“உள் உணர்வின் மேம்பாட்டை” வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

inner feeling

“உள் உணர்வின் மேம்பாட்டை” வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்…” எப்படி இருக்கும்…? நடந்த நிகழ்ச்சி

Acts of souls

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்…” எப்படி இருக்கும்…? நடந்த நிகழ்ச்சி

 

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்…? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது…?

ஐய்யய்யோ…! என்னை வெட்டிப் போட்டார்களே… வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்…
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்…!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது… என்ன செய்வது…? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்… என்று சொல்லி…!

இது என்ன…? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா… பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது…? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி…
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது…?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது…?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தன் உடலில் எழும் உணர்வை மாற்றியமைக்கும் “மனிதனின் எண்ண வலிமை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

THOUGHT POWER OF MAN

தன் உடலில் எழும் உணர்வை மாற்றியமைக்கும் “மனிதனின் எண்ண வலிமை” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின்னும் எப்படிப் பாதிக்கிறது…?

curse

மனிதன் இடும் சாப அலைகள் அவன் இறந்த பின்னும் எப்படிப் பாதிக்கிறது…?

 

குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே… இந்தப் பாவிகள்…!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை…! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்…! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு… அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது…!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்…! என்று இருக்கும்… வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் பொறுமிக் கொண்டு நன்றாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்…
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ…
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா…! என்னைக் கொல்கின்றீர்களேயடா… என்னைக் கொல்கின்றீர்களேயடா…!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது…?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது…?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது…? சென்றபின்… புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது…? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்…? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து… பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து… அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாறியே ஆக வேண்டும்…!

everything is perfect

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக மாறியே ஆக வேண்டும்…!

 

நாம் அறியாமல் நுகரும் உணர்வுகள் நம்மை எப்படித் தவறு செய்ய வைக்கின்றது என்பதைக் காட்டுவதற்குத் தான் துஷ்ட தெய்வங்களாகச் சிலையை வைத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே அந்தத் தவறை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானித்து விட்டு
1.தவறு செய்யும் உணர்விலிருந்து நாங்கள் மீள வேண்டும் என்று தீமை செய்யும் உணர்வை அடக்கி
2.அடுத்து நாம் செய்வதை எல்லாம் சிந்தித்துச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.

இல்லை என்றால் பிறர் சொல்லும் உணர்வு வரும் பொழுது நமக்குள் கோபம் வந்து உணர்ச்சிகளைத் தூண்டித் தாக்கும் உணர்வுகளே வரும்.

அந்தத் தாக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வந்தது என்றால் என்ன நடக்கின்றது…? நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் நடக்கின்றது. ஆக இந்தப் போர் நடக்கும் பொழுது நல்ல குணங்களை அது கொல்லத் தொடங்குகின்றது.

ஒருவனை எப்படிக் கொலை செய்யப் போகின்றோமோ இதே போல் நம் நல்ல குணங்களை அது வீழ்ச்சி அடையச் செய்கின்றது.

ஆகையினால் இந்த உண்மையை நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்ட நிலையில்
1.ஒவ்வொரு குடும்பமும் ஒரு தெய்வீகக் குடும்பமாக நீங்கள் மாற வேண்டும்.
2.உங்கள் உடலில் தெய்வீகப் பண்புள்ள உணர்வுகளாக மாற்றுதல் வேண்டும்.
3.உங்கள் சொல் பிறருடைய உணர்வுகளை நல் வழியில் நடத்தக்கூடிய அந்த அருளாக மாற்ற வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எப்படி இதை வழி நடத்த வேண்டும் என்று அந்த உண்மைகளை நான் (ஞானகுரு) சொல்லிக் கொண்டே வருகிறேன். உங்கள் வழிகளில் நீங்கள் தான் செயல்படுத்த வேண்டும்.

எல்லாவற்றையும் கேட்டபின்… “சாமி நன்றாகப் பேசுகிறார்…!” என்று சொல்லி என்னைப் போற்றி விட்டு
1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்…! எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக் கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்…?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை…. நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை…! என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்.

சாமி சொன்னபடி தான் நான் எண்ணினேன்… என் தொழில் இப்படி நஷ்டமாகிவிட்டது… என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்…! என்று இல்லாதபடி அந்த அருள் ஒளியை எடுத்தால் சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு நிச்சயம் வரும்.

நஷ்டத்தை ஈடுகட்டும் உணர்வு வலு பெறும். அப்பொழுது சிந்தனையுடன் தொழில் செய்ய முடியும். குடும்பத்தில் சங்கடம் வந்தாலும் அதை மாற்றிப் பண்புடன் அன்புடன் வாழும் பக்குவமும் வரும். இந்த உணர்வை வளர்த்திட வேண்டும்…!

ஞானத்தின் தன்மையைப் பதிவாக்கி அதனின் வழியில் செயலாக்கப்படும் பொழுது பண்புள்ள குடும்பமாகவும் தெய்வீகக் குடும்பமாகவும் மாற முடியும். ஆகவே
1.கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்துவிடுங்கள்
2.அருளைப் பெறுவோம் பண்பைப் பெறுவோம் பரிவான நிலைகளில் வாழ்வோம் என்ற மன உறுதி கொள்ளுங்கள்.
3.நீங்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு எடுத்துக் காட்டாக வளர வேண்டும்.

ஞானிகள் வழியில் வாழ்க்கையை நடத்துவதற்கும் இந்த உணர்வின் தன்மையைச் செயலாக்குவதற்கும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேன். இனிமேல் இதை எடுத்து நீங்கள் வளர்த்துக் கொள்வதில் தான் இருக்கின்றது. நாளை வரும் விஞ்ஞான நஞ்சிலிருந்து மீளலாம்.

நல்லதைப் பேசினேன்… எல்லாம் தெரிந்து கொண்டேன்… என்ற நிலையில்
1.நாம் தெரிந்து கொண்டோம்… என்ற நிலையை எடுத்தோம் என்றால் ஏமாந்து போவோம்.
2.ஒவ்வொரு நாளும் தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே தவிர
3.”எல்லாம் தெரிந்தது…” என்ற அப்படிப்பட்ட முழுமை எதுவும் இல்லை.
4.சொல்லில் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.

வெயில் அடிக்கும் பொழுது ஒரு நிலை… மழை பெய்யும் பொழுது ஒரு உணர்வு… குளிர் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு… காற்றடிக்கும் பொழுது ஒரு நிலை..! என்று இப்படி நமக்குள் கால நிலை மாறிக் கொண்டே தான் இருக்கும்.

1.எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வை அறிந்து
2.அந்த ஞானத்தின் வழியில் நாம் செயல்பட்டு அருள் வாழ்க்கை வாழ்தல் வேண்டும்
3.அனைவரையும் அந்த வழியில் வாழ வைக்க நாம் தவமிருப்போம்.

அருள் வழியில் செல்வோம். இந்த உடலுக்குப் பின் முழுமையான ஒளியைப் பெறுவோம். எல்லா உணர்வையும் ஒளியின் சரீரமாகப் பெறுவோம்.

பத்தாவது நிலையான கல்கி…! என்ற ஒளி நிலையை நாம் அனைவரும் அடைவோம்…!

“ஆண்டவனின் ஆண்டவனாகும் நிலை…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

God of Gods

“ஆண்டவனின் ஆண்டவனாகும் நிலை…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

திடப்பொருளைக் கரையச் செய்வதும் இந்தக் காற்று தான். ஆவி அமிலத்தைத் திடமாக்குவதும் இந்தக் காற்று தான். இந்தக் காற்றின் மோதலில் வரும் “ஒளியும்… நீரும் தான்…” நம் பூமியின் ஜீவன்.

காற்றடைத்த பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டு விட்டால் அதன் செயலில்லை. அதே போல்
1.இக்காற்றின் அமில ஈர்ப்பு பிம்ப ஜீவனில் ஆவி பிரிந்து விட்டால்
2.இந்த உடல் என்ற பிம்பத்திற்கும் ஜீவனில்லை.
3.இக்காற்று குண அமிலத்தில் தான் இந்த உலக சக்தியே நிறைந்துள்ளது.

காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள பால்வெளி மண்டலத்தில் அமில குணங்கள் நிறைந்திருந்தாலும்… நம் பூமியின் காற்று மண்டல ஜீவ அமில குண நிலை அங்கு இல்லை.

நம் பூமியின் சுழற்சி ஓட்டத்தினால் பூமியே தான் சுழற்சி ஓட்டத்தின் வேகத்தினால் காற்றையும்… ஒளியையும்… நீரையும் வளர்த்து… தனக்கு உணவாக எடுத்து மீண்டும் கழித்து… மீண்டும் மீண்டும் இதே வளர்ச்சி கதியில் ஒரு நிலை சுழற்சி ஓட்ட நிலையினால் கோடி கோடி ஆண்டுகளாக வாழ்கிறது.

பூமியின் மாற்றக் காலம் ஏற்படுவது எப்பொழுது…?

பூமி ஈர்த்து வெளிப்படுத்திய அமில ஒளி ஜீவ சக்தியினால் வளர்க்கப்பட்ட “மனிதனாலே தான்” பூமியின் நிலை மாறப் போகின்றது.

பூமியின் எண்ணச் சுவாச வளர்ச்சி நிலையின் பெருக்கத்தினால் பூமியின் நிலையே இப்படி உள்ள பொழுது அப்பூமியிலேயே பிறந்து வளர்ந்து வாழும் மனிதனின் நிலையில் இவ்வெண்ண நிலை உயர்வதுவும் தாழ்வதுவும் அவரவர்கள் எடுக்கும் எண்ண நிலைக்கொப்பத்தான்…!

பூமியின் ஈர்ப்பில் பலவாக உள்ள சக்தி நிலையில் பலதரப்பட்ட பல கோடி அமிலங்கள் நிறைந்திருந்தாலும் நம் பூமியின் படைப்பிலுள்ள அமில குணங்களின் ஆவிக்காற்று நம் சுவாசத்திற்கு அப்படியே வந்து மோதுவதில்லை.

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்…!”

தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiritual light - Bliss

தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…!

act of soul

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…!

 

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

take naraimha avatar

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) இரயிலில் சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றேன். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) அப்பொழுது என்னுடன் வருகின்றார்,

செல்லப்படும் பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் பதறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்களிடம் ஐயோ…! எனக்கு இப்படி இருக்கிறது… தண்ணீர் கொடு… அது கொடு.. இது கொடு..! என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி… “உணவோ தண்ணீரோ… ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது..” என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… அடப் பாவிகளா… எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா..?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

கூட வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள்…? டாக்டர் சொன்னதை எண்ணிக் கொண்டு நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அப்பொழுது இன்னொரு அம்மா அந்த இரயிலில் வந்து கொண்டிருந்தவர் இந்த அம்மாவைப் பார்த்து… பாவம் மிகவும் வயதானவர்கள்… கேட்டால் கொடுத்தால் என்ன..? அவஸ்தையயால் இப்படிச் சாபமிடுகிறார்கள்…! என்று அவர்கள் எண்ணிக் கேட்கிறார்கள்.

இதை நான் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

“உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள்… அட எங்களுக்குத் தெரியாதா…? நீ என்னம்மா இதைக் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அந்த நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…!” என்று எண்ணுகின்றார்.

ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பம் இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி “ஒரு அளவுக்கு மேல் உணவோ தண்ணீரோ கொடுத்தால் அந்த உயிருக்கு ஆபத்து வரும்…!” என்று உறவினர்கள் அதைக் கடைபிடிக்கிறார்கள். எதற்காக…? சிறிது நாளைக்காவது அந்த நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று..!

ஆனால் நோயான பெண்மணியோ “நான் இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று இந்த அம்மா பேசுகிறது.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு.. “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே..!” என்று அவர்களின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன்.. நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

அந்த ஆன்மா பிரியும் பொழுது… அவருடைய எண்ணம் எங்கே செல்கிறது…?

இரயிலில் வரும் பொழுது இந்த நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்கள் மேல் வருகிறது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே…!” என்ற அந்த எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு எனக்குத் துரோகம் செய்தார்கள்…” என்று இங்கே சாபமிட்டது.

1.இத்தகைய சாப அலைகளை அங்கே அந்த உறவினர்கள் நுகர்ந்தனர்
2.அவர்கள் உடலில் விளைந்து அவர்கள் தொழில் நசுங்கியது…
3.குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் விளைந்தது.

ஏனென்றால் இதையெல்லாம் ஒரு 48 நாள்கள் பார்க்கும்படியாக அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணி கூட வந்து பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து இதைப் பார்த்தவுடனே…
1.நோயான பெண்மணியின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா கடைசி நிமிடத்தில் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட்டதோ
2.இவருடைய உடலுக்குள் அந்த ஆன்மா வந்து
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

1.இரயிலில் போகும் பொழுது இந்தப் பற்று வந்த பின்
2.அது எப்படி ஆகிறது…? இந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் எப்படிச் செல்கின்றது…?
3.இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

ஆனால் இறந்த பின் நோயான பெண்மனியின் வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகின்றது. குழப்பத்தால் அவர்கள் வியாபாரம் மந்தமாகிறது.

தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது… தவறான நிலையில் பேசுவது.. என்ற இந்தச் சங்கடங்கள் எல்லாம் வந்து வீட்டுக்குள் குழப்பம் வருகிறது.

ஏனென்றால் இந்த இயற்கை நம்மை எபப்டி இயக்குகிறது என்ற நிலைகளைச்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நமக்குள் நோய் எப்படி விளைகின்றது..? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை..! நாம் நுகர்ந்தறிந்து அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசும் பொழுது
1.இந்தச் சாந்த உணர்வுகள் மிக நன்மை செய்யும்
2.ஆனால் வேதனை என்ற உணர்வுகள் வலிமை பெற்றது.
3.அது இந்தச் சாந்தத்தை அடக்கிவிடும்.

அது தான் மூஷிகவாகனா…! விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டுக் காண்பித்து… “நாம் சுவாசித்த உணர்வே.. நம்மை வாகனமாக இருந்து அழைத்துச் செல்லும்…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும்.

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual eye divine eye

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!