உயிர் காக்கும் திருமந்திரம்

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் முறை 

இதிலே கொடுக்கப்பட்ட ஐந்தையும் ஒரு பழக்கமாகப் பயிற்சியாக எடுத்துக் கொண்டே வந்தால் மகரிஷிகளைப் பற்றிய உணர்ச்சிகள் நேரடியாகக் கிடைக்கும்

mantra 30

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரை எண்ணி அவர் விட்ட மூச்சலைகளைச் சுவாசியுங்கள் 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களும் அகஸ்தியரின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா…!

mantra 29

ஞானகுருவின் உபதேச ஒலிகளுக்குள் எண்ணிலடங்கா மகரிஷிகளின் உணர்ச்சிகள் (சூட்சம சக்திகள்) உண்டு 

மகரிஷிகளின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டால் தான் அதனின் இயக்கமாக நாமும் ஞானிகளாக ஆவோம். (கேட்க விரும்புவோர் இந்த இரண்டு லிங்குகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் – https://wp.me/p3UBkg-1Uc  https://wp.me/p3UBkg-1Yh )

mantra 28

மீண்டும் இன்னொரு (உடலுக்குள்) பிறவிக்கு நாம் வந்து விடக்கூடாது 

நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற “ஒரு உயிரான்மாவையாவது” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் 

mantra 27

“தீமைகளை மறக்க” நாம் அவசியம் பழகித் தான் ஆக வேண்டும் 

தீமைகளை மறந்தால் தான் நம் நல்ல குணங்களும் சிந்தனைகளும் சீராக… வலுவாக… உறுதியாக… தெளிவாக… உத்வேகமாக.. இயங்கும்

mantrta 26

மகரிஷிகள் உணர்வைச் சுவாசித்தால்  “நல்லதாக்க வேண்டும்… நல்லதாக்க முடியும்…” என்ற எண்ண வலு கூடிக் கொண்டே வரும் 

“உயிர் பற்று கொண்டு…” நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் பாசம் எந்த வகையிலும் நம்மை நல் வழிப்படுத்திக் கொண்டேயிருக்கும்

mantra 25

பாசம் வைப்பது தப்பா…! அது எப்படித் தப்பாகும்…? என்று தான் கேட்போம் 

நம்முடைய பாசமும் பற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதில் தான் இருக்க வேண்டும் 

mantra 24

நம் சுவாசம் மேல் நோக்கியதாக இருக்க வேண்டும்

விண்ணிலிருந்து எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இங்கிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

mantra 23

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டு  நச்சுத் தன்மைகளைச் “சுட்டுப் பொசுக்க வேண்டும்” 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தச் சக்தியை நுகர்ந்தால் நஞ்சுகளை எல்லாம் வேக வைக்க முடியும்.

mantra 22

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும்

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.

mantra 21

ஞானகுருவின் கண்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய “ஊடுருவும் சக்தி” 

ஞானகுருவின் கண்கள் கூர்மையாக இருந்தாலும் பார்வை எங்கே நிலை குத்தி இருக்கிறது…? என்பதை நாமும் அதைச் செய்து பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் லேசர் (LASER) போன்று அறியலாம்… இயக்கலாம்…!

MANTRA 20

புவியின் ஈர்ப்பைக் கடந்து நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுலகம் செல்ல வேண்டும் – பயிற்சி

கண்களைத் திறந்து செய்யும் தியானத்தின் மூலம் நம்முடைய புலனறிவு ஆற்றல் மிக்கதாகின்றது. ஆண்டென்னா சரியாக இருந்தால்  டி.வி ரேடியோ சரியாக வேலை செய்வது போல் நம் “கண்கள் +சுவாசம்” இரண்டும் ஒன்றாக இருந்தால் அதன் மூலம் நம் நினைவாற்றல் விண்ணுலகிற்கு எளிதில் செல்லும். தொடர்பு  (NETWORK) விண்ணுடன் இருப்பதால் இந்தக் காற்று மண்டலத்தின் நச்சுத் தன்மை நம்மை ஒன்றும் செய்ய முடியாது. 

MANTRA 19

இருளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றும் திறன் பெறுவோம் 

துருவ நட்சத்திரம் தன் அருகில் சிறிதளவு நஞ்சு வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்தச் சக்தியை நம் உயிருக்கு உணவாகக் கொடுப்போம்

mantra 18

உயிர் காக்கும் பாதுகாப்புக் கவசம் 

விண்ணிலிருந்து வரும் அரும் பெரும் சக்திகளை நம் உயிரில் சேமிக்கும் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். 

mantra 17

நம்பிக்கையுடன் செய்யும் எந்தக் காரியமும் தோல்வி அடைவதில்லை 

எந்த எண்ணத்தையும் புருவ மத்தியிலே உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் (ELECTRONIC) செலுத்தினால் தான் உயிர் அதைப் பெற்றுத் தரும். 

MANTRA 16

ஓ…ம் ஈஸ்வரா… என்ற நெருப்பைக் கூட்டி தீமைகளைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் 

தியானம் என்றாலே  உயர்ந்த சுவாசத்தை எடுக்க வேண்டும் என்று தான் பொருள் 

mantra 15

நல் சுவாசத்தை எடுத்தால் தப்பலாம் 

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் என்றும் வாழ்ந்திட வேண்டும் 

mantra 14

காற்று மண்டலத்தையே நாம் முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும் 

அகஸ்தியரைப் போன்று நாம் வெளிவிடும் சக்தி வாய்ந்த மூச்சால்  விஷக் காற்றையே புனிதமாக்க வேண்டும் – மனித குலத்திற்கு இன்று நாம் செய்ய வேண்டிய சேவை இது தான்…!

mantra 13

நாம் பற்ற வேண்டியது மகரிஷிகளின் அருள் உனர்வை…!

எந்த நோய்க் கிருமியும் நமக்குள் ஜீவன் பெற முடியாது

mantra 11

விஷத்தை வென்றிடும் எம அக்னியை நமக்குள் சேர்த்துக் கொள்வோம் 

நெருப்பைக் கொண்டு தான் விஷத்தை வெலல வேண்டும்… வெல்ல முடியும். 

mantra 10

எந்த ஒரு காரியத்திற்கும் புருவ மத்தியிலிருக்கும் ஈசனை அழைத்துச் செல்வோம்…! 

எந்தச் சிக்கலாக இருந்தாலும் எத்தகைய கடுமையான நிலையைச் சந்தித்தாலும் அடுத்த கணம்  நினைவு ஈசனிடம் தான் செல்ல வேண்டும்.

mantra 9

புருவ மத்தியில் இருக்கும் ஈசனிடம் வேண்டுவோம்

இரு கண்களுக்கு மத்தியில் இருக்கும் உயிரிடம் ஈசனிடம் வலுக் கூட்டி உணர்வு மாறாது வேண்டுவதே ஊசி முனைத் தவம்

mantra 9

எத்தகைய நஞ்சையும் ஒடுக்குவோம்…! 

அகஸ்தியன் நஞ்சை ஓடுக்கிய வழியிலேயே நாமும் செயல்படுவோம்

mantra 8

நடப்பதெல்லாம் நன்மைக்கே…! 

எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்தது… எது நடக்கப் போகின்றதோ… அதுவும் நன்றாகவே நடக்கும்..! என்ற இந்தச் சிந்தனை தான் நமக்கு வேண்டும்.

mantra7

மரண பயத்தை அகற்றுவோம்…! 

பயத்தின் துடிப்பை வைத்தே அதீதமாக மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்றுப் பழகுவோம்

mantra 6

நல்ல மூச்சை விடுங்கள்… நல் சுவாசமே எடுங்கள்…! 

உங்கள் சுவாச நிலையை உயிர் வழியாக மாற்றுவதற்காகத்தான் இந்த உபதேசமே…!

mantra 5

சுவாச நிலையை மாற்றுங்களப்பா…!

கீழ் நோக்கிய சுவாசத்தை மாற்றி விண்ணிலிருந்து வரும் சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

mantra 4

தூசிகளைத் தட்டி விடுவது போல்

தீமைகளைத் தட்டி விட வேண்டும்

AGATHIAR2

நல்லதைச் சேர்த்துச் சேர்த்துச் சேர்த்துத்

தீமைகளை நம் அருகில் வராதபடி விரட்டி அடிப்போம்

mantra 2

உயிர் காக்கும் ஒரே மருந்து

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைப்பது தான்

mantra 1