ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

 

இப்பொழுது உங்களுக்கு எது எது… எதை எதை விழுங்குகிறது…? என்ற நிலையை உணர்த்துகின்றோம். அதாவது
1.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அந்த ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
2.அது விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அந்த உணவு தேவைதான். ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை.

ஒரு மரக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அது எரியும். எண்ணெய்ப் பசை இல்லை என்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான் நாம் வைக்கும் குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எந்த அளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல
1.நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விழுங்கிடல் வேண்டும்.
2.அருள் ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் அது தீமைகளை விழுங்கும்.
3.எனவே நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் “அவை அனைத்திலும்…” எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அவ்வாறு கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.

எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

1.அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும்
3.அதே சமயத்தில் அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும் அது நீக்கி நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் நீக்கியவன் மகரிஷி.
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து எடுத்து நமக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத் தான் பல வட்டங்களை இங்கு எழுப்பி
2.உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து அதனுடன் மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து
3.உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தியது.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால் நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.

குறைகளை எவர் சொன்னாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை
1.“அங்கேயே அதிகமாக்கி…” இந்த கணக்கைக் கூட்ட வேண்டும்.
2.எந்த அளவிற்கு நீங்கள் இந்த கணக்கை அளவு கோல் கூட்டுகின்றீர்களோ அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது.

ஆனால் அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.

நன்மை நன்மை, என்று நாம் சொன்னாலும் இந்த நன்மை நன்மையாகாது.
1.நல்லது நல்லதும் ஆகாது…
2.கெட்டது கெட்டதும் ஆகாது.

தீமை என்ற காரத்தினுடன் நன்மை என்ற நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால்… அந்தத் தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.

இதைப் போலத்தான் மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
1.தீமை என்ற கணக்கை இங்கே தள்ளிவிட வேண்டும்.
2.இது சரியில்லை தப்பான கணக்கு என்று அதை நீக்கிப் பழக வேண்டும்.

இது இல்லையென்றால் நாம் இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்று தான் பொருள்.

ஆறாவது அறிவு தெளிந்திடும் நிலைகள் பெற்றவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன், மனிதனான பின் நாம் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.

மகரிஷிகள் சென்ற பாதையில் நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம். உணர்வுகளை உயிரோடு ஒன்றி உயிரைப் போன்று ஒளியாக மாற்றிடுவோம்.
1.பேரொளியாக மாற்றிப் பெரு வீடு என்ற நிலையாக
2.நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்…
3.மெய் உலகைச் சிருஷ்டி செய்வோம்.

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

 

‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன ஓசோன் திரையையும் அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவி கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால் இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம்.
2.ஆனால் விண்ணிலே விஷத் துகள்கள் பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள்
3.”சுழற்சியில் வரப்படும்போது” அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.

அப்படி அலைகள் வரப்படும்போது தான் விஷத்தின் தன்மையை முறியடிக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தாலும் மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்டது அந்த ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.

விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
1.அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு விட்டது.
2.நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே முறை அந்த மெய் ஞானியரின் அருளை நமக்குள் பெருக்குவது தான்.

ஓசோன் திரை எப்படிக் கிழிந்து வருகிறதோ அதைப் போன்று மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும்.

1.நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம்.
2.நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான்… பணம் வசதி உள்ளவர்கள் யாருமில்லை.
3.எண்ணத்தின் வலுவை நாம் பெற்று மெய் ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.

அதனின் வலுக்கொண்டு தீயசக்திகள் நம்மை அணுகாது நாம் பாதுகாக்க வேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும்… நமக்குள் பெருக்க வேண்டும்.

எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனரோ அதைப் போல அந்த மெய் ஞானியரின் அருள் ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி “இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். ..”

அப்படிப் பழகுவதற்குத்தான் ஆத்ம சுத்தியும் பயிற்சியும் கொடுத்தது.

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மெய் ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு
2.நமக்குள்ளும் இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

 

இன்று “மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக் கொண்டுள்ளது.

ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால்” அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத் தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக் காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் பரவி
5.மனிதன் என்ற சிந்தனை இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத் தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள் அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.

உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால் அது முடியாது.

அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும் தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான் இதை அமைக்கவும் முடிந்தது.

குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.

1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல் பேதமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.

உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும்… அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும்… அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும் சொல்லாகத்தான் அமையும்.

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தீமைகளை ஜீரணித்தவர்கள் மகரிஷிகள்

 

பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் வயிறு நிறையச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிறர் நம்முடன் சண்டை போட்ட நினைவுகளை நாம் கொண்டு வந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது… அல்லது சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால் நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ
2.அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது
3.அதற்குத் தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும் நம் சுவாசம் இயங்குவதும் குடல் இயங்குவதும் நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

இப்பொழுது கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த கோபத்தை உண்டாக்கப்படும் போதும்… சில்… என்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி கிர்… என்று மேலே எழுந்துவிடும்.

1.இவையெல்லாம் இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான்.
2.நாம் அல்ல… நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது…?

மெய் ஞானிகள் அவர்கள் இங்கே வாழ்ந்த காலங்களில் விண்ணுலகச் சக்தியைப் பெற்று வளர்த்து… அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்றுத் தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

1.நமக்குக் கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் துடிப்போம்.
2.ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால் அது அவர்களுக்குள் அடங்கி அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ… அந்தச் செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.

காரமான உணர்வுகள் தூண்டப்பட்டால் அந்தக் காரமான நிலைகளிலேயே நம்மைப் பேசும்படிச் செய்து பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அது அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டா வண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி
1.அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வை பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். நம் மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார் என்றால் “அந்தச் சொல் வெறும் வார்த்தை தான்…”

அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அதை அடக்க முடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே…!” என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கித் தவறு செய்யும் நிலைகளுக்கு… “எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது…”

“இல்லாததைச் சொல்கிறான்…!” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறி நாளடைவில் வலியாகவோ வேதனையாகவோ வந்து விடுகின்றது.

1.மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளையும் அடக்க
2.விண்ணின் ஆற்றல்களைப் பெற்றுத் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும், சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன் அது அழிந்துவிடும்.
அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்து காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய் ஞானியின் சக்திகளை அதை மற்ற சாதாரணமான ஒரு அணுவின் தன்மை புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.

நினைத்தவுடன் நீங்கள் எடுக்கும் ஆத்ம சுத்திக்கு
1.‘’ஓ…ம் ஈஸ்வரா’…’ என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.அந்த அருள் சக்தியை நீங்கள் உடனே பெற முடியும் என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

காரணம்… அவர்கள் எடுத்துக் கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை…
1.அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வுக்குள் பதியச் செய்யும் போது
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள் காந்தத்தின் பவர் கூடினால்தான் அந்த ஞானியருடைய எண்ண அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.

‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று எண்ணி நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
1.அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்திச் சர்வ தீமைகளையும் நீக்கி
2.அனைத்தையும் ஒளியாக மாற்றி நாம் மகிழ்ந்து வாழ முடியும்,

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவருமே பெற முடியும்.

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

 

ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் “எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…” அந்தச் சொல் வரும்… தனித்து வராது… அதனுடைய சுருதிகள் அப்படி…!

ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள்… இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும்… எதிர்மறையாகும்.

இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.

இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.

ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.

புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் இங்கே படரும்… நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே “எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”

வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

விண்ணின் பற்றைக் கொண்டு நாம் அந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.

மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும்… கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்… செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும்… இரண்டும் கலவையாகும்… அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!

சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.

நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோபமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.

சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! – கண்ணன் சொன்னது

தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வருவது தான்…! – கண்ணன் சொன்னது

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் ஒவ்வொரு உடலிலும் காத்துக் கொள்ளும் உணர்வினை எடுத்து மனிதனாக வளர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுவதற்குத்தான்
1.அர்ச்சுனன் சகலகலா வல்லவன்… சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன்
2.வல்லமை பெற்றவன்…! என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.

கண்ணன் கீதா உபதேசம் செய்வதாகத் தத்துவங்களைச் சொல்கின்றனர். அன்று ஞானியர்கள் உணர்த்திய அந்த உண்மைகளைப் பார்ப்போம்.

தன் சகோதரர்கள் எதிர் நிலையில் இருந்து போர் செய்கின்றார்கள். சகோதர பாசம் என்ற உணர்வுகள் அர்ச்சுனனுக்குள் இருந்ததினால் சகோதரர்களைப் பார்த்ததும் அவர்களைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.

அவர்களை விட்டு விட்டால் அவர்கள் உன்னை அழித்து விடுவார்கள். ஆகையால் நீ உன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தாகச் சொல்வார்கள்.

அதன் விளக்கம்…! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அந்தத் தவறான நிலைகளை நாம் கூர்ந்து கவனித்தால் “அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது…”

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையான உணர்வை நம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் மாறி “நமது நல்ல குணங்களைச் செயலற்றதாக ஆக்கிவிடும்…”

ஆகையால் நீ சகோதரன் என்று பார்த்தாலும்
1.அந்த இரக்க உணர்வால் நீ இதைச் செயலாக்கவில்லை என்றால் அது உன்னை அழித்துவிடும்
2.நீ கற்றுணர்ந்த வல்லமை அப்போது எங்கே செல்கின்றது…? என்று கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கின்றான்.

கண்ணன் சொன்னதன் நிலைகள் “தீய வினைகள் அனைத்தும் பாசத்தால் வரக்கூடியது தான்…!” தன் சகோதரன் என்று உணர்ந்தாலும் தீய விளைவுகளிலிருந்து அவர்கள் தீயவர்கள் என்று உணர வேண்டும்.

அவர்கள் செய்யும் தவறான உணர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் நமது நல்ல குணங்களை இங்கு அழித்து விடுகின்றது.

1.ஒருவன் செய்யும் தவறான உணர்வை உன் உடலுக்குள் சேர்க்கா வண்ணம் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அவன் செய்யும் தவறான உணர்வை எண்ணாதபடி அவனுக்குள் உனது நல் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
3.அவன் அறியாத இருள்களிலிருந்து மீள வேண்டும்… இதை உணர்த்தவே அங்கு அம்பாக எய்யச் சொன்னது.
4.அதாவது… இந்த எண்ணத்தைக் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாயச் செய்வது.

அதன் வழி எதிரிகளிடம் இருக்கும் உண்மையின் நிலைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். எதிரியுடன் இருந்து நின்று அவர்கள் போர் செய்யும் பொழுது தவறான உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலைகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். அதை எவ்வாறு மீட்க வேண்டும்…? என்ற நிலையைக் கண்ணன் உபதேசித்ததாகவும் கீதையிலே எழுதுகின்றனர்.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய “உணர்வின் இயக்க நிலைகளைத் தான்” அன்று ஞானியர்கள் கண்ணன் சொன்னதாக உணர்த்தினார்கள்.

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

 

ஞானிகள் மகரிஷிகள் நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் குணங்களுக்குள் அதைக் கலந்து இணைக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின் செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும் வென்றிடும் நிலைகள் வருகின்றது.

நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும்… அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.

காரணம் இதற்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச் செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால் சூரியன் ஒளி மங்கும்… பின் இருள் சூழும்.

இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.

அப்படிக் கரைந்து வந்த ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம் வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).

இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப் பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.

இருப்பினும்… பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள் அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும் நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.

1.இதைப் போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.எதனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ அந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதைக் கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.

அது தான் விநாயகர் சதுர்த்தி…!

நாம் கேட்டுணர்ந்த மற்ற மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும் அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.

மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ… அதையெல்லாம் அகற்றிடும் நிலையாகத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

ஆகவே… மற்ற மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்படுத்திட வேண்டும்.

அவ்வாறு எல்லோரும் நிறுத்திவிட்டால்…
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின் சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள் சிக்கி
3.நமக்குள் பதிவான பகைமை உணர்வுகளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் அந்தச் சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே பொசுங்கிவிடும்.

நாமும்… நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தம் ஆகும்.

மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!

மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!

 

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.

நாம் எதனை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது பதிவாகி அதனின் கணக்குப் பிரகாரம் தான் நமக்குள் வளர்கிறது. ஆகவே எதனின் கணக்கை நாம் கூட்ட வேண்டும்…?
1.நாம் மெய் ஞானிகள் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலையை அடைந்திட
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அந்த நிலைகள் எல்லோரும் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் எத்தனையோ எத்தனையோ…! அதற்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து வலு ஏற்றுகின்றேன்.

தாவர இனங்களுக்கு நாம் உரச் சத்தை ஏற்றும் பொழுது ஒரு முறை முதலிலே ஏற்றுகின்றோம். அதை ஏற்றுக் கொண்ட பின் அடுத்த முறை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.

இப்படி அது இணைத்துக் கொண்ட்தற்குத் தக்கவாறு தான் “புது வித்துக்களாக…” நாம் உருவாக்க முடியும். ஏனென்றால்
1.ஒரு வித்தினை நேரடியாக மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து
3.மாற்றுப் பொருளாக மீண்டும் மீண்டும் உருவாக்கி
4.சீராக அதனுடன் ஒன்றி இயக்கும் நிலைகள் கொண்டு தான் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வர முடியும்.

காரணம் நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்… பகைமை உணர்வால் வளர்த்துக் கொண்ட வித்துக்கள் ஏராளம் ஏராளம்… தன்னை காத்துக் கொள்ளும் கோப குணம் ஆக இருந்தாலும் அதுவும் ஏராளம் ஏராளம்…!

இத்தகைய வித்துகள் நமக்குள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தும் ஒருக்கிணைந்து
1.இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கிடும் நிலைக்காக
2.அருள் ஞானிகள் உணர்வினை உங்களிடம் இருக்கும் குணங்களுடன் இணைத்து இணைத்து
3.அதை இரண்டு முறை மூன்று முறை பிணைத்துப் பிணைத்து உங்கள் குணங்களுடன் ஒன்றச் செய்து
4.நினைவு கொண்டு அதை நீங்கள் பெறும் ஆற்றலை… அந்தத் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அது அல்லாதபடி நாம் செய்தோம் என்றால் அது முழுமை சேர்க்க முடியாது.

பாடப் புத்தகத்திலே படித்துவிட்டு “ஆகா நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு அதற்குப்பின் அதை நாம் ஓரம் கட்டி விடுகின்றோம். அடுத்து அதை மீண்டும் படிப்போம் என்ற நிலை வராது.

அதைப் போன்று அல்லாதபடி யாம் பதிவு செய்யும் உணர்வுகள் உங்கள் நினைவாற்றலுக்குள் அது ஓங்கி வளர வேண்டும். ஆகவே இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு எது சொந்தம்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்குங்கள்… அதைச் சொந்தமாக்குங்கள்.
2.பிறருடைய குறைகளை உங்களுக்குச் சொந்தமாக்க வேண்டாம்.
3.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

 

ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.

சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்… கல்கி.

அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.

ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு “இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.

காரணம்… இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.

மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.

மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!

ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.

உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய்… பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.

எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள் மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.

என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.

கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன்… அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.

அதையெல்லாம் மாற்றிட
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.

வீண் என்ற பேச்சு இல்லை… விரயமாகும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ “அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்…
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்… உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.