வாலிப வயதில் எடுக்கும் எண்ணத்தின் வீரியம் மனிதனின் அடிப்படை குணத்தை எப்படி மாற்றும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

adolescent period

வாலிப வயதில் எடுக்கும் எண்ணத்தின் வீரியம் மனிதனின் அடிப்படை குணத்தை எப்படி மாற்றும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு சிட்டிகை உப்பெடுத்து நாக்கில் வைத்தவுடன் அதன் உவர்ப்புத் தெரிகிறது. அதே நாக்கு புளிப்பு துவர்ப்பு காரம் இவற்றின் சுவையையும் அறிகின்றது.

சுவையை உணர்வதைப் போல் மணத்தின் மாற்றத்தையும் முகர்ந்து உணர முடிகின்றது. ஒளியின் மாற்றத்தையும் கேட்டறிய முடிகின்றது.

இவ்வுலக சுழற்சி வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ்வின் அன்றாடச் செயலாக இவ்வுணர்வின் வட்ட ஈர்ப்பில் உழன்று வாழும் நாம் இவற்றை உணர உருவ நிலை கொண்ட ஆரம்பச் செயலுக்கு நம் ஈர்ப்பைச் செலுத்திப் பார்த்தோம் என்றால்
1.ஒவ்வொரு உயிர்த் துடிப்பு நிலை கொண்ட உயிரணுக்கள் தோன்றிய நாள் தொட்டே
2.அவற்றின் வழி அலைத் தொடரினால் உருவாகிய உணர்வின் சேமிப்புக் காலத்தில்
3.பல கோடிக் காலங்களாக ஒவ்வொன்றின் தொடரும் சிறுகச் சிறுக ஒவ்வொரு வளர்ச்சி நிலை மாறி மாறி
4.இவ்வுணரும் பக்குவ நிலை அமிலக்கூட்டு உருவ மனிதனாக உருப்பெறும் காலத்தில்
5.பன்னிரெண்டு குண அமிலத்தைச் சேமித்ததன் மூலம்
6.மனித பிம்பச் சேமிப்பிற்குத் தேவையான வளர்ச்சி நிலை மனிதனாக ஆன பிறகு
7.சேமித்ததன் சக்தி இவ்வேழு பிம்ப உடல்களுக்கு ஜென்மம் எடுக்கக்கூடிய அமிலக் கூட்டு நிறைந்த பிறகுதான்
8.மனித பிம்ப உடலையே பெறுகிறது.

இவ்வாறு உருப் பெற்ற அனைத்தையும் உணரும் (SELF REALIZATION) உணர்வு மனிதனின் உணர்வு கூடிய எண்ண ஞானத்தைச் செலுத்தும் நிலைக்கொப்பத்தான் அமிலக்கூட்டை நிறைத்து (உடலிலே விளைய வைத்து) மனித பிம்ப உடல் கொண்டவனின் அவரவரின் செயல் திறன் அமைகின்றது.

1.பிம்ப உடலின் பிறப்பிலேயே பிறப்பெடுத்து வளர்ந்து
2.வயது நிலையின் நிலைக்கொப்ப உருவ வளர்ச்சியின் மாற்றங்களும்
3.ஞான சக்தியின் உணர்வாற்றலும் செயல்படுகின்றன.

“உருவ வளர்ச்சி நிலை” குறிப்பிட்ட காலத்துடன் நின்று விடுகின்றது. ஆனால் உணர்வின் எண்ண ஈர்ப்பு ஞானத்திற்கு…
1.உடலின் வளர்ச்சிப் பருவம் எய்திய காலத்தில் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்
2.ஒவ்வொரு மனிதனின் குண நிலை செயல்படுகிறது.

பருவ வளர்ச்சிக் காலத்தில் (ADOLESCENT AGE) மனித பிம்பத்தின் ஈர்ப்பின் அமில குணமே
1.மிகவும் வீரிய காந்த மின் அலையின் சக்தியை
2.மின்சாரத்தின் ஈர்ப்புப் பாய்ச்சலைப் போன்று பாயும்
3.அமில வளர்ச்சியின் சேமித குணமான அடிப்படை அமைகின்றது.

“அத்தருணத்தில் வெளிப்படுத்தும் முறை கொண்ட மனிதனாகத்தான்” மனித ஜென்ம காலம் வரை ஒவ்வொருவனின் குண நிலையும் அமைகின்றது.

இவ்வுணர்வலையின் ஈர்ப்பு சக்தி “துரித ஓட்டத்தில்… ஓடும் காலமிது…!”

அதனைச் செலுத்தும் முறை கொண்ட… மனித வாழ்க்கை முறை பெறும் காலத்தை… எச்சக்தியில் செயல்படுத்துகின்றனரோ…!
1.அதன் உணர்வு ஈர்ப்பு அமிலத்தின் சேமிப்பை – அத்தருணத்தில் தான்
2.குணத்தின் அடிப்படை உணர்வு சேமிதம் உள்ளது.

பல துறைகளில் முன்னேறுபவர்களுக்கும் “அக்காலத் தருணம் தான்” ஏற்றதாக அமைகின்றது. அதி உல்லாச காமுக வழித் தொடரில் செல்பவனும் இப்பருவ கால ஈர்ப்பில் எடுக்கும் எண்ணத்தின் வழித் தொடர் மனிதனாகத்தான் ஒவ்வொருவனும் வாழ்கின்றான்.

1.இதனை மாற்றி அமைக்கும் செயலாக
2.எச்சக்தியைக் கொண்டு செயல்படுத்துவது…! என்பதும் கடினம் தான்.

உணர்வின் எண்ணத்தின் வழித் தொடர் அமிலமுடன் வழி கொண்ட நாம் அவரவர்களின் நிலைக்குகந்த செயல் வழியை “நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்வது…!” என்பது கடினமாகிறது.

பிறரால்…
1.அவர்களின் நற்சக்தியைச் செயலாக்கித் தீயவர்களை நன்மை ஆக்குவது என்பதும்
2.தீயவன் நல்லவனைத் தீமைப்படுத்துவதற்கும்
3.அந்தந்தக் குண அமிலத்தின் நிலையிலிருந்து மாற்றுவது கடினம்.

உணர்வினால் எடுத்த அமிலத்தின் வளர்ச்சியின் குண மனிதன் அவன் அலைத் தொடரில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றான்.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும்…?

1.மிகவும் சக்தி வாய்ந்த காந்த மின் அலையின் ஈர்ப்பை எடுத்து
2.அவர்களின் எண்ணமும் – நல்லுணர்வின் பால் சக்தி அலையின் ஈர்ப்புடன் “கலக்கப் பெற்றால் தான்…!”
3.எச்சக்தியின் அலையும் அவர்கள் உடலில் பாய்ந்து
4.அவர்களின் குண நிலையின் வழித் தொடரையே மாற்றியமைக்க முடியும்.

முந்தைய இராமாவதார கிருஷ்ணாவதாரக் காலங்களில் காவியங்களில் காட்டப்பட்ட போர்களில்… ஒருவருக்கொருவர் போர் செய்யும் பொழுது…
1.ஒருவர் வில்லிலிருந்து வரும் அம்புடன் எதிர்த்து வரும் அம்பும் மோதுண்ட பொழுது
2.ஒளி நிலை பெற்று ஒன்றுடன் ஒன்று ஊடுருவி எதிர்நிலை கொண்டு
3.அதனதன் நிலைக்கே திரும்பிச் சென்றதாகக் காவியக் கதைகளில் படித்திருப்பீர்கள்.
4.உண்மையைக் கதைப்படுத்தி மறைக்கப்பட்ட தத்துவங்கள் பல உண்டு அவற்றில்…!

வான்மீகி மகரிஷியால் இராமாயணக் காவியத்தில் எழுதப்பட்ட அந்த உண்மையின் ஒவ்வொரு சொல்லுக்கும் பல கருத்துக்கள் உண்டு. “இன்று வரை அதன் உண்மைப் பொருளை உணர்ந்தாரில்லை…!”

ஞானிகள் கொடுத்த காவியங்களில் உள்ள மூலங்களை அறிந்திட முற்படுங்கள்..! அருள் வழியில் நடந்திட அதிலே தக்க உபாயங்கள் உண்டு.

கரையான் மந்திரம்

karaiyan-_-termite

கரையான் மந்திரம்

 

ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்த கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு…!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதிமயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் – நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.
இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதை போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காக கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான் அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறரைப் பார்த்து “பாவம்…!” என்று இரக்கப்படுவது பற்றியும் மற்றவர்களைப் பார்த்துப் பச்சாதாபப்படுவதையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

love is gods

பிறரைப் பார்த்து “பாவம்…!” என்று இரக்கப்படுவது பற்றியும் மற்றவர்களைப் பார்த்துப் பச்சாதாபப்படுவதையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.உணர்வின் எண்ணத்தை எந்த ஒரு செயலின் எண்ணத்திலும்… நம் எண்ண ஈர்ப்பிலும் செல்லாமல்
2.இவ்வுடலின் அமில குணத்தை நற்குணங்களின் அமில வளர்ச்சியுடன் வளரவிட்டாலும்
3.நம் எண்ணத்தின் உணர்வைச் சங்கடமும்… பரிதாபமும்… பச்சாதாபமும்… காட்டும் உணர்வலைக்குச் செலுத்திடலாகாது.

பரிதாபப்பட்டுப் பிறரின் எண்ணமுடனே நம் உணர்வின் எண்ணத்தையும் அவர்களின் உள்ள நிலைக்கு இரங்கி நாம் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால் நம் உணர்வும் அதே சுழற்சியில் சென்று விடுகிறது.

அப்பொழுது அவர்களின் உடல் அமிலக் கூட்டின் எண்ண அலையை நம் ஈர்ப்புக்குள்… “அவர்கள் பால் செலுத்தும் எண்ணத்தால்” எடுத்துக் கொள்கிறோம்.

நம் உணர்வுகள் “பாவம்…!” என்ற பரிதாபச் சுழற்சி வட்ட உணர்வு அமிலத்தை ஏற்பதினால்… நம்முள் உள்ள உயர் குண அமில சக்தியினைப் பிறர்பால் செலுத்தும் உணர்வின் எண்ணத்தால்
1.நம் நிலைக்கும்
2.நாம் செல்ல வேண்டிய வழிக்கும் தடை ஏற்படுத்துகிறது.

நற்சக்தியை… ஆண்டவன் என்ற நிலை அடைய… ஆண்டவன் பால் செல்ல எல்லா உயிர் ஆத்மாக்களிடமும் அன்பைச் செலுத்துங்கள்..! என்று இன்றைய கலியில் பல மகான்களாக ஞானத்தின் வழித் தொடரில் வந்த நாம் அறிந்த பலரும் கூறியுள்ளார்கள்.

இருப்பினும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் பிம்ப உடலில் பல இன்னல்களைப் பெற்று அதே செயலில் உடல் பிம்ப வலுக் குன்றியதனால் அவர்களின் வாழ்நாட்களில் பல சக்திகளைப் பெற்றிருந்தும் இவ்வுணர்வின் எண்ண செயல்முறை செலுத்தும் வழி முறை அறியாமல் பிறரின் எண்ண உணர்வு நிலையின் சுழற்சியில் சிக்கி விட்டனர்.

இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ரமண மகரிஷியாகப் பலர் போற்ற இருந்தவரின் நிலையும் இன்னும் இவர்களைப் போல் ஞானத்தின் ஈர்ப்பில் வந்தவர்களும்
1.எண்ணத்தின் உணர்வைப் பிறர்பால் “பரிதாபம்” கொண்டு செலுத்தி
2.இவர்கள் செலுத்திய அன்பின் பரிதாப நிலையினாலேயே
3.அவர்களின் உணர்வு எண்ண அலையின் ஈர்ப்பு இவர்கள் உடலிலும் “சாடியது…”
4.அதனால் தான் ஞானத்தின் வழி பெற்றிருந்தும் உடல் பிம்பக் கூட்டைக் காக்க முடியவில்லை.
5.உடல் பிம்பக் கூட்டிற்கு மட்டுமல்ல… நாம் எடுக்கும் உணர்வின் எண்ண உயர் ஞானச் செயலுக்கும் “இவை எல்லாம் தடைக்கற்கள் தான்…!”

இம்மனித பிம்ப உடல் “உணர்வு எண்ண ஈர்ப்பிற்கு” மிகவும் சக்திவாய்ந்த நிலையுண்டு…!

எண்ணமுடன் எடுக்கும் சுவாச அலையில் காந்த மின் ஈர்ப்பு குண உயிரணுக்களாக இவ்வுடல் முழுமைக்கும் ஈர்த்தெடுத்து வெளிக் கக்கும் இவ்வலையின் ஈர்ப்பு நாம் எடுக்கும் எண்ணத்தில் ஈர்ப்புடன் மோதுகிறது.

இங்கு இப்பொழுது உணர்த்தும் முறை கொண்டு
1.பிறர்பால் அன்பு செலுத்திடலாகாதா..?
2.பிறரிடம் இரக்கம் காட்டிடலாகாதா..?
3.பிறருக்கு நம்மால் முடிந்த தான தர்மங்கள் அளித்திடலாகாதா..? என்று கேட்கலாம்…!

பிறர்பால் அன்பைச் செலுத்தாதீர்…!

“பிறருக்கு அன்பான குண நிலை பெறவேண்டும்…” என்ற
2.அன்பலையை அவர்கள் வளர்க்க
3.அவர்களுக்கு “நம் எண்ணத்தால் நல் நிலை பெறட்டும்…” என்று
4.இந்த உணர்வைச் செலுத்துங்கள் “அன்பாக்கி..!”

நம்மைச் சார்ந்தவரும் சரி… நாம் கண்டுணர்பவரும் சரி… அவர்கள் படும் துயரமுடன் நம் உணர்வையும் பரிதாபமாக்கி… நம்மையும் பரிதாபப்படுத்திக் கொண்டு..
1.அவர்கள் அலையுடன் நாம் ஒன்றாமல் – நம் சக்தி அலையைக் கொண்டு
2.அவர்களுக்கு நல் நிலை நடக்கட்டும்..! என்ற ஒளி அலையைப் பாய்ச்சுங்கள்.

அவர்கள் உயரவும்… உடல் நலம் பெறவும்.. நம் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
1.”நல் நிலை” அவர்கள் பெற நம் உணர்வின் எண்ணம் செல்ல வேண்டுமேயன்றி
2.நம் உணர்வையும் எண்ணத்தையும் அவ்வுணர்வின்பால் செலுத்திடலாகாது.

அதே போல் தர்ம நிலைக்கும்… இரக்கத்தின் உணர்வால் ஒன்றி தர்மம் செய்யாமல் “பல துயரங்களில் அவர்கள் உள்ளார்கள்…” என்ற இரங்கிய தர்மம் தராமல்
1.நாம் தரும் தர்ம ஈகையினால் அவர்கள் பெற்று உயர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி
2.நாம் தரும் தர்மம்… பெறுபவரையும் உயரும் எண்ணத்திற்குச் செல்லும் முறையில்
3.நம் தர்ம முறையும் இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் நம் ஞானத்திற்கு…
1.பிறரின் ஈர்ப்பால்
2.அவர்களின் குண ஈர்ப்பின் எண்ணமுடன் நாம் ஒன்றியவுடன்
3.நம் நிலையும் மாறும். (இது முக்கியம்)

நாம் அறிந்த பல ஞானிகளும் அவர்கள் இரங்கிப் “பிறர்பால் செலுத்திய அன்பினாலேயே..” அவர்கள் ஞானமும் குறைந்தது.

யாம் சொல்லும் இத்தகையை பரிபக்குவ உணர்வைக் கொண்ட எண்ண ஜெபத்தில் எடுக்கும் நிலையைக் கொண்டுதான்
1.நம்முள் சேர்ந்துள்ள அமில குணத்தின் வளர்ச்சியினால்
2.சக்திவாய்ந்த ஒளி அலையின் காந்த மின் அலையின் ஈர்ப்பை
3.அந்த மெய் ஞானிகளிடமிருந்து பெற முடியும்.

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?

gayatri-wallpaper

காயத்ரி மந்திரம் சொல்லலாமா…?

 

காயத்ரி என்ற உணர்வு உண்டு. “காயத்ரி ஜெபம்” செய்ய வேண்டும் என்றாலே அதற்குண்டான மந்திரங்களைச் சொல்வார்கள்.

காயத்ரி ஜெபம் என்று மந்திரத்தைச் ஜெபிக்க ஆரம்பித்தார் என்றால் இன்னொரு மனிதனின் உடலில் விளைந்த உணர்வைத் தான் தனக்குள் எடுத்துக் கொள்ள முடியும்.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் வேதங்கள் என்ற நிலைகளில் அந்த அதர்வண வேதத்தைத் தான் கற்றுணர்ந்து வந்துள்ளோம்.
1.அந்த மந்திரத்தின் ஒலிகளையே நமக்குள் பரப்பி
2.இந்த உடலுக்குப் பின் இன்னொருத்தன் கையிலே ஆவியாகவும் பேயாகவும் நாம் அடிமையாகிச் சுற்றிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வேதனைப்படுவோரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம் தான்.
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.என்னிலே அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று திரும்ப எண்ணினால் இதுவும் தியானம் தான்.

இதிலே எந்தத் தியானத்தை நீங்கள் எண்ணுகிறீர்கள்…!

வேதங்கள் கூறியது போல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தோம் என்றால் “சக்தி கிடைக்கிறது…” என்று சொல்லித்தான் அதைச் செய்வார்கள். சூரியனை எண்ணி விட்டால் அது காயத்ரி என்பார்கள்.

ஆனால் அது எந்த காயத்ரி…? என்பது வேண்டுமல்லவா…!

ஒருவரிடமிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்பட்டால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

அதாவது வெப்பம்… காந்தம்… விஷம்… என்ற மூன்று நிலைகளில்
1.அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளைக் காந்தம் கவர்ந்து கொண்டால்
2.அது தன்னுடன் இணைந்த நிலையில் பரப்பிரம்மமாகின்றது.
3.அந்த உணர்வின் சத்து ஒரு அணுத் தன்மை அடையும் சக்தி பெறுகின்றது – சீதாலக்ஷ்மியாக மாறுகின்றது.
4.ஆனால் அதே சமயத்தில் சேர்த்துக் கொண்ட மணம் அது ஞானமாக இருக்கின்றது.
5.அந்த வேதனைப்படும் உணர்வு அது தான் காயத்ரி… காயமாகி.. முழுமையாகின்றது.
6.அதை யார் சுவாசித்தாலும் அதே வேதனைப்படுத்தும் உணர்வாகத்தான் அது இயக்கும்.
7.இப்படி அந்தப் பொருள்படும்படி “காயத்ரி” என்றால் புலனறிவு ஐந்து…!
8.அதிலே எந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ அதன் வழி தான் அது நடக்கும்… அல்லது இயக்கும் என்று
9.வேதங்களின் மூலத்தில் இது மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…! என்றால் இல்லை.

மந்திர ஒலிகளை எழுப்பும் நிலைகளிலிருந்து விடுபட்டு அந்த அருள் ஞானி அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.

அகஸ்தியன் ஒளியின் உணர்வாக முழுமை பெற்று இன்றும் அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தப் பேரருள் உணர்வை நமக்குள் விளையச் செய்து இந்த உடலுக்குப் பின் நாம் பிறப்பில்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தின் மூலம் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

direct connection - sages

உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தின் மூலம் சித்தர்களுடனும் சப்தரிஷிகளுடனும் தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

ஆனால் ஆவி நிலையில்… “பல எண்ண அலையில்” உள்ளவர்களுக்கு என்ன ஆகிறது…?

அவர்களின் எண்ண வீரிய குண நிலைக்கொப்ப அவர்களின் உணர்வுடன் ஒத்த எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று போல் உள்ள நிலையில் “இவ்வுலகில் வாழ்ந்த பொழுது நிறைவேறா ஆசையுடன் சென்ற ஆவிகள்” (அதன் ஆசையை நிறைவேற்ற) இவர்களின் எண்ணத்தின் ஒத்த நிலை ஈர்ப்பு உள்ளதனால் இவர்கள் உடலில் அவைகள் ஏறிச் செயல்படத் தொடங்கிவிடுகிறது.

அப்படிச் செயல்பட்டாலும் அவ்வாவிகள் வளர்ந்த நிலையும் அவ்வாவிகள் வளர்த்துக் கொண்ட சக்தி அலையும் இவர்களின் உணர்வு ஞான சக்தி அலைக்கும் உகந்த செயல் வடிவ வளர்ச்சி ஓட்டத்தில் தான் “அதுவும்” அந்த உடல் உள்ளவரை தான் செயல்புரிய முடியும்.

1.ஆக… எந்த ஒரு செயல் ஞானம் கொண்ட நிலை கொண்டுள்ளனரோ
2.அதே வட்ட உணர்வு வளர்ப்பில் வாழ்ந்து
3.தன் வாழ்க்கையில் அவர்களின் ஆசையின் மேம்பாடு என்று உணரும் ஒவ்வொரு செயலிலும்
4.அதனின் வளர்ச்சி ஓட்டத்தில் உடலுடன் உள்ளவரையிலும் (இறக்கும் வரை) அந்த ஞானம் செயல்பட்டு
5.உடலை விட்டுப் பிரிந்த பிறகு மீண்டும் இதே உணர்வலை சுற்றலைக் கொண்டு
6.எத்துறையில் உயர்ந்து உழன்று உருப்பெற்று வாழ்ந்ததோ அதே சுழற்சி ஓட்டத்தில்
7.மீண்டும் மீண்டும் அந்நிலைக்குகந்த வளர்ச்சி ஈர்ப்பிற்குத்தான் செல்கிறது.

முன்னேறிய விஞ்ஞானம்… விஷய ஞானம்… இசை ஞானம்…! எதுவாக இருந்தாலும் சரி…
1.ஓர் சுழற்சி வட்ட ஞான ஓட்ட வளர்ச்சி சுழற்றலில் தான் சுழன்று கொண்டே இருக்க முடியுமேயன்றி
2.உயர் ஞானச் செயலுக்கு ஒளி ஞானத்திற்குச் செல்ல முடியாது (இது முக்கியம்)

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி நம் எண்ணத்தை அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”

GNANAGURU DETINATION

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”

 

நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.

உடனே நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு நம்முடைய எண்ணம்
1,துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வேதனைப்பட்டவர் பெறவேண்டும்
2.அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று
3.இந்த உணர்வை உந்தித் தள்ள வேண்டும்.

ஒரு இரண்டு பேர் ரோட்டிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நாம் பார்க்கின்றோம்.

அடப்பாவிகளா..! இப்படிச் சண்டை போடுகிறார்களே…! என்று எண்ணினோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போட ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமலே அந்த அணுக்கள் போர் முறை செய்யும்.

அப்பொழுது அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி எண்ணி நம் உடலுக்குள் அந்தச் சக்திகள் போன பிற்பாடு நம் ஆன்மாவை விட்டே அந்த உணர்வுகளைத் தள்ளிவிடும். அந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போகின்றது. நம் ஆன்மா தூய்மை ஆகிறது,

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

சண்டை இட்டவர்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறவேண்டும் என்று சொன்னால்
1.இந்த நல்ல உணர்வை நாம் நுகர்ந்து
2.புதிதாக அந்த நல்ல அணுவை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.
3.அவர்களின் தீமை உணர்வுகளை உருவாக்குவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

இன்று நான் அரை மணி நேரம் தியானம் செய்தேன்… ஒரு மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தேன்… குண்டலினி சக்தியை ஏற்றினேன் என்று “எல்லாம் செய்தேன்…!” என்று சொன்னாலும் இந்த உணர்வுகளை எடுத்த பிற்பாடு
1.அடுத்தாற்போல் வேதனைப்படுவோரைப் பார்த்த பின்னாடி
2.அதை வேகமாக நம் உடல் “இழுக்கும்…” நோய் நிச்சயமாக வரும்…!

இதைப் போன்ற நிலைகளை மாற்ற “அவ்வப்பொழுது…” நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் “வாழ்க்கையே தியானம்…” என்பது.

தியானம் செய்… என்ற பின் “நான் தியானம் செய்கிறேன்..” என்று சொல்கிறார்கள். எல்லாம் தியானம் செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் ஒருவன் என்னைத் திட்டினான் என்று சொன்னால் அந்த அருள் ஒளியைப் பெறுவதற்குப் பதில் “திட்டினான்..திட்டினான்…திட்டினான்…” என்று இந்தத் தியானத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம்.

நானும் தியானம் தான் இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் சரியாக மாட்டேன் என்கிறது…! என்று தியானம் இருப்பவர்களிலேயும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
1.தன்னை அறியாது இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாத நிலை ஆகிறது.

ஏனென்றல் நாம் ஒவ்வொரு நிமிடமும்…
1,இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற
2.அந்தச் சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது என்ன…?

கடலில் படகில் செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள் மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத் துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.

இதைப் போல் தான் நம் வாழ்க்கையிலே
பாச அலை
அன்பு அலை
வெறுப்பு அலை
வேதனை அலை
சலிப்பு அலை
சங்கட அலை
கோப அலை
குரோத அலைகளில் எல்லாம் நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்த அருள் ஒளி என்ற துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச் சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.

இல்லை என்றால் சாகாக்கலையாக நாம் மீண்டும் வந்து விடுகின்றோம். நாம் இப்படி இருந்தேன் இப்படிச் செய்தேன் என்று இங்கே எண்ணிக் கொண்டிருந்தால் சாகாக்கலையாக வந்துவிடுகின்றது மறுபடியும் உடலின் தன்மைக்கே வந்துவிடுகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. இதைப் போல் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் “நாம் என்றும் வேகுவதில்லை…”

இந்தச் சூரியனே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த நிலையை மனிதனாக ஆன பின் நாம் அனைவரும் பெறுதல் வேண்டும்.

அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

இருந்தாலும்…
1.இது என்னடா…?
2.சாமி அப்பொழுதும் சொன்னார்.. இப்பொழுதும் சொல்கிறார்…! என்று இதை விட்டுவிட்டீர்கள் என்றால்
3.இந்தக் கணக்கு உங்களுக்குத் தப்பாகப் போகும்.

இந்த உணர்வை நினைவைக் கூட்டி உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்… உங்களுக்குள் அது கருவாகின்றது.

கோழி என்ன செய்கிறது..? அது சும்மா கேறிக் கொண்டே இருக்கும். எந்தச் சேவலோடு சேர்ந்ததோ அதை எண்ணிக் கேறியது என்றால் அதே மாதிரி நிறத்துடன் குஞ்சுகள் வரும்.

இதே மாதிரித்தான் என்னைத் திட்டினான்… இப்படிச் செய்தான்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வு நமக்குள் கருவாகின்றது.

ஆனால் அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்தால் இது கருவாகும். வாழ்க்கையில் வரும் அந்த இருளை அகற்றும்.

அந்தச் சக்தி பெறவேண்டும் என்பது தான் “உண்மயான தியானம்…!”

மனித ஆத்மாவுக்குண்டான “அரிதான சக்திகள்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

power of human soul

மனித ஆத்மாவுக்குண்டான “அரிதான சக்திகள்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.
1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்
2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

ஆகவே…
1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்
2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்
3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்).

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்
2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்
3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்தான்
5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் “அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்” இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

இதனை உணர முடியுமா…?

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்… அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்… எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்க எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் “இவ்வாழ்க்கை” என்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்
2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து
3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்
4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம்.

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால் ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெறவேண்டும் என்று அன்றைய ஞானிகளும் சபதரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ அதன் உணர்வெண்ண நினைவுப்படி அவர்கள் அடைந்த நிலையை நாமும் அடைய முடியும்.

ஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…!” என்று தாயை அழையுங்கள்

first and foremost god

ஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…!” என்று தாயை அழையுங்கள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடட.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெறவேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!

உணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul protection and lock

உணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழைநீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

இராமனின் குணத்தையும் கிருஷ்ணனின் ஆற்றலையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord krishna and lord rama

இராமனின் குணத்தையும் கிருஷ்ணனின் ஆற்றலையும் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது
2.இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு (உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…?)

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…” மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது. உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான்.

1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகமே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.
3.உருவை உணர்த்தி வழி அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…!”