சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்

vali sugriva

சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் – விளக்கம்

 

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!

சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…? அழியக் காரணம் என்ன..?

New planets

சூரியனின் அழிவு எப்படி ஏற்படுகிறது…? அழியக் காரணம் என்ன..?

 

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்றூ இப்படி ஒரு நான்கு நட்சத்திரங்கள்
1.நம் சூரியன் எபப்டித் தனக்கென்று கோள்களை வளர்த்து நட்சத்திரங்களை வளர்த்து தனித்தன்மை ஆனதோ
2.இதைப் போல் இதிலே வளர்ச்சி அடைந்த இந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
3.இந்தச் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி நகர்ந்து போய்க் கொண்டிருக்கின்றது.

நம் குடும்பத்தில் பெரியவர்கள் வளர்ந்தோம் என்றால் கல்யாணம் ஆகிப் போய்விட்டால் அப்பா அம்மா தாத்தா பாட்டி எல்லாம் காணாமல் போய்விடுகின்றார்கள்.
1.கொள்ளுப் பேரன் ஆன பிற்பாடு தாத்தாவையோ பாட்டியையோ நாம் உயிருடன் பார்க்க முடிகின்றதா…?
2.அப்படியே பார்த்தாலும் கவனிப்பதும் இல்லை.

இதே மாதிரி இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று அந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியிலே பெருக ஆரம்பித்துவிடுகின்றது.

27 நட்சத்திரங்களும் அது சூரியனாக மாறும் பொழுது ஏற்கனவே இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகிறது.

நம்முடைய உடல் அழிந்த பின் உடலைப் புதைத்தாலும் சரி உடலை உருவாக்கிய அணுக்கள் இந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளியே வந்துவிடுகின்றது.

1.முதலில் அணுக்களாக இருந்தது
2.அது உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது
3.பின் அதனதன் உணர்வுகளை இரைகளைத் தேடி அதனின் வளர்ச்சிகள் பெறுகிறது.

மனித வாழ்க்கையில் இறந்த பின் எப்படி உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மற்றதுடன் சேர்த்து அதை உணவாக எடுத்து வளரும் தன்மை வருகின்றதோ இதைப் போல் தான் அந்த நட்சத்திரங்கள் தனியாகப் பிரப்ஞ்சமாக ஆன பின்
1.இந்தச் சூரியன் அழிந்த சக்தி
2.ஒரு புயல் போல் இருக்கும்.

அதிலே ஏதாவது ஒரு கோளோ மற்றது பாறையாக உள்ளது அதற்குள் சிக்கினால் மீண்டும் ஆவியாக மாற்றி அதைத் தனது நிலைகள் பரப்பும். இந்தப் பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதை வளர்த்து இதே போல் நட்சத்திரங்கள் அது கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

இதை எல்லாம் பார்த்துத் தான் சொல்கிறேன்.

1.குருநாதர் அவர் பார்த்த உண்மைகளை
2.அந்த அகண்ட அண்டத்தை உன்னாலும் நுகர முடியும்..! பார்க்க முடியும்..! என்றார்.
3.அதை எல்லாம் நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலு கொண்டு உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இதிலே நீங்கள் வளர்ச்சி அடைய அடைய நம் பிரபஞ்சமும்… நம் பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து உணவு எப்படிக் கிடைக்கிறது…? என்ற நிலை “எல்லாமே” நீங்கள் அறிய முடியும்.

கல்வி அறிவில்லாதவன் நான் (ஞானகுரு) இத்தனையும் பேசுகிறேன் என்றால் படித்தவர்கள் நீங்கள் பதிவு செய்து குறித்து வைத்துக் கொண்டு எளிதில் எடுக்கலாம்.
1.எனக்குக் குறித்து வைக்கக்கூட நேரமில்லை.
2.மனதில் பதிய வைத்ததைத்தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவில்லை. ஆனால் குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் தான் இங்கே பதிவான பின் நினைவு கொண்டு அந்த உணர்வை எல்லாம் நான் அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை வெளிப்படும் பொழுது செவி கொண்டு கேட்ட பின் நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் கருவாக அது உங்களுக்குள் உருவாகின்றது.

1.நான் சொல்வதைக் கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.
2.நீங்கள் இதை வளர்த்துக் கொண்டால்
3.நான் எதை எல்லாம் பார்த்தேனோ அதை எல்லாம் நீங்கள் காட்சியாகக் காண முடியும்.

தீமைகளை அகற்றும் வல்லமையும் நீங்கள் பெற முடியும்…! அந்த அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கி இனி பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

நம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…!”

Ramalingam ramewaran

நம் செயல்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் ஞானமுடன் செல்ல வேண்டிய “குறுகிய காலகட்டம் இது…!” 

 

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும். படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான். அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான் படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்று பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றி கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

பாம்பின் காட்சி ஏன் வருகிறது..?

Bluish violet Poari rays

பாம்பின் காட்சி ஏன் வருகிறது..? 

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை.

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

நன்மை… தீமை… சகலமுமே… இறைவனின் படைப்பு தானா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

good or bad

நன்மை… தீமை… சகலமுமே… இறைவனின் படைப்பு தானா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

“மாந்திரீகத்தில் சிக்கியவர்கள்…” அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

siddha in cave.jpg

“மாந்திரீகத்தில் சிக்கியவர்கள்…” அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெறவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு – அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் ஏன் மாறுகிறது…?

Telepathy

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் ஏன் மாறுகிறது…?

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டு மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

மனித உடலின் முக்கியமான அங்கமான “கையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

POWER OF HUMAN HAND

மனித உடலின் முக்கியமான அங்கமான “கையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

1.செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”
2.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
3.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
4.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில் பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள்
2.இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
3.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்
2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…
3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு…!”

ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்

Bhogar Risi

ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் சாதாரண மனிதன் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கவர்வதற்கும் உண்டான வித்தியாசம்

 

ஒரு மனிதனுக்குள் மனிதன் விளையச் செய்யும் உணர்வுகள் நமக்கு முன் இங்கே இந்தக் காற்று மண்டலத்தில் உண்டு.

ஒரு மனிதனுக்கு மனிதன் அதிகமாகப் பற்று இருக்கும் பொழுது அந்த மனிதன் இறந்து விட்டால் அதே பற்றுடன் வரும் பொழுது
1.புலனடங்கி நாம் தூங்கப்ப்டும் பொழுது அந்த மனிதனின் உருவம் கிடைக்கும்.
2.அவன் செய்த நிலையும் நாம் கனாக்களாகப் பார்க்க முடியும்.

கனவுகளில் பலவிதமான அற்புதங்களும் சில நடக்கின்றது. எப்படி…?

ஒரு மனிதன் ஆசைப்பட்டு இருக்கும் பொழுது அந்த உணர்வுகள் அதிகமாகி விட்டால் எதன் மேல் எப்படி ஆசைப்ட்டானோ இது இணைக்கப்பட்டு இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருக்கப்பட்டால்
1.நாம் புலனடங்கித் தூங்கப்படும் பொழுது உயிரிலே பட்டு
2.அதனின் உணர்வின் கலவையாக அந்த உணர்ச்சிகள் தூண்டுவதும்
3.எதனுடைய நிலைகளோ – நாம் ஆசைப்பட்ட உணர்வுகளும் ஒன்றாக இருக்கும் பொழுது
4.அந்த அலையின் உணர்வு ஆசைப்பட்ட உணர்வுகள் இங்கே வந்திருக்கப்படும் பொழுது
5.இது இரண்டும் கலந்து பார்க்காத ஆளின் உருவமும்
6.அதன் வழி நமக்குள் அந்த இன்பம் பெறுவதையும் சில கனவுகளில் பார்க்கலாம்.

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நாம் புலனடங்கித் தூங்கினாலும் “உயிரிலே பட்டுத் தான்” இந்த உணர்வுகள் தனக்குள் வருகின்றது. கனவு என்று சொல்வது இது தான்.

நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவின் நிலைகள் கூட்டப்படும் பொழுது
1.உணர்வுகள் எது முந்தி வருகின்றதோ
2.அந்த உருவங்களும் நமக்குள் வருகின்றது.

ஒரு அச்சுறுத்தும் நிலையோ… பயம் காட்டும் நிலைகளையோ… விபரீத விளைவுகளையோ… இதுகள் எல்லாம் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே பதிவான பின்
1.எதன் வழிகளில் அன்றைய வாழ்க்கையில்
2.நாம் எதை முன்னணியில் அதிகமாக வைக்கின்றோமோ அது நம் ஆன்மாவில் கூடப் பெற்றுப்
3.புலனடங்கி இருக்கும் பொழுது நமக்குள் கனவுகளாக வருகின்றது என்பதனை நம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

போகர் பல அற்புதங்கள் செய்தார் என்பார்கள். குருநாதரிடம் சில மருந்துகளை அரைத்து விஷ்ணுவிடம் வரம் வாங்கி முருகனுடைய சிலையைச் செய்தார் என்றெல்லாம் அன்று எழுத்து வடிவே இல்லாத பொழுது கற்பனைக் கதைகளைக் கட்டியிருப்பார்கள் பின் வந்தோர்கள்.

எழுத்து வடிவு வந்த பின் போகர் எழுதிய சக்கரங்கள் என்று போகர் சமாதியை வைத்திருப்பார்கள். இதைப் போன்றெல்லாம் அவர் பேரைச் சொல்லி ஒவ்வொன்றையும் மாற்றி உண்மையின் உணர்வுகளை அறிய முடியாதபடி காலத்தால் மாறிப் போய்விட்டது.

அன்று போகன் ஒரு மனிதன் எப்படி முழுமையானான்…? என்று கண்டுணர்ந்தான் என்பதை நம் குருநாதர் காட்டினார்.

விஷத்தின் தன்மை எப்படி இயக்கப்பட்டது…? அணுக்களால் கோள்களாகி நட்சத்திரமாகிச் சூரியனாகி சூரியனாக ஆன பின் கோள்களை உருவாக்கி நட்சத்திரங்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாகி முழுமை அடைந்த பின் தான் ஒரு உயிரணுவின் துடிப்பு ஆகின்றது. பிரபஞ்சம் முழுமை அடைந்த பின் தான் ஒரு அணுத் தன்மையாகி உயிரணுவின் தோற்றம் அடைகின்றது.

1.27 நட்சத்திரங்களின் உணர்வுகள் ஒவ்வொரு தாவர இனங்களிலும் மண்ணிலும் எப்படிக் கலக்கின்றது…?
2.அதே போல உயிரணு தோன்றிய பின் அதிலே எப்படிக் கலக்கப்படுகின்றது…?
3.அந்த உணர்வுகளை இந்த உயிரணு நுகர்ந்த பின் உணர்வுக்கொப்ப மீண்டும் அதை இயக்குகிறது…?
4.அந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படி மாறுகிறது…? என்பதைத் போகன் கண்டுணர்ந்தார் என்று தெளிவாகக் கூறினார் நம் குருநாதர்.

1.போகன் காலத்தில் போகனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு
2.அதை நுகர்ந்தால் அக்காலத்தில் போகன் எப்படி இருந்தானோ அதை நீங்களும் அறிய முடியும்
3.அவன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளையும் நீங்கள் உணர முடியும்.

ஆகவே ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த நுகரும் ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசங்களையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kalki Flying state

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.