“சிரமப்பட்டுத் தயார் செய்த ஞான வித்தை” உங்களுக்குள் வாக்காகக் கொடுத்துப் பதியச் செய்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

Image

Uyir Suvaasam

“சிரமப்பட்டுத் தயார் செய்த ஞான வித்தை” உங்களுக்குள் வாக்காகக் கொடுத்துப் பதியச் செய்கின்றோம் – பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

 

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் தீமைகள் என்று எது வந்தாலும் அந்தத் தீமைகளை அகற்றக்கூடிய வாக்காக ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

திரும்பத் திரும்ப ஞானிகளின் உணர்வுகளை உரமாகக் கொடுத்து அந்த வித்தை உங்களுக்குள் விளையச் செய்கின்றோம்.

அப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேர் இருக்கின்றார்கள்…!

1.உங்கள் நோய்கள் அகலும்
2.உங்கள் தொழில் சீராகும்
3.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும்
4.எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்
5.நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று தான்
6.யாம் (ஞானகுரு) வாக்கைக் கொடுக்கின்றோம்

இவ்வளவும் சொன்ன பிற்பாடு “எங்கெங்க…! குடும்பத்தில் அல்லது தொழிலில் ஒரே கஷ்டமாக இருக்கிறது…” என்று இதைத்தான் சொல்கிறார்கள்.

அதெல்லாம் நீங்கிப் போகும் நன்றாக இருப்பீர்கள் என்று மறுபடியும் யாம் சொன்னாலும்
1.நீங்கள் சொல்கிறீர்கள்…!
2.ஆனால் என் பையன் எப்போது பார்த்தாலும் என்னிடம் முரண்டு செய்து கொண்டே இருக்கின்றான்
3.வேலை பார்க்கும் இடத்தில் ஒரே பிரச்னையாக வந்து கொண்டே இருக்கின்றது என்று
4.யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை அப்பொழுதே ஜீவனற்றதாக மாற்றி விடுகின்றீர்கள்.

எத்தனையோ சிரமப்பட்டு தந்திரமாக உங்கள் உடலில் இதெல்லாம் பாய்ச்சி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞான வித்தை தங்க வைக்க வேண்டும் என்று யாம் முயற்சி எடுக்கின்றோம். ஆனால்
1.மண்ணிலே விதைத்த விதைகளை எறும்பு எடுத்துப் பொறுக்கிக் கொண்டு போய்
2.எப்படி முளைக்காது செய்து விடுகின்றதோ இதைப்போல
3.உங்கள் உடலில் ஏற்கனவே பதிவான சாப அலைகள்
4.யாம் பதிய வைக்கும் வித்தை உங்களுக்குள் ஆழப் பதியாமல்
5.அதை முளைக்கவிடாது மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் அனுபவரீதியில் தான் குருநாதர் எமக்குக் கொடுத்தார். ஆகையினால் நான் உங்களைக் குறையாக எண்ணவில்லை…! குறையாகச் சொல்லவில்லை…!

முந்திய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தது அது உங்களை அறியாது எப்படி இயக்குகின்றது, அதிலிருந்து எப்படியும் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் இதை விளக்கமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

இது ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞான ஞானத்தின் உணர்வைப் பெற்று நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும்.

உங்களிடமிருந்து மகிழ்ச்சி என்ற நிலைகள் வரவழைப்பதற்கே இதைச் சொல்கிறோம். குருநாதர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்கின்றோம்.

நம்மை உருவாக்கிய தாய் தந்தையருக்கு நாம் செய்ய வேண்டியது – “மோட்ச தீபம்”

Motcha deepams

நம்மை உருவாக்கிய தாய் தந்தையருக்கு நாம் செய்ய வேண்டியது – “மோட்ச தீபம்”

நாம் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து வரும் சமயம் நம் அம்மா அப்பா “என் பிள்ளைக்கு என்ன செய்கிறதோ… ஏது செய்கிறதோ…?” என்று அடிக்கடி வேதனைப்பட்டு இருப்பார்கள்.

பிள்ளை பள்ளிக்கூடம் போகும் பொழுது “ரோட்டில் எங்கேயும் அடிபட்டு விடுமோ… இங்கே அடிபட்டு விடுமோ…! என்பது போன்ற வேதனைகளை எல்லாம் எண்ணி இருப்பார்கள்.

பிறந்த குழந்தையை நாம் பார்க்கிறோம் இல்லையா…! இரவெல்லாம் “நச் நச்சென்று” அழுது கொண்டிருக்கும்.

குழந்தையின் தாயும் “தன் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமே…” என்று தூங்காமல் முழித்துக் கொண்டு அந்த வேதனையைத் தாங்கி தாய் பிள்ளையைக் காப்பாற்றி இருக்கும்.

நம்மை வளர்ப்பதற்காக வேண்டி இதைப் போன்று சந்தர்ப்பத்தால் எடுத்த வேதனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்குள் வளர்த்து கடைசியில் தாயின் உடல் நலிவடைந்து நோயாகி விடுகின்றது.

நோயாக ஆனபின் அவர்கள் எழுந்திருக்க முடியாமல் ஆகி விட்டால்… நாம் என்ன சொல்கிறோம்…?
1.“சனியன் எப்பொழுது தொலையுமோ”ஒரே தொல்லையாக இருக்கிறது
2.“சீக்கிரம் போய்த் தொலைந்தால் பரவாயில்லை…
3.காலா காலத்தில் நாம் நம் வேலையைப் பார்க்கலாம்
4.எங்கே நம் வேலை நின்று விடுமோ தான் நாம் நினைக்கிறோம்.

ஆனால் நம்மைக் காப்பாற்றுவதற்காக நம் தாய் தகப்பனார் எத்தனைப் பாடு பட்டார்கள்… என்று அந்த நேரத்தில் ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்க்கிறோமா…? இல்லை…!

அந்த நல்ல உணர்வுகள் எல்லாம் சிறு குழந்தையில் நம்மிடம் இருந்தாலும் வளர்ந்த பின் காணாமல் போய் விடுகிறது.

சிறு குழந்தையாக இருக்கும்போது “நாம் கஷ்டப்படுகிறோமே…” என்று நம்மை எண்ணி எண்ணி தாய் தந்தையர் வேதனையுடன் வளர்த்திருக்கின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் தாய் வேதனை உணர்வு கொண்டதால் நம்மை எண்ணும் போது நம்மைப் பார்க்கும் போது வெறுப்பு வந்து விடுகிறது.

பார்…! என் அம்மா ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைத்திருப்பது போல் தான் என்ன நடத்துகின்றது. என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றது… “இதெல்லாம் ஒரு தாயா…!” என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்றால் நம்மைக் காக்க நல்ல உணர்வுகளை எடுத்தாலும் வேதனைப்படும் பொழுது நஞ்சாகி நம் மேலே வெறுப்பின் உணர்வாக அது மாறி விட்டது.

1.நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வெறுப்பையும் வேதனையையும் எடுத்த
2.அந்தத் தாயைக் காக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு நம்மிடம் நல்ல மனதில்லை.

எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறது. “சனியன்…! தொலைந்து போனால் பரவாயில்லை… அது முகத்தில் கூட நான் முழிக்க மாட்டேன் என்று நினைக்கிறோம்.

நம்மைக் காக்க வேண்டும் என்பதற்காக வந்தது தாய். அதை நாம் நினைத்துப் பார்க்கிறோமா..?

என் அம்மாவைப் பாருங்கள்… எப்பொழுது பார்த்தாலும் “நச்…நச்…” என்று பேசிக் கொண்டே இருக்கிறது.. என்று நிறைய பேர் சொல்வார்கள். இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா…?

“இல்லாத கொடுமை எல்லாம் எனக்குச் செய்கிறது”என்று சொல்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அதே போல் “என் அப்பாவும் இப்படித்தான் செய்கிறார்” என்று நினைப்பார்கள்.

தந்தை அவர் ஆர்வத்தோடு அதை இதைக் கஷ்டப்பட்டு செய்து எதையாவது புரட்டிப் போட்டுத் தன் பிள்ளையைப் பசி பட்டினி இல்லாமல் சிரமமில்லாமல் வளர வேண்டும் படிக்க வேண்டும் என்பதற்காக
1.பலரிடம் திட்டு வாங்கி இருப்பார்கள்…
2.பல அவஸ்தைப்பட்டு இருப்பார்கள்.
3.இதெல்லாம் அப்பாவிடம் நோயாகி இருக்கும்.

பார்… எங்க அப்பனை…! எப்படி இருந்தார் இப்பொழுது இப்படி ஆகிவிட்டார்… இதெல்லாம் தேவையா…? என்போம்.

நல்ல சட்டையாக (குழந்தைக்குப் பிடித்த) நான் அணிந்து சென்றால் அப்பாவிற்குப் பிடிக்காது.

இந்தச் சட்டையெல்லாம் போடாதே என்று தந்தை சொல்வார்.

உடனே… பதிலுக்கு நாம் என்ன நினைப்போம்..? நீ சும்மா இரு…! எப்பொழுது பாத்தாலும் இப்படியே தான் சொல்லிக் கொண்டு இருப்பாய்… என்று என்று எதிர்த்துப் பேசத்தான் நாம் பழகி வைத்துள்ளோம்.

அவர்கள் அக்கறை கொண்டு நமக்காகச் சிரமப்பட்டார்கள்… நமக்கு நல்ல வழி காட்டுவதற்காக அவ்வாறு செய்தார்கள் என்று அதை நாம் நினைக்கின்றோமா…?

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவோ சிரமப்படுகிறார்கள் செலவழிக்கவும் செய்கிறர்கள். படிக்கச் சென்றால் ஐயாயிரம் பத்தாயிரம் இலட்சம் என்று கேட்கிறார்கள். அதற்காக வேண்டி எத்தனை அலைச்சல் அலைகிறார்கள்,

அப்பா அம்மா நமக்காக இலட்சக் கணக்கில் செலவு செய்து டாக்டருக்கோ இன்ஜினியருக்கோம் மற்ற படிப்பிற்கும் படிக்க வைத்தால் நாம் என்ன செய்கிறோம்..?

அங்கு படிக்கப் போகும் இடத்தில் “ஷோக்” பண்ணிக் கொண்டு “மைனர்” போல் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

“அப்பா பேச்சைக் கேட்டு நட..” என்று கூறினால் அதைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. படிக்கும் இடத்தில் நான்கு சிநேகிதர்கள் சேர்ந்து விட்டால் உடனே புரட்சி.

இந்த விஷத்தின் தன்மை கொண்டு தான் நாம் இருக்கின்றோமே தவிர தாய் தந்தையை நினைத்தோ அவர்கள் நம்மை எந்த நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார்களோ அதைப் பற்றியெல்லாம் நாம் சிறிதறவும் எண்ணுவதில்லை.

ஏண்டா நீ இப்படியெல்லம் செய்கிறாய் ஏதாவது கேட்டு விட்டால் உடனே புரட்சி.

பார்…! என்னுடைய கௌரவத்தையே நீ குறைத்து விட்டாய். வரும் போதும் போகும் போதும் நீ இதைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறாய்.
1.நீ தொலைந்தால் பரவாயில்லை
2.இல்லை என்றால் நான் வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்கிறோம்.

பல இலட்சம் படிப்புக்காகச் செலவழித்தாலும் இப்படிப் பையன் பேசியவுடன் அடடே நீ வீட்டை விட்டுப் போகாதே என்று
1.தன் பையனுக்கு வேதனை வரக் கூடாது என்று
2.அவர்கள் தான் வேதனையைத் தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்க்கின்றார்கள்.

ஒவ்வொரு நிலைகளிலும் இப்படி நமக்காகப் பாடுபட்ட அந்த அன்னை தந்தையை நாம் எப்படி மதிக்க வேண்டும். விநாயகரைக் கும்பிடும் போது நாம் எப்படி வணங்க வேண்டும்..?

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று நம் அழுக்கைத் துடைத்து விட்டு
1.நம் தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அம்மா அப்பாவின் உணர்வுகள் எல்லாம் என் உடலில் உள்ளது
3.என்னைக் காப்பதற்காகப் பட்ட விஷமான நஞ்சுகள் அவர்கள் உடலில் இருக்கின்றது
4.என்னைப் பாசமாக வளர்த்த உணர்வுகள் அங்கே இருக்கிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து எனக்காகக் கஷ்டப் பட்ட அந்த நஞ்சின் வேதனைகள் மறைய வேண்டும்.

என் தாய் தந்தையர் அந்த மெய் ஒளியின் சுடருடன் சுழன்று என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை சப்தரிஷி மண்டலத்திற்குள் உந்தித் தள்ள வேண்டும்.
1.அவர்களின் நினைவு கொண்டு
2.இந்த நினைவின் தன்மையை உந்தித் தள்ள வேண்டும்.

சூரியன் தனக்குள் வந்து மோதும் அல்ட்ரா வயலட் விஷத்தைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளி மயமாக மாற்றுகின்றது

அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் இணைத்தால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக பேரொளியாக அங்கே வாழத் தொடங்குவார்கள்.

அதாவது சூரியன் எப்படி நஞ்சைப் பிரிக்கின்றதோ அதைப் போல மனித வாழ்க்கையில் நம்மைக் காத்திட்ட
1.தாய் தந்தையரின் உடலுடன் கலந்த நஞ்சினை
2.சரீரமற்ற நிலைகளில் அந்த நஞ்சைப் பிரித்து விட்டு
3.சூரியன் ஒளிச் சுடராக இருப்பது போல்
4.அன்னை தந்தையருடைய உயிராத்மாக்கள் ஒளிச் சுடராக அங்கே மாறும்.

நம்மை உருவாக்கி வளர்த்த தாய் தந்தை முன்னோருக்குச் செய்ய வேண்டிய தலையாயக் கடமையாகும். இப்படிச் செய்தால் தான் நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தமாகும்.

அகஸ்தியன் கொடுத்த விநாயகர் தத்துவப் பிரகாரம் “மோட்ச தீபம்…!” என்பதும் இதுவே ஆகும்.

பேரிருளைப் போக்கிப் பேரொளியாக மாற்றிடும் மகத்துவம் – குருநாதரிடம் யாம் (ஞானகுரு) பெற்ற அனுபவம்

Image

god

பேரிருளைப் போக்கிப் பேரொளியாக மாற்றிடும் மகத்துவம் – “பித்தராக இருந்த குருநாதரிடம் யாம் (ஞானகுரு) பெற்ற அனுபவம்”

 

நஞ்சு ஒரு பொருளுடன் இணைந்த பின் மீண்டும் அதில் எப்பொருளை இட்டாலும் அந்த நஞ்சின் செயலாகவே மாற்றிக்கொண்டு இருக்கும் என்ற நிலையை உணர்த்துவதற்காக
1.அரும் பெரும் சக்திகளை எல்லாம் எமக்குக் (ஞானகுரு) கொடுத்து
2.மிகப் பெரிய அனுபவம் கொடுத்தார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

பொருள் தேடவேண்டும் என்ற என்னுடைய ஆசையும் மதிப்பும் கௌரவத்தையும் மனதில் வைத்து நான் இயங்கப்படும் பொழுது அடுத்தவர்கள் என்னை ஏளனமாகப் பேசுகின்றனர்.

நான் எங்கு சென்றாலும் சரி…
1.பைத்தியக்காரனுடன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்றும்
2.பிழைக்கத் தெரியாதவன் என்றும்
3.என்னை இழிவாகப் பேசுகின்றார்கள்

என்னால் பல சௌகரியங்களை அனுபவித்த எனது நன்பனே என் கண்ணுக்கு முன்பே பைத்தியக்காரன் என்று பேசுகிறான்.

அவன் கடையில் போய் உட்கார்ந்தேன் என்றால் நீ பைத்தியம் கூட சுற்றிக் கொண்டு திரிந்தவன். இங்கு வந்து நீ உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும். போ…! என்று நண்பனே விரட்டுகிறான்.

குருநாதர் மிகப் பெரும் சக்திகளைக் கொடுத்தார். அது எவ்வாறு எல்லாம் விளைகின்றது என்று பல அற்புதங்களையும் என்னையே செய்ய சொன்னார்.

அற்புதங்களை நானும் பார்க்கின்றேன். இவ்வளவு கொடுத்தும் ஒன்றை உனக்குச் சொல்கிறேன் என்பார்.

அற்புதம் செய்து அறியும் ஆற்றல் கொண்டு அறிந்தபின் அதனால் உன் உடல் வாழ்க்கைக்கு எவ்வளவு லாபம் வரும் என்பார்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றால் உடலில் உள்ள இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியான பெரும் செல்வமான பேரானந்த நிலை பெறலாம் என்று அதையும் காட்டுகிறார்.

இவ்வாறு அவர் காட்டினாலும் அவர் கொடுத்த சக்திகளினால்
1.இந்த மனித வாழ்க்கையில் எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
2.என்னைச் செல்வந்தன் என்று மற்றவர்கள் மதிக்க வேண்டும்
3.எனக்குள் பெரும் சக்தி இருக்கவேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் அதிகமாக வளர்ந்தது.

அதே சமயம் “ஜீ..பூ..ம்பா..” என்கிற நிலையில் சில வித்தைகளை உருவாக்கி அதனைக் கொண்டு மக்களை மயக்கி அதிலே பேரும் புகழும் பெற்று அதிலே செல்வங்கள் எப்படித் தேடுகின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.

இவை எல்லாம் எவ்வாறு உருவாகின்றது எப்படிச் செய்கின்றார்கள்…? மந்திரங்கள் செய்து பலர் பல நிலைகளைச் செய்தாலும் அந்த மந்திரங்களின் மூலக்கரு எது..? எவ்வாறு எல்லாம் உருவானது என்ற நிலையையும் காட்டுகிறார்.

அவ்வாறெல்லாம் நீ செய்தால் அதை வைத்து நீ கோடி…கோடி.. கோடிச் செல்வங்களையும் குவிக்கலாம் என்று இந்த ஆசையையும் ஊட்டுவார்.

அவர் ஊட்டிய அந்த ஆசை எனக்குள் வளர்ந்தது. அதைப் பெறவேண்டும் என்ற ஆர்வங்கள் தூண்டியது.

இருப்பினும் என் மனைவியை நோயிலிருந்து குருநாதர் காப்பாற்றியதால் அவர் மேல் நம்பிக்கை வந்தது. அந்தச் சமயத்தில் என் தந்தையும் மாமனாரும் இறந்து விட்டார். சொத்து எல்லாம் போய்விட்டது.

பிள்ளைகள் எல்லாம் அப்பொழுது தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிச் செய்து கொண்டிருக்கின்றீர்களே… நமக்கும் வாழ்க்கை வாழ வழியில்லையா…?
1.கணவனை அடைந்தோம்.
2.ஆனால் இந்த நிலையிலே அல்லவா இருக்கின்றோம் என்று என் மனைவி ஏங்கித் தவிக்கின்றது,

அதற்கு தகுந்த மாதிரி என் மாமியார் என் மூத்த பையனிடம் சொல்லும். உன் அப்பனுக்கு அறிவே இல்லை. சொத்தை எல்லாம் தொலைத்து விடுவான் போலிருக்கின்றது. நீயே பார்த்துக் கொள் என்று அவனிடம் சொல்கிறது.

என் மூத்த பையன் சொத்தைத் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு இருக்கிற சொத்தை எல்லாம் காணாமல் செய்து விட்டான்.

அப்பொழுது அந்த நேரத்தில் இப்படிப்பட்ட தரித்திர நிலையை உருவாக்கியதும் குருநாதர் தான். தரித்திர நிலைகள் கொண்டு அவர்கள் (உன் குடும்பம்) எவ்வாறு வாழுகின்றார்கள் என்ற நிலையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

அரும்பெரும் சக்திகளைப் பெற்ற நீ இந்தத் தருணத்தில் சிரமங்களிலிருந்து அவர்களை எப்படி மீட்டப் போகிறாய் என்று இந்த உணர்ச்சிகளையும் எனக்குள் தூண்டச் செய்கிறார்.

ஆசைகளுக்காக வேண்டி சிலவற்றைச் செய்தோம் என்றால் புகழும் பொருளும் எவ்வாறு வந்து குவியும் என்று காட்டுகின்றார். ஆனால்
1.இந்த அருள் ஞான சக்தியை நீ பெறுவதற்கு
2.எந்தெந்த நிலையில் எல்லாம் இன்னல்கள் வருகிறது என்றும் காட்டுகின்றார்.

இதில் நீ அப்படிச் செய்து புகழின் நிலையில் பொருள் தேடலாம். நீ உன் வாழ்க்கையில் மகிழ்ந்திடலாம் என்று அங்கே மகிழ்ச்சியை ஊட்டச் செய்வார்.

பிறருக்கு சில நிலைகளைச் செய்யச் சொல்வார். என்னையே செய்யச் சொல்வார்.
1.அங்கே அற்புதங்கள் நடக்கும்.
2.உடனே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தோன்றும்.

ஆனால் நான் வீட்டுக்கு வந்தாலோ
1.என் சிறிய பையன் நைனா நைனா என்று ஏங்குவான்.
2.காசு பணம் ஒன்றும் இல்லையே…! சாப்பாட்டுக்கு வழி இல்லையே…! மனைவி கேட்கின்றது
3.உடுத்துவதற்குத் துணி வேண்டும் அது வேண்டும் என்று பிள்ளைகள் கேட்பார்கள்.

வெளியிலே அங்கே மகிழ்ச்சியூட்டச் செய்வார். காசு பெருகும் நிலையும் பெறச் செய்வார். வீட்டுக்கு வந்ததும் இந்த நிலையைச் செய்வார்,

ஆக எவ்வளவோ சக்திகளைக் கொடுத்து அற்புதங்களைச் செய்தாலும் நீ புகழைத் தேடினாலும் அதன் வழிகளளில் இருள் சூழ்ந்த நிலையே இந்த உடலுக்கு வந்து விடும்.
1.வந்து விட்டால் பெரும் சக்திகள் அனைத்தும் மறைந்துவிடும்
2.இருளை போக்கும் நிலையை அறுத்துவிடும்.

இந்தப் பூமியில் மனிதனாகப் பிறந்த நீ எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்…? சென்றபின் நீ எங்கே எப்படி நிலைத்திருக்க வேண்டும்…? என்று அதையும் ஒரு பக்கம் காட்டுகின்றார்.
1.உடலை விட்டு என்னைப் பிரியச் செய்கின்றார்.
2.ஒளியின் சுடராக ஆவதையும் காட்டுகின்றார் (பார்க்கிறேன்)
3.ஒளியின் சுடராக ஆன பின் எந்த நிலையில் இருக்கும் என்பதையும் காட்டுகின்றார்.

ஒரு பக்கம் ஆசையை ஊட்டுகின்றார். இன்னொரு பக்கம் துன்பத்தையும் கொடுக்கின்றார்.

இதிலிருந்து…! நான் என்ன செய்வது என்றே ஒன்றும் புரியாதபடி ஒரு பித்தனைப் போன்று இருந்த மாதிரி
1.அதைப் (உலகப் பற்றை) பிடிக்கிறதா…? அல்லது
2.இதைப் (மெய் ஒளியை) பிடிக்கிறதா….? என்ற அந்த நிலை வருகிறது.

எங்கே போனாலும் யாரிடம் நெருங்கிப் போனாலும் “நீ இங்கே உட்கார்ந்தால் தரித்திரம் பிடித்துவிடும்… போய்யா…!” என்று அவமரியாதையாகப் பேசுகிறார்கள்.

வேஷ்டி கட்டிக் கொண்டு போனாலும் திடீரென அது கிழிந்து போய் விடும். வேறு வேஷ்டி வாங்கப் பணம் இல்லை? வீட்டுக்கு வந்தாலோ “சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நாங்கள் இருக்கிறோம்..!” என்று குடும்பத்தில் நினைப்பார்கள். இப்படி
1.வெளியில் போனால் அப்படி…
2.வீட்டுக்கு வந்தால் இப்படி…
3.குழந்தைகளைப் பார்த்தால் இப்படி… இந்தப் மாதிரி பல உணர்வுகள் வருகின்றது.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் கொடுத்த சக்தியை வைத்துப்
1.பொருள் செல்வத்தையும் தேடவும் செய்யலாம்.
2.அந்த அருள் ஞானியின் உணர்வையும் (அருள் செல்வத்தையும்) நீ வளர்த்துக் கொள்ளலாம்.
3.இதில் உனக்கு எது தேவையோ “அதை வளர்த்துக் கொள்…” என்கிறார்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் பொழுது இது என்ன வாழ்க்கை…! என்று எனக்குப் பித்து பிடித்து போகும் நிலையில் இருக்கின்றது

குழந்தைகளைப் பார்க்கப்படும் பொழுது நாளை என்னாகும் என்ற வெறுப்பின் தன்மை உருவாகின்றது. அடுத்தவர் என்னைப் பழித்துப் பேசும் பொழுது இனி வாழ்ந்து தான் என்ன என்ற உணர்வு வருகின்றது.

கௌரவமும் புகழும் தடைப்படும் பொழுது இங்கே ஆனந்தத்துடன் வீட்டுக்கு வரும் பொழுது குடும்பத்தில் சங்கடமான நிலைகள் இத்தனையும் உருவாக்கி என்னை முச்சந்தியில் நிறுத்திப் பெரிய உணர்வுகளைத் தூண்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குடும்பப் பற்றுடன் பாசத்துடன் எவ்வளவு வாழ்ந்து வந்தாலும்
1.உடலுக்காக வாழ வேண்டும் என்ற அந்தப் பற்று வரும்போது
2.அதனின் உணர்வுகள் மெய் வழியில் பற்று கொண்டு செல்லும் பாதையை
3.அது எப்படித் திருப்புகிறது…? எப்படித் தடையாகின்றது…?
4.அதிலிருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…?
5.உயிர் பற்றை வளர்த்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் எவ்வாறு இணைய வேண்டும் என்று உணர்த்தினார்.

மக்களுக்கு அந்த மெய் வழி செல்லும் பாதையைக் காட்டி அதிலே அவர்களை எப்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையை அறிந்து கொள்ளவே குருநாதர் இந்த அனுபவத்தைக் கொடுத்தார்.

குருவிடம் இத்தகைய அனுபவம் பெற்றதால் தான் உங்களுக்கு அந்த மார்க்கத்தை எம்மால் இயம்ப முடிகின்றது…? யாம் வெறும் வார்த்தைகளாக உங்களிடம் சொல்லவில்லை.

“பேரிருளைப் போக்கி… பேரொளியாக மாற்றிடும் மகத்துவத்தைத்தான்…” குருநாதர் காட்டிய வழியில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…! தெரிந்து கொள்ளுங்கள்

Image

view of jupiter

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…! தெரிந்து கொள்ளுங்கள்

 

நம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான்.

நான் (ஞானகுரு) தமிழன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!” என்று சொல்கிறோம் அல்லவா…

இந்தத் தென்னாட்டிலே தோன்றிய இந்த அகஸ்தியன் தான் உலகைக் காத்திட வட துருவத்தின் நிலைகள் பனி உறைந்து ஒரு பக்கமாகத் திரும்பும் நிலையிலிருந்து தென் பகுதியில் வெப்பத்தின் தணலைக் கூட்டச் செய்து பூமியைச் சமப்படுத்தினான்.

அதனால் தான் பூமியில் நடு மையமாக இருக்கும் இடங்களில் மனிதர்கள் உயிர் வாழச் செய்யும் நிலையும் இங்கே வந்தது.

இல்லை என்றால் வியாழன் கோள் போல் முழுவதும் பனிப் பிரதேசமாக மாறியிருக்கும்.

சிறிதளவிற்கு ஒரு நொடி மாறினாலும் நமது பூமி பெரும் பனிப் பாறையாக மாறி உயிர் இனங்களே வாழ முடியாத நிலைகள் ஆகிவிடும்.

அப்படியே உயிரினங்கள் வாழ்ந்தாலும் பனிப் பகுதிகளில் மீன் இனங்களும் மற்ற இனங்களும் வாழ்வது போல மனித இனமே அல்லாது நீர் வாழும் உயிர் இனங்களாகத் தான் திரிய முடியும்.

அன்று பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளிலும் நம் பூமியைப் போல் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

இன்று நாம் செயல்படுத்தும் விஞ்ஞானக் கருவிகளைக் காட்டிலும் பன் மடங்கு நவீனமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலே மாற்றங்கள் ஆகி வியாழனின் சுழற்சி வேகம் கூடி பனிப் பாறையாக மாறிவிட்டது.

பனிப் பாறைகளில் உயிரினங்கள் எப்படி வாழுகின்றதோ இதைப் போல மனிதனாக இருப்பவரும் வளர்ச்சி அற்ற நிலைகள் கொண்டு உயிரினங்களாக இன்றும் வியாழனின் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்று பிரபஞ்சத்திலும் மிதந்து கொண்டு வருகின்றது.

மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த நிலைகளால் தான் அந்த உயிரணுக்கள் நமது பூமிக்குள் கவரப்பட்டு உயிரணுக்கள் வளர்ச்சி அடைந்து மனித உருவாக நாம் வந்துள்ளோம்.

இப்பொழுது வந்த நிலை அல்ல அது. இந்தப் பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும் ஞானிகள் வியாழனைக் குருவாகக் காட்டினார்கள்.

இன்று இங்கிருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் அபரித வளர்ச்சியாகி இங்கே அணுகுண்டுகள் செய்தது போல செய்து இருள் சூழச் செய்து மனித இனமே முழுமையாக அழிந்துவிட்டது.

ஆனால் அன்று இது நடந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு வளர்ந்ததனால்
1.உயிரணுவின் தோற்றங்கள் அது மாற்றமில்லாது
2.அதே உயிர் இனங்கள் இதே பிரபஞ்சத்தில்
3.இன்று நாம் மனிதனாக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் இன்றைய பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.

இதைப்போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம். அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

1.இப்படி நம்முடைய உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து
2.மதுவை அருந்தினால் மற்றதனைத்தையும் சிந்தனையற்றுச் செயல்படுத்துவது போல்
3.விஞ்ஞான அறிவில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

போதைப் பொருளை உபயோகித்தது போலவே விஞ்ஞான உணர்வில் சிக்குண்டு மனிதச் செயலை இழந்து மனிதனே கூண்டுடன் அழிந்திடும் நிலையாக வளர்ந்து வந்துவிட்டது.

ஆகவே நம்மை அறியாது நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த உணர்வின் நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.”மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்” உணர்த்திய அருள் வழிப்படி
2.மெய் உணர்வின் ஆற்றலுடன் நாம் அனைவரும் இணைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையாக
4.மகா மகரிஷிகளின் அருள் உணர்வுடனே என்றுமே நாம் ஒன்றி வளர்வோம்.

தீமை செய்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்தால் அது நம்மையும் அழித்துவிடும் – இதிலிருந்து மீளும் வழி

Image

அருள் சக்தி

தீமை செய்பவர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்தால் அது நம்மையும் அழித்துவிடும் – இதிலிருந்து மீளும் வழி

கடும் சொல்லாகவோ அல்லது மிகவும் தீமையானவைகளையோ செய்தார்கள் என்றால் நாம் பதிலுக்கு எப்படி எண்ணுகின்றோம்?

அவரைத் தாக்க வேண்டும்… அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திரத்துடன் சொல்கின்றோம். இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

நேரடியாக ஒருவரைச் சொல்ல வேண்டாம். வேறு யாரையாவது சொன்னாலும் போதும்.

வேடிக்கையாகப் பார்த்த இந்த உணர்வுகள் உற்றுப் பார்த்தோர் உடலுக்குள் பதிவாகி விளைந்து அவர்களையும் அந்தச் செயல்களுக்கு ஆளாக்கி விடும்.

இன்னொருவரைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னால்
1.அதைக் கேட்டவுடனே இந்த உணர்வு
2.“பார்… இப்படிச் சொல்கின்றான் பார்…” என்று எண்ணிய அந்த உணர்வுகள்
3.கெட்டுப் போகும் நிலையை உருவாக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. சந்திக்கும் சந்தர்ப்பம் அவ்வாறு ஆக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தால் இப்படிச் சந்திக்கும் போது இந்த உணர்வுகள் நமக்குள் வந்தால் ஊழ்வினையாக (வித்தாக) மாறிவிடுகின்றது.
1.பின் அதனுடைய நினைவு வரும் போது
2.வினைக்கு நாயகனாக இயக்கி
3.அதன் வழியிலே நம்மை அழைத்துச் செல்லுகின்றது.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்கு அந்த அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் “விநாயகர் தத்துவம்…”

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து துருவ நட்சத்திரமானான். அதை எவரொருவர் பின்பற்றினாரோ அவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்று அடைந்தார்கள்.

அகஸ்தியன் இந்த வாழ்க்கையில் தீமையை அகற்றியவன். அந்த உணர்வின் சக்தியை நாம் நுகரப்படும்போது ரிஷியின் மகன் நாரதன்.

நம்மை ஒருவன் “பழித்துப் பேசினான்…” என்று சொன்னால் நாம் அவனை விடுவதா…? என்ற வைராக்கியத்தில் இருப்போம்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் அந்தப் பழி தீர்க்கும் உணர்வை நமக்குள் குறைக்கும். நாரதன் கலகப்பிரியன் கலகமோ நன்மையில் முடியும்.

என்னைப் பழி தீர்க்க எண்ணினான் என்று அவனின் பழி தீர்க்கும் உணர்வை எடுக்கும் போது அவனை அழித்து விட வேண்டும் என்ற எண்ணமே வரும்.
`1.அந்த எண்ணம் எனக்குள் அழித்திடும் உணர்வாக வளரப்போகும் போது தான்
2.என்னை அறியாமல் என்னை நானே அழித்துக் கொள்கின்றேன்.

மனிதருக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்களை நுகர்ந்தால் தீமையின் உணர்வே இது செயல்படுகின்றது.

அந்த சமயங்களில் எல்லாம் மகரிஷிகளின் உணர்வை நுகரப்படும்போது
1.இந்தத் தீமையான உணர்வைப் பிரித்து
2.அந்த உண்மையின் மூலத்தை நமக்குள் வெளிப்படுத்துகின்றது.
3.தீமைகளைப் பிளந்து நமக்குள் ஒளியாகக் காட்டுகின்றது.

அப்பொழுது இப்படிச் சொன்னானே “அவனை… விடுவதா அவனை… விடுவதா…?” என்ற நிலையை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக இது தணிந்து விடுகின்றது.

ஒரு செடி வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவரப்படும் போது அதன் அறிவாக
1.அதே செடிக்கு இரையாக அது நுகரும் சக்தியைக் கொடுக்கின்றது
2.ஈர்க்கும் தன்மை வந்த பின் அதனின் சத்தை இது எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒருவன் கெடுதல் செய்த உணர்வு வெளிப்படும் போது இதே உணர்வு சூரியன் காந்த சக்தி கவர்ந்ததை அவனை உற்றுப் பார்த்தால்
1.அதே அலைகள் நமக்குள் வந்து
2.அவன் செய்யும் செயலையே நமக்குள் செயல்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் மனிதனில் விளைந்து ஒளியின் சரீரமாக ஆன உணர்வை நாம் பருகினோம் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வு நமக்குள் வந்து
2.அந்த மகரிஷிகளின் வழி எதுவோ அதன் வழியில் நம்மைக் கொண்டு போகும்.

இந்த விளக்கத்தை எல்லாம் நாம் தெரிந்து கொண்டால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வாறு அழைத்துச் செல்கின்றது என்பதை உணர முடியும்.

ஆகவே நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கத் தவறக்கூடாது
2.எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் மகரிஷிகளின் அருளை இணைக்க்கும் பழக்கம் வர வேண்டும்.

அருள் ஞானப் பயிரை நமக்குள் வளர்த்து “மெய் ஞானிகளாக மகசூல் காண வேண்டிய முறை”

Image

wisdom-light

அருள் ஞானப் பயிரை நமக்குள் வளர்த்து “மெய் ஞானிகளாக மகசூல் காண வேண்டிய முறை”

 

விவசாயம் சமபந்தமான படிப்பைப் படித்தவர்கள் (AGRICULTURE) அவர்கள் கண்டுணர்ந்து உருவாக்கிய வீரிய வித்தை நம் கையிலே கொடுத்து அதிகமான பலன் கிடைக்கும். இதை விவசாயம் செய்யுங்கள் என்று கொடுப்பார்கள்.

அதைச் சீராக வளர்க்கும் நிலையாக எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்று எந்தெந்தக் காலத்தில் நீர் ஊற்றவேண்டும் எந்த சமயத்தில் உரமிட வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அவர்கள் காட்டிய சரியான வழியை நாம் கடைப்பிடித்தோம் என்றால் விதைத்ததில் நல்ல ராசியும் பலனும் கிடைக்கின்றது.

இதே போலத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் (ஞானகுரு) உலகம் சுற்றி ஆங்காங்கே பதிவான ஞானிகளின் உடலில் விளைய வைத்த ஞான வித்துக்களைப் பெருக்கிக் கொண்டோம்.

அந்த உணர்வின் வித்தை உங்களுக்குள் பல காலம் தொடர்ந்து பதியச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

1.பதிந்த ஞானிகளின் வித்துக்களுக்கு நீரை எக்காலத்தில் ஊற்றவேண்டும்…?
2.அதற்குச் சீரான உரங்கள் எவ்வாறு இடவேண்டும் என்று
3.காலத்தால் உங்களுக்குள் உபதேசித்திருந்தாலும்
4.அதை மறந்து வித்தை ஊன்றிய பின் பலனில்லையே… இன்று விளையவில்லையே…! என்று
5.இந்த எண்ணத்தை மட்டும் எடுத்து அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தைக் கொடுத்தார். அதை வளர்க்கும் முறையும் அவர் காட்டியிருந்தாலும் அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்ததைப் பெருக்கி அதைச் சீராக வளர்க்காமல் விட்டு விட்டீர்கள்…!

இந்த வித்தின் தன்மையை வளர்க்கும் நிலையை மறந்திருந்தோர் அனைவரும் மறந்ததை நீக்கி விட்டுத் தெளிந்திடுவோம் என்ற நிலைக்கு வாருங்கள்.

செடிக்கு எவ்வாறு நீரை ஊற்றி உரத்தைப் போட்டு அதற்குண்டான பக்குவ நிலையைக் கண்ணும் கருத்தாகச் செய்கின்றோமோ அதே போன்று
1.குருநாதர் கொடுத்த மெய் ஞான வித்தை
2.அந்த அருள் ஞானப் பயிரைச் சீராக நாம் வளர்க்க வேண்டும்.

அந்த அருள் ஞான வித்து வளரும் நினைவாற்றல் உங்களுக்குள் பெருகிட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் என்றுமே உறு துணையாக இருக்கும்.

1.ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகள் அனைத்தும்
2.அருள் ஞானப் பயிரை வளர்க்கும் நீராகவும் உரமாகவும் அமைந்து
3.மெய் ஞான உணர்வுகளை விளையச் செய்து
4.அதன் பலனாக அருள் ஞானப் பசியைப் போக்குவோம்.

நம்மை அணுகி வருவோருடைய ஞானப் பசியையும் நாம் வளர்க்கும் அருள் ஞான சக்தியால் போக்குவோம் என்று உறுதி எடுப்போம்.

எனக்கு வயதாகி விட்டது…! “நான் முதுமை அடைந்துவிட்டேன்” என்று நாம் சொல்கிறோம் – என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

Image

Exalted state

எனக்கு வயதாகி விட்டது…! “நான் முதுமை அடைந்துவிட்டேன்” என்று நாம் சொல்கிறோம் – என்றுமே இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்…?

 

முதுமை என்பது வயதால் வருவது அல்ல. அறுபது வயது…, எழுபது வயது… நான் முதுமை அடைந்து விட்டேன்..! என்று வெறும் வருடத்தால் கணக்கிட்டுச் சொல்வதல்ல…!

ஒரு தானியம் விளைந்தாலும் அதனின் முதிர்ச்சியின் தன்மையில்
1.தன் இனத்தை உருவாக்கும் வித்தின் தன்மையாக அடைந்து
2.அது மீண்டும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக வளர்க்கச் செய்யும் போது தான்
3.அது முதுமை அடைந்தது (முதிர்ந்த வித்து) என்று சொல்ல முடியும்.

அதைப் போன்று தான்
1.ஒரு உயிரின் தன்மை மனித உடலாக உருப் பெற்ற பின்
2.அறிந்திடும் உணர்வு கொண்ட
3.ஒளியின் சரீரம் பெற்ற மெய் ஞானியின் உணர்வைச் சேர்த்து உடலை முதுமையாக்கிவிட்டு
4.உணர்வின் தன்மையை – நம்மை என்றும் இளமையாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
(உடல் அழியக்கூடியது உயிர் என்றுமே அழியாதது)

இப்படி ஒவ்வொரு சரீரத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் அது இளமைப் பருவமே பெறுகின்றது.

1.நாம் இளமை பெற்று அது உடலிலே முதுமை பெறும்போது தான் (உடலுக்குள் விளைந்தது)
2.”முதுமையின் வித்தாக…! உருபெற்ற உணர்வின் அறிவாக…
3.அது உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு,
4.அடுத்த அறிவின் ஞானச் சுடராக கனியின் வித்தாக (உணர்வாக) ஞானத்தை வளர்க்கின்றது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றிடும் நிலையாக உயிருடன் ஒன்றிய முதுமையின் நிலைகள் பெற்று முழுமையின் நிலையாக அந்தப் பேரானந்த பெருநிலை பெறுவோம்

அந்த பேரானந்த உணர்வை நமக்குள் வளர்த்திடுவோம். அனைவரும் பேரானந்த நிலை பெறும் சக்தியாக நமக்குள் விளைய வைத்து அந்தச் சத்தான வித்துக்களைப் பரப்புவோம்.

அதை நுகர்வோர் அனைவருக்கும் அந்தச் சத்தான வித்துக்கள் படர்ந்து அவர்களும் பேரானந்தப் பெரு நிலையை அடையட்டும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே
2.நாம் என்றுமே இளமையாக
3.என்றும் பதினாறாக வளர்ந்து கொண்டேயிருப்போம்… வாழ்வோம்.

தீமைகள் புகாதவண்ணம் விழித்திருப்பதே “சிவன் இராத்திரி” – தீமைகள் புகாது நாம் தடுக்கின்றோமா…?

Image

Maha sivan Rathri - shiva

தீமைகள் புகாதவண்ணம் விழித்திருப்பதே “சிவன் இராத்திரி” – தீமைகள் புகாது நாம் தடுக்கின்றோமா…?

 

சிவன் ராத்திரி அன்று “விழித்திருக்க வேண்டும்…!” என்று இரவு முழுவதும் நாம் கண் விழித்திருக்கின்றோம்.
1.தீமைகள் புகாது நீ விழித்திருக்க வேண்டும் என்று தான்
2.ஞானிகள் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.

ஆனாலும் அந்த இரவில் ‘’அவர் அப்படி இருக்கின்றார்… இவர் இப்படி இருக்கின்றார்…!’’ என்று பிறரிடம் உள்ள குறைகளைக் கண்டு அதைப் பற்றித்தான் நாம் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

நல்லவைகளைப் பற்றி நாம் யாரும் பேசுகின்றோமா… என்று சிந்தித்துப் பாருங்கள். இதைப் போன்ற குறைகளைக் காணும் நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

புழுவிலிருந்து மனிதராக வந்த நாம் ஒவ்வொரு பிறவியிலேயும் தம் சரீரத்தைக் காத்திடும் உணர்வைப் பெற்றுத்தான் மனிதராக இன்று உடல் பெற்றிருக்கின்றோம்.

இந்த மனித சரீரத்தில் உள்ள உயர்ந்த தன்மைகளைக் காத்திடும் வளர்த்திடும் உணர்வாக நாம் செயல்படும் பொழுது நம்மிடம் உள்ள குறைகளும் தீமைகளும் நம்மைவிட்டு அகன்று ஓடுகின்றன.

இந்தச் சரீரத்தை அழியா ஒளிச் சரீரமாக ஆக்க வேண்டுமென்றால் அதையும் இந்த சரீரத்தில் தான் செய்ய முடியும்.

சிவன் ராத்திரியாக மெய் ஞானிகளால் நமக்கு காட்டப் பெற்று நம்மைக் காத்திடும் வளர்த்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.

பொருளறிந்து செயல்படும் உணர்வாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

1.நம் உடலான சிவத்திற்குள் இருளுக்குள் தான் நாம் இருக்கின்றோம்.
2.நமது உடலில் இருக்கும் எண்ணம் தான் நம்மிடத்தில் ஞானத்தின் நிலையாக
3.நாம் தெளிவு பெறும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அறிந்து தெளிந்த நிலை பெற்ற மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தும் பொழுது அந்த மகரிஷிகள் உயிருடன் ஒளிச் சரீரம் பெற்றது போல நமது உணர்வும் ஒளி பெறும் தகுதியைப் பெறுகின்றது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய் உணர்வைக் கண்டறிந்தார். மனிதனாக வாழும் பொழுது தம் உடலில் விளைந்த தீமைகளைப் போக்கி மெய் உணர்வை வளர்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சென்ற அந்த மகா ஞானிகளின் நினைவின் அலைகளை எமக்குள் (ஞானகுரு) ஆழமாகப் பதியச் செய்தார்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் இருளை வெல்லச் செய்து மெய்யுணர்வின் தன்மையை எம்மிடத்தில் வளர்த்து எம்மையும்… “மெய் ஞானியாக…” உருவாக்கினார்.

அந்த நிலையை நீங்களும் பெறவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கூட்டமைப்பாக உருவாக்கி அந்த மகா மகரிஷிகளின் அருளுணர்வை உங்களிடத்திலும் பெறச் செய்கின்றோம்.

1.மெய் உணர்வைப் பெறும் வகையாக
2.மெய் ஞானிகள் காண்பித்த அருள் வழியைப் பின்பற்றிச் செல்லும் அன்பர்களுக்கு
3.எல்லாம் வல்ல ஆற்றலாக அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல் கிடைக்கப் பெற்று
4.‘’என்றும் பதினாறு’’ என்ற ஒளிச் சரீரத்தை இந்தச் சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டுமென்று
5.எமது பரிபூரண அருளாசியை வழங்குகின்றோம்.

போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

vaali fighting

போக்கிரிகளிடமிருந்து தப்பிக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று
2.அதைக் கவர்ந்து கொண்டால் தான்
3.நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.
அதைப் போன்று தான்
1.நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம்
3.எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
4.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது
1.உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.
2.எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…?
3.இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

1.நமக்குள் வேதனை வந்தாலும்
2.அது நம்மைத் தாக்கினாலும்
3.நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.”போக்கிரி…” என்று சொன்னவுடனே
2.நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது.
3.நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான்
1.நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
6.உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது
1.அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ
2.அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..”
3.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
4.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய்
3.அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறது. விஷத்தின் தன்மையை முறிக்க வேறு ஒரு விஷ முறிவு மாத்திரையைக் கொடுத்தால் விஷம் இறங்கிவிடுகிறது.

நம் சிறு நீரைப் பரிசோதிப்பதற்காக அதிலே ஒரு சொட்டு கெமிக்கல் விட்டால் உடலுக்குத் தகுந்தாற்போல் அதிலுள்ள அனைத்தையும் காட்டுகின்றது.

சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் சிகப்பு நிறமாக மாறுகிறது. அதிலே சர்க்கரை கொஞ்சம் அளவு குறைவாக இருந்தால் வெளுப்பு நிறமாக வருகிறது. மிகவும் கொஞ்சமாக இருந்தால் பச்சை நிறமாக ஆகிறது. ஒன்றுமே இல்லை என்றால் நீல நிறமாக இருக்கிறது.

அந்தக் கெமிக்கலைக் கலந்ததும் சிறு நீருக்குள் உள்ளதைப் பிரித்துக் காட்டும் நிலைக்கு வருகிறது.

இதே போன்று மகரிஷிகளின் நினைவலைகளை நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.பிறருடைய துயரத்தின் நிலையைப் பிரித்துக் காட்டும் நிலையும்
2.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது நம்மைப் பாதுகாக்கும் நிலையாகவும் அமையும்.

ஆகவே நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஒரு போக்கிரியின் உணர்வுக்குள் சென்றால் அது அவனைத் தடுமாறச் செய்யும் – அவனால் நமக்கு இடைஞ்சல் செய்யவே முடியாது…!

செய்து பாருங்கள்…!

உங்களுக்கு வரும் எத்தகைய தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் பகைமைகளையும் வேதனைகளையும் உங்களால் அடக்கி ஒடுக்க முடியும்.

நல்ல உணர்வைக் காக்கும் சக்தியாக நீங்கள் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றோம்.

தீமையான உணர்வுகளை அடக்கி ஒடுங்கச் செய்யும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள்

கல்வியில் நாட்டமில்லாத மெய்ஞானிகள்

தீமையான உணர்வுகளை அடக்கி ஒடுங்கச் செய்யும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள்

விஞ்ஞானி அணுவைப் பிளக்கும் நிலையாக அணு குண்டைச் செய்து வைக்கின்றார்கள். அதே சமயத்தில் அதைப் பாதுகாப்பாக வைப்பதற்காக ஹைட்ரஜனை (HEAVY HYDROGEN) உபயோகிக்கின்றார்கள்.

அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கக்கூடிய ஆற்றலைப் பிளந்தாலும் அதனால் மற்ற தீயது விளைவிக்காது தடுப்பதற்காக
1.“கண நீர்” அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி
2.இதனுடைய ஆற்றலைக் கலக்கச் செய்யும் பொழுது வெடிக்க விடாது செய்து விடும்
3.கண நீரின் அழுத்தத்தால் “NUCLEAR REACTION” – அது செயல்படாது

இவ்வாறு ஹைட்ரஜன் கொண்டு அணுக் கதிரியக்கத்தை அடக்குவது போல்
1.விண்ணிலே வரும் விஷக் கதிரியக்கங்கள் அனைத்தையும்
2.அடக்கிடும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள்
3.அதாவது கணநீர் போன்று ஹைட்ரஜன் ஆனார்கள் மெய் ஞானிகள்

விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகப் பளிச்சிடும் நிலைகள் பெறுவோம். எத்தகைய நஞ்சான உணர்வுகளையும் நாம் ஒடுக்க முடியும்.

ஞானிசெய்வது போல அன்று மெய்ஞானி தனக்குள் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு,
அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். பிறர் துன்பப்படுவதைப் பார்த்து இரக்கப்பட்டோம்.
1.அவர்கள் உடலில் விளைந்த துயரமான உணர்வுகள்
2.நமக்குள் மாறி அந்த சக்தியாக நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது.

இதை நீக்க என்ன செய்ய வேண்டும்…? என்ற அந்த நினைவினைக் கூட்டுவதற்குத்தான் விண்ணை நோக்கி ஏங்கும்படியாக ஒவ்வொரு ஆலயத்திலும் தூப ஸ்தூபி வைத்திருக்கின்றார்கள்.

அருள் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் வேண்டிச் சுவாசிக்க வேண்டும்.

பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

இதைத் தான் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று சொல்வது. ஏனென்றால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் அது உடலுக்குள் ஒவ்வொன்றும் கருவாகித்தான் அணுவாக விளைகின்றது.

ஆகவே அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுக எண்ணிப்
2.பின் மொத்தமாக உடல் முழுவதற்கும் நினைவு கூட்டி
3.அந்த மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு நினைவின் அலைகளை உடலுக்குள் செலுத்தி
5.கருவிற்குள் (இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு) உபதேசிக்க வேண்டும்.

அப்போது அந்த உணர்வுகள் வீரியம் ஆகி ஒளி பெறும் உணர்வின் அணுக்கருக்களாகி ஒளியான அணுக்களாக உருவாகும்.

பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கப்படும்போது “அஆஇஈ” ஒன்றும் தெரியாது. சொல்லிக் கொடுக்கும் பொழுது இரண்டாவது தடவையோ மூன்றாவது தடவையோ தெரியாது. ஆனால் நான்காவது தரம் சொன்னது பதிவாகிய பின் ஆ ஈ ஊ என்று நாம் பேசுகிறோம் அல்லவா…!

ஆங்கிலமோ ஹிந்தியோ தெரியாத பிள்ளைக்கு அவைகளைக் கற்றுக் கொடுக்கின்றோம். அதே மாதிரித்தான் நாம் சுவாசிக்கும் உணர்வின் நினைவின் அலைகளை
1.ஞானிகளின் அருள் உணர்வுடன் கலந்து கொண்டால்
2.நமக்குள் அது என்ன செய்யும் என்று உபதேசம் கொடுக்க வேண்டும்.
3.அப்போது தான் அந்த உணர்வுகள் நமக்குள் அடங்கும் (கண நீரை வைத்து அடக்கி வைப்பது போல்)
4.தீமை செய்யும் அணுக்கள் நன்மை செய்யும் அணுக்களாக மாற்ற முடியும்.
5.ஏனென்றால் மனிதன் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்.

டேப் ரெகார்டரில் பதிவு செய்வது போல் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வலைகளுக்குள் மகரிஷிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அன்று ஞானி சொன்னான்.

ஆனால் அதையெல்லாம் தூக்கிக் குப்பையில் எரிந்து விட்டோம். இன்று குருநாதர் காட்டிய வழியில் இதை யாம் உபதேசிக்கின்றோம் என்றால் இவர் என்ன புதிது புதிதாக ஏதோ சொல்கின்றார் என்று எண்ணுகின்றார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளைத்தான் உணர்த்தி வருகின்றோம்.