எதை அதிகமாக நேசிக்கின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அந்தக் கணக்கின் பிரகாரம் “நம் வாழ்க்கையின் எல்லை” அமைகிறது

Destiny of humans

எதை அதிகமாக நேசிக்கின்றோமோ அதுவே நமக்குள் அதிபதியாகி அந்தக் கணக்கின் பிரகாரம் “நம் வாழ்க்கையின் எல்லை” அமைகிறது

 

இன்று நம்முடைய சகஜ வாழ்க்கையில் பல பல உணர்வுகளை நுகர்கின்றோம்.
1.அதனதன் உணர்வுக்கொப்ப நமக்குள் அணுவாக விளைகின்றது.
2.அது உணவுக்காகத் தேடுகின்றது.
3.அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது அதன் வழி நம் செயலாக்கங்கள் மாறுகின்றது.

நாம் “எதை அதிகமாக நேசித்து…” அந்த உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதை வளர்ப்பதற்கே நம் எண்ணங்கள் செல்கிறது.

உதாரணமாக ஒரு கொலைகாரன் அடுத்தவரைக் கொன்றிடும் செயலுக்கே வருகின்றான். அந்த உணர்வு கொண்டு அவன் மகிழ்ச்சி அடைகின்றான். கொலையுண்ட உணர்வுகள் தான் இவனுக்குள் அதிகமாக வந்து சேர்கின்றது.

ஆனால் இந்த உணர்வுகள் அவனுக்குள் அதிகமான பின் இவனுடைய உடலில் என்ன நடக்கின்றது…?

மூஷிகவாகனா…! (சுவாசித்ததே வாகனமாக வருகிறது) என்ற நிலையில் அவன் வாழ்க்கை நடக்கின்றது. அதாவது கொலை செய்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது
1.இந்த உணர்வுகள் உடலுக்குள் அதிபதியாகி அதனால் அவன் வீழ்ச்சி அடைகின்றான்.
2.எதை இவன் கொன்று குவித்தானோ இதைப் போல் அவன் வாழ்க்கை செல்கின்றது.

நந்தீஸ்வரன்…! தான் சுவாசித்த உணர்வுகள் முதலிலே…
1.சுவாசித்த உணர்வின் இயக்கமாக வருகின்றது.
2.பின் இதனின் உணர்வு எது எதிகமாகக் கணக்குகள் சேருகின்றதோ
3.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த சரீரம் எப்படி ஏற்படுகின்றது…? என்று
4.இதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உருவத்தை அமைத்து
5.அருவ உணர்வுகளை நுகரச் செய்து அந்த உணர்வின் இயக்கமாக வாழ்ந்து
6.உண்மையை உணர்ந்து… பகைமை உணர்வுகளை அகற்றி…
7.உன் வாழ்க்கையில் எப்படி நீ வாழ வேண்டும்…? என்ற இந்தத் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் ஆதியிலே முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்…! அவனே விநாயக தத்துவத்தையும் கொடுத்தவன்.

மனிதனாக ஆன பின் அகஸ்தியன் தனக்குள் அதை எல்லாம் கண்டு கொண்ட பின் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அவன் வாழ்க்கையில் சேர்த்துச் சேர்த்துச சேர்த்து அதன் வலிமை கொண்டு இந்தப் பூமியிலும் சரி விண்ணை நோக்கி இவன் உற்றுப் பார்த்து உலக அறிவை எல்லாம் அவன் தெரிந்து கொண்டான்

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டாலும் இன்று அவன் உடலுடன் இருக்கின்றானா…?

இல்லை..!

ஆனால் அந்த உணர்வின் தன்மைகளைத் தன் உயிருடன் ஒன்றி ஒளியின் தனமையாக மாற்றிக் கொண்டான். ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான். இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.

அகண்ட அண்டத்தின் நிலைகளிலிருந்து நம் பிரபஞ்சம் சூரியக் குடும்பம் கவர்ந்தது. இதற்குள் விளைந்தது. இதை அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றவன் அகஸ்தியன்..

விஷத்தின் ஆற்றலை வீழ்த்தி.. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற…
1.அந்த அகஸ்தியனில் விளைந்த உணர்வுகள் இங்கே உண்டு.
2.அதை நுகர்ந்து நமக்குள் பெருக்கிக் கொண்டால் அவன் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று
3.அவனைப் போன்று அழியாத நிலையை நாமும் பெறலாம்.

ஓ…ம்… என்று தனியாகச் சொல்லலாமா…? பெண்கள் ஓ..ம் சொல்லலாமா…?

Om - ohm

ஓ…ம்… என்று தனியாகச் சொல்லலாமா…? பெண்கள் ஓ..ம் சொல்லலாமா…?

கேள்வி:
ஓ…ம் என்று தனியாகச் சொல்லலாமா…? அல்லது ஓ..ம் ஈஸ்வரா… என்று தான் சொல்ல வேண்டுமா…? பெண்கள் ஓ…ம் சொல்லலாமா…?

விளக்கம்;-
நாம் ஒவ்வொருவருமே புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் எழுப்பக்கூடிய ஒலி “ஓ…” அல்லது “ஓ..ஹோ….!” அல்லது “ஓ… அப்படியா..!” இது தான்.

அந்த மொழிக்காரராக இருந்தாலும் இந்த “ஓ..” கண்டிப்பாக வரும்.

அதே போல் அடுத்தவர்கள் சொல்லக்கூடியதை நாம் ஆமோதித்துக் கொண்டே வந்தால் என்று அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல “ம்..” “ம்..” என்ற ஒலியை எழுப்பத்தான் செய்வோம்.

இந்த “ம்…” சொல்லவில்லை என்றால் நம்மிடம் பேசுபவருக்குச் சிரமமாகி நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்… நீ என்ன “ம்..” என்று கூடச் சொல்ல மாட்டேன் என்கிறாய்…? என்று கண்டிப்பாகக் கேட்பார்கள். அந்த உணர்ச்சி அப்படிக் கேட்க வைக்கும்.

ஏனென்றால் நமது சாஸ்திர விதிகளின்படி, “ஓ…ம்” என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் “ஓ…”.

1.“ஓ…” என்றால் ஜீவன் என்று பெயர்.
2.உயிர் நமக்குள் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.
3.இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ அவையனைத்தும் “ம்…” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

(ஆனால் மற்றவர்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியவில்லை என்றால் “ம்…” என்று சொல்வதற்குப் பதில் உ..ம்.. அது எப்படி…? என்போம் அல்லது ஊஹும்ம்ம்… கிடையாது…! என்போம்)

எப்படிப் பார்த்தாலும் இந்த ஓ.. என்றும் ம்… என்றும் ஒலி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால் தான் எல்லாக் கோவில்களிலும் எல்லாத் தெய்வத்திற்கு முன்னாடியும் ஓ..ம் போட்டுக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஓ…ம் சக்தி…! என்று கூட நாம் புரிந்து கொள்ள பச்சையாகவே காட்டுகின்றார்கள். ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

ஓம் சக்தி என்றால் பராசக்தி.. மார்யம்மன்.. காளியம்மன் என்று நினைவு எங்கேங்கேயோ போகின்றது. ஆக மொத்தம் ஓ…ம் என்றால்
1.அது மிகப் பெரிய இயக்கச் சக்தி..
2.பேராற்றல் மிக்க ஜீவனூட்டும் சக்தி
3.நம் உயிரின் மூல சக்தி (மின்சாரம்)

ஓ..ம் என்று சொன்னாலே அது நம் உயிரின் இயக்கச் சக்தியைக் கூட்டும்.

கோபம் வந்தால் என்ன சொல்கிறோம்…? ஒரு கடினமான சாமானைத் தூக்க வேண்டும் என்றால் என்ன சொல்கிறோம்..? ஒரு முக்கியமான சிந்தனையாக இருந்தால் என்ன சொல்கிறோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இந்த நேரங்களில் எல்லாம் நம்முடைய தொண்டையிலிருந்து இந்த “ஓங்கார ஒலி” கண்டிப்பாக வரும். அதனால் தான் இதை “மந்திரம்” என்று சொன்னார்கள்.

ஆனால் மந்திரம் என்றாலே நாம் எதை எதையோ தான் நினைக்கின்றோம்.
1.அதற்குள் மறைந்துள்ள சக்தியையும்.. சூட்சமத்தையும் காட்டத்தான் அதை மந்திரம் (ஒலி) என்றார்கள் ஞானிகள்.
2.ஆக மொத்தம் ஒலியை எழுப்புகின்றோம். மூலத்தை விட்டுவிட்டோம்.

ரோஜாவில் இருக்கும் முக்கியமானதே அதனுடைய மணம் தான் அந்த மணத்தை நுகரும் பொழுது தான் “ஆஹா..” என்று சொல்கிறோம். மணம் வரவில்லை என்றால் ஆஹா என்ற சொல் வருமா…?

அது போல் தான் ஓ…ம் என்று சொன்னால்
1.நம் உயிரை…
2.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனை
3.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனை எண்ண வேண்டும்
4.அவனுடன் நாம் கலந்துறவாட வேண்டும்
5.அவனுடன் ஐக்கியமாக வேண்டும்
6.அவன் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையில் பரிபூரணமாக நினைக்க வேண்டும்
7.அப்படிப்பட்ட ஒரு தெய்வீக உறவு நமக்கும் நம் உயிருக்கும் வருவதற்குத்தான் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று சொல்லச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தீட்டாக இருந்தாலும் பாபம் செய்தவனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஓ..ம் ஈஸ்வரா என்று உயிரை நினைக்கத்தான் வேண்டும். அப்பொழுது தான் அந்தத் தெய்வீக சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… நாம் எண்ணியது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் தன்மை நமது உடலானாலும் அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு “ஈஸ்வரா…” இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது “குருதேவா…”

ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்…!

our solar family

அகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்…!

இன்று கரண்டாக (மின்சாரம்) உற்பத்தி ஆவது எல்லாமே நட்சத்திரங்களின் எதிர் மோதல் தான்…!

நம் பூமிக்குள் எடுத்துக் கொண்டால் ஒன்றுடன் ஒன்று எதிர் மோதலாகப்படும் பொழுது வட துருவமும் தென் துருவமும் இயற்கையில் காந்தங்கள் இரு விதமாக இருக்கும்.

1.தென் துருவம் வட துருவத்தைக் கண்டால் இந்தக் காந்தம் பாய்ச்சப்பட்டு அது விலகி நகர்ந்து ஓடும்.
2.வட துருவமோ ஒன்றைத் தனக்குள் இழுக்கும் (கவரும் சக்தி) சக்தியயைக் கொண்டு வருகின்றது.

தென் துருவத்தில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இது வித்தியாசமான நிலைகளில் வரும்.
1.ஒன்று இழுத்து உள்ளுக்குள் தள்ளுகின்றது.
2.அந்த உணர்வின் காந்தப் புலனறிவுகள் ஊசியை வைத்தால் நகர்ந்து போய்விடும்… இழுக்காது.
3.ஆனால் வட துருவமோ தனக்குள் அதை இழுத்துத் தன்னுடன் ஒட்டிக் கொள்கிறது.
4.இப்படி இந்தக் காந்தப் புலனறிவுகளைப் பற்றி குருநாதர் எனக்கு (ஞானகுரு) எடுத்துக் காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகிறது…? மனிதன் பல கோடிச் சரீரங்களில் தப்பித்துக் கொண்ட உணர்வுகள்… மனிதனாக உருவாக்கிய பின் தான் அதை எல்லாவற்றையுமே அறிய முடிகின்றது என்று இதைத் தெளிவாக்கினார் குருநாதர்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்கின்றது. பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

அதாவது ஒரு நூலாம்படைப் பூச்சி தான் உமிழ்த்தும் மலத்தால் கூடாகக் கட்டிக் கொள்கின்றது. அதைப் போல் தான் நட்சத்திரங்கள்
1.சுழற்சியின் தன்மையில் இது வெளிவிடும் அமிலங்கள் உருவாகி வரும் பொழுது ஒரு கோட்டைப் போல போடுகின்றது.
2.தனக்குள் மற்றது பட்ட பின் அது சிறுகச் சிறுகத் துகள்களாக மாறுகின்றது – பால்வெளி மண்டலமாக உருப் பெறுகின்றது.

அந்த 27 நட்சத்திரங்களும் பலவித நிலைகள் கொண்டு அதனதன் நுகர்ந்த உணர்வுகள் வருகின்றது. முதலில் இருக்கக்கூடிய நட்சத்திரம் நுகர்ந்த பின் அதிலிருந்து வரக்கூடிய கழிவை… அடுத்து இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் எடுக்கின்றது.

அதன் உணர்வு இதற்குள் பட்டபின் இதனுடைய மாற்றங்கள் வேறுவிதமாக இருக்கின்றது. இந்தத் துகள்களை எடுத்துக் கொண்ட பின்
1.இன்னொன்றுடன் இது கலந்திருந்தால் அதன் இணையாகச் சேர்கின்றது.
2.இது கலக்காத நிலை இருந்தால் ஒத்துக் கொள்ளாத நிலையாகி எதிர் நிலை கொண்டு ஓடுகின்றது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களின் செயலாக்கங்கள் தான் நம் பிரபஞ்சத்தில் அது ஈர்க்கும்… அல்லது எதிர் நிலை…! (சத்ரு மித்ரு) மற்ற நிலைகள் எல்லாம் இதற்குள் அடங்குகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களும் நம் பூமியின் தென் துருவப் பகுதிக்கும் வருகின்றது. வட துருவப் பகுதிக்கும் வருகின்றது. ஒரு குளோப் மாதிரி சுற்றி வருகிறது.

அதனின் சுழற்சியில் வரப்படும் பொழுது அதாவது 27 நட்சத்திரங்களும் இந்தக் கோளைப் போல் அது சுழன்று வரப்படும் பொழுது
1.அதனுடைய உமிழ்த்தல் வரப்படும் பொழுது இங்கே இழுத்த பின் அதன் நிலை.
2.இதைக் கலந்து இங்கே எடுத்த பின் அதனின் மாற்ற நிலை.
3.இப்படிப்பட்ட எதிர்மறைகள் நம் பூமிக்குள் எப்படி உருவாகின்றது…?
4.கோள்களில் விளைய வைத்தது தென் துருவப் பகுதியில் கலந்த பின் இதன் உணர்வு கொண்டு இதற்கு எப்படி எதிரியாகின்றது…?
5.அந்த நிலையில் பூமி எப்படி நகர்ந்து (தொடர்ந்து) ஓடுகின்றது…? என்று
6.இவ்வளவு பெரிய அதிசயத்தைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் (ஞானகுரு) கிடைத்தது.

குருநாதர் எனக்குள் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு அதனை உற்றுப் பார்க்கும்படி செய்தார். ஆனால் அப்படி உற்றுப் பார்ப்பதற்கு எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?

இது அகஸ்தியன் தன் உடலில் இளம் பருவத்தில் பிறந்த பின் அவன் உற்று நோக்கிய உணர்வுகள் கொண்டு தான் காண முடிந்தது.

சூரியன் மையமாக இருக்கின்றது. சுழற்சி வட்டம் வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகின்றது. குறையும் தன்மை வரப்படும் பொழுது சுழற்சியின் மாற்றங்களைப் பார்த்தால்
1.நம் பூமி எப்படி மையத்தில் வெப்பமாகின்றதோ இதே போல்
2.மையத்தின் நிலை கொண்ட உணர்வுக்கொப்ப அதனுடைய சுழற்சியின் நிலைகள் மாறுபடுகின்றது
3.இதற்குள் தான் இந்தச் சூரியன் (ஒரு குடும்பமாக உள்ளது).

இதற்கு வெளியிலே போனோம் என்றால் ஒரு குளோப் போல் பல சூரிய மண்டலங்கள் (குடும்பங்கள்) உண்டு. இப்படிப் பல நிலைகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து வரப்படும் பொழுது இதனுடைய சுழற்சி மாறுபட்டு வரப்படும் பொழுது
1.நம் பிரபஞ்சத்திற்குள் மாற்றம்
2.அதனால் ஏற்படும் நிலைகளால் நம் சூரியனுக்குள் மாற்றம்… மற்ற கோள்களில் மாற்றம்
3.கோள்களில் மாற்றமாகும் பொழுது நம் பூமியிலும் மாற்றம்.

இது எப்படி எல்லாம் மாறுகின்றது…? என்பதை ஈஸ்வரபட்டர் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை என்னைக் கவரும்படி செய்து அதை உணர்த்திக் காட்டினார்.

இன்று இருப்பது நாளை இல்லை…! இயற்கையின் நியதி…!

 

உடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human skeletal power

உடலில் உள்ள எலும்புக்கூறுகளுக்கு ஊட்டமாகக் கொடுக்க வேண்டிய அருள் சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் இயக்கத்தில் எப்படி இருள் அதிகமாகவும் ஒளி குறைவாகவும் உள்ளதுவோ அதைப் போன்றுதான் மனிதனின் எண்ணச் செயலும் உள்ளது.

1.கடும் இருட்டிலும் சிறிது வெளிச்சம் ஊடுருவி ஒளி பாய்ச்ச முடியும்.
2.ஆனால் சிறிது வெளிச்சத்தையே மறைக்கக் கடும் இருட்டு தேவையாக உள்ளது.

நம் எண்ணத்தின் இருளை ஒளியாக்கும் ஆத்ம வலுவை நாம் பெற்றோமானால்
1.உடலின் எண்ண நிலைக்கொப்பச் செயல்படும் குணத்தையே
2.ஆத்மாவின் செயலாக உடலைச் செயல்படும் வகையில் செயலாக்கி
4.இருளில் இருந்து ஒளி பெறும் ஞான ஒளியாக
5.நம் ஆத்ம ஒளி பிரகாசிக்கும் சக்தியைப் பெறும்.

எண்ணத்தில் உள்ள இருள்கள் எவை…?

சலிப்பு… சோர்வு… பிறரிடம் உள்ள குறை காணல்.. புகழுக்காக ஏங்கும் ஏக்க நிலை… மரண பயம்…! போன்ற இருள் தன்மைகள் எல்லாவற்றையும் எண்ணத்தால் எடுக்கும் ஞான சக்தி கொண்டு நாம் மாய்க்க வேண்டும்.

குரோதம் வஞ்சனை என்ற தீய குணங்கள் வேறு. எண்ணத்தால் மறைத்துவிடும் இருள் குணங்கள் வேறு.

ஆத்ம ஞானத்தால் நாம் வளர்ந்து வரும் காலங்களில் சலிப்பின் சோர்வை அண்ட விடக் கூடாது.

சலிப்பின் ஏக்கத்தால் “உயர்வு கொள்வோம்” என்ற
1.உயர் ஞான வழிக்கு அந்த ஏக்க நிலையைச் செலுத்தி
2.அந்த ஏக்கத்திலேயே ஆத்ம வளர்ப்பை வளர்க்கவும் முடியும்.

ஆனால்… பிறர்பால் பொருளைப் பார்த்து ஏக்கப்படும் ஏக்கத்தால் மனித வாழ்க்கை அழிவிற்கும் செல்வதுண்டு.

குணங்களை வழிப்படுத்தும் ஞானத்தால் பெறவல்ல ஆத்ம பலத்தால் தான் இருள் என்ற நிலை நீங்கும். மேலும் ஒளியான ஆத்ம வலுவைப் பெற்ற ஆத்ம ஞானத்தால்… எண்ணிய எண்ண நிலைக்கொப்ப கடும் பசியையும்… உடல் சோர்வையும்… கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதே போல் உடலின் எந்தப் பாகத்தில் எந்த வகையான உபாதைகள் ஏற்பட்டிருந்தாலும்… இவ்வுடலின் செயலுக்கும்…
1.இவ்வாத்ம ஞானத்தால் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் தொடர்பு கொண்டு
2.அவர்கள் ஈர்ப்பலை வரிசையில் எண்ணத்தைச் செலுத்தி சுவாசம் எடுக்கும் பொழுது
3.எதை எண்ணிச் சுவாசம் எடுக்கின்றோமோ… அவ்வலை அமில உணர்வு இந்த உடலில் சாடி ஏற்படும் எண்ண நிலைக்கொப்ப…
4.”ஆத்ம பலத்தைக் கொண்டு” இவ்வுடலின் செயலையும் சீராக்கிடும் வழியை வகுத்துக் கொள்ளலாம்.

இந்த உடல் ஒரு அடுப்பு தான். இந்த உடலில் சமைக்கும் அமில உணர்வின் ஆவி நிலையை ஆத்மா பெற்று அதன் வழியில் ஆத்மா வாழ்வது என்பது “சாதாரண வாழ்க்கை நிலை…!”

ஆனால் வாழ்க்கையின் ஞான ஈர்ப்பு நற்குணத் தியானச் செயலால்… எண்ணத்தின் சுவாசத்தில் ஆத்ம பலம் பெற்ற ஒரு ஞானியினால்…
1.உடல் சமைப்பிலிருந்து ஆத்மா பலம் பெறும் நிலை மாறி
2.ஆத்மாவின் செயலுக்குகந்த சமைப்பாக இந்த உடலை இயக்க முடியும்.

பசி… தூக்கம்… கழிவு… காமம்… போன்ற உடலின் செயல் இயக்கத்தையே ஆத்ம வலுக்கூடிய ஞானியினால் ஆத்ம வலுவைக் கொண்டு மாற்றியமைக்க முடியும்.

அத்தகைய தன்மைக்கு… இச்சரீரக்கூறின் எலும்புகளை மின் காந்த வலுக் கொண்ட உறுப்புக்களாக உறுதி கொண்டிடும் செயலால்
1.சரீர உணர்வின் சாதாரண நிலையையே
2.எண்ணத்தின் இயக்க நிலைக்கொப்ப மாற்றியமைக்கும்
3.ஆத்ம வலுவைக் கொண்டு செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

இன்றைய விஞ்ஞான உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “துரித வேகமாக” இயக்கப்படுவதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

DIGITAL WORLD

இன்றைய விஞ்ஞான உலகில் நல்லதோ… கெட்டதோ… எல்லாமே “துரித வேகமாக” இயக்கப்படுவதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரிய அலை ஈர்ப்பிலிருந்து (SOLAR) இன்றைய விஞ்ஞானத்திற்காகச் செயற்கை மின் காந்த அலையை மிகத் துரித இயக்கமாக இந்த நூற்றாண்டில் மனித விஞ்ஞானம் பிரித்தெடுத்துக் கொண்டே உள்ளது.

செயற்கை ஒளி காண… சூரிய சக்தியின் அலையை இந்தப் பூமிக்குத் துரிதப்படுத்தியதன் “செயற்கை இயக்க வேகம்…” உயிரினங்களின் ஈர்ப்பு வார்ப்பிலும் இக்காற்றலையின் தொடர்பினால் பெறவல்ல துரித இயக்கத்தினாலும்
1.இக்கலி மனிதர்களின் ஞான ஈர்ப்பும்
2.இயக்கத் துரிதமும் மிக வேகமாக முன்னேறியுள்ளது.

முன்னேறியுள்ளது…! என்பது இயற்கையின் அலை ஈர்ப்பானது உயிரினங்களின் சுவாச ஈர்ப்பிற்குத் துரிதம் கொள்ளும்… காந்த அணுக்களின் மின் ஈர்ப்பு நிலை… உயிரின வளர்ப்பு யாவற்றுக்குமே துரிதப்பட்டுள்ளது இயற்கை.

“செயற்கையின் செயலுக்காக” சூரிய அலையின் மின் காந்த அலைகளைப் பிரித்தெடுக்கும் இயக்கத்தால்… பூமியின் தன்மைக்கே அந்தக் குணம் கூடிவிட்டது.

அத்தகைய வேகத்தின் செயலினால்தான்… இந்நூற்றாண்டில் மனித விஞ்ஞானச் செயல்கள் அனைத்தும்… துரித வேக ஓட்டம் கொண்டு… மிகவும் வளர்ச்சியுற்று ஓடிக் கொண்டுள்ளது இன்று.

இத் துரித ஓட்டத்தையே சீர்படுத்தி வழிப்படுத்தும் ஞான ஈர்ப்பின் இயற்கைச் சக்திக்கு ஆத்ம தொடர்புடன் செயல்படுத்தினோமானால் ஆயிரம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ச்சியுற்ற நிலையைக் காட்டிலும் உயர் வளர்ச்சிக்குக் கொண்டு போகலாம்.

அதாவது இன்றைய (இக்கலியின்) மின் அலைச் செயலுக்கு உட்படுத்தப்பட்ட மின் சக்தியின் துரிதம் போன்றே
1.எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தால்… ஞானத்தின் ஈர்ப்பு நிலையினால்…
2.இவ்வாத்ம வார்ப்பை ஒளி நிலையாக்கி…
3.உயர் ரிஷிகளின் தொடர்பில்… சித்து நிலை கொண்ட ரிஷித் தன்மைக்கு உட்படுத்த முடியும்.

அதே சமயத்தில் தீய சக்தியின் செயல்களும் இன்று பல நிலைகளில் துரிதம் கொண்டு மாந்திரீகத்தாரால் அவர்கள் அறியாத நிலையிலேயே அவர்களுக்குள் சில துரித ஆவேச அலை உணர்வு கொண்ட ஆவி ஆத்மாக்கள் அவர்கள் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுகின்றன.

அவ்வாத்மாவின் உந்தலின் சுவைக்கு உகந்த ஆகாரத்தை இவர்கள் தந்து… மந்திரவாதியின் (சூனியக்காரர்களின்) செயலுக்காக அவ்வாவிகள் எச்செயலையும் செய்விக்கும் தன்மையில் பல விபரீத செயல்களும் நடை பெற்றுக் கொண்டுள்ளன.

அதிலெல்லாம் சிக்காது… உண்மையின் இயற்கை ஆத்ம வலுவை
1.நாம் நற்குணங்களின் வார்ப்பாக இயக்கவல்ல இயக்கத்தால்
2.இவ்வாத்ம வலுவைக் கொண்டு துரிதமாக ரிஷித் தன்மை பெற முடியும்.

அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் கொடுத்த பயிற்சி”

spiritual-food-agastya

அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் கொடுத்த பயிற்சி”

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுடைய தாய் சூரியனை உற்றுப் பார்த்து எதைக் கவர்ந்ததோ
1.ஒவ்வொரு நாளும் காலையில் சூரியன் நம்மைக் காக்க வருகின்றான்…! என்ற எண்ணத்துடன்
2.தாய் எண்ணிய அந்த உணர்வுகளை எல்லாம்
3.அகஸ்தியனும் (குழந்தைப் பருவத்தில்) ஒன்றுமறியாத வயதாக இருந்தாலும் சூரியனை உற்று பார்க்கின்றது.

சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. ஆனால் பார்த்த உணர்வின் அணுக்கள் அந்த அறிவின் தன்மையாக உடலுக்குள் விளைகின்றது.

1.அந்த மூச்சலைகளைச் சூரியன் எடுத்து வைத்துக் கொள்கின்றது.
2.அதை எப்படி எடுக்கின்றது…? எப்படி விளைகின்றது..?
3.இந்த மனிதக் கருவுக்குள் வந்த பின்… ஒன்றும் அறியாத நிலைகள் இருந்தாலும் அந்த உணர்வின் அலைகள் எப்படி வருகின்றது..?
4.மீண்டும் அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது என்று இதையெல்லாம் குருநாதர் தெளிவாக்குகின்றார்.
5.(தாய் நுகர்ந்தது.. அகஸ்தியன் நுகர்ந்தது எல்லாமே…!)

இதை அன்று அகஸ்தியனுடன் வாழ்ந்த மக்களும்.. அவன் செய்கைகளைப் பார்க்கப்படும் பொழுது உற்றுப் பார்க்கின்றனர். அவனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் நுகர்ந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவன் வளர்ச்சி பெற்று உண்மையின் தன்மை விளைந்த பின் அவன் அருகிலே வரப்படும் பொழுது

ஏனென்றால் அந்த உணர்வின் ஞானம் அகஸ்தியனுக்கு எப்படி வந்தது…?

தாய் தன் உடலிலே நஞ்சினை வென்றிடும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் அரைத்துப் பூசியது. விஷத்தின் தன்மைகள் எல்லாம் மடிந்து… தாயின் கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள் அது விளைந்தது.

அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்த பின் அவனைச் சூழ்ந்துள்ளோர் பார்க்கப்படும் பொழுது இவனில் விளைந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர்.
1.அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்
2.இவனைப் போல் அந்த உணர்வுகளை நுகர்ந்து தாவர இனங்களின் ஆற்றல்கள் எப்படி..? என்று அறியும் உணர்ச்சிகல்
3.அந்தக் காட்டில் வாழும் அகஸ்தியனின் சகாக்களுக்கும் தோற்றுவிக்கின்றது.

இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு “இன்றும் அலைகளாக… நமக்கும் முன் பரவியுள்ளது…!”

இதை எல்லாம்… ஈஸ்வரபட்டர்
1.எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்கி
2.எனக்குள் அதைப் பதிவாக்கி
3.அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் நுகரும்படி செய்கின்றார்.

அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது காற்றிலிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை நானும் அறிய முடிகின்றது.

ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அதை எல்லாம் பெற்றவர். அதன் உணர்வின் தன்மை தொடர்வரிசையில் வரப்படும் பொழுது
1.அவர் சொல்கிறார் நான் (ஞானகுரு) கேட்கின்றேன்.
2.அடுத்த நிலைக்குப் போகும் பொழுது இதை விட்டுவிடுகின்றேன்.
3.அவர் முதலில் ஒவ்வொன்றாகக் காட்டும் பொழுது “ஆஹா…!” என்று தெரிகின்றது.

அடுத்த நிலைக்குப் போகும் பொழுது அதை விட்டுவிட்டு வேறு நிலைக்குப் போய்விடுகின்றேன். கொஞ்ச நேரம் கழித்து.. “திடீரென்று” குருநாதர் முதலில் சொன்னதைச் சொல்லி அது எப்படி..? என்று கேட்கின்றார்.

எனக்கு அது தெரியவில்லை…! சொல்ல முடியவில்லை..!

உங்களிடம் அகஸ்தியனைப் பற்றி இப்பொழுது சொல்லிக் கொண்டே வருகின்றேன். நீங்கள் இதைக் கேட்டுக் கொண்டே வந்தாலும் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பீர்கள்.

அடுத்தாற்போல் இதை ஞாபகப்படுத்தி மீண்டும் கேட்டால் என்ன சொல்வீர்கள்…?

சாமி (ஞானகுரு) சொன்னதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்று சொல்வீர்கள். ஆனால் என்ன சொன்னார்..? என்று கேட்டால் உங்களுக்குச் சொல்லத் தெரியாது..!

இதைப் போன்று தான் குருநாதர் என்னைத் தெளிவாக்குவதற்காகக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இயற்கையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது அதன் உணர்வின் நினைவாக நீ எப்படி இயங்குகின்றாய்…?

முன்னாடி தெரிந்து கொண்டது உயர்ந்தது… பின்னாடி தெரிந்து கொண்டது.. அதன் அழகையும் மற்றதையும் காட்டி… அதனை இரசிக்கச் செய்யும் பொழுது இதன் மேல் தான் ஞாபகம் செல்கிறது.
1.ஆழப் பதிந்த உணர்வுகளை மறந்து விடுகின்றாய்.
2.ஆனால் நீ உற்றுப் பார்த்தது உனக்குள் பதிவு உண்டு
3.அதை எண்ணி வரவில்லை என்றால் மீண்டும் திரும்ப எண்ணினால்
4.அந்த உணர்வுகள் உனக்கு எப்படி அதை அறியக்கூடிய பருவம் வருகின்றது…? என்று அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார்.

ஏனென்றால் உனக்குள் பதிந்த அந்த நிலைகள் இந்தக் காற்றிலே உண்டு என்பதைத் தெளிவாக அங்கே காட்டுக்குள் வைத்து எடுத்துக் கூறுகின்றார் குருநாதர்.

காற்றிலே மறைந்துள்ள அகஸ்தியன் உணர்வுகளை எடுத்து இந்த உலகைக் காக்கும் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்பதற்குத்தான் அந்த நுண்ணிய நிலைகளை எடுத்துக் கூறுகின்றேன்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

அக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய விஞ்ஞான காலச் சுழற்சியிலிருந்தே ஆத்ம வலுவைக் கூட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

family meditation

அக்கால வழக்கங்களையே வலியுறுத்தாமல் இன்றைய விஞ்ஞான காலச் சுழற்சியிலிருந்தே ஆத்ம வலுவைக் கூட்ட வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் எடுக்கும் சுவாசத்தால் ஆத்ம அலையின் தொடர்பு கொண்டுதான் சரீர இயக்கச் செயலினால் ஆத்மாவின் வலுவும் கூடிக் கொண்டே உள்ளது.

இயற்கையின் மாற்றக் குணங்களும்… உருவாகும் ஒவ்வொரு சக்தியுமே…
1.நொடிக்கு நொடி மாற்ற உராய்வு வளர்ப்பு தன்மையில் தான் மாற்றமும் வளர்ப்பும்
2.சுழற்சி ஓட்டத்தில் எல்லா வகை குண வளர்ப்பு முறையிலும் வளர்ந்து கொண்டுள்ளது.

காட்சி:-
அடர்ந்த காட்டுப் பகுதியில் மேடான மலைப் பகுதி தெரிகிறது. அதிலே மலையும் பாறைகளும் தெரிகிறது. மலையும் பாறையும் சேர்ந்து இருந்தாலும் ஓரிடத்தில் “மிகப் பெரிய பாறை ஒன்று” நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

பிறிதொரு இடத்தில் அழகான குளமும் அக்குளத்தின் நீர் பாசி படிந்த கிளிப் பச்சையும் நிறம் போலவும் அப்பச்சையின் நிறம் மாறி மாறி கரும் பச்சையைப் போலவும் அதைச் சுற்றிச் சுற்றி மேலும் சில செடி கொடிகள் வளர்வதைப் போன்றும் தெரிகிறது.

பிறிதொரு இடத்தில் ஏற்றம் இறைக்கும் கிணறு இருக்கின்றது அதிலே நீர் உயர்ந்து குறைந்து இருப்பதைப் போன்றும் ஆனால் நீரின் நிறம் தெளிவு கொண்ட நீராகவும் காட்சியில் தெரிகின்றது.

இதன் விளக்கம் என்ன…?

பூமியின் பிடிப்புள்ள பாறைக்கும் அதற்கு மேல் பிடிப்பற்ற… அதாவது
1.பூமியின் வளர்ப்பு நிலையிலிருந்து மாறி
2.ஒரு பாறையின் மேல் ஒரு பாறை நிற்கின்றது என்றால்
3.அப்படி நிற்கும் நிலை எப்படி ஏற்படுகின்றது…?

பூமியின் வளர்ப்புப் பிடியுடன் வளரும் பாறைகள்

இப்பூமியில் ஏற்படும் பிரளய காலங்களில்
1.சில மண்டல ஓட்டங்களின் சேர்க்கைக் காலங்களிலும்
2.பூமி ஈர்க்கும் அமில மாற்றத்திலும்
3.பூமி ஈர்த்து வெளிக் கக்கும் உஷ்ண அலையின் அமில வளர்ப்பில் அந்தந்த இடங்களில் வளரும்
4.கனி வளங்களுக்கும் கல் மண் இவற்றின் வளர்ப்பு நிலைகளுக்கும்
5.அதற்குக் கிடைக்கப் பெறும் ஊட்டச் சத்து மாறுபட்டவுடன்
6.பழக்கப்பட்டு எடுத்த வளர்ப்பு நிலை குன்றிய நிலையில் அக்கல்களில் சில வெடிப்பு நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே வளர்ந்த நிலையில் அதனுடைய சக்தி கிடைக்காமல் தடைப்பட்ட பின் அதன் தன்மை அதே நிலையிலேயே வெடிப்புப் பெற்று கீழிருந்து வளரும் பாறையின் மேல்… இப்பாறைகள் கரடு முரடாக… மலைகளில் ஒன்றுக்கு மேல் தனித் தனிப் பாறைகளாக உருண்டு நிற்கின்றன.

ஆனால் பூமியின் பிடிப்புடன் வளரும் பாறை மாறு கொண்ட வளர்ப்புடனே வளர்ந்து கொண்டுள்ளது.

நீரின் நிலை பாசி படர்ந்து வண்ணங்கள் மாறி தெரிந்ததன் நிலையும் இதைப் போன்றே ஒவ்வொரு நொடிக்கும் மாறும் உஷ்ண வெக்கையின் ஆவி நிலைக்கொப்ப மாற்றத் தன்மைகள் வருவதால் தான்.

இத்தகைய இயற்கையின் உண்மைகளை எல்லாம் எப்படி இதைப் போன்று அறிகின்றோமோ அதைப் போன்று தான் வளரும் மனித ஆத்ம வளர்ப்பிலும் மாற்றங்கள் உண்டு.

இப்பூமியின் பிடியுடன் வாழும் தன்மையில்… மாறி மாறி வளர்ந்து கொண்டுள்ள இயற்கையின் சுழற்சியில்… ஒன்றை ஒத்த தன்மையில் ஒன்றில்லாத உலகச் சுழற்சி நிலையில்
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த மனிதனின் வளர்ப்பு ஞானமும்
2.பத்தாயிரம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சித்தர்கள் பெற்ற ஞான சக்திக்கும்
3.இன்றைய வளர்ந்த கலியின் ஆத்ம ஞான சக்திக்கும் மிக மிக மாறுபாடுகள் உண்டு.

இன்றைய விஞ்ஞான காலத்திலும்
1.நம் செயலும் இயற்கையுடன் ஒன்றிச் சென்றுதான் ஞான சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பைச் செலுத்தி
2.ஆசார அனுஷ்டானங்களை வலியுறுத்தி வகைப்படுத்தித்தான் எண்ணத்தைச் செலுத்தி வழி பெறவேண்டும் என்று உணராமல்
3.இக்கலியின் காலத்தில் மனித ஈர்ப்புத் துரித அறிவாற்றலின் சக்தியை
4.இக்கால நிலையின் சுழற்சியுடன் கலந்துள்ள தன்மையிலிருந்தே
5.அவரவர்களுக்கு அமைந்த வாழ்க்கையின் வளர்ப்பில் ஒவ்வொரு செயலிலுமே உயர்வின் ஞானத்தைச் செலுத்தி
6.ஆத்மாவின் வலுவுக்கு வலுக் கூட்டும் வழி முறையை வகுத்துக் கொள்ளுங்கள்.

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

light bodies of sages

உடல் பெறும் உணர்வைக் கரைத்து நாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறவேண்டும்

 

எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தான் இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு தீண்டி விட்டால் மனிதனின் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது. உடலை விட்டுச் சென்றல் அந்த பாம்பின் ஈர்ப்புக்குத் தான் செல்ல வேண்டி வரும்.

ஆக… பல பிறவிகள் கழித்து மனிதனாக வந்த நாம்
1.விஷத்தை ஒடுக்கிய அந்தத் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரத்தின் உண்ர்வுகளை நுகர்ந்தோம் என்றால்..
2.அந்தப் பாம்பின் நினைவு மறந்து நஞ்சினை வென்றிடும் நினைவு வரும்.

பாம்பின் ஈர்ப்புக்குள் செல்லாது… நம் உணர்வின் நினைவலைகள்
1.கண்கள் எந்தத் துருவ நட்சத்திரத்தைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.கண்ணன் (கண்கள்) அர்ச்சுனனுக்குச் சாரதியாக சென்றான் என்பது போல்
3.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு அங்கே அழைத்துச் செல்லும்.

மனிதனாக ஆன பின் பிறவியில்லா நிலைகள் அடைந்தது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்தை வலு கொண்ட எண்ணத்துடன் நாம் எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் இங்கே பாய்ந்தாலும்
2.நஞ்சின் உணர்வுகள் இதற்குள் கலந்தாலும்
3.நாம் பாதுகாப்பான இடங்களை அதை (துருவ நட்சத்திரத்தை) எண்ணும் பொழுது
4.ஒளியான உணர்வின் தன்மை பெற்று
5.உடலை விட்டு வந்தாலும் இது அர்ச்சுனனாகி (கூர்மை)
6.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

இங்கே நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது. ஆனால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலம் அருகிலே செல்கின்றோம்.

நஞ்சை வென்ற உணர்வுகள் அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைகின்றது. நாம் இந்த மனித உடலில் எடுத்திக் கொண்ட உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது.

அது தான் பிறவி இல்லா நிலை…!

எந்தச் சந்தர்ப்பத்திலேயும் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அதன் உணர்வு வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.அதன் வலுவை நாம் இழக்கச் செய்து அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

அந்தத் தகுதியை நாம் காலை துருவ தியானத்தின் மூலம் வலுப் பெறச் செய்ய வேண்டும்.

எப்படி எந்த நிலைகள் இந்த ஒளியின் சரீரம் ஒளியின் நிலைகள் நாம் எடுத்தாலும் இந்த ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலின் உணர்வை உருவாக்கிய இந்த உடலும் “அந்த ஒளி பட்டு… இது கரையத்தான் செய்யும்…!”

1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.நான் இந்த உடலிலேயே இருப்பேன்..! என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.

அவன் எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான். அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது

Astathik paalaka

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது

 

நம் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிய பின் அப்புறம் எட்டாவது நிலை… அதாவது நமக்குள் எடுத்துக் கொண்ட சக்தி “அஷ்டதிக்கு பாலகர்கள்..”

ஏழாவது அறிவைக் கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலையை அடைகின்றது.

எந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலை இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் தீமைகளை அகற்றும் தன்மை தான்..
1.அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லும் பொழுது
2.கோவிலிலே தெய்வத்தைக் காட்டும் பொழுது அந்தப் பாலகர்கள் தான்…
3.எட்டுத் திக்கிலிருந்தும் தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்து வரக்கூடிய கெட்டதுகளை நீக்கித் தன் உணர்வின் சத்தைக் காத்துக் கொள்கின்றது.

எப்படித் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் அதிலே கலந்துள்ள செம்பும் பித்தளையும் அது நீக்கி விடுகின்றதோ இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளிகளை எடுத்துச் சேர்க்கப்படும் பொழுது
1.நம் உணர்வின் மணம் தீயதை நாடாது
2.தனக்குள் அந்த ஒளியின் சரீரமாகக் காத்தருளும் சக்தி பெறுகின்றது.

அடுத்து ஒன்பதாவது நிலை உயிருடன் ஒன்றி “நவமி” நம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும் சொல்லின் தன்மையாக வரும் பொழுது ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இராமன் நவமியிலே பிறந்தான்… கண்ணன் அஷ்டமியிலே பிறந்தான்… என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டமி என்பது கோள்கள் அது இருள் சூழ்ந்த நிலைகள்.

அதாவது இருளான இந்த உடல் கொண்டு
1.எண்ணத்தால் கண்களின் தன்மை வளர்ந்தது.
2.எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் நிலை.
3.பின் உயிரின் நிலைகள் கொண்டு இந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகின்றது.

உதாரணமாக விண்வெளியின் நிலைகள் மையமாக இருந்தாலும் அதிலிருந்து தோன்றிய நட்சத்திரங்கள் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை மாய்த்துவிட்டு தனக்குகந்த நிலைகளை உணவாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்திற்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

அந்த உணர்வின் சக்தியைக் கோள்கள் நுகர்ந்து கொள்கிறது. கோள்கள் கவர்ந்ததைச் சூரியன் கவர்ந்து அந்த உணர்வின் சக்தியை இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

எட்டுக் கோளின் தன்மை கொண்டு தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதைப் போல் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் கோளாக மாறுகின்றது.

ஆக… ஒவ்வொரு உணர்வின் இயக்கமாகத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை நம் உடலாக வளர்த்துத் தன் நிலை அடைகின்றது என்பதைக் காட்டிய பின் எண்ணத்தின் நிலைகள் ஒன்பதாவது நிலை அடைய வேண்டும்.

உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பதாவதாக ஆகப்படும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் எந்த ஆன்மாவும் நம்மை இழுக்காது.

1.எட்டு… தீயதின் நிலைகளை நீக்கி
2.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒன்பதாவது… நிலையை அடையப்படும் பொழுது
3.உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது… கல்கி அவதாரம் என்பது.

இந்த உடலிலிருந்து எட்டுத் திக்கில் இருந்து வருவதையும் காத்தது போல் இந்த உயிராத்மா உடலை விட்டு வெளியே போன பின் “கல்கி…!” இன்னோரு உடல் நம்மை இழுத்திடாதவண்ணம் தடுக்கும் நிலை தான் பத்து – தசாவதாரம்.

பத்தாவது அவதாரமாக உயிர் ஒளியாகச் செல்வதை அவ்வாறு காட்டினார்கள். நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

ஆலயங்களில் இன்று நடக்கும் சில செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Ramanathaswamy

ஆலயங்களில் இன்று நடக்கும் சில செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய பக்தி மார்க்கத்தில் மதில் சுவர் எழுப்பி… ஆலயக் கோபுரம் கட்டித் தெய்வத்தின் உருவச் சிலையைப் பஞ்சலோகங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்து… அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து… மேளங்கள் முழங்க வேதனகள் ஓதி… தீபாராதனை காட்டி… தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

மேலும் அதற்கென்ற அறங்காவலர்களையும் பொறுப்பேர்க்கும் பொருட் காவலர்களையும் நியமித்துத் “தெய்வ சங்கல்பம் பெறும்” பக்தி மார்க்கத்தால் கிடைக்கப் பெறும்… நடைமுறைச் செயல் வழியை வழிப்படுத்துகின்றனர்.

ஆனாலும்…
1.தன் ஜீவாதாரத்திற்கே பொருளீட்ட முடியாத…
2.செயல் நிலை கொள்ளா மனிதக் கூட்டங்கள்… போற்றலில் புகழ் கொண்டு
3.பொருளைப் போட்டு தெய்வ பக்தியை வளர்க்கும்
4.தேவக் கூட்டங்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டு குரோத… பொறாமை… ஆவேச உணர்வுடன்
5.தான் வளர்க்க வேண்டிய உயர் குணத்தையே மறந்து
6.பொருள் கொண்ட பக்தி உணர்வின் கூட்டத்தைக் கூடச் செய்து
7.பொருளற்ற ஏக்க உணர்வு கொண்ட மனிதக் கூட்டங்களின் சலிப்பின் சோர்வினால் – பொறாமை உணர்வு ஏற்பட்டு
8.தான் அடைய முடியாத நிலையால் – ஏமாற்றும் குணங்களை வளர்த்து
9.ஆலயங்களில் நடைபெறும் பஜனைக் கூட்டத்தின் வலுவைக் காட்டிலும்
10.ஏமாற்றும் உணர்வு கொண்ட… “திருடும் நிலைக் கூட்டங்கள் தான்…” இன்று வளர்ந்துள்ளது

ஆலயத்திற்குச் செல்லும் அத்தகைய இரு சாராரும் பயந்த உணர்வு கொண்டே செல்கின்றனர்.

ஏன்…? எதற்காக…!

ஆலயத்திற்குச் செல்வோருக்கு… எங்கே தான் அணிந்து செல்லும் நகைகளோ பொருளோ “பறிபோய்விடுமோ…!” என்ற பய உணர்வின் அச்சம் ஒரு பக்கம்.

மறுபக்கம்… பக்தியுடன் வருபவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏமாற்றிப் பூஜை சாமான்களின் விலையை ஏற்றி விற்கின்றனர். அப்படி விற்பவரின் உணர்வோ… “தான் ஏமாற்றிப் பிழைக்கும் செயலுக்காக” இந்தத் தெய்வம் தண்டித்துவிடுமோ…? என்ற பய உணர்வு கொண்ட தன்மையும் உள்ளதப்பா.

அது எல்லாம் போக.. அந்தத் தெய்வச் சிலையை “களவாடும் உணர்விலும்” தான் இன்றைய ஆலய நிலைகள் யாவும் உள்ளதப்பா…!

இதிலிருந்து… உண்மை தெய்வ சக்தியின் அலையைப் பெறும் நிலை மனித உணர்வின் பால் செலுத்த முடியாத செயலாகத் தான் வளர்ந்து விட்டதப்பா…!

1.இன்றைய மனிதக் கூட்டங்களின் இத்தகைய செயலிலிருந்து
2.ஞான அலையை ஈர்க்கும் வழியற்ற ஈர்ப்புப் பிடியினால்
3.வலுக் கொண்ட மகரிஷிகளின் செயலையே இக்கலியில் கலக்க விடாதபடி
4.மனிதனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொறாமை உணர்வுகளும் பேராசை உணர்வும் தான் வலுவாகி உள்ளதே அன்றி முருகனின் குண நிலையை ஒத்த சாந்த சக்தி நிலை வளர முடியாத “கலியாக” இன்றைய நிலை உள்ளது.

எண்ணத்தின் வீரியத்தைப் பிறர் மேல் நாம் செலுத்தும் அலை தெய்வத் தொடர்பு கொண்டு
1.சாந்த வழித் தொடரின் ஞானத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்தாலும்
2.தெய்வத்தின் தெய்வமாகவே நம் ஞான சக்தி உயர்ந்து இருந்தாலும்
3.பிறர் மேல் நாம் செலுத்தும் அலைத் தொடர் குறை காணும் எண்ணத்தைச் செலுத்தாமல்
4.நிறைவு கொண்ட நல் அலைகளை நலம் பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டு செலுத்தி

 

5.கீழிருந்து மேலாகத்தான் – ஒவ்வொரு ஆத்மாவையும் தெய்வ உருவாக எண்ணி
6.நல் வழியில் சென்று அந்த அலையின் சக்தியை எடுத்து வளர வேண்டுமே அன்றி
7.வேறு ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது.

பிறர் பால் செலுத்தும் எண்ணத்தில் அவ்வீர்ப்புப் பிடியில் நம் உணர்வைச் செலுத்திவிட்டோமேயானால் “அவர்கள் பிடியில் சிக்குண்ட ஆத்மாவாகத்தான்” நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் ஆத்மாவும் வழி பெறும்.

ஞான வழியில் பயணிப்போர் இதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது…!