வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…?

Argument

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…? 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டு தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.

அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது. இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும். அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும் தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும். தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

 

ஆண்டவனின் அன்பைப் பெறும் வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Self Realization - best

ஆண்டவனின் அன்பைப் பெறும் வழியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

1.மனித எண்ணத்தின் வேகம் என்பது
2.இந்த உலகிலுள்ள எல்லா வேகங்களுக்கும் மேல் துரிதமான வேகம் என்று
3.பல முறை சொல்லியுள்ளேன்.

நம் எண்ணத்தைப் பிறரின் எண்ணத்தில் மோதவிடும் பொழுது பிறரின் நிலையும் மாறுபட்டுச் செயல்படும் தன்மை வலுவாகிறது.

இந்த எண்ணத்தை வைத்துத்தான் உலக நிலையும்… உயிர் உதிக்கும் நிலையும்… உடலை விட்டு ஆத்மா பிரியும் நிலையும்… எல்லாமே வருகின்றன.

இந்த எண்ணத்தில் நாம் எந்த நிலையில் ஆசைப்படுகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் வேதனையும் மகிழ்ச்சியும் வருகின்றன. எண்ணத்தின் ஆசையை வளர விடுவதனால் பல வேதனையான நிலைகளை நம் வாழ்க்கை நிலையில் கண்டு வேதனைப்படுகின்றோம்.

இந்த எண்ணத்தினால் தான் எல்லா நிலைகளுமே வருகின்றன என்றேன்.
1.இந்த எண்ணத்தை வைத்தே ஒவ்வொரு ஆத்மாவும் அந்த உடலில் இருக்கும் நிலை கொண்டு
2.தன் எண்ணத்தை “ஓ..ம் ஈஸ்வரா…” என்ற நாதம் கொண்டு
3.ஒரே நிலையில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து
4.இந்த உடல் வேறு… இந்த ஆத்மா வேறு…! என்ற நிலையைக் கண் கூடாகக் கண்டிடலாம்.
(சீராகத் தியானமிருப்பவர்களால் இதை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும்)

நம் ஆத்மாவின் நிலையை நாம் போற்றிப் பாதுகாத்தால் வாழ்க்கை நிலையில் நாம் பல சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டியதில்லை. ஏனென்றால் நம்மையே நாம் உணராத நிலையில்
1.பிறரின் அன்பை நாம் வேண்டும் பொழுது
2.பிறரின் அன்புக்கும் நம் ஆன்மாவை நாம் அடிமையாக்கிக் கொள்கிறோம்.
3.அன்புக்காக ஏங்கும் நிலையும் ஆசை நிலை தான்.

ஆண்டவனையே ஆண்டவனின் அன்பை வேண்டி வேண்டுகின்றோம். அந்த ஆண்டவன் நமக்கு எப்படி அன்பைப் பொழிவான்…?

நம்முள் அதிக ஆசையை வளரவிட்டு அதனால் வரும் கஷ்டங்களை நம் உடலும் நம் எண்ணமும் படும் வேதனையை
1.நம்முள்ளேயே சங்கடத்தை ஏற்றுக் கொள்ளாமல்
2.நம்மையே நாம் வெறுக்காமல்
3.நம்முள் இருக்கும் தவறை நாம் மாற்றிக் கொண்டு
4.நம்மையே நாம் எண்ணிப் பார்த்து
5.நம் வேதனையும் நம் ஆசைகளும் நம்முள்ளேயே தான் வருகின்றன என்ற உண்மையைப் புரிந்து
6.நம்மையே நாம் அமைதிப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் பொழுது
7.நம்முள் இருக்கும் அவ்வாத்மா அமைதியுற்று அந்த ஆண்டவனின் சக்தியே
8.நமக்கு அன்பு கொண்டதாக வந்திடும் நிலையை ஏற்றுத் தருகிறது.

நம் மன நிலையில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு நாமே தான் அந்த நிலையை அனுபவிக்க முடியும். பிறரை எந்த நிலை கொண்டும் எண்ணிப் பார்த்திடலாகாது.

நம்மால் வரும் கஷ்ட நஷ்டங்களுக்கு அந்த ஆண்டவனா பொறுப்பாளி…? நம்மில் இருக்கும் ஆண்டவனைக் கண்டிட நம்மை நாமே நம் சுவாசத்திலும் எண்ணத்திலும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது தான் அந்த ஆண்டவனின் ஜெபத்திற்கும்
2.ஆண்டவனின் ஆசியைப் பெறுவதற்கும் உகந்தவர்களாகின்றோம்.

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

Image

Lord velaudham

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

 

தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்…? என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்…
1.அட.. ஆமாம்… என்ன வந்தது…?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே…! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது…? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி… அது இப்படி…! அவன் இப்படியே தவறு செய்கிறான்…!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்…. உடைந்து விடுகிறது…!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது…! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ…? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன…? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா…! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது…!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா…! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி… நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா…? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்…!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்…!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள் அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்த உயிர் (உயிராத்மா) எங்கே செல்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Journey-OF Soul

உடலை விட்டுப் பிரிந்த உயிர் (உயிராத்மா) எங்கே செல்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூவுலகில் ஜீவ உடலுடன் நம் ஆத்மா (உயிர்)
1.எந்த நிலை கொண்டு சுவாசம் எடுத்ததோ
2.எந்த நிலை கொண்டெல்லாம் சப்த அலைகள் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளதோ (உடலுடன் உள்ள பொழுது)
3.அதே நிலை கொண்டு தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின்னும்
4.உயிராத்மாவைச் சுற்றிச் சப்த அலைகள் சுற்றிக் கொண்டே உள்ளன.

ஏனென்றால் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்ற பிற்பாடு எந்த நிலையில் ஆன்மா சுற்றிக் கொண்டுள்ளது…?
1.நாம் எந்த நிலை அடைகிறோம்…?
2.எங்கே எப்படி இருப்போம்..? என்ற எண்ணம் எல்லோருக்குமே உள்ளது.

இதைப் பற்றி பலரும் பல ரூபங்களிலும் பல விதக் கதைகளிலும் நம் முன்னோர் வாயிலாகக் கேட்கப் பெறுகின்றோம். அறிந்த உண்மையை அறிந்த நிலையில் செப்புவதற்கு இன்று யாருமில்லை. அன்றைய பெரியோர்கள் தான் அறிந்து செப்பினார்கள்.

நம் உடலை விட்டுச் செல்லும் ஆத்மாவிற்குச் சுவாச நிலை உடலுடன் இருந்த பொழுது எந்த நிலை கொண்டிருந்ததோ அந்த நிலையில் தான் சுற்றிக் கொண்டே இருக்கும்.

பூமியில் சுற்றிக் கொண்டேயிருந்து மீண்டும் இங்கேயே இன்னொரு ஜீவ உடல் பெற்று ஜென்மம் எடுக்கிறதா…? அல்லது இந்த நிலையிலிருந்து பிற மண்டலங்களுக்குச் சென்று ஜென்மம் எடுப்பதில்லையா…? என்ற எண்ணம் உள்ளது.

அச்சக்தியின் அருள் பெற்ற அவ்வுயிரணு உருவம் பெற்ற நிலையில் எந்த மண்டலத்தில் சுவாச நிலை கொண்டு ஜீவன் பெற்று உயிர் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்டே தான் அவ்வுயிரணுவின் சுவாச நிலைகள் உள்ளது.

1.உடலுடன் அஜ்ஜீவாத்மா இருக்கும் நிலையும்
2.உடலை விட்டு ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையும்
3.பிறகு ஒவ்வொரு ஜென்மங்கள் எடுத்தும்
4.ஒவ்வொரு நிலை கொண்டும் எத்தனை ஜென்மங்கள் எடுத்து அவ்வாத்மா வாழ்ந்தாலும்
5.அதன் தாய் சக்தியான எந்தச் சக்தி நிலை பெற்று அவ்வுயிரணுவிற்குச் சுவாச நிலை கிடைத்ததுவோ அதே நிலை பெற்றுத்தான்
6.மீண்டும் மீண்டும் எந்த மண்டலத்தில் தோன்றியதோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்க முடியும் அவ்வுயிரணு என்னும் ஆத்மா எல்லாமே..!

அந்த ஆத்மாவின் சுவாசத்தால் எப்பூமியில் அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் தந்ததோ அந்த நிலை கொண்டு தான் அவ்வுயிரணு எத்தனை காலமானாலும் சுற்றிச் சுற்றிப் பிறவி எடுத்துக் கொண்டே வாழ்ந்திட முடியும்.

உடலுடன் இருக்கும் பொழுது தான் உயிராத்மா தன் வலுவைக் கூட்ட முடியும். உடலை விட்டுப் பிரிந்தால் உயிராத்மாவில் என்ன மணம் அதிகமாக உள்ளதோ அந்த மணங்களின் ஈர்ப்பிலே தான் சுழன்று கொண்டிருக்க முடியும். வளர்ச்சி இருக்காது.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு மீண்டும் ஒரு உடலுக்குள் செல்லாது
1.“பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…!” என்று முயற்சி எடுத்து
2.அதன் வழி விண்ணுலக ஆற்றலை எடுத்துத் தன் ஆத்மாவுக்கு ஊட்டம் தந்து
3.விண்ணுலகில் அழியாது வாழ்பவர்களே சப்தரிஷிகள்.

அந்த நிலையை எய்திடத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

Mathaji Kali

அகோரிகளுக்கு முன்னாடி “என் தாய் காளியின் காட்சி…!”

 

“ஆனந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள்…!” என்று இருக்கின்றார்கள். அதில் சேர்ந்தால் தவறு ஏதாவது செய்தால் கொலை செய்து விடுகிறார்கள். இப்படிக் கடவுளின் பேரைச் சொல்லிக் கொண்டு தன் மதம் என்ற நிலையில் இது ஒரு மார்க்கம் என்று தவறான வழியில் செயல்படுகிறார்கள்.

நான் (ஞானகுரு) காசிக்குப் போகும் போது அந்த அகோரிகள் மனிதப் பிணத்தை சாப்பிடுகிறார்கள் என்று சொன்னேன். யாருமே இதை நம்பவில்லை…!

அப்புறம் ரொம்ப நாள் கழித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் வந்த பின் நம்பினார்கள். அதில் ஒரு மாநில கவர்னரின் மகனும் இருந்தான். நர மாமிசத்தைச் சாப்பிடுகிறார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு வந்து அறுத்துப் பச்சையாகவே சாப்பிடுகிறார்கள் என்று போட்டிருந்தார்கள்.

ஏனென்றால் நான் அங்கே நடப்பதை நேரடியாகப் கண்ணில் பார்த்தேன். அதைத்தான் சொன்னேன்.
1.இப்படி எல்லாம் உலகத்தில் இருக்குமா…!
2.அது எப்படிங்க அறுத்துச் சாப்பிட அரசு (GOVERNMENT) அனுமதிக்கும் என்றார்கள்…?

ஏனென்றால் என்னையே (ஞனாகுரு) அந்த அகோரிகள் கொன்று சாப்பிட வந்தார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி காசி கங்கைக் கரையில் நாற்பத்தெட்டு நாள் தியானம் இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஓ…ஹோ… ஓ…ஹூ…! ஓ…ஹோ…ஹோ…ஹோ…! மாதாஜி…! என்று சப்தம் போட்டுக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்.

நான் இங்கே கங்கை மணல் திட்டில் வருவதற்கு முன் நாதுராம் என்ற ஒருவனிடம் பணத்தையும் கொடுத்து விலாசத்தையும் கொடுத்திருந்தேன். ஒரு டெலஸ்கோப்பையும் கொடுத்துவிட்டு இங்கே ஏதாவது வித்தியாசமாக ஆனால் நேராக மங்களூருக்குத் தந்தி கொடுத்துவிடு…! என்று சொல்லி இருந்தேன்.

நான் சொன்ன மாதிரி அவன் அங்கே கங்கைக் கரையிலிருந்து இங்கே என்ன நடக்கிறது…? என்பதை டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

இங்கே அகோரிகள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். திடீரென்று அவர்கள் முன்னாடி காளி ரூபம் கிடைத்தவுடனே “மாதாஜி… மாப் கரோஜி…! மாதாஜி… மாப் கரோஜி…! என்று தாளத்தை மாற்றி எல்லாம் ரவுண்டு அடித்தார்கள்.

1.“என் தாய் காளியை…
2.அதாவது கல்கத்தா காளியை… அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்…!”
3.அந்த ரூபத்தில் வந்தவுடனே அப்படியே அரண்டு போய் “மாதாஜி மாப் கரோஜி…!” என்றார்கள்.

அப்புறம் அந்த நேரத்தில் நாதுராம் படகை அனுப்பி வைத்தான். நான் அங்கிருந்து திரும்ப வந்துவிட்டேன்.

அதே சமயத்தில் காசியில் பண்டாக்கள் என்று இருப்பார்கள். ஒவ்வொரு மடத்திற்கும் ஐம்பது பேர் நூறு பேர் என்று இருப்பார்கள். ஏதாவது என்றால் உடனே சண்டைக்குப் போவார்கள். கையில் துப்பாக்கி கத்தி எல்லாமே வைத்திருப்பார்கள். இப்படி இந்தப் போக்கிரிகள் வாழக்கூடிய இடம் காசி.

விவரம் தெரியாமல் அங்கே படகில் போனால் போதும். கங்கையிலே குதிப்பார்கள். உள்ளே சென்று போகின்ற படகை அப்படியே கவிழ்த்தி விடுவார்கள்.

தண்ணீருக்குள் போனவுடனே அப்படியே போட்டிருக்கும் நகை எல்லாம் அத்து எடுத்துக் கொண்டு போய்விடுவான். காசியில் இப்படி எல்லாம் காரியங்கள் நடக்கிறது. அங்கே தான் புனித நீராடுகிறார்கள்.

ஏனென்றால் இந்த ரகசியம் எல்லாம் அறிவதற்காக வேண்டித்தான் 48 நாட்கள் குருநாதர் என்னை (ஞானகுரு) அங்கே இருக்கச் சொன்னார்.
1.இங்கே என்ன நடக்கிறது…?
2.காசி விஸ்வநாதர் என்ன எல்லாம் செய்கிறார்…?
3.என்னென்ன பாவத்தை எல்லாம் போக்குகிறான் பார்…! என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் கங்கையிலே “நீர் சமாதி…!” என்று வைப்பார்கள். அங்கே இருக்கும் போக்கிரிகள் அவர்களுக்கு ஆகாதவர்களைக் கொன்று இங்கே தண்ணீரில் தள்ளி விட்டுப் போய்விடுவார்கள். தண்ணீரில் போய்விட்டது என்றால் யார் அடித்தார்கள்…? எவர் அடித்தார்கள்…? என்ற கேள்வி இல்லை.

காலையில் கங்கைக் கரையில் பார்த்தோம் என்றால் தலை கை கால் முண்டமெல்லாம் நாய் இழுத்துக் கொண்டு வந்து தின்று கொண்டிருக்கும். காசியில் அங்கே என்னென்ன நிலைகள் நடக்கிறது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு வந்தேன்.

அதே மாதிரி “அரிச்சந்திரா காட்..!” (இடுகாடு) என்று உண்டு. அங்கே வைத்து இறந்தவர்களை எரிப்பார்கள். பிரேதம் வேகும் பொழுதே இந்த அகோரிகள் வந்து விடுவார்கள்.

அது நல்ல சரீரமாக இருந்தது என்றால் உடனே “நிறுத்து…!” என்பார்கள். சரீரம் வெந்திருந்தது என்றால் அதற்குள் இருக்கும் ஈரலை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அமாவாசை அன்றைக்கு இந்த வேடிக்கை எல்லாம் நடக்கும்.

நல்ல பிரேதமாக இருந்தால் அகோரிகள் பார்த்தவுடனே சலோ…! சலோ…! என்பான். உடனே விலகிக் கொள்வார்கள். விலகவில்லை என்றால் முழித்துப் பார்ப்பான். சாபமிடுவான்…! இதற்குப் பயந்தே விட்டு விலகிவிடுவார்கள். அந்தக் காட்டில் எல்லாம் அவர்களுடைய இராஜாங்கம் தான். அவர்களிடம் கப்பம் கட்டிவிட்டுத்தான் ஏரிக்க வேண்டும்.

அன்றைக்கு அரிச்சந்திரன் எப்படி இருந்தானோ அதே மாதிரித்தான் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பிரேதத்தை எடுத்துக் கொண்டு போய் அதனின் நெற்றியில் சூடத்தைப் பொருத்தி வைத்து ஜெபத்தைப் பண்ணுவான்.

இந்தச் சரீரம் நகரும். நகர ஆரம்பித்தவுடனே அறுத்து அப்படியே பச்சையாகவே தின்பார்கள். அதாவது ஆண்டவனுக்காக வேண்டி அர்ப்பணிக்கிறோம் என்று செய்கிறார்கள்.

புதிதாக யாராவது போனாலும் இதை எல்லாம் பார்த்துப் பயந்தான் என்றால் அவனையும் கொன்று சாப்பிட்டு விடுவார்கள். ஏனென்றால் ஆண்டவனை அடைய வந்தான், அவனுக்காக வேண்டி உடலைக் கொடுத்தாலும் இந்த உயிர் ஆண்டவனிடம் போய்ச் சேருகிறது அதனால் பயப்படாமல் இதைச் செய்…! என்று இப்படி ஒரு தத்துவத்தை வைத்திருக்கிறார்கள்.

ஆண்டவனை அடைய வேண்டும் என்றால் அவன் உடலிலிருக்கக் கூடிய எதையும் கழிக்காமல் எல்லாவற்றையும் சாப்பிடுகின்றார்கள், ஆக ஆண்டவனுடன் ஐக்கியமாகின்றான் என்று இப்படி ஒரு தத்துவம்.

நான் (ஞானகுரு) இதை எல்லாம் பார்த்துவிட்டு வந்து இங்கே சொன்னால் யாருமே நம்பவில்லை. சாமி “டூப்” விடுகிறார்… சரியான “கப்சா” விடுகிறார்…! என்றே சொன்னார்கள்.

அப்புறம் பல வருடம் கழித்துப் பத்திரிக்கையில் வந்ததும் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து “சாமி…! நீங்கள் ஏற்கனவே சொன்னீர்கள்.. அது நிஜமாகவே நடக்கிறது….! அன்றைக்கு டூப் விடுகிறீர்கள் என்று சொன்னேன்… என்னை மன்னித்து விடுங்கள்…! என்று சொன்னார்.

ஏனென்றால் இது எல்லாம் உலகில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.
1.உலகம் எப்படி இருக்கிறது…?
2.மதங்கள் எப்படி இயக்குகின்றது…? என்று இதெல்லாம்
3.முழுமையாகப் பார்த்துவிட்டு வந்து தான் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்… சும்மா இல்லை…!

மனிதன் மதத்தின் நிலைகள் கொண்டு செல்லும் பொழுது சாகாக்கலையாகிறது. இறந்தால் இந்த உடலில் எதைச் செய்தோமோ மீண்டும் அந்தக் கலையாக மீண்டும் உடலாக உருவாகும்.

ஆனால் மகரிஷிகள் அனைவருமே வேகா நிலை என்ற அழியா ஒளியின் சரீரம் பெற்றவர்கள். நாம் அதை அடைய வேண்டும். அந்தப் பக்குவம் வேண்டும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் சில குறைகளைக் காண நேரினும் அதை அகற்றும் இந்த ஞாபக சக்தியும் அந்த ஞானமும் பெற வேண்டும் என்பதற்கு தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.
1.உங்கள் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரும் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசித்தது.

ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவதற்கு நம் உடலிலுள்ள ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் முகப்புகளிலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் செருகேற்றிக் கொள்வோம்.

அந்த மகரிஷிகள் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் நம்மைப் பற்றாது ஆத்ம சுத்தி என்ற ஆயுத்தைப் பயன்படுத்தி எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

நடந்தவைகளை விட்டுவிட்டு இனி நடக்கப்போவதை நல்லதாக எப்படி மாற்ற வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

End of the world

நடந்தவைகளை விட்டுவிட்டு இனி நடக்கப்போவதை நல்லதாக எப்படி மாற்ற வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

1.ஆண்டவனை வணங்கும் முறையையே
2.பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து
3.பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி
4.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் “புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்…!”

ஆனால் ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். ஏனென்றால் எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் நிலையே இன்று தொடர்கிறது.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

1.பத்திரிக்கைகளிலும் சினிமாவிலும் டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில்
2.ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து
3.மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள்.

ஆக மொத்தம் நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள். இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள்.

1.கலியை ஆண்டவன் வந்து கல்கியாக்குவதில்லை.
2.இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…?
3.இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.

ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை. மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது. ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது.

இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்
1.நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் பெரும் நாடகம்.
2.நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம்.

இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா. அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் பார்த்திடலாம்.

ஆண்டவன் எப்படி எங்கே இருக்கிறார்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது – 2

Realization of God

ஆண்டவன் எப்படி எங்கே இருக்கிறார் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது – 2

தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை…! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி ஆண்டவனின் சக்தி என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?

“கடவுளை அடைய வேண்டும்…!” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு

Kalki of our aoul

“கடவுளை அடைய வேண்டும்…!” என்ற நிலையில் மதங்கள் கலாச்சாரத்தைப் பற்றி டெல்லியில் நடந்த உலக மாநாடு

 

ஒரு சமயம் (40 வருடம் முன்பு) டெல்லியில் மதங்கள் கலாச்சாரங்களைப் பற்றி உலகெங்கிலும் உள்ளவர்களை வரச் சொல்லியிருந்தார்கள். நானும் (ஞானகுரு) போயிருந்தேன்.

கடவுளின் தன்மை நாம் அடைய வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலிருந்து ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எல்லாம் தொடங்கியதும் ரஜ்னீஷ் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்தோம் என்றால் அவர்கள் பாட்டுக்கு ஆட ஆரம்பிக்கின்றார்கள், மேலே போட்டிருக்கிற துணியெல்லாம் கீழே விழுகிறது.

இது பக்தி மார்க்கங்களில் தன்னை அறியாது சொர்க்கம் போகும் மார்க்கங்கள் என்று எல்லோருக்கும் முன்னாடி இப்படிச் செய்கிறார்கள்.

ஒருவர் என்ன செய்தார் என்றால் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கிறார். குண்டலினி யோகா என்று சொல்லி மூச்சை நிறுத்தி அதாவது உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு
1.நான் எத்தனை நாள் என்றாலும் பசி இல்லாமல் இருப்பேன்.
2.காற்றே இல்லாத இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் பிராணனை எடுத்து நான் உருவாக்கிக் கொள்வேன்.
3.மூன்று நாள் அடக்கி வைத்து இருக்கின்றான்.

அந்தச் சமயம் அங்கே குளிர் காலம். மார்கழியில் நல்ல குளிர் சும்மா வெளியிலே போனாலே கிடு…கிடு… என்று நடுங்கும். ஒரு சாமியார் சட்டை போடாமல் அங்கே உட்கார்ந்தார். துண்டு ஒன்றைப் போர்த்தியிருக்கின்றார்.

ஆனால் நான் அந்தத் துண்டு கூடப் போர்த்தவில்லை. சட்டை இல்லாமல் அப்படியே அங்கே உட்கார்ந்தேன். ஏனென்றால் குருநாதர் எம்மை ஏற்கனவே இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அல்லவா…!

கடைசியில் எல்லோருக்கும் ஐந்து நிமிடம் தான் பேச விட்டார்கள். சமாதி நிலை போன்றவர்களுக்கு மட்டும் ஒரு அரை மணி நேரம் கொடுத்தார்கள்.

ரஜ்னீஷ் ஆள்கள் எல்லாம் டேப் ரிகார்டு புஸ்தகம் எல்லாம் வைத்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து நிறையப் பேர் வந்து இருக்கிறார்கள். அது வியாபாரம் நிறைய ஆகிறது.

பெரிய பெரிய ஆபிசராக இருக்கின்றார்கள். பார்த்தோம் என்றால் இது ஒரு கலை என்று ஆடுகிறார்கள். துணி மேலே இருக்கிறதில்லை. ஏனென்றால்
1.தன்னை மறந்து எவன் இருக்கிறானோ
2.அவன் ஆண்டவனை அடைவான் என்று இப்படி ஒரு நம்பிக்கை
3.ஆடுகிறார்கள் என்றால் அந்த உணர்வின் தொடர் கொண்ட ஆவிகள் தொடரும்.
4.ஆக எதை அடையப் போகிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை.

என்னைப் பேசச் சொன்னார்கள். அங்கே செகரட்டரியில் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்துப் பேசச் சொன்னார்கள்.

குருநாதர் காட்டிய வழியில் அன்னை தந்தையிலிருந்து… கடவுள்…! என்ற நிலைகள் கொண்டு வந்து அந்த மெய் உணர்வுகளைக் கொஞ்சம் சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரும் மெய் மறந்து போய் விட்டார்கள்.

நேரம் ஆகி விட்டது….! பேச்சை நிறுத்தலாமா…? என்று கேட்டேன். இல்லை இல்லை…! நீங்கள் பேசலாம் என்று என்னை விட்டுவிட்டார்கள்.

எனக்கு அடுத்துப் பேச வந்தவருக்கு என்னாகிப் போனது..? அவர் அந்த நேரத்திற்கு வந்து பேச வேண்டும் அல்லவா…! என்னைப் பேசச் சொன்னதும் அவரைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. எல்லாக் கூட்டமும் என்னிடம் வந்துவிட்டது.

இஸ்ரேலில் இருந்து யூதர்கள் கூட அதில் வந்திருந்தார்கள். மற்ற நாட்டிலிருந்தும் இமயமலையில் இருக்கக்கூடியவர்களும் ஜைன மதம் புத்த மதம் என்ற் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே வந்து இருந்தார்கள்.

அந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் உயிரின் இயக்கங்களையும் பேச ஆரம்பித்ததும் ஐந்து நிமிடம் பத்து நிமிடம் ஆனது. பத்து நிமிடம் அரை மணி நேரம் ஆகிப் போனது.

அந்தக் கூட்டம் என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். அப்புறம் ஒரு வழியாக விட்ட பின் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுத்தேன். ஆனால் நான் (ஞானகுரு) ஹிந்தியில அரையும் குறையுமாக இருந்ததால் அவர்கள் கேட்பதற்கு முழு விளக்கம் கொடுக்க முடியவில்லை.

அப்பறம் அங்கே இரண்டு நாள் இருந்து இன்னொருவர் உதவியுடன் ஹிந்தியிலே புத்தகத்தை அடித்துக் கொடுத்து விட்டு வந்தேன். ஏனென்றால்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை
2.தானும் அறிந்து வளர்க்க வேண்டும் என்ற நிலையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்.

ஆனால் இதைச் சரியான நிலையில் அறியாதபடி “கல்கி வந்து விட்டார்…!” என்கிறார்கள். கல்கி யார்…? என்றே தெரியாதபடி. கல்கி அவதரித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்..!

எங்கே வந்தார் கல்கி…?

1.நம் உயிர் கல்கி ஆகப்போகும் போது தீமையை வென்று அங்கே விண்ணுலகம் செல்வது தான் அது
2.மண்ணுலகில் வந்த தீமைகளை வீழ்த்திவிட்டு தீமையற்ற உலகை அடைவது தான் கல்கி…!
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிவிட்டால் அது தான் கல்கி..!

குருநாதர் காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் பொழுது நடந்த நிகழ்ச்சிகளை அனுபவமாக இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

புறக் கண்… அகக் கண்… ஞானக் கண்… சுவாசக் கண்… உயிர்க் கண்… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Breathing third eye

புறக் கண்… அகக் கண்… ஞானக் கண்… சுவாசக் கண்… உயிர்க் கண்… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

1.நாம் எண்ணும் பொழுது தான்… சுவாசத்தை ஈர்த்து
2.நம் உடல் இயங்குகிறது என்று எண்ணுகிறோம்.
3.ஒருவரை நாம் பார்க்கும் பொழுது – ஒரு பொருளையோ ஒரு மனிதரையோ எதுவாக இருந்தாலும்
4.நம் பார்வை பட்டுத்தான் நம் எண்ணத்திற்கு வருவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நம் பார்வைக்கு (கண்களுக்கு) ஒளியே எங்கிருந்து கிடைக்கின்றது…?

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு முதலிலேயே அச்சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் பொழுதுதான் நம் கண்களுக்கே ஒளி வருகிறது.
1.நம் கண்ணிற்கு “ஒளி”
2.நாம் எடுத்திடும் சுவாசத்திலிருந்து தான் கிடைக்கிறது.
3.நம் உடலில் உள்ள எல்லா அவயங்களுமே இந்தச் சுவாச நிலை கொண்டே தான் இயங்குகிறது.
4.அந்தச் சுவாசத்தை ஈர்த்து நாம் இழுக்கும் பொழுதே நம் எண்ணம் நம் அவயம் யாவும் செயல்படுகிறது.

நாம் வாழ்ந்த நாட்களில் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்ட எல்லா நிலைகளும் நம்மைச் சுற்றி அப்படியே பதிந்துள்ளன. நாம் சுவாச நிலையில் பார்த்த நிலையும் பல நாட்களுக்குப் பிறகு நம் எண்ணத்தில் வருகிறதல்லவா…!

அது எப்படி வருகிறது…?

நாம் பேசிய ஒலி அலைகள் மட்டும் தான் நம்மைச் சுற்றுகிறது என்பதல்ல. நாம் எடுத்திட்ட ஒவ்வொரு சுவாச நிலையும் நம்மைச் சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

1.நாம் விழித்துள்ள நிலையில் எடுத்த சுவாச நிலைகளும்
2.உறக்கத்தில் எடுத்த சுவாச நிலைகளும் நம்மைச் சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அச்சுவாச நிலை ஈர்த்துத் தான் பார்க்க முடிகிறது. அதைப் பார்ப்பதற்கு முதலிலேயே நம் எண்ண நரம்பில் அச்சுவாச நிலை தாக்கிய பிறகு தான் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

நம் விழியில் அச்சுவாச நிலை பட்ட பிறகுதான் அவ் விழியே பார்க்கும் தன்மை பெறுகிறது.
1.ஞானக் கண்ணில் பார்க்கின்றார்கள்…
2.அகக் கண்ணில் பார்க்கின்றார்கள்
3.புறக் கண்ணில் பார்க்கின்றார்கள் என்கின்றார்கள்.
4.அவ்வகக்கண்ணும் புறக் கண்ணும் ஞானக் கண்ணும் இச்சுவாசக்கண் ஒருநிலைப்படும் பொழுது தான்
5.செயற்கரிய கண்ணாகச் செயல்படுகிறது.

நம் சுவாசக் கண்ணை எந்த நிலை கொண்டு செயல்படுத்துகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே…!” ஒரு நிலைப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் இரண்டு கண்களை வைத்து அந்தக் கண்களிலிருந்து வீசிடும் ஒளியை வைத்து அவன் குண நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

மன நிலையில் மாறுபட்டவர்கள் நிலையையும் அக்கண்ணிலிருந்தே கண்டிடலாம். ஒரு மனிதனின் குணத்தையும் அவன் நிலையையும் அவன் கண்ணிலிருந்தே அறிந்திட முடியும். ஒவ்வொரு மனிதனின் குணமும் அவன் எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் அமைகிறது.

அழகான இயற்கை நிலை கொண்ட சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நமக்குப் பிடிக்காத நிலை கொண்டு ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நம் கண்ணின் பார்வைக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் நம் உயிரணுவிற்கும் பல மாற்றங்கள் விளைவிக்கின்றன.

நாம் ஒவ்வொரு நிலை கொண்டு எடுத்திடும் சுவாச நிலையைப் பொறுத்துத்தான் நம் உடல் நிலை செயல்படுகிறது. நம் உடல் நிலை எந்த நிலை கொண்டு செயல்படுகிறதோ அந்த நிலை எல்லாம் நம் உயிர் அணுவிற்குத் தாக்கப்படுகிறது.

அதிகக் கோபமும்… அதிக மனச் சஞ்சலமும்… அதிகத் துவேஷமும்… உள்ள மனிதர்களுக்கு அவர்களின் உயிரணு சஞ்சல நிலைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நிலை கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உயிரணு எல்லா நிலையும் அறிந்து தான் செயல்பட்டு வருகிறது.

நம் உடல் மனம் இவைகளைத்தான் நாம் எண்ணுகின்றோம். நம்மை ஆட்டி வைக்கும் அவ்வுயிரணுவைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சுவாச நிலை கொண்டு தான் எல்லா உயிரினங்களுமே உயிர் வாழ்கின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந்ததுவே. ஒவ்வொரு உயிரணுவும் எப்படி எப்படி உயிர் பெறுகிறது என்பதனைத்தான் பாட நிலையில் விளக்கியுள்ளோம்.

1.சுவாச நிலையை நாம் எந்த நிலை கொண்டு ஈர்க்கிறோம் என்பது தான்
2.இந்தப் பாட நிலையின் மையக் கருத்தாகும்.

ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

va;i ugriva

ஞானிகள் கொடுத்துள்ள காவியங்களில் உள்ள மூலக் கருத்துக்களைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட வாலி என்ன செய்கிறான்…?

நம்முடைய சகஜ வாழ்க்கையில் நாம் நோயாளியைப் பார்க்கிறோம்… கோபப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்… வேதனைப்படுகிறவர்களைப் பார்க்கிறோம்…!

ஏனென்றால் அந்த உணர்வுகள் அவர்களிடமிருந்து வெளி வரப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்தந்தச் சுவைக்கொப்ப சீதா லட்சுமியாக மாறுகிறது.

1.சீதா லட்சுமியாகச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
2.அந்த வேதனைப்படுவோரின் உணர்வலைகளை நாம் நுகர்ந்தறிந்தால் சீதா ராமன்.
3.அதாவது அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ
4.அந்த வேதனைப்படும் எண்ணங்களை நமக்குள்ளும் உருவாக்குகின்றது.

ஆனால் வேதனைப்படும் எண்ணங்கள் வரப்போகும் போது இது வாலியாகி விடுகின்றது. நம் எண்ணங்கள் சோர்வடைகின்றது. ஏனென்றால் வாலி எவரைப் பார்த்தாலும் அவன் வலிமையைச் சரி பகுதி பெற்று விடுவான்.

உயர்ந்த குணம் கொண்டு வேதனைப்படுவோர்களைப் பார்க்கின்றீர்கள். அதை நுகர்ந்தபின் சீதாராமா… அந்த எண்ணங்கள் என்ன செய்யும்…? வாலியாகி விடும். உங்கள் வலு இழக்கப்படுகின்றது.

அப்போது இதை எப்படி மாற்ற வேண்டும்…?

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகக் கவர்ந்து வரும் பொழுது அது “சுக்ரீவன்…”

இராமன் என்ன செய்கின்றான்…? சுக்ரீவன் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவனின் துணை என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்கிற போது
3.விஷத்தின் தன்மையை ஒடுக்கிய அந்த சுக்ரீவன் துணை கொண்டு அடக்குகின்றான்.
4.ஆனால் வாலியின் சகோதரன் தான் சுக்ரீவன். இவன் இளையவன். அவன் மூத்தவன்.

புழுவிலிருந்து விஷத்தின் வலு கொண்டு தான் பரிணாம வளர்ச்சியில் நாம் வளர்ந்தோம். மனிதனான பின் இந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கும் மார்க்கங்களைத் தான் தெளிவாகக் காவியங்களாகக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

இராமயாணம் எது…? என்றாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இராமன் கடவுள் என்றால் நம் எண்ணங்கள் நமக்குள் கடவுளாகின்றது.
1.எதன் உணர்வு நமக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறதோ
2.அதுவே கடவுளாக வந்து இயக்குகின்றது.

ஆனால் இராமன் தனித்து ஒரு கடவுள் இல்லை. நம்முடைய எண்ணங்கள் தான் கடவுள் என்ற நிலைகளை வான்மீகி அன்று சொன்னார். உள் நின்று அது இயக்குகின்றது.

நம் எண்ணத்தின் நிலைகளை ஈசனாக இருந்து உருவாக்குவது நம் உயிரே…! அந்த உணர்வின் எண்ணங்கள் வரப்போகும் போது உள் நின்று அதனின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

அதனின் குணத்தைச் “சக்தி…” என்றும் உணர்வின் தன்மை உறைவதை உடல் “சிவம்…” என்றும் சிவத்திற்குள் உள் நின்றே நம்மை இயக்குகிறான் என்றும் மீண்டும் எண்ணப்படும் போது அதன் வழி கொண்டு “குருவாக…” நம்மை இயக்குகின்றான் என்ற நிலையை இவ்வளவு தெளிவாக நம் காவியங்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

கொஞ்சமாவது நாம் அதைச் சிந்திக்கிறோமா….?

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் குறைகளைக் கண்டாலோ கோபப்படுவோரைக் கண்டாலோ வேதனைப்படுவோரைக் கண்டாலோ “ஈஸ்வரா…!” என்று உயிரான ஈசனிடம் முதலில் எண்ணத்தைச் செலுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று
1.நுகர்ந்த தீமைகளை வலுவாக்காதபடி
2.அருள் உணர்வுகளை வலுவாக்குங்கள்.