ஆத்மாவின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

old siddhas

ஆத்மாவின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது. அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது.

இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

last thought

இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் நம்முடைய கடைசி நினைவு எதன் மீது இருக்க வேண்டும்…?

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு காந்த சக்தி கொண்ட கண்ணாடியை (TELESCOPE) உருவாக்குகின்றார்கள். அது வான்வீதியில் பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருப்பதையும் இழுத்துக் கவரும் சக்தி கொண்டதாக இருக்கின்றது.

அதை வைத்துக் கோள்களைப் படமாக்கி… கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் இணைக்கின்றார்கள்… நாடாக்களில் பதிவு செய்கின்றனர்… மேலும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கி எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

படமாக்கிய அந்தக் கோளின் உணர்வின் இயக்கம் எதுவோ அதனுடைய அடர்த்தி எது வருகின்றது…? என்று அளந்தறிந்து கொள்கின்றார்கள்.

அதன் நிலையை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட்டை விண்ணிலே வீசுகின்றார்கள்.
1.அதன் முகப்பிலே… அந்தக் கோளின் நிலையை எலெக்ட்ரானிக்காக மாற்றி
2.இராக்கெட் போகும் பாதையில் எதனுடைய உணர்வுகள் இங்கே இருந்ததோ
3.அதன் பாதை கொண்டு அதன் அளவிலே எடுத்துச் சென்று அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கின்றது.

ஏனென்றால் அதே கோளினுடைய உணர்வுகள் பட்ட பின் அது அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறது.

அப்பொழுது அங்கிருக்கும் உணர்வுகளை இதிலே கவர்ந்து… எதன் அழுத்தத்தின் தன்மைகள் அங்கே மாறுபடுகின்றது…? என்பதைப் பலவிதமாக இதே எலெக்ட்ரானிக்கை வைத்து அங்கே பதிவாக்கிக் கொள்கின்றனர்.

1.பதிவாக்கிய அலைகளை அங்கிருந்து ஒலி பரப்பு செய்யப்படும் பொழுது
2.இதன் தொடர்புடைய அதே இங்கே பூமியிலிருந்து பதிவாக்கி
3.அதன் அளவுகோலை அளந்து… அந்தப் பாதையை அளந்து… அந்தக் கோளின் தன்மையை அளந்து..
4.எந்தெந்தக் காலங்களில் அது எப்படி எல்லாம் செல்கிறது…? என்று விஞ்ஞானிகள் தரையிலிருந்து காண்கின்றார்கள்.

இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாக்கப்படும் பொழுது
2.நம் நினைவு கடைசியில் அதிலே வந்தால் போதும்….!
3.வந்த பின் அந்தத் துருவ நடத்திரத்தின் நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம்.

உயிர் நம்மை அங்கே இந்த உணர்வுடன் அழைத்துச் சென்று அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பின்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.

ஏனென்றால் வலுக் கொண்ட உணர்வு கொண்டு இப்படிக் கரைத்துக் கொண்ட பின் காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளை எடுத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

இப்படித்தான் கரைக்கும்படி நம்முடைய சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கே கங்கையிலோ அல்லது ஓடுகின்ற ஆற்றிலோ மற்றதிலோ கரைத்தால் என்ன செய்யப் போகின்றோம்..?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உதாரணமாக இந்த வாழ்க்கையில் ஒருவருடன் அதிகமாகப் பழகுகின்றோம் என்றால் அந்த மனிதனின் உணர்வைப் பதிவாக்கி உடலுக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பவசத்தால் அவர் நோய்வாய்ப்பட்டால் பாசத்துடன் அவரை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகள் இங்கேயும் பதிவாகின்றது.

1.அதே சமயத்தில் இந்த உடலை விட்டு அவர் பிரிந்து சென்றால்
2.அவர் உணர்வை யார் அதிகமாக உடலுக்குள் வளர்த்திருக்கின்றனரோ
2.அந்த உடலுக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

பின் அந்த உடலுக்குள் சென்று அதே நோயின் உணர்வை அங்கேயும் உருவாக்கி விடுகின்றது. உடலுக்குள் இப்படிப் போகும் ஆன்மாவை
1.வெறும் மந்திரத்தைச் சொல்லியோ மாயத்தைச் சொல்லியோ
2.பாவத்தைப் போக்கி விட்டு மோட்சத்திற்கு அனுப்புவது என்றால்…. எங்கே…?

இவருடைய உணர்வுகள் விளைந்தது எதுவோ இன்னொரு உடலுக்குள் சமமாக அது ஒத்துக் கொண்டால் தன்னை அறியாமலே இந்த உணர்வின் துணை கொண்டு அந்த நோய்கள் அங்கேயும் வருகின்றது. புகுந்த உடலையும் வீழ்த்துகின்றது.

இப்படி.. புகுந்த உடலிலும் அந்த விஷத்தின் தன்மை வளர்ச்சி அடையச் செய்து அதை வீழ்த்திவிட்டு வெளியே வந்து விடுகின்றது. அடுத்து மனிதனல்லாத உடலைத் தான் பெற முடியும்.

அதே போல் வீழ்த்தப்பட்ட அந்த உடலோ அவர் மீது யார் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் அது சென்று விடுகின்றது.
1.இப்படி… மனிதர்கள் நாம் மீண்டும் மீண்டும் தேய்பிறை என்ற நிலைகளில் தான் வருகின்றோமே தவிர
2.வளர்பிறை என்ற நிலைக்குச் செல்லவே இல்லை.

ஆகவே மனிதனுக்குப் பின் நம்முடைய நிலை எது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் அதிகாலையில் குளித்தாலும் சரி குளிக்கா விட்டாலும் சரி…! ஏனென்றால் குளிப்பது மேலே தான்…! ஆனால்
1.நம் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து
2.அருள் ஞானத்தைப் பெற்றுத் தீமைகளை அகற்ற…
3.நம் மனதைச் சுத்தப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றோம். தீமையிலிருந்து மீண்டிடும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே வருகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவாற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்ய இது உதவும்.

இந்தக் குறுகிய மனித வாழ்க்கையில் 120 வருடம் வரை கூட சிலர் வாழ்கின்றார்கள். இருந்தாலும் அந்த 120 வருடம் வாழ்வதற்கு முன் எதைச் சேமித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்றால்
1.அங்கே அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று
2.என்றுமே தீமைகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றோம்.

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவிற்குள் இருக்கும் நிலைகள் என்ன…?

suicide

உடலை விட்டுப் பிரியும் ஆன்மாவிற்குள் இருக்கும் நிலைகள் என்ன…?

ஒருவர் இறந்து விட்டால் சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் உடலை சுட்டுக் கருக்கிவிட்டு பின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் மோட்சம் அடைந்தார்…! என்று சொல்வார்கள்.

1.அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் எந்தெந்தக் குணங்களை அவர் எடுத்துக் கொண்டாரோ
2.இந்த உணர்வுகள் அனைத்தும் அந்த உடலுடன் உண்டு.
3.ஆனால் இந்த உடலைக் கருக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து
4,அது அனைத்தையும் மீண்டும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விடுகின்றது.

அதாவது இந்த உடலின் தசைகள் கரைந்தாலும் இந்த உணர்வின் தன்மையை மாற்றி விடுகின்றது சூரியன். நம் பரமாத்மாவில் (காற்றிலே) இங்கே கலக்கின்றது.

இந்த உடலை விட்டு ஆன்மா போன பின்…. சுட்ட பின்…
1.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்
2.இந்த உடலை உருவாக்கிய அணுக்களின் இயக்கம் தான் இதற்குள் இழுத்துச் சேர்க்கும் தன்மைகள்.
3.வெப்பத்தின் தன்மை கொண்டு இங்கே பிரிக்கப்படும் பொழுது
4.அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் உறைவிடமாக இருக்கின்றது. அந்த அணுக்களில் (உணர்வின் ஒலிகளாக)

இப்பொழுது நாம் சொல்லால் சொல்கின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் அதிலே இருக்கும். அதே போல் அவர் மந்திர ஒலிகளைப் பதிவாக்கியிருந்தால் அதுவும் இருக்கும்.

இப்படி… இறந்த உடலைக் கருக்கிச் சாம்பலாக்கினாலும் இந்த உடலை உருவாக்கிய உணர்வின் நிலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

பின் அது கவர்ந்த நிலைகள் அனைத்தும் அவர் சொன்ன அதே மந்திர ஒலிகளைச் சொல்லப்படும் பொழுது இழுத்துக் கொண்டு வரும்.

எப்படி…?

ஏனென்றால் அவருடைய உணர்வின் தன்மை அங்கே சென்றது. அவர் அணிந்திருந்த ஆடையும் அவர் நடந்து சென்ற பாத மண்ணும் அவர் தலை முடியும் இந்த மூன்றையும் எடுத்தால்… அவருடைய உடலின் மணமும் பாத நிலைகளும் அதிலே இருக்கும்.

அவர் (இறந்தவர்) எந்தத் தெய்வத்தின் நிலைகள் கொண்டு பக்தி கொண்டு மந்திரங்களை ஓதித் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ இறந்த பின் மாந்திரீகம் செய்பவர்கள் அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து அதை எடுத்துப் பில்லி சூனியம் ஏவல் போன்ற சில தவறான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சாங்கியம் செய்து கரைத்து விட்டுக் கண ஹோமம் செய்து மோட்சத்திற்கு அனுப்பியதாகச் சொல்வார்கள் ஒரு சாரர்.

அதே சாங்கியங்களைச் செய்து கரைத்த பின் விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கை ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்பார்கள் இன்னோரு சாரார்…!

1.இப்படி எல்லாம் சாங்கியங்களைச் செய்து வெளி வந்தாலும்
2.அந்த உணர்வுகள் எல்லாமே காற்றிலே தான் படர்ந்திருக்கும்.
3.அதை மாற்றும் வல்லமை இல்லை…!

அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும் என்றால்… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் ஒளியாக மாறவேண்டும் என்றால்… என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொள்கின்றாரோ…
1.அதன் மூலம் அவர்கள் சார்புடையோரை உந்தித் தள்ளி விண் செலுத்த முடியும்
3.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

மனிதனுடைய பலன் அவன் பெற்ற “மக்கள் செலவங்கள் தானா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human family

மனிதனுடைய பலன் அவன் பெற்ற “மக்கள் செலவங்கள் தானா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில் அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில் உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை இயற்கை என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப்படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெறவேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

 

 

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம். என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.

“சிவ சக்தி” என்ற படைக்கும் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

RISHI PATHNI

“சிவ சக்தி” என்ற படைக்கும் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நீர் சக்தி இல்லை என்றால்… நெருப்பு எரிய சக்தி இல்லை. நெருப்பாக ஆவி கொண்டு (உஷ்ண அலை) நீர் நிலை பெறாவிட்டால்… நீருக்கும் வளர்ச்சி இல்லை.

தனித்த சக்தி.. தனி அணு… தனித்த ஒன்றுக்கு… எப்படிச் செயல் இல்லையோ அதைப் போன்று ஆத்ம சக்தியின் சித்து வளர்ப்பிற்கு ஆண் பெண் இயக்கத் தொடர்பு ஆத்மக் கூட்டு நிலை செயல் கொள்ளும் வளர்ப்பு நிலை அவசியம் வேண்டும்.

ரிஷிபத்தினி… ரிஷி சக்தி… என்ற கூட்டு ஐக்கிய ஆத்ம தொடர் சித்து பெறும் தம்பதியின் வழித் தொடரினால் தான்
1.உணர்வின் எண்ணத்தால் செயல் கொள்ளும் படைப்புத் தொடர் ஆத்ம அணு வளர்ப்பின் தொடர் அலையை
2.இன்று நம் பூமியில் உள்ள மனித சக்தியைப் போன்ற தொடர் அலையை வழிப்படுத்தும் வளர் நிலைக்கு
3.பிறிதொரு மண்டலத்தில் இதைப் போன்று வளர வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய தொடருக்கே
4.இத்தொடர் நிலை கொண்ட சக்தி நிலை ரிஷித் தன்மை செயல்பட வேண்டும்.

படர்ந்து கொண்டேயுள்ள ஆவி அமிலம் திடம் கொண்டு அண்டசராசர அனைத்துக் கோடி சுழற்சியிலும் மாறிக் கொண்டே வழித் தொடர் கொள்ளும் ஒவ்வொன்றின் நிலை அனைத்திற்குமே வளர்நிலை தொடர் வளர்ச்சிக்கு “ரிஷித் தன்மை கொண்ட அலைத் தொடர் வளர்ப்பு தேவை…!”

அந்த வளர்ப்பைக் கொண்டு எச்சக்தி நிலையையும் உயர்வுபடுத்திச் செயலாக்கும் வளர் சக்தியின் சக்தியே ஆண் பெண் என்ற எண்ண சக்தியில் மனித வளர்ப்பு வார்ப்பில் உருவாக்கும் தொடர் அலையில் தான்

நாம் வாழும் இந்தப் பூமியே “சிவ சக்தி” என்ற இரண்டு ஆத்மாக்களின் தொடர்பில் உருவாகிப் பல கோடி ஆண்டுகளாகத் தன் உருவின் உருக்களை வளர்த்துக் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட உருவின் உருவைக் கொள்ளும்
1.உயர் ஆத்ம தொடர்பு – ஆண் பெண் ரிஷித் தன்மையின்
2.வழித் தொடர் ஆத்மாக்களை வளர் கொள்ளும் செயல் தன்மை
3.அரிதிலும் அரிதாகத்தான் இன்று வரை செயல்பட்டுள்ளது.

இதைப் படிப்போர் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் பெண் தொடர்பு ஆத்ம தியான சித்தைப் பெற்று… வாழ்க்கையுடன் ஒன்றிய கூட்டு ஐக்கிய தியான வளர்ச்சியால்…. இந்தப் பூமியின் சக்தியைப் போன்று.. நம் சூரியக் குடும்பத்தின் சுழல் கொண்டு மிதந்து ஓடும் மண்டல சுழற்சி ஒவ்வொன்றிலுமே… அதன் சக்தி நிலைக்கொப்ப “அதன் வளர் சக்தியின் வளர்ப்பிற்கு வழி செய்யலாம்…!”

நம் பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தில் வளர்ந்த மஏஏஅ மண்டலங்கள் விஷத் தன்மை கொண்டதாகத்தான் இன்றைய நிலையில் உள்ளது.

இதே சுழற்சி நீடித்து நம் பூமியும் இன்றுள்ள விஷத் தன்மையில் (செயற்கை என்ற காந்த மின் சக்தியைப் பிரித்தெடுத்ததன் விஷத்தால்) சுழன்றது என்றால்
1.இக்கலி மாற்றத்தில் வரப் போகும் கல்கியில்
2.தன் ஞானம் மிஞ்சாது விஞ்ஞானம் எஞ்சி நிற்கும்.

ஆகவே ஒவ்வொரு ஆத்மாவுமே தன்னுள் உயர் சக்தியை உருவாக்குங்கள் “ரிஷிபத்தினி என்ற ரிஷிச் சக்தியை…!”

 

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன..?

immortal sea

இறந்தவர்கள் அஸ்தியைக் கரைப்பதன் உண்மையான பொருள் என்ன..?

 

தினசரி காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தினால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு எளிதில் அனுப்ப முடியும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.இந்த உணர்வுகள் பட்டு உடல் பெறும் உணர்வைக் கரைத்துவிடும்.
3.ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அனைவருமே உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அடுத்துக் காலை சூரிய உதயம் வருகின்றது. இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை… அந்த விஷத்தை… அது கவர்ந்து செல்கின்றது. ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை வேக வைத்தால் அந்த விஷத் தன்மைகள் பிரிந்து செல்கிறது. பிரிந்தாலும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக அதை மாற்றி வைத்துக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த உணர்வானாலும்… நாம் வேக வைத்து விஷத்தை நீக்கினாலும்…
1.இது எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்திய பின் – நாம் கருணைக் கிழங்கை உணவாக உட்கொண்டாலும்
3.அந்த உணர்வின் தன்மை சூரியன் காந்த சக்தி எடுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்களாக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனதன் உணர்வின் தன்மை கொண்டு உடலில் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
3.இதை நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும் (முக்கியமானது).

இதைப் போல் நாம் எடுக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது.

ஆனால் நாம் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலையில் சூரிய உதயம் வரப்படும் பொழுது ஓசோன் திரை என்று விஷத்தின் தன்மை அடர்த்தியாகித் தன்னுடன் அந்த விஷத்தை (உடல் பெறும் உணர்வை) இணைத்துக் கொள்கின்றது.

சூரியனிலிருந்தும் மற்ற பிரபஞ்சங்களிலிருந்தும் வரக்கூடியதை நம் பூமி கவரும் நிலையில்
1.அது பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியாக ஆன பின் தான்
2.விஷத் தன்மைகள் உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது.
3.அது தான் ஒசோன் திரை என்பது.

சூரியனிலிருந்து வரக்கூடியது “அல்ட்ரா வயலட்” – விஷத்தின் தன்மை கொண்டது. அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தின் தன்மைகளைப் பிரிகின்றது.

பிரித்தாலும்… இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் போது
1.நம் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக ஆன பின் (ஓசோன் திரை)
2.நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற அனைத்தும் வாழும் தகுதி பெறுகின்றது
3.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான் நாம் விண் செலுத்தும் ஆன்மாக்கள் பிரபஞ்சத்தை விட்டு வெளியிலே சென்ற பின் உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் ஓசோன் திரையுடன் அதனின் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.

இப்படி இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் அடுத்த உடலைத் தான் இந்த உயிர் இங்கே உருவாக்கும்.

அதாவது…
1.இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உணர்வின் தன்மை கொண்ட உடலாக உருவாக்கும்.

 

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்

digital world

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்

 

விஞ்ஞான அறிவால் நாம் இன்றைக்குப் பல ஆடம்பர நிலைகளை விரும்புகின்றோம்.

அதன் வழியிலே நாம் செயல்பட்டாலும் விஞ்ஞான அறிவால் இன்றைக்கு டி.வி. மூலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை வீட்டில் உள்ளோர்கள் இந்த உலகம் முழுவதற்கும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கிக் காட்டுகின்றனர்.

அதை எல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வரப்படும் பொழுது கர்ப்பமான தாய் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நேர்ந்தால் அந்தக் குழந்தைக்குள்ளும் அந்தத் தீமைகள் உருவாகின்றது.

1.அங்கே சிதையும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
2.அந்தச் சிதைந்திடும் உணர்வுகள் கருவிலே இருக்கும் குழந்தையிடமும் வளர்கின்றது.
3.இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

ஆனால் அந்த அசம்பாவிதங்களை ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புகின்றனர். எங்கே சிதைந்த உடல்களிலிருந்து வெளிப்பட்டதோ கருவிலிருக்கும் குழந்தை அதையும் நுகர நேர்கின்றது.

இன்று உதாரணமாக அமெரிக்காவில் நடக்கும் சம்பவத்தை அங்கே பதிவு செய்தைதை “அடுத்த கணமே…!” இங்கே நம் வீட்டிலிருந்தே காண முடிகின்றது… அறிய முடிகின்றது.

இது காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தின் மூலம் அறிய முடிகின்றது. அதே சமயத்தில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையை வைத்து இப்படி மாற்றுகின்றனர்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற தொடர்பு வைத்துக் கொண்டது. இதே அழுத்தத்தை இங்கிருக்கும் சாதனத்தில் கொண்டு வரும்போது அந்த அழுத்த உணர்வுகள் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக அந்தப் பதிவுகளை மனிதனுடைய உருவத்தையே இங்கே நமக்கு முன் உருவாக்குகின்றது.

இப்படித்தான் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகள் இங்கே ஒரு நொடிக்குள் கிடைக்கும்படி விஞ்ஞான அறிவில் செய்கின்றார்கள். ஆனால்…
1மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு செய்தாலும்
2.மனிதனுக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கின்றது என்பதை மறந்துவிட்டோம்.

ஏனென்றால்…
1.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது
2.இந்த மனித உடலின் இச்சை தான் வருகின்றது.
3.ஆனால் பிறவியில்லா நிலையை அடையப் பெரும் தடையாகின்றது.

அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் துணை கொண்டு அவன் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் உணர்வின் வழிப்படி சென்று அந்தப் பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

ஆகவே தான் இந்தக் காலை துருவ தியானங்களை நாம் தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்து
1.தன் கணவன் பெறவேண்டும் என்று மனைவியும்’
2.தன் மனைவி பெறவேண்டும் என்று கணவனும் ஒருவருக்கொருவர் எண்ணி
3.இரு உயிரும் அந்த உணர்வின் தன்மை ஒன்றிணைத்தே பழக வேண்டும்.

கணவனும் மனைவியும் இவ்வாறு இரு உயிரும் ஒன்றி ஒளியாக மாற்றினால் அடுத்து இன்னொரு பிறவி இல்லை…!

உடலுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது போல் ஆத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

fragrant flowers and fruits

உடலுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது போல் ஆத்மாவுக்குத் தேவையான உணவைக் கொடுப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஜீவன் கொண்ட ஒவ்வொரு செயலுமே தன் ஜீவித உணவை எடுத்து எப்படி வளர்கின்றதோ அதைப் போன்றே இவ் ஆத்ம வலுத் தன்மைக்கு வலுக்கூடிய பிறகு… அதுவே ஒளிரும் தன்மையில் தனித்து இயங்கக்கூடிய வழித் தொடருக்கு “உணவு நிலை தேவை…!”

அதைப் பெறும் வழி முறை எப்படி…?

கல் மண் தாவரங்கள் உலோகங்கள் திரவகங்கள் ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஜீவ சக்தியுடன் வாழும் காலத்தில் அது அதற்குகந்த உணவு நிலையை உட்கொண்டு ஜீவத் துடிப்புடன் வாழ்கின்றது.

கல்லும் மண்ணும் உலோகமும் திரவகமும் தாவர இன வர்க்கங்கள் எல்லாமே வளரும் பிடிப்பிலிருந்து எடுத்தவுடன் அதனுடைய வளர்ச்சி நிலை நின்று விடுகின்றது.

இப்படி அதனை உருமாற்றிச் செயல்படுத்தும் ஜீவனற்ற மாற்று நிலைக்கு உட்படுத்தியவுடன் அதன் வளர்ப்பு நின்று ஜட பிம்பப் பொருளாக கரையும் ஆவி நிலைக்கு உட்படும் வழித் தொடருக்குச் சென்று விடுகின்றது.
1.இதே போல் தான் ஜீவராசிகளின் உயிர்ச் சக்தியும் உயிர் ஆத்மா பிரிந்தவுடன்
2.திடப் பொருளாகி உணவு உட்கொள்ளும் நிலை மாறி ஆத்மா பிரிந்து செல்கிறது.

ஜீவ சக்தி கொண்ட ஒவ்வொன்றுமே தன் வளர்ப்பின் வளர்ப்பிற்கு உணவை உட்கொண்டு வாழ்வதைப் போன்று அழியாத நிலை என்னும் பிறவி இல்லா நிலை பெறும் சக்திக்கும் அதன் வளர்ச்சி வளர் கொள்ள உட்கொள்ளும் (உணவு) வழித் தொடர் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

வளர் தன்மைக்கு ஆண் பெண் அமிலச் சேர்க்கை ஜீவத் துடிப்பு எப்படி அவசியமோ அதைப் போன்றே
1.ஆத்மாவைச் சரீரத்திலிருந்து பிரித்துச் செயல்படுத்தும் வழி முறைக்கு
2.உடலுக்கு வேண்டிய உணவை உட்கொள்வது போன்றே ‘
3.ஆத்மாவிற்கான உணவைச் செயல்படுத்தும் வழி முறை செயல். தான் “அஷ்டமா சித்து” கொண்ட வளர் நிலை.

பலவற்றில் இருந்து விளைந்து உயர்வின் முற்றிய தன்மையான மனித சக்தியின் எண்ண உணர்வு சொல் செயல் ஆற்றல் கொண்ட ஆத்ம சரீர சக்தியில் இருந்து தான் மனித சக்திக்கு அடுத்த வளர்ப்பு சக்தியான தன் ஆத்மாவைப் பிரித்துச் செயல்படுத்தும் வழி முறை வளர்ச்சி நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்குரிய ஆரம்பத் தொடர் உணவு நிலையாக… ஆத்மா பெறும் நிலை எண்ணத்தைச் செலுத்திக் காற்றலையின் தொடர்பிலிருந்து தன் சுவாச ஈர்ப்பிற்கு நறுமண அலைத் தொடர்பையும் கனிகளின் சுவை அலையையும் பெற்று அச்சுவைகளை உணவாக எடுக்கும் வழித் தொடரை ஆத்மா பெறுகின்றது.

1.காந்த மின் அலையின் வார்ப்பு சக்தியை ஜெபத்தால் எடுக்கும் ஞான சக்தியில்
2.தன் ஆத்மாவைத் தானே காணக்கூடிய வழி முறை பெற்றவுடன்
3.சரீர இயக்கத்திலிருந்தே உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி உணவு எடுக்கும் வழி முறை பெற்று
4.அவ்வழி முறைத் தொடர்பில் இருந்து ஆத்மா தனித்து இயங்க
5.ஆத்மாவுக்கந்த ஆத்ம அலைத் தொடரில் தொடர்பு கொண்டு
6.ஆத்மாவிற்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பலையின் ஈர்ப்பலையின் ஈர்ப்பிலிருந்தே தன் ஆத்மாவிற்கு உணவெடுத்துக் கொள்கின்றது.

வலுக் கொண்ட நிலையில் தனித்து இயங்கும் ஆத்மாவின் செயல் ஒன்றை அறிய… அணுவுக்குள் அணுவாக… இச்சரீர பிம்ப இயக்கத் தொடர்புடன்…
1.சரீரத்தில் இருந்து எண்ணத்தை வெளிப்படுத்திய ஆத்மா செயல் கொள்ளும் வழித் தொடரில் மோதும் பொழுது…
2./இச்சரீர சுவாச ஈர்ப்பிற்கு அவ் அணு அலை வளர்ச்சி கொண்ட
3.சேமித காந்த நுண் அலை சுவாசத்தின் உணர்வில் சமைத்து
4.எலும்புகளின் உராய்வு கொண்டு – ஆத்மாவின் செயலுடன் ஒன்றுகின்றது… “உணவாக…!”

இத்தகைய நிலை பெற்றால் ரிஷிகளின் தொடர்பலையுடன் ஒன்றிட முடியும். அவர்கள் பெற்ற வளர்ச்சியையும் பெற முடியும்.

உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை…!

powers-and-wisdom

உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான் கடவுளை வணங்கும் நிலையே இன்று உள்ளது – தீமையை நீக்கும் சக்தியை எடுப்பார் இல்லை…!

 

இன்று விஞ்ஞான அறிவால் தாவர இனங்களில் அதிக அளவில் விஷத் தன்மை பரவியுள்ளது. அதிலே விளைந்த தானியங்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலிலும் நஞ்சு கலந்த அணுக்கள் உருவாகத் தொடங்குகின்றது.

அதே போல் காய்கறிகளிலேயும் பல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றனர். அத்தகைய காய்களை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அந்த நஞ்சும் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

1.அதே சமயத்தில் பூச்சிகளைக் கொல்வதற்காகத் தெளிந்த மருந்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது
2.எந்தப் பூச்சிக் கொல்லி மருந்தின் உணர்வைக் கவர்ந்தோமோ அது நம் உடலில் சேர்ந்த பின்
3.காற்றிலிருந்து எடுத்து அந்த விஷமான அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.
4.அதனால் உடலில் கை கால் குடைச்சல் என்ற நோய்கள் வருகின்றது.
5.அந்தந்தக் காலகட்டங்களில் “இனம் புரியாத…” புதிய புதிய நோய்களும் சாடுகின்றது.

இத்தகைய விஷத் தன்மை அதிகரித்த நிலையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமையாக்கி வெளிப்படுத்திய உணர்வுகளும் இருக்கின்றது.

அத்தகைய பகைமை ஊட்டும் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அதே உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது. அதுவும் உடலில் விளையத் தொடங்குகிறது.

இது எல்லாம் சேரும் பொழுத் நம் உடலில் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயலற்றதாக மாற்றிக் கொண்டு வருகின்றது.

நாம் நல்ல மனிதர்களாக இருப்பினும்
1.நம்மை அறியாமலே வேதனைப்படுபவர்களாகவோ
2.அல்லது கோபப்படுபவர்களாகவோ மாறி விடுகின்றோம்.
3.சிந்திக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றோம்.

வாழ்க்கையே என்ன…? என்று அறியாத நிலையில் வெறுப்படைந்து இந்த உடலையே வெறுக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் வரப்படும் பொழுது எதனை அதிகமாக இந்த வாழ்க்கையில் சேர்க்கின்றோமோ அதனின் பெருக்கமாகும் பொழுது நல்ல அணுக்களின் வளர்ச்சி குறைந்து விடுகின்றது. உடல்கள் நலிகின்றது.

உடல் நலிய நலிய தன்னையே வெறுக்கும் தன்மைக்கு வந்துவிடுகின்றோம். இனி எப்படியாவது…
1.இந்த உடலை விட்டுச் சென்றால் போதுமே..! என்று
2.இறக்க வேண்டும் என்ற நிலை தான் முடிவாகின்றது.

கடைசியில் இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் உடலில் விளைந்தது எந்த உணர்வோ அந்த உணர்வுக்குத் தக்க விஷம் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே கருவாகி மீண்டும் வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் உயிரினங்களுக்குள் சென்று விடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்கள் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் விஞ்ஞான அறிவால் இப்ப்டிப்பட்ட பேரழிவுகள் இங்கே இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களில் கடவுளை வணங்குவதெல்லாம் உடலுக்கு வேண்டிய சுகத்திற்காகத்தான்…!
2.ஆனால் உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்றால்
3.அதை யாரும் எடுப்பதில்லை… உபதேசித்தாலும் ஏற்றுக் கொண்டு செய்வதில்லை..!

ஆகவே… இந்த உடலில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர வேண்டும். நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும். அதே சமயத்தில் அந்த ஞானியின் உணர்வுகள் நமக்குள் வளரும்.

இந்த நம்பிக்கை யாருக்கும் வருவதில்லை..!

உயர்வின் உயர்வுக்கு “உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

discrimination

உயர்வின் உயர்வுக்கு “உயர்ந்த எண்ணத்தை எடுக்க வேண்டிய முறை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான் நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.