மகரிஷிகளுடன் இணைந்து நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்
மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது… யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் அந்த நிலையை உருவாக்கி விடுன்றது.
1.அந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் இருந்து விடுபடவே
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை அடிக்கடி அடிக்கடி பெறச் செய்கின்றோம்.
இதை உறுதுணையாகக் கொண்டு வாழ்க்கையில் அறியாத வந்த தீமைகளை அகற்றிட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
உலகம் காக்கப்பட வேண்டும்… உலக மக்கள் காக்கப்பட வேண்டும். வரும் எதிர்காலக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும். உலகைக் காத்திடும் உணர்வாக விளைய வேண்டும் என்று அந்தந்தக் குடும்பத்தில் இதைக் கடைப்பிடியுங்கள். விஜயதசமி… கல்கி என்ற பத்தாவது நிலையை அடையுங்கள்.
ஒவ்வொரு மாதம் தசமி என்று இருப்பினும் சதுர்த்தி என்று இருப்பினும் அதை எல்லாம் தீமைகளை அகற்றும் நாளாக மாற்றி ஒவ்வொரு மாதத்திலும் இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த அருள் ஞானிகள் காட்டிய வழிகளில் முழுமையான நிலைகள் கொண்டு
1.உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்
2.இந்த உணர்வுகளை வலுப் பெறச் செய்து இந்த வாழ்க்கையை வாழ்வோம்… வளர்வோம்.
3.யாரையும் பகைமை கொண்டு பார்க்க வேண்டாம்
4.பகைமைகளைத் தனக்குள் புக விடவும் வேண்டாம்.
மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நாம் இணைந்திடும் உணர்வை வளர்ப்போம்… உலகைக் காத்திடும் நிலைகள் பெறுவோம்.
கருவில் வளர்ந்து வரக்கூடிய குழந்தைகள் தான் உலகில் வரும் நஞ்சினை அடக்கி உயர்ந்த ஒளியின் சரீரம் பெறும் தகுதியை இனி பெறுவார்கள்.
ஒவ்வொருவரும் நீங்கள் இதைச் செய்யுங்கள் உலகைக் காத்திடுங்கள்… உங்களைக் காத்திடுங்கள். பிறவா நிலை என்ற நிலையை அடையுங்கள். பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
என்றென்றும் உயிருடன் ஒன்றி வாழும் அந்த மகரிஷிகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).
மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”
பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.
அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.
அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.
அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”
அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.
அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.
சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.
ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.
உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.
எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.
அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.
அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.
அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.
ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.
மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும் உங்களுக்குள் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).
யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.
தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள். புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.
ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.
இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.
1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.
இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.
இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.
இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.
இதைப் போன்று தான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்ற வேண்டும் என்றால்… “நம் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகளுடன் ஒன்றச் செய்ய வேண்டும்…”
மகரிஷிகளுடன் நாம் ஒன்றி…
1.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் அதன் துணை கொண்டு
3.நமக்குள் சேரும் தீமையின் உணர்வுகளை மாற்றியமைக்க முடியும்.
ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.
ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.
மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.
அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.
மூகாம்பிகை என்ற மூன்று சக்தியின் இயக்கத்தைப் பற்றி கோலமாமகரிஷி உணர்த்திய உண்மைகள்
மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.
1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.
ஆக… தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.
அதே பொல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்… அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்… ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி… “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.
அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ… அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி… இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.
இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.
ஆனால் நம் உயிரின் இயக்கம்… 1.தான் கவர்ந்து கொண்ட மணம்… ஞானம் என்ற நிலையில் 2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ 3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான் 4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.
இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்…!
1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்…!”
அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது…! அர்த்தமாகிறதல்லவா…!
மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.
காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.
இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்… உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.
உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்… ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.
பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்…
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.
அதைத்தான்… அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.
மகரிஷிகளின் அருளுடன்… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் புகுத்தி… மகரிஷிகளுடன் இணைந்து இருப்பதே மேல்…!
நம் உயிருடைய வேலை அது நெருப்பிற்குச் சமம் தான். அதிலே எப்பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ அதிலே வேக வைத்த பொருளின் மணம்… சுவை… வருவது போல
1.நம் உயிரின் தன்மை நாம் நுகர்ந்தது எதுவோ
2.அதனின் உயிர் அணுக்களாக மாற்றி அது படைத்துவிடுகின்றது.
எதனின் உணர்வின் தன்மையோ அதை நாம் கண்ணால் பார்க்கும்போது உணர்வால் நுகரும் தன்மை வருகின்றது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் நிலையாக உடலின் அமைப்பு வருகின்றது.
நாம் எதனின் நிலைகளை உற்று நோக்கி… அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் பதிவாக்கி அதனின் கணக்கின் பிரகாரமே அடுத்த நிலை.
ஆகவ… அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு
1.நாம் என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலையை
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!
அவனுடன் இணைந்து இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?
உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தனையோ இடையூறுக்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உனர்வை இணைத்து இணைத்து அந்த அருள் ஞானிகளின் உணர்வை யாம் கொடுக்கின்றோம்.
தாவர இனங்களுக்கு ஊட்டம் கொடுக்கும் பொழுது முதலில் ஒரு முறை கொடுக்கின்றோம். ஒரு முறை எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை தாவர இனத்தைப் புதுப்பிக்கின்றோம்.
அப்படி… அதற்குத் தக்கவாறு அதனுடன் இணைத்துக் கொண்டு தான் புது வித்தின் தன்மையாக மாற்ற முடியும்.
1.ஏனென்றால் ஒரு வித்தின் தன்மை எடுத்த பின் நேரடியாக அதை மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு சிறுகச் சிறுக இணைத்து இணைத்து
3.அதை மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி இதை சீராக ஒன்றிணைக்கும் நிலைகள் கொண்டுதான் மாற்ற முடியும்.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்.
2.பகைமையான உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வித்துகள் ஏராளம் ஏராளம்.
3.தன்னைக் காக்க தான் எடுத்துக் கொண்ட கோபத்தின் தன்மை ஏராளம் ஏராளம்.
இதைப்போல நமக்குள் வித்துகள் அதிகமாக பெருக்கி இருக்கும் வேலையில்… இவை அனைத்தும் ஒருக்கிணைந்து….. இதையெல்லாம் இணைத்து… அரவணைத்து… அதை அடக்கி…
1.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய… அருள் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டுதான்..
2.உங்களில் இணைந்து வரும் குணத்துடன் இணைத்து இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை இதைப் போன்று பிணைத்து
4.இந்த உணர்வின் தன்மை உங்கள் குணத்துடன் ஒன்றச் செய்து
5.நினைவு கொண்டு நீங்கள் பெறும் ஆற்றல் பெற அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் (எம்முடைய வேலை)
அது அல்லாது செய்தோம் என்றால் வெறும் பாடப் புத்தகங்களை படித்துவிட்டு ஆகா…! நன்றாக இருக்கிறது என்ற நிலைகள் கொண்டு தூக்கி எறிவது போன்று ஆகிவிடும். அடுத்த நினைவுகள் வராது…!
ஆகையினால்… எந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நினைவாற்றல் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்
இதைப் படிப்பவர் அனைவரும் இதை மனதில் பதிவு செய்யுங்கள்….!
உங்களுக்கு எது சொந்தம்…? அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். இந்த வாழ்க்கையில் அதைச் சொந்தமாக்குங்கள்.
1.அதே சமயத்தில் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய குறைகளைச சொந்தமாக்க வேண்டாம்.
2.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.
அந்தச் சொந்தத்தைக் கொண்டாடி விட்டால் பகைமை உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்திற்குச் சென்றாலும். அதனின் இனப் பெருக்கமாக மாறிவிடும்.
நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்களாகத் தான் பெருகும்.
மான் அதனின் கூட்டமைப்பாக வாழ்கின்றது. அதே சமயம் மற்ற மான்களின் குணங்களுக்கொப்ப வகை வகையான மான்கள் வருகின்றது. பல வகைகள் இருந்தாலும் அதனதன் கூட்டம் அதோடு சேர்ந்து விடுகின்றது.
இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எந்தக் குணத்தின் பெருக்கத்தை அதிகமாகக் கொண்டாருகின்றோமோ நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாறிவிடும்.
அப்படி மாறினால்… அதனுடைய கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அதனுடைய கூட்டமைப்பு எங்கே வாழுகின்றதோ…
1.அங்கே நம் உயிரான்மா சென்று
2.அந்தக் கூட்டமைப்புக்குள் சுற்றி
3.அதனின் உணர்வுக்குள் நுழைந்து
4.அந்த உணர்வின் ஆற்றலாக உடலை மாற்றிவிடும்.
ஆகவே இதையெல்லாம் தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தைப் படித்து விட்டு உங்களிடம் பாடவில்லை.. எனக்குக் கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார் குருநாதர்.
ஏனென்றால் குருநாதர் எம்மை மாட்டுக்குள்ளும் புகுரச் செய்தார்… பாம்புக்குள்ளும் போகச் சொன்னார்… யானைக்குள்ளும் போகச் சொன்னார்… அதை எவ்வாறெல்லாம் பெற வேண்டுமென்று…!
இதை எல்லாம் உங்களிடம் எளிதில் சொல்லவில்லை…! முன்னாடி சொல்லியிருக்க மாட்டேன்…!
வித்தை எல்லாம் தெரிந்து கொண்டு தான் அதற்குள் போகின்றேன். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை பெருகி விட்டால் ஆன்மாவின் தன்மை எப்படி ஆகும்…?
1.அதற்கு முன்னாடியே குருநாதர் என்னை கைவல்யம் செய்து
2.எப்பொழுதுமே கைப் பிடித்து வைத்திருந்தார்.
ஆகவே இதைப்போல அந்த உணர்வை இயக்கச் செய்து உணர்வின் தன்மை கவர்ந்து கொண்ட பின் இந்த உணர்வின் ஆன்மா இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.அதிலே எது பெருகுகின்றது…?
2.எதனின் உடலில் ஆன்மாவை அழைக்கின்றது…?
3.மனித உடலில் பெருகிய பின் அந்த உடலுக்குள் போய் எப்படி இயக்குகின்றது..?
4.மீண்டும் நீ வெளிவர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
மனிதனின் உடலில் இது உருவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகின்றது…?.என்று தெளிவாக்கினார் குருநாடதர்
ஞானிகள் வாழ்ந்த நம் நாட்டின் உயர்ந்த பண்புகளை உணர்ந்து அதன் வழி நாம் செயல்பட வேண்டும்…!
எனது தியானமே அனைவரும் இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அதிலிருந்து மெய் ஞான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று தான்
1.இந்த மனிதனின் கடைசி நிலையாக
2.என்றும் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.
இதனின் வழியை நீங்கள் பெற்றால் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமையை நீக்கும்… இருளை அகற்றி அருள் ஒளியின் சுடராக்கச் செய்யும். அத்தகைய மகிழ்ந்து வாழும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்…! என்று தான் இதை உபதேசிப்பது.
நான் (ஞானகுரு) ஒருவனே செய்து… “நான் பெரியவன்…” நான் அப்படிப்பட்டவன்…!” என்ற நிலையை இல்லாது
1.நாம் அனைவரும் சேர்ந்து அந்த உயர்ந்த நிலையைச் செய்ய முடியும்.
2.குரு அருளைப் பெற்று எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
3.அகண்ட அண்டத்தின் ஆற்றலைப் பெற்று இருளைப் போக்க முடியும்.
இதன் வழியில் நீங்கள் எல்லாம் தயாரானால் கடுமையான வெயில் இருந்தாலும் மேகங்களைக் கூடச் செய்து சிறிது நேரத்தில் இங்கே நிழலாகக் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். மழை வேண்டும் என்றால் அதையும் வரவழைக்கலாம்.
ஏனென்றால் அந்தக் காலங்களில் எல்லாம் குடங்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள். காட்டுக்குள் போனவுடனே “மழை வேண்டும்” என்று வேண்டுவார்கள். திரும்ப வரும் பொழுது மழையை அழைத்து வருவார்கள்.
இந்தப் பழக்கம் எல்லாம் இந்தியாவில் உண்டு.
1.நம்பிக்கை கொண்ட உணர்வுடன் தெய்வீகப் பண்புடன் பற்றுடன் வாழ்ந்த மக்கள்
2.பகைமை என்ற நிலைகள் அகற்றி மனிதன் என்ற பண்புகள் மதித்து
3.அன்றைய ஞானிகள் போல மக்களும் வாழ்ந்தனர்.
யதார்த்த உள்ளத்துடன்… “நாம் வருண பகவானை அழைத்து வருவோம்… இனி நாம் பஞ்சத்தைப் போக்குவோம்…!” என்று மழை நீர் இல்லை… என்றால் இவ்வாறு செய்வார்கள்.
குடத்தில் தண்ணீருடன் சென்று வரும் பொழுது மழையை அழைத்து வருவார்கள். ஊர் எல்லைக்குள் வருவதற்கு முன்னாடி நனைந்து கொண்டே வருவார்கள்.
இத்தகையை பண்பு பெற்ற நாடு நம் நாடு…!
தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று எந்நாட்டவரும் அந்த அகஸ்தியன் வழியினைப் பின்பற்றினால் அந்த உணர்வின் தன்மையை இரையாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக உருவாக்க முடியும்.
1.இப்பொழுது நாம் வாழும் இந்த உடல் நமது அல்ல
2.உயிரால் உருவாக்கப்பட்ட உடல் என்ற இந்த நிலையை நாம் தெரிந்து கொண்ட பின்
3.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு மனித வாழ்க்கையை வென்றிட்ட அருள் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
4.இந்த மனித வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிட்டு நஞ்சை வெல்லும் உணர்வை நமக்குள் வளர்த்து
5.என்றும் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்
பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.
அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.
இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!
ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.
அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?
1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”
ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.
“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!
இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.
இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.
அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்
ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்
நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.
அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.
ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?
தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!
1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு… 2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு. 3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு 4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.
தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!
கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.
அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.
எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.
தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.
இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.
இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.
1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.
நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!
நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.
தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.
வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.
பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.
நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிடவேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.
ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.
அருள் ஞானியான அந்த நபிகளோ… 1.“தீமைகள் தனக்குள் வராதபடி…” 2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு 3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.
ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.
மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.
இருள் சூழ்ந்த உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும்
ஒரு மந்திரவாதியிடம் சீடனாக இருந்தவன் “ஒரு பெரிய மகான் இங்கே வருகின்றார்…” என்ற நிலையில் கேள்விப்பட்டு விவேகானந்தரைக் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்கள் அருள் வேண்டும்…! என்று அவரிடம் கேட்கின்றான்.
“நீ ஏங்கி வந்த நல்வழி நடக்கட்டும்… என்றும் அதன் வழி நீ உயர்வாய்…!” என்றும் விவேகானந்தர் அவனை ஆசீர்வதிக்கின்றார்.
இந்த ஆசியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பின் தன்னுடைய மந்திரவாதியான குருவிடம் சொல்கிறான். நான் அந்த மகானிடம் சென்றேன்… அவர் எனக்கு நல்வாழ்த்து கூறினார்..! என்கிறான்.
அப்படியா..! அவர் நாளை மடியப் போகின்றார். இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றார்…! அதன் வழியில் அவர் சொன்னதை நீ செய்தாய் என்றால் நீயும் இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து மடியப் போகின்றாயா…? என்று சிஷ்யனிடம் கேட்கின்றான்.
அதைக் கேட்டதும் இவனும் நடுங்குகின்றான்.
அந்த மந்திரவாதி சொன்னபடி விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பேச முடியாதபடி இரத்த வாந்தி எடுக்கின்றார். முச்சுத் திணறல் ஆகிப் பேச முடியாது தடுக்கின்றது.
அப்பொழுது தன் குருவை நினைக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தடைப்படும் உணர்வை உணர்கின்றார்.
1.மற்ற மந்திரவாதிகள் என்ன செய்கின்றனர்..?
2.நல்ல செயல் செய்வதை ஏன் தடைப்படுத்துகின்றனர்…? என்று சிந்திகின்றார்.
இருந்தாலும் தான் சாந்த உணர்வு கொண்டாலும் கொடூர உணர்வின் செயலுலிருந்து “தான் மீளவில்லையே…” என்று உணர்கின்றார். அப்படி உணரப்படும் பொழுதுதான் தன்னுடைய சிந்தனை மேலிட
1.இனி வாழ்க்கை என்ன…? என்ற நிலையில்
2.தன் உணர்வின் தன்மை வெளியாக்கி உயிரான்மாவை வெளியேற்றிக் கொள்கின்றார்.
எத்தனை காலம் நாம் போரிடுவது..? நன்மையின் தன்மைகளைச் செய்தாலும் விஷத்தின் தன்மை தனக்குள் கலக்கப்படும் பொழுது குரு காட்டிய வழியிலிருந்து நாம் பின் தங்கிவிடுவோமோ…!
இந்த உடல் நமக்கு எதற்கு..? என்ற உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு கொதிகலனாக மாற்றித் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றார் விவேகானந்தர்.
ஒரு சமயம் இராமகிருஷ்ண பரமகம்சரும்.. அவருடைய சீடர்களும்.. ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்ட மற்ற பக்தர்களும்.. மாலை நேரத்தில் நடந்து வருகின்றார்கள்.
அதே சமயத்தில் இராமகிருஷ்ணரின் செயலாக்கங்களை அறிவதற்காக மந்திரத்தால் ஜெபித்துப் பொருளை வரவழைத்தும் சில ஆவி நிலைகளை இயக்கும் மந்திரவாதி ஒருவனும் இந்தக் கூட்டத்துடன் கூட வருகின்றான்.
அப்பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.
அப்படி இடறிக் காயம் அடைந்த பின் “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு எடுத்து வர மறந்து விட்டோமே…” என்ற ஏக்க உணர்வுடன் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.
அப்பொழுது அங்கே அந்த இடத்தில் இராமகிருஷ்ணரால் வெளிச்சத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இறுமாப்பு கொண்டு இவர்களுடன் வந்த அந்த மந்திரவாதி “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!” என்று சொன்னவுடன் “ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.
மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார்.
அப்பொழுது அதைப் பார்த்ததும் இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்து விடுகின்றார்.
மந்திரவாதி… தனக்குள் சகலமும் கற்றுள்ளேன் என்ற உணர்வுடன்… பிறிதொரு ஆவியின் வலிமை கொண்டு செயலாக்கும் வலிமை எனக்கு உண்டு…! என்ற எண்ணத்தில் இதைச் செய்து காட்டுகின்றான்.
நான் “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை என்கிறார் இராமகிருஷ்ணர். ஏனென்றால்
1.என் உடலில் அக வெளிச்சமான… அறிவின் தெளிவு வரவில்லை
2.இருளை அகற்றிச் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற இந்த உணர்வு இல்லாது போய்விட்டது
3.இங்கே வந்தோருக்கும் வரவில்லை.
ஆகவே சிந்தித்துச் செயல்பட்டால் இத்தகைய குறையிலிருந்து விடுபடலாம் அல்லவா…! அந்த அறிவின் ஒளி எனக்குள் வளர வேண்டும் இந்த ஒளி தான் எனக்குப் பெறவேண்டும்…!
சலோ… சல்…ஜாவ்…! என்று நீ சொல்லும் உணர்வுகள்… நீ ஏவல் செய்து குட்டிச் சாத்தான் மூலம் எனக்கு வழி கொடுப்பதை… இன்னொரு ஆவியைக் கொண்டு அடக்கி இதன் உணர்வு கொண்டு மாயாஜாலம் செய்தாலும்… இந்த ஒளி கறிக்கு உதவாது… இந்த உடலுக்கும் உதவாது.
அறிவின் ஒளியாகத் தெரிந்து நடந்தால்.. இந்த உணர்வுகளையே ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்… “அது தான் எனக்குத் தேவை…!” என்று அங்கே தெளிவாக உபதேசிக்கின்றார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்ததைக் கண்டு பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று அந்த மந்திரவாதி ஏவல் செய்தார்.
எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து… பேச முடியாதபடி.. உணவு உட்கொள்ள முடியாதபடி… பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.
ஆனால் மற்றவர்கள் எல்லோரும் இராமகிருஷ்ணருகுக் கேன்சர் நோய் என்ற நிலையில் முடிவுக்கு வருகின்றார்கள். அதற்கு மருந்து கொடுக்கவும் துணிகின்றார்கள்.
ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரமும் தெரியும். உடலில் உள்ள உணர்வுகளும் தெரிகின்றது. இது வந்த நிலை வேறு…!
இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல் உடலைக் காக்க மற்ற எதையும் முயற்சிக்காது
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… 2.இந்த உடலைச் சொந்தம் கொண்டாட வேண்டாம்… 3.அருள் ஒளியைச் சொந்தம் கொண்டாட வேண்டும். 4.எனக்குள் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த உடலுடன் போகட்டும்… 5.எனக்குள் எடுத்துக் கொண்ட அறிவு என்னுடன் என்றுமே வளரட்டும்… 6.இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் எனக்கு வேண்டாம்…. 7.அருள் ஒளி பெற்ற அருள் ஒளியின் உடல் எனக்குத் தேவை… 8.ஒளியின் சரீரம் தான் எனக்கு தேவை…! என்று 9.அவரை வைத்தியம் பார்க்க வந்தோருக்கெல்லாம் உபதேசித்துள்ளார்.
இதை எல்லாம் குருநாதர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய உண்மைகள். அன்று நடந்த சம்பாஷணைகளை அப்படியே காதில் கேட்கும்படிச் செய்தார்.
ஆனால் இராமகிருஷ்ணர் உபதேசித்த இந்தப் பேருண்மைகள் எதுவும் வெளியிடப்பட்ட நூல்களில் வரவில்லை என்பதையும் குருநாதர் உணர்த்தினார்.
இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?
விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.
1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.
ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.
கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.
“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.
அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.
ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.
1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.
உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.
இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?
இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!
1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.
அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!
கடவுளைக் காண முடியாது…!
1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.