காந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…!” என்று எதைச் சொன்னார்…?

Mystic meditation

காந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…!” என்று எதைச் சொன்னார்…?

 

ஒரு சமயம் காந்திஜியும் புலாபாய் தேசாயும் மற்ற நண்பர்கள் எல்லோரும் லண்டன் வட்ட மேஜை மகாநாடுக்குப் போய்விட்டு வரும் சமயம் கப்பலில் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று பரிசோதிப்பதற்காக டெலஸ்கோப் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.

உயர்ந்த சக்தி வாய்ந்த கண்ணாடி பொருத்தப்பட்ட அந்தக் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்களை எல்லாம் பார்க்க முடியும்.

அதாவது பல நூறு அடிகளுக்கு அடியில் நடக்கும் அதிசயங்களையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் வாய்ந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப் அது. அதை வைத்துப் பார்க்கப்படும் போது கடலுக்குள் நடக்கும் அதிசயங்கள் எல்லாம் தெரிகின்றது.

பார்த்தவுடனே… ஆஹா…! பெரிய மீன் வருகின்றது.. சிறிய மீன் வருகின்றது… நத்தைகள் ஓடுகின்றது… அதிசயமான நிறங்களில் பல பல மீன்கள் ஓடுகின்றது…! என்றெல்லாம் சொல்லச் சொல்ல
1.அருகிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் “எங்கே பார்க்கலாம்…! என்று
2.அந்த டெலஸ்கோப்பை ஒருவருக்கு ஒருவர் பறிக்கும் நிலை வருகின்றது.
3.ஒருவர் பார்த்து முடிக்கும் முன்னால் அடுத்தவர் பறிக்கின்றார்.
4.இப்படி மாறி மாறிச் செயல்படுத்தும் பொழுது அங்கே பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் வருகின்றது.

அப்போது தான் காந்திஜி சிந்திக்கின்றார்.

நம்முடைய ஆர்வ உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…? நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்…? எதை அறிய விரும்பினோம்….? பகைமை உணர்வுகளை அகற்றிச் சகோதர உணர்வை வளர்க்கும் தன்மையா அறிந்துணர்ந்து செயல்படுவதற்காக வந்தோம்.

ஆனால் டெலஸ்கோப்பை வைத்து பொருளைக் காணும் ஆசையில் நான்கு பேருமே ஒன்றாக எண்ணும் போது அதிலே பகைமைகள் எவ்வாறு உருவாகின்றது…?

பார்க்க வேண்டும்… என்ற அவசர உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரும் பொழுது அடுத்தவர் பறிக்கும் நிலையில் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் “இப்படிப் பறிக்கின்றார் பார்…!” என்ற வெறுப்புகள் அவருக்குள் எப்படித் தோன்றுகின்றது.

அந்த வெறுப்பும்… வெறுப்பால் பகைமையும்… எப்படித் தோன்றுகிறது…? என்ற நிலையை அங்கே அப்பொழுது விளக்க உரையாகக் காந்திஜி கொடுக்கின்றார்.

உலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் வந்தாலும் இதைப் போன்ற நிலைகள் மீண்டும் மனிதனுக்குள் வந்து அந்த உணர்வின் இயக்கமாக “எதிரியாக எப்படி மாற்றுகின்றது…?” என்று உணர்த்துகின்றார்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு பகைமை உணர்வு உருவாக்கும்படியாக அறிவிலிகளாக நம்மை மாற்றுகின்றார்கள். அறிவு இழந்தவர்களாக மாற்றுகின்றார்கள். நம்முடைய ஒற்றுமையின் தன்மையை இழக்கச் செய்கின்றார்கள்.

இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்வது…? என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்…! என்று காந்திஜி அங்கே உபதேசிக்கின்றார்.

ஆகவே நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பகைமை ஊட்டும் நிலைகளில் இத்தகைய அதிசயத்தைப் பார்க்க வேண்டாம்.
1.”தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை…!” ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைய வேண்டும் என்று
2.இந்த அதிசய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.
3.பகைமையை அகற்றும் உணர்வின் தன்மையை நாம் வளர்ப்போம் என்று அதே கப்பலில் உபதேசிக்கின்றார்.

ஒவ்வொருவரும் அருள் சக்தியைப் பெற்று ஆற்றலை வளர்ப்போம். அந்த ஆற்றல் ஒவ்வொருவரிடம் வளர்வதைக் கண்டு அதிசயப்படுவோம். அந்த அதிசயத்தைப் பார்க்க விரும்புவோம்.

விஞ்ஞான அறிவால் கண்ட உணர்வை வெறுப்போம். மெய் ஞானத்தால் வளர்ந்த உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

மெய்ப் பொருளைக் காணும் நிலையில் மனித உடலுக்குள் மறைந்து இயக்கிக் கொண்டிருக்கும் தீமையில் இருந்து விடுபட நாம் அனைவரும் செயல்படுவோம்.

இத்தனை உபதேசங்களும் காந்திஜி கொடுத்தார். ஆனால் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் அரசியல் வாழ்க்கையில் காந்திஜி இருந்தாலும் ஒரு இயந்திரக் கண்ணாடியை வைத்து அங்கே தத்துவ ஞானத்தைத் தான் புகட்டினார்.

அவர் காட்டிய அறநெறியை உங்களுக்குள் இப்பொழுது பரப்புகிறோம் என்றால் பகைமையிலிருந்து மீட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகள் இன்று உண்டு, உங்களுக்குள் இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள இந்த நினைவாற்றல் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

ஜாதகமும் ஜோதிடமும்

ஏவல் ஜாதகம் நாடி சாஸ்திரம்

ஜாதகம் நிர்ணயிக்கப்படும் விதம் அன்றும்… இன்றும்

மனிதனின் சுவாசம் செல்லும் பாதையைச் சீரமைக்காதபடி எந்தச் சாங்கியமோ சாஸ்திரமோ செய்தாலும் அது வேலை செய்யாது‌

இன்றைய ஜாதகத்தில் சொல்லப்படும் நல்ல நேரம் கெட்ட நேரம் நமக்குகந்தல்ல… அதிலே உண்மையும் இல்லை

நேரம் காலத்திற்குத் தான் அடிமையாக உள்ளோம்… நம் எண்ணத்தால் எதையுமே நல்லதாக்க முடியும் என்று எண்ணுகிறோமா…!

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… எண்ணியதை உருவாக்கக் கற்றுக் கொண்டவன் தான் மனிதன்…!

நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

செவ்வாய் தோஷம் இருக்கின்றதா – இல்லையா…? 

மதத்திற்குத் தக்கவாறு தான் நல்ல நேரம் நிர்ணயிக்கப்படுகின்றது

ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்தவர் எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றார்கள்

ஜாதகம் மனிதனுக்கு இல்லை – பூ வைத்துப் பார்த்தல்… நியூமராலஜி…!

திருமணத்திற்கு மணப் பொருத்தம் தேவை – ஜாதகம் இல்லை

நாடி சாஸ்திரம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

நேபாள அரச குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி – மனிதனுக்கு ஜாதகம் இல்லை

பிரமிட் வைத்துச் செயல்படுத்துவதன் உண்மை நிலை

மனிதனுக்கு ஜாதகம் இல்லை

ஜாதகம் ஆயுள் ஹோமம் – விளக்கம்

ஜோதிடம், குறி சொல்லும் சாமியார்களின் நிலைகள்

ஜாதகம் தோஷம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை – வாஸ்து நியுமராலஜி நவரத்தினம்

ஜாதகத்தின் உண்மை நிலைகள் 

வாஸ்து சாஸ்திரம் பிரமிட் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஜாதகம் திருமணமானவர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…?

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…?

உடலுக்கு பின் என்ன… என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…?

செய்வினைகளிலிருந்தும் மாந்திரீகத்திலிருந்தும் விடுபடும் வழிகள்

சாப அலைகள்

கொல்லூரில் செய்வினையை நீக்கியது

நம்மையறியாமல் வரும் தீமைகள், மந்திரவாதிகள் செய்யும் செய்வினை

மந்திரத்தைச் சொல்லி பிரிந்த ஆன்மாக்களை அனுப்பினால் அருளாடும் நிலையே வரும்

மையை வைத்து வித்தை செய்யும் மகான்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

சந்தர்ப்பத்தில் வரும் தீமைகளை மந்திரத்தால் நீக்க முடியாது

சாங்கிய சாஸ்திரங்கள் மந்திரங்கள் செய்பவர்களின் கதி

திருச்சி, சிவகங்கை, கல்கி, ஆந்திரா சாமியார்களின் நிலைகள்

மந்திர நிலைகளில் செயல்படும் சாமியார்களும், ஏவல் செய்ய்வோரின் நிலைகளும்

குடுகுடுப்பைக்காரன் என் முன்னாடியே 1964ல் ஏமாற்று வேலை செய்தான் குருநாதர் காட்டுகின்றார்

கரையான் மந்திர நிலைக்ள் கொண்டு செயல்படும் சில சாமியார்களின் நிலைகள்

மேஜிக் வேலை எப்படிச் செய்கிறார்கள், மிலிடரி லெஃப்ட் ரைட் மார்ச், ஆவி வைத்து உயரத்தில் தூக்குதல்

மந்திரவாதிகள் செய்யும் மேஜிக் உண்மையை அறிய விடாது எப்படிச் செயல்படுத்துகின்றது

சர்க்கரைக்காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, கரையான் மந்திரம் – விளக்கம்

புதையல் எடுப்பதாக ஒரு மந்திரவாதி 8 பெண்களைப் பலி கொடுத்த நிகழ்ச்சி

அமாவாசைக்கு முன்னோர்களை அழைத்தால் குடுகுடுப்புக்காரன் அந்த ஆன்மாக்களை எப்படிக் கவர்ந்து கொள்கின்றான்

ஏமாற்றும் சாமியார்களைப் பற்றிய நிலைகள்

அமாவாசை அன்று முன்னோர்களை எண்ணிச் செய்யும் நிலைகள் அனைத்தும் தவறானது

சாப அலைகளின் இயக்கங்கள்

பாவ வினைகள் என்றால் என்ன – எப்படி நீக்குவது…?

பொய்ச் சாட்சியும் பொய்யாக நீதி சொல்வோர் குடும்பங்களில் ஏற்படும் தீமைகள்

மோசமானவன் மோசமானவன் என்று சிலர் சும்மா குறையாகவே பேசிக் கொண்டிருப்பார்கள்

யூதர்களால் உருவாக்கப்பட்ட மந்திர ஒலிகளின் உண்மை நிலைகள்

இரக்கத்துடன் உள்ளவர்களுக்குள் புகும் சாப அலைகள்

செல்வம் இருந்தாலும் சாபங்களால் குடும்பங்கள் அழியும் நிலை உருவாகின்றது

முன்னோர்களின் சாப அலைகளிலிருந்து விடுபடுங்கள்

குடுகுடுப்புக்காரன் மண்ணையும் முடியையும் பழைய துணியையும் ஏன் கேட்கின்றான்…?

வாஸ்து சாஸ்திரம் எவ்வளவு நாள் பலனளிக்கும்…?

செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை 

எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் தீமைகள் நமக்குள் எப்படிப் புகுகின்றது…?

Breathing states

எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் “தீமைகள் நமக்குள் எப்படிப் புகுகின்றது…?”

 

1.நம் வாழ்க்கையிலும் சரி… உடலுக்குள்ளும் சரி…!
2.குறைகள் எத்தனையோ வகையில் வருகின்றது.
3.ஆனால் நமக்கு அது தெரிவதில்லை.

ஏனென்றால் நாம் ரோட்டிலே நடந்து சென்றாலும் காற்றில் வரும் எத்தனையோ அசுத்தங்களை நுகர நேர்கின்றது.

உதாரணமாக ஒரு இடத்தில் அசூசையாக (அசுத்தமான) இருந்தால் அதன் மீது சூரிய ஒளிக்கதிர் தாக்கப்பட்டு அதிலுள்ள நாற்றத்தை அந்தச் சூரியனின் ஒளிக் கதிரில் உள்ள காந்தம் கவர்ந்து கொள்கின்றது. அலைகளாக மாற்றுகின்றது.

அந்த அலைகள் அங்கிருந்து தொடர்ந்து அது காற்றாக வரப்படும் போது சந்தர்ப்பத்தால் ரோட்டிலே நாம் செல்லும் பொழுது அதை நுகர்ந்து விட்டால் நமக்குள் நாற்றம் உட்புகுந்து விடுகின்றது. (ஆனால் நாம் தவறு செய்யவில்லை)

அது தீமையின் நிலைகளாக விளைந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு அது அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது. அணுவான பின் மீண்டும் அதை நுகரும் ஆற்றல் பெற்று நுகரத் தொடங்கி விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம்மை அறியாமலே அந்தத் தீய எண்ணங்கள் வருவதும்
2.தீய உணர்வு கொண்டு தீய செயல்களைச் செயல்படுத்தும் உணர்வாகவும் எத்தனையோ மாறும் நிலைகளாக வருகின்றது.
3.நாம் தவறு செய்யாமலேயே இத்தகைய நிலைகள் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் அறியாது புகும் தீமைகளிலிருந்து நம்மை மீட்டிட அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு தீமைகளை அடக்கிட வேண்டும்.

ஓர் குழம்பை வைக்கிறோம் என்றால் காரம் புளிப்பு உப்பு என்று எல்லாவற்றையும் இணைத்துச் சம அளவுடன் செயல்படுத்தும் பொழுது தான் சுவை வருகின்றது. ஒன்று கூடிவிட்டாலோ குழம்பின் சுவையை மாற்றி விடுகின்றது. சாப்பிட முடிவதில்லை.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையிலும் சந்தர்ப்பத்தில் சில குறைபாடுகள் வந்தாலும் அதைச் சமப்படுத்தும் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

அப்படிச் சுவை மிக்க நிலைகளை உருவாக்கியவர்கள் மெய் ஞானிகள். வெறும் சொல்லால் அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக இணைத்து வாழ்ந்தவர்கள் அவர்கள். எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்கள் அந்த மெய் ஞானிகள்.

அந்த மகா ஞானிகளின் உடலில் விளைந்த உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் நம் பூமியில் அலைகளாகப் பரவி உள்ளது.

அந்த மகா ஞானிகளின் உணர்வலைகளைப் பெறுவதற்கே இதை யாம் (ஞானகுரு) உபதேசமாகக் கொடுக்கின்றோம். அருள் ஞானிகளின் உணர்வை உபதேசிக்கும் போது இதைப் படித்துணரும் உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இருந்தால் ஞானிகளின் அருள் வித்துகள் ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவு கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்கள் குடும்பத்தில் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அந்தக் குறைகள் வளராது அதை அடக்கி தன்னுடன் இணைத்துப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க இது உதவும். நமக்குள் பேரின்பத்தை ஊட்ட இது உதவும்.

ஈஸ்வரபட்டரிடம் பெற்ற நேரடி அனுபவங்கள் – நடந்த நிகழ்ச்சிகள்

ஆரம்ப காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள்

மந்திரவாதிகள் மக்களுக்குச் செய்யும் ஏவல் போன்ற கொடுமைகள்

உன்னைக் காப்பாற்ற நான் தான் வந்தேன் என்றார் குருநாதர்

இறந்த உயிரினங்களின் உடலிலிருந்து உருப்பெறும் புது நிலைகள்

இயக்க அணு ஜீவ அணு உயிரணு

தர்மம் தலை காக்குமா…?

மங்களூர் மலையில் அனுபவம் – தாய் கருவில் குழந்தைக்குக் கிடைக்கும் பூர்வ புண்ணியம்

போகர் – டெல்லியில் காசியில் நடந்த சில சம்பவங்கள்

அகண்ட பேரண்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

கோடி கோடி உபதேசம் – ஈஸ்வரபட்டர்

ஞானிகள் காட்டிய வழியில் சித்திரபுத்திரனின் கணக்கு

அகண்ட பேரண்டத்தின் ஆற்றலையும் நீங்கள் பெறுவீர்கள்

துன்பத்திலிருந்து பேரின்பம் எப்படிப் பெறுவது – குருவிடம் பெற்ற அனுபவம்

உயிர் இச்சையின் முக்கியத்துவம் – ஆலயத்தின் அபிஷேகத் தத்துவம்

அசாம் காட்டில் காட்டுவாசிகளிடம் பெற்ற அனுபவம்

எமது சுற்றுப் பயணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

குரு வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்

நடந்த நிகழ்ச்சிகள் – ஏவல், அகோரிகள், இமயமலை

இறந்த புலி உடலில் ஏற்படும் மாற்றங்கள் – துருவ நட்சத்திரத்தின் சக்தி

தெரியவில்லை என்பதை விட்டுவிட்டுத் தெரிய வேண்டும் என்ற நிலைக்கு ஞானமாக வர வேண்டும்

எங்களுக்குச் சக்தி கொடுக்கலாமே… எப்போது கொடுப்பீர்கள்…?

என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் – கடும் தவமிருந்த ஆன்மாக்களின் நிலைகள்

குருநாதர் எமக்குப் பல பரிசீலனைகள் வைத்தார்

உயிரின் இயக்கம் – காட்டிற்குள் அனுபவம்

சாப அலைகளைப் போக்க குருநாதர் செய்தது

தடுத்து நிறுத்தினால் மகரிஷிகளைக் காண முடியும்

காசி கங்கைக் கரையில் நடந்த நிகழ்ச்சிகள்

கோகர்ணம், பண்டரிபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

உடலுக்குள் இருக்கும் ஆவியை வெளியேற்ற முடியாது

புதையல்

குருநாதர் ஆரம்பத்தில் என்னைச் சந்தித்த நிலைகள்

தரித்திர நேரத்தில் தங்கம் செய்வதைக் காட்டினார் குருநாதர்

நன்மைகள் பல செய்யத் துணிவோம், 1954ல் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி

பாப்பம்பட்டி மந்திரவாதியிடம் குருநாதர் கொடுத்த அனுபவம் 

திருப்பதியில் அனுபவம் – குரங்கு, தங்கக் காசு, ராஜத் தேள்

கேதார்நாத்தில் குரு கொடுத்த அனுபவம்

குமாரபாளையத்தில் மந்திரவாதிகளிடம் பெற்ற அனுபவம் 

மரத்தைத் தூக்கி எறியும் சக்தி கொடுத்தார் குருநாதர் – மலைப்பாம்பு, மந்திரவாதிகளிடம் குருவின் பரீட்சை

சிக்கலான நேரங்களில் நாம் எண்ண வேண்டியது எது – இமயமலையில் அனுபவம்

பண்ணாரிக் காட்டில் யானை, புலியிடம் பெற்ற அனுபவம்

காசி கங்கைக் கரையில் அகோரிகளிடம் பெற்ற அனுபவம்

என்னைக் கேலி செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு உண்மையை உணர்த்தினார் குரு

மனமே இனியாகிலும் மயங்காதே – குருநாதரிடம் பெற்ற அனுபவம்

புலி, கேளை ஆடுகள், உடும்பு மலைப்பகுதியில் அனுபவம்

மரண பயம் – பழனியில் வாழை நாரை பாம்பு என்று சொல்லச் சொன்னார் – அனுபவம்

ஆனைமலைக் காட்டில் யானை, மலைப் பாம்பிடம் குரு கொடுத்த அனுபவம்

தர்மம் செய்வது எதுவாக இருக்க வேண்டும் என்று காட்டுக்குள் வைத்துக் காட்டினார் குரு

அகஸ்தியன் உணர்வைக் கவர்வதற்குக் காட்டில் அழைத்துச் சென்று குரு கொடுத்த அனுபவம்

தைப் பொங்கல் அன்று குரு எனக்குள் ஒலி பரப்பிய அவர் சக்தி

நாயை வைத்து எனக்குக் கொடுத்த அனுபவங்கள்

மிருகங்களிடமிருந்து தப்பச் செய்தார் குருநாதர்

கரடிக் குகை மேல் படுத்திருக்கும்போது பெற்ற அனுபவம்

புலியை வீழ்த்திய பன்றி – காட்டுக்குள் அனுபவம்

டெங்கு காய்ச்சலை நீக்கிய அனுபவம்

நண்பரின் மனைவியின் உதிரப் போக்கை நிறுத்தினார் குருநாதர்

குருநாதர் எனக்கு நேரடியாக எப்படி உணர்த்திக் காட்டினார், பார்க்கச் செய்தார்

காட்டுக்குள் புலி வேட்டைக்கு யாம் சென்று பெற்ற அனுயவம்

புலி பன்றி சண்டையைக் காட்டினார் குருநாதர்

தீமைகளை எனக்குள் உருவாக்கி தீமையை நீக்கும் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்

ஜல்லிக்கட்டுக் காளையிடம் குருநாதர் கொடுத்த அனுபவம்

மங்களூர் மலையில் குட்டி போட்ட புலியிடம் பெற்ற அனுபவம்

மலேஷியாவில் மாமிச ஓட்டலில் சைவ உணவு சாப்பிடும் போது பெற்ற அனுபவம்

சூறாவளிக்குள் சிக்க வைத்த அனுபவம்

குருவிடம் பெற்ற முக்கியமான அனுபவங்கள்

கோகர்ணத்திலும் காட்டுக்குள்ளும் பெற்ற அனுபவங்கள்

பக்தி கொண்ட ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்த வித்தை

உமிழ் நீரை வைத்துத் தங்கம் செய்யச் சொன்னார் குரு

தொண்ணூறு வயது கிழவிக்குள் செயல்பட்ட வீரியமான ஆன்மா

காசியிலும் கங்கைக் கரையிலும் பெற்ற சில அனுபவங்கள்

அக்காலங்களில் நடந்ததைக் காட்டினார் குருநாதர் 1

குருநாதர் மூலம் காட்டிற்குள் பெற்ற அனுபவங்கள்

குருநாதரிடம் பெற்ற அனுபவங்கள் – நடந்த நிகழ்ச்சிகள்

விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் கடைசி நிலைகள்

தியான அன்பர் உயிரை மதிக்கும் பண்புகளை வளர்த்துக் கொண்ட விதம்

தியான அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம்

விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிக்ழச்சி

உடல் பறறினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு

எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு

போர் முறை கொண்டு மற்றவரைத் தாக்குவதைக் காட்டிலும் “எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்துவதே மிகவும் வலிமையானது…!”

THOUGHT POWER OF MAN

போர் முறை கொண்டு மற்றவரைத் தாக்குவதைக் காட்டிலும் “எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்துவதே மிகவும் வலிமையானது…!”

 

வான்மீகியினுடைய உணர்வைத் தனக்குள் பதிவு செய்த காந்திஜி சாந்ந குணத்தின் வலிமை பெற்றார். சாந்தத்தின் வலிமை கொண்டே நம் நாட்டின் சுதந்திரத்திற்காகச் செயல்பட்டார்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். மனிதப் பண்புகள் வளர வேண்டும். நாட்டை ஆளும் அரசுக்குள் பகைமை வரக் கூடாது. உயர்ந்த பண்புகளினுடைய நிலைகள் அரசியலில் வளர வேண்டும் என்று தான் எடுத்துரைத்தார்.

1.இவரின் வலிமையான உணர்வுகள் தான் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களின் எண்ணத்திற்குள் ஊடுருவி
2.பகைமை உணர்வை மறக்கச் செய்து
3,இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

அன்று பட்சியின் பாச உணர்வுகள் வான்மீகியின் உடலுக்குள் ஊடுருவி அந்தப் பாச உணர்ச்சியைத் தூண்டி அவன் செய்யும் கணைகளை எய்ய முடியாது தடுத்து தவறு செய்யும் கொலைகாரனையும் கொலையற்றவனாக மாற்றியது.

அதைப் போல இளம் வயதில் தவறான வழியில் நடந்த காந்திஜியும் சந்தர்ப்பத்தால் (தென்னாப்பிரிக்காவில் தீமையால் வாடும் மக்களைக் கண்டபின்) வான்மீகியின் உணர்வை நுகரப்படும் பொழுது தனது உடலுக்குள் வந்த தீமையின் விளைவிலிருந்து மீட்டினார்.

அரசியல் நிலைகளில் மக்களை வாட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டிடும் உணர்வுகள் பெறவேண்டும் என்று வான்மீகியின் உணர்வுகள் கொண்டு சாந்த குணத்தின் வலுவை ஒவ்வொருவருக்கும் உணர்த்தினார்.
1.பகைமை கொண்ட குணங்களை நாம் ஏன் வளர்க்க வேண்டும்…?
2.பண்பு கொண்ட உணர்வுகளைத்தான் வளர்க்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எல்லோருக்குள்ளும் வளர்த்தார்.

இவரின் நினைவின் நிலைகள் இவ்வாறு வளர வளர ஆங்கிலேயர்களுக்கும் இதை உணரத் தொடங்கினார்கள். அவர்கள் இந்த யுத்தம் முடிந்தால் உனக்குச் சுதந்திரம் கொடுக்கிறேன் என்றனர். யுத்தமும் முடிந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது.

காந்திஜி தன்னம்பிக்கை கொண்டு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். தன் உடலையும் அர்ப்பணித்தார். உலகையே சிந்திக்கும்படி செய்தார்.

ஆனால் சுபாஷ் சந்திர போஸ் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற முடியும் என்று செயல்பட்டார். இவர் போர் முறைகள் எடுக்கப்படும் போது பிரிட்டனின் ஐந்தாம் படைகள் அவரைச் சூழ்கின்றது. அதிலிருந்து தப்பித்து ஜப்பான் சென்றார்.

அன்று ஜப்பானும் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று முயற்சித்தார்.

அந்தச் சமயத்தில் பிரிட்டனுக்கு எதிரியாக இருக்கக்கூடிய ஜெர்மனியும் அதை வரவேற்றது. படைகளையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவியது. மீட்ட முடிந்ததா…? சுதந்திரம் பெற முடிந்ததா…? என்றால் இல்லை.

இவ்வாறு சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் நிலைகள் வலிமை கொள்ள வேண்டும் என்று அவர் தன் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.காந்திஜி அவருடைய நிலைகள் திருந்த வேண்டும்…
2.பண்பு கொண்டு உணர்வுகள் அங்கே வளர வேண்டும்.
3.போர் செய்து மற்றோரை மடக்கி விடக்கூடாது.
4.போர் என்ற நிலையில் “எதிரி…” என்ற நிலையைத் தனக்குள் வளராதபடி
5.பண்பு கொண்ட.உணர்வுகள் வளர வேண்டும் என்றார்.
6.அவருடைய உணர்வின் வலிமையால் நாடு சுதந்திரம் பெற்றது.

ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று இருக்கிறதா…? இது அறியாத மக்கள் இன்று நாம் என்ன செய்கின்றோம்…?

சுக போகத்தை அனுபவிக்கும் நிலைகளும் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்யும் நிலைகளும் உண்மையின் உணர்வுகளை உணராது மக்களின் பண்புகளை அறியாது ஞானிகள் காட்டிய பண்புகளை இழந்து செயல்படும் நிலை தான் உள்ளது.

1.வலிமை கொண்டு மற்றோரை அடக்கி ஆட்சி புரியும் நிலையாக அன்று பிரிட்டன் எதைச் செய்ததோ
2.அதே உணர்வின் தன்மை தான் இன்று மக்கள் மத்தியில் வந்து
3.மக்கள் ஆட்சி என்ற நிலைகள் கொண்டாலும் மக்களை அடக்கும் மக்களாக வந்து
4.அசுர உணர்வு கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளது.

தன் அருகிலே இருப்பவர்களை இரக்கமற்றுப் பண்பு கெட்டவர்களாக மாற்றுகின்றோம் பண்புள்ளவராக இருந்தாலும். பண்பு கொண்ட நிலைகளை மாற்றி விட்டுப் பகைமையை ஊட்டுகின்றோம்.

அன்று காந்திஜி எப்படி வான்மீகியின் உணர்வைத் தனக்குள் எடுத்து எதை எடுத்தாலும் ஹரே ராம்… ஹரே ராம்…! என்றார். ராமா… ராமா… என்றால் நம்முடைய எண்ணங்கள் தான் அவ்வாறு வருகின்றது.

ஆகவே அத்தகைய சாந்த குணங்களை நாம் சுவாசித்தோம் என்றால் சீதாராமா. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். அதாவது
1.எந்த குணத்துடன் நாம் பேசுகிறோமோ
2.அந்த உணர்வே நமக்குப் பதிலாக வரும்.
3.மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் வந்தால்
4.அந்த உயரும் எண்ணமே நமக்குத் திருப்பி வரும்.
5.பண்பின் தன்மையாக அந்த பேரன்பின் தன்மை வளரும்.

ஆகவே இன்று நாம் வாழும் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீள காந்திஜியின் நினைவு கொண்டு மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

நோய் நீக்கும் பயிற்சி தியானம்

ஞானகுருவின் எளிய மருத்துவக் குறிப்புகள்

யாம் வாக்குடன் உங்களுக்குக் கொடுக்கும் உயர்ந்த சக்திகள்

சிறிது காலம் தான் இந்த உடலில் வாழ்கிறோம் – அதற்குள் நாம் சேர்க்கவேண்டியது எது

பித்த சுரப்பி – சர்க்கரைச் சத்து – உணவுக் கட்டுப்பாடு

உணவினாலும் உணர்வினாலும் வரும் நோய்கள் – கேள்வி பதில்

புழுக்கள் பல பல பூச்சிகளாக எப்படி மாறுகிறது – இராவணன் – டாக்டர்களுக்கு வரும் நோய்

கை கால் குடைச்சல் ஏன் வருகிறது – ஆசி வாங்கும் முறை

உடல் நலம் பெறச் செய்யும் பயிற்சிகள் – அக்கால பிருகுவின் செயல்

அக்கால மருத்துவ முறையும்… இக்கால மருத்துவ முறையும்…

தம் கட்டி நோய் நீக்கும் தியானம்

நோய் நீக்கும் மின்சார தியானம்

நோயாளிக்குத் தியானிக்கும் முறை

அகஸ்தியன் பெற்ற நோய் நீக்கும் பச்சிலை மூலிகை மணங்கள் –  தியானம் 

நோய்களை நீக்கிடும் தியானம் – தவம்

சாமிகள் நேரடியாகச் சொல்லித் தியானிக்கும் நோய் நீக்கும் தியானம்

Heart attack – இரத்தம் போகும் பாதை எதனால் தடைப்படுகின்றது

இரத்தக் கொதிப்பு, சர்க்கரைச் சத்து, ஹார்ட் அட்டாக் ஏன் வருகிறது

கரு, முட்டை, அணு, நெஞ்சு வலி, அட்டாக், சிறு மூளையின் இயக்கம் பாதிப்பு

கிட்னி பழுதடைவது ஏன், மாற்றும் வழி என்ன

கேன்சர் நோயை நீக்கும் பச்சிலை மணம்

உங்கள் நோயை நீக்கிக் கொள்ளுங்கள்

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நோய்களை நீக்க முடியும்

கோப உணர்வால் நரம்புகளின் அமிலம் மாறி நுரையீரல், ஈரல் இயக்கங்களை எப்படித் தடுக்கின்றது

நோயாக எப்படி நமக்குள் விளைகிறது, அதை மாற்றும் வழி

மூட்டு வலியைப் போக்கும் தாவர இனங்கள்

கடுமையான நோய் வந்துவிட்டது என்று எண்ணினால் அது உடனே நம்மை வீழ்த்தும்

உபதேசத்தைக் கேட்டாலே உங்கள் நோய்கள் போய்விடும்

இராஜ வைத்தியம் அன்று எப்படிச் செய்தார்கள்

தலை வலிக்குக் கண்ணாடி போட வேண்டுமா

நோய் நீக்க – சாமிகள் சொல்லி எடுக்கும் தியானம்

உடலுக்குள் செயல்படும் நிலைகளை ஒருவருக்கு நேரடியாகக் காட்டினேன்

நோய் நீக்கும் சக்தி

நோய் வருவதன் காரணம் என்ன…?

ஊசி மூலம் மருந்து செலுத்துவது, டாக்டர்களுக்கு வரும் நோய்கள் 

கீரி பாம்பு சண்டை – மூலிகை மணத்தை நீங்கள் எடுத்து நோயைப் போக்குங்கள்

உப்பை அதிகமாக உட்கொண்டால் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள்

எலும்பு தேய்மானம் பற்றிய விளக்கம் 

தீமை செய்யும் அணுக்கள் இரத்தத்தில் கலந்து சிறு நீரகம் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும் 

பிறருடைய நோயை நாம் எப்படிப் போக்க வேண்டும்

அரளிப் பூவின் மருத்துவ குணங்கள்

மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்கவே இந்த உபதேசம்

ஜீரண சக்தியைப் பாதிக்கும் உமிழ் நீர் பற்றிய உண்மைகள்

நாடித் துடிப்பு, scan பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

kidney பழுதடைந்து அதனின் விளைவாக இதயம் எப்படிப் பாதிக்கிறது…? 

நன்றாக இருப்பவர்களுக்கு heart attack kidney failure எப்படி வருகிறது..?

விஷத்தை வடிகட்டும் நம் உறுப்புகளின் இயக்கங்கள்

Heartல் படபடப்பு ஏன் வருகின்றது…?

சர்க்கரை நோய் வருவதற்க்கும் இரத்தக் கொதிப்பு வருவதற்கும் காரணம் என்ன..?

நோய் வரக்கூடிய காரணங்கள் என்ன…?

கேன்சர் நோயை ஏன் நீக்க முடியவில்லை…?

மருந்து சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் பழுதடைவது ஏன்…?

ஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…?

உடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…?

பரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…?

டி.பி. கேன்சர் நோயை நீக்கும் வழி

Songs

அருள்பாடல்கள் பாகம் 1 

அருள் பாடல்கள் பாகம் 2 

அருள் பாடல்கள் பாகம் 3 

அருள் பாடல்கள் பாகம் 4 

தாய் தந்தை குரு 

ஓம் ஈஸ்வரா குருதேவா 

மகரிஷிகள் 

ஆத்ம ஜோதி 

ஆதிமூலம் என்ற உயிரே கடவுள்

ஓம் நமச்சிவாய…

ஓம் ஈஸ்வரா குருதேவா ஜோதி ரூபமானவனே...

சற்குருதேவர் 

மனமே இனியாகிலும் மயங்காதே 

தாயே தந்தையே… 

கப்பலைக் காப்பது கலங்கரை ஒளி நம் ஆன்மா… 

எந்தன் குருதேவா… 

தன்னைத் தான் தான் உணர்ந்து… 

மலரின் நறுமணமும் மகரிஷிகளின் அருளாசியும்… 

வீணையின் நாதம் நீ… 

ஒப்புயர்வில்லாத சூரியனின் சக்தியை 

 

ஆண்டவா ஆண்டவா ஆண்டவா… 

குருவின் குருவைப் பாருங்கம்மா… 

கல்லாத கல்வி வளர் கடலே போற்றி… 

வீணை இசை 

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

Image

God exists

கடவுளைக் காண்பது பற்றி ஒவ்வொரு ஞானியும் சொன்னது…!

 

இன்று சினிமாக்களில் காட்சிப் பொருளாக வேஷமிட்டு அதன் உணர்வை நிஜமாக நடப்பது போல் காட்டுகின்றார்கள். நாமும் பார்க்கின்றோம். அந்த உணர்வை வளர்க்கவும் செய்கின்றோம்.

அதைப் பெறுவது போல மதங்களின் அடிப்படையில் தெய்வங்களை வணங்கி அதற்குண்டான சாங்கியங்கள் சாஸ்திரங்கள் செய்து அதை வளர்த்துக் கொண்ட பின் மனிதன் மடிந்தால் என்ன ஆகின்றது…?

மனித உணர்விற்குள் மதத்தால் இனத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு
1.உருவமாகத் தெரிவதைக் கவரப்படும் பொழுது
2.அது அருவ நிலைகளாக மனிதனுக்குள் விளைந்து
3.அதே உணர்வின் இயக்கமாகக் கடவுளாகக் காட்டுகின்றது.

எந்தெந்த குணத்தின் உருவமாக அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் பூஜித்து வணங்கினார்களோ அந்த உணர்வின் செயலாகவே செயல்படுகின்றது. மற்றவர்களுக்குள் அந்த உணர்வின் அலைகள் வந்து காட்சியாகவும் தெரிகின்றது. அது உண்மையான கடவுள் அல்ல.

ஆகவே மனிதனைப் பேணிக் காக்கும் உணர்வின் தன்மையை அந்த உயர்ந்த குணங்களை எடுத்து அவன் உயர வேண்டும் என்ற உணர்வை நீ எடுத்தால் அதன் உணர்வே உன்னைத் தெளிவாக்கும் என்று இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

அவர் சீடரான விவேகானந்தரும் அதைத் தான் செய்தார். நீ தெய்வமாக வேண்டும் என்றால் உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்கள் – அவர்கள் உயர்ந்து வாழ வேண்டும் என்று நீ எப்பொழுது எண்ணுகின்றாயோ அன்று நீ மனிதன் என்ற நிலையை அடைகின்றாய்.

அதுவே உன்னை உயர்வாக்கும் உணர்வின் நற்குணங்களாக உனக்குள் வளரும். உன் சொல்லும் பிறரை உயர்வாக்கும் நிலைகள் பெறும். ஆகவே
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக நீ மதி
2.கடவுள் வீற்றிருக்கும் அந்த உடலில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீ எடுத்து வளர்த்துக் கொள்
3.அந்த எண்ணமே உனக்குள் தெய்வ சக்தியாகச் செயல்படும்
4.அப்பொழுது அங்கே கடவுளாகின்றாய்…! என்ற உணர்வினை விவேகானந்தர் தெளிவாக்கியுள்ளார்.

ஒருவருக்கொருவர் பண்புடன் ஈகையுடன் மற்றவர்களுக்கும் உணவருந்தச் செய். அந்தப் பண்பினை வளர்த்தால் அதுவே உயர்ந்த நிலைகளாக உனக்குள் கடவுளாக வளர்கின்றது. அப்பொழுது நீயே அவனைக் காப்பவனாக ஆகின்றாய்.

அன்பு கொண்டு பிறரை உயர்த்தும் மார்க்கத்தில் ஒருவருக்கு இல்லை என்றால் “கொடுத்து உதவு…!” என்று தான் இயேசுவோ நபிகளோ ஏனைய மகான்கள் அனைவரும் சொல்லியுள்ளார்கள்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்து பகைமையிலிருந்து மீள வேண்டும். எல்லோருக்கும் சேவை செய்யும் பண்புகள் வர வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் கொண்டு ஏழ்மையில் வாடுகின்றவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும். அவர்களையும் உயர்த்திடும் நிலைகள் கொண்டு வளர்க்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கி விட்டால் அதுவே கடவுளாக நின்று செயல்படும்…! என்று குருநானக் சொன்னார்.

ஆனால் இவை எல்லாமே பின்னாடி மதமாக்கப்பட்டு மதத்தின் நிலைமை கொண்டு பகைமைகளை உணர்த்தி அதற்குள் மதப் பித்து கொண்டு அந்த மகான்களின் தத்துவத்தையே மாற்றிவிட்டு மதப்போர் இனப்போர் என்று நடந்து கொண்டுள்ளது.

ஆனால்
1.உயர்ந்த குணங்களே மனிதர்களை ஆளுகின்றது.
2.அதை நீ ஆண்டவனாக வணங்கு…! என்று தான்
3.அன்று தோன்றிய மகான்கள் அனைவருமே சொல்லியுள்ளார்கள்.
4.யாரும் மதத்தை உருவாக்கவில்லை.

உயர்ந்த குணம் கொண்டு ஒருவொருக்கொருவர் காக்கும் நிலையைத்தான் “கடவுள்…!” என்று அந்த நிலையை உருவாக்கினார்களே தவிர அதை அரசியலாகவோ மதமாகவோ இனமாகவோ ஆக்கவில்லை.

இதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…!

தியானிக்க வேண்டிய முறை – Meditating Method

Image

1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி, எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ, அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.
சூரியனே அழிந்தாலும், துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

2.“முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி, அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

3. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி, கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி (அழுத்தமாக) துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்து, பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.
புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

4. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில், அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.
இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி, (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால், திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.
ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த செலுத்த, அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி, அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).
இது தொடர் வரிசையாகி, துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு நமக்குக் கிடைக்கின்றது.
ஒரு வெல்டிங்கை (WELDING) தட்டினால் எப்படி “பளீர்” என்று வெளிச்சமாகின்றதோ, அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.
துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி, அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

5. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.
இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.
அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.
அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.
திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.
கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

6. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”
  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான்

தியானம் செய்யவேண்டிய முறை:-

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது, துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.
இப்படி சுழல சுழல, உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.
உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து, நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.
நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.
நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி, கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.
நம் ஆன்மாவில், அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி, எண்ணங்களாகி, சொல்லாகவும், செயலாகவும் இயக்கச் செய்கின்றது.
இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. அந்த உருவான அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.
ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.
இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

7. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது, நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.
உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.
நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம். நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.
எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ, அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி, அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.
அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று, ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது, என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.
இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக்கூடிய ஒன்றாகும்.
எமது அருளும், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா