“எச்சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது,,,!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ultimate divine power of human

“எச்சக்தியும் தனித்துச் செயல்பட முடியாது,,,!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இச்சரீர அணுத் தன்மை ஒவ்வொன்றுமே மலம் தான்.
2.இச்சரீர சதை அணு மலத்தின் வளர் அணு வளர்ப்பு வார்ப்பு எலும்புகளின் வலுத் தன்மைதான்.
3.ஒளி பெறும் ஆத்ம சக்தியை எண்ணத்தில் எடுக்கும் உயர்ந்த குணத் தன்மையால்
4.சரீரம் வளர்க்கும் ஒவ்வொரு அணுவையுமே
5.ஏற்கனவே எக்குணத்தின் வழித் தொடரில் பழக்கப்பட்டு வழி பெற்றிருந்தாலும்
6.எண்ணத்தால் எடுக்கும் ஞானத்தின் நற்குணத் தொடர்பைக் கொண்டு உடலில் அணு வளர்ந்து
7.அதனின் சமைப்பினால் எலும்புகள் வளர்ந்து
8.காந்த மின் அலை உணர்வுத் தன்மையினால் எலும்புத் தன்மை உறுதி கொள்ளும் வார்ப்பு நிலைக்கொப்ப ஆத்ம வலு கூடுகின்றது.

இச்சரீர பிம்ப அணுக்களின் வளர்ப்பு நிலைக்கொப்பத்தான் இவ் எலும்பின் வளர்ப்பு அமைகின்றது. காந்த மின் சக்தியின் ஈர்ப்பினால் எலும்புகள் உறுதியாகி ஆத்ம வலு கூடுகின்றது.

அப்படிப்பட்ட வலுத் தன்மை பெற்று ஒளி பெறும் உயர்ந்த சக்தியாக்கி விட்டால்… காந்த மின் சக்தியின் வார்ப்பான எலும்பின் வலுத் தொடரைக் கொண்டு
1.ஒளி கொண்ட ஆத்ம சக்தியை எதனிலும் ஊடுருவவிட்டு
2.உயர் தன்மையின் வார்ப்பாக ஆத்ம சக்தியை ஒளி பெறச் செய்யலாம்.

உயர் குண சக்தியால் தன்னைத்தான் நம்பி தன்னுள் வளரும் பல கோடி கோடி உயிரணுக்களையும்
1.உயர் நிலை அணுக்களாக வளர விட்டு
2.அவ்வுயர்வின் வலுவை எலும்புத் தன்மையில் வலுவாக்கி
3.ஆத்ம சக்தியை உயர்த்திக் கொண்டோமோனால்
4.தன் ஆத்மாவைத் தானே பார்க்கவும் பேசவும்
5.ஆத்மாவைக் கொண்டு எச்சக்தியும் பெறவும் உயர்வு ஞான சக்தியால் வழிப்படுத்தவும் முடியும்.

ஆத்ம வலு தான் மனிதனுக்கு அடுத்த தெய்வ சக்தி நிலை…!

ஆத்ம வலுக் கொண்ட தன்மையினால் இவ்வாத்மாவின் ஒளித் தன்மையைக் கொண்டு முன்கூட்டி அறியும் ஞானத்தையும்… உலகச் சுழற்சி தொடர்பு முறையினால்..
1.உலகத் தன்மையில் எங்கெங்கு மாற்று நிலைகள் ஏற்படும் நிலையை அறியவும்
2.ஏற்படக்கூடிய மாற்றத்தின் அபாயத்தை ஆத்ம வலுக் கொண்டு அறியும் தன்மையில் மாற்றியமைக்கவும் முடியும்.

பிற ஈர்ப்பலையில் சிக்கா ஒளி வட்ட ஞானத்தால் ஆத்ம வலுவின் சித்துத் தன்மையில் அறியும் அஷ்டமாசித்து நிலை அனைத்தும் ஆத்ம வலுவில் பெற்றாலும்
1.எவ்வாத்ம வலுவை எவ்வழித் தொடரில் பெறுகின்றோமோ
2.அவ்வலுவுக்குத் தகுந்த உணவு நிலையைப் படைத்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

உடலுக்கு உணவை உண்ணுகின்றோம். உணர்வுக்குத் தக்க உறக்கம் கொள்கின்றோம். அதைப் போன்றே ஆத்ம வளர்ப்பிற்கு வளர் தொடர் சக்தி நிலைக்கு உணவாக
1.மனித ஆத்ம பிம்பத்தால் பெற்ற ஆத்மாவின் வலுவிற்கு உணவு
2.எவ்வழித் தொடரில் உயர்வு கொண்ட ஆத்ம நிலை பெற்றோமோ
3.அத்தொடர்பு கொண்ட சரீர பிம்ப ஆத்மாக்களின் பால் இருந்து வெளிப்படும்
4.எண்ண உணர்வின் சப்த அலையின் தொடர்பு நிலை சுழற்சி நிலை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தனித்து ஆத்ம சக்தி பெற முடியாது…! ஆணுக்குப் பெண் சக்தியும் பெண்ணிற்கு ஆணின் சக்தியும் கூட்டுச் சக்தியின் போதனைத் தொடர் அலை சக்தியும் அவசியம்.

எண்ணத்தின் உணர்வைக் கொண்டு… அன்பு பாசம் வீரம் சாந்தம் கொண்ட உயர் குணத்தின் வழித் தொடர் வாழ்க்கையில் கலந்துறவாடும்… ஆத்மாக்களின் நம் பால் செலுத்தப்படும் அலை உணர்வின் ஈர்ப்பினால்… நம் ஆத்மாவிற்கு நாம் செலுத்தும் உணவு… நாம் எத்தொடரில் ஞானம் பெற்றோமோ அத்தொடர்பின் உணவாக நமக்குக் கிட்டும்.

குருநாதர் எனக்குச் செய்து கொடுத்த அற்புதங்களை நீங்களும் பெற வேண்டும்

Eswarapattar spiritual language

குருநாதர் எனக்குச் செய்து கொடுத்த அற்புதங்களை நீங்களும் பெற வேண்டும்

 

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் காணும்படிச் செய்கிறார்.

(1).காட்டு விலங்குகள் எப்படி வாழ்க்கை வாழ்கின்றது..? ஒவ்வொன்றும் மற்ற மிருகத்திடமிருந்து தப்பிக்க எத்தனை முயற்சிகளைச் செய்கிறது..?

(2).அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிலே எப்படி வாழ்ந்தான்..? அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இங்கே இருக்கின்றது.

(3).அதே போல் அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதர்களும் உண்டு. அவர்கள் விட்ட மூச்சலைகளும் இங்கே இருக்கின்றது.

1.இதை எல்லாம் நீ பருகுவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டித் தூண்டித் தூண்டித் தூண்டி அதை எடுக்கச் சொல்கிறார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி நுகரும் பொழுது மகிழ்ச்சி வருகிறது.

இங்கே நான் உபதேசிக்கும் பொழுது இந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தால் உங்கள் உடலில் “நிச்சயமாக” நல்ல மாற்றங்கள் வருவதைப் பார்க்கலாம்.

1.குருநாதர் எனக்குச் செய்த அற்புதங்களை எல்லாம்
2.அந்த உணர்வுகள் சொல்லாக வெளி வருவதை நீங்கள் கேட்கும் பொழுது நுகரும் சக்தி கிடைக்கின்றது.
3.இந்த உண்மையின் உணர்வின் தன்மையை அறிய முடிகின்றது.

இப்படி அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் வாழ்க்கையில் பகைமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் அதை மாற்றி மகிழ்ந்து வாழ முடியும்.

ஈஸ்வரா..! என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளையோ துன்பங்களையோ பகைமைகளையோ குறைத்து அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் கூட்ட இது உதவும்.

அதற்குத்தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெற முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual stiffness

முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அகம் புறம் சூட்சமம் இவற்றின் உண்மைத் தத்துவத்தை உணராமல் புற நிலையைக் காணும் வாழ்க்கையின் சுழற்சி ஓட்டம் தான் இன்று உள்ளது. சூட்சமத்தால் வெளிப்படுத்தப்பட்ட பல தத்துவங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தான் இன்றளவும் உள்ளது.

மனித ஞானம் பக்குவம் பெற்று… வாழ்க்கை என்ற கூட்டமைப்பு நெறி முறை நிகழ்ந்த காலத்திலிருந்தே… மனித ஞானத்தின் வாழ்க்கையின் வழி முறைச் செயலுக்கு “பல பக்குவ ஆரோக்கிய நிலைகளைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்…!”

சமைத்து உண்ணும் உணவைப் பச்சை வாழை இலையில் சூடாகப் படைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியது சித்தர்கள் தான்…!

உணவின் உஷ்ணம் வாழையிலையின் மீது பட்டு அதிலிருந்து வெளிப்படும் ஆவிச் சத்துடன் உணவை உண்ணும் பொழுது
1.உணவின் சுவையும்…
2.அவ்வாவியிலிருந்து வெளிப்படும் இரசசத்தான அமில குணம் உடலுக்குள் சேர்ந்து
3.உணவின் செரிப்பிற்கும் உடல் ஆரோக்கியத் தன்மைக்கும் வழிகாட்டியாக உள்ளதன் நிலையை உணர்ந்து
4.அந்தப் பக்குவ முறையைச் சித்தர்கள் காட்டிச் சென்றனர்.

இதைப் போன்று வாழ்க்கை நெறிக்குப் பல உண்மைகளை உணர்த்திச் சென்றார்கள். அதைப் போன்ற சூட்சமத்தால் மறைக்கப்பட்ட பல நிலைகள் இன்றும் உள்ளன வாழ்க்கையில்…!

ஆதி சக்தியின் பரம்பொருளின் சக்தி நிலையைச் சிறிய இவ் இரண்டு கண்களைக் கொண்டு பரந்த கண்ணுக்கெட்டிய பலவற்றையும் பார்க்கும் சக்தி கொண்ட மனிதப் படைப்பு தான் நாம்…!

விஞ்ஞானத்தில்… இன்று ஓர் இடத்திலிருந்து ஒளி பரப்பபடும் உருவத் தொடர் காட்சிகளை இக்காற்றில் கலக்க விட்டுப் பல மைல்களுக்கு அப்பால் அதே உருவத்தின் செயலை அமிலச் சேர்க்கையின் உலோக அலைத் தொடரில் காணும்படி செய்கிறார்கள்.

அதாவது மின் அலையின் மோதலினால் எங்கோ தொலைவில் நடைபெறும் நிகழ்ச்சிதனை… காற்றலையில் கலந்து வரும் அந்த அலைத் தொடரை உருவமாக்கி இருந்த இடத்திலேயே பார்க்கச் செய்கின்றனர்.

இதைப் போன்ற ஞானத்தைக் கொண்டு
1.ஆத்ம தியானத் தொடரால் இவ் எண்ணத்தின் உந்தலை எதில் செலுத்துகின்றோமோ
2.அத்தொடரில் உள்ள நிலைகள் அனைத்தும்
3.புருவத்தின் மத்தியில் உள்ள எலும்பு கவன நரம்புகளில் எண்ணிய சுவாச மோதல் ஏற்பட்டவுடன்
4.எதை எண்ணித் தியான நிலை எண்ணம் செல்கின்றதோ
5.அங்கு நடக்கும் நிலையைத் தொலைக்காட்சியில் காண்பதைப் போன்று
6.பக்குவம் பெற்ற ஆத்ம ஞானத்தால் காணவும் ஒலி/ஒளி கேட்கவும் முடியும்.

ஆத்ம ஞானத்தால் முக்காலமும் அறியவல்ல சக்தியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறமுடியும்…!

சென்ற காலம் நடந்தவை யாவையுமே இக்காற்றலையில் தான் கலந்துள்ளன. உணர்வின் எண்ணத்தைப் பின்னோக்கிய அலைத் தொடரில் செலுத்தப்படும் நிலைக்கொப்ப உயிரணு தோன்றிய காலம் தொட்டே மனித ஞான சக்தியால் எதனையும் காண முடியும்.

நிகழ் நிலையையும் எண்ணத்தைச் செலுத்தும் உணர்வின் மோதலினால் “ஞானதிருஷ்டி” என்று சித்தர்கள் உணர்த்திய நிலையால் நிகழும் காலத்தையும் அறியலாம்.

எதிர் கால நிலையை நாளை நடப்பதை இன்றெப்படி அறிய முடியும்…! என்ற வினா தான் இன்றைய செயலில் உள்ளது.

பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல்… காலதேவனின் கருணை…! என்ற எண்ணம் பக்தி மார்க்கத்தில் உணர்த்துகின்றார்கள்.

அதையே விஞ்ஞானின் அமிலச் சேர்க்கையின் நிலையை இயந்திரச் சாதனங்களின் துணையைக் கொண்டு கால நிலைகளின் மாற்றத்தையும் மண்டலச் சேர்க்கைக் காலங்களில் புள்ளி விவரங்களையும் வைத்து உணர்த்தத்தான் செய்கின்றனர்.

ஒரு இயந்திரத்தால் உணரக்கூடிய எதிர்கால நிலைகளை
1.ஆத்ம ஞான வலுக்கூட்டிக் கொண்ட ஞான சக்தியினால்
2.எதிர் காலத்தில் நடக்கும் நிலைகளை இன்றே உணரக்கூடிய உண்மை பெறும் நிலைய அடையலாம்.

“முக்காலமும் உணரும் பொற்காலமாக..” இவ்வாத்ம காலத்தைப் பக்குவப்படுத்துங்கள் “பொற்கோவிலாக..” ஆத்மாவின் வளர்ப்பில் எவ் ஈர்ப்பின் உணர்வும் மோதாமல் “புடம் போட்ட பொன்னாகப் பக்குவப்படுத்துங்கள்…”

ஈயம் பித்தளை செம்பு தங்கம் இவற்றில் திரவகத்தை விடும் பொழுது மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கம் எப்படித் தனித்து நிற்கின்றதோ அதைப் போன்ற புடம் போட்ட தங்கமாக இவ்வாத்ம வலுவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எக்காலமும் அறியவல்ல ஆற்றலும்… முக்காலமும் உணரும் சக்தி நிலையும்.. இவ்வாத்ம ஞானத்தால் பெறவல்ல சக்தியை.. இந்த உபதேசத்தின் சக்தியால் பெறும் ஜெப தியானத்தால்…
1.என் ஈர்ப்பின் வட்டத்தில் வழி வந்த
2.ஆத்ம தியானம் கொண்ட தம்பதிகள் ஆண் பெண் இருவரும் இணைந்து
3.என் சக்தி நிலையில் உணர்த்தப் பெற்ற உபதேசத்தின் உயர்வை இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் வளர்த்து
4.தன் ஆத்ம தொடர்பு கொண்ட பல ஆத்மாக்களுக்கும் இந்த ஆத்ம தியானத்தின் உண்மைச் சத்தியத்தை உனர்த்தி
5.ஆதி பரம்பொருளின் சக்தியின் படைப்ப்பின் உயர்வுப் படைப்பை ஒவ்வொரு ஆத்மாவும் பெற்று
6.”சக்தியின் சக்திக்கே.. ஆண் பெண் இனம் வளரச் சக்தி தாருங்கள்…!”

 

ஞானப் பொக்கிஷத்தை நேரடியாகக் கொடுத்தாலும்… பயன்படுத்துவார் இல்லை

Gnaguru and Eswarapattar

ஞானப் பொக்கிஷத்தை நேரடியாகக் கொடுத்தாலும்… பயன்படுத்துவார் இல்லை

 

மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலே சாப அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதைக் குருநாதர் சொன்ன நிலைகளில் ஒவ்வொன்றையும் பரீட்சித்துப் பார்த்ததைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு உடலிலிருந்து வரக்கூடிய தீய வினைகள்… சாப வினைகள்… எப்படி வருகின்றது…? ஒரு தலை முறைக்கு இரண்டு தலை முறைக்கு அது எப்படிப் பாதிக்கின்றது..? என்று நேரடியாகக் காட்டுகின்றார்.

1.ஆனால் அவர்களுக்கு நீ இந்தப் பாதிப்பைப் போக்குகின்றாய் என்று வைத்துக் கொள்வோம்.
2.அதனால் அவர்களுக்கு அங்கே மகிழ்ச்சியாகும்.
3.அந்த உணர்வுகள் நல்லதாக ஆன பின் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
4.இருந்தாலும் நீ சொல்லும் ஞான வழியினை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
5.மீண்டும் அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று “தவறு செய்யத் தொடங்குவார்கள்…”
6.அந்தத் தவறின் தன்மை வந்தது… அன்றைக்கு நல்லதாக ஆனது.
7.ஆனால் மீண்டும் இன்றைக்கு ஆகவில்லையே…! என்று ஏங்கிக் கொண்டு
8.நீ சொல்லும் ஞானிகள் உணர்வை அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்…! என்று
9.ஈஸ்வரபட்டர் எமக்கு இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

உடனடியாக ஒரு தரம் நல்லதாக ஆனால்… அதைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் அடுத்து வரும் தீமைகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவும்.

அதைப் போல் குரு அருளால் நலமாக வேண்டும் என்று ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆனாலும் பதிவு செய்யும் பொழுதே என்ன செய்கின்றார்கள்…?

எங்கெங்க…? என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! பணம் வாங்கிச் சென்றவன் தர மாட்டேன் என்கிறான்…! என்று என்னிடமே திருப்பிச் சொல்கிறார்கள்.

ஒரு நோயாளிக்கே நல்ல வாக்கினைக் கொடுத்தாலும் அவர்கள் சார்புடையோர்… (அதாவது அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவர்கள்)
1.“இவருடைய கஷ்டத்தை ஒன்றும் சொல்ல முடியாது…!” என்று இப்படி ஞாபகப்படுத்துகின்றார்கள்.
2.யாம் சொல்லும் ஞான உணர்வுகளை அவர்களைக் கேட்க விடாதபடி இடைமறித்து
3.இப்படிச் சொல்லகூடிய உணர்வுகள் தான் வருகின்றது.

அருள் வாக்கினைப் பதிவு செய்து… நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களை மீட்க வைக்கலாம்…! என்று நான் (ஞானகுரு) எண்ணினாலும் முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ள எத்தனை சிரமப்பட்டேன்…? எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பேன்…! காட்டுக்குள் அழைத்துச் சென்று தான் குருநாதர் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார். நேரத்தில் சாப்பிடுவதற்கு சோறு (உணவு) இல்லை.

காட்டுக்குள் சென்றால் குருநாதர் என்ன செய்வார்…?

கத்திரிக்காய்… மிளகாய்… மாங்காய்… என்று மோரில் ஊற வைத்ததை அவர் எடுத்துக் கொடுப்பார். அதிலே அவர் எத்தனையோ பக்குவம் செய்து வைத்திருப்பார். உப்பு காரம் என்று தனியாக எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை.

இதிலேயே தான் எல்லாம் இருக்கும்.

ஒரு சிறிய டப்பா தான். அதிலே சிறிதளவு அரிசியை எடுத்துப் போட்டு நீரைக் கொஞ்சம் விட்டு அதனுடன் மோரிலே ஊற வைத்த ஒரு மிளகாய் அல்லது கத்திரிக்காயைப் போட்டு வேக வைக்கச் சொல்வார்.

பின் அது எல்லாம் வெந்த பின் குருநாதர் ஒரு அளவாகத் தண்ணீரை ஊற்றுவார். கஞ்சி மாதிரிப் பக்குவம் வரும். ஆளுக்குக் கொஞ்சம் குடித்துக் கொள்வோம்.

இது எப்படிடா… இருக்கின்றது…? என்பார் குருநாதர்.

நன்றாக இருக்கிறது சாமி…! என்பேன்.

ஒரு லிட்டர் அரிசியை வைத்து நானும் குருநாதரும் காட்டிற்குள் “இரண்டு மாதம் சாப்பிட்டுக் காலம் தள்ளியிருக்கின்றோம்…!” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றையும் அங்கே சாப்பிட விடமாட்டார். சாம்பாரும் அது தான்… காயும் அது தான்…! எல்லாம் அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

குடும்பம்… தொழில்… உணவு… எல்லாவற்றையும் விட்டுத்தான் யாம் இத்தனையும் தெரிந்து கொண்டு வந்தோம். அப்படிப் பெற்ற ஞான வித்தை உங்களுக்குள் பதிய வைக்க எத்தனையோ வழிகளைச் செய்கிறோம்.

ஆனால் அதை எத்தனை பேரால் எடுத்து வளர்க்க முடிகிறது…? தனக்குள் வந்து தீமைகளையும் சாப அலைகளையும் போக்க முடிகிறது…?

1.சாமி செய்வார்…
2.குருநாதர் செய்து தருவார்.. என்ற எண்ணத்திலேயே தான் இருக்கின்றார்களே தவிர
3.யாம் பதிய வைக்கும் ஞான வித்தை வளர்ப்பார் இல்லை…!

ஆண் பெண் இருபாலரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

power of couple

ஆண் பெண் இருபாலரும் ஆத்ம ஐக்கிய நிலையில் செயல்பட்டால் தான் “ரிஷித் தன்மை பெற முடியும்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமியில் சகல ஜீவ ஜெந்துக்களும் ஆண் பெண் இனத் தொடரில் இனப் பெருக்கம் வளர்கின்றது.

அதனை ஒத்த தன்மையின் வளர் சக்தியில்தான்
1.ஆண் எடுக்கும் உயர் தொடர்பலை தியானத்தால் கூடக்கூடிய அமிலத்தின் தன்மைக்கு
2.ஜீவன் பெற பெண் இனச் சுவாசத் தொடர் எண்ணப் பரிமாற்றம் தேவை.

ஏனென்றால் தான் பெற்ற சக்திக்கே ஜீவ சக்தி இருந்தால் தான் ஆத்ம பலத்தின் வலுத் தன்மையே பெற முடியும்.

ஆத்ம பலம் என்பது உடல் பலத்தைக் கொண்டு பயில்வான்கள் எடுக்கும் பளு தூக்கிகளைப் போல் பெறத்தக்கதல்ல.

எண்ணத்தால் எடுக்கும் சுவாச அலையின் ஜெபத் தன்மைக்குக் கூடப் பெறும் அமிலச் சேர்க்கைக்கு ஜீவத் துடிப்பலைகள் பெறவல்ல அணு வளர்ச்சித் தன்மைக்குப் பெண்மைத் தொடர் சுவாச அலை இருந்தால் தான் ஆண் எடுக்கும் ஜெபத்தின் உயர் அமிலத்தின் வார்ப்புத் தன்மையை அணு வளர்ப்பின் சமைப்புத் தன்மை ஆவி நிலையால் ஆத்ம வலுவின் மூலம் பலம் கொள்ள முடியும்.

1.பெண் இனமே இல்லாமல் பல கோடி ஆண்டுகள் கடும் தவமிருந்து
2.பெண்ணின் சுவாச அலையே படாமல் இந்தப் பூமியில் ஜெபம் பெற்றாலும்
3.எந்தப் பூமியிலிருந்து ஜெப நிலைப் பெற்றார்களோ
4.அதே ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சி வட்டத்தில் சிக்குண்டு
5.தனித்த நிலை கொண்டு தவத்திலிருந்து செயல்பட முடியுமேயன்றி
6.வளர்சக்தியான தொடர் சக்தியான ரிஷிச் சக்தியின் சுழற்சி வட்டத்தில் சுழலும் தன்மை பெற முடியாது.

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு சுழல் பெறும் வழித் தொடரில்… ஒவ்வொன்றும் உருவாகுகிறதே அன்றி தனித்த ஒன்று என்பது இயங்காத் தன்மை தான்.

தெய்வ சக்தி கொண்ட ரிஷித் தன்மை பெற வேண்டும் என்றால்
1.ஆத்ம தொடர்பு கொண்ட ஆண் பெண் இனத் தொடர்பு
2.ஆத்ம அலையின் கூட்டு ஐக்கியமான தொடரில் தான் பெற முடியும்.

இத்தொடரில் சில சித்தர்கள் தன் வாழ்க்கைப் பந்தத்தில் பெற முடியாத ஜீவத் தொடர் கிட்டாததனால்… தன் சித்து நிலையில் ஆத்ம வலுவைக் கொண்டு ரிஷித் தன்மை பெற வேண்டிய சக்திக்காக… மிருக அலைத் தொடர்புடனும் ஆத்ம ஜீவ பிம்ப உடல் எண்ணத்தை மிருகங்களின் உணர்வலையுடன் தன் ஆத்மாவைப் பிறிதொரு சரீரத்தின் மேல் செயல்படுத்தியும் அச்சக்தியைப் பெற்றனர்.

அதே போல் பல சித்தர்கள் தாய் இன குணமுடன் தான் பெறும் சக்திக்குப் பல ஆத்மாக்களின் பால் தன் எண்ண உணர்வின் உயர்விற்காக உபதேச நிலையில் பல சக்திகளைப் பெற்றனர்.

ஆகவே… ஆணின் உயர்வுத் தன்மைக்குப் பெண் இன ஜீவ அலைத் தொடர் எப்படி அவசியமோ… அதைப் போன்றே பெண்மையின் சக்திக்கு ஆணினத்தின் அமிலத் தன்மையும் அவசியம் தேவை.

அது இல்லாவிட்டால்…
1.ஜீவ சக்தியின் வழி சக்தியைப் பெருக்க
2.சக்தியின் செயல் தன்மை உயர் ஞானம் பெறவல்ல வழித் தொடருக்குச் செல்லாமல்
3.பெண் இனத்தின் துரித அமிலக்கூறு ஜீவ சக்தியின் வம்சப் பெருக்கத்தில் சோர்வு நிலை ஆகி
4.புழு பூச்சி கரையான் இப்படி பூமியின் கீழ் பிடிப்பில் ஊரும் ஜெந்துக்களின் வளர்ப்பாக
5.உயிரினங்களின் இனப் பெருக்கம் அதிகமாகச் சுழலும் தன்மை ஏற்படும்.

பெண்கள் விடும் சுவாச அலையில்… ஒவ்வொரு மூச்சலையின் தொடரிலும் பல கோடி ஜீவ அணுக்கள் பெருகிக் கொண்டே உள்ளன.

புழுவாகவும் பூச்சியாகவும் தன் சுவாச அலை ஈர்ப்பை வளர்க்கும் தாயினம்… நற்குணத்தின் பால் ஆண் இன குணங்களுடன் தன் எண்ணத்தின் செயலை ஞானத்தால் செலுத்தும் உயர் குணத்தைக் கொண்டு… இந்தப் பூமியின் பிடிப்பலைக்கே ஞான உணர்வைப் பெறவல்ல நற்குண வளர்ப்பாக்கலாம்.

உயர் மின் தொடர்பில்… பூமியின் உயர்வுக்கே பெண் எடுக்கும் சுவாசத்தால் உயர்வு நிலைப்படுத்த முடியும்.

1.பெண்களின் சொல் ஈர்ப்பில்…
2.ஆண் இன உணர்வின் மோதல் எடுக்கப்படும் நிலை கொண்டு தான்
3.ஆண் இன அமில ஜீவ ஆவி வார்ப்பு ஆத்மாவிற்குக் கூடுகின்றது.

ஆனால் பெண் இனம் ஆணின் சொல் ஈர்ப்பிலிருந்து சக்தி பெறுவதில்லை. பெண்ணின் சொல்லும் எண்ணமும் ஆணின் பால் செலுத்தும் உணர்வுக்கொப்ப
1.உணர்வின் ஈர்ப்பிலேயே காந்தமுடன் இரும்பு சேர்வதைப் போன்று
2.தானாகவே சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது பெண் இனம்.

இதை ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை நிலையுடன் ஒத்த வழியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஜெபத்தால் எடுக்கும் ஞானத் தொடர்பின் சூட்சமத்தை..
1.ஒன்றுடன் ஒன்று கலந்த உணர்வுத் தொடர்புடன் உள்ள
2.வழித் தொடரை அறிந்து நீங்கள் செயல் கொள்ளுங்கள்…!

மூளை வளர்ச்சி குறைவு கொண்ட குழந்தைகள் இன்று அதிகமாகப் பிறக்கக் காரணம் என்ன…?

divine-light-chakras

மூளை வளர்ச்சி குறைவு கொண்ட குழந்தைகள் இன்று அதிகமாகப் பிறக்கக் காரணம் என்ன…?

 

ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்வார்கள். நீ முடமாகப் போவாய்… உன் கண்கள் குருடாகும்… உனக்கு இப்படி எல்லாம் கெடுதல் ஆகும்…! என்று சாபமிடுவார்கள்.

அவர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால்…
1.கர்ப்பமுற்ற தாய் இதைக் கேட்டுக் கொண்டிருந்தால்
2.கருவிலிருக்கும் அந்தச் சிசுவிற்கு உணர்வுகள் பட்டபின் அது பதிவாகின்றது.
3.கருவில் இருக்கும் சிசுவின் தன்மை குருடாகிவிடுகின்றது.
4.கால் முடமாகின்றது. விபரீத உருவம் கொண்ட குழந்தையாகப் பிறக்கின்றது,

இது எல்லாம் மூதாதையரின் உணர்வுகள்…!
1.மனிதன் என்ற வாழ்க்கையில் வரும் பொழுது
2.அந்த உடல் ரீதியில் இரத்த நாளங்களில் கவர்ந்து
3.அது தொடர்ந்து இதே மாதிரிச் சில குடும்பங்களில் பார்த்தால் இந்த மாதிரி இருக்கும்.

குழந்தைக்குப் பன்னிரெண்டு வயதாகி விட்டால் அதற்கப்புறம் வளர்ச்சி இருக்காது. நரம்புகள் எல்லாம் குன்றும்… அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி நடக்க முடியாமல் போய் உயிரே போய்விடும்…! இப்படி நரக வேதனைப்படுகின்றனர்.

ஆனால் அந்தக் குழந்தைகள் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் இட்ட சாபங்கள் இந்த நிலையைச் செய்கின்றது.

ஒரு சமயம் இங்கே தபோவனத்திற்குச் சிலர் வந்தார்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளுக்குமே பன்னிரெண்டு வயது ஆகி விட்டாலே கை கால் எல்லாம் குறுகிக் கொண்டே போகிறது என்றார்கள்.

உங்கள் வீட்டில் யாராவது இதற்கு முன்னாடி சாபம் இட்டார்களா..? என்று அவர்களிடம் நான் (ஞானகுரு) விபரம் கேட்டேன். இல்லவே இல்லை…! என்றார்கள்.

பின் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு நன்றாகத் தெரிந்து கொண்டு வாருங்கள்..! என்று சொன்னேன்.

அவர்கள் குடும்பத்தில் முன்னாடி வாழ்ந்தவர்கள் அண்ணன் தம்பிக்குள் வெறுப்பான பின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு குழியைத் தோண்டி இம்சித்து அதைப் புதைத்திருக்கின்றார்கள்.

உயிருடன் அப்படிச் செய்ததால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறுகி வேதனைப்பட்டு இறந்தது. அடப் பாவிகளா…! எனக்கு வந்த கதி உன் குடும்பத்திற்கும் உன் குழந்தைகளுக்கும் சாடும்…! என்று சொன்னது.

அதன் வழி அந்த வம்சத்தில் வந்த (பெண்) தாய் வகையில் சம்பந்தப்பட்டுப் போன குடும்பம் எல்லாமே பாதிப்பானது.

பிறகு நான் விபரத்தைச் சொன்னேன். இந்த மாதிரித்தான் உங்கள் வம்ச வழியில் இருக்கும் என்றேன். அது எப்படிச் சாபமிட்டுப் போனதோ இந்த உனர்வுகள் தொடர்ந்து சார்புடைய தாய் வழியில் வருகின்றது.

யார் இங்கே குற்றம் செய்தது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லையே.

மனிதனாக ஆன பின் தாய் கருவில் இருக்கும் பொழுது இதைப் போன்ற சாடல்கள் இருந்தால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்களும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.

இன்று பார்த்தால் வேறு வேறு குடும்பத்தில் தான் பெரும்பகுதி சம்பந்தம் செய்கின்றார்கள். இருந்தாலும் தாய் வழியில் வந்தால் தந்தை வழியில் வந்தாலும் இந்த நிலை ஆகின்றது.

இப்படிப்பட்ட விபரீதக் குழந்தைகள் வரப்படும் பொழுது அதனுடைய சார்புடைய மற்ற மக்களும் இதனை நுகர்கின்றார்கள். ஏனென்றால் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது,

அதன் வழி வரப்படும் பொழுது அனைவருக்குமே இத்தகைய பாதிப்பு ஆகின்றது. இப்படியும் பல நிலைகள் மனித வாழ்க்கையில் வருகின்றது.

இதைத் தடுக்க நாம் என்ன சக்தி வைத்திருக்கின்றோம்..!

விந்தையான யோகாசனங்களைச் செய்யும் மனிதனால் “ஞானச் சித்தைச் செயல்படுத்த முடியாதா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

YOGA

விந்தையான யோகாசனங்களைச் செய்யும் மனிதனால் “ஞானச் சித்தைச் செயல்படுத்த முடியாதா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரத்தைக் கொண்டு யோகாசனம் சில வித்தை விளையாட்டுக்கள் எல்லாம் செயல் புரிகிறார்கள். அவர்களின் அங்கக்கூறின் அமிலத் தன்மையே அவ் ஈர்ப்பின் எண்ண உணர்வின் வலுவான அணு வளர்ப்பினால்
1.சரீரத்தைப் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்
2.சுவாசத்தை அடக்கிய முறையிலேயே சில விந்தை புரிபவர்களும் உண்டு.

அதைப் போன்றே சரீர இயக்கத்தால் சரீரத்தைப் பல விந்தைச் செயலாக யோகாசனம் (GYMNASTICS) போன்ற வழி முறையில் செயல்படும் முறையும் இதன் தன்மைக்கு உகந்தது தான்.

நாட்டியம்… சங்கீதம்.. உடல் பயிற்சி… சில விளையாட்டு வழி முறைகள் இவற்றில் ஒவ்வொன்றிலுமே
1.எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி
2.எத்துறையின் வழிப்படி இச்சரீர இயக்கம் அதிகப்படியாகச் செயல் கொள்கின்றதோ
3.அதற்குகந்த அணு வளர்ப்பை இச்சரீரம் பெற்று
4.எடுக்கும் எண்ணத்தினாலேயே அவ்வமிலத்தைக் காந்த மின் அணு வளர்ப்பாக சரீரம் வளர்ச்சி கொள்கின்றது.

அதாவது… எண்ணத்தின் உணர்வைக் கூர்மையாக்கி… துரிதம் கொண்ட ஆர்வ உணர்வின் உந்தலுக்குகந்த வார்ப்பாகச் சரீரம் வழி வகுத்துக் கொள்கின்றது.

இத்தொடர் சரீர இயக்கத்தில் மட்டும் அல்லாமல்… தொழில் முறையிலும்… மற்ற கலைகள் ஒவ்வொன்றிலுமே… ஒரு மனிதன் தன் வாழ் நாளில்…
1.எண்ணத்தின் உணர்வு சுவாசத்தை எச்செயலுடன் ஒன்றிய சுழலில் வாழ்கின்றானோ
2.அவ்வலையின் வளர்ப்பைச் சரீர அணுக்களே வளர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.அதே நிலை கொண்ட அமிலக்கூறின் ஆவி நிலை அமிலத் தொடர்பும்
4.இவ்வளர்ப்பின் தொடர்புடன் வளரும் அலைத் தொடர்பாக இவ் ஈர்ப்புடன் தொடர்ந்து வளர்கின்றது.

“இனம் இனத்துடன் சேரும்…” என்ற உண்மையின் தத்துவ உணர்வு இதன் அடிப்படையில் சொல்லப்பட்டது தான்.

ஆகவே இச்சரீர உணர்வின் எண்ணத்தைச் “செலுத்தும் வழி முறையைக் கொண்டு” வாழ்க்கையின் நடைமுறைச் செயலையே..
1.மனித சக்தியின் செயலை உயர்வின் வழியமைக்கச் செயல்படுத்தும் முறை அறிந்து
2.எண்ணத்தின் உணர்வை உயர்வு கொண்ட மகரிஷிகளின் தொடர்புடன் தன் ஞானத்தை வளர்த்து
3.சகல சித்தும் அறியும் ரிஷித் தன்மையின் வழி பெறலாம்.

சரீர உணர்வுடன் இந்த ரிஷித் தன்மை பெற ஆண் பெண் கூட்டு உணர்வு எண்ண வழி முறையின் வளர்ச்சியினால் தான் முடியும். சகல சித்துவும் பெறும் தன்மை அடைய வேண்டும் என்றால் வாழ்க்கையில் ஆண் பெண் எண்ணக் கூட்டு நிலை தேவைப்படுகின்றது.

ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு நிலையில் சக்தி பெற்றார்கள்.

ஞானச் சித்தின் வளர்ப்பு நிலைக்குச் சிவ சக்தி என்ற ஆண் பெண் அமிலக் கூட்டின் உணர்வுத் தொடர்பு அவசியம்.

தனித்த சக்தியினால் நான் செயல்படுவேன்…! என்பது வளர்ப்புத் தன்மையக் காட்டிலும் மலட்டுத் தன்மையான முனிவர்களின் நிலையை ஒத்துத்தான் தனித்து இயங்க முடியும்.

ஏனென்றால் ஆண் பெண் அமில சக்தி தான் நம் பூமியின் சக்தியே…!

அச்சக்தியின் தொடர்பு போன்றே பூமியில் உள்ள சகல நிலைகளும் இன்றளவும் வளர்ந்துள்ளதைப் போன்று ஞானத்தின் தொடருக்கும் இவ்வழி முறையைப் பெற்றிடுங்கள்.

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

chitra festival

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

 

கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.

ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.

ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.

அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.

பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.

ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?

1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!

இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.

ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆனால் அவன் பிறந்த பின் அதைப் பார்க்கும் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.

நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.

இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.

நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual path ways

வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் யாவுமே “ஞானத்தைப் பெறச் செய்வதற்குத் தான்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்ம வலுப் பெறுவது என்பது ஆண்டவன் அருளால் ஒரு நொடிப் பொழுதில் கிட்டிவிடுவது என்பதல்ல.

இச்சரீரக்கூறின் உணர்வின் எண்ணத்தையே உயர் ஞான வழி முறைக்குச் செயல்படும் ஒவ்வொரு செயலுக்குமே செயலின் வழி முறையில் செலுத்தப்படும் எண்ணத்தில் உடல் ஏற்கும் உணர்வு நிலைக்கொப்பத்தான் செயல்படுத்த முடியும்.

உணர்வு நிலை என்பது…
1.சகல நிலைகளிலும் இவ்வெண்ணம் மோதும் பொழுது
2.சமமான சாந்த நிலையுடன் கூடிய எண்ணத்தின் பால்
3.அந்த உணர்வின் செயகையை உடல் நிலை ஏற்று வழிப்படுத்தும் நிலைக்கொப்ப
4.சகல சக்திகளிலும் சமமான சாந்த சக்தியைச் செயல்படுத்தும் வழி முறையினால் தான்
4.ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொள்ள முடிகிறது.

ஆத்ம பலம் பெற்ற… ஞானத் தன்மையினால் எண்ணத்தின் உணர்வைச் சாந்தப்படுத்தும் வழிச் செயலை “அவ்வாத்மாவே…” பிறகு செயல்படுத்தி வழி நடத்தும்.

சிறு சிறு துளிகள் சேர்ந்து தான் பெரு வெள்ளமாகின்றது. அதைப் போன்று ஒவ்வொரு செயலிலும் எண்ணத்தின் வழி முறையைச் செயல்படுத்தும் தனமை கொண்டு தான் ஆத்ம பலம் கூடி வலுவாகின்றது.

1.ஆத்ம பலம் பெற்று விட்டாலும்
2.வாழ்க்கையில் நடக்கும் எதிர் நிலை உந்தல்கள் பல மோதத்தான் செய்யும்.

பெரும் வெள்ளத்தில் எதிர்படும் குப்பைகள் எப்படி அடித்துச் செல்லப்படுகின்றனவோ அதைப் போன்றே ஆத்ம பலம் பெற்ற வாழ்க்கையில் எதிர்ப்படும்
1.உணர்ச்சிகளை உந்தக்கூடிய சில நிலைகள் ஏற்பட்டாலும்
2.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் குப்பைகளைப் போன்று
3.அது நம் ஆத்மாவுடன் கலக்காது.

பல காலமாக உழைத்துச் சம்பாதித்து வீடு கட்டும் பொழுது… வீட்டின் அஸ்திவாரத்தைப் பலம் கொண்டு கட்டியவுடன்… அதற்கு அழகு செய்வது கடினமல்ல…!

அப்படிக் கட்டப்பட்ட வீட்டில் ஆங்காங்கு ஏற்படும் துப்புரவு நிலைகள் சில செய்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

அதைப் போன்றே ஞானத்தால் சித்து கொண்ட ஆத்ம பலம் பெற்று இச்சரீரமுடன் வாழும் காலத்தில்
1.கட்டப்பட்ட வீட்டின் குப்பைகள் அண்டுவதைப் போன்றும்
2.காரைகள் உதிர்வதைப் போன்றும் சில நிலைகள் ஏற்படத்தான் செய்யும்.

அதைத் துப்புரவுபடுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

உடலுடன் கொண்ட வாழ்க்கையில் எதிர்ப்படும் யாவையுமே
1.நம் ஞானத்தை வளர்க்கவல்ல வழி முறையாக
2.ஆத்மாவின் செயலைக் கொண்டு வழி பெறும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

agastyan and ursa major

ஞானிகளைச் சந்திப்போர் பெரும்பகுதி பிழைப்புக்காகத் தான் கேட்கிறார்கள் – அவர்கள் பெற்ற ஞானத்தைக் கேட்பதில்லை

 

கருவிலிருக்கப்படும் பொழுது ஒரு தாய் பாசத்தால் அன்பால் பண்பால் பரிவால் ஒரு குழந்தை கடும் நோயால் அவதிப்படுவதௌ உற்றுப் பார்க்கின்றது. அடப் பாவமே…! இந்தச் சிறிய வயதில் இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணுகின்றது.

ஏனென்றால் கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்குக் குழந்தைப் பாசம் அதிகமாக வரும். கர்ப்பமாகி விட்டாலே அந்த தாயின் சுவாசமே வேறு விதமாக இருக்கும். அந்தப் பாசம் என்ற உணர்வுகள் தோன்றும்.

நோயுற்ற அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் கண்களால் பார்த்த பின் தாய் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிகின்றது.

ஆனால் அது கருவிலே விளையப்படும் பொழுது சிறுகச் சிறுகச் சேர்ந்து பிறந்த பின் குழந்தைக்கும் இது நோயாக மாறுகின்றது. நோயாக மாறிய பின் தாய்க்கும் அந்த வினையாகின்றது. குழந்தையைப் பார்க்கச் செல்வோருக்கும் இதிலே விளைந்தது (நோய்) அங்கே வருகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதைப் போல் தான் பண்டைய காலத்தில் அகஸ்தியன் அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல்கள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின்
1.அவனுடைய அபூர்வ செயலை அவனுடன் வாழ்ந்த சகாக்களும் உற்றுப் பார்க்கின்றனர்… நுகர்கின்ரனர்.
2.அப்பொழுது அகஸ்தியன் உடலில் விளைந்த பேராற்றல்கள் அவர்களுக்குள்ளும் விளைகின்றது.
3.இப்படி அக்கால மக்கள் அகஸ்தியனுடன் வாழ்ந்து அவன் வழியில் சென்றவர்கள் தான்
4.சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.

அதன் பின் சென்றது அரசர்களாக ஆன பிற்பாடு ஒன்று இரண்டு போனது அபூர்வமாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் காந்திஜி இராமகிருஷ்ண பரமகம்சர் இராமலிங்க அடிகள் போன்றோரை விண் செலுத்தினோம்.

இருந்தாலும் அந்த ஞானிகள் மீது பற்று கொண்டோர் எல்லாம் அவர்களிடத்தில் ஏதோ கிடைக்க வேண்டும் என்று தான் சென்றார்கள். அவர்கள் கண்ட உண்மையின் உணர்வைப் பெறவேண்டும்… அந்த ஞானத்தைப் பெறவேண்டும்…! என்று யாரும் கேட்கவில்லை.

1.மகானிடம் சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்
2.மகானைப் போய்ப் பார்த்தால் நம் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான்
3.இன்று வரையிலும் சந்திக்கச் செல்கிறார்கள்.

ஆனால் பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும்…! என்று சென்றாலும் “ஞானம் இல்லை…” என்றால் வந்த பணத்தைச் சீராக்க முடியுமா என்றால் முடியாது…!

பணமே வந்தாலும் ஞானம் இல்லை என்கிற பொழுது என்ன நடக்கிறது..?

1.ஆசை அதிகமாகின்றது
2.அதிலே ஏதாவது பிசகானால் இப்படி ஆகிவிட்டதே…! என்று மறுபடியும்
3.இதைப் பெறவேண்டும் அதைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு… அந்த ஆசை நம்மை “விடுவதில்லை…!”

இதை மட்டும் பெற்றால் பரவாயில்லை என்போம். பின் இது நன்றாக வந்தது… இதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம்…! என்று சொல்லி அதிலே நஷ்டமானால் வேதனை தான் மிச்சமாகின்றது.

வேதனை வந்த பின்
1.முதலில் வந்த செல்வமும் போய் விடுகிறது…
2.அதற்குபின் தொழிலைச் சீராக்கி வளர்வதும் போய்விடுகிறது..

இரண்டுக்கும் சேர்த்து வேதனை என்ற அணுக்களை வளர்த்து வளர்த்து… உடலிலே நோயை உருவாக்கத்தான் நாம் தயாராகின்றோம்.

நோயாக ஆன பின்… நான் இப்படி எல்லாம் செய்தேனே.. இப்படி எல்லாம் வந்தேனே…! எல்லாம் போய்விட்டதே..! என்று புலம்புவார்கள்…!

மனிதனுடைய இன்றைய வாழ்க்கை இப்படித்தான் இருகின்றது.