்டும்.

விஷத் தன்மை கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் ஆரம்ப நிலையில் இந்த பூமியில் உருவான மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தது போன்று தான் வாழ முடியும். சிந்திக்கும் தன்மை இழந்தே இருக்கும்.

1.ஆகவே இப்பொழுது நல்ல நினைவு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.
2.உங்கள் குடும்பங்களில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்கள் முன்னோர்கள் ஆன்மாக்களை விண் செலுத்த மறந்து விடாதீர்கள்.
3.அவர்களை ஒளியின் சரீரம் பெறச் செய்யுங்கள்.

அவர்கள் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இனி எதிர்காலம் விஞ்ஞான உலகில் இருந்து தப்பும் நிலையாக பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று செயல்படுத்துங்கள்

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விட்டால் நாம் விண்ணுலகம் செல்ல முடியும்.
1.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை உணவாக எடுத்து
2.ஒளியின் சுடராக வாழ்வது போன்று நாமும் வாழ முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இங்கிருந்து அகன்று சென்று மற்ற மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து விண்ணிலே “என்றும் 16” என்ற நிலையை அடைய முடியும்.

மனிதனான நாம் தான் இத்தகைய நிலையை உருவாக்க முடியும். அருள் ஞானத்தை நமக்குள் உருவாக்குவோம்… மெய் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று உங்களைப் பிரார்த்தித்து வேண்டிக் கொள்கின்றேன்.

நான் சொல்வதைத் தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள் குரு எனக்கு இந்த உண்மைகளை உணர்த்தினார் அதைத்தான் நீங்களும் பெற வேண்டும் என்று
1.உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலைச் சிவமாக மதித்து
2.அந்த உயர்ந்த நிலை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன்.

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற விஷஜந்துக்களும் உள்ளிட்ட சாகரம் தான் மனித வாழ்க்கை நிலை

 

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழி காட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராகச் செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

 

இராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் சுவை மிக்க நிலை சீதாராமன்…!
1.அந்தச் சுவைமிக்க உணர்வு கொண்டு… சொல்லாக உணர்ச்சிகள் உடலுக்குள் வரும்பொழுது
2.உடலுக்குள் உருவான சிவ தனுசு உடலைக் காக்கும் நிலைகளில் இருந்து அருள் ஒளியின் உணர்வாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும்.

சிவ தனுசு விஷ்ணு தனுசு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருளை எப்படிக் காண வேண்டும்…? என்று கூறப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடும் யுத்த காலமாக இருக்கிறது. பார்த்தால் சமாதானமாகப் போவதாகத் தெரிய வரலாம். இருந்தாலும் ஒவ்வொரு நொடிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியின் தன்மைகள் அதிகரித்து… “மிரட்டும்” தன்மையே வந்துவிடும்.

விஷமான குண்டை ஒரு நாட்டின் மீது போட்டால் அது வெடிக்கும் தன்மை விஞ்ஞான அறிவால் வந்துவிடும்.
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற இயக்க சக்தியின் நிலைகள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் இருக்கும் அந்த நிலைகள் (குண்டுகள்)
2.ஒரு நொடி திசை மாறினால் விஷ குண்டுகள் முழுவதும் வெடிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வந்துவிடும்.

அப்படிப் பரவினால் மக்களை அழித்திடும் உணர்வாகவே வந்துவிடும். விஷ உணர்வுகள் பரவினால் உடலை விட்டுச் சென்ற பின் புழுவாகப் பூச்சியாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் பல காலம் கழித்துத் தான் மீண்டும் மனிதனாக உருப் பெரும் நிலை உருவாகும்.

1.மனித உடலில் இனி இருப்பார்கள்.. ஆனால் அசுரனாகத்தான் இருப்பார்கள்.
2.அதே சமயத்தில் கடும் நோய்களாக உருவாகிவிடும்.
3.கேன்சர் டிபி போன்ற நிலையில் எல்லாம் விஷத்தன்மையால் உருவானது தான்.

இவைகளில் இருந்து நாம் மீள துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தியானித்து அந்த வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தல் வேண்டும்.

அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்பட்டு அதன் துணை கொண்டு நமக்குள்ளும் இருக்கும் நஞ்சின் உணர்வுகளை நாம் கரைக்க முடியும்.

பற்றும் பாசத்துடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நோயின் உணர்வு கொண்ட நிலையில் பண்பால் பரிவால் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தான் வளர்கின்றது. அந்தத் தீயவினைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அந்த மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கப்படும் பொழுது உடலில் பெற்ற நஞ்சு கரைக்கப்படுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழத் தொடங்குகிறது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை உணவாக எடுத்து வாழத் தொடங்குகிறது.

ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றினார்கள் என்பது இதுதான். ஆகவே உடலை விட்டு யார் பிரிந்து சென்றாலும் அந்த 48 நாட்களுக்குள் நாம் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.கணவன் மனைவியாக இருப்பினும் யார் முதலில் உடலை விட்டுச் சென்றாலும்
2.விண் செலுத்தும் உணர்வுடன் உந்திச் செலுத்தப்படும் பொழுது கணவன் மனைவி உயிரான்மாக்கள் இரண்டற இணைக்கப்பட்டு
3.ஒளியின் உணர்வாகி என்றுமே உணர்வின் ஒளியாகப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

வாழ்க்கையில் இதை நாம் அவசியம் பெறுதல் வேண்டும்.

பூரண பௌர்ணமி ஆன நிலையில் சப்தரிஷி மண்டலம் அருகில் வரும் அந்தச் சமயத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நாம் எண்ணி எடுக்கப்படும் பொழுது அதைக் கவர்ந்து ஒளி அலைகளைப் பரப்பி தியானத்தின் மூலமாக விண் செலுத்தும் ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக அது ஊன்றப்படுகின்றது.

அதை நினைவு கொண்டு மீண்டும் எங்கள் எண்ணி வளர்த்தல் வேண்டும் அதற்குத் தான் உபதேசிப்பது.

திட்டியவனை எண்ணியவுடன் அது பதிவாவது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் போதிக்கின்றேன்… ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

நீங்கள் மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “தீமைகள் அகற்றிடும் அந்த எண்ணம்” உங்களைக் காக்கும்.
1.எதை நுகர்கின்றீர்களோ உயிர் உங்களை இயக்கி நஞ்சினை நீக்குகின்றது… நல்ல உணர்வுகளை வளர்க்கின்றது
2.பிறவி இல்லாத நிலை அடையச் செய்கின்றது.

ஆகவே பேரரருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது

கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது

 

வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம் “நியூட்ரான்” குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அதை வெடிக்க நேர்ந்தால் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு உலகம் முழுவதுமே விஷத்தன்மையாகப் பரவும் நிலை வந்துவிடும்.

அது எந்த விஷத்தன்மையோ… ஆடு மாடு மற்ற உயிரினங்களில் பட்டால் புது விதமான அணுக்களாக மாற்றிவிடும். மனித உடலுக்குள் வந்தாலும் ஒரே இனமாக மாற்றிவிடும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் விஷம் கொண்ட அணுக்களாக மாறி விடுகின்றது.

1.இந்த குண்டைச் செய்தவனும் (நாடு) சரி… எந்த இடங்களில் வீசுகின்றார்களோ அங்கேயும் சரி…
2.அது காற்று மண்டலத்தில் பல லட்சம் மைல்கள் என்று கூடச் சொல்லலாம்…
3.அந்த விஷத்தன்மைகள் பரவி ஊடுருவும் தன்மை பெற்றது.

இப்படிப்பட்ட குண்டுகளை ஒருவருக்கொருவர் வீசி விட்டால் தேடிய செல்வமோ… கௌரவமோ… இந்த நாட்டை ஆட்சி புரிகின்றேன் அந்த நாட்டைப் பிடிக்கப் போகின்றேன் என்ற நிலையில் அரசியல் சூழ்நிலைகளால் வரும் நிலைகளோ… “எங்கே போகும்…? எப்படிப் போகும்…?” என்று நிலை இல்லாது போய்விட்டது.

அரசாங்க உத்தியோகத்தில் இருப்போரும் சரி அரசியல் வாழ்க்கையில் இருப்பவரும் சரி மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவதாக எண்ணுகின்றார்கள்.
1.ஆனால் ஒருவருக்கொருவர் உணர்வின் தன்மை மாற்றப்பட்டு
2.குற்ற இயல்பான உணர்வுகளை வளர்க்கும் தன்மையே வளர்ந்து விட்டது.

இப்படி வளர்ந்த இந்த உலகம் “மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொள்ளும் உணர்வுகள்” எல்லா நாடுகளுக்கும் தோன்றி விட்டது.

எல்லா நாடுகளும் இதைப் போல நியூட்ரான் என்று குண்டுகளைத் தயார் செய்து வெடிக்கச் செய்தால் எங்கே வெடிக்கின்றார்களோ எங்கே உருவாக்கினார்களோ அனைத்து உயிரினங்களும் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது.

இவர்கள் தேடிய விஞ்ஞானம் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலையாகத் தான் மாறுகின்றது.
1.கட்டிடங்கள் அப்படியே இருக்கும் மரம் செடி கொடிகள் அப்படியே இருக்கும்
2.ஆனால் தாவரங்களின் மரபு அணுக்களை மாற்றி அமைக்கும் சக்தியாக வந்துவிடும்.

அதிலே விளைந்த பொழுது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பொழுது… உயிர் அந்த உணர்வினை நுகரப்படும் போது அந்த விஷமான உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளை எழுப்புகின்றது.

நியூட்ரான் என்ற உணர்வலைகள் தாவரங்களில் எளிதில் ஊடுருவும் சக்தி பெற்றது. அவ்வாறு விஷத்தன்மையாக மாறி விட்டால் அந்த விஷத்தன்மை கொண்டதை உயிரினங்கள் நுகர நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகத் தான் மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த உலகம் கூடிய சீக்கிரம் விஷத் தன்மையாகப் பரவப்படும் பொழுது… மனிதனின் சிந்தனை சக்தியை இழக்கப்பட்டு மனித உடல் மாறும் நிலை வருகின்றது.

அப்படியே உடல்கள் இருந்தாலும் விஷத்தன்மை கொண்ட செயலைச் செயல்படுத்தும் நிலையும் சிந்தனையற்ற நிலைகளும் உருப்பெறுகின்றது.

உலகில் ஏற்படும் இத்தகைய நிலை…
1.கத்தியைத் தலைக்கு மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…? என்ற நிலையில் தான் இன்றைய வாழ்க்கை இருக்கின்றது.
2.இதிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால்
3.தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
4.அந்த அகஸ்தியனின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
5.நம் ஆன்மாவிலே அகஸ்தியன் உணர்வை வலுவாக்க வேண்டும்.

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

தீயதில் இருந்து “நல் முத்தை” எடுக்கும் வழி

 

உலக வாழ்க்கை… பந்த… கர்ம… காரியங்கள் நடத்திட…
1.உலகச் சுழற்சியுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையையே
2.நாம் வளரும் வாழ்க்கைக்கு வலுவாக்கிக் கொள்ளும் சத்தாக
3.அவற்றின் நிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு மரமானது பல விழுதுகளிட்டு வேர் ஓடி… விழுதின் மூலம் சத்தை எடுத்து அம்மரமானது வளருகின்றதோ அதைப் போன்றே வாழ்க்கை கர்ம காரியங்கள் யாவையும் “நம் உயர்வின் வளர்ச்சிக்குச் சத்தெடுக்கும் விழுதுகளாக” அமைக்க வேண்டும்.

1.தீயது என்று எதனையும் ஒதுக்காமல்
2.தீயதில் இருந்து தான் “நல் முத்தை” எடுக்கும் வழி முறை போன்று
3.எண்ணதின் உணர்வைச் செலுத்தும் ஒவ்வொரு செயலையுமே
4.ஞானிகள் காட்டிய வழியில் வழி நடந்து பக்குவப்படுத்திடல் வேண்டும்.

மனித எண்ணமுடன் பலருடன் கலந்துறவாடும் நிலையிலும் அவர்கள் எந்தக் குண எந்த வளர்ச்சியில் ஒன்றியிருந்தாலும்… நம் உணர்வின் எண்ணம் செலுத்தும் அலைக்குகந்த… அலை உணர்வின் எதிர் அலை சக்தியை நாம் பெறும் நிலை தான் உண்டு.

ஆகவே ஒவ்வொரு காலங்களிலும்
1.பூமியின் சுழற்சியில் இருந்து தான் – இருட்டில் இருந்து ஒளி பெறும் நிலையாக
2.உணர்வின் எண்ணம் செயல்படும் வலுவைக் கொண்டு தான்
3.ஆத்மாவின் வலுக்கூடிய நிலையில் ஆத்மாவின் இயக்க நிலை
4.ரிஷித் தொடர்புடன் ஒன்றிய உயர் நிலைக்குச் செல்லும்.

இத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் நாம் எப்படி முயற்சிக்க வேண்டும்…?

அதாவது சரீர அவயங்களில் இரண்டு நிலை கொண்ட உறுப்புகள்
1.இரண்டு கால்களைக் கொண்டு ஒத்த நிலையில் “நடை” போடும் இயக்க நிலை போன்றும்
2.இரண்டு கைகளைக் கொண்டு (“இணைந்த கைகளாக”) ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல் கொள்ளும் இயக்க நிலை போன்றும்
3.ஒளி ஈர்க்கும் கண்களை… ஒத்த நிலை ஒன்று போல் கூர் பாய்ச்சிக் காணும் நிலை போன்றும் இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் கண்களின் விழிகளின் அமைப்புச் சிறிது மாறினாலும் இரண்டு உருவ நிலையைத்தான் காண முடியும். ஒரு உருவமாகக் காண முடியாது.

ஆக.. ஏற்றத்தாழ்வு நிலையின்றி…
1.இரண்டு விழியைக் கொண்டு ஒன்றாகக் காணும் ஒளி நிலையைப் போன்றும்
2.செவி… சுவாசம்… “இவற்றின் இணைப்பு” இந்த இரண்டின்
3.ஒரு நிலை கூடும் செயலை ஒத்தும் அமைத்தல் வேண்டும்.

அது மட்டுமல்ல…!

1.“சிவம்” என்ற அமிலமும்..
2.“சக்தி” என்ற ஈர்ப்பும்…
3.பூமியாக உருப்பெற்ற தொடரில்
4.சிவசக்தி விநாயகனாக உருவம் பெற்ற ஆத்ம சரீர பிம்ப வளர்ப்பானது
5.எப்படி அந்த “ஆண் பெண் அமில உணர்வு” வளர்ச்சியில் வலுக் கொண்ட ஜீவ நிலை (ஜீவனுள்ள உடலை) பெற்றதுவோ
6.அதைப் போன்று இவ்வாத்ம வழித் தொடர் நிலையிலும்
7.ஆண் பெண் என்ற இணைப்பால் தொடர் கொள்ளும் வழி முறையில் ஆத்மீக வளர்ச்சி கொள்ள வேண்டும்.

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனி வரும் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்

 

எண்ணத்தின் உணர்வால் நற்குண சமைப்பான அமிலச் சேர்க்கையின் சமநிலை கொள்ளும் இப் பூமி வாழ்க்கைச் சுழற்சியில் சிக்குண்ட பல குண மோதல் நிலையிலும்… எண்ணத்தின் உணர்வு சமநிலை பெறத்தக்க வழி ஆற்றல் எண்ணம் கொண்டு சூரியனின் அலை சக்தியை காந்த மின் அலை வார்ப்பாக உடல் எலும்புகளின் ஊன் நிலை எடுக்கவல்ல வழிதனை மனித எண்ணத்தால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வலுவைக் கொண்டு…
1.இன்றைய இக்கலியில் சிதறுண்டு சிக்கித் தவிக்கும் மனிதனின் எண்ண உணர்வு வேட்கை
2.மனித ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து ஞான வளர்ச்சி குன்றியுள்ள இக்கலியின் கடைசிக் காலத்தில்
3.மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித்தொடர் அற்று
4.மனித எண்ணங்களும் ஆவி உலகில் உள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆவி ஆத்மாக்களும்
5.செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தி இயந்திர அலைத் தொடர்பின் ஒலி மோதலில் மனித ஆத்மா எடுத்து வெளிப்படுத்தும் சுவாச அலையும்
6.இயந்திர அலையில் வெளிப்படும் காந்த சக்தியைச் சமைத்து சமைக்கப்பட்டதின் ஒலி எடுத்து வெளிப்படுத்தும் மனித சுவாச அலை அணுக்கள்
7.அதற்குண்டான அணு வளர்ப்பைத்தான் வளர்க்கும் ஆற்றலைத் தான் பெற்றுள்ளது.

அதனால்… மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒலி ஈர்ப்பின் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக்கதிர்கள்தான் சுவாசத்திலிருந்து வளரும்.

இயற்கைத் தாவர நறுமண மூலிகையின் தொடர்பற்ற… இயந்திர ஓட்ட செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக்கதிர்களில் இருந்து வளரவல்ல உயிரணுக்களே…
1.கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த புதிய புதிய குறுகிய எண்ண வேட்கை ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
2.இப்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்.
3.இத்தொடரிலேயே செல்லும் வழி தான் செல்லும் நிலை தான் “இன்றைய காலமும் இனி வரும் காலமும்…”

பல நூற்றாண்டுகளுக்கு முன் மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயண காலத்தில் வால்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்த குணத்திற்கொப்ப “எண்ணத்தில் குறுகியவருக்குக் கூனி என்றும் சகுனி என்றும்…” எண்ணத்தில் உயர்ந்த இராமருக்கு அவரின் உருவ குண அழகை வழிக்காட்டிப் படைத்த காவியத்திலேயே எண்ணத்தைக் கொண்டு உருவகத்தைச் சித்திரித்துக் காட்டினார் வால்மீகியார்.

வளர்ந்தோடிய இக் கலி ஓட்டத்தில் இயந்திரத் தொடர்பு கொண்ட செயற்கை ஒலி ஈர்ப்பில் வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வு அதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித்தொடர் கொண்ட எண்ண வேட்கையின் சுவாசு அலை வீச்சின் சுழற்சிதான்… இக்கலி ஓட்ட பூமி ஜீவ ஜெந்துகளின் உருவக வார்ப்புநிலை வழி கொள்ளும் வளர்ச்சியின் வழிமுறையில் எவ் ஒலி அதிகமாய்க் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொள்ளும் வார்ப்பக ஞான வளர்ச்சியும் மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட எண்ண உணர்வு மகவு பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த “கலி மகவுகள் தான்” இனிவரும் காலப் பிறப்புகளும் கலிமாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்று பிறக்கும் மகவுகளுக்கே பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இன்றைய செயற்கைப் போதனை தன்னைத்தான் நம்பா செயற்கைப் பிடியின் நம்பிக்கை கொண்டு நடைபெறும் காலச் சுழற்சியின் ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து மீண்டிடும் நிலையாக …
1.மனிதனின் ஞானத்தால் ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும்
2.இன்ப நிலையின் வழித் தொடரைத்தான் உபதேச போதனையாய் உயரும் வழிகாட்டி
3.ஒவ்வொரு ஆத்மாவும்… மனிதனுக்கடுத்த நிலையான தெய்வநிலை பெறவல்ல வழித் தொடருக்கு இங்கே வழி காட்டுகின்றோம்.