மெய் ஞானிகள் இயற்றிய பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

agastiya-rishi

மெய் ஞானிகள் இயற்றிய பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

 

அன்று ஞானிகள் சித்தர்கள் தங்களுக்குள் கண்டுணர்ந்ததை எல்லாம் பாடல்களாகக் கவிகளாக இயற்றியுள்ளார்கள். அதிலே இருக்கும் ஒவ்வொரு இணைப்பையும் நீங்கள் பிரித்துப் பார்த்தால் இயற்கையின் பேருண்மைகளை அதன் மூலமாக உணரலாம்.

பட்சிகளைப் பற்றி பாடுவார்கள்… மற்ற மிருகங்களைப் பற்றி பாடுவார்கள்.. காகம் குருவி அணில் என்று சிறிய உயிரினங்களைப் பற்றியும் பாடியிருப்பார்கள்.

அதனுடைய குணங்கள் எந்த வழியில் இருந்ததோ அதனின் ஒற்றுமையும் நமக்குள் (மனிதனானபின்) சேர்த்துக் கொண்ட ஒற்றுமையும் இப்படி மற்றதுடன் ஒத்து வாழும் உணர்வின் தன்மையைப் பாடல்கள் மூலமாகக் காட்டுவார்கள்,

ஏனென்றால் நாம் பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக வந்த நிலையில் இதற்கு முன்னாடி மிருக வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும் பட்சிகள் வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும்
1.அந்த குணங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வாழ்ந்த நிலைகளை எதனின் உணர்வை நாம் இன்று சேர்த்துக் கொள்கின்றோம்…?
2.அதை எல்லாம் எதன் வழி நாம் வளர்க்கின்றோம்…?
3.எதன் வழியின் இன்று நாம் வாழுகின்றோம்…? என்பதை வைத்துத் தான்
4.புலமைகளாக அதைப் பாடிக் கொண்டு போவார்கள்.

அந்தப் பாடலுக்கு அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும். இன்றைக்குள்ளவர்களால் அந்தப் பாடலின் மூலம் தெரியுமா என்றால் தெரியாது.

திருவள்ளுவர் அன்று பாடினார். அதற்கு எத்தனை பேர் இன்று வியாக்கியானம் கொடுக்கின்றார்கள்…?
1.இப்படிச் சொல்லியிருக்கிறார்
2.அப்படிச் சொல்லியிருக்கிறார்
3.இதற்காக வேண்டி இப்படிச் சொன்னார்… இல்லை அப்படிச் சொல்லிருப்பார் என்று
4.அவரவர்களுடைய அனுமானங்கள் தான் வருகின்றதே தவிர
5.அன்று திருவள்ளுவர் சொன்ன உறுதியின் தன்மையைப் பெற முடிகிறதா…? அதைப் பின்பற்ற முடிகிறதா…? என்று சிந்தியுங்கள்.

அந்தக் காலத்தில் இதைத்தான் பேசியிருப்பார். இதைத்தான் சொல்லியிருப்பார் என்று சொல்லிக் கொண்டே போவார்கள்.

திருஞானசம்பந்தரைப் பற்றி வியாக்கியானப்படுத்தும் போது அவர் இப்படித் தான் பேசினார். அப்படித் தான் பேசினார் என்று இவருடைய கற்பனைகள் தான் இங்கே வரும்.

ஆனால் திருஞானசம்பந்தரின் தாய் வெகு நாளாகப் புத்திரபாக்கியத்திற்காக வேண்டி அது எடுத்துக் கொண்ட வலுவான உணர்வால் அது கருவுற்று தாய் சுவாசித்த உணர்வே ஞானப்பாலாக அந்தச் சிசுவுக்குக் கிடைத்தது.

அதனால் தான் அவ்வளவு பெரிய ஞானியாக அவர் உருவானார் என்ற நிலையை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

தாய் கருவிலிருக்கும் பொழுதே அவருக்குள் விளைந்த உணர்வுகள் விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வந்தது.
1.எந்தத் தீமையையும் மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்
2.வலிமை கொண்டவர்…
3.வலிமை கொண்டு வாழும் நிலை பெறறவர்…! என்பதை எல்லாம்
4.பராசக்தி ஞானப்பால் கொடுத்ததால் தான் அந்த சக்தியைப் பெற்றார் என்று வியாக்கியானத்தைக் கொண்டு போகின்றார்கள்.

நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைப் பற்றியும் தேவாதி தேவர்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

Soul Alive

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைப் பற்றியும் தேவாதி தேவர்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தப் பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதருமே சமமான நிலை நிலைக்க வாழும் வாழ்க்கையை வாழ்ந்திடுங்கள். சமமான வாழ்க்கையை ஆண்டவன் நமக்கு ஏன் அருளவில்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்தப் புண்ணிய பூமியில் பிறந்ததின் நோக்கமே அச்சக்தியின் அருள் பெற்று நமக்குத் தந்த இச்சந்தர்ப்பங்களை எல்லாம் நம் நிலையைச் சமமாக்கி வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அதாவது ஒவ்வொரு பிறவி எடுக்கும் பொழுதும்
1.அடுத்த பிறவியிலாவது நம் வாழ்க்கையைச் சமமாக்கி வாழ்ந்திடலாம்
2.சகல தேவரையும் கண்டிடலாம் என்ற பேராவலுக்காகத்தான் பிறப்பு எடுக்கின்றோம்

பிறவி எடுத்திருந்தாலும் நிறைவு பெற்ற சமமான வாழ்க்கையை எடுத்திட முடியாமல் தான் இன்று இந்த உலகில் உள்ள பாமரர்களின் நிலை உள்ளது.

மனிதனாகப் பிறவி எடுத்த நாளிலேயே அடுத்த ஏழு பிறவிக்கு நம் ஆத்மாவை அலைய விட்டிடாமல்
1.ஒரே பிறவியில் தன் நிலை உணர்ந்து சமமான நிலை எய்தி
2.சகல தேவனாக சூட்சம உலகத்தில் சென்று கற்றுணர்ந்த ஞானிகளும்
3.தன் நிலையைத் தெய்வ நிலையாக்கி வாழ்ந்தவர்களும் இன்றும் தெய்வமாக உள்ளார்கள்.

ஆனால் நாம் எடுத்துள்ளோம் இப்படிப் பல பிறவிகளை. இந்தப் பிறவியிலும்… இப்பொழுதும்… இன்றும்… நிறைவு இல்லாமலேயே வாழ்கின்றோம்.

ஆகவே சமமான நிலை நிலைக்க அந்த ஆண்டவனின் அருள் கிட்ட நம்முள் இருக்கும் ஆண்டவனைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
1.நான் என்ற நிலையை…
2.நம்மை ஈசன் இயக்குகின்றான் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்

இவ்வுலக வாழ்க்கையிலே சலிப்பும் சங்கடமும் மேற்கொள்ளாமல் நம்மை நாம் சமமாக நிலைப்படுத்தி வாழ்ந்திடும் வாழ்க்கையால்தான் அந்த சகல தேவர்களுடன் நாமும் ஒருவராக வாழக்கூடிய தகுதியைப் பெற முடியும். அந்தத் தேவாதி தேவர்களின் நிலையையும் எய்திட முடியும்.

சகல தேவர்கள் என்றால் யார்…? என்ற கேள்விக்குறி எழுந்திட முடியும்.

ஈசன் ஒருவன் தான் சகலத்திலும் கலந்துள்ளவன். அந்த ஈசன் தான் என்னும் பொழுது ”சகல தேவர்கள்” என்று பிரித்துக் கூறும் நிலையில் உள்ளவர்கள் யார்…? என்று நம் மனதிற்கு விடை காண எண்ணிடலாம்.

1.சகல ரூபங்கள் கொண்டு
2.ஒவ்வொரு ரூபத்தின் வடிவினிலும் எண்ணி ஏங்குபவருக்கு
3.ஆண்டவனாக வந்து அருள் புரியும் அந்த ஞான நிலை பெற்ற
4.“மெய் ஞானிகளும்… மகரிஷிகளும் தானப்பா அச் சகல தேவர்கள்…!” (முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்)

இந்த உலகில் மனிதர்கள் மிருகங்கள் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பல கோடி ஆத்மாக்கள் உடலில்லாமல் ஆத்மாவுடன் (ஆவிகள்) இந்தக் காற்று மண்டலத்தில் உள்ளது.

1.உலகில் நடக்கும் நிலைகளை எல்லாம் தெரிந்து கொண்டு தன் நிலைகளுக்கு ஏற்ப உடல்களையும்
2.தன் ஆத்மா வந்து (தான்) பிறந்து வாழ்ந்திடும் நிலைக்காகவும்
3.எந்த உடலில் ஏறினால் அந்த உடலின் மூலமாகத் தான் விட்டுச் சென்ற தன் எண்ணத்தை – நன்மையையோ துவேஷத்தையோ பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலை கொண்டும்
4.இப்படித் தன் நிலையை ஈடேற்றிக் கொள்ள இன்று உடலுடன் வாழும் மனிதர்களை
6.உடலில்லா ஆத்மாக்கள் பல கோடி கோடியாகத் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளச் சுற்றிக் கொண்டேயுள்ளன.

நாம் நினைக்கின்றோம்…!
நம் எண்ணம்…
நம் உடல்…
நம் ஆன்மா என்று…!
நம் உடலில் நாம் மட்டும் வாழவில்லையப்பா.
(நாம் எண்ணுவதைப் போல் நாம் மட்டும் வாழவில்லை – இது மிகவும் முக்கியமானது)

நம் மன நிலை எந்தெந்த நிலை கொண்டு மாறுகின்றதோ
1.அந்தந்த நிலை கொண்ட ஆவி அணுக்கள் நம் உடலில் வந்து எந்தத் திசையிலும் ஏறிக் கொண்டு
2.நம்மையே ஆட்டிப் படைத்து நம்மை ஆண்டு வாழ்ந்து
3.தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ள நம் உடலை ஒரு கூண்டாக
4.தான் குடியிருக்கும் கூண்டாக வைத்து ஆண்டு வாழ்கிறது.
(உடலில் ஆவிகள் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்)

நம் நிலையைக் கொஞ்சம் போல மாற்றிக் கொண்டாலே (உணர்ச்சி வசப்பட்டாலே) நம் நிலையில் இருந்து வாழ்ந்திடப் பல அணுக்கள் நம்மைச் சுற்றிக் கொண்டுதான் உள்ளன…! என்பதை இப்பொழுதாவது ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும் என்றால் நம்முள் அந்த ஆண்டவனின் சக்தி ஒன்றைத்தான் ஈர்த்து வாழ்ந்திட முடியும் என்ற உண்மையை உணர்ந்து பல ஆவி உலக ஆன்மாக்களுக்கு நாம் அடிமையாகாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரை இந்த உலக வாழ்க்கையில் பெற்ற சந்தர்ப்பங்கள் (பல பிறவிகள்) எல்லாவற்றையுமே நழுவ விட்டு விட்டோம்.
1,இந்தக் கடைசி நிலை கொண்ட இந்த மனித உடலிலிருந்தாவது
2.நம் உயிரணுவைச் சமமாக நிலை நிறுத்தி
3.அந்தச் சகல தேவர்களிடம் (மகரிஷிகளிடம்) ஐக்கியப்படுத்துங்களப்பா…!

தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – நம்மை அறியாது இயக்கும் (சுவாசத்தின் மூலம்) உணர்வுகளும் அதனின் செயலாக்கங்களும்

பிறிதொரு உணர்வின் இயக்கமாக நாம் இயங்கிவிடக் கூடாது

உபதேசம் கொடுக்கும் போது அதைக் கேட்பவர்களுக்கு அடிக்கடி ஏன் தூக்கம் வருகிறது…?

வலு கொண்டு சொல்வதற்கும்… சந்தேக உணர்வுடன் சொல்வதற்கும் உண்டான வித்தியாசங்கள்

நம்மைத் தவறாக யாராவது திட்டினால் பதிலுக்கு நாமும் திட்டிப் பேசுகிறோம்… ஆனால் உண்மையை உணர்த்த முடிகின்றதா…?

வேண்டியவருக்கு ஒரு நியாயமும் வேண்டாதவருக்கு ஒரு நியாயமும் என்று தான் உணர்வுகள் இயக்குகிறது

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

நம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்

ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!

கோப உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சிலரிடம் பேசினாலோ… அல்லது அவர்களை எண்ணினாலோ… நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது… ஏன்…?

ஈகோ (EGO) பிரச்சினையால் ஒவ்வொரு மனிதரும் எத்தனையோ துயரப்படுகிறார்கள்

கோப குணத்தால் நம் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

தாங்க முடியாதபடி இயக்கும் பொறாமை உணர்வுகள்

மாமியார் மருமகளுக்கு இடையில் இயக்கும் உணர்வுகள்

108 வயது வரை வாழ்ந்த மூதாட்டியின் நிலை

அருளாடுபவர்கள் – என்னை உன்னிடமே அழைத்துக் கொள் என்று தெய்வத்திடம் வேண்டுவார்கள்

கடவுளைத் தேடுகிறேன் என்று குகைக்குள் அடைபட்டுள்ளோர் பலர்

கொசுவின் முகப்பில் உள்ள விஷத்தின் ஆற்றல் – சாம்பலைத் தடவிக் காத்துக்கொள்கின்றார்கள்

கொள்ளையர்கள், திருடர்கள் பற்றி பயந்த உணர்வுகளை எண்ணினால் ஏற்படும் விளைவுகள்

சாமியே இல்லை என்று நான் சொல்கிறேன் என்று சிலர் என்னைத் திட்டுகின்றார்கள்

தர்மம் அன்று செய்ததன் காரணம், இன்று மாறியதும், செய்ய வேண்டிய தர்மமும்

தீமை வருவதை பௌதீகம் நிரூபிக்கின்றது 

நல்லவர்கள் கெட்ட்வர்களாக மாறுவதன் காரணம்

நான் தர்மம் செய்கிறேன், எனக்குப் பாவங்கள் வருமா – விளக்கம்

நேற்று குளித்தால் இன்று ஏன் குளிக்க வேண்டும் என்று கேட்கின்றோமா…?

பக்தியோ, விஞ்ஞான வளர்ச்சியோ நாம் விண் செல்ல உதவாது

மடாதிபதிகளின் போதனைகளை வைத்துத் தீமைகளை நீக்க முடியாது

மது குடிப்பவர்கள் கடைசியில் அடையும் நிலை என்ன…?

மரண பயம் – மரண பயம் கொண்ட பறவைகளின் செயல்கள்

ஒரு எறும்பைக் கொல்வதாலும் 1000 எறும்பைக் கொல்வதால் வரும் விளைவுகள்

ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம் பரிணாம வளர்ச்சியில் மனிதனான நிலை

கருவுற்ற உயிரினங்கள் சுவாசத்தால் மாறும் ரூப மாற்றமும், மனிதக் கருவில் ரூப மாற்றங்களும்

நீ யார் – ஒளியாகப் போகிறாயா…?

புழு வண்டாக மாறுவது போல் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவோம்

சுவாசிப்பது கருவாகி முட்டையாகி அணுவாகி உணவு எடுக்கும் நிலை – விளக்கம்

இரத்த நாளங்கள், சுவாசம், அடை காத்தல், உயிரின் வேலை, கரு, முட்டை, அணு

நம் உடலுக்குள் தீமை செய்யும் அணு உருவாக விடக்கூடாது

காரமான கோபமான உணர்வுகள் அணுக்களான பின் இயக்கும் நிலைகள்

நாம் சுவாசிக்கும் உணர்வு எப்படி அணுவாக மாறுகின்றது

ஒரே நிலையில் இருக்கின்றதா நம் உடல்…? அணுக்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்

சுவாசிப்பது இரத்தத்தில் கருவாகி அணுவாகிவிட்டால் சிறு மூளைக்குச் சென்று என்ன செய்கிறது…?

இந்திரலோகம் – இந்திரஜித் – விளக்கம்

நுகர்ந்த உணர்வை உயிர் இரத்தத்திலிருந்து அணுவாக மாற்றும் நிலை

பல்லி எச்சம் இட்ட உணவை உண்டால் ஏற்படும் தீமைகள்

மிருகங்கள் உணவு உட்கொள்ளும்போது அதற்கு ஏற்படும் சிரமங்கள்

விஷத்தைக் கழித்து மனிதனான நாம் விஷத்தைச் சேர்த்தால் கீழான நிலைக்குச் செல்வோம்

ஆட்டைச் சாப்பிட்டால் மே..எஏ…,கோழியைச் சாப்பிட்டால் கொக்கரக்கோ…!

பயில்வான்கள் மாமிசம் சாப்பிடுவதால் உண்டாகும் விளைவு

வலு கொண்ட நிலை பெற மாமிச உணவை கோழியை உட்கொள்வோர் நிலை…! 

நஞ்சு குறைந்த தேவாங்கின் இயக்கம், நஞ்சை வென்றிடும் வேகா நிலை

ஆயுள் ஹோமம், மது பீடி சிகரெட் குடிப்போர், தொழிலில் தவறு செய்வோர் – செயல்கள் 

ஞானிகள் சொன்னதை அரசர் காலத்தில் மத குருக்கள் எப்படி மாற்றினார்கள்

விஷத் தன்மை கொண்ட பேட்டரிகள், ஆடைகளில் பூசப்படும் கெமிக்கலின் விளைவுகள், அரிப்பு

விஷத்தின் அளவுகோல் ரத்தத்தில் கூடி அதனால் பித்த சுரப்பிகளின் இயக்கங்கள் என்ன ஆகும்

மிருகங்கள் உடலிலுள்ள விஷமும் நம் பித்த சுரப்பிகளின் விஷமும்

மீன், ஆடு, கோழி இவைகளை விரும்பி உணவாக உட்கொண்டால் வரும் விளைவுகள்

இறந்த காண்டாமிருகத்தின் உணர்வுடன் தாவர இன உணர்வுகள் கலந்து புதுச் செடி உருவாதல்

கரையான் பற்றிய முழு விளக்கம்

கரையானைத் தின்றுதான் ஒவ்வொரு உயிரினமும் கரைக்கும் சக்தியைப் பெற்றது

.நூலாம்படைப் பூச்சி ஆயிரக் கணக்கில் தன் இனத்தை எப்படிப் பெருக்குகின்றது

சுவாசிக்கும் காற்று உடலாக எப்படி மாறுகிறது…?

எண்ணமும் உணர்ச்சிகளும் நமக்கு எப்படித் தோன்றுகிறது…?

27 நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர்நிலைகள்

பத்திரிக்கையில் அசம்பாவிதங்களைப் படிப்பதால் வரும் தீமைகள்

ஒருவருக்கொருவர் நாம் பிரிந்து இல்லை 

எலக்ட்ரானிக் அட்டை வேலை செய்வது போல் நல்லதைத் திறந்து தீமைகளை அடைக்க முடியும்

பச்சைக் காய்கறி மாமிசம் சாப்பிட்டால் எங்கே செல்வோம்…?

உண்மையான பரிணாம வளர்ச்சி எது…?

உடலுக்குள் புகுந்த ஓரு கடுமையான ஆவியின் செயல்கள்

தாவர இனங்கள் சிலவற்றுக்குள் இருக்கும் அபூர்வ சக்திகள்

நம் உடலில் உள்ள குணங்கள் எப்படி மாற்றமடைகிறது…?

சில சிறு குழந்தைகளின் விசித்திரமான ஆற்றல்கள்

நம் எண்ணங்களும் குணங்களும் எப்படி மாறுகின்றது…?

நண்பரின் உணர்வும் தாயின் உணர்வும் நம்மை இயக்கும் நிலைகள்

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…?

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…?

குழந்தைப் பாக்கியம் இல்லாதவருக்குக் குழந்தை கிடைத்தது எப்படி…?

தன்னையறியாமல் பகைமையாக்கும் சில உணர்வின் இயக்கங்கள்

குறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது

மற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..!”

நல் உணர்வின் வித்தை உருவாக்கும் வழி

நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எங்கே செல்வோம்..?

மறைக்கப்பட்ட… மறைந்த உண்மைகளை… வெளிப்படுத்தினாலும் இன்று ஏற்றுக் கொள்வாரில்லை

தொட்டுக் காட்டுதல் என்பது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

சூறாவளி.. சுழிக்காற்று…” இவைகள் எல்லாம் எதிர்பாராமல் வருவதன் காரணம் என்ன..?

ஒருவர் நம்மைக் குறையாகக் கூறியவுடனேயே நம் நல்ல உணர்வுகள் மாறுகிறது

நாம் இயங்குகிறோமா… பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…?

பழி தீர்க்கும் உணர்வை வளர்த்துக் கொண்டால் அதனின் “பின் விளைவுகள்…” எப்படி இருக்கும்…?

இது இவருடைய குணாதிசயம்…என்று சொல்கிறோம்.. அது அவருக்கு எப்படி அமைகிறது…?

பிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…!

கோபப்பட்டால் உடனே முகம் கறுத்து விடுகின்றது… ஏன்..?

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்

.தற்கொலை செய்யும் உணர்ச்சிகள் எப்படி மனிதனுக்குள் வருகின்றது…?

நாம் இயக்குகின்றோமா… அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

ஞானிகள் காட்டிய நெறிகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டுமென்று யாரும் விரும்பவும் இல்லை…! விளக்கம்

பனை மரத்தில் பேய் இருக்கிறது…! என்ற எண்ணம் எப்படி உருவாகிறது..?

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் தாங்க முடியவில்லை ஏன்…?

soul-protections

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன்…?

 

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின் தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுகொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

 

“அன்பே கடவுள்…!” என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Love is God

“அன்பே கடவுள்…!” என்று நம் முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்..? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு வேண்டிய ஒரே ஆசையான அன்பென்னும் ஆசையைத்தான் நாடி ஏங்கி வாழ்கிறது. எல்லா ஆன்மாக்களுமே அன்பை வேண்டித்தான் இந்த உடலுடன் வாழ்கின்றது.

அந்த அன்பிற்காகத்தான்… …
1.அந்த அன்பு கிடைக்காத நிலையில் சோர்வாகி
2.மன நிறைவைப் பெற்றிடாமல் பல தவறுகளும் பல இன்னல்களும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் வந்து
3.அந்த மனம் என்னும் அன்பு கொண்ட ஒரே லோகத்தைப் பல லோகங்களாக்கி வாழ்ந்திடுகிறார்கள் மனிதர்கள்.

பரலோகம்.. எமலோகம்… நரக லோகம்… பூலோகம்… சொர்க்கலோகம்… இப்படிப் பல லோகங்களைச் சொல்கிறார்கள்…! அல்லவா. இவைகள் எல்லாம் என்னப்பா…?

மனம் என்னும் அந்த அன்பு லோகத்தை அந்த அன்பையே ஏங்கி அன்புக்காக வாழும் அந்த ஆத்மலோகத்திற்காக நம்மைச் சுற்றியுள்ள பல லோகங்களைத்தான் நாம் அழிக்கின்றோம்.

அன்பு ஒன்றினால் மட்டுமே இந்த உலகை உன்னதமாக ஆக்கிட முடியுமப்பா. ஆகவே எந்த நிலை கொண்டும் இன்று இருக்கும் இந்த விஷமான விஞ்ஞான உலகில்
1.பல இன்னல்களுடன் வாழ்ந்திடும் இம்மனமென்னும் ஆத்மாவிற்கு
2.அன்பென்னும் பொக்கிஷத்தை அவ்வுயிர் ஆத்மாவிற்கு ஊட்டம் தந்தே வாழ்ந்திடுங்கள்.

ஏனென்றால் அன்பினால் தான் நம் உடலும் நம் மனதும் நம் ஆத்மாவும் புத்தொளிர் பெற்று வாழ்கிறது என்ற உண்மையை அறிந்து ஒவ்வொருவரும் அன்பு கொண்டு வாழ்ந்திடுங்கள்.

ஆண்டவனை வணங்கிடும் முறையை நமக்கு முன் வாழ்ந்த முன்னோர்கள் ஏன் உணர்த்தினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சஞ்சலக்கூடு நிறைந்த இந்த மனத்தை அன்பு என்னும் நிலையில் தான் அவ்வாத்மாவை அமைதிப்படுத்த முடியும் என்ற நிலைக்காகத்தான் ஆண்டவன் என்னும் ரூபத்தை ஏற்படுத்தினார்கள் முன்னோர்கள்.

மனமென்னும் நிலையைச் சஞ்சல நிலையிலிருந்து மீட்டிட அவ்வாண்டவனைப் பல ரூபத்தில் எண்ணி மகிழ்ந்து நம் ஆண்டவன் என்னும் அன்பு ரூபத்தை நாம் அன்பு கொண்டு வணங்கிட நம் முன்னோர்கள் வழி காட்டி வந்தார்கள்.

ஆண்டவன் என்னும் ரூபத்தில் நம் அன்பை ஒன்றில் மட்டும் செலுத்தி வணங்கிடுவதில்லை…!
1.அன்பு கொண்டு நாம் வணங்குவதெல்லாம் ஆண்டவன் தான்.
2.எல்லா உயிரினங்களிலுமே அந்த ஆண்டவன் உள்ளான்.

உன் அன்பை உயிரினங்களிடம் மட்டுமல்ல…! இந்த வானமும் பூமியும் மரம் செடி கொடி மழை காற்று சூரியன் சந்திரன் நட்சத்திர மண்டலங்கள்
1.இப்படி எந்நிலை கொண்டும்
2.உன் மனமென்னும் அன்பைச் செலுத்தி எண்ணி வணங்கிட்டாலே
3.எந்த ரூபத்திலும் (எல்லா வகையிலுமே) உன் உயிராத்மாவிற்கு நீ சேர்க்கும் உன்னதப் பொக்கிஷம் கிட்டுகின்றது.
4.ஆகவே அந்த அன்பினால் மட்டும் தான் அவ்வுயிராத்மாவிற்குக் குளிர்ந்த நிலையை (மகத்துவத்தை) அளிக்க முடியும்.

இந்த உடல் முழுவதுமே ஒரு நிலை கொண்ட வெப்பத்துடனே உள்ளது. ஆனால் இந்த உடலிலுள்ள நம் உயிரணு மட்டும் தான் குளிர்ந்த நிலையில் உள்ளது.

மனம் என்னும் நிலையை நாம் அமைதிப்படுத்தி அன்புடன் வாழும் பொழுது அவ்வுயிராத்மா ஒரே நிலை கொண்டு அமைதியுடன் அன்பு கொண்ட நிலையில் ஆனந்த நிலையில் உள்ளது.

இம்மனமென்னும் நிலையை
1.நாம் பல நிலை கொண்டு அலைய விடும் பொழுது (மன அழுத்தம் – TENSION, STRESS)
2.இவ்வுடல் நிலையில் ஏற்படும் அதி உஷ்ண நிலையினால்
3.அவ்வுயிராத்மாவிற்குப் பல தீங்குகளைத்தான் நம்மால் சேர்க்க முடிகின்றது.

நம்மில் பல பெரியோர் இந்த அன்பையே நமக்குப் பல வழிகளில் உணர்த்திட அன்றிலிருந்து இன்று வரை போதித்துச் சென்றார்கள்.
1.“அன்பிலார்க்கு இவ்வுலகமே இல்லை…!” என்ற உண்மையை உணர்த்திச் சென்றார்கள்,
2.அன்பே தான் கடவுள்…! என்றார்கள்.

ஆனால் இப்பொழுது வாழ்ந்திடும் மனிதர்களின் குறிக்கோள் எல்லாம் செல்வந்தனாகச் செழித்து வாழ்ந்திட வேண்டும் என்பது தான். அதற்காக “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

அந்த நிலைக்காகத் தன்னைத் தானே.. தன் இனத்தைத் துவேஷிக்கும் நிலையில்
1.தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கிறான்.
2.அன்பிற்கு மேல் துவேஷத்தினால் தான் இன்றைய உலகமே உள்ளது.
3.இந்த நிலையில் இவ்வுலகில் கலந்துள்ள இக்காற்று மண்டலமே விஷமுடன் உள்ளது.

ஆகவே இனி வாழ்ந்திடும் வாழ் நாள்களை வீண் விரயம் செய்திடாமல் அன்பு கொண்ட வாழ் நாள்களாக வாழ்ந்து அன்பென்னும் பொக்கிஷத்தை ஆண்டு வாழ்ந்திடுங்கள் அன்புடனே.

ஈஸ்வரபட்டனாகிய எனது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

நம்பிக்கை என்னும் நிலை மனித உள்ளத்தில் ஊன்றி விட்டால அந்த “நம்பிக்கையே தான் மனிதனுக்குத் தெய்வம்…!

Trust Trust

நம்பிக்கை என்னும் நிலை மனித உள்ளத்தில் ஊன்றி விட்டால அந்த “நம்பிக்கையே தான் மனிதனுக்குத் தெய்வம்…!

 

நம்பிக்கையை வைத்துப் பல பேருண்மைகளைச் சொல்லி விடலாம் நம்பிக்கை இல்லா விட்டால் உயிர் நிலையே இல்லை.

நம்பிக்கையைக் கைவிடுபவர்களுக்கெல்லாம் பல குழப்ப நிலைகள் தான் வரும். அதிலிருந்து வருவதுதான் கஷ்ட நஷ்டங்கள் எல்லாமே.

“நம்பினோரைக் கை விடமாட்டான் ஆண்டவன்…!” என்கிறார்கள் ஆண்டவன் யார்…? அவன் மன நம்பிக்கையே தான் அவனுக்கு ஆண்டவன்.

1.இரண்டு குத்து விளக்கை வைத்து
2.விண்ணிலிருக்கும் மகரிஷிகளை எண்ணி
3.புருவ மத்தியில் ஓ…ம் ஈஸ்வரா…! என்று அழுத்தமாக நினைத்து நம்பிக்கையுடன் தியானம் செய்யுங்கள்.

கண்களை மூடியிருந்தாலும் சரி… அல்லது கண்களைத் திறந்திருந்தாலும் சரி… ஜோதி வடிவான தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.

உயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…! ஏன்…?

Flame of soul

உயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…! ஏன்…?

சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)

அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.

இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.

நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.

ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…!

இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.

யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது…! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

 

உணர்வை ஒளியாக எப்படி மாற்றுவது…? நாம் எப்படி ஒளிச் சரீரம் பெறுவது…?

Fire maharishis

உணர்வை ஒளியாக எப்படி மாற்றுவது…? நாம் எப்படி ஒளிச் சரீரம் பெறுவது…?

கேள்வி:-

“உணர்வை ஓளியாக்குவது…” என்றால் என்ன…? ஏன் ஒளியாக்க வேண்டும்…? அதற்குண்டான விளக்கம் வேண்டும்.

பதில்:-

நமது ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி பார்த்தோம் என்றால்
1.திருவண்ணாமலையில் ஜோதியை ஏற்றுகின்றார்கள்.
2.ஐயப்பன் கோவிலிலும் ஜோதியைக் காட்டுகின்றார்கள்.
3.முருகன் கோவில்களிளும் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
4.எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் தினமும் அங்கிருக்கும் தெய்வத்திற்கு தீபத்தை (ஜோதியைக்) காட்டுகின்றர்கள்.

அந்தத் தீபத்தை நாமும் இரண்டு கைகளாலும் முகத்திற்குக் கொண்டு வந்து புருவ மத்தியிலும் ஒற்றிக் கொள்கிறோம்.

இது எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் ஏன் அவ்வாறு காட்டுகிறார்கள்…? நாம் ஏன் அதை நம்முடைய முகத்தில் ஒற்றிக் கொள்கிறோம்…? என்ற மூலத்தை எண்ணிப் பார்ப்பதில்லை.

நம் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால் சூரியன் ஒளிமயமாகப் பிரகாசிக்கின்றது. சூரிய வெளிச்சத்திலே எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடிகிறது. நம்முடைய காரியங்களைச் சீராகச் செய்ய முடிகிறது.

ஆனால் இரவிலே சூரிய ஒளி நாம் வாழும் இடத்தில் இல்லாததால் அங்கே இருள் சூழ்கிறது.
1.இருளுக்குள் நம்மால் எதையும் தெளிவாகக் காண முடியுமோ…? முடியாது.
2.இருளுக்குள் இருந்து எந்த ஒரு காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…? அதுவும் முடியாது.

இன்று செயற்கை விளக்குகளைப் புறத்திலே வைத்து வாழக் கற்றுக் கொண்டதால் நம்மால் இயற்கையின் ஒளியைப் பற்றிச் சிந்திக்கும் ஞானம் இல்லாது போய்விட்டது,

இதே போல் தான் ஆதியிலே அகண்ட அண்டத்திலும் எங்குமே இருளாகத்தான் இருந்தது. இருள் என்றால் விஷத் தன்மை.

உதாரணமாக நம் வீட்டை அதிக நாள் பூட்டி வைத்திருந்தால் அது பாழடைந்து கடுமையான விஷத் தன்மைகள் பரவுகிறது அல்லவா…! ஆகவே இருள் சூழ்ந்த நிலை என்றாலே அது விஷத் தன்மை வாய்ந்தது…!” என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இருண்ட நிலையாக இருந்த அந்தச் சூனியப் பிரதேசத்தில் விஷத் தன்மை அதிகமாகி அது விஷமற்ற மற்ற ஆவிகளுடன் மோதும் பொழுது வெப்பமாகின்றது. இதைப் போன்று
1.விஷமானதும் விஷமற்றதும் தொடர்ந்து மோதி மோதி
2.வெப்பம் அதிகமாகும் பொழுது அங்கே நெருப்பாகின்றது.
3.அப்பொழுது தான் வெளிச்சமே உருவாகின்றது. (இருள் அகலுகிறது)

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கிறோம் அல்லவா. அது போல் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பமாகி நெருப்பாகி வெளிச்சமாகின்றது.

வெப்பம் அதிகமான பின் நகரும் தன்மை வருகிறது. அதனால் கவரும் சக்தியான காந்தம் உருவாகின்றது. காந்தத்தால் மற்றதைத் தன்னுடன் ஈர்க்கும் ஆற்றல் வருகிறது. ஈர்த்தது அனைத்தும் வெப்பத்தால் சமைக்கப்பட்டு ஒரு பொருளாக உறைகிறது.

இது தான் பரம்பொருள் என்பது.

எல்லையே இல்லாது பரவி இருக்கும் இந்தப் பரத்தில் பொருள் உருவாகும் பொழுது பரம் பொருளாகின்றது. அது எடை கூடி இருப்பதால் நகர்கின்றது. சுழலும் தன்மைக்கு வருகிறது. சுழற்சியால் தன் நடு மையம் கடுமையான வெப்பமாகின்றது.
1.அந்த வெப்பத்தால் தான் மற்றதை மாற்றும் சக்தி அதாவது புதிது புதிதாக உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.இப்படித்தான் நாம் இன்று பார்க்கும் எல்லாமே உருவாகி (சிருஷ்டி) உள்ளது.

சூரியனாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் கோள்களாக இருந்தாலும் கல் மண் தாவரங்கள் உயிரினங்கள் மனிதர்கள் யாராக இருந்தாலும் இப்படித்தான் வந்துள்ளோம்.

அத்தகைய வெப்பத்தைத்தான் ஞானிகள் கடவுள் என்றும் ஈசன் என்றும் நாம் தெரிந்து கொள்வதற்காகக் காரணப் பெயரை வைத்தார்கள்.
1.நம் உடலுக்குள் உயிரின் துடிப்பில் உருவாகும் வெப்பம் இல்லை என்றால்
2.உடனே குளிர்ச்சியாகி மரணமடைவோம்.

இன்றைய மனித வாழ்க்கையில் நாம் புறப் பொருள்களை மட்டும் தான் அறிய முற்படுகின்றோம். அகத்திற்குள் அதாவது ஒரு அணுவிற்குள் (தனக்குள் – தன்னைப் பற்றி) நடக்கும் சூட்சமங்களை அறிய வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைத்தான் அறியாமை அதாவது “இருள்…!” என்று சொல்வது.

கடவுள் என்ற நிலையில் இயக்கச் சக்தியாக வெப்பமாக ஒளியாக உயிர் இருந்தாலும் அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலும் உடலுக்குள் தோன்றும் உணர்ச்சிகளும் மாற்றத்திற்கு உட்பட்டவை. காலப் போக்கில் அழிந்துவிடும்…!

இருந்தாலும் உயிரால் கவரப்பட்ட சத்து உடலாகி சுவாசிக்கும் பொழுது “நான்…!” என்ற உணர்வாக வருகின்றது. அந்த நானை அதாவது நீங்கள் கேள்வியாகக் கேட்டபடி
1.உணர்வை ஒளியாக… வெப்பமாக… நெருப்பாக… ஜோதியாக… மாற்றவில்லை என்றால்
2.அந்த நான் இன்று இருக்கும்
3.நாளை அந்த நான் இருக்காது.
(இறந்த பின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்று நாம் தான் கூசாமல் சொல்வோமே…!)

என்றென்றும் நாம் நிலைத்த வாழ்க்கையாக அந்த மெய் ஞானிகளைப் போல் ஏகாந்தமாக வாழ வேண்டும் என்று விரும்பினால் உயிரான ஈசனுடன் (நெருப்பு – ஒளி) ஒன்றிடல் வேண்டும்.

அவனைப் போன்ற ஒளி சக்தியை நாம் விண்ணிலிருந்து எடுத்து இந்த உடலில் வாழும் குறுகிய காலத்திற்குள் விளைய வைக்க வேண்டும்.

ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும் உடல் பெறும் உணர்வுகள் அனைத்துமே இருள் சூழ்ந்தவை தான். இந்தப் பூமிக்குள் இருக்கும் அனைத்து சக்திகளுமே மீண்டும் மீண்டும் உடல் பெறச் செய்யும் சக்திகள் தான்.

ஆகவே கீழ நோக்கி இருக்கும் நம் சுவாசத்தை மேல் நோக்கிய சுவாசமாக கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து விண்ணிலிருந்து வரும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன
1.அந்தப் பேரருள் பேரொளி உணர்வை உயிரிலே மோதச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
2.உயிர் வழிச் சுவாசமாக அதைப் பிராணயாமமாக்க வேண்டும்.
3.அந்த நெருப்பு நமக்குள் கூடக் கூட இந்த இருள் சூழ்ந்த உடலைப் பிளந்து
4.உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிட்டு ஆத்ம ஜோதியாக அழியா ஒளிச் சரீரமாக நாம் பெற முடியும்.

இதைத்தான் திருவண்ணாமலையிலும் ஐயப்பன் ஆலயத்திலும் முருகன் கோவிலில் சொக்கப்பனையாகவும் தீப ஆராதனையாக ஒவ்வொரு ஆலயத்திலும் காட்டுகின்றார்கள்.

நாம் அந்த ஜோதியைப் பார்த்து எனக்கு சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்று அதை வேண்டினால் “நமக்குள் அந்த ஒளி பெறும் உணர்வு எப்படி வரும்…?”

பேரொளியாக மாறி விண்ணுலகில் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்வதா…? அல்லது உடலுக்காக வாழ்ந்து மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் பிறவிக்கு வந்து வேதனையை அனுபவிப்பதா…? என்பது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

ஏட்டுப் படிப்பின் மோகத்தால் தன்னை உணர முடியாத கல்வியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Education and Gnana

ஏட்டுப் படிப்பின் மோகத்தால் தன்னை உணர முடியாத கல்வியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறியாதவர்கள் அறிந்து வாழ வேண்டும் என்ற நிலையை எண்ணிடாமலேயே வாழ்கின்றார்கள். அறிந்தவர்களோ அந்தமும் ஆதியும் அறிய வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்கிறார்கள்.

கற்றவர்… கல்லாதவர்… அறிந்தவர்… அறியாதவர்… எழை… செல்வந்தன்… இப்படிப் பல பல தரப்புள்ள மேடு பள்ளம் கொண்ட உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கொண்டு இந்த உலகமே சுழல்கின்றது.

1.கற்றவருக்குத் தான் கற்ற வித்தையும் கர்வமும்
2.கல்லாதவருக்குத் தான் கல்லாத நிலை கொண்டு தாழ்வு மனப்பான்மையும்
3.தன் மனதிலுள்ளே ஏற்றம் தாழ்வு என்ற இரு நிலை படைத்த
4.மாய ரூபத்தையே மனதினில் கலக்கவிட்டு உலக மக்கள் இன்று வாழ்கிறார்கள்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…! என்ற உண்மையைத் திருவள்ளுவர் ஆதி காலத்திலேயே உணர்த்தியுள்ளார். இன்றுள்ள மக்களின் மனதில் ஏட்டுப் படிப்பின் எண்ணம் தான் அதிகமாக உள்ளது. அதையே பெரிய படிப்பாக எண்ணி வாழ்கின்றார்கள்.

1.ஏட்டுப் படிப்பிற்குப் பதவி பணம் என்ற போர்வையைப் போர்த்தியுள்ளதால்
2.அந்த நிலைக்காக ஏங்குவோர் பலர் உள்ளனர்.
3.படிப்பும் பட்டமும் அளித்த மாய ரூபங்கள் தாம் இவை.

தன் எண்ணத்தினால் தன் ஜெபத்தினால் தன்னுள்ளேயே உலக உண்மைகளை ஈர்க்கும் சக்தியைப் பெற்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு
1.எந்தப் பள்ளியில் படித்து யாரால் பட்டமளிக்கப்பட்டதப்பா…?
2,அன்று கம்பர் எழுதிய கவிதையெல்லாம் எந்தப் பட்டிமன்றத்தில் ஏற்றுப் படிக்கப்பட்டதப்பா..?

கம்பரும் திருவள்ளுவரும் வியாசகரும் வான்மீகியும் இப்படி எண்ணிலடங்கா ஞானிகளும் சித்தர்களும் ரிஷிகளும் எழுதிய நூல்கள் எல்லாம் எந்தப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்று எழுதினார்களப்பா…?

அன்று நமக்குத் தம் சக்தியை உபயோகப்படுத்தி உன்னத நூல்களை அவர்கள் அளித்த நிலை கொண்டுதான் இன்றும் பல போதனா மொழிகளில் பள்ளிகளிலும் கல்லூரியிலும் கல்வி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தப் படிப்பைப் படித்தற்கு இன்றுள்ள உபாத்தியாயர்கள் மதிப்பெண்களும் தருகிறார்கள். மதிப்பெண் பெறுவதில் தான் இருக்கின்றார்கள்.
1.ஆக இன்றுள்ள இக்கலியுகமே
2.தானாக உணர்ந்து செயல்படும் நிலையை முழுவதுமாக மாற்றி வருகிறது.

உலகின் ஒவ்வொரு நிலையிலும் புதிய புதிய சக்தி நிலை தோன்றிக் கொண்டே வரும் பொழுது இம்மனிதனின் எண்ணத்தில் மட்டும்
1.தான் உணர்ந்து செயல்படும் நிலையை மாற்றிக் கொண்டு
2.பெரும் பேராசையின் நிலைக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு வாழ்கின்றான் இன்றுள்ள மனிதன்.
3.மனிதர்களின் எண்ணமெல்லாம் ஏட்டுப் படிப்புடனும்
4.பிறர் சொல்லிய உண்மைகளையே ஆராய்ந்து பார்க்கும் நிலையுடனும்
5.அந்த நிலையைக் கொண்டு விவாத நிலைக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

இன்று மனிதர்கள் உயிர் வாழும் நிலையே செயற்கையினால் தான் நடந்து வருகின்றது. இந்தச் செயற்கையின் சொரூபத்திற்குத் தன்னை அடிமையாக்கிக் கொள்ளாமல் இனியாவது இயற்கையைப் போற்றி வணங்கிடுங்களப்பா…!

ஒவ்வொரு மனிதரும் தன் நிலைக்கும் அந்தச் சக்தியின் நிலை உண்டு. தன்னாலும் இயற்கையின் உண்மையை உணர்ந்து நடந்திட முடியும்.

தானும் ஒரு திருவள்ளுவராகவும்.. கம்பராகவும்… வால்மீகியாகவும்… வியாசகராகவும்… அந்த ரிஷிகளைப் போல ஆகலாம்…! என்ற உண்மையை உணர்ந்து ஒன்றிலிருந்து இன்றைக் கூட்டி வாழ்ந்திடுங்கள்.

வீண் விவாதத்திற்கு இடம் தராமல் கற்கும் கல்வியால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஈர்த்து
1.இந்த உலக நன்மைக்காக
2.இந்த உயிரணுக்களின் நன்மைக்காக
3.இந்த விஷமான கலியின் கடைசி நிலையை மாற்றி
4.கல்கி என்னும் புத்தொளிர் கொண்ட இயற்கைத் தேவனின் இயற்கையின் சக்தியைப் பெற்றிடுங்கள்…!

நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம்மையே நாம் அச்சக்திக்காக (இயற்கைக்கு) அடிபணிந்து வாழ்ந்திடலாம்.

முக்கியமான உபதேசம் (FREE)

ஞானகுருவின் முக்கியமான ஒலி உபதேசங்கள் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (FREE DOWNLOAD)

 

1. தாய் தந்தையே முதல் தெய்வங்கள்
https://app.box.com/s/rzvj66n47b7ynzwdr3r7axh1x0plagg0

2. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
https://app.box.com/s/knirlgevz67wv3y553rsopazhl6gv0c6

3. தியானத்தின் மூலம் ஈஸ்வரபட்டரின் காட்சி கிடைக்கும்
https://app.box.com/s/1c0o1fiftpgn2372liss73hts8jn8gyx

4. தெய்வ விளக்கம்
https://app.box.com/s/kw0loweinszdk496uhf65tgkrz0wwuh7

5. சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மைகள்
https://app.box.com/s/nyg379aerb8ukrmiiheobmmcy2b5xi5h

6. உயிரே கடவுள்
https://app.box.com/s/fz6wbxwapxz2hzsvld03ih72xyqfgqgk

7. அகஸ்தியர்
https://app.box.com/s/afbo5jio9mtc7b09058rt96tbi8j2rjj

8. பரிணாம வளர்ச்சி
https://app.box.com/s/5mla5yb98km6kfz9kyg7nlnu4c7yugyz

9. ஜாதகம், ஜோதிடம், மந்திரத்தை யந்திரத்தை நம்பலாமா
https://app.box.com/s/ifroa637fevt8k159wwk8tfyo3teyfj5

10. மாமிசம் சாப்பிடலாமா
https://app.box.com/s/fyomu3xmitzjzuq59m9p786iqye25h6r

11. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது
https://app.box.com/s/dsrhgl9ncylfmivbd8qqzdwgxr263pen

12. குருவிடம் பெற்ற அனுபவங்கள்
https://app.box.com/s/yu5sa2ij17gch5f0ddh57uqz5ihon36n

13. குரு அருள்
https://app.box.com/s/xw2iyipezy15gzgn0qjb4td0fy6r3hnq

14. ஞானகுருவின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டிய முறை
https://app.box.com/s/57t080utemcjw1kdqdhr9rvztxz7roop

15. உங்களை நீங்கள் நம்புங்கள்
https://app.box.com/s/slz27wjweb3s0cf3p10k3z3kfkirtrz4

16. சுவாச நிலையின் முக்கியத்துவம் – உண்மையான பிராணயாமம்
https://app.box.com/s/5z5keyfuu15pilsqyi2ltse6jhydn61l

17. நம் கண்களுக்குண்டான சக்தி
https://app.box.com/s/3d5vxt4go30md0rwtvogbwunx2dwugh5

18. எலும்புக்குள் உள்ள ஊன்
https://app.box.com/s/5e7dt55xazqzl51uz7o6qjplch2m6zh8

19. புருவ மத்தியின் சூட்சமம்
https://app.box.com/s/tv4bdqixr6w0quvrstm14nf02mqci5mh

20. உயிரின் துணையால் தீமைகளை வெல்லும் ஆற்றல் பெறுதல்
https://app.box.com/s/cc3f2hbreklirrtcvbwhto5xpbmdgcl9

21. தியானிக்க வேண்டிய முறை
https://app.box.com/s/f10yzhqib10d5a1faavimqj0a2vj1vi0

22. ஆத்ம சுத்தி
https://app.box.com/s/l2ciyet6kr3iwk4iwcniqdnc3is2mdx5

23. இரத்தநாளங்கள், கரு, முட்டை அடைகாத்தல் அணுவாகும் நிலை
https://app.box.com/s/vwyoy8yriw2ztx0d9d86zgqvqeibqzlt

24. தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
https://app.box.com/s/j6nq68gmv35ue23s35v1jrgs353tyx4k

25. சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றும் வழி
https://app.box.com/s/16l4c09vgcx3e19pzoc8o2vlvhb3ajby

26. வேதங்கள்
https://app.box.com/s/34uibb4lv9mniskufokayj45tg5jqhj2

27. மனிதனுடைய எண்ண வலு, விதியை வெல்லும் மதி
https://app.box.com/s/60h1dauxtr1ecpciyqigjkfjkr73w33c

28. மகாபாரதம்
https://app.box.com/s/xiq4gkosqwt03n3tugyrg69mp5sat9mu

29. இராமாயணம்
https://app.box.com/s/66nax8zauuczhxc4v30hdikh49oia7g9

30. விஷத்தின் ஆற்றல்
https://app.box.com/s/5fee5bpk19nwno36mk5xew43yy34ofa8

31. ஞானிகள்
https://app.box.com/s/528yucf8b5gwure9qv697axj3fh7g5nc

32. பழநி முருகன் சிலை
https://app.box.com/s/iwh41zzkx9f33feky0at87ocl0skbdhm

33. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
https://app.box.com/s/3grdskwlxx54ovfzfr5diup6letiaqgq

34. மெய் ஞானம்
https://app.box.com/s/qzkwhvo03pxajdb77k0x7drig6721yw8

35. துருவ நட்சத்திரம்
https://app.box.com/s/qh707tgu47cl2vigkyi10jdpj4jassra

36. பிரதோஷம்
https://app.box.com/s/3behm91s545avf9gvi6hzlr4d231yoar

37. மன அழுத்தம்… வேதனை… தீமைகள்… இவைகளைப் போக்கி நல்லதைக் காக்கும் சக்தி
https://app.box.com/s/vqsfdzt128esdfi84gwop5wsv67bkpd0

38. செய்வினையிலிருந்து விடுபடுங்கள்
https://app.box.com/s/y5wj8x4gkt9esqd6u6atv5lrwbsdpxn4

39. சாப அலைகளிலிருந்து விடுபடுங்கள்
https://app.box.com/s/ctu9hce1okbb3c0shnxwrajbv4tmsckh

40. உணர்வின் இயக்கங்கள்
https://app.box.com/s/wtrl9ucc0nxjzbcnuolrxuruns7577cv

41. நோயிலிருந்து விடுபடுங்கள்
https://app.box.com/s/dmwk9z343nljccdo0uzoryw43wwxrg07

42. இறந்த பின் நிலை என்ன
https://app.box.com/s/eds70s7jz6gxug2ixzq1r26actn7uyin

43. இன்றைய உலகின் நிலை
https://app.box.com/s/59v0fwx6e5hnma231sco85b3ofc9t67t

44. விஞ்ஞானத்தின் செயல்களும் அதனின் விளைவுகளும்
https://app.box.com/s/982sk5p7h97wzqfuzsoydsm7idmjgusg

45. கணவன் மனைவி குழந்தைகள் குடும்பத்தில் ஒற்றுமையாக மகிழ்ந்து வாழும் வழி
https://app.box.com/s/ya5deszwxluxnm02b0prc5y2ocet2ds6

46. தொழில் செய்யும் போது பரிபக்குவமாக எப்படி நடக்க வேண்டும்
https://app.box.com/s/ptzzw82zpcak4p66xh122caxxb8b3i2i

47. கர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
https://app.box.com/s/rahv6whgsaqbph63qxg9w9zqa6z2wx4t

48. சப்தரிஷி மண்டலமும் விண் செல்லும் ஆற்றலும் விண் செலுத்தும் ஆற்றலும்
https://app.box.com/s/etqwl3yns29metno8v3ihvjj23kuy9w8

49. பிறவியில்லா நிலையில்,வாழும் மகரிஷிகள் உலகம்
https://app.box.com/s/wxt0c0k7bxpxexqexwpuac04701wwcpd

50. அழியாச் சொத்தான பேரருள் பேரொளியைப் பெறும் வழி
https://app.box.com/s/76523br7jwxv6j5qow60m4rhdehwj8kj

51. மழை பெய்யச் செய்யும் ஆற்றல்
https://app.box.com/s/bvwfdvv0knk911b8do8cenypcauyc0zn

52. நம்முடைய தவம் உலகுக்கு எடுத்துக் காட்டாக வருவதாக இருக்க வேண்டும்
https://app.box.com/s/5x7e3bvygofmeqwxjmy6ecf7mas5lrm9

53. நாஸ்டர்டாமஸ்
https://app.box.com/s/vqgveaomjpu9v5lyngajt2e9qzd35og7

54. குரு பூஜை உபதேசங்கள்
https://www.youtube.com/tahileswaran?fbclid=IwAR1oOL63Wh5_4EvwtmC_FrasDp5bJLPQqS9_dDCKP_ctogB20ScsVdklJgk

[su_image_carousel source=”media: 11841,11842,11843,11844″ limit=”100″ slides_style=”photo” controls_style=”light” crop=”none” align=”center” link=”image” speed=”immediate” image_size=”full”]